கம்யூனிசத்தை கற்று அறிவீர்

 கம்யூனிஸ சமுதாயத்தை உண்மையில் தோற்றுவிக்கும் பணியை எதிர் நோக்க போகிறவர்கள் இளைஞர்களே எப்படி எனில்,  முதலாளித்துவ சமுதாயத்தில் வளர்ந்து ஆளான உழைப்பாளி மக்கள் தலைமுறையினர் அதிகம் செய்யக்கூடியதெல்லாம் சுரண்டலின் அடிப்படையில் நிறுவப்பட்ட பழைய முதலாளித்துவ வாழ்க்கை முறையின் அடித்தளங்களை அழித்திடும் பணியை நிறைவேற்றுவது தான் என்பது தெளிவு.

மனிதனை மனிதன் சுரண்டுவதன் அடிப்படையில் ஆன உறவுகள் இல்லாமல் போய்விடும் சூழ்நிலையில் வேலை செய்யத் தொடங்கும் ஒரு தலைமுறையினர் தான் இந்த அடித்தளத்தின் மீது கட்டி யெழுப்பகூடியவர்கள்

இளைஞர்களுக்கான பயிற்சியும் போதனையும் கல்வியும் பழைய சமுதாயம் நமக்கு விட்டுச் சென்றுள்ளவற்றில் இருந்தே தொடங்க வேண்டும். பழைய சமுதாயம் நமக்கு விட்டுச் சென்றுள்ள அறிவு நிறுவன அமைப்புகள் ஏற்பாடுகள் இவற்றின் முழு மொத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான் இந்த மானுட சக்திகள் சாதனங்கள் ஆகியவற்றின் கையிருப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் தான் கம்யூனிசத்தை கட்டி அமைக்க முடியும். இளைஞர்களுக்கான பயிற்சியும் போதனையும் ஒழுங்கமைக்கும் தீவிர முறையில் திருத்தி அமைத்தால் தான் இளைய தலைமுறையினது முயற்சியின் பயனாய் பழைய சமுதாயம் போன்றல்லாத ஒரு சமுதாயத்தை தோற்றுவிக்கும்படி அதாவது நாம் கம்யூனிஸ்ட் சமுதாயத்தை தோற்றுவிக்கும் படி உத்திரவாதம் செய்யப்பட முடியும்.

கம்யூனிசத்திற்கு முன்னேறிச் செல்ல விரும்பும் அனைவரும் கம்யூனிஸத்தை கற்றறிய  வேண்டும்.

மதங்களைப் பற்றிய நவீன விஞ்ஞான விமர்சர்னகளை சற்று உற்று நோக்குங்கள். கல்வி அறிவுடைய இந்த முதலாளித்து எழுத்தாளர்கள் மத மூடநம்பிக்கைகளைப் பற்றிய தமது மறுப்புரைகளுடன் கூட "தான் முதலாளி வர்க்கத்தின் அடிமையாகவே, சமய சித்தாந்தத்தின் பட்டம் பெற்ற அடிவருடியாகவே" இருப்பதை அம்பலமாகி காட்டும் வாதங்கள் அநேகமாக அவர்களின் எழுத்தின்  ஊடாக சேர்ந்து அளிக்கின்றனர். 

இவர்கள் கருத்து முதல் வாதம் பொருள் முதலாகும் ஆகிய இரண்டின் கடை கோடி நிலைகளுக்கும் தான் மேம்பட்டவர் என்பதாய் நகைத்தக்கதான மிகவும் பிற்போகான முறையில் உரிமை கொண்டாடுகின்றனர். உழைப்பாளி மக்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட லாபங்களில் இருந்து மதத்தின் ஆதரவுக்காக உலகெங்கும் கோடான கோடி பணம் செலவிடும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு தொண்டு ஊழியம்  புரிவதே இவர்கள் பணி .

முதலாளி வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவுகளுடன் ஓரளவுக்கு கூட்டணி கொண்டு செயல்படுவது போலவே கம்யூனிஸ்ட்களிடமும் முரண் அற்ற  பொருள் முதல்வாதிகளுக்கும்  எல்லோருக்கும் இக்காலத்து முதலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களும் வர்க்க நிறுவனங்களும் மத நிறுவனங்களுடன் மதப் பிரச்சார நிறுவனங்களுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதை காட்டும் மதத்துக்கும் மூலதனத்துக்கும் அதிகாரப்பூர்வமான அரசு வலியிலான இணைப்பு எவ்வளவு வெளிப்படையாக தெரிகிறது என்பன பற்றி எல்லா விவரங்களையும் நவீன ஜனநாயகத்தின் பெயரில் முதலாளி வர்க்கத்துக்கு ஏதெல்லாம் அனுகூலமாய் இருக்கிறதோ அதை அதாவது மிகவும் பிற்போக்கான கருத்துகளையும் மதத்தையும் மௌடீகத்தையும் சுரண்டலாளர்களை பேணி காப்பதையும் பின்பற்றி உபதேசிப்பதற்கான சுதந்திரமே ஆகும்.

கம்யூனிசத்தை கற்று அறிவீர். கம்யூனிஸ்ட் பாடப்புத்தங்கிலும் பிரசுரங்களிலும் நூல்களிலும் அடங்கியுள்ள ஒட்டுமொத்த அறிவை கிரகித்துக் கொள்வதே கம்யூனிசத்தை கட்டறிவதாகும் என்பது இயல்பாய் ஒருவர் மனதில் முதலில் தோன்றும் எண்ணம் ஆனால் கம்யூனிசத்தை  பயிலுதல் என்பதற்கு இவ்விதம் இலக்கணம் கூறுவது ஆனது மிக மிஞ்சி கொச்சைப்படுத்துவதும் குறைபடுத்துவதுமே இருக்கும்

கம்யூனிஸ்டுகள் புத்தகங்களின் பிரசுரங்களிலும் இருப்பதை கிரகிப்பது கம்யூனிசம் பயிலுவதாய் இருப்பின்.  கம்யூனிஸ்ட் வாசகம் பேசி வித்தை காட்டுவோரை அல்லது வாய்சவடால்காரர்களை எளிதில் நாம் நிறைய பெற்றுக் கொண்டு விடலாம் பல சந்தர்ப்பங்களில் இதற்கு தீங்கே ஏற்படும். ஏனெனில் இத்தகையோர் கம்யூனிஸ்ட் புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் எடுத்துரைக்கப்பட்டதை படித்து தெரிந்து கொண்டபின் பல்வேறு அறிவுத் துறைகளை சேர்த்து இணைத்திடும் திறன் அற்றவர்களாக இருப்பார். கம்யூனிசத்திற்கு உண்மையில் அவசியமாய் உள்ள முறையில் இவர்களால் செயல்பட முடியாது.

புத்தகங்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கு இடையிலான ஆதாலபாதாள வேறுபாடு பழைய முதலாளித்துவ சமூகம்நமக்கு விட்டுச் சென்றுள்ள பெரும் கேடுகளிலும் இன்னல்களிலும் ஒன்றாகும்.

எனவே கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டறிவு கிரகித்துக் கொள்வதுடன் நின்று விடுவது மிகப்பெரும் தவறாகும்

நமது பேச்சுகளும் கட்டுரைகளும் எல்லா துறைகளிலும் நமது அன்றாட வேலைகளுடன் இணைந்து இருக்கின்றன வேலையில் ஈடுபடாமல் போராட்டம் இல்லாமல் பிரசுரங்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் கம்யூனிசத்தை குறித்து பெறப்பட்ட ஏட்டு அறிவு சிறிதும் பயனற்றதாகும். தத்துவத்துக்கும் நடைமுறைக்குமான பழைய முதலாளித்துவ கேடுகெட்ட இயல்பை தொடர்ந்து நீடிக்கவே செய்யும்

கோடிக்கணக்கான மக்கள் நவீன கால சமுதாயம் அனைத்திலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதைப்படும்படி இருத்தப்பட்டு இருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சிய போதனை என்னும் நேரான பாதையில் தான்  இந்த இருளில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியும் என நினைப்பது மார்க்சியவாதியாக ஒருவர் புரியக்கூடிய மிகப்பெரிய மிகவும் கடும் தவறாகிவிடும். இந்த வெகுஜனங்களை நாட்டம் கொள்ளும்படி செய்வதற்காகவும் மதத்தால் மயக்குண்ட நிலையில் இருக்கும் இவர்களை விழித்தெழ செய்வதற்காகவும் பல்வேறு வகைப்பட்ட கோணங்களில் இருந்தும் பல்வேறு வகைப்பட்ட வழியில் இருந்தும் இவர்களை உசுப்பி விடுவதற்காகவும் வாழ்க்கையின் மிகப் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இவர்களை அணுகி ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்