கட்சியும் கட்சி உறுப்பினருக்கான பயிற்சியும்

ஆக முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது

ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது திட்டத்தையும் செயல் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் அது ஒரு சரியான அமைப்பு கோட்பாட்டை பெற்றிருக்கவேண்டும் கட்சியின் வேலை திட்டம் செயல்தந்திரம் அமைப்பு கோட்பாடுகளை ஏற்று கட்சியின் ஒரு அமைப்பில் உறுப்பினராக செயல்படுத்தி கட்சி உறுப்பினர் தகுதியும் ஆகும். ஆக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைப்பிரிவாகவும் கட்சியானது நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியுனுடைய நடவடிக்கைக்களின் குறிக்கோளாகும். ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட்ட விஷயமாகும் . நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

ஆனால் இங்குள்ள கட்சிகளுக்கு திட்டமே இல்லையே. இல்லாத ஒன்றை ஏற்க வேண்டும் என்பது கற்பனையே. திட்டத்தை உருவாக்க வேண்டுமானால் மார்க்சிய லெனினிய சமூக விஞ்ஞான அறிவில்லாத முட்டாள்களால் திட்டத்தை உருவாக்க முடியுமா? திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அதனை அவர்களுக்குப் போதிக்க வேண்டும் அல்லவா, அப்படி போதிப்பவர் மார்க்சிய அறிவில்லாத முட்டாள்களால் அதனை போதிக்க முடியுமா?. அப்படியே போதித்தாலும் மார்க்சிய அறிவில்லாத முட்டாள்களால் திட்டத்தை புரிந்துகொள்ள முடியுமா? மார்க்சிய லெனினியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானமாகும். இந்த விஞ்ஞான அடித்தளத்திலிருந்தே கட்சி கட்டப்பட வேண்டும். இந்த விஞ்ஞான அடித்தளத்திலிருந்தே புரட்சிகர வழியில் செயல்பட வேண்டும். மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதன் பொருள் என்ன? மார்க்சிய சமூக விஞ்ஞான அறிவில்லாத முட்டாள்களாலேயே திட்டத்தை உருவாக்க முடியும், அத்தகைய முட்டாள்களே போராடி அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பதே அதன் பொருள். இந்த கருத்தை முன்வைக்கும் கனவான்கள் அவர்களைச் சுற்றி முட்டாள்களை திரட்டி அவர்களை முட்டாள்களாகவே வைத்துக்கொண்டு தாங்கள் சொல்வதற்கு தலையாட்டும் செம்மறி ஆட்டுக் கூட்டத்தை உருவாக்கி இவர்கள் அந்த கூட்டத்தின் தலைவராக இருந்திட வேண்டும் என்ற குட்டிமுதலாளித்துவ ஆசையிலிருந்தே இந்த நயவஞ்சகமான கருத்தை பரப்புகிறார்கள். ஆனால் சோசலிச அரசியல் வர்க்க உணர்வை தொழிலாளர்களின் போராட்டத்திலிருந்து பெற முடியாது. அதற்கு மாறாக அந்த அறிவையும் உணர்வையும் கம்யூனிச அமைப்பிலுள்ள அறிவுஜீவிகள்தான் உழைக்கும் மக்களுக்கு போதித்து மக்களிடையே சோசலிச சிந்தனைமுறையை வளர்க்க வேண்டும் என்ற லெனினிய போதனையை கைவிட்டுவிட்ட கயவர்கள்தான் இவர்கள். எனினும் மார்க்சிய சோசலிச அரசியல் உணர்வும் சிந்தனை முறையும் குறுகிய நாளில் ஒருவர் பெற முடியாது. ஆகவே ஒரு புரட்சிகரமான கம்யூனிச அமைப்பானது சோசலிச சிந்தனை முறையை மக்களிடம் வளர்க்கும் பணியை தொடர்ந்து செய்துவர வேண்டும். இதன் மூலம்தான் ஒரு கம்யூனிச அமைப்பை தலைவர்களைக் கொண்ட அமைப்பாகவும், அமைப்பின் தலைமை மறைந்துவிட்டால் அந்த இடத்தை இட்டு நிறப்புவதற்காக தொடர்ச்சியாக தலைவர்களைக் கொண்ட அமைப்பாக ஒரு கம்யூனிச அமைப்பு திகழ முடியும். இந்த உண்மையை குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத தற்புகழ்ச்சிக்கு மயங்கும் கவர்சிவாத (பாப்புலிஸ்டுகளும்) ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் லட்சியம், தான் மட்டும் என்னென்றைக்கும் தலைவராக இருக்க வேண்டும், அவரை மட்டும் தலைவர் என்றும் மிகச்சிறந்த அறிவாளி என்றும் பலரும் புகழவேண்டும். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் தன்னைப் பார்த்து கேள்வி கேட்க்கக் கூடாது. ஆகவே தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மார்க்சிய அறிவில்லாத முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த கயவர்கள் சொல்வதற்கு மாறாகவே ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே சோசலிச சிந்தனை முறை வளர்க்கப்பட்டது என்பது வரலாறாகும். ஒரு அமைப்பிற்குள் எந்தளவுக்கு சோசலிச சிந்தனைமுறை மற்றும் உணர்வும் கொண்ட உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அதாவது மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் ஆயுதத்தை ஏந்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு அந்த அமைப்பையும் அவர்களால் திரட்டப்பட்ட மக்களையும் யாராலும் வெல்ல முடியாது. இதுதான் வரலாறு. இந்த வரலாற்றுப் பாடத்தை கற்றுக்கொள்ள மறுப்பவன் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது துரோகியாக இருக்க வேண்டும்.

அதனால் நாம் இதனை எப்படி புரிந்துக் கொள்வது

யுத்த தந்திரம் செயல் தந்திரம்

பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று அகவயமானது மற்றொன்று புறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத் தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப்படுகின்றது. யுத்த தந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல் களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது. எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய தத்துவத்தினாலும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப்படுகின்ற விவரங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கான இறுதி லட்சியமான பொதுவுடைமை சமூகத்தை அடைய வகுக்கும் நீண்டகால யுத்தியாகும், செயல்தந்திரமானது குறைந்தகால நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி வரலாற்றில் அங்கே மார்க்சிய படிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. சீனாவில் மார்க்சிய பள்ளிகளை துவங்கி தொடர்ந்து நடத்தப்பட்டது. அவர்கள் கம்யூனிஸ்டா? அல்லது மார்க்சியத்தை கற்க வேண்டிய அவசியம் இல்லை என்பவர்கள் கம்யூனிஸ்டா? கட்சி உறுப்பினராவதற்கு மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது நிபந்தனையாக மார்க்சிய ஆசான்கள் முன்வைக்கவில்லை என்பதற்காக கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்வது திருத்தல்வாதம் ஆகும். ஆரம்பத்தில் ஒருவர் ஒரு கம்யூனிச அமைப்பின் திட்டத்தை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளலாம், கட்சி அமைப்பில் சேரலாம், அமைப்புக்கு நிதிஉதவி செய்யலாம், கட்சி அமைப்பு விதிகளுக்கு கட்டுப்படலாம். ஆனால் அவர் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தால் கட்சியில் சேருவதற்கு பெரும்பாலும் தகுதி உள்ளவர்களாக இருக்க முடியாது என்ற காரணத்திற்காகவே அந்த நிபந்தனையை ஆசான்கள் கட்சியில் சேருவதற்கான நிபந்தனையாக விதிக்கவில்லை. இதனை சந்தர்ப்பவாதிகள் அந்த சூழ்நிலையை மூடிமறைத்துவிட்டு எப்போதுமே கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மார்க்சியத்தை கற்று தேறவேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிய ஆசான்களையே கொச்சைப்படுத்துகிறார்கள். ஆனால் மார்க்சிய ஆசான்கள் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் சோசலிச சிந்தனைமுறையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சுயவளர்ப்பு பயிற்சி பெற வேண்டும் என்றும் நாம் தொடர்ந்து சித்தாந்த மறுவார்ப்பு செய்ய வேண்டும் என்று அடிக்கடி போதித்துள்ளார்கள். இந்த போதனைகளை எல்லாம் குட்டிமுதலாளித்து குறுங்குழுவாத சந்தர்ப்பவாதிகள் மூடிமறைத்துவிட்டு உழைக்கும் மக்களை மார்க்சிய அறிவற்ற மூடர்களாகவே வைத்துக்கொள்ளும் துரோகத்தை தொடர்ந்து செய்துவருகிறார்கள். 

மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்