நேற்றைய விவாதத்தில் நான் எழுதிய எழுத்துக்களே இவை பல தேடுதல்களில் எழுதியவை நான் பேச இந்தப்பகுதியை பயன்படுத்தினேன்.
தோழர் ரவீந்திரன் மற்றும் தோழர் வேலன் அவர்களின் கருத்துகளையும் தோழர் சதாசிவம் மாறுபட்ட கோணத்தில் அம்பேத்கார் பெரியார் இடதுசாரி இயக்கத்தில் இடம்பெற்றத்தையும் கட்சியில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பேசினார்.
ஆனால் யாருக்காக இந்த விவாதத்தை ஏற்படுத்தினோமோ அவர்கள் விவாதத்தில் பதிலளிக்க வில்லை அவர்கள் அவதூறு பரப்புவதை விட வேறில்லை ஆகவே அவர்களின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
நேற்றைய விவாதம் ஜாதியின் தொடக்கம்,ஜாதியின் தன்மைகள்,ஜாதி இருத்தல் மற்றும் ஜாதி ஒழிப்பு பற்றி ஓர் தேடல்-1
ஜாதியின் தொடக்கம் பற்றி இந்தப்பகுதியில் பார்ப்போம் தோழர்களே.
சாதியம் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினர் உபரியான சொத்து சேரலாயிற்று ஒரு பக்கம் சொத்தும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உரு திரண்ட நிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம்.
எங்கெல்ஸின் வார்த்தைகளில் சொன்னாள், " செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பிரபுதுவத்திற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள் துளிர்த்தன, அடிமைமுறை போர்க்கைதிகளோடு நின்று இருந்தபோதிலும் , ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகை செப்பனிட்டு வந்தது. கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது.
உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது.
சமுதாயத்தில் ஆளும் வர்க்க பிரிவினையை நிரந்தமாகவதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாகும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பது.
l உலகில் தோன்றிய பல்வேறு விதமான பிரிவுகள் மனித குல வளர்ச்சி போக்கில் நாம் காண்கிறோம். அவற்றின் ஒரு போக்கு தான் ஜாதியும். ஜாதிக்குரிய தன்மைகள் குறிப்பிட்ட பல அம்சங்கள் தெற்காசிய சமூகத்தில் விரவிகிடப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர் (கோ. கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 230).
இந்தியா முழுவதிலும் ஜாதி பரவிகிடக்கிறது அது பொது தன்மையோடு இருப்பினும் அதில் பலவட்டார அடிப்படையிலான வேறுபாடு அம்சங்களையும் காணலாம். அவை ஏன் என்று சிந்திததுண்டா?
தமிழகத்திற்கு உள்ளே காணப்படும் சில ஜாதிகள் வடப்பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமையும் இதே போல தென் மாநிலங்களான ஆந்திரா, தமிழக, கர்நாடகா, கேரளாவில் ஜாதிகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் காண முடியவில்லை. ஆந்திராவில் உள்ள ஜாதிகள் கர்நாடகத்திலோ கர்நாடகாவில் உள்ள ஜாதிகள் தமிழகத்திலோ இல்லை. மொழிவழி மாநிலங்களான இவைகளுக்கிடையே கூட ஒன்றுபட்ட ஜாதிகள் இல்லாதது போலவே வட இந்திய இந்தி பேசும் மாநிலங்களுக்கிடையிலே கூட ஜாதியில் ஒற்றுமை இல்லை. பல்வேறு பிரதேசங்களுக்கான தனித்தனியான ஜாதிகள் உள்ளதை காணலாம். இந்த வேறுபாடுகளை கணக்கில் எடுக்க வேண்டும். ஆக பல்வேறு வட்டார வேறுபாடுகள் உடன் ஜாதி எங்கு இருக்குமாக காணப்படுகிறது.மேலே சங்க இலக்கியங்களை விளக்கியது இதற்குதான் எளிதாக புரிந்துக் கொள்ள.
வேளாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனமாக நிலம் விளங்கியது. வேளாண்மை சார்ந்த உற்பத்தி ஈடுபடும் பல்வேறு விதமான போக்குகள் தொடங்கியது. தொழில் வகுப்புகளும், மூளை உழைப்பு, உடல் உழைப்பு என உழைப்புத் திறன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டும் அதற்கான தனித்தனியான திறனை கோருகின்றன. நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை, வேளாண்மை சார்பு கைவினை ஆகியவை மட்டுமின்றி தொண்டூழியத் தொழிலும் இருந்தன. ஒவ்வொரு தொழில் பிரிவினையும் அவர்கள் சார்ந்த தொழில்நுட்ப அறிவு அந்தக் குறிப்பிட்ட தொழில் பிரிவினருக்கே உரியதாக இருந்தது. மேலும் நிலஉடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு சுய உள்ளாற்றல்களையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பொதுவான அமைப்புக்குள் இயங்கிக் கொண்டும் இருந்தது. ஒவ்வொரு தொழிலும் தன் சுயேச்சை தன்மையை பேணிக் கொண்டிருந்ததோடு நிலஉடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் இருந்தது.
பொது சமூகத்தில் அங்கமாக உள்ளது, தொழில் வகுப்புகள் தொழில் ரீதியாக சுயேச்சையான தங்களுக்கான தனித்தனி தொழில் வகுப்பின் அடிப்படையில் தொழில் ரீதியாக ஒன்று கலக்கவே இயலாது. ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பொருளும் இன்னொரு தொழில் வகுப்பு நுகர்வு பொருளாக அல்லது அதன் உற்பத்திக்கு ஆதாரப்பொருளாக அமைய இயலும். கலப்பை செய்ய தச்சர் ஈடுபடும் போது வேளாளர் அதில் ஒன்று செய்ய முடியாது ஆனால் தச்சரின் கலப்பையை வேளாளர் வேளாண்மை விளைபொருளுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் வேளாளர் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த முடியும்.
தொழில்முறையில் தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகரமுடியாது ஆனால் தச்சரின்கலப்பை பயன்படுத்தி வேளாண்மையால் விளைவிக்கப்பட்ட விளைப் பொருளை குயவரும் நுகரமுடியும்.
நில உடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல் உழைப்பாளர்களாகவும் நிர்வாகிப்பவராகவும் இருந்தனர்.
இந்த கிராம உற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும் ஆகிய இரு பிரிவினர் கொண்டதாக இருந்தது.கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர். அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவை பிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு கிடக்க வேண்டிய தேவை இருந்தது. அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும், வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்க தொடங்கினர். புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமை பாதுகாப்பது போலவே தொழில் பிரிவினர் தமக்குரிய தொழில் பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலஉரிமை கொண்ட பிரிவினர் பெண்கள் உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்வதும் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர் ஆக தங்களின் தொழில் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமண முறையைக் கட்டிக் காத்துக் கொண்டன.
நிலஉரிமை வகுப்புகளான புரோகிதர்களுக்கும், வேளாளர்களுக்கும் தங்களுக்கான சந்ததிகளுக்கு காப்புரிமைக்காக அகமணமுறையை தேர்ந்தெடுத்தனர். இதை கைவினை பிரிவினருக்கும் சேவை பிரிவினருக்கும் தேவைப்பட்டது.
இங்கே நாம் புரிந்து கொள்வது புரோகித பிரிவினரின் அகமனமுறை மட்டுமல்ல இதற்கு மேலாக உற்பத்திசாதனம் உரிமைகாப்பு தொழில்நுட்ப ரகசியகாப்பு கருத்துருவ மேலாதிக்கம் கொண்டிருந்தனர். இவ்வாறாக தொழில்வழி வகுப்புகள் அகமண முறை அமைய வேண்டியதேவை ஏற்பட்டது, சாத்தியமாகியது. இவ்வாறு ஏற்பட்ட தொழில்பிரிவினை தொடர்ச்சிதான் ஜாதிகளாகவும் வர்ண நெறிமுறையிலும் வர்க்கக சமூக அமைப்பிலும் இதன் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.
ஜாதியின் தன்மைகள்,ஜாதி இருத்தல் பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.
ஜாதியின் தன்மைகள்
பலரும் பல்வேறு விதமான ஆய்வுகளின் அடிப்படையில் கூறினாலும் ஜாதியின் பொதுத்தன்மைகளை இந்த நான்கு வகைக்குள் கோ கேசவன் அடக்குகிறார்.
1). பிறவியின் அடிப்படையில் தொழில் நிர்ணயிக்கப்படுதல். அதாவது பாரம்பரியமாக தொழில் கையளிக்கப்படுதல்.
2). ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மண உறவுகளை அமைத்துக் கொள்ளல்.
3). சமூகம் முழுமைக்கும் மேலிருந்து கீழ் வரை ஒரு படிநிலை முறையை அமைத்துக் கொள்ளல்.
4). சமூகம் முழுமைக்கும் தூய்மை - தூய்மையற்ற தன்மை ஆகியவற்றை உருவாக்குதல்.
சாதியம் என்பதை நிலஉடமை உற்பத்திமுறை அல்லது முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை கொண்ட ஒரு சமூகத்தின் மேல் கட்டுமானமாக மார்க்சிய அறிஞர் டிடி கோசாம்பி கருதுகிறார்.
தெற்கு ஆசியாவில் பல்வேறு பகுதியில் ஜாதியினுடைய தன்மைகள் விரவிக் கிடப்பதை காணலாம். குறிப்பாக இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் இதன் தன்மைகள் விரவிக் கிடக்கின்றன. பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காண்பதை விட இந்தியா நேபாளம் இலங்கை ஆகிய நாடுகளில் ஜாதியத்தின் இறுக்கத்தை காண்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
இந்தியா முழுவதும் ஜாதி பரவி கிடக்கின்றது அது பொது தன்மையோடு இருப்பினும் அதிலும் பல வட்டார அடிப்படையிலான வேறுபாடுகள் உள்ளன.
தென்னிந்திய பகுதிகளில் அமைந்துள்ள ஜாதியானது தமிழ்நாடு மற்றும் ஆந்திர பகுதிகளில் இருப்பதை விட கேரளா பகுதியில் கட்டிறுக்கம் மிகுந்ததாக காணப்படுகிறது. (விரிவாக நூலில் ).
ஜாதி இருத்தல்
தெற்காசியாவில் பல நாடுகளில் ஜாதி தோன்றி மறைந்த பின்னரும் இந்தியா இலங்கை நேபாள் போன்ற பகுதிகளில் இன்றும் சாதி நிலைத்திருப்பது ஏன்?
2.பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை உருவாக்கி திடப்படுத்தப்பட்ட ஜாதிய முறையும் அதனுடன் நுழைந்த தீண்டாமையும் நிலஉடமை கிராம சமுதாயத்தில் ஓர் இருக்கமடைந்த வேலை பிரிவினையை உணர்த்துகிறது. இவை ஆரியர்களால் உருவாக்கப்பட்டதோ அன்றி திராவிடர்களால் உருவாக்கப்பட்டதோ என காண்பதை விட கிராமிய நிலவுடமை முறையின் சமூகத்தின் வடிவம் என காண்பதே பொருந்தும். இவற்றை செழுமைப்படுத்துவதில் சனாதன இந்து மதத்தின் கருத்து உருவாக்கும் பணி முதன்மையாக இருக்கிறது.அரசு அதிகாரம் கோயில் அதிகாரம் மையமாக கொண்ட நிலவுடமை கிராமிய சமூகத்தில் இரண்டும் அதிகாரத்திலிருந்தும் தீண்டதாகாதவர் விலக்கி வைக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனித்து இருத்தப்பட்டனர்.
சமூக உற்பத்தியின் அடிநிலை மக்களான இவர்களை குறிப்பிட்டு ‘அந்தணரில் இருந்து புல்லு பறிக்கிற பரமன் வரை’ என கூறும் கல்வெட்டாகட்டும்.புலைச்சேரி கூறும் ‘கூரைக் குடிவாழ் மனிதர்களான’ இவர்கள் எந்தவித பொது உரிமையைகளும் இன்றி இருந்தனர். விளை நிலங்கள் விற்பனையாகும் பொழுது இவர்களும் சேர்ந்து விற்கப்பட்டனர். (கி.பி 1184- தலித்தியம் கோ.கேசவன் நூல் பக்கம் 57).
இந்தியாவில் இன்றும் சாதி நிலைத்திருப்பது ஏன்? எப்படி?
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இன்று உருதிரண்டு கிடக்கும் ஜாதிகள் ஒன்றினைக்க அடிகோலினர். இதனை அவர்களின் சில சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் சில குறிப்பிட்ட ஜாதியினர் பயனடையும் பொழுது மற்ற ஜாதியினரும் தங்களுக்கான பங்கீட்டுக்காக கோரிக்கை வைத்தனர் பின்னர் தங்களில் இன்னும் சிலபிரிவினரை தங்களோடு இணைத்து ஒரு பெரிய ஜாதியாக உருத்திரண்டு தங்களின் கோரிக்கை உரிமை என்று மோதலுக்கு வழிவகுத்ததை புரிந்துக் கொள்ள ‘தென்னிந்தியாவில் ஜாதி சங்கங்கள் உருவாக்கம்’ பற்றிய நூல் ஆதாரம் :-South India : Political Institutions and Political Change 1880-1940 (DEVELOPMENT OF CASTE ORGANISATION IN SOUTH INDIA) C. J. Baker D. A. Washbrook
மேலும்
ஆங்கிலேயருக்கு முன் அவற்றில் பிரபத்துவ சாதிகளை தவிர மற்ற உறுதிப்படுத்தப்படாத நெகிழ்வுத் தன்மையில்தான் சாதிகள் இருந்தன. அரசாங்கம் ஜாதியை புறக்கணித்திருந்தால் கீழ்ஜாதியினரிடையே முற்றிலும் மாறுபட்ட வேறொன்று அவை படிப்படியாக மாற்றி இருக்கலாம் என்கிறார் மிடில்டன் என்ற மக்கள் தொகை கணக்காளர் 1921ஆம் ஆண்டு.
நான் இந்திய சாதி அமைப்பு முறையை தேடிய பொழுது அதற்கான பிர்ச்சினை நமது கல்வியிலே உள்ளது என்றறிந்து அதனையும் இதன் ஊடாக அறிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சியேதான் இந்த கல்வி பற்றி தேடுதலும்
1765 இல் வங்காளதிலும் பீகாரிலும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தபோது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது கண்டனர்
எனவே அந்நாட்களில் மிகவும் அதிகார உரிமை படுவதாக கருதப் பட்ட மனுதர்மத்தில் உள்ள கருத்துகளை பிரிட்டிஷ் தங்களின் நலனுக்காக 1776 இந்து சட்டத் தொகுப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் . இதன் மூலம் பிரிட்டிஷ்சார் இந்துக்களின் சிவில் சட்டங்களை செயல்படுவதுவதற்கு இந்து சமய சாஸ்திர வல்லுனர்களையும் பண்டிதர்களும் பயன்படுத்தியது போன்றே முஸ்லிம் சட்டங்களை செயல்படுத்துவதில் மௌலிகளை பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு துணையாக இருந்தனர்.
பண்டைய சட்டங்களையும் பழக்கவழக்கங்களில் புரிந்து கொள்ளும் ஆரம்பகால முயற்சிகள் அனேகமாக 18-ம் நூற்றாண்டு வரை நீடித்தன.
இதன் விளைவாக 1776 கல்கத்தாவில் வங்காள ஆசியக் கழகம் நிறுவப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் என்ற அதிகாரி தான் அந்த கழகத்தை நிறுவியவர்.
1785 ல் வில்கின்சால் பகவத் கீதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்தியா எனும் கருத்து உருவாவதற்கு எவ்வாறு தூண்டப்பட்டனர் என்று அறிவோம். இந்தியா எனும் கருத்து உருவாக்கத்தில் ஒரு முக்கிய கூறு உண்டு இந்திய மரபு என்பதாகும். காலனி ஆட்சியாளர்கள் இந்திய நாகரீகம் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் காலணி நிர்வாக அறிக்கைகளும் தேசிய கற்ப்பிதங்களும் பிரிட்டிஷ் ஆட்சியை கட்டியமைக்க பயன்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் ஜாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். அடுத்தடுத்து குடி மதிப்புகளில் இந்திய மக்கள் அனைவரையும் ஜாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஜாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் ஜாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (ஜாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).
இவ்வகையாக மிஷனரிகளும் காலனி அதிகாரிகளும் வெவ்வேறு வகையில் ஜாதி உருவாக்கத்தில் கருத்துகளில் பங்களித்துள்ளனர். இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்து மத நூல்களையும் அந்நூலை விளங்கிக் கொள்ள அன்றைய பண்டீட்டுகளையும் சாஸ்திரிகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இன்னும் சில போக்குகள்
ஆங்கில ஆட்சியில் அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாதார் என்ற சண்டை சச்சரவுகளுக்கு இடையில் இவையெல்லாம் காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்பு கோருவதற்கான என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையின் இன்னொரு பரிணாமம் இதில் முதல் பயனை உய்தவர்கள் பிராமணர்கள் இருந்ததில் வியப்பில்லை.
1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதற் பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனை போக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர்.நவீன கல்வி பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். இப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளைய பங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர்.
ஐரோப்பிய குடியேற்றத்துக்கு முன்னால் அடையாளம் என்பது ஜாதி, தொழில், மொழி சமயபிரிவு, நிலப்பகுதி மற்றும் இடம் போன்ற பல்வேறு அம்சங்களை சார்ந்து இருந்தது. சாதியும் சமயப்பிரிவும் ஒன்றின் மேல் ஒன்று ஏறி இருந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சமயத்திற்கு மேலாக ஜாதிக்கு முதன்மை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய சமூகத்தை காலனிய காலகட்டத்தில் மறு கட்டுமானம் செய்த போது மதத்திற்கு முதன்மை இடம் கொடுக்கப்பட்டது. (ரோமிலா தாப்பர் முற்கால இந்தியா)…எப்படி ஆயினும் வகுப்புவாத வரலாறு அல்லது மததேசியத்தின் அடிப்படையில் மத தேசியவாதம் முன்னிறுத்தப்பட்டது அன்றே அவை இன்று அறுவடை ஆகி கொண்டிருக்கிறது. இவைதான் ஆங்கிலேயர்கள் கொடுத்த கொடை; இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மட்டுமல்ல! மக்களை இனமாக, ஜாதியாக, பகுதியாக பிரிதாளும் எல்லா சூழ்ச்சியையும் அன்றே செய்தனர். ஜொன்ஸ் முல்லர், காடுவெல் இப்படி பலரின் முயற்சி ஆங்கிலேயர்களின் காலனிய ஆட்சி தொடர இந்திய மக்கள் மத்தியில் விரித்த வஞ்சக வலை சாதரணமானவை அல்ல. (ரொமிலா தாப்பர் அறிமுக உரையிலிருந்து முற்கால இந்தியா பக்கம் 2-3.)
ஆன்மீகத்தை நம்பும் பொழுது அவைசார்ந்த மதம் ஜாதி அதன் புனிதத்தையும் நம்பியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இன்று கோயில் நுழைவு என்பதே புனிதத்தை காப்பதும் அந்த எல்லா பிற்போக்குதனங்களையும் ஏற்பதுதானே?.
இன்றைய ஆளும் வர்க்கத்தின் மத மீட்பு பிற்போக்குகளை கல்வியில் புகுத்துதல் எல்லாம் எதற்காக???
இந்த அமைப்பின் ஒடுக்குமுறை, சுரண்டல்முறையை மூடி மறைக்க தானே????
இந்து மதம் பேணிக்காக்கும் ஜாதியை பேசும் பலரும் தவறியும் இந்த சமூக அமைப்புதான் இதற்கான அடிப்படை என்பதனை மறந்து விட்டு ஜாதியை மட்டும் ஒழிக்க பேசுவது ஏனோ புரிந்துக் கொள்ள முடியவில்லை!!!
இந்த பிற்போக்கை தூக்கி பிடிக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறியாமல் இதற்கு தீர்வில்லை அப்படியெனும் பொழுது இதற்கு தீர்வுகாண இந்த அமைப்பு முறையிலே தேடுதல் ஏமாற்று வேலையே.
ஆளும் வர்க்கம் மக்களை பல்வேறு பிரிவாக பிரித்து வைத்து உள் முரண்பாடுகளை தூண்டி அவர்களுக்குள்ளேயே மோத ஜாதி சங்கம் ஜாதி கட்சி அரசியலை ஊக்கி வைக்கிறது.
எல்லாம் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கும் இதே வேலையில் மக்களுக்கு வேலை வாய்ப்பை முடக்கி விட்ட நிலையிலும் அவர்களை ஜாதியாக இருக்க உள்ள சமூகத்தை கட்டி காக்க ஆளும் வர்க்கத்தின் தந்திரங்கள் தானே இவை.
இன்னும் பல கேள்விகள் உள்ளன தொடரும்...
இந்தப்பகுதியில் ஜாதி ஒழிப்பு பற்றி பார்ப்போம்
ஜாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கர்
சாதிமுறையானது இந்தியாவின் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளிலிருந்து எழவில்லை; மாறாக இந்துமதமே சாதியத்தை தோற்றுவித்தது என்று சாதியத்தின் தோற்றம் பற்றிக் கருதினார். இதன் காரணமாக, உற்பத்தி உறவுகளை மாற்றுவதற்கான புரட்சி மூலம் அல்லாமல், இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்வதன் மூலமாகவே சாதியை ஒழிப்பது சாத்தியம் எனக் கருதினார். இதனால், இந்துமதச் சீர்திருத்தத்திற்கான திட்டம் என்ற முறையில், வேதங்களை ஒழிப்பது; ஒரு பொதுவான அதிகாரபூர்வமான இந்துமதத் திருமறைகளை உருவாக்குவது; அரசாங்கமே புரோகிதர்களை நியமிப்பது... தேசிய விடுதலை மற்றும் சாதி ஒழிப்புக்கு ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும்;அவர்களின் அடிவருடிகளான தரகுமுதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதற்கு மாறாக, சாதிய ஒழிப்புக்கு சமூகப் புரட்சியை முன்னிபந்தனை ஆக்கினார். அதாவது, ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு முன்னரே சமூகப்புரட்சி நிகழவேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார். மேலும் பிரிட்டிஷ் காலனியாட்சி, சாதிய ஒழிப்புக்கு பங்காற்றும் எனக் கருதி அதன்மீது நம்பிக்கை கொண்டு அதனுடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை மேற்கொண்டார்.
சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார். இந்த நிலைபாட்டில் இருந்து 1920 ஆண்டில் பிற்பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் மதச்சமத்துவத்திற்காகத் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடங்கினார். அவற்றில் முக்கியமானவை:
1927ல் மஹாத் சத்தியாகிரகம் - கொங்கன் பகுதியில் உள்ள பொதுக்குளத்தை எல்லாச் சாதியினரும் பயன்படுத்த உரிமை கோரி நடைபெற்ற போராட்டம்.
1928ல் மனுஸ்மிருதியை எரித்தது.
1930ல் அமராவதி மற்றும் பிற பகுதியில் நடைபெற்ற கோயில் நுழைவுப் போராட்டங்கள். இப்போராட்டங்கள் ஐந்து ஆண்டுகள் நடந்தன.
ஆக இன்று தலித் அமைப்புகள் - சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.
சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்ற முடியும் என்றும் அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர முடியும் என்று பெரியார் கருதினார். வெள்ளைக்கார ஆட்சி இருக்கும்போது ஜாதி வேறுபாடுகள் எல்லாம் ஒழிக்கும்படியான ஏற்பாடுகளை செய்து கொள்வது அறிவுள்ள வேலை என குறிப்பிட்டு (குடியரசு 30/11/1930) ஜாதி ஒழிப்பிற்கான சட்ட வரைமுறைகளை பெரியார் ஏற்றுக் கொண்டார்.
l பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை ஜாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்றே கூறுவேன். ஏனெனில் அவர் ஜாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார்.
இதைத்தான் முனைவர் கோ. கேசவன் தனது நூலில் குறிப்பிட்டு இது போல,"இங்கிலாந்து தொடக்க கால தொழில் புரட்சி கட்டத்தில் தோன்றிய சார்ட்டியத் தொழிலாளர் இயக்கம் முதலாளியத்தின் மூலதன சுரண்டல் பற்றிய சாராம்ச மற்றும் விஞ்ஞான பூர்வ அறிவின்றி முதலாளியத்தின் கொடுமையை எதிர்த்த பொழுது இயந்திரங்கள் தம்மை சுரண்டுகின்றன என்று கருதி முதலாளிய சுரண்டலின் வெளிப்பாட்டு அம்சங்களான இயந்திரங்களை நொறுக்கியதைப் போன்றதாகும்".(கோ.கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 656).
பெரியாரின் இந்த பயணமானது படிப்பறிவு குறைந்த சமய உணர்வு மேலாதிக்கும் கொண்ட ஜாதி முறையில் இறுக்கத்தால் கட்டுண்ட ஒரு சமூக சூழலில் கலாச்சார மற்றும் அரசியல் தலங்களில் ஜாதிய எதிர்கொண்ட பெரியாரின் கிளர்ச்சி போராட்டம் முதன்மையாக கருத்தக்கது. "புனிதங்களாக கருதப்பட்டவனவற்றை தூக்கி போட்டுடைத்து அவற்றின் மீதான பிரம்மையை நொறுக்குகிற இந்தப் போராட்ட வடிவங்கள் மக்களை திரட்டுவதில் சாதகமான பங்களிப்பு ஆற்றவே செய்தது.ஆனால் இந்த சமூக அமைப்பையும் அதை கட்டிக் காக்கும் அரசு அதிகாரத்தையும் தகர்பதன் மூலமே சாதியமுறைக்காண அடித்தளத்தை தகர்க்க முடியும். அதற்குப் பின்னரும் ஜாதியத்தின் கருத்துகள் அம்சங்களோடு நாம் போராடி தான் ஆக வேண்டும் இத்தகைய கலாச்சார புரட்சியை புரட்சிக்கு பின்னர் நிகழ்த்த வேண்டி உள்ளது".(மேற்கண்ட அதே நூல் பக்கம் 657).
ஆக மார்க்சியம் என்ன சொல்கிறது அடுத்தப்பகுதியில் பார்ப்போம் தோழர்களே...
தொடரும்....
ஜாதி ஒழிப்பு பற்றி மார்க்சிய கண்ணோட்டம் இந்தப் பகுதியில் பார்ப்போம்.
புரட்சிக்கு முந்திய கலாச்சார போராட்டம் ஜாதிமுறையின் பொருளியல் அடிப்படையைத் தகர்க்கும் நோக்குடைய போராட்டங்களோடு ஒருங்கிணைக்கப்படாமல் நடத்தப்பட இயலாது. இது தவறான புரிதல் என்பதோடு மட்டுமின்றி ஒரேஜாதிக்குள் இருக்கும் இருவேறு வர்க்கங்களின் முரண்பாட்டை புரிந்து கொள்ளாமல் சாதியாக அவர்களை ஒன்றிணைக்கும் இடத்தில் ஆதிக்க சமூக அமைப்பை கட்டிக்காகவே பயன்படுகிறது.
ஆளும் வர்க்கம் மக்களுகான வாழ்வியல் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் மூடநம்பிக்கையையும் பிற்போக்கு கலாச்சாரங்களையும் மக்கள் மத்தியில் விதைகிறது. மக்களும் அந்தசிந்தனைக்கு அடிமையாகின்றனர். நிலத்திலிருந்து விடுபடாத கிராம விவசாய மக்கள் தங்களின் இந்நிலைக்கு காரணம் நம்மை ஆள்பவர்களின் சூழ்ச்சி என்று அறியாமல் அவர்கள்விரிதுள்ள விசவலையில் சிக்கியுள்ளனர். உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினை முன் வந்துவிட கூடாது என்பதற்கு அவர்களிடையே சாதி பிரச்சினையை தூண்டி விடுவது அதை மிகத் தெளிவாக அந்தந்த ஜாதி கட்சி செய்கிறது என்றால் அதே வேலையை இந்த இடதுசாரி இயக்கங்களும் தெளிவின்றி வால்பிடித்து கொண்டுள்ளது.
மக்கள் வயிற்று பிரச்சினையை தீர்க்க வக்கற்ற இவர்கள், ஜாதி பிரச்சினையை முன்னுக்கு கொண்டுவந்து அதை சமூக பிரச்சினையாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினையாக்கி அந்த மக்களை இந்த சுழலுகுள் சிக்கவைக்கும் தந்திரமே.
அதில்எல்லாஜாதிகட்சிகளும்தனக்குஅளித்துள்ளவேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது. தன் ஜாதி மக்களின் பிரசினைக்கு காரணம் அந்த ஜாதி மக்கள்தான் என்று திசைதிருப்பி விடுகிறது, அதற்கானகதைகளத்தை அமைத்து உழைக்கும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஜரூரா செய்கிறனர். மேலும் ஜாதி கட்சி தலைவர்கள் ஏதோ தேவதூதர்கள் போல் வலம் வருகின்றனர் என்றால் ஆங்காங்கே குட்டி தாதாகள் ஊர் மட்டத்தில் எல்லா கட்டை பஞ்சாயித்து வேலைகளையும் ஜாதிக்காக செய்கின்றனர் பின் இந்த ஒட்டுண்ணி கூட்டம் அந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சவும் செய்கிறது. தனிநபர் பயகரவாதம், உதிரிதனமான கும்பல் அராஜவாதம் இவை ஜாதிகட்சிகள் தங்களின் இளைஞர்களை பயிற்றுவிக்கிறது. இவை சமூகமாற்றம் பற்றி பேசாமல் ஜாதி சண்டைகளை ஊக்கிவிக்க எல்லா ஜாதிகட்சிகளும் முயலுகிறது. உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஜாதியாக ஒன்று திரளும் அதே வேளையில் வர்க்கமாக அணி திராளாமல் இருக்க இந்த எல்லாம் பார்த்துக் கொள்கிறது.
வேலையின்மை கொடூரமாக உள்ள இந்த நாளில் கூட ஜாதி அடிப்படையில் சில தொழில் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் வழக்கம் வெறும் கலாச்சாரப் போராட்டத்தினால் உடைத்தெறியமுடியாது. சாதியவேர்களைகளைந்தெறியும் போராட்டமாக புரட்சிகர போராட்டமாக இருக்கவேண்டும். பார்ப்பனர்களின் தனிஉரிமைக்கு எதிரான போராட்டமாக சுருக்கி காண்பது கூட நிலஉடமை பிற்போக்குகளைஎதிர்த்தபோராட்டத்தை பார்ப்பன எதிர்த்த போராட்டமாக சுருக்கி காண்பது ஆகும்.
ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை, ஆளும் வர்க்க, பிரதிநிதியை… முதலாளியாகவும், அதிகாரியாகவும், ஆளும்வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் ஜாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில். ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் உடைபடாமல் இதிலிருந்து பாமர மக்கள் விடுபட முடியாது.
இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..
ஆக சமூக அடித்தளமான உற்பத்தி உறவுகளை மாற்றினால் இதன் எல்லா பிற்போக்கு அம்சங்களும் தூக்கி எறியப்படும். அதற்கு தேவை சமூக மாற்றதிற்கான புரட்சி அவைதான் இந்த எல்லா சீர்கேடுகளையும் துடைதெறியும்.
ஆகவே சாதியம் தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்தி முறை தான். இன்றைய பொருளியல் அடித்தளம் தான். அதை புரட்சி மூலம் மாற்றும் போது தான் மேற்கட்டுமானமான சாதியம் தீண்டாமை ஒழியும்.
அப்படியெனும் பொழுது தீர்வென்பது நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவைதான், “இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.”(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து). ஆக ஜாதியின் தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவாக்கப் பட்டதோ அந்த உற்பத்தி முறையை மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் ஜாதி ஒடுக்கு முறைக்கான எல்லா காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும். அதிகார வர்க்கமாக பல்வேறு ஜாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து ஜாதிகளிலும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் ஜாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட்படுகிற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த உழைக்கும் ஏழை எளிய மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது. ஜாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து உழைக்கும் ஏழை எளிய ஜாதியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதே.
அவைதான் இதற்கு முடிகட்டும் அவை புரட்சிக்கு கீழான ஒன்றாக இருக்காது.
முற்றும் விவாதம் உங்களின் கருத்துகளை எதிர் பார்க்கிறேன் தோழர்களே...
No comments:
Post a Comment