கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பி லெனின் தனது கருத்தை இந்தக் கட்டுரையின் மூலம் நமக்கு வழிகாட்டுகிறார். ஆகவே இந்தக் கட்டுரையை ஆழமாகப்படித்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு பாகம் 6. முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாமா?
மகாஅலட்சியமாய்,கிஞ்சிற்றும் பொறுப் புணர்வின்றி, ஜெர்மன் “இடதுசாரிக்” கம்யூனிஸ்டுகள் இக்கேள்விக்கு எதிர்மறையில் பதிலளிக்கிறார்கள். அவர்களுடைய வாதங்கள் யாவை? மேலே எடுத்துரைக் கப்பட்ட மேற்கோளில் பார்த்தோம்:
“வரலாற்றுவழியிலும்அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப் போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும்எவ்வகையானபின்னடைவையும்…தீர்மானமாய்நிராகரித்தேஆகவேண்டும்… ”நகைக்கத்தக்க ஆடம்பரத்துடன் இது கூறப்படுகிறது, கண்கூடாகவே தவறானது இது. நாடாளுமன்ற முறைக்குச் “சரியும் பின்னடைவு” என்கிறார்கள்! ஜெர்மனியில் ஏற்கனவே சோவியத் குடியரசு ஒன்று உதித்துவிட்டதா, என்ன? அப்படி ஒன்றும் தெரியவில்லையே!”சரியும் பின்னடைவு” என்பதாகப் பேசுகிறார்களே, எப்படி அது? பொருளற்ற சொல்லடுக்கேயன்றி வேறு என்ன?
நாடாளுமன்ற முறை “வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்ட”ஒன்றுதான். பிரச்சார அர்த்தத்தில் இது மெய்தான்.ஆனால் நடைமுறையில் அதனை வெற்றி கொள்ளும் நிலையைவந்தடைய இன்னும் நெடுந்தொலைவுள்ளதென்பது யாவரும் அறிந்ததே. முதலாளித்து வத்தையும் “வரலாற்று வழியில் காலாவதியாகிவிட்ட” ஒன்றாக மிகப் பலபத்தாண்டுகளுக்குமுன்பே,முழுநியாயத்துடன் அறிவித்திருக்கலாம். ஆயினும் அது, முதலாளித்துவத்தின் அடிப்படை மீது மிக நீண்டமிகவும்விடாப்பிடியான ஒரு போராட்டத்துக்கான அவசியத்தை நீக்கி விடவில்லையே.நாடாளுமன்றமுறை உலகவரலாற்றின் கண்ணோட்டத்தில் “வரலாற்றுவழியில் காலாவதியானதுதான்”அதாவது முதலாளித்துவ நாடாளுமன்ற முறையின் சகாப்தம்முடிவுற்று விட்டதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சகாப்தம் தொடங்கிவிட்டதும் மெய்தான். இது மறுக்க முடியாததே. ஆனால்உலக வரலாறு பல பத்தாண்டுக் கணக்கில் அளக்கப்படும் ஒன்று. உலக வரலாற்றின்
அளவுகோலைக் கொண்டு அளக்கையில்,பத்து அல்லது இருபது ஆண்டுகள் முன்னதாகவோபின்னதாகவோகொள்வதால், மாறுபாடு ஏற்பட்டு விடுவதில்லை. உலக வரலாற்றின்கண்ணோட்டத்தில் இது உத்தேசமாகக்கூட மதிப்பிட முடியாத ஓர் அற்பவிவகாரம். ஆனால் உலக வரலாற்றின் இந்தஅளவுகோலை அன்றாட நடைமுறை அரசியலில் பிரயோகிப்பதுஅப்பட்டமான தத்துவார்த்தப் பிழையாகிவிடுமே.
நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதா?” இது முற்றிலும் வேறொருவிவகாரம்.இதுஉண்மையானால், “இடதுசாரிகளின்” நிலை வலுமிக்கதுதான். ஆனால்துருவிப்பரிசீலிக்கும்பகுத்தாய்வினால் நிருபிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஆனால் “இடதுசாரிகளுக்கு”; இந்த விவகாரத்தை எப்படி அணுகுவது என்பது கூட தெரியவில்லை.
கம்யூனிஸ்டு அகிலத்தின் ஆம்ஸ்டார்டாமிலுள்ள இடைக் காலப் பூயூரோவின் செய்திவெளியீடு (Bulletin of the Provisional Bureau in Amsterdam of the Communist International,February 1920), இதழ் 1-ல் வெளிவந்த “நாடாளுமன்ற முறை பற்றிய ஆய்வுரைகள்” டச்சு - இடதுசாரி, அல்லது இடதுசாரி- டச்சு முயற்சிகளை வெளியிடுகிறது என்பது தெளிவு --இதிலுள்ள பகுத்தாய்வும், அடியில் நாம் காணப் போவது போல, படுமட்டமாகவே இருக்கிறது.
முதலாவதாக,ரோசாலுக்சம்பர்க்,கார்ல் லீப்க்னெக்ட் போன்ற சிறந்த அரசியல்தலைவர்களின் கருத்துக்கு விரோதமாய் ஜெர்மன் “இடதுசாரிகள்” நாடாளுமன்ற முறை”அரசியல் காலாவதியாகி விட்டது” என்று 1919 ஜனவரியிலேயே கருதியது நமக்குத் தெரிந்ததே.28 “இடதுசாரிகளின்” இந்தக் கருத்து தவறானது என்பதும் நாம் அறிந்ததே,
நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது” என்னும் நிர்ணயிப்பை ஒரே அடியில் ஒழித்திட இந்த ஓர் உண்மையே போதும். அக்காலத்தில்சர்ச்சைக்குஇடமில்லாததாய்
இருந்த அவர்களது தவறு,இனி தவறல்ல என்றானது எப்படி என்பதை நிருபிக்க வேண்டிய பொறுப்பு இந்த “இடதுசாரிகளுடையது” ஆகும். இதை நிருபிக்க அவர்கள் துளிகூட சான்று அளிக்கவில்லை, அளிக்கவும் முடியாது. ஓர் அரசியல் கட்சி தன்னுடைய தவறுகள் குறித்து அனுசரிக்கும் போக்கு, அக்கட்சி எந்தஅளவுக்குப் பொறுப்புணர்ச்சி கொண்டுள்ளது என்பதையும், அதன் வர்க்கத்துக்கும்உழைப்பாளிவெகுஜனங்களுக்கும் அதற்குள்ள கடமைகளை நடைமுறையில் எந்த அளவுக்கு அது நிறைவேற்றுகிறது என்பதையும் மதிப்பிட்டு முடிவு செய்வதற்கான மிக முக்கியமான, நம்பகமான வழிகளில் ஒன்றாகும். தவறை ஒளிவுமறைவின்றி ஒப்புக் கொள்ளுதல், அத்தவறுக்குரிய காரணங்களை நிச்சயித்துக் கொள்ளுதல், அதனை நோக்கி இட்டுச் சென்ற நிலைமைகளைப் பகுத்தாய்தல், இதைச் சரிசெய்வதற்குரிய வழிகளை ஆராய்ந்தறிந்து வகுத்துக் கொள்ளுதல் -- இவையே பொறுப்புணர்ச்சி கொண்ட ஒரு கட்சிக்குரிய அடையாளம்; இவ்வாறுதான் அது தனது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும்; இவ்வாறுதான் அது தனது வர்க்கத்துக்கும்பிறகு வெகுஜனங்களுக்கும் போதமளித்து பயிற்றுவிக்க வேண்டும். ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் எச்சரிக்கையும் செலுத்தவும் தவறியதன் மூலம்,தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்லஎன்பதையும்,அறிவுத்துறையினரையும்அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளையும் காப்பியடிக்கும் ஒரு சிலதொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சி அல்ல என்பதையும் நிருபித்துக் கொண்டு விட்டனர்
.இரண்டாவதாக,ஏற்கனவே நாம் விவரமாய் மேற்கோள் கூறிய ஃபிராங்பார்ட் “இடதுசாரிக்”குழுவின் அதே பிரசுரத்தில் நாம் படிப்பதாவது:”.... இன்னும் மையத்தின் கொள்கையைப்” (கத்தோலிக்க“மையக்”கட்சி)“பின்பற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சித்தன்மை வாய்ந்தோரே ஆவர். கிராமப்பாட்டாளி வர்க்கத்தினர் எண்ணற்ற எதிர்ப்புரட்சித்துருப்புகளாகி விடுகின்றனர்” (மேலே கூறிய பிரசுரத்தின் 3 ஆம் பக்கம்) இந்த முடிவு வரையறையற்றதாகவும் மிகைப்படக்கூறுவதாகவும்உள்ளதென்பதையாவும் புலப்படுத்துகின்றன. ஆனால் இங்கு எடுத்துரைக்கப்படும் அடிப்படை உண்மை மறுக்க முடியாததாகும். இதனை“இடதுசாரிகள்”ஏற்றுக்கொள்வதானது அவர்களுடைய தவறுக்குரிய தெளிவான சான்றாகிவிடுகிறது. பாட்டாளிவர்க்கத்தினரில்“லட்சக்கணக்கானோரும்””எண்ணற்றோரும்”இன்னமும் பொதுவாக நாடாளுமன்ற முறையை ஆதரிப்பதோடன்றி, அப்பட்டமான “எதிர்ப்புரட்சித் தன்மை வாய்ந்தோராகவும்” இருக்கையில், “நாடாளுமன்றமுறை அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதென்று” கூறுவதுஎப்படி!? ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதியாகிவிடவில்லை என்பது தெளிவு.ஜெர்மனியிலுள்ள “இடதுசாரிகள்” தமது விருப்பத்தை, அரசியல் - சித்தாந்தப்போக்கை எதார்த்த உண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டு விட்டனர் என்பது விளங்குகிறது. புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது.
ரஷ்யாவில் மிகவும் நீண்ட நெடுங்காலத்துக்கு மிகப் பல்வேறு வடிவங்களில் ஜாரிசத்தின் மிகக் கொடிய காட்டுமிராண்டித்தனமானஒடுக்குமுறையானது பல்வேறு வகைப்பட்ட புரட்சியாளர்களையும் தோற்றுவித்தது. இப்புரட்சியாளர்கள்வியத்தகு பற்றுறுதியும் ஆர்வமும் வீரமும் நெஞ்சுறுதியும் வெளிப்படுத்தினர். ரஷ்யாவில் நாங்கள் புரட்சியாளர்களுடைய இந்தத் தவறை மிகவும் அருகாமையிலிருந்து கவனித்திருக்கிறோம். மிக உன்னிப்பாய் இதனை நாங்கள் ஆராய்ந்து, இதைப்பற்றி நேரடியாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். எனவேதான், ஏனையோரிடத்தும் இது எழும்போது எங்களால் மிகத் தெளிவாய் இதனைப் பார்க்க முடிகிறது. ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு நாடாளுமன்ற முறை “அரசியல் வழியில்காலாவதியானதுதான்.” ஆனால் -- இதுவே இங்குள்ள முக்கிய விஷயம் -- நமக்குக்காலாவதியாகிவிட்டதால்அதுவர்க்கத்துக்கும்,வெகுஜனங்களுக்கும் காலாவதியாகி விட்டதாகும் எனக் கருதக் கூடாது. “இடதுசாரிகளுக்கு” ஒரு வர்க்கத்தின் கட்சியாக, வெகுஜனங்களின் கட்சியாகச் சிந்தனை செய்யத் தெரியவில்லை. அவ்வாறுசெயல்படத் தெரியவில்லை என்பதையே திரும்பவும் இங்கு காண்கிறோம்.
வெகுஜனங்களுடைய நிலைக்கும் வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கும் நீங்கள் சரிந்துவிடக் கூடாது. அதில் சர்ச்சைக்கு இடமில்லை.அவர்களுக்குக் கசப்பான உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். அவர்களுடைய முதலாளித்துவ - ஜனநாயக, நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களை, அவை தப்பெண்ணங்கள் என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான் உங்களுடைய கடமை. ஆனால் அதேபோதில் (வர்க்கத்தின் கம்யூனிஸ்டு முன்னணிப் படை மட்டுமின்றி) வர்க்கம் அனைத்தின், (உழைப்பாளி மக்களின் முன்னேறிய பகுதியோர் மட்டுமின்றி) உழைப்பாளி மக்கள் திரளினர் அனைவரின் வர்க்க உணர்வு, தயார்நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை நீங்கள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும். ஆலைத் தொழிலாளர்களில் “லட்சக்கணக் கானோரும்””எண்ணற்றோரும்” வேண்டாம்,ஓரளவுபெரிதானசிறுபான்மையினர் மட்டும்தான் கத்தோலிக்கப் பாதிரிமார் களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றாலுங்கூடகிராமாந்தரத் தொழிலாளர்களிலும் இதேபோன்ற சிறுபான்மையினர் மட்டும்தான் நிலப்பிரபுக்களையும் பணக்கார விவசாயி களையும் (Grossbauern) பின்பற்றுகிறார்கள் என்றாலுங்கூட ஜெர்மனியில் நாடாளுமன்றமுறை அரசியல்வழியில் இன்னமும் காலாவதியாகி விடவில்லை என்பதையே,புரட்சிகரப் பாட்டாளிவர்க்கக் கட்சி அதன் சொந்தவர்க்கத்தின் பிற்பட்ட பகுதியோரைப் போதம் பெறச் செய்யும்பொருட்டும், அடக்கி ஒடுக்கப்படும், வளர்ச்சியில்லாத,அறியாமையில் ஆழ்ந்த கிராமாந்தரவெகுஜனங்களைப் போதம் பெறச் செய்து அறிவொளி தரும் பொருட்டும்,நாடாளுமன்றத்தேர்தல்களிலும் நாடாளுமன்ற அரங்கில் நடைபெறும் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொள்வது இக்கட்சியின் கடமையாகும் என்பதையே, இதுசந்தேகத்துக்குஇடமின்றிகுறிப்பிடுகிறது.முதலாளித்துவ நாடாளுமன்றத்தையும் இதர வகையான பிற்போக்குநிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்தே ஆக வேண்டும்; ஏனெனில்பாதிரிமார்களால்ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.
மூன்றாவதாக,“இடதுசாரிக்”கம்யூனிஸ்டுகள் போல்ஷ்விக்குகளாகிய எங்களைப் புகழ்ந்து நிறையவே பேசுகிறார்கள். எங்களைப் புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு போல்ஷ்விக்குகளுடையபோர்த்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயலுங்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்லவேண்டுமென்று சில நேரங்களில் தோன்றுகிறது.ரஷ்ய முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில், 1917 செப்டம்பர் -- நவம்பரில், நாங்கள் பங்கெடுத்துக் கொண்டோம்,எங்களுடைய போர்த்தந்திரம்சரியா, தவறா? சரியல்ல என்றால், இதனைத் தெளிவாக எடுத்துரைத்து நிருபிக்க வேண்டும்.
ஏனெனில் சர்வதேச கம்யூனிசத்தின் பிழையற்ற போர்த்தந்திரத்தை வகுத்து உருவாக்குவதற்கு இது அவசியமாகும். அது சரியானதே என்றால், இதிலிருந்து சில முடிவுகளைக் கிரகித்துக் கொண்டாக வேண்டும். ரஷ்யாவின் நிலைமைகளும் மேற்கு ஐரோப்பாவின் நிலைமைகளும் ஒன்றெனக் கொள்ளலாகாது என்பது உண்மையே.ஆனால் “நாடாளுமன்ற முறைஅரசியல்வழியில்காலாவதியாகிவிட்டது”என்ற நிர்ணயிப்பின் பொருள் பற்றிய இந்தக் குறிப்பிட்டபிரச்சனையைப் பொறுத்தவரை,எங்களுடையஅனுபவத்தை தக்கபடி கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும். ஏனெனில் ஸ்தூலமான அனுபவம்கணக்கில்எடுக்கப்பட்டாலொழியஇது போன்ற நிர்ணயிப்புகள் பொருளற்ற வெற்றுச் சொல்லடுக்குகளாக எளிதில் மாறிவிடும்.
1917 செப்டம்பர் -- நவம்பரில்,நாடாளுமன்ற முறை ரஷ்யாவில் அரசியல் வழியில் காலாவதியாகி விட்டதாகக்கருதரஷ்யபோல்ஷ்விக்குகளான எங்களுக்கு மேலையக்கம்யூனிஸ்டுகள் யாரையும் விட அதிக அளவு நியாயம் இருக்கவில்லையா? இருந்ததென்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இங்கு எழும் கேள்விமுதலாளித்துவநாடாளுமன்றங்கள் அதிக காலம்இருந்துள்ளனவா அல்லது சிறித காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல;பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும்,முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்)எந்த அளவுக்கு (சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறையிலும்) தயாராய் இருக்கிறார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி. 1917 செப்டம்பர் -- நவம்பரில் ரஷ்யாவில் நகரத் தொழிலாளி வர்க்கத்தினர்களும் படைவீரர்களும் விவசாயிகளும், விசேஷ நிலைமைகள் பலவும் காரணமாய், சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலே மிகவும்ஜனநாயகமானதைக்கலைத்திடவும், மிகவும் சிறப்பான அளவுக்குத் தயார் நிலையில் இருந்தனர் என்பது கிஞ்சிற்றும் மறுக்க முடியாத, நூற்றுக்கு நூறு நிலைநாட்டப்பெற்றவரலாற்றுஉண்மையாகும். இருந்த போதிலும் போல்ஷ்விக்குகள் அரசியல் நிர்ணய சபையைப் பகிஷ்காரம் செய்யவில்லை. அதற்குப் பதில்,பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதற்கு முன்பும் பிற்பாடும் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டனர். ரஷ்யாவில் அரசியல் நிர்ணயச் சபையின் தேர்தல் முடிவுகளை விவரமாகப் பகுத்தாயும் மேற்கூறிய கட்டுரையில், இந்தத் தேர்தல்கள் மதிப்பிடற்கரிய (பாட்டாளி வர்க்கத்துக்கு மிகமிகப் பயனுள்ள) அரசியல் பலன்களை அளித்தன என்பது என்னால் நிருபிக்கப்பட்டிருக்கிறதென நான் திடமாக நம்புகிறேன்.
இதிலிருந்து பெறப்படும் முடிவு சிறிதளவும் மறுக்க முடியாததாகும்: சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்களே முன்னதாகவும், இந்த வெற்றிக்குப்பிற்பாடுங்கூட, முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக் கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துக்குத்தீங்கிழைப்பதற்குப் பதிலாய்,இதுபோன்றநாடாளுமன்றங்கள்கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப் பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்கு நிரூபிப்பதற்கு நடைமுறையில் உதவுகிறது என்பதும்,இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை“அரசியல்வழியில்காலாவதியாக்குவதற்குத்”துணை புரிகிறதுஎன்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அனுபவத்தை உதாசீனம் செய்துவிட்டு, அதே நேரத்தில் கம்யூனிஸ்டு அகிலத்துடன் -- தனது போர்த்தந்திரத்தை சர்வதேசரீதியில் (குறுகலான, அல்லது தனிப்பட்டதான எந்தவொரு தேசத்துக்குமான போர்த்தந்திரமாயிராது, சர்வதேசப் போர்த்தந்திரமாய்) வகுத்துக் கொள்ள வேண்டிய கம்யூனிஸ்டு அகிலத்துடன் -- இணைப்புரிமை கொண்டாடுவதானது மிகக் கொடுந் தவறிழைப்பதாகவும், சர்வதேசியத்தைச் சொல்லளவில் ஏற்றுக் கொண்டு செயலில்கைவிடுவதாகவுமே அமைகிறது.
நாடாளுமன்றங்களில்பங்குகொள்ளாதிருப்பதற்கு ஆதரவான “டச்சு இடதுசாரி” வாதங்களைஇனிப் பரிசீலனை செய்வோம், மேற்கூறிய”டச்சு” ஆய்வுரைகளில் மிகவும் முக்கியமானதான 4 ஆவது ஆய்வுரையின் வாசகம் இதோ:
“முதலாளித்துவ பொருளுற்பத்தி அமைப்பு முறிந்து போய், சமுதாயம் புரட்சிக்குரிய நிலையில் இருக்கையில், நாடாளுமன்றச் செயலானது வெகுஜனங்களது நேரடியான செயலுடன்ஒப்பிடும் போது படிப்படியாக முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. இந்த நிலைமைகளில் நாடாளுமன்றம் எதிர்ப்புரட்சியின்மையமாகவும்செயலுறுப்பாகவும் ஆகிவிடும்போது,மறுபுறத்தில் தொழிலாளி வர்க்கம் சோவியத்துக்களைத் தனதுஆட்சியதிகாரத்துக்கானகருவிகளாக உருவாக்கிக் கொள்ளும்போது,நாடாளுமன்றச் செயலில் பங்கு கொள்வதை முற்றாகவும் முழுவதாகவும் கைவிடுவது அவசியமாகவும் கூட ஆகிவிடலாம்.”முதலாவது வாக்கியம் தவறென்பது தெளிவாக விளங்குகிறது. ஏனெனில் வெகுஜனங்களது செயல் -- உதாரணமாய், ஒரு பெரிய வேலைநிறுத்தம் -- புரட்சியின் போதோ, புரட்சிகரநிலையிலோமட்டுமின்றி,எல்லாக் காலங்களிலுமே நாடாளுமன்றச் செயற்பாட்டை விட மிகவும் முக்கியமானதாகும். வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் தவறான, ஏற்கப்படமுடியாத,அபத்தமான இந்த வாதம்,சட்டப்பூர்வமானபோராட்டத்தையும் சட்டவிரோதமான போராட்டத்தையும் இணைத்திடுவதன் முக்கியத்துவம் குறித்த பொதுவான ஐரோப்பிய அனுபவத்தையும் (1848, 1870 ஆம் ஆண்டுப் புரட்சிகளுக்கு முந்திய பிரெஞ்சு அனுபவம், 1878- 90 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் அனுபவம் முதலியவை) ரஷ்ய அனுபவத்தையும் (மேலே பார்க்கவும்) இவ்வாசிரியர்கள் அறவே உதாசீனம் செய்கிறார்கள் என்பதைத்தான் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இப்பிரச்சனை, பொதுவாகவும் குறிப்பாகவும் அளவுகடந்தமுக்கியத்துவமுடையதாகும். ஏனெனில் நாகரிக வளர்ச்சியுடைய முன்னேறி நாடுகள்யாவற்றிலும் இது போல இணைத்திடுதல் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கட்சிக்கு மேலும்மேலும் அவசியமாகிவிடும் காலம் -- ஏற்கனவே ஓரளவுக்கு இது அவசியமாகி விட்டதென்றும்கூறலாம் -- விரைவாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கும்,முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான உள்நாட்டுப் போர் முதிர்ச்சியடைந்து நெருங்கி வர இருப்பதாலும், சட்ட முறையைத் துச்சமாக மதித்து எல்லா வழிகளிலும் அதனைமீறிடும்குடியரசு அரசாங்கங்களும் பொதுவாகமுதலாளித்துவஅரசாங்கங்களும் (அமெரிக்கா இதற்குஓர் உதாரணமாய் விளங்குகிறது) கம்யூனிஸ்டுகள் மீது வெறித்தனமான அடக்குமுறையை ஏவி விடுவதாலும் இன்ன பிறவற்றாலும் இந்த நிலைமை ஏற்பட்டு வருகிறது. மிகவும் முக்கியமானஇந்தப் பிரச்சனையை டச்சு - இடதுசாரிகளும், பொதுவாக எல்லா இடதுசாரிகளும் உணர முற்றிலும் தவறி விட்டனர்.
இரண்டாவது வாக்கியம், முதலாவதாக வரலாற்று வழியில் தவறானது. போல்ஷ்விக்குகளான நாங்கள் படுமோசமானஎதிர்ப்புரட்சிநாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொண்டோம். இவ்வாறு பங்கெடுத்துக் கொண்டதானது,ரஷ்யாவில் முதலாவது முதலாளித்துவப் புரட்சிக்கு (1905) பிறகு, இரண்டாவது முதலாளித்துவப் புரட்சிக்கும் (பிப்ரவரி 1917), பிற்பாடு சோசலிசப் புரட்சிக்கும் (அக்டோபர் 1917)பாதையைச் செப்பனிடுவதற்குப் புரட்சிகரப் பாட்டாளிவர்க்கக் கட்சிக்குப் பயனுள்ளதாக இருந்ததன்கூட,அத்தியாவசியமாகவும் இருந்ததென்பதை அனுபவம்தெளிவு படுத்தியிருக்கிறது.
இரண்டாவதாக,இவ்வாக்கியம் வியக்கத்தக்கவாறு முன்னுக்குப்பின் முரணாயிருக்கிறது. நாடாளுமன்றம் எதிர்ப்புரட்சியின் செயலுறுப்பாகவும் “மையமாகவும்” ஆகிவிடுமானால் (உண்மையில் அது “மையமாக” இருந்ததே இல்லை, எந்தநாளும் இருக்கவும் முடியாது -- ஆனால் இதுவேறு விவகாரம்), அதேபோதில் தொழிலாளர்கள் தமது ஆட்சியதிகாரத்தின் கருவிகளை சோவியத்துகளின் வடிவில் உருவாக்கிக் கொள்வார்களானால்,பிறகுநாடாளுமன்றத்துக்கு எதிரான சோவியத்துக்களின் போராட்டத்துக்கு,சோவியத்துகளால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்குத் தொழிலாளர்கள் சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் செயல் நுட்ப வழியிலும்தயார்செய்ய வேண்டுமென்பதே இதிலிருந்து பெறப்படும்முடிவு.
ஆனால் எதிர்ப்புரட்சி நாடாளுமன்றத்தின் உள்ளே சோவியத் எதிர்த்தரப்பு ஒன்று இருப்பதானது இந்தக்கலைப்புக்கு இடையூறாகிவிடுமென்றோ,அனுசரணையாக இருக்காதென்றோ இதிலிருந்து எவ்வகையிலும் பெறப்படவில்லை.தெனீக்கினுக்கும் கல்ச்சாக்குக்கும் எதிரான எங்களது வெற்றிகரமான போராட்டத்தின்போது,அவர்களுடைய முகாமில் இருந்த சோவியத் பாட்டாளி வர்க்க எதிர்த்தரப்பு எங்களதுவெற்றிகளுக்குப்பயனற்றதாயிருக்க நாங்கள் ஒரு தடவையும் காணவில்லை. கலைக்கப்படும் தறுவாயிலிருந்த எதிர்ப்புரட்சி அரசியல் நிர்ணய சபையினுள் முரணற்ற போல்ஷ்விக்குகளின் சோவியத் எதிர்த்தரப்பும், மற்றும் முரணுடைய இடதுசாரி சோசலிஸ்டு - புரட்சியாளர் கட்சியின்29 சோவியத் எதிர்த்தரப்பு ஒன்றும் இருந்ததானது, 1918 ஜனவரி 5-ல் இந்த அரசியல் நிர்ணயச் சபை கலைக்கப்படுவதற்குத்தடங்கலாகிவிடவில்லை. அதற்குப் பதில் அனுகூலமாகவே இருந்தது என்பதை நாம் நன்குஅறிவோம். இந்த ஆய்வுரையின் ஆசிரியர்கள் சிந்தனையைக் குழப்படி செய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லாப் புரட்சிகளின்அனுபவத்தைஇல்லாவிட்டாலும், மிகப் பலபுரட்சிகளின் அனுபவத்தை இவர்கள் மறந்துவிட்டனர். புரட்சிகளின் போது, பிற்போக்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெறும் வெகுஜன நடவடிக்கைகள்,நாடாளுமன்றத்தினுள் செயல்படும் புரட்சி அனுதாபங்கொண்ட (நேரடியாகப் புரட்சியை ஆதரிப்பதாய் இருப்பின் இன்னும் நல்லதே)ஓர் எதிர்த்தரப்புடன் இணைக்கப்படுவதானது பெரும்பயன் தரத் தக்கதென்பதே இப்புரட்சியின் அனுபவமாகும். டச்சு”இடதுசாரிகளும்” பொதுவாகவே எல்லா”இடதுசாரிகளும்” மெய்யான புரட்சி ஒன்றில் ஒருபோதும் பங்குகொள்ளாத, அல்லது புரட்சியின் வரலாறு குறித்து சிந்தனையே செய்திராத, அல்லதுபிற்போக்கு அமைப்பு ஒன்றின் அகநிலை “நிராகரிப்பை” பல புறநிலைக் காரணக் கூறுகளின் ஒன்றிணைந்த செயற்பாட்டினால் நடைமுறையில் ஒழிக்கப்படுவதற்குச் சமமானதாகச் சிறுபிள்ளைத்தனமாய்த் தவறாக நினைத்துக் கொள்ளும் புரட்சியின் வறட்டுச் சூத்திரவாதிகளைப் போல், இவ்விவகாரத்தில் வாதாடுகிறார்கள். ஒரு புதிய அரசியல் கருத்தை அரசியல் கருத்தல்லாத பிற கருத்துக்களுக்கும் இது பொருந்தக்கூடியதே)இழிவுபடுத்துவதற்கும் கெடுப்பதற்குமான நிச்சயமான ஒரு வழி என்னவெனில், அதை ஆதரித்து வாதாடுவதாகக் கூறிக்கொண்டுஅதனை அபத்தமாகும்படிச்சிறுமைப்படுத்துவதுதான். எந்த உண்மையும் (டித்ஸ்கென் சீனியர் குறிப்பிட்டது போல)”அளவு மீறி விரிக்கப்பட்டால்”மிகையாக்கப்பட்டால் அல்லது அதன் மெய்யான பயன்பாட்டுக்குரிய வரம்புகளுக்கு அப்பால் எடுத்துச் செல்லப்பட்டால் அபத்தமாய்ச்சிறுமையுறநேரும்: இந்த நிலைமைகளில் அது கட்டாயம் அபத்தமாகியே தீருமென்றுகூடச் சொல்லலாம். ஆட்சியதிகாரத்தின் சோவியத் வடிவம் முதலாளித்துவ - ஜனநாயக நாடாளுமன்றங்களைக் காட்டிலும் மேலானதென்ற புதிய உண்மைக்கு டச்சு, ஜெர்மன் இடதுசாரிகள் இவ்வாறேதான் தீங்கிழைக்கின்றனர். காலத்துக்கு ஒவ்வாத நாடாளுமன்றங்களில் பங்கு கொள்வதை எல்லா நிலைமைகளிலும் நிராகரிக்கலாகாது என்று பொதுவாகவே யாராவது கருதினால், அது தவறே ஆகுமென்பதில் சந்தேகமில்லை.
பகிஷ்காரம் பயனுள்ளதாயிருக்கும் நிலைமைகளை வரையறுக்க இங்கு நான்முயற்சிப்பதற்கில்லை, ஏனெனில், இந்தக் கட்டுரையின் நோக்கம் அவ்வளவு விரிவானதல்ல.
அதாவது,சர்வதேசக் கம்யூனிஸ்டுப் போர்த்தந்திரம் சம்பந்தமான இந்நாளையப் பிரச்சனைகள் சிலவற்றில் ரஷ்ய அனுபவத்தைஆராய்வதேஇக்கட்டுரையின் நோக்கம். ரஷ்ய அனுபவமானது போல்ஷ்விக்குகள் பகிஷ்காரத்தைப் பயன்படுத்தியதில் வெற்றிகரமான பிழையற்ற ஓர் உதாரணத்தையும் (1905), தவறான மற்றோர் உதாரணத்தையும் (1906) நமக்கு அளித்திருக்கிறது. முதலாவதுஉதாரணத்தைப்பகுத்தாராய்வோமாயின், நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற புரட்சிகர வெகுஜன நடவடிக்கைகள்(குறிப்பாகவேலைநிறுத்தங்கள்)மிக வேகமாய் வளர்ச்சியுற்று வந்த ஒரு நிலைமையில், பாட்டாளி வர்க்கத்தையும்விவசாயிகளையும் சேர்ந்த எந்தவொரு பகுதியும் பிற்போக்கு ஆட்சி முறைக்கு எவ்வழியிலும் ஆதரவளிக்கு முடியாத நிலைமையில், வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலமாகவும் விவசாயி இயக்கத்தின் மூலமாகவும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் பிற்பட்ட வெகுஜனங்கள் மீது செல்வாக்குப் பெற்று வந்த நிலைமையில், பிற்போக்கு ஆட்சி பிற்போக்கு நாடாளுமன்றம் ஒன்றைக் கூட்டுவதைத் தடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதைக் காண்கிறோம்.
இன்றைய ஐரோப்பிய நிலைமைகளில் இந்த அனுபவம் அனுசரிக்கத்தக்கதல்ல என்பது தெளிவாக விளங்குகிறது, இதேபோல,டச்சு “இடதுசாரிகளும்” பிற “இடதுசாரிகளும்” நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்ள மறுப்பதை ஆதரித்து வாதாடுவதானது -- சில நிபந்தனைகளுடன்தான் என்றாலுங்கூட -- அடிப்படையான முறையில் தவறாகும். புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குக் குந்தகமானதாகும் என்பது தெளிவாக விளங்குகிறது. முன்கூறிய வாதங்கள் இதை நிருபிக்கின்றன.
மேற்குஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப் படைக்கு நாடாளுமன்றம் மிகவும் வெறுக்கத்தக்கதாகி விட்டது. இதனை மறுக்க முடியாது.
இது எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஏனெனில் போரின் போதும் போருக்குப் பிற்பாடும் மிகப் பெரும்பாலான சோசலிஸ்டு, சமூக - ஜனநாயக நாடாளுமன்றப்பிரதிநிதிகளின்நடத்தையைக் காட்டிலும் அருவருக்கத்தக் கதையோ, இழிவானதையோ,துரோகமானதையோகற்பனை செய்வதுங்கூட கடினமாகும். ஆயினும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் இந்தத்தீங்கினை எதிர்த்து எப்படிப் போராடுவது என்பதைத் தீர்மானிக்கையில், இந்தமனப்பான்மைக்கு அடிபணிவது நியாயமல்ல என்பதுடன், உண்மையில் ஒருபெருங்குற்றமாகும். மேற்கு ஐரோப்பாவில் பல நாடுகளில் தற்பொழுது புரட்சிகரமனப்பான்மையானது “காணாத புதுமை”அல்லது “அரிதினும் அரிது” என்பதாகவே கூற வேண்டியிருக்கிறது. மிக நீண்டகாலமாய் அடங்காதஆவலோடு, ஆனால் பயனின்றி இது எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால்தான் போலும் பலரும் எளிதில் இந்த மனப்பான்மைக்கு அடிபணிந்து விடுகிறார்கள். வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மைவளர்வதற்குஅனுசரணையாக நிலைமைகள்இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ரஷ்யாவில் இரத்தம் தோய்ந்த நீண்ட நெடியகொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கிவிட முடியாதென்ற உண்மையை எங்களுக்குப் போதித்துள்ளது. குறிப்பிட்ட அரசிலும் (அதனைச் சுற்றிலுமுள்ள அரசுகளிலும் மற்றும் உலகெங்குமுள்ள அரசுகளிலும்) இருக்கும் வர்க்க சக்திகள் யாவற்றையும், மற்றும் புரட்சி இயக்கங்களது அனுபவத்தையும் பற்றிய நிதானமான, முற்றிலும் புறநிலை நோக்குடன்கூடிய மதிப்பீட்டையே போர்த்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால்மட்டுமோ,நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகரமனோபாவத்தை”வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிகமிகக் கடினமான ஒரு பிரச்சனைக்குரிய தீர்வாகிவிடுவதில்லை. ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் மெய்யாகவேபுரட்சிகரமானநாடாளுமன்றக் குழுவினைத் தோற்றுவிப்பது ரஷ்யாவில் இருந்ததைக் காட்டிலும் மிகமிகக் கடினமாகும். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இருந்த போதிலும் இது, 1917-ல் நிலவிய பிரத்தியோகமானதும் வரலாற்று வழியில் மிகவும் விசேஷமானதுமான நிலைமையில் சோசலிசப் புரட்சியைத் தொடங்குவது ரஷ்யாவுக்குச் சுலபமாயிருந்ததென்ற பொதுவான உண்மையின் குறிப்பிட்டதொரு வெளியீடே ஆகும். ஆனால் இந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்வதும், அதனை நிறைவுறச் செய்வதும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவுக்கு மிகவும் கடினமானதாகும். 1918 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இதனைநான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். எங்களுடைய கடந்த இரு ஆண்டு அனுபவம் இக்கருத்து
முற்றிலும் சரியே என்பதைப் பூரணமாக மெய்ப்பித்திருக்கிறது. குறிப்பிட்ட சில பிரத்தியேகநிலைமைகள், அதாவது 1) சோவியத்புரட்சியை,தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சொல்லொண்ணா அளவுக்குக் கசக்கிப் பிழிந்து வருத்திய ஏகாதிபத்தியப் போருக்கு இப் புரட்சியின் விளைவாய் முடிவுகட்டுவதுடன் இணைத்திடுவதற்கிருந்த சாத்தியப்பாடு; 2) தமதுசோவியத் பகைவனை எதிர்த்து ஒன்றுபட முடியாதிருந்த ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்களான உலகின் மிகவும் சக்திவாய்ந்த இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட ஜீவமரண மோதலைத் தற்காலிகமாய்ப் பயன்படுத்தி அனுகூலமடைவதற்கிருந்த சாத்தியப்பாடு; 3) ஒப்பளவில் மிக நீண்ட உள்நாட்டுப் போரை ஓரளவு நாட்டின் பிரமாண்டப் பரப்பு காரணமாகவும் போக்குவரத்துச் சாதனங்கள் மோசமாயிருந்ததன் காரணமாகவும்சகித்துக் கொள்வதற்கிருந்த சாத்தியப்பாடு; 4) விவசாயிகளிடையே மிகவும் தீர்க்கமானமுதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சி இயக்கம் அலைமோதிய காரணத்தால், பாட்டாளிவர்க்கத்தின் கட்சி விவசாயிகளின் கட்சியினுடைய (அதாவது, பெரும்பாலான உறுப்பினர்கள் போல்ஷ்விசத்தின்பால் முற்றிலும் பகைமை கொண்டிருந்த சோசலிஸ்டு - புரட்சியாளர் கட்சியினுடைய)புரட்சிகரக்கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதும், பாட்டாளி வர்க்கம்அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொண்டதன்விளைவாய்இக்கோரிக்கைகளை உடனேபூர்த்தி செய்வதும் சாத்தியமாகிவிட்ட ஒரு நிலைமை -- ஆகிய இந்தப் பிரத்தியேகநிலைமைகள் யாவும் தற்போது மேற்கு ஐரோப்பாவில் இருக்கவில்லை; இந்த நிலைமைகள், அல்லது இவற்றையொத்த நிலைமைகள், அவ்வளவு சுலபமாய் ஏற்பட்டுவிடப் போவதுமில்லை. இதனால்தான் -- இதர பல காரணங்களுடனும்கூட --சோசலிசப்புரட்சியைத் துவக்குவது எங்களைக் காட்டிலும் மேற்கு ஐரோப்பாவுக்கு அதிகக்கடினமாயிருக்கிறது என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாம். பிற்போக்கு நாடாளுமன்றங்களைப் புரட்சிகரநோக்கங்களுக்காகப்பயன்படுத்திக் கொள்ளும் கடுமையான பணியைத் “தட்டிக்கழிப்பதன்” மூலம் இந்தக் கடினமான நிலைமையைச்”சமாளிக்க” முயலுவதானதுமுற்றிலும் சிறுபிள்ளைத் தனமானதே ஆகும். நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள், ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டவீரமிக்க கம்யூனிஸ்டுகளான சிறந்த நாடாளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குநாடாளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறுபிள்ளைத்தனம் அல்லவா?. ஜெர்மனியில் கார்ல் லீப்னெக்டும் ஸ்வீடனில் ஹோக்லண்டும்அடியிலிருந்து வெகுஜன ஆதரவு இல்லாமலேயே,பிற்போக்கு நாடாளுமன்றங்களை மெய்யாகவே புரட்சிகரமாய்ப் பயன்படுத்திக் கொள்வதில் முன்னுதாரணமாய்த்திகழமுடிந்ததெனில்,விரைவாக வளர்ந்து வரும் புரட்சிகர வெகுஜனக் கட்சி ஒன்று யுத்தப் பிற்காலத்தில் வெகுஜனங்களிடையே பிரமைகள் நீங்கி கசப்புணர்ச்சி மேலோங்கியிருக்கும் நிலைமையில்,படுமோசமான நாடாளுமன்றங்களாயினும் அவற்றிலும் கம்யூனிஸ்டுக் குழு ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போவது ஏன்?! தொழிலாளர்களின் பிற்பட்ட பகுதிகளும் இன்னும் அதிகமாய்ச் சிறு விவசாயிகளின் பகுதிகளும், ரஷ்யாவில் இருந்ததை விட மேற்கு ஐரோப்பாவில் மேலும் கூடுதலாய் முதலாளித்துவ - ஜனநாயகத் தப்பெண்ணங்களிலும் நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களிலும் ஊறியிருக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். இதனால்தான் முதலாளித்துவ நாடாளுமன்றங்களைப் போன்ற அமைப்புகளுக்கு உள்ளிருந்துதான் கம்யூனிஸ்டுகள் எவ்விதமான இடையூறுகளாலும் கலக்கமடையாமல் இந்தத் தப்பெண்ணங்களை அம்பலம் செய்யவும் களையவும் முறியடிக்கவும், விடாப்பிடியான நீண்ட போராட்டம் நடத்த முடியும் (நடத்தவும் வேண்டும்)ஜெர்மன்” இடதுசாரிகள்”தமது கட்சியின் மோசமான “தலைவர்கள்” இருப்பது குறித்து புகார் கூறுகிறார்கள்; அவநம்பிக்கைக்கும் சோர்வுக்கும் இடந்தருகிறார்கள் “தலைவர்களை””மறுத்தொதுக்கும்”நகைக்கத்தக்க நிலையினையுங்கூட வந்தடைகின்றனர்.ஆனால்“தலைவர்களைத்” தலைமறைவாக ஒளித்து வைத்துக்கொள்வது அடிக்கடி அவசியமாகிவிடும் நிலைமைகளில் சிறந்த “தலைவர்களை” சோதித்து எடுக்கப்பட்ட நம்பகமான,செல்வாக்குடைய “தலைவர்களை” உருவாக்குவது மிகவும் கடினமானதாகி விடுகிறது.
சட்டப்பூர்வமான வேலைகளையும் சட்டவிரோதமான வேலைகளையும் ஒன்றிணைத்துக் கொள்ளாமல், வேறு பல வழிகளோடு நாடாளுமன்றங்களிலும் “தலைவர்களைச்” (சோதித்துப்பார்க்காமல் இதிலுள்ள கஷ்டங்களை வெற்றிகரமாய்ச் சமாளிக்கமுடியாது.குற்றவிமர்சனத்தைத்தான் --மிகவும் கடுமையான, தாட்சண்யமற்ற, சமரசத்துக்குஇடமில்லாத குற்றவிமர்சனம் --நாடாளுமன்றவாதம் அல்லது நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு எதிராய் அல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல்களையும் நாடாளுமன்ற அரங்கையும் புரட்சிகரமான, கம்யூனிஸ்டுமுறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாத தலைவர்களுக்கு எதிராய் -- இன்னும் அதிகமாய் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுக்கு எதிராய் -- திருப்பி விடப்படவேண்டும். இத்தகைய குற்றவிமர்சனத்தைதான் -- இதோடுகூட தகுதியற்ற தலைவர்களை நீக்கித் தகுதியுடையோரை அவர்களிடத்தில் அமர்த்த வேண்டுமென்பதைக் கூறத் தேவையில்லை --”தலைவர்களுக்கும்”தொழிலாளி வர்க்கத்துக்கும் உழைப்பாளி மக்கள்அனைவருக்கும்லாயக்காணவர்களாக இருக்கும்படிப் போதமளித்து பயிற்றுவித்து,அதேபோதில் வெகுஜனங் களுக்கும் அரசியல்நிலைமையையும் அந்த நிலைமையிலிருந்து எழும் பலசந்தர்ப்பங்களில்மிகவும் குளருபடியான,சிக்கலான பணிகளைச் சரிவரப் புரிந்து கொள்ளும்படிப் போதமளித்துப் பயிற்றுவிக்கக் கூடியதான பயனுள்ள, செழுமை வாய்ந்தபுரட்சிகரச் செயற்பாடாய் அமைய முடியும்.*
-----------------
* இத்தாலியில் இருந்துவரும் “இடதுசாரிக்” கம்யூனிசத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள எனக்குச் சொற்ப அளவு வாய்ப்பே கிடைத்துள்ளது. தோழர் பொர்டீகாவும் அவரது “பகிஷ்காரக் கம்யூனிஸ்டு” (Comunistastensionista) கோஷ்டியினரும் நாடாளுமன்றத்தில் பங்குகொள்ளலாகாது எனக் கூறி வருவது சந்தேகமின்றிச் சரியல்லதான். ஆனால் அவருடைய பத்திரிக்கையான சோவியத்தின் (IlSoviet,30, 1920, ஜனவரி 18, பிப்ரவரி1 தேதிகளிட்ட இதழ்கள் 3லும் 4லும்) இரு இதழ்களிலிருந்தும், தோழர் செராட்டியின் சிறந்த வெளியீடான கம்யூனிசத்தின் (Comunismo31, 1919, அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான 1 முதல் 4 வரையிலுள்ள இதழ்கள்) நான்கு இதழ்களிலிருந்தும் மற்றும் நான் பார்த்துள்ள இத்தாலிய முதலாளித்துவப் பத்திரிக்கைகளின் தனித்தனி இதழ்களிலிருந்தும் தெரிந்துகொள்ள முடிந்தவரை, ஒரு விஷயத்தில் தோழர் பொர்டீகாவின் நிலை சரியானதாகவே எனக்குத் தோன்றுகிறது. தோழர் பொர்டீகாவும் அவர் கோஷ்டியினரும் டுராட்டியையும் அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது சரியே. டுராட்டியும் அவரைச் சேர்ந்தோரும்சோவியத்ஆட்சியதிகாரத்தையும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கட்சியில் இருந்து கொண்டு, அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் தமது கேடுகெட்ட பழைய சந்தர்ப்பவாதக் கொள்கையையே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். இதற்கு இடம் தருவதன் மூலம் தோழர் செராட்டியும்இத்தாலிய சோசலிஸ்டுக் கட்சி32 அனைத்துமே தவறிழைக்கின்றனர். இத்தவறால்,ஹங்கேரியில் நேர்ந்த அதே அளவு கேடும், அங்கு எழுந்த அதே அபாயங்களும் இத்தாலியிலும் ஏற்படுமென்று அஞ்ச வேண்டியிருக்கிறது. ஹங்கேரி டுராட்டிகள் அங்கு கட்சிக்கும் சோவியத்ஆட்சிக்கும் உள்ளிருந்தே குழி பறித்துவிட்டனர். சந்தர்ப்பவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாய் அனுசரிக்கப்படும் இத்தகைய தவறான, முரண்பட்ட அல்லது உறுதியற்ற போக்கானது, ஒரு புறத்தில் “இடதுசாரிக்” கம்யூனிசத்தைத் தோற்றுவித்து, மறு புறத்தில் அதன் இருப்பை ஓரளவு நியாயமாக்கி விடுகிறது. நாடாளுமன்றப் பிரதிநிதி டுராட்டி “முன்பின்முரண்பாடாக நடந்துகொள்வதாகத்” தோழர் செராட்டி குற்றம் சாட்டுவது (Comunismo, இதழ் 3) தவறானதென்பதில் ஐயமில்லை. ஏனெனில் இத்தாலிய சோசலிஸ்டுக் கட்சியேதான் டுராட்டியையும் அவர் ஆட்களையும் போன்ற சந்தர்ப்பவாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடம் தருவதன் மூலம் முன்பின் முரண்பாடாக நடந்து கொள்கிறது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.
1.கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கலாமா? என்ற கேள்வியை எழுப்பி லெனின் தனது கருத்தை இந்தக் கட்டுரையின் மூலம் நமக்கு வழிகாட்டுகிறார். ஆகவே இந்தக் கட்டுரையை ஆழமாகப் படித்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
2.“...வரலாற்று வழியிலும் அரசியல் வழியிலும் காலாவதியாகிவிட்ட நாடாளுமன்றப்போராட்ட வடிவங்களுக்குச் சரிந்து செல்லும் எவ்வகையான பின்னடைவையும்… தீர்மானமாய் நிராகரித்தே ஆகவேண்டும்…”என்று ஜெர்மன் இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் வாதத்தை லெனின் மறுத்தார். அங்கேசோவியத்அரசுஉள்ளதா?என்று கேள்வி எழுப்பி அத்தகைய சோவியத்து அரசை கைவிட்டுவிட்டு பாராளுமன்றத்தை ஏற்பதுதான்பின்னடைவகும்.அப்படிப்பட்ட சோவியத்து குடியரசு இல்லாத நிலையில் அல்லது உருவாகாத நிலையில் பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கெடுப்பது அவசியமானதுஎன்றே லெனின் வாதிட்டார்.
3.பாட்டாளி வர்க்கத்தினரில் “லட்சக்கணக்கானோரும்”“எண்ணற்றோரும்” இன்னமும்பொதுவாக நாடாளுமன்ற முறையைஆதரிப்பதோடன்றி,அப்பட்டமான “எதிர்ப்புரட்சித்தன்மை வாய்ந்தோராகவும்” இருக்கையில், “நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டதென்று” கூறுவது எப்படி!? ஜெர்மனியில் நாடாளுமன்ற முறை இன்னமும் அரசியல் வழியில் காலாவதியாகிவிடவில்லை என்பதுதெளிவு.மக்களில் பலர் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையில் நம்பிக்கை வைத்து தேர்தல்களில் ஆர்வமாக பங்கெடுக்கும் போது இந்த பாராளுமன்றம் நடைமுறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது என்று கருதுவது தவறானதாகும் என்றார் லெனின்.
4.பாராளுமன்றம் அரசியல் வழியில் காலாவதி ஆகவில்லை என்பது உண்மை என்றாலும் வரலாற்று வழியில் அதாவது வர்க்கப் போராட்ட வரலாற்றில் உழைக்கும் வர்க்க கட்சியானது இந்த பாராளுமன்ற ஆட்சி முறைக்கு மாறாக சோவியத்து ஆட்சிமுறையை புரிந்துகொண்டு விட்டது. மேலும் இந்த பாராளுமன்றமுறையைதூக்கியெறிவதற்கான போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகக் கூடிய நிலையை அடைந்துள்ளது. ஆகவே இந்த பாராளுமன்ற ஆட்சிமுறையானது வரலாற்று வழியில் காலாவதி ஆகிவிட்டது. ஆகவே வரலாற்று வழியில்காலாவதியாகிவிட்ட இந்த பாராளுமன்ற முறையை அரசியல் வழியிலும் அதாவது நடைமுறை அரசியலிருந்தும் ஒழித்துக்கட்டவேண்டியதுகம்யூனிஸ்டுகளின்தலைமையிலானஉழைக்கும்மக்களின் கடமையாகும்.
5.கம்யூனிஸ்டுகளுக்கு(ஜெர்மன்கம்யூனிஸ்டுகளுக்கு)பாராளுமன்றம் அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது. அதாவது நடைமுறையில் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் மூலம்மக்களுக்கு எவ்விதமான நன்மை கிடைக்காது மட்டுமல்ல இந்த பாராளுமன்ற ஆட்சியின் மூலம் மக்களுக்கு துண்பமும் சுரண்டலுக்கு உள்ளாவதும்தான் நடக்கும் என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்துள்ளார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தளவில் இந்த பாராளுமன்ற ஆட்சிமுறையானது அரசியல்வழியிலும்காலாவதியாகிவிட்டது. ஆனால் மக்களைப் பொறுத்தளவில் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் மீது நம்பிக்கை உள்ளது.
ஆகவேதான் மக்கள் தேர்தலில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள்.ஒரு கட்சியின் ஆட்சியை மக்கள் தேர்தல்மூலம் புறக்கணித்துவிட்டு வேறு கட்சியை ஆட்சியில் அமர்த்துகிறார்கள்.ஆனாலும்பல தேர்தல்களில் மாறி மாறி கட்சிகளை ஆட்சியில் மாற்றிய போதும் ஆட்சிக்கு வந்த எந்த கட்சியும் ஒரே மாதிரியே மக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்யாதது மட்டுமல்லாமல், மக்களுக்கு எதிராகவே செயல்படுவதை அனுபவத்தில் புரிந்துகொண்டாலும் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சியை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி புரிதல் மக்களுக்கு இல்லை. இந்த சூழலில் கம்யூனிஸ்டுகள்தான் மக்களுக்கு நன்மை பயக்கும் ஆட்சி எப்படி இருக்கும் என்றும் அத்தகைய ஆட்சியை உருவாக்க மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழியை காட்ட வேண்டும்.
6. இடதுசாரிகள் என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் தன்மனப் போக்கில் செயல்படக் கூடாது. மாறாக உழைக்கும் வர்க்கத்தின்கட்சியாகவும்,வெகுஜனங்களின் கட்சியாகவும்இருந்துகொண்டு மக்களிடம் ஐக்கியப்பட்டு மக்களின் வாழ்நிலை மற்றும் உணர்வுநிலைகளைப் புரிந்து அதன் அடிப்படையில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்கிறார்லெனின். லெனினது காலத்திலேயே இடதுசாரிகள் லெனின் விரும்பியதைப் போல செயல்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி அன்றைய இடதுசாரிகளுக்கு லெனின்வழிகாட்டினார். இன்றைய காலத்தில் இடதுசாரிகள்லெனின் சுட்டிக்காட்டியதைப் போலவேஇவர்கள் மக்களிடம் ஐக்கியப்படவும்இல்லை,மக்களின் வாழ்நிலைகளையும்உணர்வுகளையும் புரிந்துகொள்ளாமல் இடதுசாரிகள் உணர்வதை எல்லாம் உண்மை என்று நம்பிதன்மனப்போக்கில்செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வகையான சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறையிலிருந்து இடதுசாரிகள் மாற வேண்டும். அதன் மூலம் மட்டுமே இவர்கள் லெனினை பின்பற்றுகிறார்கள் என்று நாம் கருத முடியும்.
7. மக்களை புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும் என்றபோதும், வெகுஜனங்களுடைய நிலைக்கும் வர்க்கத்தின் பிற்பட்ட பகுதியின் நிலைக்கும் கம்யூனிஸ்டுகள் சரிந்துவிடக் கூடாது. அதில் சர்ச்சைக்கு இடமில்லை. மக்களுக்கு கசப்பான உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். மக்களிடத்திலுள்ள முதலாளித்துவ - ஜனநாயக,நாடாளுமன்றவாதத் தப்பெண்ணங்களை,அவைதப்பெண்ணங்கள் என்று சுட்டிக் காட்டவேண்டியதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
8. ஆனால் அதேபோதில் கம்யூனிஸ்டுக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை மட்டுமின்றி அனைத்து வர்க்கங்களின் அதாவது உழைப்பாளி மக்களின் முன்னேறியபகுதியோர் மட்டுமின்றி உழைப்பாளி மக்கள் திரளினர் அனைவரின் நலன் காக்கும் கட்சியாக இருப்பதால் கம்யூனிஸ்டுகள் அனைத்துவகையான வர்க்கங்களின், வர்க்க உணர்வு, தயார் நிலை இவற்றின் எதார்த்த நிலவரத்தை கம்யூனிஸ்டுகள் நிதானமாய்க் கவனித்து மதிப்பிட்டாக வேண்டும் என்றார் லெனின்.
9.இவ்வாறுமதிப்பிடுவதோடுகம்யூனிஸ்டுகள் நின்றுவிடக் கூடாது. தொழிலாளர்கள்,விவசாயிகள் மற்றும் பின்தங்கிய உணர்வுடைய மக்கள் போன்ற சிலர் மட்டும்ஆன்மீகவாதிகள்,பிற்போக்குமுதலாளித்துவ அரசியல்வாதிகள்,மற்றும் திருத்தல்வாதிகள் போன்றவர்களின் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பிற்போக்கு பாராளுமன்ற ஆட்சிமுறைகளில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.மேலும் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் மீதும்பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை இழந்து இந்த பாராளுமன்ற ஆட்சிமுறையின் மீதேநம்பிக்கை இழந்துகொண்டுஇருக்கிறார்கள். இத்தகைய இருவேறுபட்ட மக்களிடமும்கம்யூனிஸ்டுகள்சென்றுஇந்தபாராளுமன்ற ஆட்சிமுறை பயனற்றதுஎன்றும்,இதற்கு மாறாகமக்கள் தங்களைத் தாங்களே ஆளும் ஆட்சி முறையான சோவியத்து ஆட்சி முறையின்மூலமாகவே உழைக்கும் மக்கள் முழுமையாகப் பயன்பெற முடியும் என்ற உண்மையை
கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்து மக்களுக்கு போதித்து மக்களை விழிப்படையச்செய்வதுகம்யூனிஸ்டுகளின் கடமையாகஉள்ளது.ஆனால் இந்தியாவில் தேர்தலில் பங்குபெறும் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் எவரும் பாராளுமன்றம் பயனற்றது என்ற கருத்தை போதிப்பதில்லை. மாறாக இந்தப் பாராளுமன்றம் புனிதமானது என்றும் இந்தப்பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பயன்பெறுவார்கள் என்றபொய்யைச் சொல்லியே இதுவரை மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனாலும்இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்கு நன்மை செய்யவில்லை மாறாக போராடிய மக்களின் போராட்டங்களை நசுக்கியிருக்கிறார்கள்.அதன் மூலம் முதலாளித்துவ அரசியல்வாதிகளைக் காட்டிலும் கொடூரமான மக்கள் விரோதிகள் இந்த இடதுசாரிகள்தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள்.ஆகவே பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் விசயத்தில்இந்த இடதுசாரிகள் லெனின் காட்டிய வழியைப் பின்பற்றாதவரை இவர்களைகம்யூனிஸ்டுகள் என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது.
10.நாடாளுமன்றத்தையும்இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிடும் பலம் கம்யூனிஸ்டுகளின் தலையையில் செயல்பட்டுவரும் மக்களிடம் இல்லாதவரை, அவற்றில் கம்யூனிஸ்டுகள் வேலை செய்தே ஆக வேண்டும்;4ஏனெனில்ஆன்மீகவாதிகளாலும், பிற்போக்கு முதலாளித்துவ மற்றும் திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளாலும் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்தில் பங்கெடுத்து வேலை செய்யாவிடில், கம்யூனிஸ்டுகள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும். இன்றைய பாராளுமன்றவாத இடதுசாரிகள் லெனின் பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆகவேதான் இந்த திருத்தல்வாத இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அவர்கள் பங்கெடுப்பதை நியாயப் படுத்துகிறார்கள். ஆனால் இந்த பிற்போக்கு பாராளுமன்றம் மற்றும் பிற வகையானபிற்போக்குநிறுவனங்களை லெனின் பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ஆகவேதான் இந்த திருத்தல்வாத இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அவர்கள் பங்கெடுப்பதை நியாயப் படுத்துகிறார்கள். ஆனால் இந்த பிற்போக்கு பாராளுமன்றம் மற்றும் பிற வகையான பிற்போக்கு நிறுவனங்களை அகற்றிவிடுவதற்கும் அல்லது அதனை ஒழிப்பதற்கான பலம் இல்லாத காரணத்தாலேயே பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று லெனின் சொன்னார் என்பதை மூடிமறைக்கிறார்கள். அதாவது தற்போது நமது நாட்டில் இந்தப் பாராளுமன்றத்தை அகற்றிவிடும் பலம் இல்லாத காரணத்தால் கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்தில் பங்கெடுப்பது நியாயமானதே. ஆனாலும் கம்யூனிஸ்டுகள் இந்தப் பிற்போக்கு பாராளுமன்றத்தை அகற்றிவிடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் அல்லவாஆனால்இந்தியதிருத்தல்வாதிகள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கிறார்கள் ஆனால்பாராளுமன்றத்தைஅகற்றிடுவதற்காகன பணிகள் எதையும் செய்வதில்லை. மாறாக இந்தப்பிற்போக்கு பாராளுமன்றத்தை பாதுகாக்கும் பணியிலும், இந்தப் பாராளுமன்ற ஆட்சிமுறையைப்பயன்படுத்தி சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்கும் பணியிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இதன் மூலம் ஆளும் வர்க்கங்களான இந்தியப் பெருமுதலாளி களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
மக்களுக்கு சில சில்லரை சலுகைகளை வழங்கி மக்களின் புரட்சிகரமான போராட்ட உணர்வுகளை மழுங்கடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
11.இந்தியாவிலுள்ள “இடதுசாரிகள்”பாராளுமன்றத்தின்பயனற்ற தன்மையைப் பற்றிமக்களுக்கு போதிப்பது என்ற கடமையை நிறைவேற்றவும்,கண்கூடான தமது தவறை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் எச்சரிக்கையும் செலுத்தவும் தவறியதன் மூலம், தாம் ஒரு சிறுகுழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறை யினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமானஇயல்புகளையும்காப்பியடிக்கும் ஒரு சில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சி அல்ல என்பதையும் நிருபித்துக் கொண்டு விட்டனர்.
ஆகவே இந்திய இடதுசாரிகள் பாராளுமன்றத்தின் மக்கள் விரோத தன்மையை லெனினது வழிகாட்டுதலின்படி அம்பலப்படுத்த வேண்டும் என்ற கடமையைச் செய்வதன் மூலமே அவர்களது அமைப்பானது கம்யூனிஸ்டக் கட்சியாக வளர முடியும் என்பதுவே லெனினது வழிகாட்டலாகும்.
12.”இடதுசாரிகள்” தமது விருப்பத்தை, அரசியல் - சித்தாந்தப் போக்கை எதார்த்தஉண்மையாகத் தவறாய் நினைத்துக் கொண்டுவிட்டனர். புரட்சியாளர்கள் செய்யக் கூடிய மிகவும் அபாயகரமான தவறாகும் இது என்றார் லெனின். இந்திய இடதுசாரிகளும்அவர்களதுவிருப்பத்தையும் அவர்களது அரசியல் சித்தாந்தத்தையும் உண்மையானது என்று தவறாக கருதி நீண்டகாலமாகச்செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இது மிகவும் அபாயகரமானதுஎன்ற லெனினது எச்சரிக்கையும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. தவறான அவர்களது முடிவைத் தொடர்ந்து செயல்படுத்தி தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக்கொண்டுஇருப்பதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் தவறுகிறார்கள். ஒரு கொள்கையை நாம் செயல்படுத்தும் போது அதன் விளைவுகளை நாம் பார்க்க வேண்டும். அந்த விளைவுகள் நாம் எதிர்பார்த்ததற்கு எதிராக இருந்தால் அந்தக் கொள்கையை மாற்றிக்கொண்டு புதிய கொள்கை வகுக்க வேண்டும் என்ற அடிப்படை விஞ்ஞானத்தைக்கூட இவர்கள் பின்பற்றத் தவறுகிறார்கள்.
13.முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் அதிக காலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல கேள்வி;பெருந்திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும்,முதலாளித்துவஜனநாயக நாடாளுமன்றத் தைக்கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவுக்கு (சித்தாந்தவழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறையிலும்) தயாராய் இருக்கிறார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி ஆகும் என்றார் லெனின். ஆகவே மக்கள் பாராளுமன்றத்தை கரைத்துவிட்டுசோவியத்து ஆட்சியை ஏற்றுக்கொள்ளத் தயாராகும்வரை பாராளுமன்றத்தை பயன்படுத்தவேண்டும் என்றார் லெனின். இதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் லட்சியம் பாராளுமன்றத்தைகலைப்பதும் சோவியத்து ஆட்சிமுறையை உருவாக்குவதுமாகத்தான் இருக்க வேண்டும் என்றுலெனின் வாதிடுகிறார். அவ்வாறுபாராளுமன்றத்தை கலைக்கவும் சோவியத்துஆட்சிமுறையைஉருவாக்குவதற்கும் மக்கள் தயாராக இல்லாதவரை பாராளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் பங்குகொண்டுஅதனைஅம்பலப்படுத்துவதோடு கூடவே மக்களிடம் பாராளுமன்றத்தை அம்பலப்படுத்திப் போதிப்பதும் அதனை கலைப்பதற்கு மக்களைத் தயாரிக்கும் பணியை கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும் என்றே லெனின் போதித்தார்.
ஆனால் திருத்தல்வாதிகள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற லெனினது கொள்கையைமட்டும் ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தை அம்பலப்படுத்தி அதனைகலைப்பதற்கு மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய பணியைமுழுமையாகப் புறக்கணித்து விட்டார்கள்.இதற்குமாறாகபாராளுமன்றத்தை நியாயப்படுத்தி அதனைபலப்படுத்தும் எதிர்ப் புரட்சிகர பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
14. சோவியத் குடியரசின் வெற்றிக்குச் சில வாரங்களே முன்னதாகவும், இந்த வெற்றிக்குப்பிற்பாடுங்கூட,முதலாளித்துவ ஜனநாயக நாடாளுமன்றம் ஒன்றில் பங்கெடுத்துக்கொள்வதானது புரட்சிகரப் பாட்டாளிவர்க்கத்துக்குத் தீங்கிழைப் பதற்குப் பதிலாய், இதுபோன்ற நாடாளுமன்றங்கள் கலைக்கப்பட வேண்டியது எப்படி அவசியம் என்பதைப்பிற்பட்ட நிலையிலுள்ள வெகுஜனப் பகுதியோருக்குநிரூபிப்பதற்குநடைமுறையில்உதவுகிறது என்பதும், இந்த நாடாளுமன்றங்கள் வெற்றிகரமாய்க் கலைக்கப்படுவதற்கு வகை செய்கிறது என்பதும், முதலாளித்துவ நாடாளுமன்ற முறையை “அரசியல் வழியில் காலாவதியாக்குவதற்குத்”;துணை புரிகிறது என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன.என்று ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் அனுபத்தைக் கொண்டுபாராளுமன்றத்தில் பங்குகொள்ள வேண்டியதன் அவசியத்தை லெனின் விளக்குகிறார். ஆனால் இந்த உண்மையை இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த எம்.எல். கட்சியினர் புரிந்துகொள்ளவில்லை.அவர்கள் தேர்தல்பாதை திருடர் பாதை என்று முழங்கி தேர்தலை முழுவதுமாக அவர்களது சொந்தஉணர்விலிருந்து புறக்கணித்ததன் மூலம் அவர்களும் பாராளுமன்றத்தை அகற்றுவதற்காகமக்களுக்கு போதனை அளிக்கவும் மக்களை அணிதிரட்டி பாராளுமன்றத்தை அகற்றுவதற்காக மக்களைத் தயாரிக்கும் பணியையும் புறக்கணித்து பாராளுமன்றம் பற்றிய லெனினது வழியைப் பின்பற்ற தவறினார்கள். இறுதியில் மார்க்சிய லெனினியக் கட்சியானது பலக் குழுக்களாகப் பிளவுண்டு போனார்கள்.
15. “முதலாளித்துவ பொருளுற்பத்தி அமைப்பு முறிந்து போய், சமுதாயம் புரட்சிக்குரியநிலையில் இருக்கையில்,நாடாளுமன்றச் செயலானது வெகுஜனங்களது நேரடியானசெயலுடன் ஒப்பிடும் போது படிப்படியாக முக்கியத்துவம் இழந்துவிடுகிறது.இந்த நிலைமைகளில்நாடாளுமன்றம்எதிர்ப்புரட்சியின் மையமாகவும் செயலுறுப்பாகவும்ஆகிவிடும்போது,மறுபுறத்தில் தொழிலாளி வர்க்கம் சோவியத்துக்களைத் தனதுஆட்சியதிகாரத்துக்கான கருவிகளாக உருவாக்கிக்கொள்ளும்போது,“நாடாளுமன்றச் செயலில் பங்கு கொள்வதை முற்றாகவும் முழுவதாகவும்கைவிடுவது அவசியமாகவும்கூட ஆகிவிடலாம்”என்ற டச்சு இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் கருத்தை லெனின் மறுத்தார்.
தொழிற்சங்கங்களின் போராட்டம் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் நடக்கிறது என்பதை இந்த இடதுசாரி கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே இந்தச் சூழலில் புரட்சிகர எழுச்சிக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்று தவறாகக் கருதி பாராளுமன்றப் போராட்டங்களை அதாவது சட்டப்பூர்வமான போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் கைவிடுவதுபெரிய தவறாகும் என்று வாதிட்டார்.எனினும் சட்டப்பூர்வமான அல்லது பாராளுமன்றப் போராட்டங்களை நடத்துவதோடு கூடவே சட்டத்தை மறுத்தும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்றும்இவ்விரண்டு வகையானப் போராட்டங்களையும் ஒன்றிணைக்கும்திறனை கம்யூனிஸ்டுகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று லெனின் வழிகாட்டினார்.
லெனினது இந்த வழிகாட்டுதலை தேர்தல்பாதையை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளும், தேர்தல்பாதையைமறுத்தகம்யூனிஸ்டுகளும் பின்பற்றவில்லை. தேர்தல் பாதையை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் சட்டப்பூர்வமான போராட்டங்களை மட்டும் நடத்தி சட்டத்தை மறுக்கும் போராட்டங்களை நடத்த தவறினார்கள். தேர்தல்பாதையை புறக்கணித்தவர்கள் சட்டவிரோதபோராட்டங்களைநடத்தினார்கள் சட்டப்பூர்வமான போராட்டங்களை நடத்தத் தவறினார்கள் .பின்பு தேர்தல் பாதையை புறக்கணித்தவர்கள் அந்தக் கொள்கையை கைவிட்டுவிட்டாலும் அவர்கள் மார்க்சிய லெனினியத்தையே கைவிட்டுவிட்டு பெரியார் அம்பேத்காரைப்பின்பற்றும்முதலாளித்துவசீர்திருத்தவாதிகளாகவே மாறிப்போனார்கள். இவ்வாறுலெனினது வழியைப் புறக்கணித்தவர்கள் அடைந்த தோல்விலிருந்து பாடம் கற்றுக்கொண்டுலெனினை பின்பற்றுவதன் மூலமே நாம் வெற்றியை நோக்கி முன்னேற முடியும்.
16. புரட்சியின் போது நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்திருப்பது புரட்சிகர நடைமுறைக்கு சாதகமாக இருக்காதுஎன்றும்அது இடையூறாகத்தான் இருக்கும் என்ற இடதுசாரி கம்யூனிஸ்டுகளின் கருத்தை லெனின் ஏற்கவில்லை. ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்தே லெனின் விளக்கும் போது, புரட்சி எழுச்சிக் காலத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியே புரட்சிகர போராட்டங்கள் நடக்கும் போது பாராளுமன்றத்தில்செயல்பட்டகம்யூனிஸ்டுகளுக்குஎதிர்தரப்பாரும்போராட்டங்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்ற அவர்களது அனுபவத்தை சுட்டிக்காட்டி விளக்கினார். ஆகவே ஒவ்வொரு நாட்டின் குறிப்பான சூழலை மதிப்பிட்டு பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதா அல்லதுபுறக்கணிப்பதா என்பதை கம்யூனிஸ்டுகள் தீர்மானிக்க வேண்டும் என்பதே லெனின் காட்டும்வழியாகும்.
17. ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் மெய்யாகவேபுரட்சிகரமானநாடாளுமன்றக்குழுவினைத் தோற்றுவிப்பது ரஷ்யாவில் இருந்ததைக் காட்டிலும் மிகமிகக் கடினமாகும். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இருந்த போதிலும் இது, 1917-ல் நிலவிய பிரத்தியோகமானதும் வரலாற்று வழியில் மிகவும் விசேஷமானதுமான நிலைமையில் சோசலிசப் புரட்சியைத் தொடங்குவது ரஷ்யாவுக்குச் சுலபமாயிருந்ததென்ற பொதுவான உண்மையின் குறிப்பிட்டதொரு வெளியீடே ஆகும். ஆனால் இந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்வதும், அதனை நிறைவுறச் செய்வதும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவுக்கு மிகவும் கடினமானதாகும்என்றார் லெனின்.அதாவதுசிலநாடுகளில்கம்யூனிஸ்டுகளால் நாடாளுமன்றப்பணிகளைச்செயல்படுத்துவதற்கான பாராளுமன்றக் குழுவை கம்யூனிஸ்டுக்கட்சிக்குள் ஏற்படுத்துவது சிரமமானதாக இருந்தது என்றும் சில நாடுகளில் இதற்கு எதிராகநாடாளுமன்றக் குழுவை எற்படுத்துவதில் சிரமம் இல்லை என்கிறார் லெனின்.
மேலும் சிலநாடுகளில் சோசலிசப் புரட்சியை எளிதாகத் துவக்க முடிந்தது என்றும் சில நாடுகளில்புரட்சியைத் துவங்குவது கடினமாக இருந்தது என்றும் மேலும் சில நாடுகளில் புரட்சியை தொடர்ந்து கொண்டுசெல்வது சிரமமாகவும் வேறு சில நாடுகளில் புரட்சியைத் தொடர்வது
எளிமையாகவும் இருக்கும் என்கிறார் லெனின். இதன் மூலம் புரட்சி பற்றிய கருத்தை ஒவ்வொரு நாட்டிலுள்ள கம்யூனிஸ்டுகள் அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும் என்று லெனின் வழிகாட்டுகிறார். அதே வேளையில் லெனின்காட்டும் பொது வழியை புறக்கணிப்பது மாபெறும் தவறாகும் என்பதை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும்.
18.வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல்,இந்த மனப்பான்மைவளர்வதற்குஅனுசரணையாக நிலைமைகள் இல்லாமல்,புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒருநாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்று லெனின் கூறுகிறார். ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியானது ஒரு புரட்சிகரமான விஞ்ஞானப்பூர்வமான போர்த்தந்திரத்தை வகுத்திருந்தாலும் அதனை செயல்படுத்த வேண்டுமானால் உழைக்கும் மக்களின் மனப்பாங்கை புரட்சியை நடத்துவதற்கு தயாராகின்ற முறையில் வளர்க்க வேண்டும்.
அதாவது அதற்கு கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்ல வேண்டும், மக்களுக்கு புரட்சி பற்றிய போதனையை செய்ய வேண்டும். மேலும் புரட்சி பற்றிய போதனைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளைப் பற்றியும் உலகிலுள்ள புரட்சியின் அனுபவங்களையும் மக்களுக்குப் போதித்து அதாவது மார்க்சிய கல்வி இயக்கத்தை நடத்துவதன் மூலம் கட்சியின் போர்த்தந்திர முடிவுகளைமக்கள் ஏற்றுக்கொண்டு அவர்களிடத்தில் புரட்சிகர மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் மக்களுக்கு மார்க்சிய அடிப்படை கல்வி போதனை செய்யாமல் மக்கள் இடதுசாரிகளின்சொந்தக் கருத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு செம்மறி ஆட்டு மந்தைகளைப் போல செயல்பட வைப்பதன் மூலம் இடதுசாரிகளிடமுள்ள பிற்போக்கு மனப்பான்மையை ஊட்டி மக்களிடத்திலுள்ளபோர்க்குணத்தை வளர்ப்பதற்கு மாறாக அவர்களை மழுங்கடித்துவிட்டனர். இடதுசாரிகளின் இந்தத் தவறின் காரணமாகவே மக்கள் புரட்சியின் மீது நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்.இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே இந்திய மக்களிடம் புரட்சிகர மனப்பான்மையை ஏற்படுத்த முடியும்.
19.புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகரமனப்பான்மையின்அடிப்படையில் மட்டும் உருவாக்கிவிட முடியாதென்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்லெனின்.
மேலும் குறிப்பிட்ட அரசிலும் (அதனைச் சுற்றிலுமுள்ள அரசுகளிலும் மற்றும் உலகெங்குமுள்ள அரசுகளிலும்)இருக்கும் வர்க்க சக்திகள் யாவற்றையும்,மற்றும் புரட்சி இயக்கங்களது அனுபவத்தையும் பற்றிய நிதானமான,முற்றிலும் புறநிலை நோக்குடன்கூடிய மதிப்பீட்டையே போர்த்தந்திரம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார்லெனின்.
நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால்மட்டுமோ,நாடாளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகரமனோபாவத்தை”வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிகமிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிகமிகக் கடினமான ஒரு பிரச்சனைக்குரிய தீர்வாகிவிடுவதில்லை என்றார் லெனின்.
ஐரோப்பிய நாடாளுமன்றங்களில் மெய்யாகவே புரட்சிகரமான நாடாளுமன்றக்குழுவினைத்தோற்றுவிப்பது ரஷ்யாவில் இருந்ததைக் காட்டிலும் மிகமிகக் கடினமாகும். இது புரிந்துகொள்ளக் கூடியதே. இருந்த போதிலும் இது, 1917-ல் நிலவிய பிரத்தியோகமானதும் வரலாற்று வழியில் மிகவும்விசேஷமானதுமானநிலைமையில் சோசலிசப் புரட்சியைத்தொடங்குவது ரஷ்யாவுக்குச் சுலபமாயிருந்ததென்ற பொதுவான உண்மையின் குறிப்பிட்ட தொரு வெளியீடே ஆகும். ஆனால் இந்தப் புரட்சியைத் தொடர்ந்து நடத்திச் செல்வதும், அதனை நிறைவுறச் செய்வதும் ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ரஷ்யாவுக்கு மிகவும் கடினமானதாகும் என்று ரஷ்யப் புரட்சி அனுபவத்திலிருந்துலெனின்விளக்குகிறார்.
ஆகவே நாம் மக்களிடம் புரட்சிகர மனப்பான்மையை வளர்ப்பது மட்டும் போதாது.
புறநிலையில் தனது நாட்டிலும்,நம்மைச் சுற்றியுள்ள உலகிலும் நிலவும் அரசியல்பொருளாதார சூழ்நிலைகளையும் கணக்கிலெடுத்து பகுத்து ஆய்வு செய்து போர்த்தந்திரம்வகுக்க வேண்டும் என்கிறார் லெனின். மேலும் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி
முழுவதும் பங்குகொள்ளக்கூடாது என்றும்நாடாளுமன்றத்தில்பங்கெடுத்துக்கொள்ள நாடாளுமன்ற குழுவை உருவாக்கி அந்த குழு மட்டுமே நாடாளுமன்றத்தில் பங்கெடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்றும்,கட்சியின் முதன்மையான பணி புரட்சியை நடத்துவதற்கு மக்களை தயாரிப்பதாகவே இருக்க வேண்டும் என்றார் லெனின்.இதில் எவ்வளவு சிரமம் இருந்தாலும் அந்த சிரமத்தையும் மீறி கட்சியானது சாதனை புரிய வேண்டும்.
ஆகவே நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்தை தூற்றுவதாலோஅல்லதுநாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதாலோ புரட்சியை நடத்திவிட முடியாது என்பதை தேர்தலைப்புறக்கணிப்பவர்கள்புரிந்துகொள்ள வேண்டும் என்றே லெனின் வழிகாட்டினார்.ஆனால் இந்தியாவிலுள்ள எம்.எல்.கட்சியினர் இதனை புரிந்துகொள்ளவே இல்லை. ஆகவேதான்
அவர்களாலும் இந்தியாவில் புரட்சி நடத்திட முடியவில்லை.எனினும் ரஷ்யாவில் சில புரட்சிகரமான சூழல்கள் அந்தப் புரட்சிக்கு சாதகமாக இருந்தது அதாவது இரண்டாம் உலகப்போரின் போது சர்வதேச முதலாளிகள் பிளவுபட்டு அவர்களுக்கிடையில்மோதிக்கொண்டிருந்த சாதகமான சூலலை ரஷ்யக் கம்யூனிஸ்டுகள்பயன்படுத்திக்கொண்டார்கள்.ஆனால்இந்தியாவில் கம்யூனிஸ்டு களுக்கு சாதகமானசூழல்கள் ஏற்பட்ட போதும் அதனை இடதுசாரிகள் பயன்படுத்த தவறினார்கள்.ஆகவே உண்மையில் புரட்சிகரமான ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதன் மூலமே இத்தகைய சாதகமான சூழலை கம்யூனிஸ்டுகளால் பயன்படுத்த முடியும்.
லெனினது இந்தக் கட்டுரையை திரும்பத் திரும்ப படித்து மேலும் பல ஆழமான உண்மைகளை கம்யூனிச முன்னணியினர் புரிந்துகொண்டு விவாதிக்க வேண்டும்.அதன் மூலம் மட்டுமே இந்திய இடதுசாரிகளில் வலது போக்கினரும்,இடது போக்கினரும் செய்த தவறுகளை புரிந்துகொள்ள வேண்டும்.அத்தகைய புரிதலின் அடிப்படையில் தவறுகளை களைந்து சரியான வழிமுறைகளை லெனின் காட்டிய வழியை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து செயல்படுவதன் மூலம் இந்தியாவில் ஒரு உண்மையான புரட்சிகரமான ஒன்றுபட்ட கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டி இந்தியாவில் புதிய புரட்சிகரமான செல்வ வளமிக்க இந்தியாவை இடதுசாரிகளால் உருவாக்க முடியும். ... தேன்மொழி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment