இலக்கு 81 இணைய இதழ்

புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள அதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். ஆகையால் கம்யூனிஸ்டுகளாகிய நாம் நமக்கான சமூக அறிவை பெற்றிருந்தால் மட்டுமே, உழைக்கும் மக்களின் பிணங்களின் மீது அரசியல் செய்யும் அயோக்கியதனங்களை தோலுறித்துக் காட்ட முடியும். கரூர் போன்ற துயர சம்பங்களை புரிந்துக் கொள்ளும் திறன் நமக்கு கிடைக்கும். 

நீண்ட நெடிய இந்த இதழ் ஓரளவு பாசிசம் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளோம் வாசித்து கருத்திட அழைக்கிறோம் தோழர்களே.

 கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்தின் லட்சியங்களுக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லையென்று கருதினால், மக்களுடைய கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமாக மிகச் சரியாக, மார்க்சிய - லெனினிய வழியில் தெளிவுபடுத்தி மக்களை ஒளிபெறச் செய்யவில்லையானால், இன்றைய போராட்டங்களை மக்களுடைய கடந்தகால புரட்சிகரமான பாரம்பரியங்களுடன் இணைப்பதற்கு ஏதும் செய்யாமலிருந்தால் நாமே பாசிச பொய்யர்களிடம் நாட்டின் கடந்தகால வரலாற்றுச் சிறப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொடுத்து அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு வழி செய்து கொடுத்தவர்கள் ஆவோம். நாம் வர்க்க வரலாற்றை பேசாவிட்டால் இவர்கள் மன்னர் கடவுளர்களின் புகழ்பாடி உழைக்கும் மக்களை ஏய்க்கவே செய்வர்!

ஆக தோழர் டிமிட்ரோவ் பாசிசத்தின் பொதுப்பண்புகளையும் அதன் பொதுவர்க்க இயல்புகளையும், ஒவ்வொரு நாட்டின் அதன் குறித்த பண்புகளையும் அதன் குறித்த வர்க்க ஆய்வுசெய்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மற்றும் பாசிச இயக்கமானது தனதுவாய்ச்சவடால் மூலமும், பொய் பித்தலாட்டம் மூலமும், வரலாற்றை இட்டுக்கட்டியும் திரித்தும்புரட்டியும் தனது வர்க்க நலனை மறைத்து உழைக்கும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை அம்பலப்படுத்தி மக்களுக்கு புரிய வைக்கிற ஒரு தொடர்ச்சியான சித்தாந்த போராட்டத்தை நடத்தாமல் பாசிசத்தை வெற்றி கொள்ள முடியாது என்கிறார்.

புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ள அதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அதே சமயத்தில் இந்தியா ஒரு நாடாக, ஒரு இந்திய தேசமாக கட்டியமைக்கப்பட்ட வரலாற்றோடு, இந்து, இந்துமதம், இந்து தேசியம் மற்றும் இந்திய தேசியம் என்று பலதரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வரலாறோடும், இணக்கமாக ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக வாழ்ந்த இந்து முஸ்லீம்மக்களை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் பிளவுபடுத்தி இருதரப்பையும் மோதவைத்து லட்சக்கணக்கில் கொலை செய்த வரலாற்றோடும் இங்குள்ள தேசியஇன மக்களின் (தமிழர், தெலுங்கர்,கன்னடர் மற்றும் மலையாளி......இன்னபிற) தேசியஇன மொழிவாரி அடிப்படையிலான தேசியத்தை புறக்கணித்துவிட்டு பாசிசம் உருவாவதற்கு அடிப்படையான செயற்கையான, ஆரிய இனம்-திராவிட இனம் என்ற பிரிட்டீஷ் காலனிய ஆதிக்கவாதிகளின் காலனிய இனவியல் மற்றும் மதரீதியான பிளவுவாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட வரலாறோடும் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டும்.

இங்கு 200 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த முகலாயர்கள் மற்றும் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும்போது இந்தியா ஒரு திட்டவட்டமான ஒருங்கிணைந்த நாடாகவோ ஒருங்கிணைந்த தேசமாகவோ ஒருங்கிணைந்த சட்டத்தைக்கொண்டு ஆளப்பட்டு இருந்ததில்லை என்பது ஒரு வரலாற்றுப் பூர்வமான உண்மை. அப்படி உருவாவதற்கான எந்த அடிப்படைத் தேவையும் இங்கு ஏற்பட்டு இருக்கவில்லை. முகலாயர்கள் உட்பட பலதரப்பட்ட அந்நிய பேரரசுகள் மற்றும் பிரிட்டீஷ் உட்பட டச்சு, போர்த்துகீசியர் மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யவந்து பின்னர் சூழ்ச்சியாக இங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவைகளின் நோக்கமானது ஐரோப்பா கண்டத்து அளவிலான இந்த பரந்து விரிந்து கிடந்த பிரதேசத்தை கொள்கையடிப்பதற்கே ஆகும்.

ஆனால் அதில் ஒரு வித்தியாசம் மொகலாயர்கள் படையெடுத்து அதிகாரத்தை கைப்பற்றி இங்கேயே வாழ்ந்து வந்தனர். அவர்களது சொத்துக்கள் இங்கேயே இருந்தது. இங்கேயே செலவழித்தனர். இங்கேயுள்ள கலாச்சாரத்தோடு இயைந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் இங்கு கொள்ளையடித்து வந்த பிற காலனிய போட்டியாளர்களை வென்று இறுதியில் ஆட்சியில் அமர்ந்த பிரிட்டீஷாரோ தொடர்ந்து கொள்ளையடித்து இந்த நாட்டின் செல்வங்கள் அனைத்தையும் தனது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் நம்மோடு கலந்துவாழவில்லை. நம்மை தீண்டத்தகாதவர் களாகவும், அடிமைகளாகவும் நடத்தினர். பிரிட்டீஷார் அதற்காக மட்டுமே சட்டதிட்டங்களை வகுத்து இங்குள்ள மக்களைக் கொண்டே ஒருபடையைக்கட்டி ஒரு கொடூர சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். இந்த பரந்த நாட்டில் அவர்களது கொள்ளைகளையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபட்டு போராடிய அனைத்துதரப்பினரையும் சதித்தனமாக பிளவுபடுத்தி மேலும் சாதி மற்றும் மதக்கலவரத்தின் மூலமும் கொடூர ஒடுக்குமுறையின் மூலமும் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர். பிரிட்டீஷாரின் காலனியத்தை கட்டிகாப்பாற்றுவதற்கான காலனிய இனவியல் கோட்பாடு.......

பிரிட்டீஷ் இந்த நாட்டில் காலனிய ஆட்சியை மேற்கொண்டபோது இங்கு நூற்றுக்கணக்கான மொழிகள் பேசக்கூடிய மக்களினங்களும், ஆயிரக்கணக்கான சாதிய பிரிவுகளும், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை சார்ந்தவர்கள், சைவர்கள், வைணவர்கள், சமணர்கள், ஆயிரக்கணக்கான குலதெய்வ மற்றும் சிறுதெய்வ, பெருதெய்வ வழிபாட்டு பிரிவினர்கள் போன்ற பல்வேறுபட்ட இறைவழிபாட்டு பிரிவினரே இங்கு இருந்தனர் பழக்க வழக்கங்களிலும் பண்பாட்டிலும் ஒருவரொக்கொருவர் முற்றிலும் மாறுபட்டவர்களாக வேறுபட்டவர்களாக இருந்தனர். இந்து என்ற சொல்லோ இந்து மதமோ இங்கு இருக்கவில்லை. வேதங்களிலோ மற்றும் இந்துமத சாஸ்திர நூல்கள் என்று கூறப்படும் பழைய நூல்களிலும் கூட இந்து என்ற சொல் கிடையாது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், புத்தமதத்தை போன்று திட்டவட்டமான ஒரு பொது இறைவழிபாட்டு முறை என்பது இந்துக்கள் அல்லது இந்து மதத்திற்கென்று இன்றுவரை கிடையாது. ''இந்து'' என்ற சொல்லுக்கு விளக்கமானது ''யார் கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி, புத்தமத பிரிவினர் மற்றும் இஸ்லாமியர் பிரிவுகளை சார்ந்தவராக இல்லையோ அவரே ''இந்து'' என்று பிரிட்டீஷார் வகைப்படுத்தினர்.


இதற்கு ஒப்புதல் சாட்சியாக காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியாரின் கூற்றொன்றை இங்கு கூறுவது சரியாக இருக்கும்.

அவர் கூறுவதாவது: "நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாக சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக்காப்பாற்றியது. அவன் மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருகபக்தர், பிள்ளையார் உபாசகர், ஐப்பன் பக்தர், எல்லையம்மனை கும்பிடுகிறவர் என்று நம்மை பிரித்துக்கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக்கொண்டிருப்போம். இப்போது “இந்து சமூகம்'' என்று பொதுப்பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழு, எட்டாக தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்ற மதத்தவர்கள்தான் அதிக தொகையாக இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பது போல் இல்லாமல் நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகி இருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான் எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர் திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன்தான் தன்னையும் அறியாமல் நமக்கு இந்து என்று பொதுப்பெயரைத் தந்து இன்று இந்திய தேசம் என்று ஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையை செய்திருக்கான்" சந்திரசேகரேந்திரசரஸ்வதி (காஞ்சி பரமாச்சாரியார்) தெய்வத்தின் குரல், பாகம் ஒன்று, ஏழாம் பதிப்பு, 1988, வானதி பதிப்பகம், சென்னை, பக்கம் 305 – 306.

ஆக நாம் பிரிட்டீஷாரை புரிந்துகொள்வது என்றால் அவர்களின் காலனி ஆதிக்கத்தின் வரலாறை புரிந்துகொள்வதுதான். முதலில் உலகம் முழுக்க ஐரோப்பியர்களுக்கு காலனிகள் இருந்தன. ஐரோப்பியகாலனி ஆதிக்கவாதிகளான பிரிட்டன், ஹாலந்து, போர்த்துகீஸ், பிரான்ஸ், இத்தாலி, மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள் தாங்கள் காலனி ஆதிக்கம் செலுத்துவதற்கான தகுதியான இனம் என்று தங்களது நாட்டிலும் தாங்கள் ஆளுகின்ற காலனிய நாட்டிலும் நியாயப்படுத்தவும் காலனிய நாடுகளில் இனபாகுபாடுகள் மதபாகுபாடுகள் மற்றும் சாதியபாகுபாடுகள் (இந்தியாவில்) இவைகளை இட்டுகட்டி கட்டியமைத்து காலனிய மக்கள் தங்களை எதிர்த்து போராடாதவாறும் அவர்கள் மத்தியிலேயே பகை முரண்பாட்டை உருவாக்கி மோதவைக்கவும், தொடர்ந்து காலனியாதிக்கம் செலுத்தவும் காலனிய இனவியல் கொள்கையை 18 ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டு முற்பாதியிலும் உருவாக்கினர். இவற்றில் தீவிர ஆர்வமும் அக்கறையும் எடுத்துக்கொண்டது பிரிட்டீஷ்தான். காரணம் உலகத்தில் பிரிட்டனுக்குத்தான் மிகப்பரந்து விரிந்து பரந்த செல்வ வளமிக்க இந்தியா உட்பட காலனிகள் ஆதிக்கம். அவர்களுக்கு அத்தகைய இனபேத ஆய்வு தேவைப்பட்டது. அந்த ஆய்வுகளில் முதன்மையாக பங்கெடுத்தவர்கள் வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் முல்லர் மற்றும் ஹெர்பர்ட்ரிஸ்லே இன்னும் பலர் ஆவர். அந்த ஆய்வின் மூலமாக ஆதியில் மத்திய ஆசியாவில் பேசப்பட்ட ஒரு தெய்வீக மூலமொழியிலிருந்து சமஸ்கிருதம், பார்சி, லத்தீன், கிரேக்கம், கோதிக் மற்றும் கெல்டிக் மொழிகள் தோன்றின. அதிலிருந்து அதன் கிளை மொழிகள் தோன்றின. இதன்மூலம் ஆரிய மேலான்மை கோட்பாடும் ஐரோப்பிய வெள்ளைத்தோல் மேலான்மை கோட்பாடும் நிறுவப்பட்டது. மஞ்சல் நிறம், பழுப்பு நிறமு மற்றும் கருப்பு நிறம் தாழ்ந்த இனமாக காட்டப்பட்டது. மேலே குறிப்பிட்ட மொழிகளிலிருந்து தோன்றிய மொழிகளான ஈரானிய மொழிகள், பிரெஞ்சு, ஸ்பானிஸ், இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஹெலனிய மொழிகள் ஆங்கிலம், டச்சு மற்றும் ஜெர்மானிய மொழிகள், ஐரிஸ் மற்றும் வேல்ஸ் மொழிகள் இவைகளை தவிர ஏனைய மொழிகள் அனைத்தும் தாழ்ந்த மொழிகளாக காட்டப்பட்டது. இறுதியிலே இங்குள்ள பிராமணர்களும் ஐரோப்பிய ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்துவந்து இங்கிருந்த தாழ்ந்த குலங்களை வென்று அடிமைப்படுத்தி ஆரிய நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஐரோப்பிய ஆரியர்களாலும் இந்திய ஆரியர்களாலும் பொதுவாகப் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதமாகும் இந்தியாவிலுள்ள ஏனையஅனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவையாகும். இந்த ஆய்வுகள் எல்லாம் விவிலியத்தை ஆய்விற்கு எடுத்துக்கொண்டு செய்யப்பட்ட முடிவுகளாகும். இவைகள் வரலாற்றையும் விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறவயநிலைமைகளை ஆய்வு செய்து வந்தடைந்த முடிவுகள் அல்ல. அவைகள் கற்பனையான உண்மைக்கு புறம்பான கருத்துமுதல்வாத முடிவுகளே.

மனுதர்ம அடிப்படையில் சாதிய பாகுபாடுகளை உருவாக்கி திடப்படுத்திய பிரிட்டீசாரின் பிராமணிய சட்டத்தொகுதி மேலும் 18 ஆம் நூற்றாண்டு இறுதியில் இந்திய மக்கள் மத்தியில் தோன்றும் சர்ச்சைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சட்ட விதிகளின் தொகுதி ஒன்றை உருவாக்க அன்றைய கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்ஸ் ஜென்டூ சட்டத்தொகுதி அல்லது பண்டிதர்களின் புனித ஆணைகள் என அழைக்கப்பட்ட விதிமுறைகளை உருவாக்க - 11 சமஸ்கிருத பண்டிதர்களை நியமித்தார். இங்குள்ள சமஸ்கிருத ஏடுகளை பிரிட்டீஷாரால் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை எனவே அவர்கள் இந்தியாவின் மதநூல்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் பண்டிதர்களுக்கு இருந்த புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டத் தொகுப்பு ஒன்றை உருவாக்கும்படி அவர்களை கேட்டுக்கொண்டனர். அதன் விளைவாக ஆங்கிலோ-பிராமணிய சட்ட நூல் ஒன்று உருவானது. அது வர்ணாஸ்ரம தர்மத்தை (மனுஸ்மிருதி) அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது. அது முற்றிலுமாக வார்த்தை அளவிலும், உணர்வுகள் அளவிலும் உண்மையான நடைமுறைகளை மீறியதாக இருந்தது. ஏனென்றால் வார்த்தைகளைப் பொறுத்தவரை மூலங்களுடன் ஒப்பிடுகையில் அது துல்லியமற்று இருந்தது. உணர்வுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு அளிக்கப்பட்ட பணியை தங்கள் சாதிக்கு ஏற்றவாறு திரிக்கும் உரிமைகளாக எடுத்துக் கொண்டிருந்தனர். உண்மையில் அதற்கு எவ்வித இலக்கிய ஆதாரங்களும் இல்லாமல் இருந்தது. நாட்டில் சாதிய வேறுபாட்டு பிரச்சனைகளை ஏற்றத்தாழ்வு, அல்லது உயர்வு தாழ்வு பிரச்சனைகளாக இன்னும் பெரிதாக்கவே அது உதவியது. 

நல்லாதரவை நன்கு அனுபவித்தனர். அத்துடன், பிராமண பண்டிதர்களின் எண்ணங்களால் உந்தப்பட்டு, தாழ்ந்த சாதி என எண்ணிய மற்ற இனங்களை விட தாங்கள் மேலானவர்கள் என்றும் பிராமணர்கள் நினைக்கத் தொடங்கினர். அதன் விளைவாக, பிரிட்டீஷ் அரசாங்கத்தின் மிக முக்கிய பதவிகளில் எல்லாம் பிராமணர்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். இத்தனைக்கும் மொத்த மக்கள் தொகையில் அவர்களுடைய எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. ஆனால் அன்றைய இந்திய அரசுப் பணிகளில் அவர்கள் 90 சதவீத இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதே வேளையில் மிகக் கீழ்நிலை பணிகளில் மட்டும் அவர்கள் இல்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு இருந்த உயர் தொழில்களில், குறிப்பாக சட்டம், மருத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளில் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் அவர்கள் பத்திரிக்கை மற்றும் கல்வித்துறைகளில் நுழைந்தனர். எனவே, அதிலும் அவர்களின் குரல்தான் ஓங்கி ஒலித்தது. அதுவே இந்திய வெகுஜன கருத்தாகவும் மாறியது. பிராமணர்களுக்கு இத்தகைய ஆதிக்க அந்தஸ்த்தை வழங்கிய பிரிட்டீஷாரின் வருகைக்கு முன்னர் இந்தியா தகுதி மற்றும் திறமை அடிப்படையிலான மேலான சமுதாயமாகத்தான் இருந்தது. பொய்யும் புரட்டையும் கொண்ட ஆங்கிலேயர் கட்டியமைத்த வரலாறே இன்று பாசிச ஆட்சிக்கு பயன் உள்ளதாக உள்ளது. அதேபோன்று இத்தகைய சமூகச் சூழல் நிலவுகையில்தான், 19 ஆம் நூற்றாண்டின் இனம் சார்ந்த கருத்துக்களும் (ஆரிய, திராவிட, மங்கோலிய, நீக்ரோ துராணியர், செமைட்டியர்.....இன்னும் இதுபோன்ற) வந்து சேர்ந்து கொண்டன. அமெரிக்க அறிஞர் தாமஸ் மெட்காஃப் இந்த சகாப்தத்தில் கடைபிடிக்கப்பட்ட வெள்ளைத்தோல் பெருமித இன உணர்வு எவ்வாறு ஐரோப்பிய நாகரீகத்தை உச்சத்தை எட்ட வைத்தது, அதே நேரத்தில், கறுப்பு நிற மக்களைக் கற்கால மனிதர்களாகவும், பலவீனமானவர்களாகவும், முன்னேற்றம் அடைவதற்கு ஐரோப்பிய அரவணைப்பை வேண்டி நிற்பவர்களாகவும் சித்தரித்தது என்பதை எடுத்துக் காட்டினார். வெள்ளையரின் இரண்டு நூற்றாண்டுகால ஆதிக்கத்தில் இருக்க நேர்ந்த இந்த நாட்டில் வாழ்ந்த மக்களும் இத்தகைய கருத்துக்கள் பலவற்றை தமதாக்கும் நிலைக்கு தவிர்க் இயலாமல் உள்ளாகி பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தின் கீழ் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டனர். இன்று அதன் மேலாத்திகம் ஆட்சியாளர்களின் தேவைக்கு பணியாற்றுகிறது.

மார்க்சியம், வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்ய சொல்கிறது. அன்று நிலவிய உற்பத்தி முறை என்னவோ அதன் அடிப்படையில் அம்மக்களின் வளர்ச்சியை வர்க்க அடிப்படையில் புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது, ஆனால் இந்திய வரலாற்றெழுதிகளோ இதனை கண்டுக் கொள்ளவே இல்லை. இங்கு எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வு செய்து எழுதியுள்ளனர். உண்மையில் வேத காலம் மற்றும் வேதஇலக்கியங்களை அடிப்படையாக ஆராய்ச்சிகள் கொண்டுள்ளதால் பலவீனம், நிறைகுறைகள், அறிவுக்கு ஒவ்வாத மனம்போன போக்கிலான புனைவுகளே அவர்களின் தேடல்கள். மௌரியர் காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்திய ஆட்சி ஒன்றிணைப்பு முழுமையாக நிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனி ஆட்சியாளர்களின் பொய்யான புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிப்பதும் அதனை ஏற்றுக் கொள்வதும், இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும். பாசிசத்தை கற்பதும் அதை இல்லாதொழிக்கவே.

நூல் ஆதாரங்கள்:-

1). பாசிசம் குறித்து டோக்ளியாட்டி

2). பாசிசம் பற்றி இலக்கு இணைய இதழ் கட்டுரைகள்- தோழர் பிரேம சந்திரன்

3). (இனங்களும் இனக் கொள்கைகளும் டாக்டர் மிஹயீல் நைஸ் தூர்ஹ் மீர் பதிப்பகம் மாஸ்கோ சோவியத்து நாடு 1974).

4). சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில்.

ஆரியர் என்ற இனமோ திராவிடர் என்ற இனமோ இந்திய துணைக் கண்டத்தில் இல்லை. அன்றைய வர்க்கமாக திரளுவதை மடைமாற்ற ஆங்கிலேயர் கையில் எடுத்த ஆயுதமே ஆரியர்-திராவிடர் மோதல்.

இலக்கு 81 இணைய இதழ் பி.டி.எப் வடிவில் இந்த இணையத்தில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்

 




கரூரில் மிதிபட்டு இறந்தோர் பற்றி என்ன படிப்பினைப்பெற்றீர் சமூக மாற்றம் காண விரும்புவோரே?

முகநூல் பகுதியில் இருந்தே, சில மாறுபட்ட கருத்துகள் இவை, ஆராயப்பட வேண்டியவையே! ஆகையால் பகிர்கிறேன். இவை சிலரின் பதிகளும் அடங்கும், இதில் அவர்களின் முழு கருத்தும் இல்லை அல்லது எதிரான தவறான கருத்துகளாக சித்தரிக்க கூடாது என்பதனால் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

 ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும். அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு..  சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..

 இவைதான் 100% உண்மை, "மக்கள் முட்டாள்கள் அல்ல... அவர்களின் பிரச்சினைக்கு காரணமானவை எவை யார் என்று தெரியாமல் இருக்க அதாவது  மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படையான அரசியல் தெளிவைப் பெறுவதைத் தடுக்குகிறவகையில் தற்போதைய ''சமுதாய (அரசமைப்பு) அமைப்பு'' திட்டமிட்டு செயல்படுகிறது.  அவைதான் தொடர்ந்து சினிமா பிரபல்யங்கள் மட்டுமல்ல சமூகத்தில் உயர் அடுக்கில் உள்ளவர்களின் பிரவேசமும். அதன் தொடர்ச்சிதான், ''அரசியலற்ற அரசியலை'' மக்கள்மீது பலவகைகளில் திணித்துள்ளது. இந்த 'அரசியலற்ற அரசியலுக்கு'' இட்டு செல்வதும் இந்த அரசியலுக்கும் ஒரு தெளிவான 'வர்க்க நலனும், பின்னணியும்'' உள்ளன.

இவற்றைத் தகர்க்காமல், தற்போதைய சமுதாயத்தை மக்களுக்கான சமுதாயமாக மாற்றுவதற்கான அரசியல் உணர்வை வளர்க்கமுடியாது. அவ்வப்போது ''புதுப்புது அவதாரங்கள்'' தோன்றிக்கொண்டே இருக்கும்! ஆனால் அவை அனைத்துக்கும் ஒரே அடிப்படைதான் . . . மக்கள் தினம்தினம் சந்திக்கும் அவலங்களுக்கான காரணத்தை அறியக்கூடாது;  மக்கள் தங்களுக்கான அரசியலை உணரக்கூடாது! உண்மையான மாற்றத்திற்காகப் போராடக்கூடாது! பந்தல்கார்களுக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கும் சமையல்காரர்களுக்கும் ''ஓய்வில்லாத பணி''! அவ்வளவுதான் இந்த ''அரசியல்''!!! இவை ஆழமான பதிவு சிந்திக்க வேண்டியவையும்.

இடதுசாரிகள் எனும் CPI, CPI(M), மற்றும் சிபிஐ லிபரேசன் போன்ற ஓட்டு சீட்டு அரசியலில் பங்குபெறும் கட்சிகளும் அதன் சார்ப்பை நாடுவோரும் ஏன் தி.மு.காவிற்கே ஓட்டு கேட்கும் கம்யூனிச பெயரில் வாழும் கூட்டம் தவறியும் பாராளுமன்றதிற்கு மாற்றான வழிமுறையை பேசுவதே இல்லை....  பாராளுமன்ற பன்றி தொழுவத்தையே கட்டி அழுகின்றது அதன் பணி இந்த கொடூரங்களுக்கு முடிவல்ல அதனை பற்றி ஒருவருகு எதிராக ஒருவர் குற்றம் மட்டுமே சுமத்த முடியும் மற்றொரு பிரிவு  ஓட்டு சீட்டு அரசியலைப் புறக்கணித்து ஆயுதப் போராட்டப் பாதையை தேர்வு செய்து செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் ) மற்றும் பாரளுமன்ற பாதையை ஏற்காதவர்கள் குறுங்குழுக்களும் , மக்களிடமும், இளைஞர்களிடமும் , மாணவர்களிடமும் செல்வதில்  தொடர்ந்து சரிவை  சந்தித்து வருகின்றன. ஏன் அவர்கள் மாற்று பாதைக்கான பணியை உலகில் கம்யூனிச வளர்ச்சி பாதையை புரிந்துக் கொண்டு குறிப்பான நிலைமைகேற்ப செயல்படுவதில் பிந்தங்கியே உள்ளனர் எனலாம். ஆகையால் இடதுசாரிகள் உழைக்கும் மக்களிடம் தங்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து போராட பலம் இல்லை அல்லது அவர்களின் வழிமுறையில் உள்ள தவறை உணர தவறுகின்றனர் என்றே நினைக்க வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களிடம் இடதுசாரிகள் ஏன்  ஐக்கியமாக முடியவில்லை என்பதுதானை படிப்பினை பெற வேண்டும் இடதுசாரிகள் இளைஞர்களிடம் ஐக்கிய படுவதில் இருந்து தனித்து நிற்பதற்கான காரணத்தையும்,  அதில் உள்ள பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஆய்வு செய்து சுய விமர்சனம் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். 

விஜயின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான அப்பாவி மக்களின் சாவிற்கு அவர்களின் அரசியற்ற ரசிக மனப்பான்மை மட்டும்  காரணம் அல்ல! ! அவர்களை அரசியல் படுத்த மறந்த தங்களை இடதுசாரிகள் உழைக்கும் மக்களுக்கானவர்கள் என்பவர்களும்தான் காரணம் இல்லையா??? !!!!
அரசு இயந்திரத்தின் அடக்கு முறையும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான RSS கும்பலின் பிற்போக்கு அரசியலும் ஒரு காரணமாகும்.
இதன் விளைவு தான் சீமான்,  விஜய் போன்ற கவர்ச்சி மற்றும் ஹீரோயிச பேச்சுகளால்  இளைஞர்கள் அணி திரள்வது ஆகும்.
நம்மிடம் உள்ள தத்துவார்த்த அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமக்குள்ள சிக்கல்களை பற்றி பேசாமல்  விஜய்க்கு சேரும் கூட்டத்தை திட்டுவது,  நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வது சரியான அரசியல் அணுகுமுறை இல்லை.விஜய்யின் பிரச்சாரத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள்  பலியாகி இருப்பதற்கு  அந்த மக்களின் அரசியலற்ற தன்மை மட்டும் காரணம் இல்லை.  மக்களை அரசியல் படுத்த தவறிய நாமும்  தான் காரணம் !!

உண்மையில் மக்கள் அதிகாரம் அதன் முந்தைய அமைப்புகள் எந்த பெயரில் இருந்தாலும் அவர்களின் உண்மையான முகம் பற்றி கீழ்காணும் பதிவுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்களே

திமுக அரசாங்கத்தை நோக்கி எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல் விஜய் மற்றும் அவர் சார்ந்த கட்சியினரை மட்டுப்படுத்துவதிலும், கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதிலும் உள்ள அரசியல் எந்த வர்க்க நலன் சார்ந்தவை?
இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அழுகையை சில Fake IDகளின் முகமற்ற முகவரிகளில் கேலியாக பதிவு செய்வது, இத்தனை பெரிய இழப்பிலும் மனிதத்தை மறந்து திமுகவின் மீதான பக்தி மனப்பான்மையே இவர்களை அரசுக்கும் காவல்துறைக்கும் புனிதர்களாக்கும் பணி, இந்த ஆட்சிதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம், வாராது வந்திந்த மாமணிகளின் பொற்கால ஆட்சி என்றும்!.
ஒரு சிலரோ கொந்தளிக்கின்றனர். பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வென்றுவிட முடியாது என்கின்றனர்.
புரட்சி நிகழவேண்டுமென்றால் நீண்ட நெடிய பணி அவை. இங்குள்ள இளைஞர்களை நடைமுறை பணி என்று இயக்கமற்ற நிலைக்கு தள்ளிவிட்டு சாதியை மதத்தை முன்நிறுத்தி வர்க்க அரசியலை பின்னுக்கு தள்ளிய பெருமை இவர்களை சாரும். கட்சி அரசியலைக் கடந்து வாருங்கள் என்பவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் முக்காடு போட்டு கொண்டு பாஜகவுடன் கூட்டணி இருந்த அதே கட்சிக்கு வாக்கு சேகரிக்க சென்றவர்கள்தாம். முதலில் கோரிக்கை அடிப்படையில் என்றீர்கள், பின்னர் கொள்கை அடிப்படையில் பொது எதிரியை வீழ்த்த தேர்தல் பாதையில் நிற்போரை ஆதரிக்கலாம் என்றீர்கள்! இன்று உதிரிகளாக அமைப்பை நிர்மூலப்படுத்திவிட்டு என்ன சொல்கின்றீர்கள்???.
திமுக என்பதால் அரசு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய கண்ணோட்டத்தில் சமரசமாகவும் சந்தர்ப்பவாதமாகவும் முடிவெடுத்து, ஆளும் வர்க்கத்தின் பின்னால் அணிதிரட்டி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உரிமை போராட்டத்தை மடைமாற்றி அவர்தம் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக இயங்கும் போது அம்பலப்படுத்துவதுதான் அவசியமானது. இதற்கு பதில் சொல்வார்களா பார்ப்போம்?

பா.ஜ க கட்சி கும்பமேளா நடத்தி கூட்ட நெரிசலில் மக்களை கொன்றது.. பிரதமர் மோடி சட்டப்படியான உரிமை கேட்டு திரளும் கூட்டத்தை  கொல்கிறார். அதிகார அரசியலில் ஈடுபடாத  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை, சிறையிலே தள்ளி கொல்கிறார்கள் இவை அங்குமிங்கும் நடபவைதான். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் ரோடு ஷோ மூலம் தங்களது பக்தர்கள் கூட்டத்தை அளவை காட்டுகின்றனர். ஆங்காங்கே நடக்கும் ரோட் ஷோகளை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளீர்கள் இருந்தும் இந்த இறப்பு கேள்விகளை எழுப்புகிறது...இந்திய அரசியலிலே பக்தர்கள் கூட்டமே ஆளுவோரை தீர்மாணிக்கிறது... அதுபோல்தான்  சினிமா ஸ்டார்களும் தங்களது பக்தர்களை நம்பி அரசியலிலே குதிக்கின்றனர் ... அதன் அடிப்படையிலே தன் பக்தர்களை கொல்ல துணிதவைதான் கரூர் ரோட் ஷோ! புரிந்துக் கொள்ளதான்...


சினிமா ஸ்டார்களும் தங்களது பக்தர்களை நம்பி அரசியலிலே குதிக்கின்றனர். எந்த சமூக அறிவுமில்லாமல் எந்த கொள்கையுமில்லாமல் ஒரு நடிகர்  ரோடு ஷோ மூலம் முதலமைச்சர் கனவுகளோடு பக்தர்கள் கூட்டத்தை திரட்டி  கும்பமேள அளவிற்கு மக்களை பிணமாக்கிவிட்டார்.  செத்தது பக்தர்கள் கூட்டத்தால் நசுக்கப்பட்ட மக்கள். 
மார்க்சீயவாதிகளே  இளைய சமூகதிற்கு என்ன அரசியல் சமூக அறிவியல் பார்வையை உணர் செய்ய போகிறீர்கள். முதலாளித்துவ ஊடக விளம்பர குப்பை  அரசியலுக்கு விடை கொடுப்பீர்களா? மார்க்சிய அறிவு செல்வத்தை விதைக்க தயாராவீர்களா சற்றேனும் சிந்திக்க வேண்டியவையே இந்த வேளையில்...

39 உயிர்களை காவு வாங்கிய சம்பவம் உழைக்கும் மக்களை அரசியல் அற்ற கும்பல் கலாச்சாரமே! அரசியல் அற்ற அராஜக கும்பல் அரசியலின் பேரால் உருவாக்கப் படுகின்றனர். ஆளும் வர்க்கங்களுக்கு அவசியம் என்பதால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றனர்!
இதனை எதிர்கொள்ள பாட்டாளி வர்க்க அரசியலையும் அதன் அடிப்படையிலான கட்சியையும் கட்டியமைக்கதவரை இவை போன்ற சம்பங்களுக்கு முடிவில்லை.



அதிகாரத்தில் உள்ளவர்களின் உயிர்காப்பது மட்டுமே இந்த அரசின் அதாவது அரசு தூண்களின் வேலை. அதில் அவர்கள் தவறுவதில்லை. ஆனால் சாதரண மக்களின் உயிர் துச்சம் இதனை பற்றி பேச வேண்டியவர்கள் அரசின் குரலில் பேசும் பொழுது அவர்கள் எந்த வர்க்கதினர் நான் சொல்ல வேண்டியதில்லை .... உழைக்கும் மக்களுக்கான அரசியல் பேசுவோர் எங்கே உள்ளனர் சிந்திக்கவே...



கட்சி உடைவும் குறுங்குழுவாதமும்

இங்குள்ள இடதுசாரிகள் இடதுசாரிகளுக்களுக்கான பங்காற்றாமல் வலதுசாரிகளுக்கு ஒத்தூதுவது போல்  புரட்சிக்கான கட்சியாக தோன்றிய கட்சி புரட்சியை கைவிட்டுவிட்டு எதிரிக்கு எதிரான போரில் தன்நிலை இழந்து சிதைந்து எதிரிக்கு எதிராக போராடுவதை விட தன் குழுவை பாதுகாக்க குறுங்குழுவாத புதைச்சேற்றில் மூழ்கியுள்ளது.

உண்மையில் மார்க்சிய லெனினியம் எனும் தத்துவம் உள்ள வர்க்க சமூக அமைப்பை புரிந்துக் கொள்வதோடு எதிரி வர்க்கத்தை தனிமைப்படுத்தி நட்பு சக்திகளை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இங்கு என்ன நடந்துக் கொண்டுள்ளது எதிரி வர்க்கதிடம் வால்பிடிப்பது மட்டுமல்ல கைகோர்க்கவும் செய்கின்றனர். இவர்கள் எங்கே பாட்டாளி வர்க்கதினராக முடியும்?

இங்கு நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் சிலவற்றை மதிப்பீடு செய்வோம்.

1). பெண் விடுதலைக்கான இயக்கம் இங்கே செய்துக் கொண்டிருப்பவை அன்றை அமெரிக்க சார்ந்த பெண் விடுதலை இயக்கங்களின் மிச்ச சொச்சங்களே இவை சோசலிசத்தை நோக்கிய இயக்கமாக இல்லை என்பேன்.

 பெண் விடுதலை இயக்கங்களை பற்றி லெனின் சொன்னவற்றை பார்ப்போம்,  " முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு சோசலிச ஜனநாயகம் உள்ள வேறுபாட்டை மிகவும் எடுப்பான முறையில் தெளிவு படுத்துகிறது. முதலாளித்துவ அரசு  சொல்லளவில் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் வாக்குறுதி செய்கிறது. ஆனால் நடைமுறையில் எந்த ஒரு முதலாளித்துவ குடியரசும் முன்னேறிய நாட்டிலும் கூட மனிதகுலத்தில் பாதிப்பேரான பெண்களுக்கு சட்டத்தின்படி ஆண்களுக்கு சரிநிகரான சமத்துவம் வழங்கவும். ஆடவரின் சார்பு வாழ்விலிருந்து அவர்களை ஒடுக்குவதிலிருந்து பெண்களை விடுவிக்கவேயில்லை. முதலாளித்துவ ஜனநாயகம் தடபுடலான சொல்லாடல்களும் கம்பீரமான சொல்லாடல்களும் சுதந்திரம், சமத்துவம் என்பன படோடுமான வாசகளுக்குரிய ஜனநாயகம். ஆனால். உண்மையில் இவை யாவும் பெண்களின் சுதந்திரம் இன்மையையும் உழைப்பாளர் ஒடுக்கப்பட்டோரோருமான மக்களின் சுதந்திரமின்மை, சமத்துவமின்மையும் மூடி மறைக்க சிங்காரிப்புகளேயாகும். 

நிலைமை அப்படி இருக்க மூடர்களும் முதலாளித்துவ நோக்காங்களும் அவர்கடைய ஆதரவாளர்களும் பொதுப்படையாக சுந்தந்திரம் ஒடுக்கப்பட்டோருக்கு சமத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றமும் இவர்களின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும், கண்களை மூடிக் கொண்டுள்ளோர்களின் கண்களைத் திறந்து விடுங்கள் என்றுதான் தொழிலாளர்களும், விவசாயிகளும் நாம் கூற வேண்டும்"

2). தேசிய இன விடுதலை. இதில் உள்ள பலரும் மேல் கூறும் அதே அடைப்பில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பின் அணி திரள்வோரே. ஆக நமக்கான பணி பற்றி பார்ப்போம்.(விரிவாக பின்னர் எழுதுகிறேன்).

  கட்சி கட்டுவது பற்றி

ஒருவர் அடிக்கடி சொல்கிறார் "என்னிடம் திட்டம் உள்ளது உன்னிடம் திட்டம் உள்ளதா; நான் கட்சி கட்டிவிட்டேன் நீங்கள் எல்லாம் உதிரி; நீங்கள் என்னே செய்ய முடியும்?". இப்படி அவரின் எழுத்துகளும் அவரின் போக்கையும் புரிந்துக் கொள்ள ஒரு மூத்த தோழரிடம் கேட்டதிற்கு அவர் அளித்த பதிலும் மற்றும் அவர் சுட்டிக் காட்டிய ஆவணங்களின் அடிப்படையில் தேடினால் யார் இதையெல்லாம் எழுதி கொண்டுள்ளாரோ அவரின் அமைப்பே இவர்களை பற்றி என்ன சொல்லி உள்ளது என்பதோடு இவரை போன்றவர்களுக்கான இந்த தேடுதலே இந்தக் கட்டுரை.

விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்கவேண்டுமே ஒழிய நோயாளியை கொல்வதாக இருக்கக்கூடாது என்றும் விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைய போராட வேண்டும் என்றும் அடிக்கடி பேசப்படுகிறது. ஆனால் எவ்வளவு தூரம் உணரப்பட்டுள்ளது ? தவறிழைக்கும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக்கொள்ள உதவி செய்வதில் முதன்மையானதுபெரும் தவறுகளை இழைத்த பின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர்கள் விஷயத்திலேயே அம்பலப்படுத்தும் விதத்திலான போராட்ட முறை கைக்கொள்ள வேண்டும் இத்தகைய பொறுமையின்றி எடுத்த எடுப்பிலே ஒருவரை "சந்தர்ப்பவாதி திரிப்பு வாதி எதிர் புரட்சியாளர்" என முத்திரை குத்தி விடுவதும் போராட அறைகூவல் விடுவதும் குறுங்குழுவாத போக்கின் விளைவேயாகும் . விமர்சனம் சுய விமர்சனம்   மூலம் மாற்றி அமைப்பதற்க்கான வழிமுறை க்கு  எதிரானதாகும் .

விமர்சனம் சுயவிமர்சனம் என்பது என்ன? நாம் வழக்கமாக விமர்சனம் சுய விமர்சனம் என்று கருதி செய்வது தவறுகளை சுட்டிக் காட்டுவதும் தவறுகளை ஏற்றுக் கொள்வது மாக உள்ளன உண்மையில் விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தவறு ஏன் நிகழ்ந்தது அதற்கான தத்துவார்த்த வர்க்க வர்க்க பின்னனி என்ன அதைக் களைவதற்கான சிந்தனை செயல்முறை என்ன என்பதை உள்ளடக்கி ஆக்க பூர்வமானதாக இருக்க வேண்டும் .

ஒரு குறிப்பிட்ட தவறை எதிர்த்துப் போரிடும் போது அத்தகைய தவறு வருங்காலத்தில் நிகழாமல் அல்லது பாதிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாம் எவ்வாறு நமது வேலை முறையை மாற்றிக் கொள்வது என்பதும் சேர்த்து உணரப்பட வேண்டும். ஆக பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றியமைத்துக் கொண்டே தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது .விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்றும் முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அக சக்தி என்ற விதத்தில் சுயவிமர்சனம் முதன்மையானது .இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை. 

ஆக இங்கு உள்ள நிலையைப் பற்றி இயங்கியல் அணுகுமுறையை பார்ப்போம்.

1).கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக்கருத்துக்கள் அல்லது வழிகளும் நிலவும் ; அவை ஒன்றுபட்டு நிற்கிற நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டிக்கொண்டுமிருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளும் அழிவுவாதத்திற்கும் வழிவகுக்கின்றது.

2) . ஒரு அரசியல் வழி அல்லது அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல்முறைகளை எதிர்த்து போரிடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கும் பதில் தனிநபரின் பண்புகளில் இருந்து உட்கட்சிப் போராட்டத்தை தொடங்குவது கோஷ்டி வாதத்தையும் அதிகார வர்க்கப் போக்கையும் தோற்றுவிக்கிறது.

3). சுய விமர்சனம், விமர்சனம் மூலம் தன்னைத் திருத்திக் கொண்டு பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கின்ற நிகழ்ச்சி போக்கே கட்சியின் வளர்ச்சி விதியாகும் . 

மேல் கூறிய மூன்று விதிகளும் எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வின் எந்த ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டின் இருத்தல் கையாளுதல் தீர்வு என்ற மூன்று நிலைகள் பற்றி வையாகும் .

இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு வழியில்லாததால் தான் பல்வேறு மாலெ குழுகள் பல துண்டுகளாக உடைந்தது அதேபோல இத்தகைய தவறான போக்கை வெவ்வேறு அளவில் எதிர்த்தாலும் கூட சரியான பாட்டாளிவர்க்க வழியில் போராட தெரியாததுதான் பிளவுகளை தடுத்து நிறுத்த முடியவில்லை .

ஐக்கியம் ஐக்கியம்  என உரக்கக் கூறிக் கொண்டே தனது  தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிற குழுக்களை ஜீரணிக்கும் முயற்சிகளாக அமைந்தன. 

உட்கட்சி முரண்பாடுகளை எவ்வாறு இயங்கியல் நோக்கில் தீர்ப்பது என்ற விஷயம் இவ்வாறு உள்ளது. கட்சியின் இயங்கியல் பார்வை பற்றிப் பேசும்போது இதே அளவு முக்கியத்துவம் உடைய வேறு இரு விஷயங்கள் உள்ளன. ஒன்று கட்சிக்கு வெளியில் நிகழும் மாற்றங்கள் பற்றியது மற்றது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது .

புறவுலகானது மனிதர்களது விருப்பத்திற்கப்பாற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமானது புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போது சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும் பொருளானது எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல் வாத கண்ணோட்டமாகும். 

ஏனென்றால் இவர்கள் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புற பொருளையும் சரியாக புரிந்து கொள்வதுடன் புறவய விதிகளிருந்தல்லாமல் நமது அகவய விருப்பங்களில் இருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்துக் கொள்வது வரை நடக்கின்றன இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம் கொடுக்கிறது .

கட்சி ஒன்றுபடுதல் சரியான அணுகுமுறை பிரிவிற்கான காரணங்கள். (சிறப்பு கூட்ட அறிக்கை 1988 [ம.யு(போ)] நூல் பக்கம் 46-48).

கடந்த கால படிப்பினைகள் என்ன சொல்கின்றது  யுத்த தந்திர கோட்பாடுகளையும் செயல் தந்திர கோட்பாடுகளையும் கிரகித்து புரட்சியாளர்கள் மத்தியில் சிந்தனை ரீதியாக ஊட்டவில்லை, இதனால் புரட்சியாளர்கள் தன்னியல்பு வகைப்பட்ட சிந்தனையிலிருந்து கோட்பாட்டு ரீதியில் முறித்துக் கொள்ளவில்லை . (அதாவது முன்னர் இருந்த கட்சியின் சித்தாந்தத்தை சொல்லுகிறார்) . பின்னர் தலைமை பொருளாதார வாதத்திற்கு மாற்றாக பயங்கரவாதத்தையும் இடது சகாசவாதத்தையும்  ஏற்படுத்தியது முடிந்தது .தத்துவ அரசியல் பணிகளின் முக்கியத்துவத்தை குறைத்து இயக்கத்தில் சித்தாந்த ஒற்றுமையை பலவீனப்படுத்தி விடுகிறது.

தன்னியல்பான நடைமுறைக்கு ஏற்ப அமைப்பு துறையில் கற்றுக்குட்டி தனமும் அதிகாரவர்க்க மனப்பாங்கும் இடம்பெற்றன .

ஆக தத்துவ பணியாற்றிய விதம் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமை, இடதுசாரி சாகாச வாதத்தில் தன் இயல்பு வழி  இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்சி கட்டுதல். இக்காரணங்களால் புரட்சியாளர்களை ஒன்றுபடுத்த இயலாததுடன் சிதறுண்ட இயக்கத்தையும் உருவாக்கியது. எனவே தவறான சித்தாந்தங்களும் தாராளமாக கட்சியில் மேலிருந்து கீழ் வரை நுழைகின்றன. தவறான சித்தாந்தங்களை எதிர்த்து சரியான பாட்டாளி வர்க்க சித்தாந்தங்களுக்குகான போராட்டம் இல்லை. எனவே இந்திய பாட்டாளி வர்க்கம் தனது சித்தாந்த தலைமையை உருவாக்கி கொள்ளவோ வளர்த்துக் கொள்ளவோ இல்லை  . (அதே நூல் பாரா 5, பக்கம் 47). 

பிளவுபட்ட குழுக்கள் தன்னியல்பாகவே வெவ்வேறு நடைமுறைகளில் வகுத்துக் கொண்டு தனித்தனியாக பயணிக்கின்றன. சில குழுக்கள் தத்துவத் துறையில் கவனம் செலுத்தி வேலை திட்டத்தில் சில மாற்றங்கள் அடைகின்றன சில மறு சேர்க்கைகளும் பிளவுகளும் நிகழ்கின்றன.

சர்வதேச அளவில் சீன ரஷ்ய திரிபுவாதம் மேலோங்கி முதலாளித்துவ மீட்சி யானது புரட்சிகர கட்சியில் பல்வேறு புதிய முரண்பாடுகளை தோற்றிவைத்தது. குழப்பங்கள் விலகள்களும் பிளவுகளும் எங்கும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இவை இந்திய மார்க்சிய லெனினிய குழுக்களை பிளவுபடுத்தி உள்ளது மேலும் சில குழுக்கள் மார்க்சிய நிலைக்கு அப்பால் தள்ளி உள்ளது புரட்சிக்கு எதிர்நிலையிலும் போயுள்ளது.  

இன்னும் பின்னர் 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்