நிலவுடைமைச் சமுதாயம் என்பது என்ன?

 நிலவுடைமைச் சமுதாயம் என்பது என்ன?

நமது தோழர்களுடன் நடந்துக் கொண்டிருக்கும் விவாதம் வரலாற்று பக்களை பின்னோக்கி பார்க்க சொல்கிறது.
வளர்ச்சி கட்டத்தில் வாழும் நமது மார்க்சிய கல்வியின் பிழையான பக்கங்களை களைந்தெறிய நினைப்போர், சரியான மார்க்சிய கல்வி பயில வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏற்பதும் ஏற்பாமல் போவதும் உங்கள் கையில்.
___________________________________________________________________________
இனி பதிவை நோக்கி
நிலம் ஒரு சொத்தாக மாற்றப்பட்டு, பெரிய அளவுக்கு அதைக் கைப்பற்றியவர்கள், அவரவர் பலத்துக்கு ஏற்ப சிறியதும் பெரியதுமாகக் கைப்பற்றியவர்கள், அந்த நிலங்களில் பாடுபட்டு உழைத்துக்கொடுத்துவிட்டுப் பசியாறியவர்கள் என்ற இந்த சமூக அமைப்புக்குப் பெயர்தான் நிலவுடைமைச் சமுதாயம் அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாயம் ஆகும்.
இன்றும் கூட நமது சமூகத்தில் ஒரு அரையடி நிலத்தை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்கோ, அல்லது கைப்பற்றிய நிலத்தில் அரையடி அளவுக்குக் கூட வேறு யாரும் எடுத்துக்கொள்ளாமல் தடுப்பதற்கோ எவ்வளவு வன்மம் நிறைந்த மோதல்கள் நடைபெறுகின்றன என்பதைப் பார்க்கிறோம். சில நேரங்களில் வெட்டுக்குத்து, கொலை செய்கிற அளவுக்குக்கூட அந்த மோதல்கள் போய்விடுகின்றன. இவை நிலவுடமை சமூகத்தின் நீட்சி அல்லவா?
சட்டம், விதி, கண்காணிப்பதற்கான அதிகார அமைப்பு என்றெல்லாம் இருக்கிற இந்தக் காலத்திலேயே இப்படி யெல்லாம் நடக்கிறது என்றால்; அந்தக் காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று எளிதாக ஊகிக்கலாம்.
நிலத்தைக் கைப்பற்றும் ஆசையில்லாதவர்கள், அதற்கு வழியற்றவர்கள் எந்த நிலத்தில் வேண்டுமானாலும் இறங்கி உழைத்தார்கள். நிலத்தை வளைத்துப் போட்டவர்கள் அவர்களை ஒடுக்கி சுரண்டி வாழ்ந்தனர். இதைத் தொடர்ந்து பல வன்முறை மோதல்கள் நடைபெற்றன. அப்போதுதான் இதையெல்லாம் கண்காணிப்பதற்கும் முறைப்படுத்துவதற்கும் ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த ஏற்பாட்டிற்குப் பெயர்தான் அரசு. இந்த அரசு என்ற அமைப்பு முறை சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த நிலம் இவருக்குச் சொந்தம், அதை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற சட்டம் வருகிறது.
காடு, மலை, ஆறு, வயல், ஊர் என அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு என்ற அமைப்பு உருவானதன் அடிப்படையே சொத்துடைமையைப் பாதுகாப்பதுதான் என்றால் மிகை அன்று.
நிலவுடைமை சமூகம் பற்றிய ஒரு சித்திரம்தான் இவை. இதில் நீண்ட நெடிய பாதையின் ஊடாக பல நிலைகளை கடந்தே முதலாளித்துவ சமூகமாக வளர்ந்தது.
தொடரும்.
Like
Comment

இந்த ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள் விரோதிகளே

+++++++++++++++++++++++++++++++++++++++++++
லட்சம் லட்சம் கோடிகளில் வரியாக புடுங்கும் இந்த ஆட்சியாளர்கள் தவறியும் அந்த மக்கள் வாழ மட்டும் சிந்திப்பதேயில்லை.

ரயில் விபத்து என்பது முழுக்க முழுக்க அரசின் மெத்தன போக்கே உள்ளது வரை பிடிங்கி திண்ண நினைக்கும் கேவலமான நடைமுறையே.

இத்துனை கட்டண உயர்வை அறிவித்த பின்னும் பாதுகாப்போ அதற்குறிய தொழிற்நுட்ப அறிவை புகுத்தி கட்டமைப்பை மேம்படுத்தியோ ஏன் ஊழியர் உயர்வோ இன்மையும்தான்.

லட்சகணக்கில் காலியிடம் வேலைக்கு ஆள் சேர்பதேயில்லை யார் பராமறிப்பது? உலகில் மிகப் பெரிய நிறுவனம் வருவாயை திண்ண தெரிந்த உங்களுக்கு பராமறிக்கும் கவலையில்லை.

இந்த கோர விபத்துக்கு அரசே பொறுப்பாளி...

ஹவுராவிலிருந்து ஒரிசா வழியாக சென்னை நோக்கி வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டும் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியதில் இறப்பு அரசு கூறி உள்ளதை ஏற்போம் அந்த முகம் தெரியாத டிக்கெட் எடுத்தும் நிற்க ஒதுங்க இடமின்றி தவித்து எலிபொறியை விட மோசமான முன்பதிவில்லா பயணிகள் எத்தனை பேர் இறந்தார்கள் அவர்களின் குடும்பம் என்ன ஆனது என்று இந்த ஆட்சியாளர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை அதேபோல் அவர்களுக்கு என்ன மாற்றம் வந்துவிட போகிறது?..

நாட்டின் கௌரவத்திற்கு விளையாட்டில் போராடி நாட்டின் பெயரை உச்சாணியில் ஏற்றியவர்களை மதிக்க தெரியாத கூட்டம் இவர்கள் யாருக்கானவர்கள் என்று அவர்களின் செயலில் தெரிகிறது...
திண்ணு கொழுத்த என்னுமே செய்யாமல் அடுத்தவன் உழைப்பில் வாழ்ந்துக் கொண்டே அந்த மக்களை மதமென்னும் ஒடுக்குமுறையால் ஒடுக்க மட்டுமே தெரிந்த கூட்டம் எந்த மக்களின் நலனுகானவை சிந்தியுங்கள்...
அவர்களின் பெயரில் வாழும் ஆளும் கும்பலே நீங்கள் யாருக்கானவர்கள் என்று மக்கள் அறியாதவரையே உங்களின் இந்த ஆட்டம்...


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்