பல்வேறு கட்சிகளும் கம்யூனிஸ்ட்டுகளுக்கான கட்சியும் மற்றும் பணி பற்றி!!!

 தோழர்களே இவை விவாதிக்கதான்!

நான் இங்கே உங்கள் முன் வைக்கும் கேள்வி அபத்தமாக இருக்கலாம் இருந்தாலும் தொடர்ந்து விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். கட்சியை பற்றியோ அல்லது  கட்சியில் உள்ளவர்களின் தவறான நிலைப்பாட்டை பற்றியோ இங்கு கேள்வி கேட்டாலே நீ பெர்ரீய கம்யூனிசம் படித்து விட்டாயா??? நாங்கள் படிக்காத புத்தங்களா? என்பவர்கள் இன்றைய நிலையில் பொதுவுடமை கட்சி ஏன் எதிரியை எதிர்த்த போராட்டத்தில் தன் குரலை மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கவில்லை சற்று பதில் சொல்லுங்கள் தோழர்களே!

பொதுவுடமை தத்துவத்தையும் அதன் சார்ந்த கட்சி கொள்கை கோட்பாட்டுகளையையும் ஆளுகேற்ற வகையில் திருத்தி செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்பேன். உண்மையாலுமே இவர்கள் நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழியில் பயணிகிறார்களா என்பதனை ரசிய புரட்சிக்கு முன்னர் லெனின் மார்க்சிய விரோத போக்குகளை அம்பலப்படுத்தி ஒரு சரியான கட்சியை கட்டினார். புரட்சியை சாதித்து உழைக்கும் மக்களும் இச்சமுகத்தில் நன்றாக வாழமுடியும் என்பதனை நம் கண் முன் காட்டிவிட்டு சென்றார். அதற்கு பின் தன் நாட்டில் புடசியை சாதிக்க மாவோவும் லெனினிய வழியை பின் பற்றி தங்கள் நாட்டின் நிலைமைகேற்ப அணிகளுக்கு போத்திது ஒரு சரியான கட்சி கட்டினார், புரட்சியையும் சாதித்தார். ஆனால் இங்கு நாம் லெனின் அனுபவத்தையோ மாவோவின் அனுபவத்தையோ வழிகாட்டுதல்களையோ ஏற்காமல் ஆளுக்கொரு விளக்கம் கொடுத்து ஏமாற்று வித்தை காட்டுகின்றனர் என்பேன்.

இன்று நடிகர் விஜய் கட்சி தொடங்கிய உடனே அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கின்றனர். அவரின் நோக்கம் இந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் தானும் சொகுசா வாழனும் அதில் அவர் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் அன்றைய சூழல் நிர்ணயிக்கும். உண்மையில் விஜய் யார் அவர் கட்சியின் நோக்கம் என்ன? இதனை கூட நாம் புரிந்துக் கொள்ளாமலா அவரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்? ஆக நமக்கான அரசியலை பேச முடியாத நாம் எதிரி வர்க்க அரசியலை பேசி என்ன சாதிக்க உள்ளீர்கள் சொல்லுங்கள்???

ஏகாதிபத்தியம் வெறும் காகித புலிகளே என்றார் மாவோ. அன்று பலமான கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது அவர் நாட்டில். சொன்னதோடு சாதித்தார்.
இங்கு விஜயின் அரசியல் கட்சியையும் வளர்சியையும் அதன் எதிர் காலம் பற்றி பேசும் நாம் நமக்கான பணியை செய்யவில்லை என்பதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.
எலிக்கு பூனைதான் உலகிலே பெரிய விலங்கு என்பார் நமது ஆசான் அதே இடத்தில் அதன் எதிரி என்ற இடத்திலிருந்து. உண்மையில் உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி அவர்களின் விடுதலைக்கான பணியை செய்யாமல் ஒவ்வொருத்தன் பின்னாலும் ஓடிக்கொண்டிருந்தால் எங்கே அவர்களின் பலம் புரிய போகிறது இடதுசாரிகளுக்கு ???
இடதுசாரிகள் இடதுசாரியாக செயல்பட்டால் இந்த அவலங்கள் துடைத்தெறியப்படும் என்று கூறிக் கொள்கிறேன் தோழர்.

பல்வேறு வரலாற்று நிகழ்வுகளோடு இந்த பகுதி மாவோவின் நூலின் அடிபடையில் கீழ்காணும் தொகுத்துள்ளேன். இதில்காணும் தவறுகளுக்கு நானே பொறுப்பு, வாசித்து விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே... 

ஓர் நீண்ட தேடல் வாசித்து விடையளிக்க முயலுங்கள் தோழர்களே...

மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு வழிகாட்டியது. இந்த அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் லெனின் வரையறுத்த "ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி" பாதை குடியேற்ற நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும், குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம் சோசலிச போராட்டமாக இருக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக போராட்டமாக இருக்கும்.

நாம் நம்முடைய தவறுகளை பார்ப்பதிலும் நம்முடை இழப்புகளை கணிப்பதிலும் மட்டுமே நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதே சமயத்தில் சாதனைகளை பார்க்கவும் அவற்றின் மூலமாக விளைந்த ஜனநாயகப் புரட்சியின் முன்னேற்றத்தை பாராட்டவும் நாம் தவறினால் நம்முடைய முந்தைய அனுபவங்களிலிருந்து தவறான படிப்பினைகளை பெற்றுக் கொண்டு எதிர்கால புரட்சி ஒரு கடுமையான மோசமான செயலை செய்து கொண்டிருப்போம்.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் இன்றுதான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 54 ஆண்டுகால மார்க்சிய- லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .

இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. அன்று இந்தியாவில் நடந்த பல போராட்டங்கள் சாதி, மதம், இனம் கடந்து போராட்டங்களை ஒன்றினைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். இருந்தும் மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதல்களை இவர்கள் ஏற்று செயல்பட்டதாக வரலாற்று பக்கங்கள் இல்லை என்பதுதான் உண்மை.

 தலைவர் மாவோவின் கீழ்க்கண்ட சொற்களையும் நாம் நினைவு கூறுவோம்,"கஷ்டமான காலங்களில் நாம் நம்முடைய சாதனைகளை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கவேண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்".

மார்க்சியம் குறிப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டுமேயன்றி, அதாவது சூழ்நிலை ஏற்ப ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.
ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால பாதை மேற்கொள்ளப்பட்டது. குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.
மார்க்சியம் வரலாற்று வழியில் முதலாளியத்துக்குச் சவக்குழி தோண்டி, வர்க்கங்களும் மனிதனை மனிதன் சுரண்டும் நிலையும் இல்லாத கம்யூனிச சமுதாயத்தைக் கட்டுவது தான் சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையென வரையறுத்துக் கூறிய மார்க்சும், ஏங்கெல்சும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுதலை செய்வதற்குகந்த மிகச் சிறந்த வழியையும் சுட்டிக் காட்டினர்.
அதாவது, தொழிலாளி வர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று, விவசாய வர்க்கத்துடன் நெருக்கமான கூட்டேற்படுத்திக் கொண்டு, முதலாளி வர்க்கத்தின் அரசியந்திரத்தை உடைத்து நொறுக்கப் புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்த வேண்டும்; பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவ வேண்டும்; பாட்டாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாக்கவும் கம்யூனிச நெறிகளின் அடிப்படையில் சமுதாயத்தை மாற்றியமைக்கவும் இவ்வரசை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் இராணுவ அமைப்பானது, முக்கியமாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரப் போராட்டத் தின் இந்த மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் உருவாக் கப்படுகிறது. அடிைமைத்தளைகளை உடைத்தெறியவும் பழைய உலகைத் தூக்கியெறியவும் கிளர்ந்தெழுகின்ற பாட்டாளி வர்க்கமும், புரட்சிகர மக்களும், புரட்சி இயக்கத்தினூடே, தமது சொந்த இராணுவ அமைப்பைக் கட் டாயம் கட்டியாக வேண்டும். ஏனெனில் ஒரு பெளதீகச் சக்தியை மற்றொரு. பெளதீகச் சக்தியினால்தான் வெல்ல முடியும்; முதலாளிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவுதல் என்ற வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியும். இவைதான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பணி இதை சாதிக்க இங்கு ஏதாவது கட்சி இருக்கிறதா? என்பதே கேள்வி! அப்படி இருக்கும் பொழுது மார்க்சிய ஆசான்களின் அடியொற்றி நடக்க கட்சி இல்லை என்பதுதானே உண்மையும்.
இங்குள்ள கட்சிகள் ஆளும் வர்க்கதிற்கு வெண்ணை அடிக்கும் வேலையை செய்கின்றனர். உண்மையாலும் ஆளும் வர்க்கமும் வரலாற்று அரங்கத்திலிருந்து தானாக வெளியேறச் சம்மதிக்காது. நிலைமை இப்படி இருக்க இந்த அமைப்பு முறையை கேள்வி கேட்காது இதற்குள்ளே சிக்குண்டு கிடக்க சொல்லும் இவர்கள் மார்க்சியவாதிகளா என்பதே என் கேள்வி!.
இங்குள்ள இருபோக்குகள் ஒன்று பாராளுமன்றம் மூலம் சோசலிசத்தை படைக்க கிளம்பியவர்கள், இன்று எதிரி வர்க்கத்துடன் சமரசம் செய்துக் கொண்டு உழைக்கும் வர்க்கதிற்க்கு துரோகமிழைகின்றனர். இன்னொருபுறம் புரட்சி பேசுவோர் ஆளுக்கொரு அமைப்பை கட்சி என்று நம்பி உழைக்கும் மக்களை குழப்பிக் கொண்டுள்ளனர்.

ஆக புரட்சிக்கான பாதை நமக்கு நமது ஆசான்கள் மிகத்தெளிவாக கூறியுள்ளனர் அதனை புரிந்துக் கொள்வதும் நடைமுறை படுத்துவதும் உண்மையானபுரட்சியை நேசிப்போரின் பணியாகும் என்கிறேன் தோழர்களே.இனி இங்கே உள்ள கட்சிகளை வரலாற்று வழியில் சற்று தேடுவோம்...

1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60 ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது. கொடூரமான அடக்கு- முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கடுமையான அடக்குமுறைகளைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த பலருக்கு, முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை. நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.ஐ-யின் தலைமை நிறைவேற்றியது.தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி.ஐ.யின் மையக்குழு தீர்மானித்தது.

காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:“கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.

சி.பி.ஐ. கட்சியானது 1951 மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பி வைத்தது. அக்குழுவின் நோக்கம் “கட்சியானது புரட்சிகர வழியை கைவிட்டு விட்டது என்றும், நேருவின் அயலுறவுக் கொள்கையில் உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம், அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.இதனையே வழிமொழிந்து செயல்பட்டுக் கொண்டுள்ளதுதான் சி.பி.எம் நிலையும் இன்று இதன் அடிவொற்றி சி.பி.ஐ.எம்.எல் லிபரேசனும் பீடுந்டை போடுகிறது. இவை புரட்சிக்கான பாதை இல்லை என்பது நிஜம்.

புரட்சிகர கட்சியாக உதித்த நக்சல்பாரி இயக்கம், பல்லாயிரக் கணக்கில் தன் இயக்கத்தினரின் இன்னுயிரை புரட்சியின் வேள்வியில் நாட்டின் விடுதலைக்காக ஆம் உழைக்கும் பல்வேறு வகையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக புரட்சி தீயில் அர்பணித்த நக்சல்பாரி இயக்கம். புரட்சியை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் இயங்கிய இயக்கம் இன்று சிதைவும் மற்றும் சீர்குலைவின் காரணத்தால் மக்கள் மத்தியில் செயலற்று பேரியக்கமா இல்லாமல் போய்விட்டது ஏன்? அவை புரட்சியை விட தங்களை பாதுகாப்பதிலும் தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சியாளர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் இன்றை உலக மய நிலையில் அவர்கள் செயல்பட முடியாமல் உள்ளனர்.

ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாம்தான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.

அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்ற வேண்டும், உற்பத்தி சக்திகளை விடிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்தான் என்ன?

நக்சல்பாரி எழுச்சிக்கு பின் தமிழகத்தில் தோன்றி மூன்று பிரிவு இன்று முப்பதிற்கும் மேலான குழுக்கலானவை ஏன்?

எஸ்.ஒ.சி- டி.என்.ஒ.சி நடந்த மோதல்கள் நட்பு முரணாக இன்றி பகை முரணாக அல்லவா கடந்த காலம் பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் அதிகாரம் மற்றும் ம.ஜ.இ.க இன்று அடைந்துள்ள பிளவுக்கு காரணம் தத்துவ பிரச்சினையா? மேலும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல குழுக்கள் தங்களை மா-லெ கட்சி என்று சொல்லிக் கொண்டு ஒற்றை இலக்க எண்ணிகை கொண்டோரே கட்சி என்றால்? உண்மையில் கம்யூனிஸ்ட் பற்றிய இவர்களின் வரையறை என்னே? இவர்களின் நோக்கம் உண்மையாலுமே உழைக்கும் மக்கள் விடுதலைகானதா?

இன்று ஏகாதிபத்திய கால்நக்கிகளும் புரட்சி வேசம் போட்டு புரட்சியாளர்களாக வலம் வரும் பொழுது கட்சி பற்றி சற்று புரிந்துக் கொள்வோமே!

நமது நாட்டில் பல வண்ண அரசியல் கட்சிகள் உள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற பல கட்சிகள் இருந்தபோதும் இந்த கட்சிகள் அனைத்தும் பொதுவாக மக்களுக்காகப் பாடுபடுவதாகத் தான், சொல்கின்றன, இது உண்மையா? இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சியில் கடுமையான வெள்ளம் வந்தது, இந்த வெள்ளமானது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வந்து மக்களுக்கு சேதத்தை கொடுக்கிறது. என்றாலும் இந்த அரசியல்வாதிகள் நிரந்தரமாக இந்தப் பிரச்சனையை தீர்க்கவில்லையே ஏன்? இவ்வாறு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யாதவர்கள் மக்களுக்கான அரசியல்வாதிகளாக எப்படி ஏற்பது? இவ்வாறு மக்களின் பிரச்சனைகளை இவர்கள் தீர்க்கவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கத்தில் புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு வாழும் மக்களை அவர்களின் வாழ்விடத் திலிருந்து விரட்டுகிறார்களே, மக்களின் பிரச்சனைகளை தீர்க்காதது மட்டுமல்ல, மக்களுக்கு வாழ்வில் பிரச்சனைகளையும் துண்பங்களையும் கொடுக்கிறார்களே, இவர்கள் மக்களுக்கான அரசியல்வாதிகளா? இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் இந்த அரசியல்வாதிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளித்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக் கேட்டுவரும் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியையும் மக்களுக்கான கட்சி என்று சொல்ல முடியுமா?  இவர்களும் மக்களுக்கான அரசியல் கட்சியல்ல என்பதுதான் உண்மை ஆகும்.

காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் மத்தியில் ஆட்சி செய்து, இந்திய மக்கள் சந்திக்கும் எந்த பிரச்சனையாவது தீர்த்ததுண்டா? இல்லை என்பதே உண்மையாகும். இவர்களது ஆட்சியில்தான் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், நோய்வந்து,மக்களின் மரணம், விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து விவசாயிகளின் மரணம்.

ஏழை எளிய மாணவர்கள் பணம் இல்லாத காரணத்தால் உயர் கல்வி கற்க முடியாத நிலை, பணம் இல்லாததால் மருத்துவ வசதி கிடைக்காமல் பல ஏழைகளின் மரணங்கள். இத்தகைய கொடுமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சி செய்யாத கட்சிகள் தான் காங்கிரசும், பா.ஜ.க.வும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அதே வேளையில் இவர்கள் அன்னியர்களான உலக வங்கி, ஐ.எம்.எப், போன்ற நிதி மூலதன முதலாளிகளிடம் கடனைப் பெற்று அவர்கள் போடும் உத்தரவுகளுக் கெல்லாம் கட்டுப் பட்டு, அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளை குறைப்பது, அரசில் ஒரு வேலை காலியாகும்போது அந்த காலியிடத்தை நிறப்புவதில்லை. புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கும் போது முன்புபோல் சுதந்திரமான ஊழியர்களாக அவர்களை வேலைக்கு எடுக்காமல், கூலி அடிமைகளாளகவே எவ்விதமான உரிமையும் கொடுக்காமல் பணிக்கு ஆள் எடுப்பது, இதுவரை நடத்திவந்த அரசுக் கல்லூரிகளையும் அரசு மருத்துவ மனைகளையும் அரசு நடத்து வதை கைவிட்டுவிட்டு அதனை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கோடி கோடியாக கொள்ளையடித்து அவர்களின் சொத்துக்களை வளர்த்துக் கொள்ள வழி வகுத்து கொடுப்பதும். இதில் அன்னிய கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியா விலிருந்து கோடிகோடியாக கொள்ளையடித்து அவர்களது நாட்டிற்கு கடத்திச் செல்வதற்கும் இவர்கள் துணை போகிறார்கள்.

ஆக இந்த கட்சிகள் உழைக்கும் மக்களுக்கான கட்சி இல்லைதானே பின்னர் உழைக்கும் மக்களுக்கான கட்சி எப்படி இருக்க வேண்டும் என்று நமது ஆசான்கள் சொன்னவையே அதனை பார்ப்போம் இனி...

ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது திட்டத்தையும் செயல் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் அது ஒரு சரியான அமைப்பு கோட்பாட்டை பெற்றிருக்கவேண்டும் கட்சியின் வேலை திட்டம் செயல்தந்திரம் அமைப்பு கோட்பாடுகளை ஏற்று கட்சியின் ஒரு அமைப்பில் உறுப்பினராக செயல்படுத்தி கட்சி உறுப்பினர் தகுதியும் ஆகும். ஆக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைப்பிரிவாகவும் கட்சியானது நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியுனுடைய நடவடிக்கைக்களின் குறிக்கோளாகும். ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட்ட விஷயமாகும். நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

ஆக கட்சி என்பது நாட்டில் உள்ள நிலமைகளை ஆய்வு செய்து நாட்டின் உற்பத்தி உறவு உற்பத்தி சக்தி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் உழைக்கும் மக்களின் நட்பு சக்திகள் எதிரிகள் மற்றும்  அடிப்படை முரண்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த சமூகத்தை மாற்றி அமைபதற்கான திட்டத்தை உருவாக்கி  தன் அணிகளுக்கு போதித்து மக்களை அதன் பின்னர் அணி சேர்க்க வேண்டும். அதன் பின்னர் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டிக்கொண்டிருக்கும் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகளான சுரண்டல் அமைப்புமுறையை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்க வேண்டும்.

யுத்த தந்திரம் செயல் தந்திரம்

பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று அகவயமானது மற்றொன்றுபுறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத் தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப்படுகின்றது. யுத்த தந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல் களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது. எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய தத்துவத்தினா லும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப் படுகின்ற விவரங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கான இறுதி லட்சியமான பொதுவுடைமை சமூகத்தை அடைய வகுக்கும் நீண்டகால யுத்தியாகும், செயல்தந்திரமானது குறைந்தகால நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும். 

இங்கே ஒவ்வொரு கட்சியும் அமைப்பும் கட்சியில் இல்லாதவர்களை ஏற்பதில்லை சரி இவர்கள் கட்சிகான அடிப்படையில் இல்லாத பொழுது இவர்களின் கட்சியில் நாம் எப்படி இணைவது? ஆக இவர்கள் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் கட்சி கட்டியிருந்தால் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒரு ஊழியர் இருப்பதாக நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில் ஊழியர் கட்சின் ஓர் அங்கமாகவே இருக்கின்றார். 

ஒரு ஊழியர் ஒரு திட்டவட்டமான அமைப்பிற்குள்தான் ஒரு அமைப்பாக இயங்குகின்ற ஒரு நிறுவனத்தில்தான் வாழ்கின்றார், இயங்குகின்றார். ஆகையால் ஊழியரை பற்றிய பரிசீலனை அமைப்பை பற்றிய பரிசீலனையை யிலிருந்தே துவங்க வேண்டும்.

அமைப்பு மக்களால் தான் உருவாக்கப்படுகின்றது மக்கள் தான் ஒரு அமைப்பின் பிரதான அம்சமாக இருக்கின்றனர். ஒர் அமைப்பு மக்கள் இன்றி இயங்க முடியாது. மக்களின் ஒரு படைப்பாக இருக்கின்ற அமைப்பு, அவ்வமைப்புற்குட்பட்ட மக்களையும் அவர்களுடைய குணாதிசயங் களையும் மற்றும் அவர்களின் திறமைகளையும் சார்ந்து இயங்குகின்றது . மறுபுறம் ஒரு அமைப்பு அது நிலைத்திருப்பதற்கான உரிமை பெற்ற ஒரு தனிப் பொருளாக ஆகிவிட்ட பிறகு அதுவே மக்களின் மீது ஒரு தீர்மானகரமான பாதிப்பை ஏற்படுகின்றது. அமைப்பைச் சேர்ந்தவர் கள் எவரெவர் என்னென்ன செய்ய வேண்டும். அதன் செயல் பாட்டிற்கான நிறுவனத்தில் ஒருவர் எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இப் பணியை ஆற்ற வேண்டும் என்பதை தீர்மானிக் கின்றது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர் களின் செயல்பாட்டின் திசையையும் இலக்கையும் முன்கூட்டியே அது வரையறை செய்கின்றது. அவர்களை இயக்குவிக் கின்றது. ஒருவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என அவருக்கு பணிக்கிறது.

ஒரு அமைப்பு அதனுடைய செயல்பாட்டின் மூலமாக அவ்வமைப்பு சேர்ந்தவர்களிடம் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை தரத்தை ஏற்படுகின்றது. அது அவர்களைப் பயிற்றுவிக்கின்றது.

மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.

ஒரு பலமான கட்சிக்கிளையும் ஒரு பலமான கட்சி நிர்வாகக் குழுவும் வலுவான கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் தோன்று வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. எங்கெல்லாம் கட்சிக்கிளையும் நிர்வாகக் குழுவும் சீராக செயல்படவில்லையோ அங்கெல்லாம் உறுப்பினர்களும் ஊழியர்களும் போராட்ட வலிமை குன்றி தரங்கெட்டு பின்னடைந்து போவதற்கு ஏதுவாகின்றது. இதற்கு நேர் எதிராக கட்சி உறுப்பினர்கள் ஊழியர்களின் செயலற்ற தன்மையில் கட்சியமைப்புகளும் சீரழிந்து போவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான் . ஏனெனில் கட்சி ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையிலான உறவில் ஊழியர்கள் (ஒரே நேரத்தில் விளைவாகவும் காரணமாக இருக்கின்றார்கள்) காரணியாக இருக்கும் போது விளைவாகவும் இருக்கின்றார். எப்படி இருப்பினும், அமைப்பின் ஸ்திரத்தன்மை யற்ற நிலைக்கு ஒரு தனிநபரே காரணம் இருந்தாலும் கூட சாராம்சத்தில் அது ஒரு அமைப்பு பிரச்சினையேயாகும். ஏனெனில் அன்நிலைக்குக் காரணமாக இருக்கும் அந்த நபர்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தும் அமைப்பின் தேவை களுக்கு எதிராக சிந்தித்து செயல் படுகின்றார்கள் என்றால் அவ்வமைப்பு அவர்களை போதித்து வளர்க்கவில்லை அல்லவா?.அமைப்பு தனது செயல்பாட்டிற்கு தேவையான அளவுகோள்களை      (தகுதிகளை) அல்லது விதிமுறைகளை உத்தரவாதம் செய்து கொள்ளவில்லை அல்லது அமைப்பின் முடிவுகளையும் தீர்மானங்களையும் செயல்படுத்தும் படி அந்த நபர்களை நிர்ப்பந்திக்கும் வலிமை அமைப்பதற்கு இல்லை என்பதே காரணமாகும். எனவேதான் ஊழியர் பிரச்சினை பற்றிய பரிசீலனை தீர்வும் அமைப்பிலிருந்து துவங்க வேண்டும் தனிநபர் பிரச்சினையும் சாரம்சத்தில் ஒரு அமைப்பை பிரச்சினை ஆகும் என நாம் உணர வேண்டும் தனிநபர்களின் பொறுப்பை தீர்மானிக்கும் போது நாம் அவ்வமைப்பின் தேவைகளையும் அவ்வமைப்பின் அளவு கொள்கை களையும் கோட்பாடுகளையும் அவ்வமைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் இதுவே கோட்பாட்டு ரீதியில் அமைந்த வேலை முறையாகும் .

அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்ட வர்களை கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும். அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டவர் களை கட்சியின் வழி அல்லது கோட்பாட்டு அடிப்படையில் திடசித்தத்துடன் மதிநுட்பத் துடன் ஆக்கபூர்வமான முறையில் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும். ஒரு நபரின் வலிமை அமைப்பில் தான் தங்கியிருக்கின்றது தனிநபர்களின் வலிமையில் கூட்டுத் தொகையை விட தரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய வலிமையை அமைப்பு உருவாக்குகின்றது இப்பிரச்சினையில் உள்ள இயக்கவியல்.

ஒரு வலுவான அமைப்பு தனிநபர்களின் வலிமையை உத்தரவாதம் செய்கின்றது. தனிநபர்களின் வலிமை அமைப்பை வலுவானதாக ஆக்குகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனி குணாதிசயமும் திறமையும் உண்டு. ஆகவே தான் ஒரு அமைப்புக்குள் தனிநபர்களுக்குபாத்திரம் இல்லை என நாம் கூற முடியாது. ஒரு அமைப்பில் உள்ள உறுப்பினர் அனைவரும் எத்திறனுமற்றவர்களாக இருப்பார்கள் என்றால் அந்த அமைப்பு நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு உண்மையில் பல நபர்களின் சேர்க்கையாகவே இருக்கின்றது. உண்மையில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக இருப்பார்களானால் அவ்வமைப்பின் கூட்டுத்திறன் எங்கிருந்து கிடைக்கும்.

கட்சி ஒரு சரியான ஊழியர் கொள்கையை வகுத்துக் கொள்வதற்கு; இக்கட்டத்தில் ஆற்றவேண்டிய புரட்சி பணிகளின் உள்ளடக்கம் தன்மை மற்றும் அதன் இயல்பையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, இந்தியப் புரட்சியின் யுத்த தந்திர போர்த்தந்திர கோட்பாடுகளையும் புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆற்றவேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தையும் அதன் தேவைகளை பற்றி ஒரு சரியான புரிதலையும் பெற்றிருக்க வேண்டும் . இத்தகைய புரிதல் ஊழியர் பிரச்சினையைப் பற்றிய பரிசீலனை செய்வதற்கும் அதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பதற்கும் தீர்மானகரமான அம்சமாக இருக்கின்றது. ஆகையால் தான் "அரசியல் மார்க்கம் தீர்மானிக்கப்பட்டதும், ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் " என மாவோ கூறினார் .

ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையில் ஊழியர் களுக்கும் இயக்கத்திற்கும் இடையிலும் மிக நெருங்கிய ஒரு இயங்கியல் ரீதியான தொடர்பு உண்டு. இத்தகைய பன்முக உறவுகளின் வரம்பிற்குள்தான் ஒரு ஊழியரின் வாழ்வும் இயக்கவும் அமைகின்றது. இத்தகைய உறவுதான் ஒருவரை உண்மையில் ஒரு ஊழியராக ஆகின்றது.

ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையிலான உறவு ஒரு சரியான அரசியல் வழி சிறந்த ஊழியர்களை உருவாக்குகின்றது. ஒரு சரியான வழிகளில் ஊழியர்களுக்கு நன்கு பயிற்சி பெற்று முதிர்ச்சி அடைகின்றனர். இது ஊழியர் பிரச்சினையில் உள்ள ஒரு அம்சமாகும். ஊழியர்கள் ஒரு அரசியல் வழியை உருவாக்குவதிலும் அதை வளர்த்தெடுப்பதிலும் பங்கு கொள்கிறார் கள். அவ்வழியை ஒரு எதார்த்தமாக்கு வதற்கு உத்தரவாதம் செய்கின்றார்கள் .இது ஊழியர் பிரச்சினையில் உள்ள மற்றொரு அம்சமாகும்.

கட்சி ஒரு சரியான அரசியல் வழியை வகுத்துக் கொண்டாலும் கூட அவ் வழியை நடைமுறைப்படுத்துவதற்கு (செயல் படுத்துவதற்கு) திறமையான ஊழியர்களை பெற்று இருக்காவிட்டால் அவ்வழி ஒரு வெற்று உரையாகிவிடும் .

பயனற்றதாகிவிடும். ஊழியர்கள் மோசமானவர்களாக இருந்தால் அவர்கள் அவ்வழிக்கு தீங்கு விளைவிப்பார்கள். கட்சியின் ஊழியர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக இருந்தால் அவர்கள் அரசியல் வழியை ஒரு ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றத் துணை புரிவதுடன் அவ்வழியை வளர்ப்பதற்கும் பங்காற்றுவார்கள் .

கட்சியின் அரசியல் வழியே அமைப்பின் தன்மையும் வளர்ச்சியையும் ஊழியர் களின் வர்க்க சிந்தனையையும் ஒழுக்க நெறிகளையும் ஆற்றலையும் தீர்மானிப் பதில் தீர்க்கமான அம்சமாக இருக்கின்றது. எந்த ஒரு அரசியல் வழியையூம் ஊழியர்கள் நன்கு புரிந்துகொண்டு அதை தனதென கருதி தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் திறமையுடன் நிறைவேற்ற உறுதி பூண்டிருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.எனவே தான் சிறந்த ஊழியர் களை பெற்றிருப்பதற்கு ஒரு சரியான அரசியல் முன்நிபந்தனையாகும்.

ஒரு சரியான அரசியல் வழியினால் உருவாக்கப்பட்ட இயக்கமானது வலிமையான வெகுஜன இயக்கமாக கட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தால் பெரும்பான்மையான கட்சி ஊழியர்கள் கட்சியின் சரியான அரசியல் வழியில் நின்று உறுதியாக போராடினால் கட்சி ஊழியர்களை தீய போக்குகள் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப் படுவதுடன் அத்தீய போக்குகள் கட்சி ஊழியர்களால் தனிமைப் படுத்தப்பட்டு அவை இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்படும். இதற்கு மாறாக அரசியல் வழியிலேயே பிழைகள் செய்யப் படுமானால் நிலைமைகள் வேரொன்றாகிவிடும். தவறான வழி ஊழியர்களை ஒரு சரியான திசையில் இருந்து விலக்கி அவர்களை "பொருளாதார வாதம், வர்க்க சமரசம், அராஜகவாதம், தன்னெழுச்சி போக்கு, சந்தர்ப்பவாதம் , சகாசவாதம்" போன்ற தவறான பாதைக்கு கொண்டு செல்லும். அணிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் . ஏராளமான ஊழியர்களை தவறுகளை செய்வதற்கு தள்ளிவிடும். இத்தகைய சூழ்நிலையில் சரியானதுதவறான பிரித்துப்பார்க்க சரியானதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்து உண்மையாக போராடுவோர் நிச்சயமாக இருப்பார்கள் ஆயினும் புரட்சி இயக்கத்தை மீண்டும் ஒரு சரியான பாதைக்கு கொண்டு வருவது இயக்கம் ஒரு உயர்ந்த விலையை செய்து செலுத்த வேண்டியிருக்கும்.

அமைப்பு பணியின் உள்ளடக்கம் மற்றும் குணாம்சம் அதன் வாய்ப்பெல்லை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமைப்பு பிரச்சினை முழுவதையும் வெறும் ஊழியர் பிரச்சினையாக எளிமைப்படுத்தி பார்த்து விட முடியாது. அமைப்பு அதற்கே உரித்தான சுயேட்சையான பாத்திரத்தை வகுக்கின்றது ஊழியர்கள் வாழ்விலும் அது ஒரு தீர்மானகரமான முக்கியத்துவமுடைய பாத்திரத்தை வகிக்கின்றது. இப் பிரச்சனையை அமைப்புப் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் .

ஊழியர்கள் வழியை நிறைவேற்றுபவோர் என்ற முறையில் அவர்கள் ஒரு வழியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள் என கூறலாம். வழியை அமல்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான பயனுள்ள முறையில் அமைப்பு படுத்துவதன் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் செழுமையான அனுபவத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கு மற்றும் அதை சரியான ஒன்றாக ஆக்குவதற்கு தங்களை பங்களிக்கின்ற இவ்வாறு செய்வதுதான் ஒரு ஊழியரிடம் என்று கூறப்படும் ஒரு முக்கியமான தகுதியாகும். இவ்வாறு செய்வது தான் ஒரு ஊழியருக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதியாகும்.

ஊழியர்கள் பிரச்சினை பற்றிய பரிசீலனையும் தீர்வும் அரசியல் வழியில் இருந்தே துவங்க வேண்டும் இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால் நமது ஊழியர் தொடர்பான பணியும் ஊழியர் கொள்கையும் இவ்வழியை வெற்றிகரமாக அமல்படுத்துவதை உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும் . இதன் பொருள் இந்த அரசியல் வழியை எதார்த்தம் ஆக்குவதற்கு திறமை பெற்ற ஊழியர்களை அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அடையாளப்படுத்தி புரிந்துகொண்டு வெற்றிகரமாகநடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதி பூண்டவர்களை கட்சியின் வழியை ஒரு கோட்பாட்டு அடிப்படையிலும் திட சித்தத்துடனும் மதிநுட்பத்துடனும் ஆக்கப்பூர்வமான முறையிலும் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்களாக பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர்களை நியமித்தல் பயிற்றுவித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றி லிருந்து ஊழியர்களை மதிப்பீடு செய்தல் உயர்த்துதல் ஆகிய வரை எல்லா அம்சங்களிலும் நமது ஊழியர் கொள்கையையும் ஊழியர் தொடர்பான பணியும் மேற்கூறப்பட்ட அவற்றை பிரதான அளவுகோலாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர் பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட முறையில் பரிசீலனை செய்யவேண்டும். பண்பாடு அல்லது வர்க்க நிலைப்பாடு பற்றிய பொதுவாக கருத்துக்களுக்கு நாம் திருப்திக் கொள்ளக் கூடாது என்பதே ஆகும் .

வர்க்க நிலைப்பாடு என்பது மார்க்சிய லெனினியத்தால் ஆயத்தம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் வழியையும் அவ்வழியை நடைமுறைப்படுத்துவதற்கான புரட்சிகர நடவடிக்கைகளையும் சரியான புரட்சிகர முறைகளையும் உள்ளிட்டதே ஆகும்.

ஒரு தன்னெழுச்சியான இயக்கத்தின் மூலம் தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க உணர்வை தான் பெறமுடியும். லெனின் வார்த்தையில் கூறினால் "தொழிற்சங்க வாதம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த ரீதியில் முதலாளித் துவத்திற்கு அடிமைப்படுத்து வதேயாகும்".

தொழிலாளர்களிடையே தன்னெழுச்சியாக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நிலைப்பாட்டை அடைய முடியாது என்றால் விவசாயிகளால் எளிய நிலமற்ற விவசாயிகள் இருந்தாலும் சரி நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்தாலும் சரி தன்னெழுச்சியாக தொழிலாளி வர்க்க நிலைப்பாடு பெற்றுவிட முடியாது. கட்சியின் வழியை அமல்படுத்து வதற்காக மேற்கொள்ளப்படும் புரட்சிகர நடவடிக்கை கள் மற்றும் சரியான புரட்சிகர முறைகளின் மூலம் மட்டுமே ஏழை நிலமற்ற விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை அடைய முடியும்.

வர்க்க நிலைப்பாட்டையும் ஏதோ ஒரு காலத்திற்கும் களத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான ஒன்றாக நம் கருதக்கூடாது. வர்க்க நிலைப்பாட்டை நாம் ஒரு குறிப்பான வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.

நமது நிலைப்பாடும் மா-லெ- யத்தால் வகுக்கப்பட்டுள்ள சமுதாய வளர்ச்சி பற்றி விதிகளின் அடிப்படையில் தான் வெல்ல முடியும். இதுவே நமது வர்க்க நிலைப்பாட்டிற்கும் ஒழுக்க நெறி பற்றிய கருத்தாக்கம் அடிப்படையாக அமையும்.

எனவே புரட்சியின் இன்றைய கட்டத்தில் தன்னலம் கருதாமல் நாட்டின் விடுதலைக் காகவும் மக்களின் ஜனநாயகதிற்காகவும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும்சாதிமுறை ஒழித்து நாட்டு மக்களுக்கிடையில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆண் ஆதிக்கத்தை ஒழித்து பெண்களுக்கு விடுதலை பெறுவதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் போராடுவதில்தான் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் அடங்கியிருக்கின்றது.

வேறுவிதமாக கூறினால் நமது வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் ஏகாதிபத்தியத்தினதும் பெரு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போரிடுவதில்தான் அடங்கி இருக்கிறது.

நமது கட்சியின் அனைத்து வழிகளும் கொள்கைகளும் இந்த இலக்கை அடைவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் நமது கட்சியின் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் உண்மையிலே கட்சியின் வழியையும் கொள்கையையும் கட்சியின் முன்வைக்கப்படும் கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கான போராடுவதில்தான் அடங்கி இருக்க வேண்டும். விவாதங்களின் தேவையை ஒட்டி தொடரும்....

இங்கே எல்லாம் இன்னும் நடைமுறையில் ஒன்றும் எழுத்தில் ஒன்றும் உள்ள போது ஒரு நேர்மை அற்ற செயல்பாட்டில் உள்ளவர்கள் எவ்வகையில் உழைக்கும் மக்கள் விடுதலையை சாதிக்க போகின்றனர்? இவர்கள் பின் எதற்கு அணி சேரம்படியும் கூறுவார்களா? ஆக ஒரு சரியான புரட்சியை சாதிக்க ஆசான் களின் வழி காட்டுதல்களை கற்று தேர்வதும் நடைமுறை படுத்த வழிவகை அறிந்து செயல்படுத்துவோரே உண்மையில் உழைக்கும் மக்களின் விடுதலை விரும்ம்பிகள் அதனை பற்றி தொடர்ந்து தேடுவோம் தோழர்களே...

இன்னும் பின்னர்...



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்