ரஷ்யாவில் நரோடிசமும்- நரோடிசத்தை எதிர்த்த போராட்டமும். 1883 ம் ஆண்டில் தான் ரஷ்யாவில் முதன் முதலில் மார்க்சிய குழு ஒன்று தொன்றிற்று. இது ஜி.வி . பிளக்கனோவ் என்பவரால் நிறுவப்பட்ட தொழிலாளர் விடுதலை குழு. அதற்கு முன் பிளக்கனோவும் ஒரு நரோதிக்காகாவே இருந்தார். அவர் வெளிநாட்டில் மார்க்சியத்தை கற்றதன் பலனாய் நரோடிசயத்தை கைவிட்டு மார்க்சிய கொள்கைகளைப் பரப்ப தொடங்கினார்.
ரஷ்யாவில் மார்க்சியத்தை பரப்புவதற்கு தொழிலாளர் விடுதலை குழு பெரிதும் பணியாற்றியது. மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய நூல்களை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்தார்கள் பல்வேறு மார்க்சிய நூல்களை ரகசியமாக ரஷ்யாவில் பரப்பினார்கள்.
கற்பனை வாதத்திலிருந்து விஞ்ஞான சோசலிசத்திற்கு மாபெரும் மார்க்சிய ஆசான்களின் நூல்கள் வாயிலாக முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கான வழிமுறைகளை கண்டறிந்தார்கள்.
மார்க்ஸ் எங்கெல்ஸ் கருத்துகளை பரப்புவதற்காகவே முதல் முதலில் ரஷ்யாவில் தோன்றிய மார்க்சிய குழுவான தொழிலாளர் விடுதலை குழு தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்டது. அப்பொழுது மார்க்சியத்தை பரப்புவதற்கும் சமூக ஜனநாயக இயக்கம் பரவுவதற்கும் பிரதான தத்துவார்த்த தடங்கலாக நரோத்னிக் கருத்துக்கள் குறுக்கே நின்றன. மிகவும் விழிப்படைந்திருந்த வளர்ச்சி பெற்றிருந்த தொழிலாளர்கள் இடையேயும் புரட்சி மனோபாவம் படைத்த படிப்பாளிகள் இடையேயும் இக்கருத்துகள் அன்றைக்கு அதிகமாக வேரூன்றி இருந்தன.
ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர வளர தொழிலாளி வர்க்கமும் வளர்ந்தது இவ்வர்க்கம் புரட்சிகரமான போராட்டத்தை தொடுத்து முன்னணியில் நின்று போராடக்கூடிய திறமை படைத்த பலமான சக்தியாயிற்று. ஆனால் தொழிலாளி வர்க்கம்தான் மற்றவர்களுக்கு தலைமை தாங்கி முன்னோக்கி இழுத்துச் செல்லும் குணம் படித்தது என்பதை நரோதினிக்குகள் புரிந்து கொள்ளவில்லை. புரட்சிகர சக்தி தொழிலாளி வர்க்கம் அல்ல, அதற்கு பதில் விவசாய வர்க்கமே புரட்சிகர சக்தி என்ற சித்தாந்தத்தை நரோதினிக்குகள் தவறாக கடைபிடித்தனர். விவசாயிகளின் கலகங்களால் மட்டுமே ஜாராட்சியையும் நிலசுவாந்தர்களின் ஆட்சியில் வீழ்த்த முடியும் என்று அவர்கள் கூறினார்கள். தொழிலாளி வர்க்கத்தை பற்றி நரோதினிக்குகள் தெரிந்து கொள்ளவில்லை; அவ்வர்கத்தை பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
ஜார் அரசாங்கத்தை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்த அதற்காக விவசாயிகளை தட்டி எழுப்புவதற்கு நரோதினிக்குகள் மக்களிடம் சென்றார்கள். (ரஷ்ய மொழியில் "நரோத்- மக்கள், நரோதினிக்- மக்களிடம் செல்வது")
அவர்களுடைய போராட்ட வடிவம் விவசாயிகளிடம் எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. விவசாயிகளின் ஆதரவு இன்றி ஜாரை எதிர்த்து போராடுவது என்று தீர்மானித்து படுமோசமான தவறு செய்து கொண்டனர்.
நரோத் நயா வால்யா - மக்கள் விருப்பம் ஜார் அரசனைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ரகசிய ஸ்தாபனம். 1881 மார்ச் 01 ம் தேதி அன்று இரண்டாம் அலெக்சாண்டர் என்ற ஜார் மன்னனை வெடிகுண்டு வீசிக்கொள்வதில் நரோதிய வால்யா உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர் . தனிப்பட்ட நபர்களைக் கொல்வதனால் எதேச்சதிகாரத்தை வீழ்த்தவோ அல்லது நில உடைமையாளர் அதிகாரத்தை ஒழிக்கவும் முடியாது என்பதை புரிந்து கொள்ளவில்லை இவர்கள்.
ஜார் ஆட்சியை எதிர்த்து போர் புரிவதற்கு நரோதினங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை அதாவது தனிநபர்களை கொல்வது. தீவிரமான வீரர்கள் வீரதீர செயல்களை புரிவது என்றும் இந்த வீரர்களிடமிருந்து வீரதீர செயல்கள் எதிர்பார்த்து கொண்டு ஜன கும்பல்கள் கைகட்டி சும்மா ஒன்று செய்யாத இருப்பது என்று தவறான சித்தாந்தத்தின் மூலம் ஜாரின் எதேசதிகாரத்தை ஒழித்து விடுவதற்கான கொள்ளை வகுத்திருந்தார்கள். இந்த தவறான சித்தாந்தம் தனி சிறந்த தனி நபர்கள் தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள் என்றது. பாமர மக்களை ஜனகும்பல் என்று அருவருப்புடன் அழைத்ததோடு அந்த மக்கள் வீரர்களை கண்மூடித்தனமாக பின்பற்ற தெரியுமே ஒழிய வேறொன்றும் தெரியாது என்றது.
ஆகவே இந்த காரணத்தினால் நரோதினிக்குகள் விவசாயிகளிடமிருந்து பெருவாரியாக புரட்சி வேலைகளை செய்வதை நிறுத்திவிட்டனர் .
தொழிலாளி வர்க்கம் விவசாய வர்க்கம் போராட வேண்டிய களத்தை வளர்க்காமல் தடையாக இருந்தார்கள். புரட்சியில் தலைமை தாங்கி மற்றவர்களை அழைத்து செல்லும்படியான பணி தன்னை சேர்ந்தது என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்துகொள்வதை நரோதினிக்குகள் தடுத்தார்கள். தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சியான இயங்கும் படியான கட்சி உருவாக்குவதில் அவர்கள் தடங்கல் போட்டனர். ரஷ்யாவில் மார்க்சியம் பரவுவதை மிகவும் மூர்க்கதனமாக எதிர்த்தார்கள் தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வளர்வதில் முட்டுக்கட்டை போட்டனர்.
ஆகையால் நரோடிசத்தை எதிர்த்து ரஷ்யாவில் பிளக்கனோவும் பின்னர் லெனின் தத்துவார்த்த போர் நடத்தினார்கள்.
முதல் முதலில் பிளக்கனோதான் நரோதினிக்கள் கருத்துக்களை மார்க்சிய முறைப்படி விமர்சனம் செய்தார்.மார்க்சிய கருத்துகளை நிலை நாட்டுவதற்காக அபூர்வமான வாதங்களை பிளக்கனோவ் உருவாக்கினார்.
நரோதினிக் கருத்துகள் மீது குறி பார்த்து அம்புகளை எய்தும் போதே அவர்களின் தவறுகளை ஓங்கி அடித்து நிர்மூலம் ஆக்கினார் பிளக்கனோவ்.
நரோதினிக்கு களின் தவறான வாதங்கள் கீழ்கண்டன:-
1).ரஷ்யாவில் முதலாளித்துவம் தற்செயலானது இது வளர்ச்சி அடையாது ஆகவே பாட்டாளி வர்க்கம் வளராது.
2). புரட்சிக்கான முதன்மையான வர்க்கம் விவசாய வர்க்கம் தான் அந்த வர்க்கத்தை படிப்பாளிகள் தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று கருதினார்கள்.
3). சமூக விஞ்ஞானத்தை அறியாத இவர்கள் அரசியல் பொருளாதார வளர்ச்சி விதிகளை தெரிந்து கொண்டிருக்கவில்லை புரிந்து கொள்ளவும் இல்லை ஆகையால் பின் தங்கியவர்களாக இருந்தார்கள்.
4).வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களினால் உருவாக்கப்படவில்லை தனி சிறப்பு வாய்ந்த வீரர்களால் ஆக்கப்பட்டது என்றும் இந்த வீரர்களை வெகு ஜனங்களும் ஜன கும்பல்களும் பரந்துபட்ட மக்கள் வர்க்கங்கள் ஆகியவை அனைத்து பகுதியினரும் குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டும் என்று கூறினர்.
இதற்காக பிளாக்கனோவ் ஏராளமான மார்க்சிய நூல்களை எழுதினார். குறிப்பாக "வரலாற்றில் ஒருமைவாத வளர்ச்சி பற்றி" 1895 ல் வெளியிடப்பட்டது. இந்த நூலைப் பற்றி லெனின் கூறுவதாவது, "ரஷ்ய மார்க்சியவாதிகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப்படுத்த பயன்பட்டதாக" கூறுகிறார் .
ரஷ்யாவில் முதலாளித்துவம் வளர வேண்டுமா வளர கூடாதா என்று நரோத்னிக்குகள் கேள்வி எழுப்பினர். அதனை எதிர்த்து பிளக்கனோவ் எழுதியவை பல்வேறு ஆதாரப்பூர்வமான நிகழ்வுகளை முன்னிறுத்தி ரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பிடித்து நிறுத்தி கட்டி போடுவதல்ல புரட்சியாளர்கள் செய்ய வேண்டிய பணி என்று விளக்கினார்.
நரோதினிக்குகளுக்கு பதிலளிக்கிறார் பிளக்கனோவ்,"இவ்விதம் அவர்கள் செய்தாலும் சமூக வளர்ச்சி பாதையை தடுத்து திருப்பி போடு முடியாது".
ஆக
1). முதலாளித்துவ வளர்ச்சியில் படைக்கப்பட்ட மகத்தான புரட்சி சக்தியின் ஆதரவை அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவை பெறுவதும். அதன் வர்க்க உணர்வை வளர்ப்பதும் அதை ஒன்றுபடுத்தி ஸ்தாபன ரீதியாக உருவாக்குவதும், தன்னுடைய சொந்த தொழிலாளி வர்க்க கட்சியை உண்டாக்கிக் கொள்ள அதற்கு உதவி செய்வதுதான் புரட்சியாளர்களின் பணியாகும்.
2). ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கம் உருவானது இது "வரலாற்று பூர்வமான துரதிர்ஷ்டம்" என்று நரோதினிக்கு கருதினார்கள்.
மார்க்சிய போதனை சரியானது என்றும் அவை ரசியாவுக்கு பொருந்தும் என்பதை எடுத்துக் காட்டினார் பிளக்கனோவ். எண்ணிக்கையில் விவசாயி வர்க்கம் அதிகமாக இருந்தாலும் அதன் இடத்தில் பாட்டாளி வர்க்கம் மிகக் குறைவானவர்களாக -எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இழப்பதற்கு ஏதும் அற்ற அவர்கள் சமூகத்தின் முன்னேறிய பிரிவினர்களாக உற்பத்தி நடவடிக்கை ஈடுபடுவதால் ஸ்தாபன ரீதியாக ஒன்றுபட வல்லவர்களாகவும் மற்ற எல்லோரையும் விட மிகப் புரட்சிகரமான வர்க்கமாகவும் உள்ளனர்.
3). விவசாய வர்க்கத்தின் நிலை வேறானது.
விவசாய வர்க்கம் எண்ணிக்கையில் மிக அதிகமாக இருந்த போதும், மிகவும் பின்தங்கிய பொருளாதார அமைப்புடன் உற்பத்தி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இதற்கு எவ்விதமான மகத்தான எதிர்காலமும் இல்லை இருக்கவும் முடியாது. விவசாயிகள் ஏழை விவசாயிகளாகவும் அரைகுறை கிராம பாட்டாளிகளாகவும் பிளவு பட்டு சிதறி கிடப்பதனால் பாட்டாளிகள் போல் அவ்வளவு சுலபமாக ஸ்தாபன ரீதியாக ஒன்று படவில்லை. சிறிய நில சொந்தக்காரர்கள் அதில் இருப்பதனால் பாட்டாளிகள் போல் அவ்வளவு சுலபமாக தயாராகவும் அது புரட்சி இயக்கத்தில் சேருவதில்லை.
4). சமூக வளர்ச்சியில் வீரர்களும் தனி சிறப்பு வாய்ந்த நபர்களும் அவர்களுடைய கருத்துகளும்தான் பிரதான பங்கை செய்கின்றன; பொதுமக்கள் -ஜனகும்பல் வர்க்கங்கள் செய்கின்ற காரியங்கள் அற்ப சொற்பம் என்று நரோதினிக்குகள் கூறிய தவறான கருத்தை பிளக்கனோவ் உடைத்தெறிந்தார். நரோதினிக்குள் வாதம் உண்மைக்கு புறம்பான கற்பனையான கருத்து முதல் வாத- மாயவாதம் என்று அம்பலப்படுத்தினார்.
வரலாற்று பொருள் முதல் வாத அடிப்படையில் தனி சிறப்பு வாய்ந்த தனி நபர்களின் விருப்பங்கள் மூலம் கருத்துகள் மூலம் நீண்ட காலப்போக்கில் சமூக வளர்ச்சி நிர்ணயிக்கப்படுவதில்லை. சமூகம் உயிர் வாழ்வதில் காணப்படும் பொருளியல் நிலைமைகளின் வளர்ச்சியாலும் சமூக உயிர் வாழ்வதற்கு அவசியம் தேவைப்படும் பொருளியல் செல்வங்களை உற்பத்தி செய்யும் முறையில் ஏற்படுகின்ற மாறுதல்களாலும் பொருளியல் செல்வங்கள் உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் உயர்ந்த தகுதியையும் இடத்தையும் அடைவதற்காக வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள்தான் சமூகத்தில் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது என்று மார்க்சிய பொருள் முதல்வாத அடிப்படையில் பிளக்கனோவ் விளக்கினர்.
வரலாற்றைப் படைப்பது தனிநபர்களோ வீரர்கள் அல்ல! வரலாறு வீரர்களை உண்டாக்குகிறது. சமூக வளர்ச்சி நிலைமைகளையும் அந்த நிலைமைகளை இன்னும் நல்ல நிலைமைகளாக மாற்றுவதற்கான வழிகளையும் சரியாக புரிந்து கொள்வதில் எவ்வளவு தூரம் திறமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவு தூரம் தனி சிறப்பு வாய்ந்த தனி நபர்களால் வீரர்களால் சமூக வாழ்க்கையில் முக்கியமான பாத்திர வகிக்க முடியும்; தனி சிறப்பு வாய்ந்த தனி நபர்கள் -வீரர்கள் சமூக வளர்ச்சி நிலைமைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தாங்கள் தான் "வரலாற்று படைப்பவர்கள்" என்ற அகம்பாவமான எண்ணத்தில் மூழ்கி சமூகத்தின் வரலாற்று பூர்வமான தேவைகளுக்கு எதிராக போவார்களே ஆனால், பரிகாசிக்கத்தக்க பேர்வழிகளாக ஆக நேரிடும் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரைகளாக போவார்கள்.
இந்த ரகத்தை சேர்ந்தவர்கள் தான் நரோதினிக்குகள்.
பிளக்கனோவின் கட்டுரைகளும் அவர் தொடுத்த வாதங்களும் புரட்சி மனப்பான்மை கொண்ட படிப்பாளிகள் இடையே அவர்களுக்கு இருந்து செல்வாக்கை குழி தோண்டி புதைத்தன. ஆனாலும் நரோடிஸத்தைத் தத்துவ ரீதியாக அழிக்கும், ஆம் குழி தோண்டி புதைக்கும் வேலை இன்னும் பூர்த்தியாகவில்லை. அதற்கு வெகுகாலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. மார்க்சியத்தின் பரம விரோதியான நரோடிஸத்தை இறுதியாக உதை கொடுத்து விரட்ட வேண்டிய வேலை லெனினுக்கு விடப்பட்டது.(சற்று புரிதலுக்கா மட்டுமே முழுமையை அந்த நூல்களின் மூலம் வாசிக்க தோழர்களே....
பின்குறிப்பு :-
தொழிலாளர் விடுதலை குழுவினருக்கோ அந்தக் காலத்திலிருந்த வேறு பல மார்க்சிய குழுவினருக்கோ இன்னும் தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் நடைமுறையில் எந்த தொடர்பும் ஏற்படவில்லை. மார்க்சிய கருத்துகளும் சமூக ஜனநாயகத்தின் திட்டத்தின் சித்தாந்தங்களும் தோன்றி ரஷ்யாவில் காலூன்றி கொண்டிருந்த காலம் அது.
மேலும்
"முதலாளிகளையும் பாட்டாளிகளையும் விட்டால் புரட்சி சேர்க்கைகளுக்கோ அல்லது எதிர்க்கும் சேர்க்கைகளுக்கோ ஆதரவைப் பெறும்படியான சமூக சக்திகள் எதையும் நாம் காணவில்லை" என்று பிளக்கனோவ் கூறினார். இந்தத் தவறான கருத்துகள் தான் எதிர்காலத்தில் பிளக்கனோவ் மென்சுவிக் கருத்துக்களை வெளியிட்டதற்கு விதைகளாக இருந்தன.
எழுத உதவிய நூலகள்:- லெனின் எழுதிய
முதலாவது ஆங்கில தொகுப்பு நூலில் மூன்றாம் அத்தியாயம் மற்றும் மூன்றாம் ஆங்கில தொகுப்பு நூலின்
முதல் அத்தியாயம் மேலும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு ஆகியவற்றின் எழுத்தப்பட்டது. சுருக்கம் மட்டுமே நான்========இன்னும் பின்னர் தொடரும்
No comments:
Post a Comment