மார்க்சியவாதிகளுகிடையே உள்ள பணி -2
இன்று நாட்டில்உள்ளஓட்டரசியல்கட்சிகள் மக்களின்வாக்குகளைமட்டுமே தேடுவதுவும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பற்றி ஒரு வார்த்தையையும் பேசுவதில்லை. மக்கள் சீற்றமடைந்து அதனால் வாக்குப்பதிவு குறைந்தே போனாலும் மக்கள் விரோத இந்த ஓட்டு கட்சியினருக்கு பிரச்சினையில்லை.
நேற்று (முந்தையஆண்டில்) விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தனர் அதனை பற்றி பார்ப்போம். அரசின் கடந்தகால புள்ளிவிவரம் என்ன சொல்கிறது என்றால், கிராமங்களில் வாழ்வது மிகவும் கடுந்துன்பத்துடன் உள்ளது. பிஸினஸ் எகானமி என்ற இதழின் கூற்றுப்படி (ஏப்.3-16) மஹாராஷ்டிராவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 46தற்கொலைகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய குற்றப்பதிவுத் துறை (NCRB) வழங்கிய புள்ளிவிவரங்கள் 2007இல் மட்டும் 16632 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றன.சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குக் கடன்களைக் கொடுக்கக்கூடிய நபார்ட் (தேசிய ஊரக வளர்ச்சி வங்கி) வங்கிக்கு (நிதி) ஒதுக்கீடு செய்வதை (ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கம் பணித்ததன்பேரில்) இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு ஆண்டுகளுக்கு (2016 ல் எழுதியவை) முன்பு நிறுத்திவிட்டதாக அந்த இதழ் கூறுகிறது.இது விவசாயிகளை வட்டிக்காரன் கைகளுக்கு மாற்றிவிட்டது என்பதுதானே?. இந்த நிதி ஒதுக்கீட்டின் அளவு என்பது ரூ. 6000 கோடி ஆகும்.அந்த இதழ் மேலும் கூறுவதாவது:"அரசாங்கம் அமெரிக்கத் தொழில் நிறுவனங்களை மீட்பதற்கு பல ஆயிரம் கோடி (Sovereign Wealth Funds) ஏற்பாடு செய்வதை அறமாக கூறும் அரசமைப்புதான் நாட்டில் உள்ள விவசாயிகள் கடன்களுக்கான நிதிப் பற்றாக்குறை பற்றி ஓயாமல் ஒப்பாரி வைக்கிறது, அப்படியெனும் பொழுது இவை இந்த நாட்டின் மக்களுக்கான அரசா அல்லது அன்னிய பன்னாட்டு கம்பெனிகளின் அரசா கேள்வி எழுகிறது.
அடுத்து,ஏழைகள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளால் மேலும் கசக்கிப் பிழியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேலையிழந்தோரின் எண்ணிக்கையைக் கற்பனை செய்யத்தான் முடியும்.
ஒருபுறம் ஏகாதிபத்திய நிறுவனங்களும் பெரும்முதலாளிகளும் பல லட்சம் கோடி சலுகையும் இன்நாட்டின் விவசாயிகளுக்கு சில ஆயிரம் கோடி சலுகை அளிக்க வக்கற்ற இந்த அரசா விவசாயிகள் மற்றும் மக்கள் நலம் காணப்போகிறது.
இன்றோ மல்யுத்த வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அவர்கள் போராடிக்கொண்டுள்ளனர் ஆனால் அவர்களை காக்க வேண்டிய இந்த அரசு கண்டுக் கொள்ளாமலிருப்பதும் குற்றவாளியை காப்பதிலிருந்தே இவர்கள் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல இந்த நாட்டின் கௌரவத்திற்காக வீளையாட்டில் தன் திறமையால் நாட்டிற்க்கு பெருமை சேர்த்தவர்களையும் கௌரவிக்க தெரியாத இவர்கள் உண்மையில் யாருக்கானவர்கள் என்பதனை எல்லோருக்கும் புரிய வைப்பதோடு நமது ஆசான்கள் வழி நின்று எல்லா ஒடுக்குமுறைக்கும் காரணமான இந்த அமைப்பு முறையில் தீர்வில்லை என்பதனை இந்த மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை இடதுசாரிகளாகிய நமது கடமை அல்லவா? அப்பொழுது நாம் இத்தனை பிரிவாக ஏன் பிரிந்துக் கிடக்கிறோம் சிந்திதத்துண்டா? ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க கட்சி மட்டுமே இந்த எல்லா ஒடுக்குமுறைக்கும் தீர்வாக நிற்க திறன் படைத்தது அதற்கு… மார்க்சியவாதி களாகிய நாம் சிந்திப்போம்...
மார்க்ஸ் சமூக விஞ்ஞானி;வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 175 ஆண்டுகளின் முன் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம்,30வயதிலேயே அவரால் எழுதப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோசலிச சமுதாயத்தின் அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் கூறி நிற்கிறது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெட்றிக் ஏங்கெல்ஸ் ஆகிய இரு மேதைகளும் விஞ்ஞான பூர்வமாக வகுத்து அளித்துச் சென்ற தத்துவாமே மார்க்சியமாகும்.அன்றுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த பழைமைவாத கருத்து முதல்வாத உலக நோக்கிற்கு எதிராக இயங்கியல் பொருள்முதல்வாதம் என்னும் புரட்சிகரமான உலக நோக்கை மார்க்சியம் நிலைநிறுத்திக் கொண்டது.மேலும் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கு மட்டுமன்றி முழு மனிதகுல விடுதலைக்குமான தலைவிதியோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மாபெரும் வலிமையையும் பெற்றக்கொண்டது.
மார்க்சியம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவார்த்தத்தை முன்வைக்கின்றது.எவ்வாறு முதலாளித்துவத்தின் தோற்றம்,வளர்ச்சி என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி நிரூபித்துக்கொண்டதோடு அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும் மார்க்சியம் வெற்றி கண்டது.
மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் பற்றிய துல்லியமான ஆய்வையும் தெளிவான வரையறைகொண்ட முடிவுகளையும் தமக்கேயுரிய மேதா விலாசத்துடன் அணுகி ஆராய்ந்து அதன் மூலம் முதலாளித்துவம் நடைமுறைப்படுத்தி வரும் கூலி அடிமை முறையின் உள்ளார்ந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது.காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது.இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் சுரண்டிக் கொண்டு நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும்.
ரசியசீனதிருத்தல்வாதம்பலம்பெற்றதைமார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்று காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது;அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவை செய்யப் படுகின்றன.
· இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன.சமூக நலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங் களும் குறிவைத்து தாக்கப்படு கின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பழைமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டுநிலை நிறுத்தப்படும் போக்கு வலுவடை கின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும்.
மார்க்சியம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாக லெனினியமாக வளர்ச்சி கண்டது. சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாக விரிவுபெற்றது. இன்னும் பல நாடுகளின் புரட்சிகளில் மார்க்சியம் வளம் பெற்றது.
· எனவே, இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத்தனது சொந்தக் குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது. அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதேயாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும்.இதை புரிந்துக் கொள்ளாத சிலர் இந்த அமைப்பு முறைகுள்ளே சமத்துவத்தை வேண்டி நிற்கின்றனர்.
இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.
முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரி இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது,மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்கு முறையற்ற ஒரு நல்வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே. (பதில் எதிர்பார்க்கிறேன் தோழர்களே).இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மாலெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்...
இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும்.இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரசிய ஏகாதிபத்தியம் (இவை குறிப்பாக இடதுசாரிகள் இடையில் ஏற்பட்டுள்ள திரிபுவாத கண்ணோட்டம் மற்றும் மார்க்சியமல்லாத குருசேவ் வகைபட்டவை என்பேன்).
முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம். (1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது. (2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது. (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள். (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது. (6) மேட்டிமைதனத்தை பரப்புதல்(7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனினியத்தைச் சிதைத்தல்.
மற்றொருபுறம் ரசிய ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனினியத்தை திரித்து,இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும்,தொழிற்நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன)மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்;புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல்.இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது,அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை....புரட்சிகர அமைப்புகள் இதே சமூகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் மார்க்சியம் பயின்றிருந்தாலும் அவர்களின் சிந்தனை போக்கு கணக்கில் கொள்ள வேண்டியதன்றோ? (இடதுசாரிகள் சிந்திக்க வேண்டியவையில் இவையும் ஒன்று). “சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே.அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும். அரசு அதிகாரத்தின்முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன.புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின் ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது.சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை. இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.”லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச் செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்”திரிபுவாதிகள் என்போர் அறிந்தும்அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளா கவே செயல்படுகின்றனர்.
நமது படிப்பினைக்கு மேற்கு வங்கத்தில் நடந்தேறியவற்றை கருத்தில் கொண்டு ஆய்ந்தறிந்தால் இதற்கு விடை கிடைக்கும்.ஆகவே மேற்கு வங்கத்தில் சிபிஎம் தலைமையில் நடந்த உழைக்கும் மக்களுக்கு எதிரான சம்பவங்களை சிலவற்றை கணக்கில் கொண்டாலே அவர்கள் எந்த வர்க்க பிரதிநிதியாக அவற்றை செய்தனர் என்பது விளங்கும்.
உண்மையில் அவர்கள் புரட்சி பற்றிய விதியை நமது ஆசான்களிடமிருந்து பயிலவே இல்லை என்பேன்.
போரில் ஈடுபட்டிருக்கும் சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தி பாட்டாளி வர்க்கமானது ஆளும் வர்க்க ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளிவர்க்கத்தின் ஆட்சியை நிறுவிட வேண்டும் என்று லெனின் சொன்னார்.அவர் சொன்னதை பல நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டு கட்சித் தலைவர்கள் அகிலத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டவர் களும் ஏற்றுக்கொண்டாலும் போர் துவங்கியவுடன் அகிலத்தின் முடிவிற்கு மாறாக சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களுடன் கூட்டுசேர்ந்து உள்நாட்டு போரை நடத்த தவறியவர்கள் சோசலிச லட்சியத்தை அடையமுடியாமல் தோல்வி கண்டனர்.ஆனால் இந்த நிலைபாட்டில் உறுதியாக நின்று உள்நாட்டுப்போர் என்ற வழியில் போராடி சோசலிச லட்சியத்தில் ரஷ்ய பாட்டாளிவர்க்கம் வெற்றிகண்டது. அதற்குப் பின்பு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மீதும்,கம்யூனிச கொள்கையின் மீதும் நம்பிக்கைகொண்டு உலகில் பல நாடுகளிலும் கம்யூனிஸ்ட்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு மூன்றாம் அகிலத்தின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி கம்யூனிஸ்ட்டுகள் ஒரே அமைப்பாகவே உலகம் முழுவதிலும் செயல்பட்டனர்.முதல் உலகப்போரின்போது வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் சோசலிசப் புரட்சிக்கான சாதகமான சூழல் நிலவிய போதும் அதனை சரியாக பயன்படுத்த தவறியது அந்த நாடுகளிலிருந்த கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் தலைமை.அதனால் மோசமான தோல்வியை சந்தித்தனர். இவை நமது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்றும் புரிந்துக் கொள்ளவில்லை இன்றும் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் செயல் எப்படி உள்ளது கீழ்காணும் நிகழ்வின் ஊடாக புரிந்துக் கொள்ளுங்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா குறித்து- 2019 அக்டோபர் 17 அன்று தமிழகத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சி.பி.எம்.) யின் பொதுச் செயலாளரான சீதாராம் யெச்சூரி,“வரும் அக்டோபர் 17,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100ஆவது ஆண்டாகும்.இதை ஓராண்டுக் காலத்துக்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது” என்று கடந்த அக்டோபர் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இக்கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைகளில் சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டதோடு, அக்டோபர் 17 அன்று விழாக்களும் நடந்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது.ஆனால் சி.பி.எம்.கட்சியோ,1920ல்,அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த நிகழ்வை நமது பார்வையில் பார்ப்போம். வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். இந்தியாவில்,அன்றைய பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.
அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும்,ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும்,பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன.அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்”சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.
வெளிநாடுகளில் வாழ்ந்த இந்திய அறிவுத்துறையினரில் சிலர் மகத்தான சோசலிசப் புரட்சியால் உந்தப்பட்டு கம்யூனிசப் புரட்சியை இந்தியாவில் சாதிக்க வேண்டுமென்ற உணர்வோடு கம்யூனிசக் கோட்பாடுகளைப் படிப்பதும் பரப்புவதுமாக இருந்தனர். ரஷ்யப் புரட்சிக்கு முன்பிருந்தே, ரஷ்ய போல்ஷ்விக் கட்சித் தோழர்களுடனும் தோழர் லெனினுடனும் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். அப்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தங்கியிருந்த எம்.என். ராய், ரஷ்ய போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு மெக்சிகோவில் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்கினார்.பின்னர்,அவர் லெனின் தலைமையிலான கம்யூனிச அகிலத்தின் கிழக்கத்திய நாடுகளுக்கான பிரிவில் அங்கம் வகித்து, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவ முயற்சித்தார்.
கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு,அகிலத்தின் நிர்வாகக் குழுவானது ஒரு துணைக் கமிட்டியை உருவாக்கியது.அது,காலனியாதிக் கத்திலிருந்து கிழக்கத்திய நாடுகளின் விடுதலைக்காக,அப்போதைய சோசலிச சோவியத் ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருந்த அஜர்பெய்ஜானின் தலைநகரான பாகூ நகரில்,“கிழக்கத்திய மக்களின் விடுதலை”க்கான முதலாவது மாநாட்டை செப்டம்பர் 1920-ல் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாகவே அக்.17,1920ல் அப்போதைய சோவியத் சோசலிசக் குடியரசில் சுயாட்சிப் பிரதேசமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தானின்) தலைநகர் தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் – எம்.என். ராய், அவரது துணைவியார் ஈவ்லின், அபானி முகர்ஜி, அவரது துணைவியார் ரோசா, அகமது ஹசன் எனப்படும் முகம்மது அலி, முகம்மது ஷபீக் சித்திகி, எம்.பி.டி. ஆச்சார்யா ஆகிய 7 பேர் – கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கும் கூட்டத்தை நடத்தினர்.
இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி (The Indian Communist Party) என்று கட்சிக்குப் பெயரிடப்பட்டது. ஷபீக் செயலாளராகவும்,எம்.என்.ராய் துருக்கேஸ்தானில் உள்ள கட்சிக் கமிட்டியின் செயலாளராகவும்,ஆச்சார்யா தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.அகிலத்தின் முடிவுகளைச் செயல்படுத்துவது, கட்சித் திட்டத்தை இந்திய நிலைமைகளுக்கேற்ப தொகுத்து எழுதி முடிப்பது, கட்சி உறுப்பினர் விதிமுறைகளைத் தொகுத்து எழுதுவது, கட்சியை அகிலத்துடன் இணைக்க ஆவன செய்வது – என்று தீர்மானித்த இந்தக் கூட்டம், சர்வதேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.
இந்தியாவில் அப்போது “கிலாபத்”இயக்கத்தைச் சேர்ந்த பலர்,பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை முறியடிக்கஅகண்டஇஸ்லாம்(PANIslam) சித்தாந்தத்துடன்,ஆப்கானைக் கடந்து மேற்கு ஆசியாவுக்கும் துருக்கிக்கும் சென்று,அங்கிருந்து படை திரட்டி பிரிட்டிஷாரை வீழ்த்த முற்பட்டனர்.“முகாஜிர்”கள் என்றழைக்கப்பட்ட இத்தகையோர் இடைத் தங்கலாக தாஷ்கண்ட் நகரில் இருந்தபோது,அவர்களிடம் அன்றைய சோவியத் சோசலிசக் குடியரசின் அதிகாரிகளும் கம்யூனிஸ்டுகளும் கம்யூனிச சித்தாந்தத்தை அறிமுகப்படுத்தினர்.இதில் எம்.என்.ராயும் அவரது துணைவியாரும் முக்கிய பங்காற்றினர். அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்திய முஸ்லிம்களிடம் பேசி அவர்களையும் கம்யூனிசத்துக்கு ஆதரவாளராக்கினர். தாஷ்கண்ட் நகரில் இந்திய ராணுவப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பலர் இணைந்து பயிற்சி பெற்றனர். முகம்மது ஷபீக், முகம்மது அலி முதலான முன்னாள் இளம் முகாஜிர்கள் எம்.என். ராய் மூலம் கம்யூனிஸ்டுகளாக உயர்ந்தனர்.கம்யூனிச சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட முகாஜிர்களில் சிலர் மாஸ்கோவுக்குச் சென்று, “கிழக்கத்திய உழைப்பாளர் பல்கலைக்கழக” த்தில் சேர்ந்து கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்றறிந்தனர். அவர்களில் சிலர் இந்தியாவுக்கு இரகசியமாகத் திரும்பி வந்து, உழைக்கும் மக்களை கட்சிக்கு அணி திரட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு, பெஷாவர் சதி வழக்கிலும் கான்பூர் சதி வழக்கிலும் கைதாகி, சிறை – சித்திரவதைக்கு ஆளாகினர்.
எம்.என்.ராய் அப்போது மெக்சிகோவில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றிருந்ததால்,அவர் அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கம்யூனிச அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் பங்கேற்றார்.எம்.என்.ராய் குழு பிரிட்டிஷ் காலனியாட்சியின் அடக்குமுறை காரணமாக இந்தியாவில் செயல்பட முடியவில்லை. இருப்பினும் கம்யூனிச அகிலமானது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதாக அல்லாமல்,இந்தியாவின் ஒரு கம்யூனிசக் குழுவாக எம்.என்.ராய் குழுவை அங்கீகரித்ததோடு,மூன்றாவது காங்கிரசில் இக்குழுவிடம் கலந்தா லோசனைகளையும் நடத்தியது.
இதேபோல,அப்போது ஜெர்மனியின் பெர்லின் நகரிலுள்ள இந்திய அறிவுத்துறை யைச் சேர்ந்த விரேந்திரநாத் சட்டோபாத்தி யாயா தலைமையில் பூபேந்திரநாத் தத், முகம்மது பரக்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் ஒரு குழுவாக இணைந்து,போல்ஷ்விக்குகளுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டி நாட்டை விடுதலை செய்ய விழைந்தனர். அமெரிக்காவிலும் கனடாவிலுமுள்ள சீக்கியர்கள் “கெதார் கட்சி”யில் இணைந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடியதோடு,சோசலிச ரஷ்யாவுடன் தொடர்பு கொண்டு கம்யூனிசப் பாதையில் நாட்டை விடுதலை செய்ய முயற்சித்தனர்.
மேலும்,1921முதல் 1924வரையிலான காலத்தில்,போல்ஷ்விக் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தகம்யூனிச குழுக்கள் மீது 3 சதி வழக்குகள் – பெஷாவர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு ஆகியன தொடுக்கப்பட்டு முன்னணியாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். முசாபர் அகமது, நளினி குப்தா, சௌகத் உஸ்மானி, டாங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தனர். இவற்றின் காரணமாக இந்தியாவில் கம்யூனிச இயக்கம் செயல்பட முடியாமல் பெரும் பின்னடைவுக்குள்ளானது.
இதன் பின்னர்,டிசம்பர் 25,1925ல் கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவரது முயற்சியால் கம்யூனிஸ்டுகளின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த மாநாட்டில்தான் பல்வேறு கம்யூனிச குழுக்கள் ஒன்றிணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தன. அளவில் சிறியதாக,ஏறத்தாழ 500பேர் பங்கேற்ற இம்மாநாடுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டதை அறிவிப்பதாக இருந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும்,கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும்,அது முறையாக இயங்கவில்லை.இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும்.பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.
“ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும்,அது நீடித்து நின்று செயல்படவேயில்லை.ஏனெனில்,அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது,அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.
“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக் கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்”என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.
“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார்.அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்;மற்றபடி,இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CommunistPartyofIndia)அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம்.சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார்.இந்தியா மட்டுமின்றி,வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்”என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Front line , Volume 29 – Issue 09, May 05-18, 2012)
இந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப் பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.
மறுபுறம், கட்சித் திட்டத்தையும் அமைப்பு விதிகளையும் வகுப்பதாகத் தீர்மானித்த எம்.என். ராய் குழுவானது, இறுதிவரை அதனைச் செயல்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக, 1921-ல் அகமதாபாத்தில் நடந்த காங்கிரசு கட்சியின் மாநாட்டின் போது, எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் தங்களது கொள்கை விளக்க அறிக்கையை அனுப்பி வைத்து, பிரபல உருது கவிஞர் ஹசரத் மொஹானி மூலமாக முழு விடுதலையுடன் கூடிய சுயராஜ்யத்தை காங்கிரசின் லட்சியமாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால் காந்தி – காங்கிரசுத் தலைமை இதை நிராகரித்தது.
அதன் பிறகு எம்.என். ராய், ஏகாதிபத்தியமானது காலனிய நீக்கக் (decolonisation) கொள்கையைப் பின்பற்றுவதா கவும் – அதாவது, ஏகாதிபத்தியமானது காலனிய நாடுகளில் தொழில்மய மாக்கத்தைச் செய்வதன் மூலம் காலனிய நாடுகள் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருப்பதை பலவீனப்படுத்திவருவதாகவும்,காலனியாதிக் கத்தை படிப்படியாகக் கைவிடும் சீர்திருத்தப்பாதையில் செல்வதாகவும் மார்க்சிய – லெனினியத்துக்கே எதிரான தொரு கோட்பாட்டை முன்வைத்தார். 1928-ல் நடந்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது காங்கிரசில் இந்தக் கொள்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நவீன காவுத்ஸ்கியாக எம்.என். ராய் மாறிவிட்ட போதிலும், பிற்காலத்தில் அவரது கருத்தை எல்லா வண்ணத் திரிபுவாதிகளும் ஏற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளில் வியாக்கியானம் செய்தனர். பின்னாளில் எம்.என். ராய் கம்யூனிச சித்தாந்தத்தையே கைவிட்டு,முற்போக்கு மனிதநேயம் பற்றி உபதேசிக்கத் தொடங்கினார்.
1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி.அதிகாரி,பி.சி.ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர்.1933ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகட்டப்பட்டுள்ளதாக அறிவித்து,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.
நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும்,நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை.
இந்தியாவில் ‘கம்யூனிஸ்ட்’ கட்சி தொடங்கப்பட்டு 98 ஆண்டுகளாகிவிட்டன. இந்திய கம்யூனிச இயக்கமானது,வலது,இடது சந்தர்ப்பவாதங்களில் மாறி மாறி விழுந்து இந்தியப் புரட்சிக்குத் தொடர்ந்து துரோகமிழைத்துள்ளதை இந்த 98 ஆண்டு கால வரலாறு விளக்குவதோடு,எண்ணற்ற படிப்பினைகளையும் வழங்கியுள்ளது.ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான எதிர்மறை படிப்பினைகளாக இவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு சரியான, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி உருவாவது காலத்தின் கட்டாயம்.
தொடரும்.....
No comments:
Post a Comment