மார்க்சிய விரோதிகளையும் துரோகிகளையும் அறிவோமா!?

 இந்தியாவில் பொதுவுடமை இயக்கம் வளராமல்முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் என்ன?என்பதனை குறித்த பல ஆய்வுகள் உள்ளன. நான் அண்மையில் சந்தித்த நிகழ்வுகளின் அடிபடையில் இதனை தொகுக்க நினைக்கிறேன்.

மார்க்சியவாதிகளுக்கும் மார்க்சியத்தை மறுக்கும் விரோதிகளுக்கும் இடையே உள்ள சில போக்குகளைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்றால் விரோதியை பற்றி நாம் அறிவோம், ஆக இங்கே துரோகிகளை பற்றி மட்டுமே ஆய்வுசெய்ய போகிறோம்.

மார்க்சியத்தை மறுப்பவர்கள் இரு வேறு பிரிவினராக உள்ளனர் ஒரு பிரிவினர் மார்க்சியத்தை நேரடியாக தத்துவார்த்த ரீதியாக எதிர்ப்பவர்கள் அவர்கள் விரோதிகள் என்று நாம் எடுத்துக் கொள்வோம் இன்னொரு பிரிவினர் மார்க்சியவாதிகளாக இருந்து கொண்டே மார்க்சியத்தை மறுக்கும் பிரிவினர் இவர்களை துரோகிகள் ஆவர். விரோதிகளையும் துரோகிகளையும் புரிந்து கொண்டாலே மேலே செல்வது எளிதாக இருக்கும்.

முதற்கண் கட்சிக்குள் உள்ளவர்களை பற்றி ஆராய்வதும் அதனை முதன்மைபடுத்தி பேசுவது தான் இந்தப்பகுதி.

மார்க்சியத்தை மறுப்பவர்களை பற்றி தெளிவடைவடைந்தால் மட்டுமே அவர்களை விமர்ச்சிப்பது எளிதாக இருக்கும். மார்க்சிய தத்துவம் விடுதலைக்கான தத்துவம் ஆம் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம் அதனை எதிர்க்கும் விரோதிகள் எப்படிப்பட்டவர் என்று நான் சொல்லத் தேவையில்லை ஆனால் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டே மறுக்கும் துரோகிகளை பற்றி சொல்வதற்கு நிறையவே உள்ளன. ஏனென்றால் அவர்கள் மார்க்சியத்தின் பெயரிலேயே வாழ்ந்து கொண்டு; மார்க்சியத்தை எதிர்த்து அதற்கு துரோகமான முறையில் தனது அணிகளையும் தனது கட்சியையும் குழப்பம் வேளையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோத செயல்களில் ஈடுபடுவதும் துரோகமான முறையில் மார்க்சியத்தை குழப்பும் வேலை செய்யும் பொழுது இவர்களின் பணி விரோதிகளை விட அதிக பாதிப்பு எப்படியெல்லம் உள்ளது என்பதையும் இந்த துரோகிகளின் நிலைப்பாட்டை புரிந்துக் கொள்வதும் மார்க்சியத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் பணியாகும்.

ஆக துரோகிகளை தேடும் பொழுது அவர்கள் நேரடியாக தெரிந்துக் கொள்வது கடினமே அவர்களின் செயல்களே அவர்களின் உண்மையான முகத்தை காண்பிக்கிறது. ஆம் துரோகிகள் பல உருவில் உள்ளார்கள். அவர்கள் கட்சிக்குள் மார்க்சிய லெனினியத்தை மறுப்பதும். கட்சியை அதாவது அதற்கான செயல்பாட்டை மறுத்து இங்குள்ள முதலாளித்துவ கட்சிகளைப் போல் அதை மாற்றி அமைப்பது இதில் பெரிய இடதுசாரி கட்சிகள் தொடங்கி சிறிய குழுகள் வரை அடங்கும். இவர்களுக்குகிடையே உள்ள குறுங்குழுவாதம் என்பது தாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்றவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற நிலைப்பாடு மிக மோசமானது. ஏனென்றால் இவர்கள் அடிப்படையில் புரட்சிக்கான வழிமுறைகளை உள் வாங்காமலே உள்ள பொழுது. எப்படி இவர்கள் பேசுவது சரியாக இருக்கும்? என்பது என்னுடைய கேள்வியாக உள்ளது.

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் பணியையும் செய்யாமல் அணிகளுக்கு நடைமுறையை தத்துவமான மார்க்சியத்தை போதித்து ஒரு புரட்சிக்கான கட்சியாக வளர்தெடுக்கமுற்படாத இவர்கள்! மார்க்சியத்தை மார்க்சியம் அல்லாத போக்குகளில் ஒருங்கிணைப்பதலில் தெளிவாக உள்ளார்கள். ஆக அணிகளின் போதாமையை பயன்படுத்திக் கொண்டு இவர்கள் தங்கள் தவறான கருத்துகளை அணிகளின் மண்டையில் ஏற்றுவது போலவே உழைக்கும் மக்களையும் ஏமாற்றுகிறார்கள். இதனைப் பற்றி ஒரு புரிதலுக்கான கட்டுரை தான் இவை தொடர்ந்து எழுத பேச முயலுவோம் தோழர்களே.

சிலபோக்குகளை பார்ப்போம்

1).மார்க்சியத்தையே மறுப்போர் -மார்க்ஸ் முதல் மாவோ வரையான ஆசான்களையே ஏற்காதவர்கள்.

2).மார்க்சிய அடிப்படையான, பாட்டாளி வர்க்க புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஏற்காதவர்கள்.

3). புரட்சிகான மார்க்சிய லெனினிய போதனையை மறுத்தல்.

4). ஒன்றுபட்ட புரட்சிகான கட்சியை கட்டுவதை மறுத்தல்

இதனை பற்றி பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும் ஆக நேரடியாக கட்டுரைக்கு செல்வோம்.

மார்க்ஸ் என்ற மாமேதை மறைந்து 100 ஆண்டு கடந்தும் அவரது போதனைகளும் அவருடைய வழிகாட்டுதலும் இன்றைய சமூகத்தின் அவசியமான படிப்பினைகளாக உள்ளன. முதலாளி வர்க்க சிந்தனையாளர்களும் கொள்கை எதிரிகளான மதவாதிகளும் மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள் அது வர்க்க அடிபடையில் அவர்களின் பணியாக வர்க்க சார்பாக உள்ளது.ஆனால் சமூக மாற்றத்தை விளையும் மார்க்சிய முகாமுக்கு உள்ளே உள்ள ஆம் கம்யூனிஸ்டா உள்ளவர்களே மார்க்சியத்திற்கு புதுப்புது விளக்கம் கொடுக்க முனைவது, சர்வதேச அளவில் இருந்து தமிழகம் வரை இவை தொடர்கதையாகதான் உள்ளது.

பல்வேறு நாடுகள் சோசியலிச புரட்சி நடத்தி முடித்த படிப்பினையானது கட்சி அணிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பரப்ப வேண்டிய கட்டாயத்தில்உள்ளது. இங்குள்ள நமது தோழர்கள் மீது விமர்சனம் வைப்பதன் நோக்கம் ஒரு சரியான புரட்சிக்கான கட்சி வேண்டும் என்பதும் அவை மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை அடிபடையிலானவையாகவும் இருக்க வேண்டும் என்பதே.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு முன்னோடிகளில் எழுத்துக்களையும் அவர்களுடைய ஆய்வுகளையும் கவனத்தில் கொண்டு தான் இதனை எழுதுகிறேன். நானும் சில கட்சியில் இயங்கியதால் கட்சியினுடைய நிலைப்பாடு அதன் செயல்பாடு எல்லாம் தெரிந்து தான் எழுதுகிறேன் நான் கற்பனையில் எழுதவில்லை. நடைமுறை அனுபவத்திலிருந்தே எழுதுகிறேன்.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு காணும் பொழுது அவர்கள் புரட்சி சாதிப்பதற்காக என்னென்ன செய்தார்கள் என்பதை அவர்களின் வரலாற்று ஆவணங்கள் நமக்கு காண்பிக்கிறது.

ஆனால் நமது கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியதில் இருந்து அதற்கான தனித்தனியான நிலைப்பாடுகள் இருந்தாலும் அவை மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களில் இருந்துதான் செயல்பட்டார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் மார்க்சிய ஆசான்களின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் பல்வேறு விதமான போக்குகள் உள்ளவர்களை நாம் காணலாம்.

அதனை தனித்தனியாக இப்பொழுது முழுமையாக எழுதாவிட்டாலும் சிலவற்றை கீழே கோடிட்டுகாட்டியுள்ளேன். பொதுவாக மார்க்சிய ஆசான்கள் என்பவர்கள் மார்க்ஸ் முதல் மாவோ வரை உள்ளவர்கள் தானே? அப்படி எனும் பொழுது மார்க்ஸ் மார்க்சியம் என்ற தத்துவத்தை படைத்தளித்தார் என்றால் அந்த மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு ஆசான்களின் வழிமுறை உள்ளது. அவர்கள் தன்னுடைய நாட்டின் நிலைமைக்கு ஏற்ப மார்க்சியத்தை பிரயோகித்து ஒரு புரட்சிகர நிலைக்கு கொண்டு வந்தார்கள் அந்தந்தநாட்டின் சூழலுகேற்ப. ஆகவே மார்க்சியத்தை வளர்த்தெடுத்தவர்களை மார்க்சிய ஆசான்கள் என்று நாம் கூறுகிறோம். இதில் வேறுபட்ட கருத்து இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன்.

அப்படி எனும் பொழுது மார்க்சிய ஆசான்களை ஏற்றுக் கொள்ளாதவர்களின் நிலைப்பாடு வெவ்வேறாக இருபதற்கு காரணம் அவர்கள் மார்க்சியத்தின் முழுமையை உள்வாங்கவில்லை என்பதுதானே? ஆக ஒரு முழுமையான அறிவியல் பூர்வமான தத்துவத்தை கிரகிக்காதவர்கள் மார்க்சியத்தின் முழுமையை உள்வாங்காதவர்கள் அல்லது கட்சியும் தன்னை எப்படி மார்க்சிய வழியில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான் நம்முள் உள்ள கேள்வியாக உள்ளது.

ஆகவே மார்க்சிய லெனியம் என்பது வெறும் தத்துவம் மட்டுமல்லாத நடைமுறைக்கான வழிகாட்டியும் என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும் தோழர்களே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமை வழிகாட்டு முறை அன்றிலிருந்து இன்று வரை உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். அதற்கு முக்கிய காரணம் நமது சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூக அமைப்பின் சித்தாந்தங்களை உள்வாங்கி நடைமுறைப்படுத்துவது தான். மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்குகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதால் இந்த குறைபாடு. அதனால் மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்குவதோடு மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்து அணிகளுக்கும் அமைப்புகளையும் வலுப்படுத்துவது வேண்டும். ஒரு வலிமை வாய்ந்த நாட்டில் வலிமையான எதிரிகள் உள்ள இடத்தில் தனிமைப்பட்ட எந்த போராட்டமும் நடைமுறையோ செயல்படுத்த முடியாது, என்பது வரலாற்று உண்மைகள். இங்குள்ள ஒவ்வொரு இடதுசாரிகளும் புரிந்துக் கொள்ள வேண்டியதே.

ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு கட்சியும் தான் மட்டுமே புரட்சிக்கானவர் தான் மட்டுமே புரட்சி சாதிக்க முடியும் என்பது வீண் கற்பனையே ...

மாவோ புரட்சி நடத்தி முடித்த சீனாவில் தன் கட்சியில் ஏற்பட்டுள்ள அகம்பாவத்தை எதிர்த்து எழுதியவைதான், ஒரு கம்யூனிஸ்டானவர் மக்களையும், அவரது அமைப்பிலுள்ள தோழர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள், மக்களையும் தனது அமைப்பைச் சேர்ந்த தோழர்களையும் சமமாக மதிப்பதில்லை. மாறாக மக்களைக் காட்டிலும் தன்னை சிறந்தவராகக் கருதி கர்வம் கொள்கிறார்கள். மக்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை மறுக்கவோ, வெறுக்கவோ செய்கிறார்கள்.

மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர்களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.

சில மார்க்சிய நூல்களை படித்தவுடன், தன்னடக்கம் உள்ளவர்களாக மாறுவதற்குப் பதிலாக அகந்தை கொண்டவர்களாக சிலர் மாறுகிறார்கள். தங்களது அறிவு அரைகுறையானது என்பதை உணராமல், தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணராமல், அதாவது கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை உணராமல், தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டு மற்றவர்களை மதிக்காமல் மற்றவர்களை ஒதுக்குகிறார்கள். இத்தகைய பண்பு கொண்டவர்கள் குறுங்குழுவாதிகளே. மார்க்சியத்தால் வகைப்படுத்தப்படும் மார்க்சியவாதிகள் இல்லை.

மார்க்சியத்தை மறுக்கும் பக்கத்தை பேசதான் நமது ஆசான்களின் போதனைகளைமுழுமையாக உள்வாங்காமைதான் இந்தப்போக்கு என்பேன். ஆக இதிலிருந்து விடுபட நாம் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை கற்றறிவோம்.

மார்க்சியம் என்பது ஒரு ஒன்றிணைந்த உலகக் கண்ணோட்டமாகும்-பிளக்னோவ் வரலாற்று பொருள்முதல்வாதமும் இதோடு நெருக்கமாக தொடர்புடையதுமான அரசியல் பொருளாதாரத்தின் கடமைகள், முறை, வகைகள் மற்றும் சமுதாயத்தின், குறிப்பாக முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய கருத்துகளின் தொகுப்பும் அடிப்படையில் அநேகமாக முற்றிலும் மார்கஸ், எங்கெல்சின் சாதனையாகும். கார்ல்மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோசலிசத்தின் பிதாமகன்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சிவிதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம்புரிந்து, முதலாளித்து வத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது தத்துவம் நடைமுறையாவதைக் காண கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய வழிகாட்டுதல் தத்துவம் மார்க்சியம் என அழைக்கப்படுகின்றது.

மார்க்சிய லெனினியம் என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தின் உலகக் கண்ணோட்டமாகும்-ஸ்டாலின்

லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய கால கட்டத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சியவாதியாவார். வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தை அறிந்து சோசலிச புரட்சிக்கு வழிகோலினார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சியத்தைப் உபயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார். லெனின் அவர்கள் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தி மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கட மையாக இருந்தது. மார்க்சியத்தை நடைமுறையாக்க திட்டம் போர்தந்திரம் அதற்கான புரட்சிகர கட்சியினை ஸ்தாபித்த்துடன் தனி ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழலை அறிந்து புரட்சியை நடத்தி சோசலிசத்தை நிர்மானிக்க முயற்சித்தார் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை ஆக்கினார்.

*மார்க்சிய லெனினியமும் ஸ்டாலின் பங்களிப்பும்-மாவோ* ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார். ஹிட்லரின் பாசிச ஆக்கிரமிப்பின் குரூரத்தை, எதிர்த்து, ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டிவளர்தது, அதைப் பாதுகாப்பதில் பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற்றியும்,உலக பாசிசத்தை நிர்மூலமாக்குவதில்அது வகித்த முக்கிய பாத்திரமும் சோசலிசமும் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணைசெய்ததுமாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது, சோசலிசம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது.இந்த தீர்க்கமான மாற்றம், 1949ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத்தில் நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோசலிசத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியதுடன், மேலும் தீர்க்கமானதாக மாறியது. இவ்வாறு உலகப் புரட்சியின் வெற்றிக்கு மேலும் சாதகமான ஒரு புத்தம் புதிய சூழ்நிலை உருவாகியது.

மாவோ கூறுகிறார் சோசலிசத்தின் எதிரிகள் ஸ்டாலினை மற்றும் எதிர்க்கவில்லை மார்க்சிய மூலவர்களை திரட்டி கொடுத்த மார்க்சியத்தையே கேள்வி குறியாக்கி தாங்கள் ஏகாதிபத்திய தாசர்களாக இழி நிலைக்கு சென்று விடுகிறார்கள் என்பார். ஆக ஸ்டாலின் அவர்களின் பங்களிப்பு உலக சோசலிச அமைபுக்கு அளபரிய பணியாகும் என்பார் மாவோ..

மார்க்சியலெனினிய மாவோ சிந்தனை -சண்முகதாசன்

தோழர் மாசேதுங் சீன புரட்சியின் ஸ்தூலமான நிலைமைகளுக்கு ஏற்ப மார்க்சியம் - லெனினியத்தைப் பிரயோகித்தார்.வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத்தின் வளைவுசுளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியதன் மூலமும், தோழர் மாவோ அவர்கள் மார்க்சியம் - லெனினியத்தின் பொது உண்மைகளை சீனாவின் ஸ்தூலமான புரட்சி நிலைமைக்கு இனங்கப் பிரயோகிப்பதில் தமது ஈடு இணையற்ற திறமையைக் காட்டினார்.
தோழர் மாவோ அவர்கள் சீன புரட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியது மாத்திரமல்ல, தமது காலத்தில் லெனின் அவர்கள் தீர்வு காணாது விட்டுச்சென்ற, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவிவிட்ட பின் எழுந்த பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கண்டார். (கலாச்சார புரட்சியின் ஊடாக).தவறற்ற தீர்க்க தரிசனத்துடன், தோழர் மாவோ அவர்கள், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் வர்க்கங்கள் தொடர்ந்து இருக்கும், ஆகவே, சோசலிசப் புரட்சியின் பின்னர்கூட வர்க்கப் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.


நமமிடையே உள்ள இடதுசாரிகளின் நிலை யானையை பார்த்த கண்ணில்லாதவர்கள் நிலை போல் உள்ளது. மார்க்சியத்தின் இயங்கியலையும் அதன் வளர்ச்சி நிலையில் புரிந்துக் கொள்ளாதவர்களாக உள்ளனர்களே இவர்கள்! !!
இவர்கள் மார்க்சியவாதியாக இருந்தாலும் மார்க்சியத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளாமல் இருபதற்கான காரணம்! அவர்கள் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை சரியாக போதிக்காமையே இவர்களின் குறைபாட்டிற்கு காரணம் என்பேன்.
சற்று இதனை பற்றி புரிந்துக் கொள்ள முயலுவோம்.

விஞ்ஞான சோசலிச சமூகத்தின்‌ அரசியல்‌, பொருளாதாரம்‌ ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும்‌ சோசலிசப்‌ புரட்சி நடைபெறவிருக்கும்‌ சாத்தியமுள்ள நாடுகள்‌ பற்றிய கருதுகோள்‌களையும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்சும்‌ விளக்கினர்‌.

பல்வேறுவகைப்பட்ட சோசலிசங்கள்‌ பற்றிய, கருத்துகள்‌ நிலவிய-சூழலில்‌, பாட்டாளி வர்க்க சோசலிசம்‌ பற்றிய கருத்தை நிறுவி, சோசலிசம்‌ என்பது :பொதுவுடைமைக்கு மாறிச்‌செல்லும்‌ இடைக்கட்டம்‌ என்றும்‌ பொதுவுடைமையின்‌ முதல்‌கட்டம்‌ என்றும்‌ விளக்கியதே மார்க்சின்‌ பங்களிப்பில்‌ முதன்மை வாய்ந்ததாகும்‌. 1845 முதற்‌ கொண்டு வெளிவந்த மார்க்சியப்‌ படைப்புகளில்‌ காணக்‌கிடைக்கும்‌ குறிப்புகளை வைத்து பின்வருமாறு தொகுக்கலாம்‌.

சோசலிசக்‌ கோட்பாட்டு உருவாக்கம்‌

1. பொருளாதாரம்

அ) உற்பத்தி சாதனங்களின்‌ சமூகவுடைமை, இவற்‌றின்‌ மீதான தனியுடைமையை ஒழித்தல்‌.மூலதன இயல்பிலிருந்து இவற்றை விடுவித்தல்‌.

ஆ) திறமைக்கு ஏற்ப உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற‌ ஊதியம்‌. இதனால்‌ சமத்துவமற்ற நிலை ஒழிக்கப்பட்டு சமத்துவ நிலை தொடரும்

2. அரசியல்‌

அ) வர்க்கங்கள்‌ நீடிப்பதால்‌ அரசு தேவைப்‌படுகிறது. இதன்‌ வடிவம்‌ பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்‌.

ஆ) புரட்சிக்குப்பின்‌ அரசை ஒழிக்க வேண்டும்‌ என்பது அராஜக அபத்தம்‌. முதலாளி வர்க்கஎதிரிகளை அமுக்கி வைக்க பாட்டாளி வர்க்க அரசு இல்லையெனில்‌ மொத்த வெற்றியுமேதோல்வியில்‌ போய்‌ முடியும்‌.

3. கருதுகோள்‌

இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும்‌ முன்னேறிய நாடுகளில்‌--குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி , பிரான்சு ஆகியவற்றில்‌--ஏற்படும்‌. முன்னேறிய நாடுகள்‌ அனைத்தும்‌ ஒரே நேரத்தில்‌ தாக்கப்படலாம்‌. ஒரு தனி நாட்டில்‌ சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை. - மார்க்சியக்‌ கோட்பாடு உருவாக்கமும்‌ கருதுகோளும்‌ உதித்த சூழல்‌ முக்கியமானது. முதலாளிகட்கு இடையில்‌ சுதந்திரமான போட்டி இருந்த காலம்‌.

19ஆம்‌ நூற்றாண்டு இறுதி முதல்‌ உள்ள இந்த நிலைகளை ஆராய்ந்து இந்த சகாப்தத்திலும்‌ "சோசலிசப்புரட்சி சாத்தியம்‌ என லெனின்‌ கருதுககோளை உருவாக்கினார்‌. போட்டி என்பது இப்போது முதிலாளிகட்கு இடையில்‌ இல்லாமல்‌ ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும்‌ உலகநாடுகள்‌ உலகப்பொருளாதாரச்‌ சங்கிலியின்‌ கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில்‌ உள்ளன. என்றும்‌ லெனின்‌ முடிவுகண்டார்‌. இந்தப்‌ பொதுவான ” அரசியல்‌ பொருளாதார சூழலில்‌ சோசலிசப்‌ புரட்சியின்‌ சாத்தியம்‌ குறித்து லெனின்‌ தம்‌ கருதுகோள்களை முன்‌ வைத்தார்‌.

அவை:1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான்‌ சோசலிசப்புரட்சி ஏற்படும்‌ என்பதில்லை. பின்னடைந்த நாடுகவிலும்‌-பலவீனமான கண்ணியைப்‌ பொறுத்துஏற்படலாம்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ச்சி அடையாமல்‌ முதலாளி- தொழிலாளி என்று சமூதசக்திகள்‌ (துல்லியமாகஅமையாமல்‌இருப்பினும்‌) புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப்‌ புரட்சியின்‌ ஊடே சோசலிசப்‌ புரட்சி சாத்தியமாகும்‌.

2. வெவ்வேறு நாட்டிலும்‌ வெவ்வேறு காலங்களிலும்‌ சோசலிசப்புரட்சி சாத்தியம்‌. உலகில்‌ முழுமையும்‌ அல்லது ஒரு சில நாடுகளில்‌ முழுமையும்ஒரே நேரத்தில்‌ சோசலிசப்‌ புரட்சி நடந்தாக வேண்டியதில்லை. தனி ஒரு நாட்டிலும்‌ சோசலிசப்‌ புரட்சி சாத்தியம்‌. இந்த மார்க்சிய -லெனினியக்‌ கருதுகோள்கள்‌, இதற்கு முந்தைய மார்க்சியக்‌ கருதுகோள்களை நிராகரித்து அல்ல முன்னேறிய தன்மையுடையது... இந்த நிராகரிப்பின்றி வளர்ச்சி இல்லை. சோசலிசம்‌ குறித்த மார்க்சியக்‌ கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளியஅறிவாளிகள்‌முன்னிலையில்‌, மார்க்சியக்‌ கருதுகோள்‌களை வளர்சியடைந்த விஞ்ஞான சோசலிசக்‌ கோட்பாடாக லெனின்‌ உயர்த்திப்பிடித்தார்‌.இவைஏகாதிபத்தியமும் உலக‌ சோசலிசப்‌ புரட்சிகளும்‌ கொண்ட லெனினிய சகாப்தத்தின்‌ கருதுகோள்களாகும்‌.(சாரம் முனைவர் கோ.கேசவனின் சோசலிச வீழ்ச்சி முன்னுரையிலிருந்து).

இந்த மார்க்சிய லெனினியக்‌ கருதுகோள்கள்‌ இருபதாம்‌ நூற்றாண்டில்‌ நிரூபிக்கப்பட்டு, அரசியல்‌ யதார்த்தமாயின . சோசலிசத்தை வரலாற்றுப்பிழை என நிரூபிக்க முயன்‌ற முதலாளிய அறிவாளிகள்‌ , மீண்டும்‌ ஒருமுறை தோற்றுப்‌ போயினர்‌. ரசியா, சீன, கிழக்கு ஐரோப்பிய நாடுகள்‌ இந்த வரையறையின்படி சோசலிச நாடுகளாயின இன்றைக்கும்‌ உலகம்‌ லெனின வரையறையில்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ இயங்குவதால்‌ உலகில்‌ சோசலிசப்‌ புரட்சிகள்‌ சாத்தியம்‌ என்பதைக்‌ கோட்பாட்டு அளவில்‌ மறுக்க இயலாது...

ஆக மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ளாத மார்க்சியவாதிகள் எப்படி மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் நீங்களே சிந்தியுங்கள் தோழர்களே!?!

தன் முன்னோடிகள் தன் கட்சி கூறியவற்றை மட்டுமே மார்க்சியமாக நினைத்து செயல்படுகின்றனர். மார்க்சியம் ரசிய புரட்சியின் ஊடாக லெனினியமாகவும் சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாகவும் வளர்ச்சியுற்றதை புரிந்துக் கொள்ளாதவர் எப்படி மார்க்சிய இயக்கவியலை புரிந்துக் கொள்வர்?

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907 இடைப்பட்டகட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியாடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது

மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்துதாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின் இப்போக்கு. இன்னொன்று மார்க்சியத்தைமறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சியபோதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன் என்று மார்க்சியத்தை குழப்புதல்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக்கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின்பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமை களுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற கோசத்தின் அடிப்படையில் திராவிட – தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.

இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின, தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பு கைவிட்டதை இப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்க்குறியது.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாதஅரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர்.

இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னதுபோல் மார்க்சியம் என்பதே பொதுத் தன்மையைக் குறிப்பானதன்மையுடன் இணைப்பதாகவும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர, குறிப்பான தன்மைகளுக்குமுதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது.

ஆனால் இங்குள்ள சிலர் இதுபோன்ற பொதுத்தன்மைகளை அதாவது பொது உண்மைகளை புறக்கணித்துவிடுகின்றனர். அதன் மூலம் பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் பொருத்திப்பார்த்து விஞ்ஞானப்பூர்வமான முடிவிற்கு வராமல் அகவயமான முடிவிற்குச் செல்கின்றனர்.

நம்மிடையே உள்ள புரட்சி பேசும் சிலரின் நிலைபாட்டை விமர்சிப்போம்

இங்குள்ள பல்வேறு இடதுசாரி என்பவர்களும் ஏன் புரட்சி பேசுபவர்களும் சோசலிசப் புரட்சிக்கு எவ்வித தயாரிப்பும் செய்யாமல் தள்ளிப்போடுவதே இவர்களின் பணியாக உள்ளது. ஏகாதிபத்தியம் உருவாக்கி உள்ள புரட்சிக்கு பதிலாக பல்வேறு தந்திரங்கள் ஒன்றினைந்த போராட்டத்தை சீர்குழைத்தல் சீர்‌திருத்தவாதத்துக்கு ஆட்படுத்துவதும்‌ உலக முதலாளியத்தின்‌ தந்திரங்களாக இருக்கும்‌. இன்றைய காலத்தில்‌ புரட்சிகர உணர்வின்‌ செயல்பாட்டின்‌ பேரூக்கம்‌--லெனின்‌ காலத்தைவிடபன்மடங்கு கூடுதலாகத்‌ தேவைப்படுவதையே: இந்த அளவுச்‌ சேர்க்கைகள்‌ வலியுறுத்தி நிற்கின்றன.

இங்கே கட்சியாக இல்லாதவர்களே யுத்த தந்திர முழக்கங்களையும் ஆனைகளை முன் வைத்து செயல்படுவதும் யாரின் தேவைக்கு மக்களை ஏய்கதானே செயலற்ற முழக்கங்களை வைப்பதன் நோக்கம் எதற்கு?

உதாரணமாக “மோடியை தூக்கியெறிவோம்” என்ற முழக்கம் வைத்தவர்களிடம் கேட்கிறேன், மோடியை தூக்கி எறிய என்ன வழிமுறையை முன்வைத்துள்ளீர்? பாராளுமன்றம் மூலமா? அல்லது புரட்சியின் மூலமா? இந்த இரண்டு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை ஏனெனில் பாராளுமன்றம் மூலம் வீழ்த்த உங்களிடம் எந்த வழியும் இல்லை அடுத்து புரட்சி மூலம் வீழ்த்த எவ்வித பணியையும் செய்யாமல் எப்படி சாதிப்பீர்? இதற்கான பதில் உள்ளதா உங்களிடம்! முதலில் அதற்கான பணியில் இறங்குங்கள் பின்னர் மற்றவை.புரட்சிக்கு முதலில் தேவை புரட்சிகர கட்சி அதனை பற்றி சிந்திக்காத குறுங்குழுவாதிகளாகி போன நீங்கள் என்ன செய்துக் கொண்டுள்ளீர் ? எதற்கு இந்த பணியை செய்துக் கொண்டுள்ளீர்கள் பரிசீலித்ததுண்டா? தங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள நமது ஆசான் ஸ்டாலினிடம் செல்வோம். அவர் மிக சிறப்பான வழி கட்டுதலை கொடுத்துள்ளார்.

தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” -ஸ்டாலின்

சுரங்கத் தொழிற்சாலையில் நடைபெற்ற சதிச் செயல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” என்பதை வலியுறுத்துகிறார். “சுயவிமர்சனம் இல்லாமல் கட்சி முன்னேற முடியாது; நமது இழிகுணங்களை வெளிப்படுத்த முடியாது; நமது குறைகளைக் களைய முடியாது – நம்மிடம் குறைகள் நிறையவே உள்ளன” என்கிறார். மேலும், சுயவிமர்சனம் இருந்தால்தான் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகவும் முழுமையாகவும் சமாளிக்க கட்சியால் இயலும்” என்கிறார்.

புரட்சி நடந்து முடிந்த ரஷ்யாவிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில் ? கலைப்புவாதிகள், அராஜகவாதிகள், திரிபுவாதிகள், சீர்குலைவுவாதிகள் உருவாகுவதற்கான சாதகமான புறநிலைமையும், அகநிலைமையும் இங்கு பிரகாசமாக இருக்கின்றன.

‘மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடி படாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள் என இந்தப் பட்டியல் இன்னமும் நீளும்.

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பட்டியலில் நம் கண் முன்னே இருக்கும் ‘மதிப்புமிக்க தோழர்’களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ’தோழர்களிடம்’ இருந்துதான் சதிகாரர்களும், சீர்குலைவுவாதிகளும், கலைப்புவாதிகளும் ‘திடீரென’ வெளிப்பட்டிருக்கின்றனர். இன்னும் பண்பு மாற்றமெடுத்து வெளிப்படாத நிலையிலுள்ள ‘தோழர்களும்’ இருக்கின்றனர்.

விமர்சன, சுயவிமர்சனத்தை விட்டொழிப்பது, வர்க்கப் பார்வையை விடுத்து புற உலகின் எதார்த்தத்தோடு கரைந்து விடுவது, சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தவறுவது ஆகியவைதான் தோழர்களாக இருக்கும் நாம் மேற்கண்ட ‘தோழர்களாக’ சரிந்துபோகும் நிகழ்ச்சிப் போக்கின் துவக்கப் புள்ளி!

இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்கமுடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள்தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பினர்களுக்கான மற்றும் கட்சி ஊழியர்களுக்கான தனிப்பட்ட அணுகுமுறை இவர்களிடம் இல்லை.

மேலும் தனிப்பட்ட அணுகுமுறை இல்லாத காரணத்தால் கட்சி உறுப்பினர்களையும், கட்சி ஊழியர்களையும் மதிப்பிடுவதில் வழக்கமாக அவர்கள் வெறும் தற்செயலான வழிமுறைகளில் செயல்படுகிறார்கள். ஒன்று, அவர்களை எந்த ஒரு அளவுகோலும் இன்றி ஒட்டுமொத்தமாக பாராட்டுவது அல்லது அவர்களை ஒட்டுமொத்தமாகவும், எந்த அளவுகோலும் இன்றி முழுக்கமுழுக்கப் பழி கூறுவது, கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான உறுப்பினர்களை வெளியேற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். இத்தகைய தலைவர்கள் பொதுவாக அலகுகளைப் பற்றி கவலைப்படாமல், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது கதியைப் பற்றி கவலைப்படாமல் பத்தாயிரக்கணக்கானவர்களைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை ஒரு ‘வெறும் அற்பம்’ எனக்கருதி, நமது கட்சியில் இருபது இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஸ்டாலின் மார்க்சிய லெனினி கண்ணோட்டதிலிருந்து பங்காற்றினார். ஆனால் இங்கு முதலாளித்துவ கட்சியின் பண்பான தனிநபர்வாதமும் தன்நபர் துதிபாடலும் உள்ள பொழுது எப்படி விமர்சனம் சுயவிமர்சனம் எதிர்பார்க்க முடியும்?.

பல்வேறு நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் போல் இடதுசாரி கட்சிகளும் ஆட்சிக்கு வந்துள்ளன. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் இவை பற்றிய மார்க்சிய ஆசான்கள் வழியில் புரிந்துக் கொள்வதோடு, வலதுசாரி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாவதும் நடந்தாலும் அவை உலக அளவிலான மாற்றை முன் வைக்க அல்லது பிற நாட்டு புரட்சிகர சக்திகளுக்கு முன் உதாரணமாக இல்லை அதற்கான பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதே கண்முன் காணகிடைக்கிறது.

அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சீனா, ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாட்டு நலன்களை மையமாக வைத்து வெளிப்படையான முதலாளித்துவ அமைப்பாகதான் செயல்படுகின்றன.

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளது அவை என்ன செய்துக் கொண்டுள்ளது?. சீனஅரசு, சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லிக் கொள்கிறது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய அரசியல் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால்விடும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இவை எவ்வகையான பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி அங்கு ஒரு சிலரின் கையில் உடைமைகள் குவிந்துள்ளது தனி உடைமை இல்லையா? இப்படியாக சீனா கம்யூனிச கட்சி யாரின் தலைமையில் யாரின் தேவைக்காக பாடுபடுகிறது என்பதனை புரிந்துக் கொண்டு தெளிவடைய வேண்டும் நாம்.

உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிச நாடும் கடைப்பிடிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத, தன் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச உறவுகளின் மீது மட்டுமே சீன அரசு அக்கறை காட்டுகிறது ஆக அவை பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து நலுவி விட்டதென்றால் அவை பற்றி விமர்சினங்கள் பின் பார்ப்போம்.

இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டும் அல்லது ஆதரவு அளிக்கும் சர்வதேச சோசலிச முகாம் எதுவும் இல்லாத நிலை உள்ளது.

நான்காவது அகிலம் முதலான பெயர்களில் செயல்படும் பல்வேறு டிராட்ஸ்கிய குழுக்கள் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான கோட்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன இவை மார்க்சியத்தை குலைக்கும் வேலையை செய்துக் கொண்டுள்ளது அப்படி என்னும் பொழுது இதன் பங்களிப்பு என்பது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அல்ல ஏகாதியபத்திய உலகமயம் மற்றும் விரிவாக பின் பார்ப்போம்.

நேபாள மாவோயிஸ்டு கட்சி சர்வதேச அகிலம் ஒன்றை துவங்குவதற்கான முனைப்புடன் உலகின் பல்வேறு புரட்சிகரக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி எடுத்தது. ஆனால் அக்கட்சியின் உள்முரண்பாடுகளாலும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தாக வேண்டிய நிலையாலும் அப்பணியானது அடுத்த கட்டத்திற்கு நகராமல் தேக்க நிலையை அடைந்து செயலிழந்து விட்டது.

மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது என்றால் மிகையாகாது.இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது குறுங்குழுவாதமும் அதனை பற்றியும் சற்று அறிவோம்.குறுங்குழுவாதம்

அமைப்பிற்குள் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை மட்டுமே அங்கீகரிப்பார், தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருப்பார். அதன் காரணமாக இவர் எப்போதும் அமைப்பிற்குள் ஒற்றுமைக்கு பாடுபட மாட்டார். தனது கருத்துக்களோடு முரண்படுபவர்களை விரட்டியடிப்பதன் மூலம் அமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்துவார். இத்தகைய தனிவுடமை முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பிற்குள் செயல்படுபவர்களையே குறுங்குழுவாதி என்கிறோம்.

ஒரு கம்யூனிஸ்டானவர் மக்களையும், அவரது அமைப்பிலுள்ள தோழர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள், மக்களையும் தனது அமைப்பைச் சேர்ந்த தோழர்களையும் சமமாக மதிப்பதில்லை. மாறாக மக்களைக் காட்டிலும் தன்னை சிறந்தவராகக் கருதி கர்வம் கொள்கிறார்கள். மக்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை மறுக்கவோ, வெறுக்கவோ செய்கிறார்கள்.

மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர்களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.

சில மார்க்சிய நூல்களை படித்தவுடன், தன்னடக்கம் உள்ளவர்களாக மாறுவதற்குப் பதிலாக அகந்தை கொண்டவர்களாக சிலர் மாறுகிறார்கள். தங்களது அறிவு அரைகுறையானது என்பதை உணராமல், தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணராமல், அதாவது கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை உணராமல், தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டு மற்றவர்களை மதிக்காமல் மற்றவர்களை ஒதுக்கு கிறார்கள். இத்தகைய பண்பு கொண்டவர்கள் குறுங்குழுவாதிகளே. மார்க்சியத்தால் வகைப்படுத்தப்படும் மார்க்சியவாதிகள் இல்லை.

கம்யூனிஸ்டு கட்சி சாராத மக்களோடு ஒப்பிடுகையில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மிகவும் சிறுபாண்மை யினர்தான். நூறுகோடி மக்கள் இருக்கும் நாட்டில், ஒருகோடி பேர் கம்யூனிஸ்டு உறுப்பினர்களாக இருந்தாலும் மொத்த மக்கள் தொகையில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையான ஒரு சதவீதம்தான். இங்கே பலம்வாய்ந்த ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில் நிலவுகின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையானது மிகமிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு குறைவானவர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியுமா?முடியாது என்பதை சாதாரண மக்களும் அறிவார்கள். இந்தச் சூழலில் மிகப்பெருவாரியான மக்களோடு இந்த சிறு குழுவினர் இணைந்து செயல்பட வேண்டியது மிகமிக அவசியம் ஆகும். மக்களோடு இணையாமல் நாம் எதையும் சாதிக்கமுடியாதல்வா.ஆனால் இந்த சிறிய குழுவிலுள்ள அகம்பாவம் பிடித்த குறுங் குழுவாதிகளால் அகந்தை மனோபாவம் கொண்டு செயல்படுவதன் மூலம்இந்த குழுக்கள் மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆகவே இந்த குறுங்குழுவாத சிந்தனைமுறை நம்மை மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது, மேலும் மற்ற கம்யூனிச குழுக்களோடு தோழமையாக இருக்கவும் குழுக்கள் ஒன்றினையவும் தடையாக இருக்கிறது.

நம்மோடு இணைந்து செயல்பட விரும்புபவர்களை, இணையப் போகிறவர்களை பொறுத்தமட்டில் நமது ஒரே செயல் அவர்களோடு இணைந்து செயல்பட அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அவர்களை புறக்கணிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நம் தோழர்களில் ஒருசிலர் இதனை புரிந்துகொள்ளாமல், நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். அவர்களோடு நாம் இணைந்து செயல்பட முடியாது என்று பார்க்கிறார்கள். அவர்களின் கொள்கையும் நோக்கங்களும் தவறானவை என்றும், அவர்களிடத்தில் மாற்றங்களே ஏற்படாது என்று முடிவு செய்கிறார்கள். நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யாமலேயே அவர்களோடு இணைவது கூடாது என்று முடிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களோடு சித்தாந்தப் போராட்டத்தை நாம் நடத்துவதற்கு போதுமான சித்தாந்த அறிவு நமக்கு இல்லை என்பதையும், அத்தகைய சித்தாந்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே மற்றவர்களுடன் இவர்கள் இணைவதற்கு மறுக்கிறார்கள். இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை.

இவ்வாறு பிறருடன் இணைய மறுப்பதற்கும், தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் மட்டுமே சேர்வோம் என்று கருதுவதற்கு எவ்விதமான நியாயத்தையும் நாம் கூற முடியாது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் இவ்வாறு பிறருடன் இணையக் கூடாது என்று எங்காவது சொல்லியிரு க்கிறார்களா? இல்லை. மாறாக மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நம்மை நம் ஆசான்கள் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார்கள். நாம் இணைந்து செயல்பட்டாலும் நமக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் வரும் என்றும் இந்த கருத்து முரண்பாடுகளை நமக்கிடையே கருத்துப் போராட்டங்கள் நடத்தி தோழமையான முறையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நமது ஆசான்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதே வேளையில் நாம் ஒன்று படுவதற்கு முன்பு நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்றுநமது ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாகும். அத்தகைய எல்லைக்கோட்டை நாம் போடவில்லை என்றால் அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். அந்த பணியை ஒரு சிறிய குழுவால் செய்ய முடியவில்லை என்றால் அந்தப் பணியை பிற குழுக்களோடு இணைந்துதான் செய்ய வேண்டும்.

கம்யூனிச குழுக்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமையையும், கம்யூனிச குழுக்களுக்கும் பிற ஜனநாயக வாதிகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனி குழுக்களுக்கு இடையே ஒற்றுமையின் நோக்கம் சித்தாந்த ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான நோக்கமாக இருக்க வேண்டும். கம்யூனிச குழுக்களுக்கும் பிற ஜனநாயகவாதக் குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களின் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு எதிரான நடைமுறைக்கான ஒற்றுமையாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் விலகி நிற்க வேண்டும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியோ, சீனக் கம்யூனிஸ்டு கட்சியோ எப்போதாவதோ, எங்கேயும் தீர்மானம் போட்டதில்லை. ஆனால் சில குறுங் குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன் வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.

இத்தகைய குறுங்குழு வாதத்தை முறியடிப்பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ. இதன் மூலம் குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார். ஒரு பலம்வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்ற போது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழுவாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழுவாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை. எல்லாவகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படையாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான்இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர்களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் என்றால், குழுக்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். இத்தகைய அகநிலைவாத, குறுங்குழுவாதத் தலைவர்களால்தான் இந்தியாவில் சிதறுண்ட குழுக்கள் நீண்டகாலமாக ஒன்றுபட முடியவில்லை.

கட்சிசாராத மக்களுடனும், ஊழியர் களுடனும் கட்சியானது இணையாமல் சீனாவில் புரட்சி சாத்தியமில்லை என்றார் மாவோ. மாவோவின் வழிகாட்டுதல்களை இந்தியாவில் குறுங்குழுவாதத் தலைவர்கள் உள்வாங்கவும் இல்லை, அதனை பின்பற்றவும் இல்லை. அதன் காரணமாக கம்யூனிஸ்டுகள் பலவாறு சிதறிக் கிடக்கின்றனர். இவர்களால் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை என்பது நடைமுறை எதார்த்தமாகும். ஆகவே மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமானால் சிதறிக்கிடக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டியது அவசியம்.அதற்கு கம்யூனிஸ்டுகளிடம் இருக்கும் குட்டிமுதலாளிய உணர்வுகளை களைய வேண்டும், குறுங்குழுவாதத்தை அறவே கைவிட வேண்டும். இந்த முயற்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.இந்த சூழலில் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியை எதிர்த்து கம்யூனிச குழுக்களும் பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நடைமுறையில் பாசிஸ்டுகளின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு மக்கள் முன்னணியை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். இவ்வாறு நடைமுறையில் ஒற்றுமை காணும்போது ஒவ்வொருவரும் தங்களுக் கென்று வெவ்வேறு கொள்கையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவது என்ற ஒரு கொள்கையில் உடன்பாடு கொண்டு ஒன்றுபடுகிறார்கள். அதனால் இவர்களது போராட்டமானது பாசிச ஆட்சியாளர்களின் தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்கப்பயன்படாலாம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு இந்த கூட்டணி போதாது. கருத்தொற்றுமையும் அதன் அடிப்படையிலான பலம்வாய்ந்த அமைப்பும், அந்த அமைப்பினால் திரட்டப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளும் இல்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது. இந்த கூட்டணியில் இணைந்துள்ள கம்யூனிசக் குழுக்கள் ஒன்றுபட்டு கருத்துப் போராட்டங்கள் நடத்தி தங்களிடமுள்ள குறுங்குழுவாதப் பார்வையை களைந்து ஒரு ஒன்றுபட்ட கொள்கை முடிவெடுத்து ஒரு அமைப்பாக, (கட்சியாக) வேண்டும். அந்த கொள்கையின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கங்களை வர்க்க அமைப்புகளில் திரட்ட வேண்டும். அப்போதுதான் கம்யூனிச அமைப்பு பலமாக முடியும். அந்த பலத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.

ஆகவே இந்த குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடி ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்டவேண்டும். அதற்கு முதற்கண் அறிவுஜீவிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரியவைக்க வேண்டும். ஆகவே இலக்கு இணையதள இதழைப் பயன்படுத்தி தோழர்கள் உங்களது கருத்தை முன்வைத்து விவாதத்தில் பங்குகொள்ளுமாறு இலக்கின் சார்பில் தோழர்களை நாங்கள் அழைக்கிறோம்.மேலும் கம்யூனிச இயக்கத்துக்குள் தலைமைவழிபாடு என்ற கொடிய நோய் புகுந்து விளையாடுகிறது. இது கொரோனா கிரிமையைக் காட்டிலும் மிகவும் கொடூரமான கிரிமியால் ஏற்பட்ட நோய் ஆகும். தனிவுடமையின் அடிப்படையிலான சுயநலவாத குட்டிமுதலாளித்துவ ஆசையிலிருந்து உருவான சிந்தனைமுறை என்ற கொடூரமான கிரிமியால் ஏற்பட்ட நோயாகும். இந்த நோயின் விளைவாக கம்யூனிஸ்டுகள் பல குழுக்களாகப் பிளவுபட்டுள்ளனர். கம்யூனிஸ்டுகள் மார்க்சிய லெனினிய தத்துவத்தின் வெளிச்சத்தில் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் அதனை தீர்ப்பதற்கும் முயற்சியில் ஈடுபடாமல் அவர்களுக்கு பிடித்த அல்லது பிரபலமான தலைவர்கள் அல்லது தனிமனிதர்களின் மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இந்த பிரபலமானவர்கள் சொல்லும் கருத்துக்கள் தவறானது என்று மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளிலிருந்து சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலித்து உண்மை எது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இந்த பிரபலமானவர்களின் மார்க்சியத்துக்கு எதிரான கருத்தை இவர்களது வலைதளங்களில் பதிவிட்டு இவர்களை நம்பி இவர்களைப் பின்பற்றும் அணிகளிடமும் மக்களிடமும் இத்தகைய பிற்போக்கு கருத்துக்களை கொண்டுசென்று அவர்களது பகுத்தறிவையும் காயடிக்கிறார்கள். இவர்கள் பிரபலமானவர்களை வழிபடுவதன் மூலம் இவர்களின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களும் இவர்களை கண்மூடித்தனமாக வழிபட வேண்டும் என்பதற்காகவே தலைமைவழிபாட்டு முறையை அணிகளிடம் வளர்க்கிறார்கள். இதன் காரணமாகவே இவர்கள் மார்க்சிய லெனினிய ஆசான்களின் போதனைகளை கைவிடுகிறார்கள். மேலும் மார்க்சிய ஆசான்களின் போதனைகளை அணிகளுக்கும் மக்களுக்கும் போதிக்க மறுத்து அந்த போதனைகளை மூடிமறைக்கிறார்கள். இவர்கள் பல காலமாக மார்க்சிய ஆசான்களது நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிடவில்லை. இந்த உண்மையை பலரும் புரிந்துகொண்டு இவர்களை சமீபத்தில் விமர்சித்ததன் காரணமாக மார்க்சிய ஆசான்களது நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளார்கள். இது ஒரு நிர்பந்தத்தின் காரணமாக நடந்திருந்தாலும் இது பாராட்டுக்குரியதே. எனினும் இவர்கள் நூலை வெளியிட்டால் மட்டும் போதாது. அதனை மக்களுக்கு போதித்து புரியவைக்க வேண்டும் செய்வார்களா? இவர்கள் உண்மையில் உணர்வுப்பூர்வமாக தலைமைவழிபாட்டு முறையை கைவிட்டுவிட்டு மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொண்டு மக்களுக்கு போதித்தால் மட்டுமே ஒரு மார்க்சிய லெனினியவாதிகளாக இவர்களால் ஆக முடியும். இல்லை என்றால் இவர்கள் குட்டிமுதலாளித்துவத்திலிருந்து ஒருபோதும் மீள முடியாது. இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது எதிரிகள்தான் இவர்களால் பயனடைவார்கள். ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தலைமைவழிபாட்டுமுறை என்பது பாட்டாளிவர்க்க முறையில்லை. மாறாக இது முதலாளித்துவ முறையாகும். இந்த முறையானது மார்க்சியத்தை கற்றுக்கொள்வதற்கு தடையாக உள்ள முறையாகும். கூட்டு சிந்தனை கூட்டு முடிவு கூட்டு முயற்சி என்ற பாட்டாளிவர்க்க முறைக்கு இவை எதிரானதாகும். அமைப்பிற்குள் கமிட்டிமுறையை கைவிடுவதற்கு வழிசெய்யும் முறையாகும். கட்சிக்குள் தோழர்களிடமுள்ள ஒற்றுமையை அழிப்பதற்கான முறையாகும். இவர்கள் உண்மையில் உணர்வுப்பூர்வமாக தலைமைவழிபாட்டு முறையை கைவிட்டுவிட்டு மார்க்சிய லெனினியத்தை கற்றுக்கொண்டு மக்களுக்கு போதித்தால் மட்டுமே ஒரு மார்க்சிய லெனினியவாதிகளாக இவர்களால் ஆக முடியும். இல்லை என்றால் இவர்கள் குட்டிமுதலாளித்துவத்திலிருந்து ஒருபோதும் மீள முடியாது. இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது எதிரிகள்தான் இவர்களால் பயனடைவார்கள். ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தலைமைவழிபாட்டுமுறை என்பது பாட்டாளிவர்க்க முறையில்லை. மாறாக இது முதலாளித்துவமுறையாகும். இந்த முறையானது மார்க்சியத்தை கற்றுக்கொள்வதற்கு தடையாக உள்ள முறையாகும். கூட்டு சிந்தனை கூட்டு முடிவு கூட்டு முயற்சி என்ற பாட்டாளிவர்க்க முறைக்கு எதிரானதாகும். அமைப்பிற்குள் கமிட்டிமுறையை கைவிடுவதற்கு வழிசெய்யும் முறையாகும். கட்சிக்குள் தோழர்களிடமுள்ள ஒற்றுமையை அழிப்பதற்கான முறையாகும். இத்தகைய தலைமைவழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்கள் குறுங்குழுவாதிகளாக இருந்துகொண்டு போல்ஷ்விக் பாணியிலான பலம்வாய்ந்த பாட்டாளிவர்க்க கட்சியை கட்டுவதற்கு தடையாகவே உள்ளனர். ஆகவே கம்யூனிஸ்டுகள் இத்தகைய குட்டிமுதலாளித்துவ தலைமை வழிபாட்டையும் குறுங்குழுவாதத்தையும் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியது மிகமிக முக்கியமான கடமையாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்