இலக்கு 42 இணைய இதழ் PDF வடிவில்

 இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1.பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும்- லெனின் பகுதி-3--இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தினார் இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர். ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும் உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?
2.அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்.மார்க்சின் பகுத்தாய்வும் பாகம் 4.அத்தியாயம் 4-கட்சி மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிட்டது ஆனால் காட்சிகள் மாறவில்லைஏழ்மையும் பட்டினியும் போக்க வழியில்லை. நமக்கு அரசு பற்றி புரிதலுக்கே.
3.திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்?-பகுதி-2 செயலில்-இயங்கியல் பொருள்முதல் வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முழுமையாக நிராகரித்தல்; வார்த்தையில் முடிவில்லாத சூழ்ச்சிகள், கேள்வியின் சாராம்சத்தைத் தவிர்க்கும் முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மறைத்தல், பொதுவாக பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக சில பொருள்முதல்வாதிகள் அல்லது வேறு சிலரை வைப்பது, மற்றும் மார்க்சின் பொருள்முதல் வாதப் பிரகடனங்களை நேரடியாக ஆய்வு செய்ய உறுதியான மறுப்பு …. இது வழக்கமான தத்துவத் திருத்தல்வாதம், ஏனென்றால் மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்துக்களிலிருந்து விலகியதன் மூலமும். பின்நவீனத்தும், பிராங்கபர்ட் ஏகாதிபத்திய பேராசியர்களின் கருத்தை மார்க்சியமாக நம்முன் விளக்கும் கேடுகெட்ட தனம். தேவைப்படுவோர் ஆங்கில மூலம் உள்ளது வாசித்து காறிதுப்பங்கள் இவர்களின் நோக்கத்தின் மீது.
4. இந்திய பாராளுமன்றமும் ஊழல் ஆட்சியாளர்களும்-சிபி -"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம்" என்பதுதான் பலரின் பிரதான தேர்தல் பிரசாரமாக உள்ளது. எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கட்சியின் மீது எதிர்க்கட்சியினர் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.
PDF வடிவில் இதழ் கீழே

இலக்கு 42 இணைய இதழ் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்