இலக்கு 26 இதழ் பதிவிறக்கம் செய்து வாசிக்க

 இலக்கு 26 இணைய இதழ் PDF வடிவில் இங்கே அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

தோழர்களே,

'கல்வியானது அரசு கைகளில் இருந்து விலகி, தனியார் கைகளுக்கு செல்வதாக இருக்க வேண்டும்' அதனடிப் படையில்தான் அரசு-தனியார் பங்கேற்பு (Public Private partnership – PPP) எனப்படும் 3பி திட்டங்கள் மெல்ல நடைமுறைப்படுத்த துவங்கப் பட்டன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய - தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள உழைக்கும் வர்க்கங்களின் பிள்ளைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கும் நிலை நீடிக்கிறது. தற்போது அதற்கும் உலைவைக்கும் நோக்கிலேயே 'நம்ம ஸ்கூல்' திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளை முற்றாக இழுத்து மூடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளது இந்த திராவிட மாடல்  அரசு. அரசு பள்ளிகளின் இந்த அவலநிலைக்கு காரணம் தனியார்மயமாக்கலே என்பதை மூடி மறைத்து முற்றிலும் தனியார்மயமாக்குகிறது.

இந்திய அரசின் பாராமுகமும் மெத்தன போக்குமே இரயில் விபத்து

 

இந்திய இரயில்வேயின் மொத்த பாதை நீளம் 68,043 கி.மீ. இந்த முழு வழித்தடத்திலிருந்தும், 1,445 கிமீ தூரத்தில் மட்டுமே கவாச்/மோதல் தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது மொத்த ரயில்வே வழித்தடங்களில் 2% மட்டுமே. இன்றுவரை, சுமார் 98% இந்திய ரயில்வேயில் மோதல் தடுப்பு சாதனங்கள்/அமைப்புகள் இல்லை. இத்தனை அலட்சியமாக செயல்படும் அரசின் நிர்வாக சீர்கேடு அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளன. உலகின் மிகப்பெரிய ரயில்வே துறையை தங்க முட்டையிடும் வாத்தைதாங்களே பராமறிக்காமல் தனியார் மயமாக்கும் பொருட்டு, நரேந்திர மோடியின் அமைச்சரவை ஆண்டுக்கு ஆண்டு நிதிஒதுக்கீட்டை குறைத்ததால், புதிய பாதுகாப்பு வசதிய தொழிற் மேம்பாடோ செய்யாமல் மக்களை கடவுளின் விதியில் வாழ சொல்லும் முட்டாள்தனம். இவையே தொடர்ந்தால் இன்னும் மிகப்பெரிய மனித இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் ஏற்படுத்தும் என பலரும் அறிவுறுத்திவருகின்றனர். உழைக்கும் ஏழை எளிய மக்களை பற்றி கவலை படாத ஆட்சியாளர்கள், இவர்களை சுரண்ட மட்டுமே தெரிந்தவர்கள்.

இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 2. லெனின்.

முதல் பாகத்தின் தொடர்ச்சி.

ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள். பாகம் 2. லெனின்

ஜாதியம் தொடர்ஜாதியத்தின் தொடக்கம்

சோவியத் யூனியனின் உடைவுக்கான விளக்கமும் குழப்பமும்- நூலுக்கான விமர்சனம் சிவசேகரம்

மார்க்சியவாதிகளுகிடையே உள்ள பணி. பகுதி - 2

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்