“கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
"நாங்கள் இருவரும் சந்தித்தபோதே புரட்சிகர மார்க்சியவாதிகளாக இருந்தோம். சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்தோம்"-குரூப்ஸ்கயா
சற்று இங்குள்ளவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளவர்களும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் நிலையை இதனுடன் சற்று பொருத்தி பாருங்கள் உண்மையில் இவர்களின் பணி என்னவாக உள்ளது எளிதாக புரிந்துக் கொள்ள முடியும் தோழர்களே.
என்ன செய்ய வேண்டும் நூலில் லெனின்,"பொருளாதார வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் சோசலிச உற்பத்திக்கான நிலைமைகளைப் படைக்கிறதோடு அல்லாமல் நேரடியாக அதன் அவசியத்தைப் பற்றிய உணர்வையும் (காவுத்ஸ்கி கொட்டை எழுத்தில் போட்டது) படைக்கிறது என்று மார்க்ஸ் அடித்துக் கூறியிருப்பதாக நமது திருத்தல்வாதிகளில் பலர் எண்ணுகிறார்கள். மேலும்முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை உயர்த்த உயர்த்த பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்து போராட மென்மேலும் நிர்பந்திக்கப்படுகிறது மென்மேலும் தகுதி பெறுகிறது சோசலிசத்தின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும் பாட்டாளி வர்க்கம் உணர்ந்து கொள்கிறது இது சம்பந்தமாக சோசலிஸ்ட் உணர்வு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் அவசியமான நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்.
தத்துவம் என்கிற வகையில் சோசலிசம், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே, தற்கால பொருளாதார உறவுமுறைகளில் வேர்கொண்டு இருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே, அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும், மக்களின் துன்ப துயரங்களையும், எதிர்க்கும் போராட்டத்தில் இருந்து வெளித் தோன்றுகிறதும் உண்மைதான். ஆனால் சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம் பக்கமாக அக்கம் பக்கமாக உதிக்கின்றன. ஒன்றில் இருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கிறது. நவீன சோசலிஸ்ட் உணர்வு, ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே மட்டுமே உதிக்க முடியும். உண்மையாகச் சொன்னால் நவீன கால தொழில்நுட்பவியல் போலவே, (எடுத்துக்காட்டாக சொல்கிறோம்) தற்கால பொருளாதார விஞ்ஞானமும், சோசலிஸ்ட் உற்பத்திக்கு நிபந்தனை ஆகும், எவ்வளவு விருப்பம் இருந்த போதிலும் சரி தொழிலாளி வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்கால சமுதாய நிகழ்வு போக்கிலிருந்து உதிக்கின்றன. விஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் ஊர்தி பாட்டாளி வர்க்கம் அல்ல. முதலாளி வர்க்கப் போக்கு உள்ள படிப்பாளி பகுதியே. (காவுத்ஸ்கி கொட்டை எழுத்தில் போட்டது) இந்தப் பகுதியின் தனி தனி உறுப்பினர்களின் சிந்தனையிலே தான் நவீன கால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தான் அதை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளிகளிடம் கொண்டு போனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலே, நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு அதை புகுத்துகிறார்கள். எனவே சோசலிஸ்ட் உணர்வு எனப்பட்டது வெளியில் இருந்து புகுத்தப்படுகிற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல. அதன்படியே தான் பழைய ஹேய்ண்ட் பெல்ட் வேலைத்திட்டம் சரியாக கூறியது: தொழிலாளி வர்க்கத்திற்கு தனது நிலை பற்றிய உணர்வை, தனது பணியை பற்றிய உணர்வை ஊட்டுவது (உண்மையில் சொன்னால் நிரப்புவது) சமூக ஜனநாயகத்தின் (கம்யூனிச அறிவாளிகளின்) பணி ஆகும் என்று வர்க்கப் போராட்டத்தில் இருந்து உணர்வு தானாகவே உதிக்கிறது என்றால் இப்பணிக்கு அவசியமேதும் இராது. புதிய நகல் இந்த முன்கூற்றை பழைய வேலை திட்டத்திலிருந்து பிரதி செய்து கொண்டு மேலே சொன்ன முன்கூற்றை அத்துடன் இணைத்துள்ளது. ஆனால் இது சிந்தனை நெறியை முற்றாக அறுத்து விட்டது. உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வு போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு. - முதலாளித்து சித்தாந்தம் அல்லது சோசலிஸ்ட் சித்தாந்தம் - என்று நடுவழி எதுவும் கிடையாது. (ஏனெனில் மனிதகுலம் ஒரு மூன்றாம் சித்தாந்தத்தை படைக்கவில்லை; மேலும் வர்க்கப்பகைமையினால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில், வர்க்கத் தன்மையற்ற சித்தாந்தமமோ வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே சோசலிச சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள். (என்ன செய்ய வேண்டும் லெனினது நூல் பக்கம் 59 - 62) இங்கே தொழிலாளர்களுக்கு சோசலிச உணர்வு அதாவது வர்க்க அரசியல் உணர்வு அவர்கள் நடத்தும் போராட்டங்களிலிருந்து கிடைக்காது ஏனெனில் அது சமூக விஞ்ஞான அடிப்படையிலிருந்தே கிடைக்கும். அதனை சமூக விஞ்ஞான அறிவுள்ளவர்களால் வெளியில் இருந்தே தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்ற லெனினிய போதனையை புரிந்துகொள்ள தவறுபவர்களை என்னவென்பது? இந்தப் பணியை எந்தவொரு கம்யூனிச அமைப்பும் செய்யவில்லை. அதாவது உழைக்கும் மக்களுக்கு சோசலிச அறிவையும் உணர்வையும் ஊட்டவில்லை. இவர்கள் உண்மையில் லெனினை பின்பற்றவில்லை என்பதுதான் உண்மையாகும்.
கம்யூனிச கோட்பாடுகள் நூலின் 15வது தலைப்பிலிருந்து, இதுநாள்வரையில் உற்பத்தி சக்திகள், அனைவருக்கும் போதுமான அளவுக்கு உற்பத்தி செய்யும் நிலைக்கு ஒருபோதும் வளர்ச்சி அடையவில்லை என்பது கண்கூடு. தனியார் சொத்துடைமை, உற்பத்தி சக்திகள் மேலும் வளர்ச்சி பெறுவதற்கு ஒரு தளையாகவும் தடைக்கல்லாகவும் ஆகிவிட்டது.
ஆயினும் இப்போது, பெருவீதத் தொழில்துறையின் வளர்ச்சியானது, ஒரு புதிய காலகட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மூலதனமும் உற்பத்தி சக்திகளும் முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலத்துக்குள் அவற்றை வரம்பிலா அளவுக்குப் பெருக்கிட உற்பத்தி சாதனங்கள் கைவசம் உள்ளன. அதுமட்டுமின்றி, உற்பத்தி சக்திகள் மிகச்சில முதலாளிகளின் கைகளில் குவிந்துள்ள அதே வேளையில் மாபெரும் திரளான மக்கள் மேலும் மேலும் பாட்டாளி வர்க்கத்துக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர். முதலாளிகளின் செல்வச் செழிப்பு அதிகரித்துவரும் அதே வேகத்தில் பாட்டாளி மக்களின் நிலைமை மென்மேலும் அவலம் மிகுந்ததாகவும், தாங்கவொண்ணாததாகவும் ஆகிவருகிறது. முடிவாக, எளிதில் விரிவாக்கத் தக்கதும் வலிமை மிக்கதுமான இந்த உற்பத்தி சக்திகள், தற்போதைக்குத் தனியார் சொத்துடைமையையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் மிஞ்சி வளர்ந்துள்ளன. அவை எந்த நேரத்திலும் சமூக அமைப்புமுறையையே குலைக்கும் கொடூரமான குழப்பங்களைக் கட்டவிழ்த்துவிட காத்துக் கொண்டுள்ளன. இந்த நிலைமைகளில் தனியார் சொத்துடைமையை ஒழிப்பது இப்போது சாத்தியமாகிவிட்டது மட்டுமின்றி முற்றிலும் அவசியமும் ஆகிவிட்டது.
மேலும் கம்யூனிச சமூகம் எப்படி இருக்கும் என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார், "அனைத்து உற்பத்தி சக்திகளையும், வணிக சாதனங்களையும், உற்பத்திப் பொருட்களின் பரிவர்த்தனை மற்றும் வினியோகத்தையும்கூட, தனியார் முதலாளிகளின் கைகளிலிருந்து சமுதாயமே எடுத்துக் கொள்ளும். இருக்கின்ற வள ஆதாரங்கள், சமுதாயம் முழுவதன் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி, சமுதாயம் அவற்றை மேலாண்மை செய்யும். இந்த வகையில், எல்லாவற்றுக்கும் அதிமுக்கியமாய், தற்போது பெருவீதத் தொழில்துறையையோடு தொடர்புடையதாய் இருக்கும் கேடான விளைவுகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும்".
என்ன செய்ய வேண்டும் நூலின் இரண்டாவது அத்தியாயத்தில்
மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும் என்ற தலைப்பில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தில் கலந்து கொண்டால் போதும், அதன் ஊடாக தொழிலாளர்கள் அரசியலை கற்றுக் கொள்வார்கள் என்ற பொருளாதார வாதத்தை எதிர்த்து முறியடிக்கிறார். தொழிலாளர்களுக்கு சமூக ஜனநாயக அரசியல் வெளியிலிருந்துதான் கொண்டு செல்லப்பட வேண்டும். எவ்வாறு, அறிவியல் தொழில்நுட்பம் நவீன தொழில்துறைக்கு வெளியில் விஞ்ஞானிகளாலும், பொறியியலாளர்களாலும் உருவாக்கப்பட்டு, வளர்ந்து தொழில்துறையில் தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல சமூக ஜனநாயக அரசியல் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
மேலும் தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் உள்ள வேறுபாடை பற்றி பேசுகிறது.
முதல் உள்தலைப்பில் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை பிரச்சனைகள் பற்றி அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அவற்றுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்குவது போலவே, இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரியாக நிற்கும் ஜாரிச எதேச்சதிராகத்தை எதிர்த்த அம்பலப்படுத்தல்களையும் கிளர்ச்சியையும் தொழிலாளி வர்க்கத்துக்கு கற்றுக் கொடுப்பதுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துவது என்பதாகும். இதற்கு சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கமும் எதேச்சதிகாரத்தால் எவ்வாறு ஒடுக்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதற்கு வழி நடத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களின் தலைமை சக்தியாக புரட்சியின் முன் வரிசையில் நிற்கும்.
இவ்வாறு பரந்து விரிந்த அரசியல் தளத்தை தொழிற்சங்க பிரச்சனைகள் மட்டும் என்று குறுக்குகின்றனர் பொருளாதார வாதிகள். இந்த விவாதத்தின் ஊடாக பொருளாதாரவாதிகளும், பயங்கரவாதிகளும் எவ்வாறு இந்த அரசியல் அம்பலப்படுத்தல்கள் மூலமாக தொழிலாளர்களை அரசியல்படுத்துவதை புறக்கணித்து தன்னெழுச்சியான போக்குகளுக்கு வால் பிடித்து செல்கின்றனர் என்பதை விளக்குகிறார்.
இவ்வாறு அரசியல் இயக்கத்தின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் முடிவு செய்த பிறகு இதை அமல்படுத்துவதற்கான அமைப்பு வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறோம்.
தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் முடிந்த வரை தொளதொளப்பான வடிவில், பரந்து விரிந்த அடிப்படையை கொண்டிருக்க வேண்டும். முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் எல்லா தொழிலாளிகளும் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில் தொழிற்சங்க விதிமுறைகளும், கட்சியுடனான அவற்றின் உறவும் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பதை வாத பிரதிவாதங்களை பயன்படுத்தி விளக்குகிறார்.
இதற்கு மாறாக பொருளாதாரவாதிகளின் தொழிற்சங்க அமைப்பு முறை அவர்களது அரசியல் பக்குவமின்மையை பிரதிபலித்து அர்த்தமற்ற ஜனநாயக முறைகளையும், அதிகார வர்க்க நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது என்று அம்பலப்படுத்துகிறார்.
இதன் இறுதி உள் தலைப்பில் ஒவ்வொரு சமூக ஜனநாயகக் குழுவும் தனது பணியை உள்ளூர் அளவில் சுருக்கிக் கொள்ளாமல், அகில ரசிய தாக்கம் செலுத்தும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நமது ஆசான்கள் நமக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர் ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி அப்படி நடந்துக் கொண்டிருக்கிறதா?
இங்கே என்ன நடந்துக் கொண்டுள்ளது?
ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கான பேரம் பேசுவதில் தொடங்கி இன்றைய தொழிலாளர் விரோத எல்லா சட்டங்களை ஏற்றுக் கொண்டே அந்த தொழிலாளிகளின் நலன் பயக்கும் தொழிற் சங்கத்தை கட்ட போவதாக கூறி அந்த தொழிலாளிகளின் என்ன தேவையை பூர்த்தி செய்யப்போகிறது இந்த தொழிற்சங்கம் என்பதுதான் கேள்வி? அவர்களின் உரிமையை பரிக்கும் இந்த கொடூரம் இவர்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களின் கையில் உள்ள உலக மய கொள்கையின் வெளிபாடு அல்லவா? ஆக அதனை பேசாமல் மூடிமறைக்கவே இவை பயன்படும் என்று கூறுகிறேன்.
No comments:
Post a Comment