நான் கீழே எழுதியுள்ளவற்றை சுருக்கமாக பேசிய பின்னர் தோழர் ஞான சூரியன் அவர்கள் ஒவ்வொரு தலைப்பையும் முழுமையாக பேசமுடியாது ஏனெனில் ஒவ்வொன்றும் விரிவாக ஆய்ந்து பேச வேண்டிய விடயம் இருந்தாலும் என்னால் முடிந்தளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன் என்று தொடங்கி கல்விமுறையின் இன்றைய நிலை மற்றும் அன்றிலிருந்து நடைமுறையில் இக்கல்விமுறையின் வரலாறு வேலைவாய்ப்பு என்பது உலகமய தாராளமய கொள்கை அமல்படுத்தப் பட்ட பின்னர் அரிதாகி விட்டது என்பதனை விரிவாக விளக்கினார். தாய்மொழியை மறுக்கும் போக்கு தமிழக அரசியலில் உருவாகியது மற்றும் அதன் அஸ்திவாரமான திராவிட கழக அரசின் செயலை பற்றியும் விளக்கினார். அவருக்கு பின்னர் தோழர் ரவீந்திரன் வேலைவாய்ப்பு மற்றும் மொழி பற்றி பிரச்சினையை மிக அழகாக எடுத்து பேசினார். இந்தி படித்தால் வேலைவாய்ப்பு என்றால் ஏன் இந்தி படித்தவன் இங்கே வேலைக்கு அழைந்துக் கொண்டிருக்கிறான் என்றால் மேலும் தோழர் சுப்பிரமணியம் பேசினார். அவருக்கு பின்னர் பேசிய கவின்மொழி இன்று பள்ளிகளில் புகுத்தப் படும் காவிமயம் புதிய கல்வி கொள்கையின் பெயரில் நடந்தேறிக் கொண்டிருக்கும் அறிவியல் அற்ற பாட திட்டங்கள் நமது இடதுசாரிகள் முன் உள்ள பணிகள் என்று வலியுறுத்தி பேசினார். வகுப்பு 1:45 (ஒரு மணி 45 நிமிடங்கள்) நடந்தது. தேவைப்பட்டால் இதனை பற்றி விவாதிப்போம் என்று முடித்துக் கொண்டோம்.
மொழி
மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது.
ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்துதற்கு ஒரு கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே ‘மொழி’ என்பார் பாவாணர்.
நம் மனத்தின் உள்ளே, ஏதாவது ஒன்றைப் பற்றிச் சிந்திப்பதும் மொழியின் ஒருநிலை ஆகும். பலர் சேர்ந்து ஓர் இனமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்களின் நிறமோ, பழக்கவழக்கங்களோ காரணமில்லை; அவர்கள் ஒருமொழி பேசுவோராக இருப்பதுதான் காரணமாகும் என்பர். எனவே மொழி என்பது ஓர் இனத்தின் புற அடையாளம் எனலாம்.
மொழிதல் என்றால் சொல்லுதல் என்பது பொருள். பேச்சு மொழியே முதலில் தோன்றியது. அறிஞர் மு. வரதராசனார்,
‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; ஆயினும் எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவைகளே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவைகளும் மொழியே ஆகும்’
என்று கூறுகிறார். எனவே மொழி என்பதைப் பேச்சு, எழுத்து, எண்ணம் என்றும் பல நிலைகளில் அறியலாம். ஒலிவடிவான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி; வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்துமொழி.
பேச்சு மொழி ஓடும் ஆறு போன்றது; எழுத்து மொழி அந்த ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது என்பர் அறிஞர். குளிர் மிகுதியால் பனி உறைந்து வேறுபட்டதைப் போல் கற்றவர்களின் முயற்சியால் மொழி இறுகி அமைந்ததே எழுத்து மொழி.
உலக மொழிகள் எல்லாவற்றிலும் இலக்கிய வளம் இருப்பதாகச் சொல்வதற்கில்லை. பேச்சளவில் அமைந்தவை, ஓரளவு இலக்கியம் உடையவை, ஓரளவு இலக்கணம் உடையவை என்ற நிலையில் உள்ள மொழிகளும் இருக்கின்றன. சில நூறு சொற்களை வைத்துக்கொண்டே வாழும் மொழிகளும் உள்ளன. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுக்கால இலக்கியங்கள் உள்ளன. தொன்மையும், பிறரைச் சாராத, பிறவற்றிலிருந்து உருவாகாத சுய மரபும், செறிவும் சிறப்பும், வாய்ந்த பழமையான இலக்கியங் கொண்ட மொழியைச் செம்மொழி (Classical language) என்பர். தமிழ் உலகிலுள்ள தொன்மையான மொழிகளில் ஒன்று. இன்றைய இந்திய இலக்கியங்களை விட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. கி.மு. 200ற்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் சிறந்த இலக்கண நூலை உடையது. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்னும் மிகச் சிறந்த இலக்கியத் தொகுப்புகளைக் கொண்டது. சமஸ்கிருதம் தென்னிந்தியாவில் பரவுவதற்கு முன்னரே- செல்வாக்குப் பெறுவதற்கு முன்னரே, தனித்தன்மை வாய்ந்த மொழியாகத் தோன்றியது. பிற மரபைச் சாராது, பிற மரபிலிருந்து தோன்றாது, சுய மரபை உடையது. எனவே தமிழும், கிரேக்கம், இலத்தீன், சீனம், பெர்சியன், சமஸ்கிருதம் போன்ற உலகச் செம்மொழிகளுள் ஒன்று என அறிஞர் ஜார்ஜ் ஹார்ட் (George Hart) என்பார் குறிப்பிடுவார்.
அதாவது நாம் நமது உணர்வுகளை மனதில் தோன்றியவுடனேயே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் வெளியிடுவதற்கு பயன்படுத்துகின்றோமே அதுதான் தாய்மொழி. இன்னும் அழகு தமிழில் இதனை வரைவிலக்கணப் படுத்திச் சொல்வதானால் ஒரு மனிதன் தன் சிறுபிராயத்தில் இருந்து பயின்று தன் மன உணர்வுகளை வெளியிடுவதற்கு பிரயோகிக்கும் மொழி அவனது தாய் மொழியாகும்.
நமது கல்வி பற்றி ஒரு அவுட்லைன்
குருகுல கல்வி
மனித சமுதாய வரலாற்றில் கல்வி எப்பொழுதுமே ஆளும் வர்க்கத்திற்கு பணிபுரியும் வகையிலும் அவர்களின் நலன் காக்கும் வகையிலும் திட்டமிட்டு இருப்பதை காணலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய மன்னர் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்தது குருகுலக் கல்வி.இதில் போர் முறைகளுக்காக சத்திரியர்களுக்கும் கல்வி முறையில் ஆட்சியாளருக்கு இருந்தாலும் வேத கல்வி பிராமணருக்கு தரப்பட்டது. பிற பிரிவினருக்கு கல்வி மறுக்கப்பட்டது.
சமூக வளர்ச்சியான தொழில் புரட்சிக்கு முன்பு அனைவருக்கும் கல்வி என்பது கனவிலும் காணப்படாத ஒன்றாக இருந்தது என்பதை உணரலாம்.
காலனி ஆதிக்கமும் கல்விக் கொள்கைகளும்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் தொழில் மூலதனத்தை வளர்த்தெடுக்கும் முயற்சி தொடங்கியது இதனை எதிரொலியாக காலனி நாடுகளில் ஆங்கில மொழியையும் பண்பாட்டையும் பரப்ப தொடங்கினர். இந்தியப் பகுதிகளில் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் சட்டம் 1853 ஆண்டின் கல்விக் கொள்கையானது வெளியானது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் பிரிட்டிஷாருக்கு வேலை செய்ய இந்தியப் பிரஜைகளை பிறப்பில் இந்தியர்களாகவும் செயல் பிரிட்டிஷராகவும் உருவாக்கியதே இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம். இதில் மெக்கலே தாய்மொழி கல்விக்கும் முக்கியத்துவம் அளித்தார். 1844 ஹார்டிங்கின் நிர்வாகம் ஆங்கிலத்தில் பயின்றவர்களுக்கு அலுவல வேலை நியமிக்கப்படும் என்று என அறிவித்தது. 1854 Wood ன் அறிக்கை நம்பிக்கைக்கு உரிய திறமையான அரசு ஊழியர்களை கிழக்கிந்திய கம்பெனிக்கு உற்பத்தி செய்வது இந்த பல்கலைக்கழகத்தின் வேலை என்று.
1947 வரை காலனி ஆதிக்கத்தை நிறுவிய சக்திகளுக்கும் அதை தகர்க்க நினைத்த சக்திகளுக்கும் இடையில் மோதல் அவரவர் அரசியல் நோக்கம் ஏற்ப கல்விகளும் தீர்மானங்களும் கொள்கைகளும் எதிர்வினைகளும் நிகழ்தன என அறியலாம்.
1947 ஆட்சி மாற்றத்திற்குப் பின் மதிய கல்வி ஆலோசனை வாரியம் இரண்டு குழுக்களை நியமித்தது.1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும் 1952ல் டாக்டர் லட்சுமிசாமி தலைமையிலும் நியமிக்கப்பட்டது.
சுருக்கமாக சொன்னால் மத்திய அரசின் கல்விக் கொள்கையானது
1).மேல்தட்டில் உள்ளோரை அரவணைத்து ஒன்றிணைப்பதும்
2).பருந்துபட்ட மக்களிடம் இருந்து அதிருப்திப் பெறாமல் இருக்க சில சலுகைகள் மதிய உணவு இலவச உடை.
இவ்வாறு செயல்பட தொடங்கினர்.
கோத்தாரி குழுவும் மத்திய அரசும்
14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை 10 ஆண்டுகளுக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சட்டம் பிரகடனப்படுத்தியும். 1962 இல் எதுவும் நடக்காத நிலையில் இன்னொரு புறம் படித்தவர்களுக்கு வேலை இல்லாத நிலையும் பெருக தொடங்கியது. இந்நிலையில் 1964 ஆம் ஆண்டு டாக்டர் கோத்தாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஆராய்ந்து உருப்படியான சில யோசனைகளை சொன்னது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவும், அனைவருக்கும் பொதுவான பள்ளியை நிறுவவும் கூறிய ஆலோசனைகளை ஏற்காத அரசு தன்னாட்சி நிறுவனங்கள் தனி சிறப்பு மையங்கள் மும்மொழி கொள்கை என்பவற்றை செயலாக்கும் வகையில் 1968 ல் தீர்மானம் கொண்டு வந்தது.
இன்றைய பொருளாதார சமூக அரசியல் நிர்பந்தங்கள்.
தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு ஒவ்வொரு ஆட்சியாளரும் அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகள் தோன்றும் போது கல்வி அமைப்பை மாற்ற வேண்டி அவசியம் ஏற்படுகிறது.
அண்மை காலங்களில் உலக வங்கியின் நிர்பந்தம் அந்நிய செலாவனின் தாக்கம் சரி சர்வதேச நிதி நிறுவனத்தின் கட்டுப்பாடுகளும். பன்னாட்டு மூலதனங்களால் நிர்வாகிக்கப்படுகிறோம். பெரும் தொழிற்சாலைகள் நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம் பன்னாட்டு கம்பெனிகளால் நிர்வகிக்கப்படுகின்றது இதற்கேற்றக் கல்வி குறைந்த கூலிக்கான வேலை ஆட்கள் அதைத் தேடிய கல்வியாக உள்ளது.
இன்றைய ஆட்சியாளர்கள் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திட்டமிடாமல் அவர்களின் கல்வியை முடக்குவது அதாவது சரியான அறிவியல் கண்ணோட்டமும் சமூக அறிவு உள்ளவனாக வளர்ந்தால் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக போய் விடுவான் என்று கல்வியே இல்லாத பிற்போக்குத்தனங்களை மக்கள் மூளையில் திணைக்கின்றது.
வெளிநாட்டு சந்தையின் ஆராய்ச்சியும்
ஜனநாயக உரிமை பறிக்கப்படுதல்
இன்றைய தனியார் மய உலகமய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கையை கொணரும் ஆட்சியாளர்கள் அவர்களின் நோக்கத்தை நாம் ஆராய வேண்டும்.
தாய்மொழிக் கல்வியும் எல்லோருக்கும் கல்வியும் மாநில பட்டியலில் கல்வியையும் நாட்டு மக்களுக்கு ஏற்ற கல்வியும் பன்னாட்டு ஆதிக்கத்தை சாராத தொழில்கல்வியும் அறிவியல் ஆராய்ச்சி விஞ்ஞான தொழில்நுட்பம் கலை வடிவம் இன்றைய மாற்றங்களுக்கு ஏற்ற சீரான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் வகை செய்ய வேண்டும். படித்த எல்லோருக்கும் கல்விக்கேற்ற வேலை எல்லா படிப்புகளுக்கும் வேலைக்கான உத்தரவாதம் இருக்க வேண்டும் ...
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக ஏற்கனவே சீனாவை மிஞ்சியிருக்கும் இந்தியா, போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில், வேலையின்மை விகிதம் 6.8 சதவீதமாகவும், வேலைவாய்ப்பு 397 மில்லியனாகவும் உள்ளது.
ஒழுங்கற்ற மழைப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் கூறினார்.
கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை விகிதம் ஜூலையில் 6.1 சதவீதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மிக முக்கியமாக, வேலைவாய்ப்பு விகிதம் 37.6 சதவீதத்தில் இருந்து 37.3 சதவீதமாக குறைந்துள்ளது.
கிராமப்புற வேலையின்மை விகிதம் மேலும் குறையக்கூடும் என்றும் தாமதமான பருவமழையின் முடிவில் விவசாய நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில், ஹரியானாவில் 37.3 சதவீதமும், ஜம்மு-காஷ்மீரில் 32.8 சதவீதமும், ராஜஸ்தானில் 31.4 சதவீதமும், ஜார்கண்டில் 17.3 சதவீதமும், திரிபுராவில் 16.3 சதவீதமும், வேலையின்மை மிக அதிகமாக இருந்தது.
வேலையின்மை சத்தீஸ்கரில் 0.4 சதவீதமாகவும், மேகாலயாவில் 2 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 2.2 சதவீதமாகவும், குஜராத் மற்றும் ஒடிசாவில் தலா 2.6 சதவீதமாகவும் வேலையின்மை உள்ளதாக தரகு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நமது சிலரின் கருத்து மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி துறை வளரவில்லை என்பதே வேலையின்மை விகித வளர்ச்சியை காட்டுகின்றது. வேலை வாய்ப்பை தருகின்ற துறைகளில் சரியான வளர்ச்சி, வருடந்தோறும் நடைபெறுமாயின் வேலைவாய்ப்பு விகிதம் தானாகவே குறையும்.
20 பேர் வேலை செய்கின்ற தொழிற் கம்பெனி, நன்றாக வளர்ச்சி அடைந்து, இலாபமும் அதிகரிக்குமாயின், நிச்சயம் கம்பெனி விரிவாக்கம் அடையும். கம்பெனி விரிவாக்கம் அடையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். ஆனால் இந்தியாவில் இன்றைய சூழல், செய்கின்ற தொழிலை தக்கவைக்கவே கஷ்டப்படும் நிலையே உள்ளது. கடந்த சில வருடங்களாக, பல சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில், குறைந்த கூலிக்கு வருகின்ற வட இந்தியர்களின் அதிகரித்து வருகின்ற வருகையும், இங்குள்ளவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை தட்டி பறிப்பதாகவே உள்ளது
ஆங்கில மோகம்
”ஆங்கிலம் தமிழன் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும்.”
”தமிழ்மொழிக்கு ஆங்கில எழுத்துக்களை எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டி கால (தமிழ்) எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன்.”
”தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?”
நூல்:- தமிழும் தமிழரும்
இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன். இந்தி எதிர்ப்பு மொழிச்சிக்கல் அல்ல. அரசியல் சிக்கல்தான்.
(விடுதலை 03.03.1965)
”இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.
(குடியரசு 20.01.1920)
”காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)
”இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ்த்தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப்பாலை அருந்தி இருப்பார் களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாகி இவர்கள் வாழ்க்கை நிலையை வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகியிருப்பார்கள் என்பதோடு மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உயரமுள்ள உழைப்பாளராகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுவேன்.”
”இன்றைக்கும் எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்பட வேண்டுமானால், அதற்காக நம் மக்களை மேல் நாடுகளுக்கு அனுப்பி (ஆங்கில) புட்டிப்பாலில்தான் எண்ணங்கள், செயல்முறைகள், பண்டங்களின் பெயர்கள், பாகங்களின் பெயர்கள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படைக் கருத்துக்கள் முதலியவற்றை அறிந்து வரும்படி செய்யத்தான் நம்மால் முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இவற்றில் எதற்காகவாவது பயன்படுகிறதா?”
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி)
”ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்பட்டால் நான் மிகமிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்று பேசியிருக்கிறேன்.”
”உங்கள் வீட்டில் மனைவியிடமும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்) தமிழ்ப் பைத்தியத்தை விட்டொழியுங்கள்.
(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் II-ம் தொகுதி).
இன்னும் பின்னர்...
No comments:
Post a Comment