இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1987க்கும் 1992 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. முன்னாள் சோவியத் யூனியனில் ஆரம்பித்து பின்னர் மத்திய ஐரோப்பாவுக்கும் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பரவிய அரசியல் மாற்றங்கள் அந்த அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளை நான் பழைய முறையிலான ஸ்டாலினிச ட்றொட்ஸ்கிய விவாதத்தின் அடிப்படையில் அணுகப்போவதில்லை.இப்படி முன்னுரையில் எழுதியுள்ள றெஜி. ஒவ்வொரு இடத்திலும் ஸ்டாலின் வெறுப்பரசிலையே முக்கியமாக பேசிக் கொண்டுள்ளார்.
"பழைய உட்பிரிவுகளை உயிர்ப்பிப்பதும் பண்டைச் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டுவதும் பழைய பல்லவியே பாடுவதும் எம் வேலையல்ல"
பழைய குழுச் சண்டைகளைத் தொடர்வதும் பழைய பல்லவிகளை மீண்டும் பாடுவதும் இங்கு என் நோக்கமல்ல.என்பர் (பக்கம் 9க்கு பின் மறந்து விட்டாரோ?) ஸ்டாலின் லெனின் இவர்களின் எல்லா நடைமுறையையும் விமர்சிக்கும் இவருக்கு ஒரு சாப்ட்காரனர் இவரின் ஆசாங்கள் ட்ராட்ஸ்கி, புகாரின் கோர்பாச்சோ மீது பாவம் அவர்கள் எல்லோரும் சோவியத்துக்கு துரோகம் செய்ததை விட வேறொன்றும் செய்யவில்லையே என்ன செய்ய றெஜி. இவரின் சீடகிடிகளும் இதே பணியை இங்கே செய்துக் கொண்டுள்ளனர்.
வார்சோ ஒப்பந்தக் கூட்டத்தின் கொர்பச்சேவ் பின்வரும் பிரகடனத்தைச் செய்தார். "ஒவ்வொரு மக்கள் தொகுதியும் தங்கள் சொந்த நாட்டின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கவும் தங்கள் சொந்த சமூக அமைப்பு வடிவத்தைத் தாங்களே தேர்ந்தெடுக்கவும் உரிமை கொண்டுள்ளது. வெளியில் இருந்துஎந்தப் போர்வையிலும் எந்தத் தலையீடும் இருக்கக்கூடாது."
இரண்டாம் உலக யுத்தத்தின் பிந்திய கட்டங்களில் கிழக்கு ஐரோப்பாவில் செம்படையின் பிரவேசம் இந்த நாடுகளை ஸ்டாலினிச சாம்ராச்சியத்தின் உப கிரகங்களாக ஒன்றிணைத்தது. இது முற்றிலும் சிக்கலான இருமுனைப்பட்ட ஒரு நிலைமையாகும். இது முற்றிலும் ஒரு புரட்சியோ அல்லது முற்றிலும் ஒரு ஆக்கிரமிப்பின் வெற்றியோ அல்ல. ஆக்கிரமிப்பு ராணுவம் என்ற வகையில் செம்படை நிலைகொண்டிருந்தமையே இதன் மாற்றத்தைக் கொண்டுவருவதில் தீர்மான சக்தியாக இருந்தது. உண்மையில் "மக்கள் ஜனநாயகங்கள்" என அழைக்கப்பட்ட வடிவங்களின் உருவாக்க முறைமை அனைத்தும் கிழக்கு ஐரோப்பியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தெரிவினால் அன்றி ஸ்டாலினாலேயே சாதிக்கப்பட்டன. கைப்பற்றிப் புரட்சியைப் புகுத்தும் இந்த முறைமையின் விளைவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோவியத் சோசலிசத்தின் வடிவங்களும் அமைப்புக்களும் திணிக்கப்பட்டன. அதன் அரசியல் பண்பு ஒரு கட்சி ஆட்சியாகும். கம்யூனிஸ்ட் கட்சியே அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாகக் கொண்டிருந்தது. (ஆதாவது ஹிட்லரின் படையினரிடம் போரிட்டு பெற்ற வெற்றியை அன்நாட்டு மக்கள் ஏற்பதையும் பல கட்சி முறையை வேண்டி நிற்கும் இவரின் நோக்கம் என்னே? பாருங்கள் நீங்களும்)
இனி அவரின் நூலிலிருந்தே
கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சியானது நமது மொத்தமான முற்கற்பிதங்களையும் வாய்ப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகின்ற, ஒரு தீவிரமான ஆய்வறிவுப் புனர் ஒழுங்கமைப்பைக் கோருகின்ற ஒரு தோற்றப்பாடாகும்.
கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களை அணுகுவதற்குரிய ஒரு சரியான நோக்கு நிலை கடந்த ஆண்டு மிகாயில் கொர்பச்சேவுக்கும் மேற்கு ஜேர்மன் ஜனாதிபதி றிச்சாட் வொன் வெய்சாக்கருக்கும் இடையே நடைபெற்ற ஒரு உரையாடலில் புலப்படுவதாக எனக்குத் தோன்றுகின்றது. அந்த உரையாடலின் போது "வரலாறு திறந்திருக்கிறது" என்று கொர்பச்சேவ் கூறினார்.
கிழக்கு ஐரோப்பிய ஜனநாயகப் புரட்சி ஆரம்பித்ததில் இருந்து அதுபற்றி ஒரு எளிமையான வலதுசாரி விளக்கம் கூறப்பட்டு வந்துள்ளது. அதாவது கொம்யூனிஸம் இயல்பிலேயே ஒரு சர்வாதிகார அமைப்பு. அது இப்போது சரிந்துவிட்டது. ஏனெனில் ஜனநாயக சுதந்திரத்துக்கான மக்களின் இயல்பான வேட்கைன்ய காலவரையறையின்றி அடக்கி ஒடுக்க முடியாது.
"கம்யூனிசத்தின் சரிவு" பற்றிக் கூறுவோருக்கு இன்னும் ஒரு வார்த்தை எதிர்வரும் மாதங்களிலும் ஆண்டுகளிலும் கிழக்கு ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் பெருமளவிலான மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால், உலக யுத்தத்துக்குப் பிற்பட்ட சோஷலிசத்தின் முதுசம் என்ற வகையில் சமத்துவம் பற்றிய கருத்தியலும் உணர்வும எதிர்காலத்திலும் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை.
நைந்துபோன ஒரு கோட்பாட்டுச் சட்டகத்துக்குள் யதார்த்தத்தைத் திணிக்க ஒருவர் முனையும்போது அதுவே ஒரு சுமையாகவும் தடையாகவும் மாறிவிடுகின்றது. ரஷ்யப் புரட்சியின் ஒருமுக்கியமான கட்டத்தில் லெனின் பின்வருமாறு கூறினார்: "எனது நண்பனே, கோட்பாடு நரைத்துவிட்டது. வாழ்க்கை மரமோ எப்போதும் பசுமையாகவே இருக்கிறது". லெனின் தனது சொந்த ஆலோசனையை எப்போதும் பின்பற்றியவரல்ல கட்சிகளிலும் அரசியல் இயக்கங்களிலும் இது மனத்தின் இறைக்கோட்பாட்டுக் குணாம்சத்தினால் அமுக்கி மறைக்கப்பட்டுவிட்டது. இந்தக் குணாம்சம் எல்லாப் பிரச்சினைகளையும் வைதிகக் கோட்பாடுகளைத் திணிப்பதன் ஊடாகவும் புனித நூல்களில் இருந்து மேற்கோள்களைச் சடங்கு ரீதியில் ஒப்புவிப்பதன் மூலமும் மதிப்பிடுகின்றது.
No comments:
Post a Comment