இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1). பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்-நூல் மீதான விமர்சனமும் அதற்கான மறுப்பும்- இந்தப் பகுதியில் தத்துவம் என்றால் என்ன என்பதில் தொடங்கி இந்திய தத்துவங்களின் பல போக்கு அதனை மார்க்சிய கண்ணோட்டத்தில் எப்படி அணுகுவது என்பதிலிருந்து அன்றை ரசிய நிலையில் அனுபவவாத விமர்சனம் என்ற மூன்றாவது தத்துவம் நோக்கம் அவை எப்படி மார்க்சியத்தை மறுக்கிறது என்று தெளிபடுத்திருப்பார் லெனின். நம் நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் லெனின் குழிதோண்டி புதைத்த அதே நூல்களை கைவிரித்துள்ள நமது இடதுசாரிகளை என்ன சொல்ல இதுவரை அந்த போக்கை எதிர்க்க வேண்டியவர்கள் எதிர்காமல் இந்த நூலின் தேவை எப்படி என்பதனையும் புரிந்துக் கொள்ளவில்லையே... உள் சென்று வாசியுங்கள்.
2). அரசும் புரட்சியும். 1871ஆம் ஆண்டு. பாரீஸ் கம்யூனது அனுபவம். மார்க்சின் பகுத்தாய்வு , அத்தியாயம் 4- இது வரை நாம் அரசு மற்றும் புரட்சி பற்றி தெளிவடையவில்லை என்பதற்காக நாம் முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கதில் உள்ள தொடர்.
3).மார்க்சிய விரோதிகளையும் துரோகிகளையும் அறிவோமா!?- ஒரு நீண்ட பயணத்தில் சில புரிதலுக்கான தேடல் இவை சிறியதே- குறுங்குழுவாதம், வறட்டுவாதம், அனுபவவாதம் இவ்வாறு பல நோய்களில் சிக்குண்டுள்ள இடதுசாரி கம்யூனிஸ்டுகளை பற்றி ஓர் அலசல்
4).நாட்டு நடப்பு- சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் நமக்கான படிப்பினைகள். டாக்டர் சாய்பாபா மறைவும் இந்திய அரசின் ஜனநாயக் முகமூடி கிழிந்து தொங்குவதும்.
தன் நாட்டின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப புரட்சிக்கான தயாரிப்புகளை செய்ய புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். இதற்கு மாறாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கணக்கில் கொண்டு புரட்சியை கைவிட்டு ஏகாதிபத்தியத்தின் சதிதனத்தை புரிந்துக் கொள்ளாமல் சமாதான முறையில் வர்க்கப் போராட்ட விதிகளை மாற்றிவிடலாம் என்றும் மார்க்சிய லெனினிய கொள்கைகளை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வருவது திருத்தல்வாதமே அன்றி மார்க்சிய லெனினியமல்ல.
ஆகவே குருசேவின் வாரிசுகளான இன்றைய திருத்தல்வாதிகள் எதார்த்த நிலைமையோடு அறிதல் வேண்டும் அல்லவா?இரண்டாம் உலக யுத்திற்கு பின் ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்குவாதிகளும் எல்லா இடங்களிலும் கொடூரமான முறையில் மக்களை அடக்கி ஒடுக்க தங்களின் அடக்குமுறை இயந்திரங்களை பலப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தங்களின் ராணுவ மற்றும் போலீஸ் படையை பன்மடங்கு பெருக்கி உள்ளது ஏன் ஏகாதிபத்தியம் இல்லாத முதலாளித்துவ நாடுகளும் கூட மிகப்பெரிய அளவில் ஆயுதப்படைகளையும் போலிஸ் படைகளையும் அதிகரிப்பதில் விதிவிலக்காக இல்லையே.
இலக்கு 58 இணைய இதழ் pdf வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment