சோவியத் யூனியனின் உடைவு -றெஜி சிறிவர்த்தன (தொடர்- 1)

 சோவியத் யூனியனின் உடைவு -றெஜி சிறிவர்த்தன

பதிப்பாசிரியர்கள் எம். ஏ. நுஃமான், உ. சேரன்.
கொழும்பு 8, இலங்கை.
முதல் பதிப்பு : ஜூன் 1992

இதனை தமிழகத்தில் பரிசல் வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நமது தோழர் தன்முக நூல் பகுதியில் வெளியிட்டிருந்தார்.அதனை கண்ட நான் விமர்சித்தேன் தோழர் நீங்கள் உங்கள் விமர்சனத்தை வையுங்கள் என்றார். என்னிடம் எழுத்து பணி இருந்தமையால் உடனடியாக விவாதிக்க முடியவில்லை அப்பொழுது. உண்மையில் அந்த நூலானது கோர்பச்சாவையும் அன்றைய சோவியத் அரசை ஒழித்துக் கட்ட துடித்தவர்களை தூக்கி நிறுத்த எழுதிய நூலே. அதனை பற்றி இலக்கில் விமர்சனம் எழுதியுள்ளேன் இங்கே முக நூலிலும் அதனை பற்றி அவசியம் எழுதுவேன் தோழர்களே. எதிரியின் எழுத்தை கொணரும் பொழுது அதை விமர்சன பூர்வமாக அணுகும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அந்த நூலின் நோக்கமே ஸ்டாலின் எதிர்ப்பு பின்னர் லெனின் தேசிய இனபிரச்சினையை கையாண்ட விதம் தோற்று போய்விட்டது என்று கூறும் இதே மண்டை வீங்கி சொல்கிறார் அயர்லாந்த் பிரச்சினையை அணுக மார்க்ஸ்கு தெரியவில்லை என்று இவரை போன்றோரை மார்க்சிய வரலாற்று ஆசிரியர் என்று மொழிபெயர்பாளர் குறிப்பிடுவதும். அதை நாம் படிக்காமலே தோழர்களுக்கு அறிமுகப் படுத்துவதும் தவறு என்று நினைக்கிறேன் தோழர்களே.

தோழர் சிவசேகர் விமர்சனம் இன்நூல் குறித்து றெஜி தரும் தகவல்களின் உண்மையும் முக்கியத்துவமும் பற்றி அவர் புறக்கணிக்கும் விடயங்களையும் கணிப்பிலெடுத்தே நம்மால் மதிப்பிடப்பட முடியும்.
1940களில் உலகில் இரண்டு நாடுகளிலேயே குறிப்பிடத்தக்க ட்ரொட்ஸ்கிய இயக்கங்கள் இருந்தன. ஒன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றது இலங்கை. றெஜியின் அரசியல் சார்பு இன்று எவ்வாறிருப்பினும், ட்ரொட்ஸ்கியத்துடன் அவருக்கு இருந்த நெருக்கம் கட்டுரைகளிலும் தென்படத்தவறவில்லை. ட்ரொட்ஸ்கியக் கருத்துக்கள் உள்ள காரணத்தால் மட்டுமே றெஜியை யாரும் ஆதரிக்கவோ நிராகரிக்கவோ அவசியமில்லை. ஆயினும் உலக அரசியலை அவர் அணுகும் முறையிலுள்ள சில அடிப்படையிலான கோளாறுகட்கான தோற்றுவாய் அங்கே தான் உள்ளது. ட்ரொட்ஸ்கியத்தை நிராகரிப்பதாக றெஜி பல இடங்களிலும் எழுதினாலும் அவரது அணுகுமுறையில் அதன் பாதிப்பு மிகுதியாக உள்ளது.


அறிமுக பகுதியில்
சோசலிசப் புரட்சியின் ஆரம்ப நாட்களில் இருந்து சமீபகாலம் வரை நிலவிய சோசலிச நடைமுறை களையும் இந்த நடைமுறைகளை வழிநடத்திய கருத்தியலையும (ideology) அந்தக் கருத்தியலை உருவாக்கிய வரலாற்று நிபந்தனைகளையும் றெஜி சிறிவர்தன இந்த நூலிலே ஆராய முயன்றுள்ளார். இம்முயற்சியில் ஸ்டாலினை மட்டுமன்றி சோவியத் யூனியனின் பிரதான சிற்பிகளான லெனின், ட்றொட்ஸ்கி, புக்காரின் ஆகியோரின் கருத்தியல்களையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதிலிருந்தே ஆசிரியரின் நோக்கம் புரிந்துக் கொள்ளலாம்.

மேலும் இந்த நூல் மொழிபெயர்பாளரின் கேள்வியே இஅவையும்," மனித சமூகத்தை வன்முறையில் இருந்து இறுதியாக விடுவிப்பதற்கான தவிர்க்க முடியாத சாதனம் என்ற வகையிலேயே கார்ல் மார்க்ஸ் தன் புரட்சிகர வன்முறையை வலியுறுத்தினார் என்பதையும் நாம் மனதில் இருத்த வேண்டும். ஆனால் வன்முறையை, புரட்சிகர வன்முறை எதிர்ப்புரட்சிகர வன்முறை எனத் தெளிவாக வேறுபடுத்த முடியுமா? என்ற கேள்வியையும் சோசலிசப் புரட்சிகளினதும் தேசிய விடுதலைப் போராட்டங்களினதும் வரலாறு எழுப்புகின்றது"

நூலாசிரியர் றெஜி "பழைய உட்பிரிவுகளை உயிர்ப்பிப்பதும் பண்டைச் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டுவதும் பழைய பல்லவியே பாடுவதும் எம் வேலையல்ல" பழைய குழுச் சண்டைகளைத் தொடர்வதும் பழைய பல்லவிகளை மீண்டும் பாடுவதும் இங்கு என் நோக்கமல்ல. 1920களில் சர்ச்சைக்குரியவர் களாக மூன்று தனிநபர்களான ஸ்டாலின், ட்றொட்ஸ்கி, புக்காரின் என்போர் விளங்கினர்". என்னுமிடத்தில் றெஜியின் நோக்கம் நேர்மையாக இருக்கும் என்று தொடர்ந்தால்.
லெனின் காலத்தில் ஏனைய கட்சிகள் தடை செய்யப்பட்டபோது ட்றொட்ஸ்கியும் அதற்கு ஆதரவாக இருந்தார். அவற்றின் மீதான தடைநீக்கத்துக்கு அவர் முயலவில்லை. அக்காலகட்டத்தில் ட்றொட்ஸ்கியின் அரசியல் திட்டமானது புக்காரினால் முன்வைக்கப்பட்ட பொருளியல் கொள்கையோடு இணைக்கப்பட்டிருந்தால் நடைமுறையில் சாத்தியமானதாக அமைந்திருக்கும். புதிய பொருளாதார கொள்கையை (N.E.P.) லெனின் ஒரு தற்காலிக சமரசமான தீர்வாகக் கொண்டிருந்தார். ஆனால் புக்காரின் அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதையும் விஸ்தரிப்பதையும் விரும்பினார். எனும் றெஜி தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை புகாரின் மற்றும் ட்றொட்ஸ்கியை தூக்கி பிடிப்பதில் முனைப்பாக உள்ளார்.

புக்காரின் ஒரு கலப்புப் பொருளியல் முறையை விரும்பினார். சிற்றளவு தனியார் முயற்சிக்கு சலுகைகள் அளிப்பதால் சமூகத்தின் பதட்டநிலையைத் தணிக்கலாம் எனவும் அரசியல் சூழ்நிலையில் கூடியளவு தாராண்மை வாதத்தைப் புகுத்தலாம் எனவும் அவர் கருதினார். எப்போதும் எல்லா இடத்திலும் ஓரளவு தனியார் முயற்சியை பேணுவதன் மூலம்தான் அரசியல் ஜனநாயகத்தை நிறுவமுடியும் என்பது இதன் பொருளல்ல. இருப்பினும் அரசின் கையில் பொருளியல் அதிகாரம் முழுவதையும் குவித்துவைத்துக் கொண்டு அதேவேளை அரசியல் சுதந்திரத்தையும் பேணுவதில் எந்தவொரு சோசலிச நாடும் இதுவரை வெற்றி காணவில்லை. நான் இங்கு குறிப்பிடவிரும்புவது யாதெனில் சோவியத் யூனியன் 1920களில் ஒரு குறிப்பிட்ட தனித்துவமான வரலாற்றுப் பிரச்சினையை எதிர் நோக்கியது. அது துரிதமான, பேரளவு கைத் தொழில் மயப் படுத்தல் , நிலத்தைக் கூட்டுடைமையாக்கல் என்னும் திட்டங்களை அமுல்படுத்தியது.

ஐந்து ஆண்டுத் திட்டங்கள் கைத்தொழில் மயமாக்கலை அசுரவேகத்தில் முடுக்கிவிட்டன. இதன் விளைவாக பெருமளவில் உழைப்பாளர் தொகையினரை நிலத்திலிருந்து பிரித்து தொழிற்சாலைகளுக்குஅனுப்ப வேண்டி ஏற்பட்டது. கிராமத்திலிருந்து வந்த இந்த உழைப்பாளர்கள் தொழிற்சாலை ஒன்றின் நியமங்கள், வேலை ஒழுங்குகளுக்குப் பழக்கப்படாதவர்களாய் இருந்தனர் 

அரசியல் அமைப்பில் ஏற்பட்ட விறைப்பு நிலையை (Tension) ஸ்டாலின் களை எடுப்புக்கள் மூலமும், பயங்கரமான ஆட்சியின் மூலமும் தணிக்க முனைந்தார். ஸ்டாலினுடைய தனிப்பட்ட மனோ இயல்புகளையும், இரக்கமற்ற சுபாவத்தையும் தவிர்த்துவிட்டாலும் சோவியத் வரலாற்றின் போக்கு அடிப்படையில் வேறு விதமாக அமைந்திருக்க முடியுமா என்ற சந்தேகம் எழவே செய்யும். சோவியத் சமூகம் துரித கைத்தொழில் விருத்தி, கூட்டுச்சொத்துடைமை முறைகளை அமைத்தல் ஆகிய இரு இலக்குகளை வரித்துக் கொண்டது. இவ்வாறான குறிக்கோள்களை உடைய அதன் ஆட்சி முறையில் ஸ்டாலினைத் தவிர்ந்த வேறு எந்தநபர் இருந்தாலும் கூட வித்தியாசமான அரசியல் போக்கு ஒன்றிற்கு இடமிருந்திருக்காது.(ஸ்டாலின் மீது எவ்வளவு வெறுப்பு பாருங்கள் (எ-வி).

தனது அரசியல், பொருளியல் திட்டங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ட்றொட்ஸ்கி கவனிக்காது போனது ஏன்?1920களில் மட்டுமல்ல 1940ம் ஆண்டில் இவர் இறக்கும் வரைக்கும் இந்த நம்பிக்கை ட்றொட்ஸ்கிக்கு இருந்தது. (பாவம் ட்ராட்ஸ்கிய மீது எவ்வளவு கரிசனம் பாருங்கள் எனது விமர்சனம்). 

புக்காரினுடைய கொள்கைகள் பின்பற்றப்பட்டிருந்தால் வல்லாட்சி முறை தவிர்க்கப்பட்டிருக்கும். சோவியத் சமூகம் மானிட சுதந்திரத்தோடு கூடிய விருத்தியை நோக்கி முன்னேறியிருக்கும். அதேவேளை பொருளியல் வளர்ச்சியில் துரித கதியில் முன்னேறி இருக்க முடியாது. (1924ல் புக்காரின் பின்வருமாறு கூறினார். "நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்) புக்காரினுடைய திட்டத்தின்படி. சோவியத் யூனியன் சென்றிருக்குமாயின் 1941ஆம் ஆண்டில் நாஜிகளின் படை எடுப்பினை எதிர்கொள்வதற்கான கைத்தொழில் பலம் இருந்திருக்காது. அச்சூழலில் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராக வியட்நாம் நடத்தியதுபோன்ற கொரில்லா யுத்தமுறையை கையாண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும். ஒருவேளை என்றோ ஒரு நாள் இப்படியான ஒரு யுத்தத்தை சோவியத் யூனியன் எதிர் நோக்கவேண்டியிருக்கும் என்ற உணர்வும் எதிரிகள் நிறைந்த சர்வதேசச் சூழலில் தம் நாட்டைப் பாதுகாக்க வேண்டு மென்ற சவாலும் ஸ்டாலினுடைய கொள்கைகள் வெற்றி பெறுவதற்கு காரணமாயிருக்கலாம். இதனால்தான் கட்டாயக் கைத்தொழில் மயமாக்கலும் கூட்டுப்பண்ணை முறையமைப்பும் அவசியத் தேவைகளாயின. புக்காரின் கொள்கைகளைப் புறமொதுக்கி ஸ்டாலினிசம் வெற்றி பெறுவது தவிர்க்கமுடியாததாயிற்று.

புக்காரினிசமும், ட்றொட்ஸ்கியிசமும் கைவிடப்பட்டன. சோவியத் ஆட்சி பாரியவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டது. உற்பத்தி சக்திகள் பாரிய அளவில் விருத்தியுற்றன. வேறு எந்த நாட்டிலும் முன்னர் ஏற்படாத வகையில் கைத்தொழிற் புரட்சி ஒரு குறுகிய கால எல்லைக்குள் நிகழ்ந்தது. எண்ணற்ற மனிதவிலை கொடுக்க வேண்டியிருந்ததற்கு மேலாக இக்கைத்தொழில் வளர்ச்சி சமனற்றதாயும், முரண்பாடு உடையதாயும் இருந்தது.

பாவம் றெஜியின் நிலையை பாருங்கள் ஸ்டாலினை தூற்றவும் செய்கிறார் புகழ்பாடவும் செய்கிறார் இவரின் இரண்டாம் கெட்ட நிலையை என்னவென்று சொல்வது.

 ஸ்டாலினின் சாதனைகளை குறைத்து மதிப்பிடுதல் கூடாது. நீண்ட காலமாக பின்னடைவுற்று வாழ்ந்திருந்த ஒரு சமூகத்தை அப்படிப்பட்ட பின்னடைவிலிருந்து மீட்டெடுத்த பெரும் சாதனை அவருடையதே. 1953 மார்ச் மாதத்தில் ஸ்டாலின் இறக்கும் போது 'மன்சஸ்ட்டர் கார்டியன் பத்திரிகையில் "ஐசக் டொய்ற்ஷர் எழுதிய ஒரு வசனம் என்னுடைய ஞாபகத்திற்கு வருகின்றது. டொய்ற்ஷரின் கட்டுரை ஒரு தீர்க்க தரிசனம் போன்றது. ஸ்டாலினிச யுகத்தின் முடிவை அவர் தீர்க்க தரிசனமாகக் கூறினார்.

"ஸ்டாலின் பதவிக்கு வரும்போது மரக்கலப்பைகளைக் கொண்டு உழவுத் தொழில் நடத்திய நாடாக அது இருந்தது. ஸ்டாலின் அணுஉலைகளைக் கொண்ட நாடாக அதனை விட்டுச் சென்றார். இது தான் ஸ்டாலினுடைய வரலாற்றுச் சாதனையின் சாராம்சம்"

இந்த சாதனையானது வெறுமனே பொருளியல் தொழில்நுட்பச் சாதனை மட்டுமல்ல. இந்த உண்மையை டொய்ற்ஷர்காட்டியுள்ளார். சோவியத் யூனியனுடைய கைத்தொழிற் புரட்சியானது வெறும் உற்பத்தித் துறை மாற்றம் அல்ல. நவீன கல்வியறிவை படிப்பறிவு இல்லாத ஜனத்திரளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இக் கைத்தொழிற் புரட்சிக்கு உண்டு. அக்காலத்தில் ரஷ்ய மக்கள் சாதாரண எழுத்தறிவுகூட அற்றவர்களாக விளங்கினர். ஆனால் இக்கலாசாரப் புரட்சி அரசியல் கட்டுப்பாடுகளாலும் ஸ்டாலினிச கருத்துநிலை இறுக்கத்தினாலும் தனிநபர் வழிபாட்டினாலும் அநாகரிகமான ஸ்டாலினிசமாகத்திரிபடைந்தது என்பது உண்மையே. 

இத்துடன் முதல் அத்தியாயம் முடிகிறது நாளை அடுத்த அத்தியாயம் தொடரும்.


தொடரும் எனது இந்த நூல் குறித்த விமர்சனம்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்