தத்துவமும் நடைமுறையும்-4

 தத்துவமும் நடைமுறையும்-4

இலக்கு இணைய இதழ் 15ல் வெளியான தொடர் கட்டுரையின் சில சுருக்கம் இங்கே தோழர்களே வாசித்து பதிலிடுங்கள்.
எல்லாம் அவன் செயல், அவனன்றி அணுவும் அசையாது என்பது ஒரு தத்துவக் கோட்பாடு.
இது ஒரு தத்துவக் கோட்பாடு என்பதை புரிந்துகொள்ளாமலேயே, பல மனிதர்கள் இந்தகோட்பாட்டை ஏற்று பின்பற்றுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்களால்தீர்க்க முடியாது ஏனென்றால் நடப்பதெல்லாம் அவன் செயல் அதாவது கடவுளின் செயல்என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களது பிரச்சனைகளை கடவுள் கவனித்து தீர்த்து
வைப்பார் என்று நம்புகிறார்கள். கடவுளின் செயலுக்கு மீறி யாரும் எதுவும் செய்ய முடியாதுஎன்றே மக்கள் நம்புகிறார்கள்.
எனினும் முதலாளிகள், பண்ணையார்கள், அரசியல் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள்போன்றோர்கள் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் போது நடைமுறையில் மக்கள் அவர்களை எதிர்த்தே போரிடுகிறார்கள். அப்போது எல்லாம் அவன் செயல் போன்ற ஆன்மீக,கருத்துமுதல்வாத தத்துவ கண்ணோட்டத்தை புறக்கணித்து விடுகிறார்கள். தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை நடைமுறையில் புரிந்துகொண்டு அவர்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். அந்த வகையில் மக்கள் நடைமுறை பொருள்முதல்வாதியாக இருக்கிறார்கள்.
ஆகவே நாம் ஆழமாகப் பார்த்தால் மக்கள்பெரும்பாலும் ஆன்மீக கருத்துமுதல் வாதத்தை நம்புபவர்களாக இருந்தாலும் நடைமுறையில் பொருள் முதல்வாத அடிப்படையில் அவர்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வதை நாம் பார்க்கலாம்.
இவ்வாறு மக்கள் நடைமுறை பொருள்முதல் வாதியாக இருந்தாலும், அவர்கள் நடைமுறையில் அவர்களது எதிரிகளை எதிர்த்துப் போராடினாலும், அவர்களது போராட்டத்தில் தோல்வியடைந்து விட்டால், அவர்களது எதிரிகளை எதிர்த்து தம்மால் போராட முடியாது என்று சோர்வடைந்து மீண்டும் எல்லாம் அவன் செயல் என்றகருத்துமுதல்வாத தத்துவக் கண்ணோட்டத் திற்கு வந்துவிடுகிறார்கள். இந்த சூழலில் மக்களின் எதிரிகளை மக்கள் தங்களது ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் வீழ்த்த முடியும் என்பதையும் தமது தோல்வி தற்காலியமானதுதான். மக்களின் எதிரிகள் தங்களது சொந்த முரண்பாடுகளாலேயே பலவீனமடைவார்கள் என்பதையும் அவர்களை மக்கள் போராடி வீழ்த்த முடியும் என்றநம்பிக்கையை ஊட்டினால், மக்கள் தொடர்ந்து போராடுவதற்கான தத்துவ வழிகாட்டல் இருந்தால் மக்கள் தொடர்ந்து போராடி அவர்களின் எதிரிகளை வீழ்த்துவார்கள்.
அந்த வகையில் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய தத்துவம்தான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஆகும். அந்த தத்துவ கண்ணோட்டத்தை உழைக்கும் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது இலக்கின் முதன்மையான பணிகளில் ஒன்று என்று கருதியே இந்த கட்டுரையை இலக்கு வெளியிடுகிறது.
கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் கூலி என்றால் என்ன, லாபம் என்றால் என்ன, பொருளாதார நெருக்கடி என்றால் என்ன, என்பது போன்ற பொருளாதாரத்துறையைச் சேர்ந்த கேள்விகளுக்கும் மற்றும் ஜனநாயகம் என்றால் என்ன?, சர்வாதிகாரம் என்றால் என்ன?, வர்க்கங்கள், வர்க்கப் போராட்டங்கள் என்றால் என்ன?, என்ற அரசியல் துறை கேள்விகளுக்கும், மார்க்சியத்தை ஓரளவு கற்றுத் தேர்ந்த கம்யூனிஸ்டுகள் பதில் சொல்லிவிட முடிகிறது. ஆனால் இந்த பிரபஞ்சம் எப்படி எங்கிருந்து வந்தது?, இதனை யாராவது உருவாக்கினார்களா?, அறம், மறம், பண்பு என்பவை என்ன? மெய் அதாவது உண்மை என்பது எது? பொய் என்பது எது? சிந்தனைகள், தத்துவங்கள் என்பவை என்ன? தத்துவங்கள் எப்படி தோன்றுகின்றன? தத்துவங்கள் எல்லாம் என்னென்றும் ஒரே மாதிரியுள்ளனவா? அல்லது மாறிக்கொண்டிருக்கும் தன்மைபெற்றனவா? அவை மாறுவதற்கு என்ன காரணம்? இப்படிப்பட்ட தத்துவ அறிவு சம்பந்தப்பட்ட தத்துவார்த்த அல்லது மெய்ஞானத் துறையைச் சேர்ந்தகேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக விடை சொல்ல முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். அதாவது சமூக மாற்றத்திற்கான அறிவை வளர்த்துக் கொள்ளாத நிலையிலேயே கம்யூனிஸ்டுகள் உள்ளனர். கம்யூனிஸ்டுகளுக்கே இந்த நிலை என்றால் கம்யூனிஸ்டுகளை பின்பற்றும் உழைக்கும் மக்களின் நிலை எப்படி இருக்கும்?.
ஆகவே கம்யூனிஸ்டுகளும், அவர்களை பின்பற்றும் உழைக்கும் மக்களும் அறிவுஜீவிகளும் சமூக மாற்றத்திற்கான அறிவியல் தத்துவமான மார்க்சிய தத்துவத்தை படித்து புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த தத்துவத்தை எந்தளவுக்கு நாம் புரிந்துகொண்டு இருக்கிறமோ அந்தளவுக்கு நம்மிடம் கேட்க்கப்படும் கேள்விகளுக்கு மிகச் சரியான பதிலை அளிக்க முடியும்.
மேலும் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை நம்மால் கண்டுபிடிக்க முடியும். மேலும் அதனை நடைமுறைப் படுத்தி தவறுகளை விரைவில் திருத்திக்கொண்டு முன்னேற முடியும். ஆகவேதான் மார்க்சிய தத்துவத்தை இலக்கு தொடர் கட்டுரையாக கொண்டுவருகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் இல்லாத நாடே கிடையாது. அப்படி மூலைக்கு மூலை அவர்கள் இருந்துகொண்டிருந்தாலும், அவர்கள்எதைப்பற்றி பேசினாலும், சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதிரி யாகப் பேசுகிறார்கள் என்று நல்லெண்ணம் படைத்தவர்கள் வியப்படைகிறார்கள். இதற்கு காரணம் மாஸ்கோவைகம்யூனிஸ்டுகள் பின் பற்றுகிறார்கள் என்று கெட்ட எண்ணம் கொண்டோர் பேசுகிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின்நலன்களுக்காக பாடு படுவதை லட்சியமாகக் கொண்டவர்கள். உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்கள் ஒரேவிதமான முதலாளித்துவ ஒடுக்கு முறையின் கீழ் வறுமையிலும் பசி பட்டினியிலும் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளும் உலகம் முழுவதிலும் ஒன்றுபோல் இருக்கிறது.
இத்தகைய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்ற கம்யூனிஸ்டுகளின் உணர்வுகளும் பேச்சும் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மேலும் கம்யூனிஸ்டு களுக்கு ஒரு உலகப்பார்வை ஒன்று இருக்கிறது. அந்த உலகப்பார்வையின் அடிப்படையில் பிரச்சனைகளை புரிந்துகொள்வதால் உலகம் முழுவதிலு முள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரே மாதிரியான தீர்வுகளை முன்வைத்து பேசுகிறார்கள். இவ்வாறு கம்யூனிஸ்டு களின் உலகப்பார்வையான மார்க்சியம் என்று சொல்லப்படும் இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ அறிவை பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒவ்வொரு
பிரச்சனையிலும் அதனை தீர்ப்பதிலும் ஒரு ஒன்றுபட்ட கருத்திற்கு வரமுடியும், வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் ஒரு ஒன்றுபட்ட கருத்திற்கு வந்துள்ளார்கள். . அவ்வாறு ஒன்றுபட்ட கருத்திற்கு வருபவர்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகப் போராட முடியும், வரலாற்றில் அவ்வாறு ஒன்றுபட்டு போராடியிருக்கிறார்கள்.
இத்தகைய மார்க்சிய தத்துவக் கண்ணோட்டத்தை அரைகுறையாகப் பெற்றவர்களாலும்,முற்றிலும் மார்க்சிய தத்துவ அறிவு இல்லாதவர்களாலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் அதன் தீர்விலும் ஒன்றுபட்ட கருத்திற்கு வரமுடியாது.
ஆகவேதான் கம்யூனிஸ்டுகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு கம்யூனிஸ்டு கள் ஒவ்வொருவரும் மார்க்சிய தத்துவ கண்ணோட்டத்தை பயில வேண்டும் என்கிறோம். மேலும்கம்யூனிச அமைப்புத் தலைவர்கள் மார்க்சியத் தத்துவத்தை அணிகளுக்கு போதிக்க வேண்டும் என்கிறோம்.
தத்துவத்தை மெய்ஞானம் என்றும் கூறுவார்கள். மெய் என்றால் உண்மை என்று பொருள்படும், ஞானம் என்றால் அறிவு என்று பொருள்படும்.
ஆகவே மெய்ஞானம் என்ற சொல்லின் பெருள்உண்மையை அறிவதற்கான அறிவு என்று பொருள்படும்.
ஆகவே தத்துவகண்ணோட்டம், அல்லது தத்துவத்தின் நோக்கமே உண்மையை அறிந்து கொள்வதற்கான ஆயுதமாக இருக்கிறது என்பதுதான்.
எனினும் தத்துவத்தில் இரண்டுவகைகள் உள்ளது. ஒன்று தத்துவத்தின் நோக்கத்திற்கானதுஅதாவது உண்மையை அறிந்துகொள்வதற்கு நமக்கு வழிகாட்டக் கூடியது. மற்றொன்றுதத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரானது, அதாவது உண்மையை நாம் அறிந்துகொள்வதற்கு தடையானது அல்லது எதிரானதாகும்.
தத்துவத்தின் உண்மையான நோக்கமான உண்மையை அறிந்துகொள்ள நமக்கு உதவக்கூடிய தத்துவம் என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல்பொருள்முதல்வாதமாகும். இவ்விரண்டையும் இணைத்ததையே மார்க்சிய தத்துவம்என்பார்கள். இந்த மார்க்சிய தத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்களால் உண்மையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும் பொய்யையும் இனம்கண்டு புறக்கணிக்க முடியும்.உண்மைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து உழைக்கும் மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டமுடியும்.
தத்துவத்தின் நோக்கத்திற்கு எதிரான பொய்யான தத்துவம்தான் ஆன்மீகவாதம் மற்றும்கருத்துமுதல்வாதமாகும். இந்த தத்துக் கண்ணோட்டம் கொண்டவர்களால் உண்மையைஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது. பொய்யானவற்றையே உண்மை என்று தலைகீழாக நம்புவார்கள், மற்றவர்களையும் நம்பவைத்து ஏமாற்றுவார்கள். இந்த தத்துமானது சுரண்டும் வர்க்கங்களை பாதுகாத்து உழைக்கும் மக்களை ஏமாற்றும் தத்துவமாகும். தத்துவத்தை நாம் ஏன் பயில வேண்டும்?எல்லாவற்றிற்கும் முதலும் மூலமும் பொருளே என்று ஒரு தத்துவம் கூறுகிறது. அதனையே பொருள்முதல்வாத தத்துவம் என்று அழைக்கப்படுகிறது. அந்த தத்துவத்தின் அடிப்படைகளை ஆரம்பக் கோட்பாடுகளை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்தகட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு குறிப்பிட்ட தத்துவத்துடனும், ஒரு குறிப்பிட்ட ஆய்வு முறையுடனும் மார்க்சியமானது இறுகப் பிணைக்கப் பட்டுள்ளது. அதாவது மார்க்சியமானது இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்துடனும், அதன் ஆய்வு முறையுடனும் பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்ததத்துவத்தை நாம் அவசியமாக படித்தறிய வேண்டும். இதை நாம் கற்றுத் தேர்ந்தோமானால்நம்மால் மார்க்சியத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவ சீர்திருத்தவாதம்,அடையாள அரசியல், பின்நவீனத்துவம், குறுங்குழுவாதம், திருத்தல்வாதம், கலைப்புவாதம் போன்ற மக்களுக்கு எதிரான தத்துவங்கள் கிளப்புகின்ற வாதங்களை நாம் முறியடிக்க முடியும்.
அதன் மூலம் நல்ல பயனளிக்கத்தக்க அரசியல் போராட்டத்தையும் நாம் நடத்திச் செல்ல முடியும். "ஒரு புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்கவே முடியாது" என்று லெனின் சொல்லியிருக்கிறார். இதனை நாம் எப்போதும் மறக்கக்கூடாது.
இதன் பொருள் நடைமுறையுடன் தத்துவம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.
நடைமுறை என்றால் என்ன? ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை, விஞ்ஞானத்தை யதார்த்தத்தில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் அல்லது செயல்படுத்தும் செய்கையைத்தான் நடைமுறை என்கிறோம். உதாரணமாக தொழிலும் விவசாயமும் என்ன செய்கின்றன? இரசாயனத்துறையோ அல்லது பௌதீகத் துறையோ அல்லது உயிரியல் துறையோ சேர்ந்த தத்துவ விஞ்ஞானங்களை அவை யதார்த்த அனுபவமாக செய்து தருகின்றன. அதாவது நடைமுறையில் விவசாயத்தில் ஈடுபட்ட மனிதர்களின் அனுபவத்திலிருந்து விவசாயம் தொடர்பான அறிவியல் உண்மைகள் அல்லது விதிகள் கண்டுபிடித்து பொதுவான விதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்தப் பொது விதிகளைபுரிந்துகொண்ட மனிதர்கள் தங்களது விவசாய நடவடிக்கையில் செயல்படுத்து கிறார்கள். அத்தகைய செய்கைகளே நடைமுறையாகும்.
தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்