சோவியத் யூனியனின் உடைவு -றெஜி சிறிவர்த்தன (தொடர் கட்டுரை- 2)

 முந்தைய பகுதியின் தொடர்ச்சி...

நூலின் 20 பக்கத்தில் "கொர்பச்சேவின் சீர்திருத்தங்கள் நிலைக்குமா? அல்லது குருஷ்சேவை போன்று அவர் தூக்கி எறியப்படுவுாரா? அல்லது பின்வாங்கிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவாரா? இக்கேள்விகளுக்கு விடையளிப்பதோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகின்றேன் என்று கூறும் றெஜி,"குருஷ்சேவை விட தான் திறமைமிக்க அரசியல்வாதி என்பதை கொர்பச்சேவ் இதுவரை நிரூபித்தள்ளார். குருஷ்சேவ் தனது சீர்திருத்தங்களை மேலிலிருந்து கீழ் நோக்கிச் செயற்படுத்தினார். ஆனால் கொர்பச்சேவ் தனது சீர்திருத்தங்களுக்கு பொது மக்களின் ஆதரவை. கீழ் மட்டப் பலத்தைக் கட்டி எழுப்பி வருகின்றார். கொர்பச்சேவ் உட்கட்சிச் சதி ஒன்றின் மூலம் தூக்கி எறியப்பட்டாலும் கூட அவரின் கொள்கைகளுக்கு ஏற்படும் பின்னடைவு தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்கும். அவரது மாற்றங்களின் பொதுப் போக்கினைத் தடுத்து நிறுத்த முடியாது. அவை மீண்டும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும். ஏனெனில் "கிளாஸ்நொஸ்த்தும்" "பெரல் ரொய்க்காவும்" முற்றிலும் ஒரு தனிமனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை சோவியத் சமூகத்தின் வளர்ச்சியின் தவிர்க்க முடியாத்தேவைகளால் உருவாக்கப் பட்டவை. ஜனநாயகமயப்படுத்தல் இல்லாது சோவியத் சமூகம் இன்று முன்னோக்கிச் செல்லுதல் சாத்தியம் இல்லை". இவ்வாறு ஆரூடம் கூறிய றெஜியின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.(பக்கம் 21ன்லில் முதல் அத்தியாயம் முடிகிறது.

இனி இரண்டாம் அத்தியாயம்.

தொடரும் ஒரு விவாதம் கடினமான உரையாடல் மார்க்சியமும் தேசியவாதமும்

 மார்க்சியவாதிகள் தேசியவாதத்தின் வலிமையையும் பற்றுறுதியையும் பாரம்பரியமாகக் குறைத்து மதிப்பிட்டு வந்துள்ளார்கள். இப்படிக் குறைத்து மதிப்பிடும் தன்மை மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படைச் சிந்தனையில் இருந்த தவற்றின் விளைவாகும். முதலாளித்துவம் உலகச் /சந்தைக்குள் எல்லா மக்களையும் உள்ளிழுப்பதன் மூலம் உலகத்தை ஒன்றிணைப்பதோடு தேசிய வரம்புகளை உடைத்தும் விடுகின்றது என்பதே அவர்களின் தவறான கருதுகோளாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கு சமச்சீர் அற்றது என்பதையும் பிரதேசங்களுக்கும் நாடுகளுக்கும் இடையே வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்துவதன் மூலம் அது தேசியவாதத்துக்குப் புத்துயிர் அளிக்கும் என்பதையும் மார்க்சும் . ஏங்கல்சும் தங்கள் சொந்தச் சிந்தனை வரைவுக்குள்ளே முன்னுணரத் தவறிவிட்டார்கள்.தெளிவற்ற சுய முரண்பாடு கொண்ட முதுசத்தையே அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றுள்ளனர்.(பக்கம் 22-23) மேலும் ,"தேசியவாதம் பற்றிய "சரியான" மார்க்சிய நிலைப்பாட்டை உருவாக்கினார் என்று வைதிக மார்க்சிய வாதிகள் பொதுவாக லெனினுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.லெனின் தேசியவாதம்பற்றிய கோட்பாட்டுக்கு ஒரு முழுமையான தெளிவான கோட்பாட்டு ரீதியான வடிவத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில் அவரைப் பொறுத்தவரை அது அரசியல் செயற்பாடு சார்ந்த ஒரு நடைமுறைப் பிரச்சினையே. அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வர்க்கப் போராட்டத்தின் பங்காளிகள் என்ற வகையில் மட்டுமே முக்கியத்துவம் உடையன. தேசங்கள் ஒரு மாறும் காலத் தோற்றப்பாடாகும். சோஷலிசத்தின் கீழ் அவை மறைந்துவிடும் என்று அவர் நம்பினார்.(பக்கம் 23).

லெனின் இறப்பதற்கு முன் ஜோர்ஜியா பற்றிய கொள்கை தொடர்பாக லெனினுக்கும் ஸ்டாலினுக்குமிடையில் ஒரு மோதல் ஏற்பட்டது. நோய்வாய்ப்பட்டதால், 1923ஆம் ஆண்டின் பன்னிரெண்டாவது கட்சி மாநாட்டில் "பாரிய ரஷ்ய வகுப்புவாதத்தை" எதிர்க்கும் பொறுப்பை ட்றொட்ஸ்கியிடம் விட்டுவிட்டார். ஆனால் இந்தப் பணியைச் செய்ய ட்றொட்ஸ்கி தவறிவிட்டார்.(பக்கம் 24). ஒட்டுமொத்தமாக ஒரு சோஷலிச அரசைக் கட்டி எழுப்பும் முயற்சிக்கும், தேசிய சுய நிர்ணய உரிமைக்கும் இடையில் இணக்கம் காண லெனின் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றே சொல்ல வேண்டும். தேசியப் பிரச்சினை தொடர்பான அவரது கொள்கைகளைத் தொகுத்த வரும் பெரும் ரஷ்ய மேலாதிக்கத்தின் கீழ் சோவியத் அரசை மிக மோசமான முறையில் மத்திய மயப்படுத்துபவராகவே மாறினார்.(பக்கம் 24) இவ்வாறு மங்க் என்பரை முன்னிலை படுத்தி ரசியாவில் நடந்த மாற்றங்களை மறுதலிக்கும் றெஜி இறுதியில் தான் எடுத்துக்காட்டாக காட்டியவரையே புறந்தள்ளுகிறார். பின் எதற்காக இத்தனை மார்க்சிய ஆசான்களின் மீதே அடிபடை அற்ற பழி?.

சரி மேலும் அவரின் நூலின்

இத்தேசிய இனங்கள் எல்லாமே குடியேற்றவாதத்துக்கு எதிராக கூட்டாகப் போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. (றொனால்டோ மங்க், வெளியீடு : செட் நூல்கள் (வரை) 1996 பக்கங்கள் : 184 இதனைதான் றெஜி தனக்கு ஆதாரமாக காட்டியுள்ளார்-இங்கு பக்கம்-140) இறுதியாக இந்தப் போர்கள் அந்தந்த நாடுகளின் அதிகாரத்துவ அடுக்கின நலன்களுக்காகவே நடைபெற்றதாக அவர் கூறுகிறார். இந்த இலகுவான முடிவு நூலின் வேறு ஒரு இடத்தில் கூறப்பட்டுள்ள கருத்துடன் முரண்படுகிறது. அங்கே அவர் கூறுவது எத்தகைய அரசியல் தந்திரோபாயத்தைக் கையாண்டாலும் குறிப்பிட்ட தேசிய அரசுகள் என்ற சட்டகத்துக்குள்ளேயே மார்க்சியவாதிகள் செயற்படுகிறார்கள்: தொழிலாளர்கள் தமது குறிப்பிட்ட தேசிய இனம் ஒரு யதார்த்தமானது என்பதை உணர்கிறார்கள்; வரலாற்று சக்தி என்றவகையில் தேசியவாதம் நிறைந்த ஆற்றல் கொண்டுள்ளது" ( அதே நூல் பக்கம் 139)

எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய முற்றிலும் சொந்தமான ஆய்வை இந்த நூல் கொண்டிருக்காவிட்டாலும், நிறைந்த தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. முக்கியமாக, புறநிலைப் பார்வை கொண்டுள்ளது. மங்க் ஒரு மார்க்சியவாதிதான் ஆனால் கண்மூடிப் பின் செல்பவரல்லர். மார்க்சியத்தின் எந்தப் பிரிவுக்கும் அவர் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை. கருத்தியல், கலாசாரக் காரணிகளின் "சார்பு நிலைத் தன்னாதிக்கத்தை மங்க் கொள்கை அளவில் அங்கீகரித்தாலும், குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்கள் பற்றிய தன் ஆய்வுகளில் அவற்றுக்குப் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே இந்த நூல் பற்றிய எனது முக்கியமான விமர்சனமாகும்.

இவ்வாறாக தனது இரண்டாம் அத்தியாயத்தை முடிக்கிறார் றெஜி ஜெயவர்தனே. அவரின் நோக்கம் என்னவென்பதனை நான் கூறப் போவதில்லை வாசித்து நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள் தோழர்களே.

தொடரும் நாளை அடுத்த அத்தியாயம்....

முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே அழுத்தவும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்