ஜாதியம் தொடர்… ஜாதியத்தின் ஆரம்ப காலம்

 ஜாதியம் தொடர்

ஜாதியத்தின் ஆரம் காலம்

 

நாம் ஜாதியை அதன் வேர்களை தேட பல ஆய்வு நூல்களை வாசித்தாலும் உலகில் பல பகுதிகளில் ஏற்ற தாழ்வான சமூக வர்க்க அமைப்பு போலவே இந்திய ஜாதி அமைப்பும் தோன்றியது என்பதில் மாற்று கருத்தேயில்லை. ஆனால் இந்த எல்லா நாடுகளிலும் இன்று (விதிவிலக்காக இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து) ஜாதியின் வேர்கள் இல்லாமல் போய்விட்டது. இந்தியாவில் கோலோச்சுவது போலவே ஈழப்பகுதிகள் ஜாதியம் மீண்டெழுகிறது அவை ஏன் எப்படி என்பதனை தொடரில் அவசியம் விவாதிப்போம்.  

தோழர்களே, மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்ய சொல்கிறது. ஆம் அன்று நிலவிய உற்பத்தி முறை என்னவோ அதன் அடிப்படையில் அம் மக்களின் வளர்ச்சியை புரிந்துக் கொள்ள முடியும்.

இந்திய வரலாற்றெழுதிகள்

நமது இந்திய வரலாற்றெழுதிகளோ இதனை கண்டுக் கொள்ளவே இல்லை. அவர்கள் தேவையை போல எழுதிக் கொண்டனர். (சில மார்க்சியவாதிகள் விதிவிலக்காக).

இங்கு எழுதப் பட்டுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வுசெய்துள்ளனர்.உண்மையில்வேத காலம் என்பதை வேத இலக்கியங்களை நடுநிலையுடன் ஆய்வு செய்தால் பலவீனம் நிறை குறைகள் அறிவுக்கு ஒவ்வாத மனம் போன போக்கில் ஆன புனைவுகள் அவர்களின் அறிவு தேடல்கள் தெரிந்து கொள்ள முடியும். மௌரியர்காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்திய ஆட்சி ஒன்றிணைப்பு முழுமையாக நிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனியாட்சி யாளர்களின் பொய்யான புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிப்பது ஏற்புடைவை அல்ல. இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும். (ஆதாரம் இந்திய வரலாற்றில் பகவத் கீதை பிரேம் நாத் பாசஸ், விடியல் பதிபகம் வெளியீடு).

 

ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முன்னால் அடையாளம் என்பது ஜாதி, தொழில், மொழி சமயபிரிவு,நிலப்பகுதி மற்றும் இடம் போன்ற பல்வேறு அம்சங்களை  சார்ந்து இருந்தது.சாதியும் சமயப்பிரிவும் ஒன்றின் மேல் ஒன்று ஏறி இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சமயத்திற்கு மேலாக ஜாதிக்கு முதன்மை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய சமூகத்தை காலனிய காலகட்டத்தில் மறு கட்டுமானம் செய்த போது மதத்திற்கு முதன்மை இடம் கொடுக்கப்பட்டது. (ரோமிலாதாப்பர்முற்காலஇந்தியாஎப்படி ஆயினும் வகுப்புவாத வரலாறு அல்லது மததேசியத்தின் அடிப்படையில் மத தேசியவாதம் முன்னிறுத்தப்பட்டது அன்றே அவை இன்று அறுவடை ஆகி கொண்டிருக்கிறது இவைதான்ஆங்கிலேயர்கள் கொடுத்த கொடை இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல மக்களை இனமாக ஜாதியாக பகுதியாக பிரிதாளும் எல்லா சூழ்ச்சியையும் அன்றே செய்தனர்.

 

வகுப்புவாத வரலாறு வகுப்புகளின் இயல்பு பற்றியும் அவற்றின் மாறுகின்ற வரலாறு பற்றியும் பேச முயலவில்லை. ஒவ்வொரு வகுப்பும் முழுவதும் ஒரே உயிரினத் தொகுதியாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் ஒரே சீரான மாறுதல் அற்ற சமயவகுப்பு என பணியாற்றுவதற்காக விளக்கம் கொடுக்கப்பட்டது.  மத தேசியம் இந்திய வரலாற்றில் குடியேற்றக்காரர்கள் செய்த காலப்பகுப்பை தக்க வைத்துக் கொண்டது.

சாதியம் தோன்றுவதற்கு முன்

பண்டைய காலத்தில் மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர். உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது.ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர். அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கிருந்தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர். இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.

காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால் அது ஒரு தொழிலாகியது. கால்நடை வளர்ப்பும் பொருள் உற்பத்தியாக கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.

ஆண்கள் வேட்டையாடுதலில் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது.

கால்நடை கொள்ளையிட பல குழுக்களுக் கிடையே சண்டைகள் மூண்டது, பல தடவை தங்களது தொழிலான கால்நடைகளை சண்டையிட்டு மீட்டனர்.

கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்ந்து களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அபகறிபதற்கான போர்கள் நடைபெற்றன.அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளையடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.

 

கிமு 300 ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப் பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்கு சான்று பகிர்கின்றன. அதிச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள், உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில்,நீள் கைப்பிடிக் கரண்டி,மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப் பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகி கொண்டு போயிற்று.இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது.இந்த பாய்ச்சல் சமுதாய மாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வெளிவரலாயிற்று.கால்நடைகளில் தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக இருந்தநிலை மாறியது.விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலிருந்து மனித சமுதாயம் தன்னை விடுவித்துக் கொண்டது.

பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து கிடைத்தவை பெரிதே  அதனை விட சிறிய நிலத்தை திருத்த அளவில் சிறிய கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள்கள் அதுவும் ஒரே இடத்தில் நிறைய பொருள்கள் கிடைக்கப்பெற்ற.

இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மை ரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மை வழிகாட்டியது. கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்று முன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின. இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது இப்போது மனிதன் தன்தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன.இந்நேரத்தில் வேளாண்மை கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதில் இருந்து.நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது. அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் அதனுடன் பொருள் வந்து சேர்ந்தது. பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.

புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது, கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது.

தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும் பெருகியது, இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன.

இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச்செல்வ வேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றுவித்தது. இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியுள்ளது எனவே இடத்தை அதாவது நிலத்தை பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.

இந்தக் காலத்தில் ஒரு நிலம் இன்னொரு நிலத்தோடு கலந்து வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது. ஆக விவசாயம் பெருகவும் கைத்தொழிலும் வணிகமும் பல்வேறு பகுதிகளுடன் தொடர்பும் அவசியமாகிறது.

ஜாதியின் ஆரம்ப நிலையை நாம் புரிந்துக்கொள்ள.

இந்தியாவை ஒரே நாடாக கட்டமைக்கப்பட முயற்சிக்கும் இன்று வருண முறை மற்றும் ஜாதி முறையை நோக்கினால் ஜாதி முறையானது எல்லா மாநிலங்களுக்கும் ஒன்றாக இல்லை. ஏன் திராவிடர்கள் நாடு என்று அழைக்கப்படும் தென்னிந்தியாவிலே ஒன்றாகஇல்லை. தெலுங்கு பேசும் பகுதியில் காணப்படும் கம்மா, ரெட்டி கேரளாவில்  நாயர், ஈழவர் கர்நாடகாவில் லிங்காயத்துகள்  தமிழ்நாட்டுப் பகுதியில் காணப்படும் பள்ளர் கள்ளர் வன்னியர் மற்ற மாநிலங்களில் காணப்படுவதில்லையே ஏன்? தமிழ்நாட்டிலேயே வடபகுதியில்காணப்படும் வன்னியர் தென் தமிழகத்தில் இல்லை.தென் தமிழகத்தில் உள்ள தேவர் மறவர் வட தமிழகத்தில் இல்லையே.பகுதி ரீதியாக நாம் இப்படி தேடும்பொழுது வருணங்களாக பிரிக்கப்பட்ட மக்கள் இந்திய அளவில் ஒன்றாக தெரிந்தாலும் ஜாதிகளாக உள்ள பொழுது வேறுபட்டு காணுவது எப்படி? இவை இனக் குழுக்களாக இருந்த பொழுது ஏற்பட்டது என்று கூறுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

ஜாதியின் குறுக்கிய தன்மையானது மொழி மற்றும் பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. அதுவும் குறிப்பான பகுதியில் அதே நேரத்தில் வருணம் என்பது இந்தியப் பகுதியின் அனைத்துக்கும் பொருத்தமாக உள்ளது. ஆனால் சாதி இனக்குழுவின் தன்மையோடு இணைந்து கருதவேண்டிய அவசியம் உள்ளது.ஆக ஒரு இனக்குழு பிரதேசத்தில் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் செழுமை உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றின் விளைவாக பல்வேறு எளிமையான தொழில் பிரிவுகள் தோன்றலாயின.இவ்வாறு உற்பத்தியான பொருள்களின் மதிப்புக்கு ஏற்ப தொழில்களுக்கு இடையில் வேறுபாடுகளும் அரும்பலாயின.ஒரு பிரதேசத்தில் தனித்தன்மை கருதி ஏற்பட்ட இத்தகைய தொழில் பிரிவுகள் ஒவ்வொன்றும் தமக்கென ஒரு கூட்டுணர்வை பேணியது. இனக்குழுவுக்குள் இருந்த பல கணங்களுக் கிடையே அனுமதிக்கப்பட்டிருந்த மன உறவு முறையானது சில வம்சாவளியினருக்களுக் குள்ளே மட்டும் என்பதாக குறுக்கப்பட்டது.

இவை தவிர இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டதன் விளவால் உற்பத்தி சக்தியிலும் உற்பத்தி திறனிலும் மேம்பட்ட இனக்குழு வெற்றி பெற்ற பின்னர் தோல்வியடைந்த இனக்குழுவை அடிமை யாக்கி கொண்டிருக்கும் சாத்தியம் உண்டு. வளர்ச்சி பெறாத இனக்குழுக்களை எத்தகைய தொழிலையும் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கக் கூடிய சாத்தியமண்டு.இப்படி இனக் குழுக்குள் சுயமாகவும் புறத்திலிருந்தும் மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறாக ஏற்பட்ட விளைவுகள் நாம் சாதியத்தின் தொடக்கக் கூறுகளை காணலாம். இன்னும் விரிவாக வருணம் ஜாதியம் பற்றிய முரண்பாடுகளை தொகுத்து தொடர்ந்து வரும் கட்டுரையில் பார்ப்போம்.

மனித சமூக வளர்ச்சி

அதற்கு முன் சுருள் ஏணி சுற்றில் மனித சமூக வளர்ச்சி புரிதலுக்காக கீழே உள்ள படம். 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் முதன் முதலாக இரண்டு கால்களில் நடக்கின்றன (ஆஸ்ட்ரலோபிதிகஸ்).

 

13000ஆண்டுகளுக்கு முன்பு சில 100பேர் உள்ள குழுக்களாக மனிதர்கள் கிராமங்களில் வசிக்க பருவநிலை அனுமதிக்கிறது மத்திய கற்காலம் (மிஸோ லித்திக்).10000ஆண்டுகளுக்கு முன்பு முதல் விவசாயிப்புரட்சி தாவரங்களை விலங்கு களை  பழக்கி வசப்படுத்துதல். புதிய கற்காலம் (நியோலித்திக்).கிராம வாழ்க்கை பரவுதல் குழுக்களிடையே முதன்முறையாக போர் இப்போதும் அரசு வர்க்கம் என்ற பிரிவினை தோன்றவில்லை.

6000முதல் 5000ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நைல் நதிக்கரை  சமவெளிகளில் "நகரப் புரட்சி" சிலர் செம்பை பயன்படுத்துகின்றார்கள்.

4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல் மத்திய கிழக்கு ஒன்று படுத்த சர்கோன் முதல் பேரரசை உருவாக்குதல். மேற்கு  ஐரோப்பாவில் எகிப்திற்கு தெற்கே நூபிய நாகரிகம் தோன்றியிருக்கலாம். அதே போல் இந்திய துணைக் கண்டத்தை பற்றியும் புரிந்துக் கொள்ள கீழ் உள்ள படம் பயனளிக்கும்.

கிமு 2500 -1700 ஆரம்ப நகரமாதல் முதிர்ச்சி அடைந்த நிலை. கிமு 1600 -1500 பிற்கால ஹரப்பா.

 

கிமு  1500-500 ஆரிய மேச்சல் குடிகள்  வரவு மற்றும் புதிய கற்கால மற்றும் செம்பு கால நாகரிகங்கள் (வேத கால மரபும்). இவ்வாறாக சுழல் ஏணி முறையில் வளர்ந்த சமூகமானது ஒவ்வொரு காலகட்டமும் முந்தைய சமுதாயத்தை மேலானதாகவும் பழைய சமூகத்தை புறந்தள்ளியும் வளர்ந்துள்ளது. அதற்கான உந்து சக்தி இதே மனித உழைப்பே என்றால் இந்த உழைப்பாலே மனித சமூகம் இத்தனை முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. ஆக இந்த சமூக அமைப்பு மாறாநிலையில் தொன்று தொட்டு இருந்தவை அல்ல அதே போல் இன்றுள்ளது போல் என்றும் நிலைத்து நிற்கவும் போவதில்லை என்று கூறிக் கொண்டு இந்த பதிவின் தேவைக்கு வருவோம்.

ஜப்பானில் ஜாதியும் அதன் முடிவும்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜப்பானில் "எதா" பூர்வீக குடிகள் பற்றி விசித்திரமான கருத்துக்கள் பரப்பப்பட்டன. (ஏதா- ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப் பட்ட மக்கள்). சிலர் அவர்களை இந்துக்கள் அல்லது இந்தியாவில் ருந்து வந்தார்கள் என்றும் அல்லது பிலிப்பைன்ஸ் நாட்டு ஆதிவாசிகள் என்றும் பண்டையகால போரில் கைதான கொரியர்கள் என்றும் இன்னும் சிலரோ யூதர்கள் என்றும் அந்த மக்களை ஜப்பானியர் அல்லர் என்று நிரூபிக்க முயன்றனர் ஆனால் அவர்கள் உண்மையில் ஜப்பானியர்களே என்பது உண்மை.

17ம் நூற்றாண்டில் தோகுகாவா அரசின் கீழ் வந்த சமூக மாற்றங்கள் காரணமாக தா மக்கள் முன் காலத்தைக் காட்டிலும் இன்னும் விபரீதமான இன்னும் அவமானகரமான முறையில் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.அவர்களை ஒதுக்கி வைத்து அவர்களை ஒடுக்கும் பல சட்டங்கள் கொண்டு வந்தனர். ஆகையால் அம்மக்கள் சமூகத்திலிருந்து பிரித்து வைக்கப்பட்டனர்.

ஆனால்கிபி 1871ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெய்தி அரசு கொண்டுவந்த பல சமூக சீர்திருத்தங்களில் குல ஜாதி வித்தியாசங்கள் ஒழிக்கப்பட்டன. தா குத்தின் மறுவாழ்வுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது சட்டப்படி எதா குலத்தினர் மற்ற பிரிவு சமூகத்தோடு சரிசமமாகப் பட்டனர். (இவையும் நீண்ட நெடிய போராட்டம் களம் கண்ட பிறகே)

இதற்கு பின்னிருந்த அரசியல் பொருளாதார உறவுகளை புரிந்து கொண்டாலே அரசின் உண்மையான நோக்கம் புரிந்து கொள்ள முடியும். அன்று ஏற்பட்ட பல போர்கள் பல்வேறு விதமான உற்பத்தி சக்திகளின் தேவை,முதல் மற்றும்இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நடத்திய ஆக்கிரமிப்பு போர்கள் (ரசிய-சீனா உள்பட).

ஹிரோசிமா நாகசாகி மீதான குண்டுவெடி தாக்குதலுக்கு பிறகு நாட்டை மறு சீர் அமைப்பு பணி என்று அங்கு நடந்தேறிய வரலாற்றில் ஏற்ற தாழ்வுகள் அரசே முன் வந்து ஜாதியை அகற்றும் வேலையை செய்தது என்பது நமக்கு புலப்படும் காட்சிகள்.

நம் புரிதலுக்காக

1970- களில் தொடங்கி 1980 வரை நக்சல்பாரி எழுச்சியும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் வெகுஜனஇயக்கம்முன்னெடுத்ததீண்டாமைக்கும்சாதிய பாகுபாட்டிற்க்கும்எதிரானபோராட்டங்கள். உயர்சாதி வெறியர் பிரயோகித்த பிற்போக்கு பலாத்காரச் செயல்களை புரட்சிகர பலாத்கார செயல்களால் எதிர்கொண்டது. அத்துடன், சாதிப் பிரச்சினை என்பது தனியே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை அல்ல, அது ஒடுக்குமுறையும் சுரண்டலும் இணைந்த ஒரு வர்க்கப் பிரச்சினை என்றபடியால் முழுச்  சமூகத்தினதும் பிரச்சினை என்பதை உணர்த்தி, அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நீதியை விரும்பும் உயர் சமூக மக்களையும் ஈடுபட வைத்தது. முற்போக்கான மக்களையும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. அதன் காரணமாக அந்தப் போராட்டம் கணிசமானளவு ஒரு வெற்றியைப் பெற்றது.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சிலர் வர்க்க பேதத்தையும் புறம்தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும் முழுமையான ஒரு போராட்டம் இல்லை என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை.

ஆங்கிலேயரின் சூழ்சியால் வர்க்க முரணை கைவிட்டு சாதி முரணை கையில் எடுத்து மக்களை இந்த சுரண்டல் அமைப்புகுள்ளே கட்டிக் காத்துக் கொண்டே அவர்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து தீர்வென்பது சாத்தியமா?

உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்க சமுதாயத்துடன் வேர்கொண்டு கிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன? அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலமும் அசைக்க முடியவில்லை.

ஆக இந்த சமூக அமைப்பை புரிந்துக் கொள்வோதோடு வர்க்க சமூகத்தில் இதற்கான அடிதளமான உற்பத்தி முறையை மாற்றினால் ஒழிய முழுமையான தீர்வு இல்லை எனலாம். விவாதிக்க தொடர்ந்து எழுததான் தோழர்களே....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்