இலக்கு 96 இணைய இதழ் பிடிஎப் வடிவில்(ஒலி வடிவில்)

இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக உருவாவதற்கான நெறிமுறைகளையும், பொருளாதாரத்தின் அடிப்படைகளையும் விளக்குகின்றன. லியு ஷாவோ ஷியின் போதனைகள் மூலம், தனிநபர் ஆராதனை மற்றும் அதிகார மோகத்தைத் தவிர்த்து, சுயநலமற்ற மக்கள் சேவையையும் கூட்டு முயற்சியையும் முன்னிறுத்த வேண்டியதன் அவசியத்தை இவை வலியுறுத்துகின்றன. ஒரு கம்யூனிஸ்ட் தனது குறுகிய கால வெற்றிகளில் பெருமிதம் கொள்ளாமல், வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் நீண்ட கால இலக்கை நோக்கி தன்னடக்கத்துடன் பயணிக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், ஜார்ஜ் தாம்ஸனின் வரிகள் மூலம் சரக்குகளின் மதிப்பு, தூலமான மற்றும் அருவமான உழைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் போன்ற பொருளாதாரக் கோட்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இறுதியில், தத்துவார்த்த தெளிவும் அர்ப்பணிப்பும் கொண்ட உறுப்பினர்களே சமூக மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதே இந்தத் தொகுப்பின் மையக்கருத்தாகும்....

இலக்கு 96 இணைய இதழ்- இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

01. சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?லியோஷோசி, பாகம் 15. -03

02. முதலாளியமும் அதன் பிறகும் ஜார்ஜ்தாம்ஸன் பாகம்3 -18

03. தேர்தல் படிப்பினைகள் -29

இலக்கு பத்திரிக்கை தொடங்கி இன்றுவரை 95 பத்திரிக்கைகள் வெளிவந்துவிட்டது அதை முழுமையாக புரிந்து கொள்வது என்றால் பத்திரிக்கை கொண்டு வருவதற்கு பலரில் உதவியும் ஒத்துழைப்பும் ஏன் தொழில்நுட்ப அறிவும் தேவைப்பட்டது.

இந்த நான்கு ஆண்டுகாலத்தில் நாங்கள் பல்வேறு விதமான மார்க்சிய விரோத போக்குகளை அறிய முடிந்தது. மார்சிவாதிகளாக இங்கு உள்ளவர்களின் மார்க்சியம் அல்லாத பல்வேறு வகையான முகமூடிகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. எப்படியென்றால் அவர்கள் மார்க்சியம் பேசினாலும் அவர்கள் பேசுவது மார்சியத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை. ஆசான் சொன்னவையே,”சொல்லில் சொசலிசம், செயலில் முதலாளித்துவம்” அவை பெர்ன்ஸ்டைன், காவுத்ஸ்கி, ட்ராட்ஸ்கி ஏன் குருசேவ் வழிமுறைகாக, “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை” மறுக்கும் போக்குள்ளவர்கள் எப்படி மார்க்சியவாதியாக முடியும். அதன் புதிய வரவு அரசையே பயன்படுத்திக் கொள்வது சீர்திருத்திக் கொள்வது என்று தொடங்கிய திருத்தல்வாதம் இன்று தேர்தலில் சீர்திருத்தம் கோரி ஆளும் வர்க்கதிடம் அடிமைப்படுத்தும் நிலைக்கு தாழ்ந்துள்ளோரை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளை ஆழமாக புரிந்திருக்க வேண்டியுள்ளது..

இலக்கு 96 இணைய இதழை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

தற்செருக்கு, தனிநபர் ஆராதனை, பகட்டு ஆரவாரம் ஆகிய பண்புகள் கூடுதலாக அல்லது குறைவாக சில கட்சித் தோழர்களின் மனங்களில் இன்னமும் காணப்படுகிறது.

இத்தகைய கருத்துப் போக்குகளை உடையவர்களின் முதல் முக்கியத்துவ விஷயமாக இருப்பது கட்சியில் அவர்கள் வகிக்கும் நிலைதான். அவர்கள் தம்மை ஊதிப் பெருக்கி காட்டிக் கொள்கின்றனர். மற்றவர்கள் தம்மை துதிக்க வேண்டும் என்றும் போற்றிப் புகழ வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் பேராசை கொண்டவர்களாக உள்ளனர். தம்மை பெரிதாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். எல்லா சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். எப்போதும் மற்றவர்களின் கவனத்தை கவர்பவர்களாக இருக்கின்றனர். எல்லா சாதகமான விஷயங்களையும் தமதாக்கிக் கொள்ள மோசமான வழிகளை கடைபிடிக்கின்றனர். மொத்தத்தில் ஜனநாயக பாணியிலான வேலைமுறை அவர்களிடம் அறவே இருப்பதில்லை. கடைக்கோடி அற்பமான தற்பெருமை கொண்ட இவர்கள் கடின வேலைகளில் ஈடுபடுவது சலிப்பூட்டும். ஆனால் அவசியமான வழமையான வேலைகள் அல்லது தொழில்நுட்ப வேலைகள் ஆகியவற்றில் அக்கறையற்றவர்களாக உள்ளனர். அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாக இருக்கின்றனர். ஏதாவது ஒன்றை செய்து விடும் எல்லா தருணங்களிலும் தம்மைத் தாமே பெரிதுபடுத்தி காட்டிக் கொள்கின்றனர். அனைவரின் மீதும் ஆதிக்கம் செலுத்த இடையறாது முயற்சிக்கின்றனர். தன்னடக்கத்துடன் நட்புபூர்வமாகவும் மற்றவர்களை சமமாக நடத்தாமல் இருக்கின்றனர். சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் 77, 78)

விளக்கம்;- கம்யூனிஸ்டுகளிடம் தற்செருக்கு, தனிநபர் வழிபாடு பகட்டு ஆரவாரம் (பந்தா காட்டுவது) போன்ற தவறான பண்புகள் காணப்படுகின்றன இத்தகைய பண்புகள் கம்யூனிஸ்டுகளிடம் ஏன் நம் ஒவ்வொருவரிடமும் காணப்படும் என்பதை ஒருபோதும் நாம் மறந்து விடக்கூடாது இந்த தவறான பண்புகளை நாம் எதிர்த்துப் போராடி இதற்கு எதிரான சரியான பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்                1. தற்செருக்குக்குக்கு மாற்றாக தன்னடக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தனி நபர்களை வழிபாடுகளை கைவிட்டு விட்டு சரியான மக்கள் நலனுக்கான கொள்கைகளை நாம் ஏற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும். அதாவது நமது தலைவர்களை தனிநபரை கண்மூடித்தனமாகப் பின்பற்றக் கூடாது. மேலும்

3. பகட்டான ஆரவாரம் காட்டக்கூடாது எப்போதும் எளிமையான முறையிலேயே நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் மக்களுக்கு முன்னால் நாம் பந்தா காட்டக் கூடாது.

4. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்ளவர்களில் சிலர் தம்மைப் பற்றி ஊதிப் பெருக்கி பெருமையாக காட்டிக் கொள்கிறார்கள் மற்றவர்கள் அனைவரும் தன்னை துதிக்க வேண்டும் துதி பாட வேண்டும் என்று விரும்புகிறார்கள் இது தவறான பண்பாகும் இதற்கு மாற்றாக எப்போதும் கம்யூனிஸ்ட் அடக்கமாக இருக்க வேண்டும் தன்னை முன்னிலைப்படுத்த கூடாது மற்றவர்கள் தம்மோடு தோழமை உறவோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் தம்மை புகழ் பாட மற்றவர்களை அனுமதிக்க கூடாது. 5. கட்சிக்குள் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கின்றன இத்தகைய பேராசை கம்யூனிசத்திற்கு மிகவும் ஆபத்தான பண்பாகும் ஆகவே கம்யூனிஸ்ட் எப்போதும் உழைக்கும் மக்களின் நலனுக்காகவே பாடுபட வேண்டும், ஒருபோதும்பேராசைப்படக் கூடாது, மாறாக சுயநலமற்றவராகவே இருக்கவேண்டும்.

6. கட்சிக்குள் இருக்கும் சிலர் தாங்கள் செய்யும் சில காரியங்களை பெரிதுபடுத்தி தன்னை மிகப்பெரிய சாதனையாளராக காட்டிக் கொள்ள விரும்புகின்றனர், ஆனால் ஒரு தனி மனிதனுடைய சாதனை என்பது எல்லைக்குட்பட்டதாகும். மாறாக உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக முயற்சிப்பதன் மூலமே சாதனைகள் புரிய முடியும் என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் உணர வேண்டும்.

7. சிலர் எப்பொழுதும் மற்றவர்களின் கவனத்தைக் கவரும் விதமாக கவர்ச்சிகரமான நடைமுறையில் ஈடுபடுகிறார்கள் இவர்கள் எல்லாவித சாதனைகளையும் தனது சாதனைகளாக காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள் இவ்வாறு கவர்ச்சிவாத நடைமுறை மிகவும் தவறானது இதற்கு மாற்றாக புரட்சியாரமான கருத்துக்களை மக்களுக்கு முன்வைத்து அவர்களுக்கு விழிப்புணர் ஊட்டும் நடைமுறையைத்தான் கம்யூனிஸ்டுகள் கையாள வேண்டும்.

8. சிலரிடம் ஜனநாயக பண்பே இருப்பதில்லை அதாவது பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு தமது செயலை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக தன் விருப்பப்படி செயல்பட விரும்புகிறார்கள் இது தன்னகங்காரத்துக்கு வழி வகுக்கும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறுவதற்கு வழிவகுக்கும், ஆகவே கட்சியில் பெரும்பான்மையினரது முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

9. சிலர் கடினமான வேலைகளை செய்வதற்கு முன் வருவதில்லை அந்த வேலைகளை பிறரிடம் தள்ளி விடுகிறார்கள் சிலர் தொழில்நுட்ப வேலைகளை செய்வதில் அக்கறையற்று இருக்கிறார்கள் இது தவறானது இதற்கு மாறாக ஒவ்வொரு விதமான கட்சி வேலைகளையும் கற்றுக் கொள்வதற்கு அதை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் முயற்சி செய்ய வேண்டும்.

10. சிலர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள் மற்ற தோழர்களை சமமாக நடத்த இவர்கள் மறுக்கிறார்கள் இது மிக மிக அபாயகரமான பண்பாகும். இதற்கு மாறாக கட்சியில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களும் தலைவர்களில் இருந்து கீழ்ப்பட்ட உறுப்பினர்கள் வரை அனைவரும் சம அந்தஸ்து உள்ளவர்கள் அனைவரையும் சமத்துவவாகவே நடத்த வேண்டும்

அடுத்த கட்டுரை

ஜனநாயகக் குடியரசு: முதலாளித்துவத்தின் மிகச் சிறந்த கவசம்

பொதுவாக 'ஜனநாயகக் குடியரசு' என்பது மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் உன்னதமான ஆட்சி முறையாகக் கருதப்படுகிறது. ஆனால், லெனின் போன்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் இதனைத் தத்துவார்த்த ரீதியாக வேறு கோணத்தில் அணுகுகிறார்கள். ஒரு முதலாளித்துவ சமூகத்தில், ஜனநாயகக் குடியரசு என்பது உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்கு முதலாளி வர்க்கம் அணிந்து கொண்டிருக்கும் ஒரு 'கவசமே' தவிர வேறில்லை என்பது லெனினின் வாதம்.ஒரு போர்வீரனுக்குக் கவசம் எப்படிப் பாதுகாப்பைத் தருகிறதோ, அதேபோல் முதலாளித்துவத்தின் சுரண்டல் முறைக்கு ஜனநாயகக் குடியரசு ஒரு பாதுகாப்பைத் தருகிறது.

  • மாற்ற முடியாத அதிகாரம்: லெனின் கூறுகையில், முதலாளித்துவம் ஜனநாயகக் குடியரசு எனும் கவசத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு, ஆட்சி மாற்றங்களோ, தனிநபர்களின் மாற்றங்களோ அல்லது கட்சி மாற்றங்களோ அதன் அடிப்படை அதிகாரத்தை அசைக்க முடியாது. அதாவது, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரக் கொள்கைகளும், முதலாளிகளின் லாபமும் பாதிக்கப்படாதவாறு அரசு இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  • மறைமுக ஆதிக்கம்: முடியாட்சி அல்லது சர்வாதிகார ஆட்சியில் சுரண்டல் நேரடியாகத் தெரியும். ஆனால் ஜனநாயகத்தில், மக்கள் தாங்களே வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதாக நம்ப வைக்கப்படுகிறார்கள். இது சுரண்டப்படுபவர்களின் எதிர்ப்பைக் குறைத்து, சுரண்டல் முறையை நீண்ட காலம் நிலைநிறுத்த உதவுகிறது.

ஏமாற்றப்படும் வாக்குரிமை

வாக்குரிமை என்பது மக்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரமாகத் தோன்றினாலும், லெனினின் பார்வையில், "மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மக்களை ஒடுக்குவார் என்பதைத் தீர்மானிப்பதே" இந்த ஜனநாயகத்தின் சுருக்கமாகும். சுரண்டல் அமைப்பு மாறாத வரை, வாக்களிப்பது என்பது கவசத்தை மெருகூட்டுவதே ஆகும்.

இன்றைய சூழலில் இதன் ஆழம்

இன்றைய உலகமயமாக்கல் மற்றும் கார்ப்பரேட் அரசியல் சூழலில் லெனினின் இந்த வரிகள் இன்னும் பொருத்தமானதாக உள்ளன.

  • அரசுகள் மாறினாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகைகளோ அல்லது இயற்கை வளங்கள் தாரைவார்க்கப்படுவதோ நிற்பதில்லை.
  • அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்வது, லெனின் குறிப்பிட்ட 'பல்ச்சீன்ஸ்கி' (Palchinsky) உதாரணத்தை நினைவுபடுத்துகிறது.

முடிவாக:- லெனின் ஜனநாயகக் குடியரசை எதிர்ப்பவர் அல்ல; மாறாக, அது முதலாளித்துவத்தின் கீழ் இருக்கும் வரை மக்களுக்கு உண்மையான விடுதலையைத் தராது என்பதை எச்சரிக்கிறார். "ஜனநாயகக் குடியரசுதான் மிகச் சிறந்த கவசம்" என்ற வரிகள், நாம் அதிகாரத்தின் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாறாமல், அதன் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சுரண்டலையும், வர்க்க ஆதிக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. உண்மையான ஜனநாயகம் என்பது வெறும் வாக்குச் சீட்டில் இல்லை! இதனை இங்குள்ளோர் ஆம் கம்யூனிஸ்ட் கட்சி என்பவை எத்தனை சதவீதம் புரிந்துக் கொண்டுள்ளனர் என்பது மில்லியன் கேள்விகள்! .

"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்கள் விலங்குகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை!"

முழுமையாக இணைய இதழை வாசிக்க தோழர்களே...                                                           இந்த இணைப்பின் உள் சென்று வாசிக்க தோழர்களே

***************

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்