MATERIALISM and EMPIRIO-CRITICISM

 இன்று "பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்" நூலை பற்றி வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் நோக்கம் உண்மையில் இந்த நூலில் பேசப்பட்டுள்ளவற்றை மடைமாற்றம் செய்யவே. உண்மையில் மார்க்சிய லெனினியத்தை நேசிப்போர் இந்த நூலை வாசிக்கவும் மேலும் தேவைபட்டால் ஆங்கில் நூல் கீழ் உள்ள லிங்கில் உள்ளது அழுத்தி பெற்று வாசித்து தெளிவடையலாம் தோழர்களே.

Lenin Collected Works: Volume 14 (marxists.org)

அனுபவவாதம் என்பது வேறுஅனுபவவாத விமர்சனம் வேறு என்று சிலர் கருதுகிறார்கள்ஆனால் அது உண்மையில்லை. தத்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாக விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். பொருள்முதல்வாதம் என்றாலே பொருள்முதல்வாதத் தத்துவம் என்று நாம் புரிந்துகொள்கிறோம் அல்லவாஅதுபோலவே கருத்துமுதல்வாதம் என்றாலே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்று புரிந்துகொள்கிறோம் அல்லவாஅதுபோலவே அனுபவவாதம் என்றாலும் அனுபவவாத விமர்சனம் என்றாலும் அனுபவவாத தத்துவம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. லெனின் எழுதிய நூலின் நோக்கமே அனுபவவாத தத்துவம் என்பது பொய்யான சந்தர்ப்பவாத தத்துவம்தான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லிஅனுபவவாத தத்துவத்தை அம்பலப்படுத்துவதுதான் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால் அனுபவவாதம் என்ற சொல்லுக்கும் அனுபவவாத விமர்சனம் என்ற சொல் பற்றியும் குழப்பம் அடையத் தேவையில்லை.

ஆக இந்த வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டவர் மறைக்க அல்லது மறந்து போனவற்றை அப்படியே கீழே

முதல் பதிப்பின் முன்னுரையிலிருந்து பக்கம் 21லிருந்து 23 வரை:-(அப்படியே ஆங்கில மூலம் கீழே )

மார்க்சும் எங்கெல்சும் தமது தத்துவஞானக் கருத்துக்களை இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று பலமுறை அழைத்ததை இவர்கள் அனைவரும் அறியாதவர்களாக இருந்திருக்க முடியாது. ஆயினும் இவர்களெல்லோரும், தமது அரசியல் கருத்துக்களில் கூர்மையான வேறுபாடு இருந்தபோதிலும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்பால் தமது பகைமையில் ஒன்றுபட்டு, அதே போது தத்துவஞானத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள்! எங்கெல்சின் இயங்கியல் என்பது "மாயவாதம்" என்கிறார் பெர்மன்

 

எங்கெல்சின் கருத்துக்கள் "பழமையானவையாகிவிட்டன" என்று பஸாரோவ் சர்வசாதாரணமாக குறிப்பிடுகிறார், அது ஒரு வெளிப்படையான உண்மை என்பதுபோல். இவ்வாறாக, "நவீன அறிவுக் கோட்பாடு," "அண்மைய மெய்யியல்" (அல்லது "அண்மைய நேர்க்காட்சிவாதம்"), "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" அல்லது "இருபதாம் நூற்றாண்டின் இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" ஆகியவற்றைப் பெருமையுடன் குறிப்பிடும் நமது துணிச்சலான போர்வீரர்களால் பொருள்முதல்வாதம் மறுக்கப்படுவதையும். அண்மைக்காலக் கோட்பாடுகள் என்று சொல்லப்படுபவை அனைத்தின் ஆதரவுடன், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அழிப்பவர்களான இவர்கள் அச்சமின்றி அப்பட்டமான நம்பிக்கை கொள்கையை(Fideism- ஃபிடெயிசம் என்பது அறிவுக்கு பதிலாக நம்பிக்கையை மாற்றும் ஒரு கோட்பாடு, அல்லது பொதுவாக நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிற கோட்பாடு. -லெனின்) நோக்கிச் செல்கிறார்கள்.

ஆயினும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரிடம் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறை பற்றிய வெளிப்படையான வரையறை என்று வரும்போது, அவர்களுடைய துணிச்சலும், தங்களுடைய சொந்த நம்பிக்கைகள் மீதான மரியாதையும் உடனடியாக மறைந்து விடுகின்றன. செயலில் - இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முற்றிலுமாக கைவிடுவது; வார்த்தையில் சொல்வதானால், முடிவற்ற சூழ்ச்சிகள், பிரச்சினையின் சாராம்சத்தைத் தட்டிக்கழிப்பதற்கான முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மூடிமறைப்பதற்கான முயற்சிகள், பொதுவாக பொருள்முதல்வாதத்தின் இடத்தில் ஏதோவொரு பொருள்முதல்வாதம் அல்லது மற்றொன்றை வைப்பது, மற்றும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எண்ணற்ற பொருள்முதல் பிரகடனங்களை நேரடியாக பகுப்பாய்வு செய்ய தீர்மானகரமாக மறுப்பது. இது ஒரு மார்க்சியவாதி நியாயமாக கூறுவதுபோல். இது உண்மையிலேயே "மண்டியிட்டு நிற்கும் கலகம்"(“mutiny on one’s knees,”-கையாலாத கலகம்) ஆகும், இது வகைமாதிரியான மெய்யியல் திருத்தல்வாதமாகும், ஏனென்றால் திருத்தல்வாதிகள் மட்டுமே மார்க்சியத்தின் அடிப்படைக் கண்ணோட்டங்களில் இருந்து விலகிச் சென்றதன் மூலமும், தாங்கள் கைவிட்ட கண்ணோட்டங்களுடன் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும், உறுதியாகவும் மற்றும் தெளிவாகவும்   "கணக்குத் தீர்க்க" அவர்களின் அச்சம் அல்லது இயலாமையின் மூலமாகவும் தமக்கென ஒரு வருந்தத்தக்க அவப்பெயரைப் பெற்றனர். மார்க்சின் சில பழங்கால கருத்துக்களுக்கு எதிராக (உதாரணமாக, மேஹ்ரிங் சில வரலாற்று முன்மொழிவுகளை எதிர்த்தபோது) பழைய மார்க்சியவாதிகள் உச்சரிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, அது எப்போதும் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் செய்யப்பட்டது, அத்தகைய இலக்கியக் கூற்றுகளில் தெளிவற்ற எதையும் யாரும் ஒருபோதும் கண்டதில்லை.

மற்றபடி, மார்க்சிய மெய்யியல் ஆய்வுகளில் உண்மையை ஒத்த ஒரு சொற்றொடர் உள்ளது. இது லூனாசார்ஸ்கியின் சொற்றொடர்: "ஒருவேளை நாம் [அதாவது, ஆய்வுகளில் பங்குபெற்ற எல்லோரும்] வழிதவறிவிட்டோம், ஆனால் நாங்கள் தேடுகிறோம்" (பக். 161). இந்தச் சொற்றொடரின் முதல் பாதியில் முழுமையான உண்மையும், இரண்டாவது பாதி ஒப்பீட்டு உண்மையும் அடங்கியுள்ளன என்பதை இந்நூலில் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்க முயல்கிறேன். நமது தத்துவவாதிகள் மார்க்சியத்தின் பெயரால் பேசாமல் ஒரு சில "தேடும்" மார்க்சியவாதிகளின் பெயரில் பேசியிருந்தால், அவர்கள் தங்களின் மீதும் மார்க்சியத்தின் மீதும் அதிக மரியாதை காட்டியிருப்பார்கள் என்பதை மட்டுமே இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவேன்.

என்னைப் பொறுத்தவரை நானும் தத்துவத் துறையில் ஒரு "தேடுபவன்"தான். அதாவது, இந்த விளக்கங்களில் நான் எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வேலை என்னவென்றால், மார்க்சியப் போர்வையில் இந்த நம்பமுடியாத அளவிற்கு குழப்பமான, தெளிவற்ற, பிற்போக்குத்தனமான ஒன்றை முன்வைக்கும் இவர்களுக்கு எது முட்டுக்கட்டையாக இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஆகும்.

 

- விளாடிமிர் லெனின். செப்டம்பர் 1908.

அப்படியே ஆங்கில மூலம்

All these people could not have been ignorant of the fact that Marx and Engels scores of times termed their philosophical views dialectical materialism. Yet all these people, who, despite the sharp divergence of their political views, are united in their hostility towards dialectical materialism, at the same time claim to be Marxists in philosophy! Engels’ dialectics is “mysticism,” says Berman. Engels’ views have become “antiquated,” remarks Bazarov casually, as though it were a self-evident fact. Materialism thus appears to be refuted by our bold warriors, who proudly allude to the “modern theory of knowledge,” “recent philosophy” (or “recent positivism”), the “philosophy of modern natural science,” or even the “philosophy of natural science of the twentieth century.” Supported by all these supposedly recent doctrines, our destroyers of dialectical materialism proceed fearlessly to downright fideism.

Yet when it comes to an explicit definition of their attitude towards Marx and Engels, all their courage and all their respect for their own convictions at once disappear. In deed—a complete renunciation of dialectical materialism, i.e., of Marxism; in word—endless subterfuges, attempts to evade the essence of the question, to cover their retreat, to put some materialist or other in place of materialism in general, and a determined refusal to make a direct analysis of the innumerable materialist declarations of Marx and Engels. This is truly “mutiny on one’s knees,” as it was justly characterised by one Marxist. This is typical philosophical revisionism, for it was only the revisionists who gained a sad notoriety for themselves by their departure from the fundamental views of Marxism and by their fear, or inability, to “settle accounts” openly, explicitly, resolutely and clearly with the views they had abandoned. When orthodox Marxists had occasion to pronounce against some antiquated views of Marx (for instance, Mehring when he opposed certain historical propositions), it was always done with such precision and thoroughness that no one has ever found anything ambiguous in such literary utterances.

For the rest, there is in the Studies “in” the Philosophy of Marxism one phrase which resembles the truth. This is Lunacharsky’s phrase: “Perhaps we [i.e., all the collaborators of the Studies evidently][2] have gone astray, but we are seeking” (p. 161). That the first half of this phrase contains an absolute and the second a relative truth, I shall endeavour to demonstrate circumstantially in the present book. At the moment I would only remark that if our philosophers had spoken not in the name of Marxism but in the name of a few “seeking” Marxists, they would have shown more respect for themselves and for Marxism.

As for myself, I too am a “seeker” in philosophy. Namely, the task I have set myself in these comments is to find out what was the stumbling block to these people who under the guise of Marxism are offering something incredibly muddled, confused and reactionary.

— Vladimir Lenin. September 1908.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு விரிவுரையாளரிடம் பத்து கேள்விகள்- லெனின் தொ.நூ(ஆ) தொகுதி 14, பத்து கேள்விகள் தலைப்பின் முன்னுரை

(இந்த நூலில் பக்கம் 25-27)

1.மார்க்சியத்தின் தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பதை விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? அவர் அவ்வாறு ஏற்கவில்லை என்றால், இந்த விடயம் குறித்த எங்கெல்ஸின் எண்ணற்ற கூற்றுகளை அவர் ஏன் ஒருபோதும் பகுப்பாய்வு செய்யவில்லை? அவ்வாறு ஏற்றால், மாக்கியர்கள் ஏன் தாம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை "திருத்துவது" என்பதை "மார்க்சிய மெய்யியல்" என்று அழைக்கின்றனர்?

2. தத்துவ ரீதியான அமைப்புகளைக் கருத்துமுதல்வாதம் என்றும் பொருள்முதல்வாதம் என்றும் எங்கெல்ஸ் அடிப்படையிலேப் பிரித்து கையாள்வதை விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? இந்த இரண்டிற்கும் இடையில் ஊசலாடும் அந்த இடைநிலைகளை நவீன தத்துவத்தில் ஹ்யூமின் வழிமுறை, இந்த வழியை "அறியொணாவாதம்" என்று அழைக்கிறார், மேலும் கான்ட்டியனிசத்தை ஒரு வகையான அறியொணாவாதம் என்று அறிவிக்கிறார் எங்கெல்ஸ் அதை அறிவாரா?

3. புற உலகை அங்கீகரிப்பதும், மனித மூளையில் அதன் பிரதிபலிப்பும் இயக்கவியல் பொருள்முதல்வாத அறிவுக் கோட்பாட்டின் அடிப்படையாக அமைகிறது என்பதை விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா?

4. "தானாக உள்ளபொருட்கள்" எனப்படுபவை "நமக்கான பொருட்களாக" மாற்றம் பெறுவது குறித்த எங்கெல்சின் வாதம் சரியானது என்று விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா?

5. "உலகின் உண்மையான ஒற்றுமை அதன் பொருளாயதத் தன்மையில் அடங்கியுள்ளது" என்ற ஏங்கெல்ஸின் கூற்று சரியானது என்று விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? (டூரிங்கிற்கு எதிர்ப்பு, இரண்டாம் பதிப்பு, 1886, பக்கம் 28, பிரிவு I, உலக வரைபடவாதம் பற்றிய பகுதி IV.)

6. "பருப்பொருள் இல்லாத இயக்கத்தை எண்ணி பார்க்க முடியாத்து போலவே இயக்கம் இல்லாத பருப்பொருளும் நினைத்துப் பார்க்க முடியாதது" என்ற ஏங்கெல்சின் கூற்றை சரியென விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? (ஆன்டி-டூரிங், 1886, 2 வது பதிப்பு, பக். 45, பகுதி 6 இல் இயற்கை தத்துவம், அண்டவியல், இயற்பியல் மற்றும் வேதியியல்.)

7. காரண காரிய தொடர்பு கோட்பாடு இன்றியமையாமை, விதி போன்ற இதரவை யதார்த்த உலகின் இயற்கையின் விதிகளாக மனித மூளையில் பிரதிபலிப்பாக உள்ளன என்பதை விரிவுரையாளர் ஒப்புக் கொள்கிறாரா? அல்லது எங்கெல்ஸ் அப்படிச் சொன்னது தவறானதா? (டூரிங்கிற்கு மறுப்பு, பிரிவு 20-21, பகுதி III காரணகாரியம் தொடர்புவாதம் மற்றும் பிரிவு 103-04, பகுதி XI இல் சுதந்திரம் இன்றியமையாமையும் பற்றியது).

8. மாக் தனது உடன்பாட்டை ஷூப்பேயுடன் வெளிப்படுத்தினார் என்பதும், தனது கடைசி மற்றும் முக்கிய தத்துவ படைப்பை அவருக்கு அர்ப்பணித்தார் என்பதும் விரிவுரையாளருர் அறிவிப்பாரா? மதகுருமார் வாதத்தின் பாதுகாவலரும், பொதுவாக தத்துவத்தில் ஒரு வெளிப்படையான பிற்போக்குவாதியுமான ஷுப்பேயின் வெளிப்படையான கருத்துமுதல்வாத தத்துவத்தை மாக் பின்பற்றுவதை விரிவுரையாளர் எவ்வாறு விளக்கம் அளிக்கிறார்?

9. நேற்றுவரை தனது தோழராக இருந்த மென்ஷிவிக்கான யுஷ்கேவிச்சுடன் (ஆய்வுகளின்படி) விரிவுரையாளர் ஏன் "சாகசம்" பற்றி மௌனமாக இருந்தார், அவர் இன்று போக்டானோவை (ரக்மெடோவைத் தொடர்ந்து) ஒரு கருத்துமுதல்வாதி என்று அறிவித்துள்ளார்?  பெட்ஸோல்ட் தனது சமீபத்திய புத்தகத்தில் மாக்கின் பல சீடர்களை கருத்துமுதல்வாதிகளிடையே வகைப்படுத்தியுள்ளார் என்பது விரிவுரையாளருக்குத் அறிந்திருக்கிறாரா?

10. போல்ஷிவிசத்துடன் மாக்கிசம் பொதுவானது எதுவுமில்லை என்ற உண்மையை விரிவுரையாளர் உறுதிப்படுத்துகிறாரா? லெனின் மீண்டும் மீண்டும் இயக்க மறுப்பியல் (மாறாநிலை)வாதத்தை எதிர்த்திருக்கிறார் என்பது, மென்ஷிவிக்குகளான யுஷ்கேவிச் மற்றும் வாலண்டினோவ் ஆகியோர் "தூய" அனுபவ-விமர்சகர்கள் என்பதா?

1908 மே-ஜீனில் எழுதப்பட்டது

முதன்முதலில் 1925 இல் லெனின் கையெழுத்துப் பிரதியின் படி வெளியிடப்பட்டது.

 

 

ஆங்கில மூலம் அப்படியே கீழே:-

Ten Questions To a Lecturer  Volume 14, pages 13-16.

 

1. Does the lecturer acknowledge that the philosophy of Marxism is dialectical materialism ?If he does not, why has he never analysed Engels’ countless statements on this subject?If he does, why do the Machists call their “revision” of dialectical materialism “the philosophy of Marxism"?

2. Does the lecturer acknowledge Engels’ fundamental division of philosophical systems into idealism and materialism,[2] Engels regarding those intermediate between these two, wavering between them, as the line of Hume in modern philosophy, calling this line “agnosticism” and declaring Kantianism to be a variety of agnosticism?

3. Does the lecturer acknowledge that recognition of the external world and its reflection in the human mind form the basis of the theory of knowledge of dialectical materialism?

4. Does the lecturer acknowledge as correct Engels’ argument concerning the conversion of “things-in-themselves” into “things-for-us”?[3]

5. Does the lecturer acknowledge as correct Engels’ assertion that the “real unity of the world consists in its materiality”? (Anti-Dühring, 2nd ed., 1886, p. 28, section I, part IV on world schematism.)[4]

6. Does the lecturer acknowledge as correct Engels’ assertion that “matter without motion is as inconceivable as motion without matter"? (Anti-Dühring, 1886, 2nd ed., p. 45, in part 6 on natural philosophy, cosmogony, physics and chemistry.)[5]

7. Does the lecturer acknowledge that the ideas of causality, necessity, law, etc., are a reflection in the human mind of laws of nature, of the real world? Or was Engels wrong in saying so? (Anti-Dühring, S. 20-21, in part III on   apriorism, and S. 103-04, in part XI on freedom and necessity.)[6]

8. Does the lecturer know that Mach expressed his agreement with he head of the immanentist school, Schuppe, and even dedicated his last and chief philosophical work[7] to him? How does the lecturer explain this adherence of Mach to the obviously idealist philosophy of Schuppe, a defender of clericalism and in general a downright reactionary in philosophy?

9. Why did the lecturer keep silent about “adventure” with his comrade of yesterday (according to the Studies), the Menshevik Yushkevich, who has oday declared Bogdanov (following in the wake of Rakhmetov) an idealist?[8] Is the lecturer aware that Petzoldt in his latest book has classed a number of Mach’s disciples among the idealists?[9]

10. Does the lecturer confirm the fact that Machism has nothing in common with Bolshevism? And that Lenin has repeatedly protested against Machism?[10] And that the Mensheviks Yushkevich and Valentinov are “pure” empirio-criticists?

First Published 1925 in Lenin Miscellany III. Published according to the manuscript.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்