தத்துவம் ஏன் பயில வேண்டும்? தத்துவம் என்றால் என்ன? மார்க்சிய லெனினிய தத்துவம் என்பதென்ன?
ஓவ்வொன்றாக விடைத்தேடுவோம்
தத்துவம் ஏன் பயில வேண்டும்?
தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல் வேறு சமூக வார்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும் இயற்கையின் பெருமதிப்பு வாய்ந்த சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்ய கணம் முதலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது. வாழ்க்கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை.
மனிதனுடைய ஆற்றலை அளவிட இயலாதவாறு அதிகப் படுத்தியுள்ள மிகப் பெரிய விஞ்ஞான- தொழில்நுணுக்கச் சாதனைகளும், பூமியின் வடிவையே மாற்றிவிட்ட பிரமாண்டமான இயற்கை உருமாற்றங்களும், சமூக வாழ்வின் எல்லாப் பகுதி கள் மீதும் பாதிப்பு விளைத்துள்ள புரட்சிகரமான மாறுதல்களும் நிகழ்ந்திருப்பகனால் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது நமது காலம். இதனை அறிய...
தத்துவம் என்றால் என்ன?
தத்துவம் என்பது, நம்மைச் சுற்றி நிலவும் யதார்த்தம் பற்றி முழுமையாகவும் மனிதனால் அது அறியப்படுதல் பற்றியும் உள்ள கருத்துக்களின் தொகுப்பாக விளங்குகிறது. பல்வேறு சமூக வர்க்கங்கள், குழுக்களின் நலன்களைத் தத்துவம் வெளியிடுகிறது. பிரபஞ்சம் முழுவதற்கும் அடிப்படையாக இருப்பது எது என்பதை விளக்கவும், மனிதனது இயல்பையே புரிந்துகொள்ளவும், சமூகத்தில் மனிதன் வகிக்கும் இடம் யாது, பிரபஞ்சத்தின் இரகசியங்களை உட்புகுந்து தெரிந்துகொள்ளவும் இயற்கையின் பெருவிறல் வாய்ந்த சக்திகளைப் புரிந்துகொண்டு மக்களின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தவும் மனிதனது அறிவால் முடியுமா என்பவற்றைக் தீர்மானிக்கவும் தத்துவம் தான் தோன்றிய கணம் முதலே முயன்று வந்திருக்கிறது. இவ்வாறாகத் தத்துவம் மிகவும் பொதுப்படையான, அதே சமயம் மிகவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளைக் கிளப்புகிறது. வாழ்க்கை, அறிவு, இவற்றின் மிக மிகப் பல்வகைப்பட்ட துறைகள் பால் மனிதனது அணுகுமுறையை நிர்ணயிப்பவை இவை. இந்தப் பிரச்சினைகளுக்கு மிகமிக -வெவ்வேறான, சில சந்தர்ப்பங்களில் ஒன்றை ஒன்று நிராகரித்து விடுகிற விடைகளைக் தத்துவவாதிகள் அளிக்க வந்திருக்கிறார்கள். தத்துவம் சுமார் மூவாயிரம் அண்டுகளாக நிலவிவருகிறது. ஒன்றுக்கொன்று எதிரான கருத்தோட்டங் களுக்கிடையே போராட்டம் அதில் இந்தக் காலமெல்லாம் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்தப் போராட்டம் தற்போதும் நின்றபாடில்லை. ஏன் இந்தப் போராட்டம் நடக்கறது? அதன் காரணங்கள் யாவை? தத்துவக் கருத்தோட்டங்களின் மோதுதலில் மைய இடம் வகிப்பது உணர்வுக்கும் இருத்தலுக்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சினை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால் கருத்தியலானதற்கும் பொருளியலானதற்கும் இடையே நிலவும் உறவு பற்றிய பிரச்சனை. உணர்வு, கருத்தியலானது என்று சொல்லுகையில் நமது எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள் ஆகியவற்றையே நாம் மனத்தில் கொள்ளுகிறோம் என்பதை இங்கே குறிப்பிட்டுவிட வேண்டும்.
மார்க்சிய லெனினிய தத்துவம் என்பதென்ன?
மார்க்சிய-லெனினியத் தத்துவ விஞ்ஞானம் அதற்கு முன்பிருந்த தத்துவம், தற்கால பூர்ஷ்வாத் தத்துவம் ஆகியவை எல்லாவற்றிலுமிருந்து பண்பளவில் வேறுபட்டது ஆகும். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ், இருவராலும் உருவாக்கப்பட்டு வி. இ.லெனினால் விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தத்துவம் பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் இணையுறுப்புக்களாகப் பொருத்துகிறது. இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றுக்கு உரிய நிகழ்ச்சிகளை அறி வதற்கு ஒன்றான இயக்கவியல்-பொருள்முதல்வாதச் சித்தாந்தாமுறையும் இதில் கையாளப்பட்டன. முழுமையான, செப்பமாக அமைந்த விஞ்ஞான ரீதியான இந்தக் தத்துவக் கண்ணோட்டம் தொழிலாளி வர்க்கத்தினதும் உழைப்பாளி மக்கள் அனைவரதும் புரட்சிப் போராட்டத்தின் நோக்கங்களுக்கு வரலாற்றில் முதன் முறையாகத் தொண்டாற்றலாயிற்று. மார்க்சியம் 19 நூற்றாண்டின் 40க்களில் ஜெர்மனியில் உதயமாயிற்று. விஞ்ஞானம், சமூக-வரலாற்று நடைமுறை ஆகியவை அனைத்தினுடையவும் வளர்ச்சியின் விதிமுறைக்கு ஏற்றதன் விளைவாக அது, அந்தச் சமூகத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறையின் ஆழ்ந்த முரண்பாடுகள் வெளிப்பட்டுவிட்டன. அதே சமயம் பாட்டாளி வர்க்கத்தைச் சுறண்டலிலிருந்து விடுவிப்பதற்கான எதார்த்தச் சூழ்நிலமைகள் உருவாகியிருந்தன. பாட்டாளி வர்க்கத்துக்கும் பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் இடையே வர்க்கப் போராட் டம் இந்த அடிப்படையில் வளர்ந்து
தீவிரம் அடைந்தது. அதன் நோக்கங்கள் போதிய தெளிவுடன் நிச்சயிக்கப்பட்டன. தொழிலாளி வர்க்கம் தனது பொருளாதார, அரசியல் உரிமைகளுக்காக ஊக்கத்துடன் போராடியது.
புரட்சிகரத் தொழிலாளி இயக்கத்துக்குத் தேவையாக இருந்தவை உழைப்பாளி மக்களது போராட்டத்தின் குறிக்கோள்கள், கடமைகள் ஆகியவற்றுக்கு உரிய விஞ்ஞான அடிப்படையை நிறுவுவதும் முதலாளித்துவ அமைப்பை ஒழித்துப் புதிய சமூகத்தை நிறுவுவதற்கு ஏற்ற வழிகளையும் சாதனங்களையும் நிச்சயிப்பதுமே. நவீனச் சமூகத்தின் மிகப் புரட்சிகரமானதும் எல்லா உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும் ஒத்தியைந்த முறையில் போராடுவதுமான பாட்டாளி வர்க்கத்தின் மூலாதாரநலன்களின் சித்தாந்த வெளியீடாக விளங்கியது/விளங்குகிறது மார்க்சியம்.
கம்யூனிஸ உலகக் கண்ணோட்டத்தின் பொதுச் சித்தாந்த அடிப்படையாகத் தங்கள் தத்துவமுறையை உருவாக்கியதன் வாயிலாக மார்க்சும் எங்கெல்சும் கருத்துமுதல்வாத அறியப்படுத்தும் பணியையும், மாறாநிலைப் பொருள்முதல்வாதம் ஆகியவற்றின் கோளாறுகளையும் குறைகளையும் அகற்றுவதிலும் முந்திய தத்துவத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதத்துக்கும் இடையே நிலவிய பிளவை நீக்குவதிலும் மிகப்பெரிய தொண்டு ஆற்றினார்கள். நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, மார்க்சியத்துக்கு முற்பட்ட பொருள்முதல்வாதம் இயக்கவியல் தொடர்பு அற்றதாக, வரலாற்றுக் தொடர்பு அற்றதாக இருந்தது. வளர்ச்சியை அது மிக எளிய வகையில் புரிந்துகொண்ட.து. வளர்ச்சி பற்றிய போதனை பிரதானமாக ஹெகலின் இயக்கஇயல் உருவாக்கப்பட்டது, ஆனால் அது கருத்துமுதல்வாத நோக்கு கொண்டிருந்தது. எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல, “ஹெகலின் இயக்கவியலில் இருந்த திரிபின் அடிப்படை என்னவென்றால், ஹெகலின் கருத்துப்படி அது கருத்தின் சுயவளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே. இதன்படி, பொருள்களின் இயக்க இயல் கருத்தின் பிரதிபலிப்பே ஆகும். உண்மையிலோ, நமது மூளையில் தோன்றும் இயக்க இயல், இயற்கைப் பிரபஞ்சத்திலும் மனித சமூகத்திலும் ஏற்படுவதும் இயக்க இயல் வடிவுக்கு உட்பட்டதுமான எதார்த்த வளர்ச்சி யின் பிரதிபிம்பமே.”(கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும். நூல்திரட்டு, தொகுதி 38, பக்கம் 177.)
மார்க்சியத்தின் ஸ்தாபகர்கள் ஹெகலின் கருத்துமுதல்வாத இயக்கஇயல் மீது விமர்சன ரீதியில் மீண்டும் சிந்தனை செலுத்தி, பொருள்முதல்வாத இயக்க இயலை உருவாக்கினார்கள். இது பண்பளவில் புதிய இயக்கஇயல் முறையாகும். “எனது இயக்க இயல் வகைமுறை தன் அடிப்படையில் ஹெகலின் முறையிலிருந்து வேறானது மட்டும் அல்ல, அதன் நேர் எதிர்நிலை ஆகவும் விளங்குகிறது” (கார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் “மூலதனம்”, நூல்திரட்டு, தொகுதி 23, பக்கம் 21). என்று எழுதினார் மார்க்ஸ். பொருள்முதல்வாத இயக்கவியலைச் செவ்வையாக உருவாக்குகையில் மார்க்சும் எங்கெல்சும் 19ம் நூற்றாண்டின் மிகப் பெரிய இயற்கைவிஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள். அங்கஜீவிகளின் உயிரணுக் கட்டமைப்பு பற்றிய சித்தாந்தம், ஆற்றலின் அழியாமையையும் மாற்றத்தையும் பற்றிய விதி, விலங்கினங்கள், தாவர இனங்கள் ஆகியவற்றின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் குறித்த டார்வினது போதனை, இவற்றை அவர்கள் முதன்மையாக ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள். பொருளியல் பிரபஞ்சம் ஏதோ சதாசர்வ காலத்திற்கும் நிலைத்திருப்பது என்றும் மாறுதல் அற்றது என்றும் கருதிய மாறாநிலைக் கண்ணோட்டத்தை இந்தக் கண்டுபிடிப்புக்கள் ஆதாரத்துடன் மறுத்து விட்டன. பிரபஞ்சத்தின் பொருள்களும் நிகழ்ச்சிகளும் மாறுதலும் வளர்ச்சியும் கொண்டவை,
ஏனெனில் மார்க்சியத்துக்கு முந்திய பொருள்முதல்வாதிகள் அதைச் சமூக நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தச் செய்யத் திறனற்றவர்களாக இருந்தார்கள். மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதத்தை உச்சிவரை “நிறுவிப் பூர்த்தி செய்தார்கள்”. அவர்கள் வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதத்தை உருவாக்கினார்கள். சமூக வளர்ச்சிக்குரிய மிகப் பொதுவான விதிகள் பற்றிய விஞ்ஞானம் இது. தத்துவத்தில் அவர்கள் நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின் வெளியீடாக இதுவும் விளங்குகிறது.
இயக்கவியல் அனைத்துப் பொருட்களும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதாகக் கூறுகிறது. அனைத்துப் பொருட்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதுகிறது. ஒரு பொருளை ஆராயும் போது அந்தப் பொருள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறது. செயல்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்கிறது. நிலைமாறாத் தத்துவத்திற்கு மாறாக இயக்கவியல் பார்வை அனைத்தையும் அவற்றின் இயக்கத் தன்மையில் வைத்துப் பார்க்கிறது; புரிந்து கொள்கிறது. இயற்கை, சரித்திரம், சிந்தனை எல்லாவற்றிலும் மாறுதலும் இயக்கமும் இருக்கின்றன. ”மாறும் என்ற விதியைத் தவிர மற்றவையெல்லாம் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்றார் மார்க்ஸ்.
உலகில் தோன்றிய எல்லா தத்துவங்களும் தனி உடமை சமூகம் தோன்றிய பிறகு அந்தத் தனி உடையும் சமூகம் சார்ந்த கருத்துக்களை விதைத்தது ஆக தத்துவத்தின் தேவை அந்த மனித இனங்களில் வாழ்வியலைப் பற்றியது ஆக ஒருபுறம் உடமையாளர்களின் சொந்தக்காரர்களான ஒடுக்குபவனும் உடைமையற்றோர் ஆகிய ஒடுக்கப்படுபவனும் ஒரே சமூகத்தில் வாழும் பொழுது இருவரையும் ஒருமுகப்படுத்துவதும் ஒழுக்கு படுத்துவதும் என்ற பெயரில் நீதி நியாயம் என்ற கோட்பாடுகளை வழங்கியது இந்த தத்துவங்களை இவை மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்று படுத்தவும் அதிகாரத்தின் அடிப்படையில் மக்களை மிரட்டி அடிபணி வைப்பதும் எதுவாக இருந்தாலும் அன்று இவை இருந்தது இன்று அதன் தேவைகளை புரிந்து கொண்டால் சரியாக இருக்கும் என்பதே.
தத்துவம் என்றால் என்ன இந்தியாவில் தோன்றி பல்வேறு தத்துவங்கள் எவை எவை இன்றுள்ள இந்திய தத்துவம் எவை அவை என்ன பணி செய்து கொண்டுள்ளது என்று சுருக்கமாக விளக்கினேன் இருந்தும் இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தத்துவ மரபுகளையும் ஆய்வு செய்தோமானால் அதனுடைய வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இங்குள்ள ஆளும் வர்க்கமே காரணமாகும். ஆளும் வர்க்கத்தை உயர்த்திப்பிடித்த பல்வேறு தத்துவங்கள் நிலைத்து நிற்பதும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்த தத்துவங்கள் தொடர்ந்து காணாமல் போய்விட்டது எனலாம். குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் பல்வேறு விதமான தத்துவங்களை ஆய்ந்தறிந்த ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு தத்துவங்களின் கலவைகளை ஒன்றாக்கி சமஸ்கிருத மயமாக்களையும் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் தத்துவங்களை முதன்மைப் படுத்தியும் வேத நாகரீக காலம் தான் உயர்ந்தது என்று வேதத்தை தாங்கிப் பிடிக்கும் வேலையையும் அவர்கள் தான் தொடங்கி வைத்தார்கள் அதற்கு முன் இருந்த பல்வேறு தத்துவங்கள் தங்களுக்கு இடையிலே போட்டி போட்டு வாழ்ந்து மறைந்தும் கொண்டிருந்தது ஆனால் ஆங்கிலேயர் இந்திய மயங்காதலும் அன்றைய தத்துவங்களுக்கு உயிர் கொடுத்தனர் எனலாம். இதனை புரிந்து கொள்வதற்கு மார்க்சிய பார்வை அவசியம்.
இந்தியாவில் தோன்றிய எல்லா தத்துவங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்து தத்துவங்கள் தான் இன்று அதன் பயன் என்ன என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ள வர்க்க சமுகத்தில் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வு காணும் மார்க்சியம் மட்டுமே உழைப்பு தான் மனித அறிவைத் தோற்றுவித்தது புராதன மனித மந்தையை ஒழுக்க நெறி விஞ்ஞானம், கலை ஆகியவை கொண்ட மனித சமூகமாக மாற்றியது மனிதன் நாகரீக வளர்ச்சி பெற்றதற்குப் பொருள் உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றமே காரணமாகும்.உலகில் உயர்ந்த தத்துவம் மார்க்சியம் மட்டுமே.
ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது.
ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது, மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.
No comments:
Post a Comment