அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்.மார்க்சின் பகுத்தாய்வும் பாகம் 4.அத்தியாயம் 4.

 அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்.மார்க்சின் பகுத்தாய்வும் பாகம் 4.அத்தியாயம் 4.

முந்தைய பகுதியின் தொடர்ச்சி, கூடுதலாய் எங்கெல்ஸ் அளித்த விளக்கங்கள்.

கம்யூனுடையஅனுபவத்தின்முக்கியத்துவம் பற்றிய அடிப்படை கருத்துக்களை மார்க்ஸ்எடுத்துரைத்தார். எங்கெல்ஸ் இதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் திரும்பி மார்க்சின்பகுத்தாய்வையும் முடிவுகளையும் விளக்கிக் கூறினார். சில சந்தர்ப்பங்களில்

இப்பிரச்சனையின் பிறகூறுகளை எங்கெல்ஸ் அதனை வலிமையோடு தெள்ளத் தெளிவாய் விளக்குவதால், அவருடைய விளக்கங்களைத் தனியே விவரிப்பது அவசியமாகும்.

 

1.குடியிருப்புப் பிரச்சனை

குடியிருப்புப் பிரச்சனை பற்றிய தமது நூலிலேயே (1872) எங்கெல்ஸ் கம்யூனுடைய அனுபவத்தைக் கணக்கில் எடுத்து, அரசு சம்பந்தமாய்ப் புரட்சிக்குள்ள பணிகளை பலஇடங்களில் குறிப்பிட்டுச் சொல்கிறார். இந்த பிரத்தியோக விவகாரம் பற்றிய பரிசீலனை தெளிவாய்ப் புலப்படுத்துபவை, கருத்தூன்றி கவனிக்கத் தக்கவை:ஒருபுறம்,பாட்டாளி வர்க்க அரசுக்கும் தற்போதுள்ள அரசுக்கும் இருக்கும் ஒற்றுமைக் கூறுகளையும் இரு சந்தர்ப்பங்களிலும் அரசெனச் சொல்வது சரியே என்பதை உறுதிப்படுத்தும் ஒற்றுமைக்கூறுகளையும்,மறுபுறம்,இவை இரண்டுக்குமுள்ள வேற்றுமைக் கூறுகளையும்,அதாவதுஅரசுஅழிந்தொழிவதற்குரிய இடைக்கால நிலையையும், இந்தப் பரிசீலனை தெளிவாய்ப்புலப்படுத்துகிறது.

அப்படியானால்,குடியிருப்புப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது எப்படி?. இன்றைய சமுதாயத்தில் இது ஏனைய எந்த சமூகப் பிரச்சனையும்போலவேதான்தீர்க்கப்படுகிறது. தேவையையும் அளிப்பையையும் பொருளாதார வழியில் படிப்படியாய்ச் சமன் செய்வதன்மூலம் தீர்க்கப்படுகிறது. பிரச்சனையை மீண்டும் மீண்டும் அப்படியே தோற்றுவிக்கும் ஒருதீர்வே இது. ஆகவே இது தீர்வாகவே அமைவதில்லை. சமுதாயப் புரட்சி ஒன்று இந்தப் பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காணும் என்பது குறிப்பிட்ட அந்தச் சந்தர்ப்பத்திலும் நிலவும் சூழ்நிலையைச் சார்ந்தது என்பதோடு,  மேலும் பன்மடங்கு ஆழமான பிச்சனைகளுடன் இணைக்கப் பட்டதாகவும் இருக்கும். இவற்றில் மிகவும் அடிப்படையானவற்றுள் ஒன்று,நகருக்கும் கிராமத்துக்குமுள்ள முரண்நிலை ஒழிக்கப்படுதல் வருங்கால சமுதாய ஒழுங்கமைப்புக்கான கற்பனாவாதத் திட்டங்களை சிருஷ்டிப்பது (தோற்றுவிப்பது) எமது பணியல்ல. ஆதலால் இந்தப் பிரச்சனையை இங்கு பரிசீலிப்பது வீண்வேலையே ஆகும். ஆயினும் ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்லலாம்: பெரிய நகரங்களில் ஏற்கனவே போதிய அளவு வீடுகள் இருக்கின்றன, நல்லறிவுக்கு உகந்த நேரிய வழியில் இவை பயன்படுத்தப்படும்பட்சத்தில் மெய்யான குடியிருப்புப் பற்றாக்குறை அனைத்தையும் உடனடியாகவே நிவர்த்திசெய்துவிடலாம். ஆனால் தற்போதுள்ள உடமையாளர் களிடமிருந்து வீடுகளை பறிமுதல்செய்து வீடில்லாத தொழிலாளர்களையும் மற்றும் இடமின்றி அளவு மீறிய நெரிசலில் அவதியுறும் தொழிலாளர்களையும் இவ்வீடுகளில் குடிபுகச் செய்தாலன்றி இது சாத்தியமல்ல.

பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வென்றதும்,பொதுநலத்தை முன்னிட்டு இத்தகைய நடவடிக்கையை எடுத்து நிறைவேற்றுதல்,தற்போதுள்ள அரசு வேறு துறைகளில் செய்யும் பறிமுதல்களையும் குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளுதலையும் போல எளிதில் நடைபெறும் காரியமே (1887 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பு,பக்கம் 22) அரசு அதிகாரத்தின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் இங்கு பரிசீலிக்கப்படவில்லை., அதன் செயற்பாட்டின் உள்ளடக்கம் மட்டுமே பரிசீலிக்கப்படுகிறது. பறிமுதல்களும் குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளுதலும் தற்போதுள்ள அரசினாலுங் கூட ஆணையிட்டு நிறைவேற்றப்படுகின்றன. வடிவத்தைப் பொறுத்தவரை,பாட்டாளி வர்க்கஅரசுங்கூட ஆணையிட்டுக் குடியிருப்பிடங்களை வசப்படுத்திக் கொள்ளும்., வீடுகளைபறிமுதல் செய்யும். ஆனால் பழைய நிர்வாக இயந்திரம்முதலாளித்துவ வர்க்கத்தாருடன் இணைந்த அதிகார வர்க்கமானது பாட்டாளி வர்க்க அரசின் ஆணைகளை நிறைவேற்றச்சிறிதும் ஏற்றதாய் இராது என்பது தெளிவு.

..... உழைப்பாளி மக்கள் உழைப்புக் கருவிகள் யாவற்றையும், தொழிற்துறை அனைத்துமே நடைமுறையில் கைப்பற்றுவது, புருதோனிய மீட்ப்புக்கு நேர்முரணாகும் என்பதை குறிப்பிட வேண்டும். பின்னதில் தனிப்பட்ட உழைப்பாளிவீட்டின்,விவசாயப்பண்ணையின்,உழைப்புக்கருவிகளின் உடமை யாளனாகினான்; ஆனால் முன்னதில் உழைப்பாளி மக்கள்வீடுகளின், ஆலைகளின், உழைப்புக் கருவிகளின் கூட்டு உடமையாளர்களாய் இருக்கிறார்கள். இடைக்காலத்திலேனும் தனிநபர்களோ, கூட்டுக்களோ இந்த வீடுகள், ஆலைகள், மற்றும் பலவற்றின் பெறுமானத்துக்கு ஈடு அளிக்காமலே இவற்றை உபயோகிக்க அனுமதிப்பார்களென நினைக்க முடியாது. இதே போல, நிலத்தில் சொத்துரிமையின் ஒழிப்புநிலவாடகையின் ஒழிப்பைக் குறிக்காது; இந்த நிலவாடகை, திருத்தப்பெற்ற வடிவிலேதான்என்றாலும், சமுதாயத்துக்கு மாற்றப்படுவதையே குறிக்கும். ஆகவே உழைப்புக் கருவிகள் யாவற்றையும் நடைமுறையில்உழைப்பாளி மக்கள் கைப்பற்றிக் கொண்டு விடுவதானது

வாடகை உறவுகள் நீடிக்க வழியில்லாதபடிச் செய்துவிடாது(பக்கம் 68)இந்த வாசகத்தில் குறிப்பிடப்படும் பிரச்சனை குறித்து,அதாவது அரசு உலர்ந்து உதிருவதன்பொருளாதார அடித்தளம் குறித்து, அடுத்த அத்தியாத்தில் பரிசீலிப்போம், பாட்டாளி வர்க்கஅரசு கட்டணமின்றியே வீடுகளை உபயோகித்துக்கொள்ள அனுமதிக்குமென நினைக்கமுடியாது””இடைக்காலத்திலேனும் அப்படி அனுமதிக்குமென நினைக்க முடியாது என்று எங்கெல்ஸ் மிகுந்த எச்சரிக்கையுடன் கூறுகிறார். மக்கள் அனைவரின் சொத்தான வீடுகளை தனிப்பட்ட குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவதெனில் வாடகை வசூலிப்பு, ஓரளவு கண்காணிப்பு, குடியிருப்பு இடங்கள் ஒதுக்குவதில் சில நியதிகளை அனுசரித்தல் ஆகியவை அவசியமாகிவிடுகின்றன. இவற்றுகெல்லாம் ஒருவகை அரசு வேண்டியிருக்கும். ஆனால் தனிச்சலுகை பெறறுள்ள அதிகார வர்க்க இயந்திரமும் தனிவகை இராணுவ ஏற்பாடும் இருக்க வேண்டிய தேவையில்லை. வாடகை இல்லாமலே இலவசமாய்க் குடியிருப்பு வசதி செய்து கொடுப்பது சாத்தியமாகிவிடும் நிலைக்கு மாறிச் செல்வது அரசு அறவே உலர்ந்து உதிர்வதைப் பொறுத்ததாகும்கம்யூனுக்குப் பிற்பாடும் அதன் அனுபவத்தினது செல்வாக்கின் கீழும் பிளாங்கிஸ்டுகள்(குறிப்பு:- பிளாங்கிஸ்டுகள் - பிரெஞ்சு சோசலிஸ்டு இயக்கத்தில் தோன்றிய ஒரு போக்கின்ஆதரவாளர்கள்; தலைசிறந்த புரட்சியாளரும் பிரெஞ்சு கற்பனாவாதக் கம்யூனிசத்தின் முக்கிய பிரதிநியுமான லூயீ ஒகுஸ்ட் பிளான்கி (1805-1881) இந்தப் போக்கிற்கு தலைமை தாங்கினார்.கூலி அடிமை நிலையிலிருந்து மனிதகுலம் விடுதலை பெற பாட்டாளி வர்க்கப் போராட்டம் தேவையில்லை, சிறுபான்மை அறிவுத்துறையினரது சிறு கோஷ்டியின் சக்திகள் மூலம் இதைச் செய்துவிடலாம் (வி.. லெனின்) என்று பிளாங்கிஸ்டுகள் நம்பினர். எழுச்சி வெற்றி பெறஅவசியமான ஸ்தூல நிலைமைகளை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; வெகுஜனங்களுடன் தொடர்புகள் கொண்டிருக்க வேண்டும் என்பதை உதாசீனம் செய்தனர்.

புரட்சிகர கட்சியின் முயற்சிகளுக்குப் பதிலாய் இரகசிய சதியாளர்கள் கோஷ்டியின்செயல்களை கொண்டு புரட்சி நடத்திவிடலாமென்று நினைத்தனர்) மார்க்சியத்தின் அடிப்படை நிலையை ஏற்றுக்கொண்டது குறித்துப் பேசுகையில், போகிற போக்கில் எங்கெல்ஸ் இந்த நிலையைப் பின்வருமாறு வரையறுத்துக் கூறுகிறார்;.....வர்க்கங்களையும்அவற்றுடன்கூட அரசையும் ஒழித்திடுவதற்காகப் பாட்டாளிவர்க்கத்தின் அரசியல் செயலும் அதன் சர்வாதிகாரமும் அவசியமாக இருக்கும்.... (பக்கம் 55)அரசின் ஒழிப்புக்கு அளிக்கப்படும் இந்த அங்கீகாரத்துக்கும்,டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூலிலிருந்து மேலே தரப்பட்ட வாசகத்தில் இந்த சூத்திரம் அராஜகவாத நிர்ணயிப்பு என்பதாய் நிராகரிக்கப்படுவதற்கும் முரண்பாடு இருப்பதாய் விதண்டாவாதப் பிரியர்களும்மார்க்சியத்தை ஒழித்துக் கட்டுவதில் முணைந்துள்ள முதலாளித்துவப் பிண்டங்களும் கருதினாலும் கருதலாம். எங்கெல்சையே கூட சந்தர்ப்பவாதிகள் அராஜகவாதிகளாகக்கொள்வார்களாயினும் வியப்புறுவதற்கில்லை, ஏனெனில் அராஜகவாதக் குற்றமிழைப்பதாய்ச் சர்வதேசவாதிகளின் மீது குற்றம் சாட்டுவது சமூக - தேசியவெறிகளிடையே மேலும் மேலும் சகஜமாகிவருகிறது.

வர்க்கங்கள் ஒழியும்போது அரசும் ஒழிந்துவிடுமென்றுதான் மார்க்சியம் எப்போழுதுமே போதித்து வந்திருக்கிறது. டூரிங்குக்கு மறுப்பு என்னும் நூலில் அரசு உலர்ந்து உதிர்வதுபற்றிக் கூறும் புகழ்பெற்ற வாசகம் அராஜகவாதிகளைச் சாடுவது அவர்கள் திடுதெப்பன ஒரேநாளில்அரசை ஒழித்துவிடலாமென உபதேசிக்கிறார்கள் என்பதற்காகவேயன்றி, அரசு ஒழிவதை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அல்ல. தற்போது நிலவி வரும் சமூக ஜனநாயகக் கோட்பாடானது அரசை அழிப்பது பற்றிய பிரச்சனையில் அராஜகவாதத்தின்பால் மார்க்சியத்துற்குள்ள போக்கினை அறவே திரித்துப் புரட்டுவதால், மார்க்சும் எங்கெல்சும் அராஜகவாதிகளை எதிர்த்து நடத்திய ஒரு வாக்குவாதத்தை நினைவு கூர்தல் பெரிதும் பயனுடையதாய் இருக்கும்.

2.அராஜகவாதிகளுடன் வாக்குவாதம்

 இந்த வாக்குவாதம் 1873 ல் நடைபெற்றது. புரூதோனியர்களை, சுயாட்சியாளர்களைஅல்லது அதிகார எதிர்ப்பாளர்களை எதிர்த்து மார்க்சும் எங்கெல்சும் இத்தாலிய சோசலிஸ்டு ஆண்டு வெளியீடு ஒன்றுக்குக் கட்டுரைகள் வழங்கினர். 1913 ஆம் ஆண்டில்தான் இந்தக்கட்டுரைகள் ஜெர்மன் மொழியில் வெளிவந்தன.அரசியலை நிராகரிப்பதற்காக அராஜகவாதிகளைக் கிண்டல் செய்து மார்க்ஸ் எழுதினார்.

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டம் புரட்சிகர வடிவங்களை ஏற்குமாயின்,முதலாளித்துவ வர்க்கத்தாரின் சர்வாதிகாரத்துக்குப் பதிலாய்த் தொழிலாளர்கள் தமது புரட்சிகர சர்வாதிகாரத்தைநிறுவிக்கொண்டார்களாயின் அவர்கள் கோட்பாடுகளைஇழிவுபடுத்திப் பயங்கரக் குற்றமிழைப்பவர்கள் ஆகிவிடுகிறார்கள். எப்படி என்றால் தமது ஆயுதங்களைத்துறந்துஅரசைஒழித்திடுவதற்குப் பதிலாய், அவர்கள் கேவலம் தமது அன்றாட அற்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்தாரரதுஎதிர்ப்பைநசுக்குவதற்காகவும் அரசுக்குப்புரட்சிகரமான இடைக்கால வடிவம் ஒன்றை அளிக்கிறார்கள்...”

அராஜகவாதிகளுக்குமறுப்புகூறுகையில்,இவ்வகையானஅரசு ஒழிப்பை மட்டுமே மார்க்ஸ் எதிர்த்துப் போராடினார்!. வர்க்கங்கள் மறையும்போது அரசும் மறையும் அல்லது வர்க்கங்கள் ஒழிக்கப்படும்போது அரசும் ஒழிக்கப்படும் என்ற கருத்தை அவர் எதிர்க்கவே இல்லை. அவர் எதிர்த்தது எல்லாம், தொழிலாளர்கள் ஆயுதப்பிரயோகிதத்தை(பயன்படுத்துவதை),

ஒழுங்கமைந்த பலாத்காரத்தை, அதாவது அரசை, முதலாளித்துவ வர்க்கத்தாரது எதிர்ப்பை நசுக்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குரிய அரசை கைவிட்டுவிட வேண்டும் என்றகூற்றைத்தான் மார்க்ஸ் எதிர்த்தார்.

அராஜகவாதத்துக்கு எதிரான தமது போராட்டத்தின் மெய்ப்பொருள் திரித்துப் புரட்டப்படுவதைத் தடுக்கும் பொருட்டு,பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் அரசு புரட்சிகரமான இடைக்கால வடிவம் கொண்டது என்பதை மார்க்ஸ் தெளிவாய் வலியுறுத்திக் கூறினார். பாட்டாளி வர்க்கத்துக்குத் தற்காலிகமாகவே அரசு தேவைப்படுகிறது. அரசு ஒழிக்கப்படுவது என்ற குறிக்கோளை பொறுத்தமட்டில் நாம் அராஜகவாதிகளுடன் நாம் சிறிதும் கருத்து வேற்றுமை கொண்டதில்லை. இந்தக் குறிக்கோளை அடைவதில் சித்தி பெறுவதற்காக, சுரண்டலாளருக்கு விரோதமாய்அரசுஅதிகாரத்தின்கருவிகளையும் சாதனங்களையும் முறைகளையும் தற்காலிகமாய்நாம்பயன்படுத்திக்கொண்டாகவேண்டுமென,வர்க்கங்களை,அழிக்க ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் தற்காலிகச் சர்வாதிகாரம் எப்படி அவசியமோ அதே போல இதுவும் அவசியமென நாம் வற்புறுறுத்துகிறோம்.

அராஜகவாதிகளை எதிர்த்துத் தமது நிலையை எடுத்துரைக்க மார்க்ஸ் மிகக் கூர்மையான, மிகத் தெளிவான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்.முதலாளிகளுடைய ஆதிக்கத்தைக் கவிழ்த்ததும் தொழிலாளர்கள் தமது ஆயுதங்களை துறந்துவிட வேண்டுமா? அல்லது முதலாளிகளுடைய எதிர்ப்பை நசுக்குவதற்காகத் தமது ஆயுதங்களை அவர்களுக்கு எதிராக பயன்படுத்த வேண்டுமா?என்று கேக்கிறார்.ஒரு வர்க்கம் பிறிதொன்றை எதிர்த்து முறையாய் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது அரசின் இடைக்கால வடிவம் அல்லாது வேறென்ன?.

சமூகஜனநாயகவாதியான ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேட்டுப்பார்க்கட்டும்:அராஜகவாதிகளுக்குஎதிரானவாக்குவாதத்தில் அரசு பற்றிய பிரச்சனையை அவர் இப்படியா எடுத்துரைத்துவந்துள்ளார்?இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த அதிகாரப்பூர்வமான மிகப்பெரும்பாலான சோசலிஸ்டுக் கட்சிகள் இப்படியா எடுத்துரைத்து வந்துள்ளனஎங்கெல்ஸ் இன்னுங்கூட விவரமாகவும் ரஞ்சகமாகவும் இதே கருத்துக்களை விளக்குகிறார்.

முதலில் அவர் புரூதோனிய வாதிகளுடைய குழப்படிக் கருத்துக்களை நையாண்டி செய்கிறார்.புரூதோனியவாதிகள் தம்மை அதிகார எதிர்ப்பாளர்களாய் அழைத்துக் கொண்டவர்கள்,அதாவது அவர்கள் எல்லா வகையானஅதிகாரத்தையும்,கீழ்ப்படிதலையும்,ஆட்சியையும் நிராகரித்தவர்கள்.ஓர் ஆலை அல்லது ரயில் அல்லது விரிகடலில் செல்லும் கப்பலை எடுத்துக் கொள்வோம் என்கிறார் எங்கெல்ஸ். இயந்திரச் சாதனங்களை உபயோகித்துக் கொள்வதையும் மிகப் பலரது முறையான ஒத்துழைப்பையும் அடிப்படையாய்க் கொண்ட சிக்கலான இந்த தொழில்நூட்ப நிலையங்கள் ஓரளவு கீழ்ப்படிதலும், ஆகவே ஓரளவு அதிகாரமும் அல்லது ஆட்சியும் இன்றி, இயங்க முடியாது என்பது தெளிவாய் விளங்கவில்லையா?

...மிகவும் ஆவேசமான அதிகார - எதிர்ப்பாளர்களுக்கு எதிராய் நான் இந்த வாதங்களை எழுப்புகையில் எனக்கு அவர்கள் தரவல்ல ஒரே ஒரு பதில் இதுதான்,அது சரிதான், ஆனால் இங்கு நாங்கள் எங்கள் பிரதிநிதிகளுக்கு வழங்குவது அதிகாரம் அல்ல பொறுப்புரிமையைத்தான் அளிக்கிறோம்! இந்த ஆட்கள் ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றிவிடுவதாய் நினைத்துக் கொள்கிறார்கள்... ...”இவ்விதம் அதிகாரம், சுயாட்சி ஆகியவை சார்புநிலைத் தொடர்களே என்பதையும்,அவற்றின் பிரயோக அரங்கு சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் மாறுபடுகிறது என்பதையும், அவற்றை சார்பில்லா முழுமுதலானவயாய்க் கொள்வது அறிவுடமை ஆகாது என்பதையும் விளக்கிவிட்டு,எங்கெல்ஸ் இயந்திர சாதனங்கள் பயன்படுத்தப்படும் அரங்கும் பெருவீத பொருளுற்பத்தியும் இடையறாது விரிவடைவதையும் குறிப்பிடுகிறார்.பிறகுஅதிகாரத்தைப்பற்றியபொதுவிவாதத்திலிருந்து அரசெனும் பிரச்சனைக்குச்  செல்கிறார்.

... சுயாட்சிக் கோட்பாளர்கள் வருங்கால சமூக அமைப்பானது பொருளுற்பத்தி நிலைமைகள் தவிர்க்க முடியாததாக்கும் வரம்புக்குள் மட்டுமே அதிகாரம் இயங்க அனுமதிக்குமென்று சொல்வதோடு நின்றிருந்தார்களானால்,அவர்களுடன் உடன்பாட்டுக்கு வர முடிந்திருக்கும். ஆனால் அதிகாரத்தை அவசியமாக்கும் உண்மைகளை எல்லாம் பார்க்காமலேயே கண்களைக் கெட்டியாய் மூடிக்கொண்டு ஆவேசமாய் இச் சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்.” “.... அதிகார - எதிர்ப்பாளர்கள் அரசியல் அதிகாரத்தை எதிர்த்து, அரசை எதிர்த்து,கூச்சலிடுவதோடு நிறுத்திக்கொண்டால் என்ன?. வருகிற சமுதாயப் புரட்சியின் விளைவாய் அரசும் அதனுடன் அரசியல் அதிகாரமும் மறைந்துவிடும் என்று,அதாவது பொதுப் பணிகள் அவற்றின் அரசியல் குணத்தை இழந்து சமுதாய நலன்களைக் கண்காணித்துக் கொள்ளும் வெறும் நிர்வாகப் பணிகளாக ஆகிவிடும் என்று எல்லா சோசலிஸ்டுகளும் ஒத்துக்கொள் கிறார்கள்.ஆனால் அதிகார எதிர்ப்பாளர்கள் அரசியல் வழியிலான அரசினை, அதைப் பெற்றெடுத்த சமூக உறவுகள் அழிக்கப்படுவதற்குமுன்பே,ஒரே மூச்சில் உடனடியாக அழித்துவிட வேண்டுமெனக் கோருகிறார்கள்.அதிகாரத்தைஒழித்திடுவதே சமுதாயப்புரட்சியின் முதல் செயலாய் இருக்கவேண்டுமெனக்கோருகிறார்கள்

இந்தக் கனவான்கள் எப்பொழுதாவது ஒரு புரட்சியைப் பார்த்திருக்கிறார்களா? புரட்சியைப் போல அதிகார ஆதிக்கம் செலுத்தும் எதுவுமே இருக்க முடியாது. துப்பாக்கிகளும் துப்பாக்கி குத்தீட்டிகளும் பீரங்கிகளும் கொண்டு (இவை யாவுமே மிகக் கடுமையான அதிகார ஆதிக்க சாதனங்கள்) ஒரு பகுதி மக்கள் எஞ்சிய பகுதியின் மீது தமது சித்தத்தைத் திணிக்கும் செயலே புரட்சி. வெற்றிபெறும் தரப்பு தனது படைபலம் பிற்போக்குவாதிகளிடத்தே உண்டாக்கும் குலைநடுக்க பயங்கரத்தின் மூலமாய்த் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும். பாரீஸ் கம்யூன் முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராய் ஆயுதமேந்தியமக்களுடைய அதிகாரத்தைப் பிரயோகிக்காதிருந்தால் அதனால் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்க முடியுமா? அதிகாரத்தைப் பிரயோகித்ததென்று கண்டிப்பதற்குப் பதில் இந்தஅதிகாரத்தை மிகச் சொற்பமாகவே உபயோகித்தது என்றல்லவா அதன்மீது குற்றஞ்சாட்ட வேண்டும்?. ஆகவே இரண்டில் ஒன்றுதான் உண்மை: ஒன்று அதிகார - எதிர்ப்பாளர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிக்கொண்டு இருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை; அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர்.. இரண்டில் எதுவாயினும், அவர்கள் பிற்போக்குப் பணியாற்றுபவரே ஆவார்இந்தக் கருத்துரை குறிப்பிடும் பிரச்சனைகள் அரசு உலர்ந்து உதிருகையில் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இருக்கும் உறவுநிலை சம்பந்தமாய்ப் பரிசீலிக்கப்பட வேண்டியவை (அடுத்த அத்தியாயம் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது)சமுதாயப் பணிகள் அரசியல் பணிகளிலிருந்து வெறும் நிர்வாகப் பணிகளாய்மாற்றப்படுதலும், அரசியல் வழியிலான அரசுமே இப்பிரச்சனைகள். கடைசியில் குறிக்கப்பட்ட அரசியல் வழியிலான அரசு என்னும் தொடர் குறிப்பாய்த் தவறான வழியில் அர்த்தப்படக் கூடியது. இத்தொடர் அரசு உலர்ந்து உதிரும் நிகழ்ச்சிப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறது: இந்த நிகழ்ச்சிப் போக்கின் குறிப்பிட்ட ஒருகட்டத்தில்,உலர்ந்துஉதிர்ந்துகொண்டிருக்கும் அரசு அரசியல் தன்மையில்லாத அரசாய்அழைக்கப்படக் கூடியதாய் ஆகிவிடுகிறது.

திரும்பவும் எங்கெல்சின் இந்தக் கருத்துரையில் சிறப்பு முக்கியதுவ முடையதாய்விளங்குவது,அராஜகவாதிகளை எதிர்த்து அவர் பிரச்சனையை எடுத்துரைக்கும் முறையே ஆகும். எங்கெல்சின் சீடர்களெனக் கூறிக்கொள்ளும் சமூக-ஜனநாயகவாதிகள்அராஜகவாதிகளை எதிர்த்து இப்பொருள் குறித்து 1873 முதலாய் லட்சக்கணக்கான முறை வாதாடி இருக்கிறார்கள், ஆனால் மார்க்சியவாதிகள் வாதாடத்தக்க, வாதாடவேண்டிய முறையில் அவர்கள் வாதாடியதே இல்லை. அரசு ஒழிக்கப்பட வேண்டியது பற்றிய அராஜகவாதக்கருத்துக் குழப்படியானது, புரட்சிகரமல்லாதது. - இதுவே எங்கெல்சின் வாதம். புரட்சியை அதன் எழுச்சியிலும் வளர்ச்சியிலும், பலாத்காரம், அதிகாரம், ஆட்சி,அரசு ஆகியவை குறித்து அதற்குரிய பிரத்தியோகப் பணிகளுடன் பார்க்க அராஜகவாதிகள் தவறிவிடுகிறார்கள்.

தற்கால சமூக ஜனநாயகவாதிகள் அராஜகவாதத்தைப் பற்றி வழக்கமாய் கூறும் விமர்சனம் முற்றிலும் அவலமான குட்டிமுதலாளித்துவ அற்பத்தனமாய்ச் சிறுமையுற்றுவிட்டது: அரசை நாங்கள் அங்கீகரிக்கிறோம்,ஆனால் அராஜகவாதிகள் அங்கீகரிப்பதில்லை!என்பதாகிவிட்டது. இத்தகையஅவலம்,சிறிதளவேனும் சிந்தனை ஆற்றலும் புரட்சி மனோபாவமும் கொண்ட தொழிலாளர்களை அருவருப்புக் கொண்டு விலகிவிடச் செய்வதுஇயற்கையே. எங்கெல்ஸ் கூறுவது முற்றிலும் வேறு. சோசலிசப் புரட்சியின் விளைவாய் அரசு மறைந்துவிடும், எல்லா சோசலிஸ்டுகளும் இதை ஒத்துக்கொள்கிறார்கள் என்று அவர்வலியுறுத்துகிறார்.பிறகு புரட்சி யெனும் பிரச்சனையைப் பிரத்தியோகமானப் பிரச்சனையாய்க் கொண்டு பரிசீலிக்கிறார். இந்தப் பிரச்சனையைத்தான் சந்தர்ப்பவாதம்காரணமாய் சமூக - ஜனநாயகவாதிகள் வழக்கமாய்த் தட்டிக்கழித்து,இதனை அராஜகவாதிகளே வகுத்துரைக்கும் வண்ணம் முற்றிலும் அவர்கள் கைக்கு விட்டுவிடுகிறார்கள். எங்கெல்ஸ் அரசெனும் பிரச்சனையை பரிசீலிக்கையில்,நேரே அதன் மைய விவகாரத்தைக் குறிவைத்துத் தாக்குகிறார்:கம்யூனானது அரசினுடைய (அதாவது ஆயுதம் தாங்கி ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தினுடைய)புரட்சிகர ஆட்சி அதிகாரத்தை இன்னும் அதிகமாய்ப் பிரயோகித்திருக்க வேண்டாமா? என்று கேட்க்கிறார்.

புரட்சியின் போது பாட்டாளி வர்க்கத்துக் குள்ள ஸ்தூலமான பணிகள் குறித்த பிரச்சனையைத் தற்போது ஆதிக்கத்திலுள்ள அதிகாரப்பூர்வமான சமூக- ஜனநாயகமானது அற்பவாத முறையில் ஏளனம் செய்து, அல்லது அதிகம் போனால் வருங்காலம் இதைத் தெரியப்படுத்தும்என்று குதர்க்கவாதம் பேசித் தட்டிக்கழித்து, வழக்கமாய் புறக்கணித்துள்ளது.

தொழிலாளர்களுக்குபுரட்சிகரப்போதனையளிக்கும்பணியினைவிட்டொழிக்கிறார்களென அராஜகவாதிகள் இத்தகைய சமூக - ஜனநாயகவாதிகள் குறித்து கூறியது முற்றிலும்நியாயமே. வங்கிகள், அரசு இவை இரண்டும் குறித்துப் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும், இதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மிகவும் ஸ்தூலமான முறையில்ஆய்ந்தறிவதற்காக, கடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனுபவத்தை எங்கெல்ஸ் பயன்படுத்திக் கொள்கிறார்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை.

1.அரசு என்ற வகையில் தற்போதைய முதலாளித்துவ அரசுக்கும் பின்னாலில் நாம்அமைக்கப் போகும் தொழிலாளி வர்க்க அரசுக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் சில வேற்றுமைகளும் உண்டு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இதன் பயனாகத்தான் நாம் உருவாக்கப் போகும் தொழிலாளி வர்க்க அரசு எத்தகைய தன்மைபடைத்ததாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு நாம் உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் தவறைத் தவிர்க்க முடியும்.இந்த ஆழமான மிகவும் முக்கியமான பிரச்சனை குறித்து நமது மார்க்சிய ஆசான்கள் எடுத்து விளக்கியதையும்அவர்களின்அனுபவத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒருதொடர்ச்சியான கற்றல் மற்றும் பயிற்சியின் மூலமாகவே நாம் அடைய முடியும்.

2. உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு குடியிருப்பதற்கு வீடு இல்லை. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சமுதாயப் புரட்சி எப்படித் தீர்க்கும் என்ற கேள்விக்கு இந்தப் பிரச்சனை நிலவும் காலத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்பவே தீர்க்கப்படும் என்று மார்க்சியம் குறிப்பிடுகிறது. இவ்வாறு சமூகப் பிரச்சனை எதுவாக இருந்தாலும் புரட்சிக்குப் பிறகு உருவாகும் தொழிலாளர்களின் அரசானது ஒவ்வொரு பிரச்சனையையும் குறிப்பிட்ட சூழ்நிலையையும் அதனோடு தொடர்பு கொண்ட பல பிரச்சனைகளையும் தொகுத்து ஆய்வு செய்தே தீர்வுகாண வேண்டும் என்றுமார்க்சியம் வழிகாட்டுகிறது. இதற்கு மாறாக தொழிலாளி வர்க்க அரசு உருவாகிவிட்டலே அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்ற கற்பனையின் அடிப்படையில் நாம் சிந்திக்கவோ செயல்படவோ கூடாது என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லியுள்ளார்கள்.இதன் பொருள் மார்க்சிய ஆசான்கள் பிரச்சனைகளை பகுத்துப் பார்ப்பதற்கும் முடிவுகள் எடுப்பதற்கும் பொதுவான வழிகாட்டுதலைகளையே வழங்கியுள்ளார் கள்.இந்த பொதுவான வழிகாட்டுதலை நாம்தான் உள்வாங்கி,இந்தக் கண்ணோட்டத்திலிருந்து நாம் சந்திக்கும் பிரச்சனையை நாம்தான் பகுத்தாராய்ந்து முடிவெடுத்துச் செயல்பட வேண்டும்.நாம் கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டிவிட்ட தாலேயே நாம் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது.மாறாக குறிப்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம்தான் முயற்சி செய்து பாடுபட வேண்டும் என்றுதான் மார்க்சிய ஆசான்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

3. உருவாக்கப்படும் தொழிலாளர் வர்க்க அரசின் கடமைகளில் ஒன்றாக நகரத்திற்கும்கிராமத்திற்கும் இடையிலான இடைவெளி நீக்கப்படுவதாக உள்ளது என்கிறார் லெனின். தற்கால சமுதாயத்திலேயே கிராமங்களோடு ஒப்பிடுகையில் பெரிய நகரங்களில் மக்கள் குடியிருப்பதற்குத் தேவையான குடியிருப்புகள் உள்ளது. ஆகவே இதனை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் குடியிருப்புப் பற்றாக்குறையை எளிதாக தீர்த்துவிட முடியும். ஆனாலும் வீடுகளின் உடமையாளர்களிடமிருந்துகுடியிருப்புகளை பறிமுதல் செய்து வீடுகள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலமே இப்பிரச்சனையைத் தீர்க்க முடியும். தற்போதைய அரசானது முதலாளிகளின் தேவைக்கு விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்வது போல பாட்டாளிவர்க்கமும் தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டு உடமையாளர்களிடமிருந்து வீடுகளை பறிமுதல் செய்து இப்பிரச்சனையைத் தீர்க்கமுடியும். இதுபோலவே முதலாளிகளுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்களை கைப்பற்றி அதனை மக்களின் உடமையாக பாட்டாளி வர்க்க அரசால் மாற்ற முடியும்.

தற்கால அரசானது முதலாளிகளின் நலனுக்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் பாட்டாளி வர்க்க அரசானது உழைக்கும் மக்களின் நலனுக்காக இந்த அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.ஆகவேஇரண்டுவகையான அரசுகளும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது என்பதில் ஒற்றுமை உண்டு.ஆனால் இரண்டுவகையான அரசுகளின் நோக்கங்கள் எதிர் எதிரான நோக்கமாக இருப்பதில் இவ்விரு வகையான அரசுகளுக்கு இடையே வேற்றுமை நிலவுகிறது.முதலாளித்துவ அரசின் நோக்கம் முதலாளிகளின் நலனாகும்,ஆனால் பாட்டாளி வர்க்க அரசின் நோக்கம் உழைக்கும் மக்களின் நலனாகும்.

4.வீடுகளை ஆணையிட்டு கைப்பற்றுவது தற்கால அரசினாலும் செய்ய முடியும், ஆனால் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தற்கால அரசு இயந்திரம் அதற்கு பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில் இந்த அரசு அதிகாரவர்க்க இயந்திரமானது முதலாளிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் லஞ்சங்களுக்காகவே செயல்படக் கூடியவகையிலேயே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகார வர்க்கஅரசு அதிகாரிகள் லஞ்சலாவணியத்திலேயே ஊறிப்போயுள்ளார்கள் கூடவேஇவர்களை கட்டுப்படுத்த மக்களுக்கு அதிகாரம் இல்லை. ஆகவேதான் பாட்டாளிவர்க்க அரசானது உழைக்கும் மக்ளுக்கு கட்டுப்படக்கூடிய நபர்களைக் கொண்டு அரசின் திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றும். மேலும் இத்தகைய நபர்களை கண்காணித்து தவறு ஏற்பட்டால் அவர்களை தண்டிக்கக்கூடிய அதிகாரமும்உழைக்கும் மக்களுக்கு இருக்கும்.

5.புருதோனின் கண்ணோட்டத்தில் ஒவ்வொரு உழைப்பாளிகளுக்கும் உற்பத்திகருவிகள் உடமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்.இந்த முறையில் தனிவுடமைஒழிக்கப்பட மாட்டாது.மாறாக மார்க்சியமானது முதலாளிகளின் உடமைகள் அதாவது முதலாளிகளுக்குச் சொந்தமான உற்பத்திச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அனைத்து உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானதாக இந்த உடமைகள் மாற்றப்படும் என்பதாகும். புருதோனிய முறையில் ஒவ்வொரு உழைப்பாளனும் உழைப்புக் கருவியின் தனிவுடமையாளனாகிறான், ஆனால் மார்க்சிய வழிமுறையில் ஒவ்வொரு உழைப்பாளனும் சமூகச் சொத்திற்கு கூட்டு உடமையாளர்களாக ஆகிறார்கள்.இவ்வாறுதான் மார்க்சியமானது பொதுவுடமையை வலியுறுத்துகிறது.

6. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளில் உழைக்கும் மக்களை இலவசமாகஆரம்பகாலத்தில் குடியமர்த்த பாட்டாளி வர்க்க அரசு அனுமதிக்காது. மாறாக குடியிருப்பவர்களிடமிருந்து வாடகை வசூலிக்கும். அது போலவே உற்பத்திச்சாதனங்களை பொதுவுடமையாக மாற்றிவிட்டாலும் ஆரம்ப காலங்களில் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற கூலியைத்தான் பாட்டாளி வர்க்க அரசு வழங்கும். அதாவது எதார்த்த சூழலுக்கு ஏற்பவே பாட்டாளி வர்க்க அரசு செயல்படும்.

தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு சமூக விஞ்ஞானக் கல்வியை போதிப்பதும் அவர்களுடைய பண்புகளை சிந்தனை முறைகளை பொதுவுடமையின்பால் வளர்த்திடவும் பாட்டாளி வர்க்க அரசும் பாட்டாளி வர்க்க கட்சியும் முயற்சி செய்ய வேண்டும்.

7. ஆரம்பகாலங்களில் பாட்டாளி வர்க்க அரசானது குடியிருப்புகளை ஒதுக்குவது, வாடகை வசூலிப்பது, கண்காணிப்பது போன்ற கடமைகளைச் செய்வதற்கு குறிப்பிட்ட முறையிலான அரசு தேவைப்படுகிறது. அதற்கு தனிவகைப்பட்டசலுகைகள் பெற்ற அரசு அதிகாரவர்க்க இயந்திரமும் இராணுவமும் தேவையில்லை.

மேலும் வாடகை இல்லாமல் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலை ஏற்படும் போதுஅந்த அரசானது உலர்ந்து உதிர்ந்துவிடும் நிலையை அடைந்துவிடுகிறது என்கிறது மார்க்சியம். அதாவது கம்யூனிச சமுதாயத்தில் அரசு என்பது இருக்காது.அதற்கு முன்புஉருவாக்கப்படும் சோசலிச அரசில் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் பெற்றஅரசாக இருக்கும். இந்த சோசலிச அரசு தொடர்ந்து செயல்பட்டு அரசானது உலர்ந்து உதிரும் நிலையை நோக்கி முன்னேறும். இத்தகைய முன்னேற்றத்தின் போது அதுஉலர்ந்து உதிரும் அரசாக மாறலாம் அல்லது அதற்கு எதிரான முதலாளித்துவ வகைப்பட்ட அரசாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆகவே இத்தகைய சூழலில் கம்யூனிஸ்டுகளும் உழைக்கும் மக்களும் எந்தளவு சிறப்பாக வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்கிறார்களோ அந்த அளவுக்குத்தான் இந்த மாற்றங்கள் நிகழும். ஆகவே சோசலிச அரசை உருவாக்கிவிட்டாலேயே அந்த அரசானது உலர்ந்து உதிரும்நிலையை அடைந்து அரசு இல்லாத கம்யூனிச சமூகமாக மாறிவிடாது.ஆகவே ஒவ்வொரு காலத்திலும் நிலவுகின்ற சூழலை மதிப்பிட்டு சமூகத்தை சிறப்பாகமாற்றுவதற்கான திட்டத்தை உருவாக்கி தொடர்ந்து போராடுவதன் மூலமே நாம் நமதுலட்சியமான கம்யூனிச சமூகத்தை அடையமுடியும். நமது லட்சியத்திற்கு எதிரான கருத்துக்களும் சதிச் செயல்களையும் நாம் தொடர்ந்து சந்தித்துத்தான் ஆகவேண்டும்.இத்தகைய துரோகத்தையும் சதிச் செயலையும் நம்மால் ஒருபோதும் தவிர்க்க முடியாது. அதனை எதிர்கொண்டு போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

8.வர்க்கங்களையும் அவற்றுடன்கூட அரசையும் ஒழித்திடுவதற்காகப் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் செயலும் அதன் சர்வாதிகாரமும் அவசியமாகும் என்ற கூற்றை சர்வதேச சந்தர்ப்பவாதிகள் அராஜகவாதம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

பாட்டாளி வர்க்கத்திற்கு சர்வாதிகாரம் மிகவும் அவசியம் என்பதை கம்யூனிஸ்டுகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக அறிவிக்கிறார்கள்.இவ்வாறு பாட்டாளி வர்க்கத்திற்கு சர்வாதிகாரம் தேவை என்பதை முதலாளித்துவவாதிகளும் சந்தர்ப்பவாதி களும் அராஜகவாதம் என்று கூச்சலிடுவதன் மூலம் நிலவுகின்று அரசானது சர்வாதிகாரத்தை மறுக்கும் ஜனநாயக அரசு என்று சொல்லி நிலவுகின்ற அரசானது முதலாளித்துவ சர்வாதிகார அரசு என்பதை மூடிமறைக்கிறார்கள்.

9. வர்க்கங்கள் ஒழியும்போது அரசும் ஒழிந்துவிடும் என்று மார்க்சியம் எப்போதும்போதித்து வந்திருக்கிறது. இதன் மூலம் சமுதாயத்தில் வர்க்கங்கள் இருக்கும்வரைஅரசும் இருக்கும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. அப்படியானால் ஒழிக்கப்பட வேண்டிய அரசு எது?என்று மார்க்சியம் போதிக்கிறது என்ற கேள்விக்குப் பதில் ஒழிக்கப்பட வேண்டிய அரசு முதலாளித்துவ அரசே ஆகும் என்று மார்க்சியம் தெளிவாக விளக்குகிறது.முதலாளித்துவ அரசை நாம் ஒழித்தாலும் அரசு என்று ஒன்று இல்லாமல் போய்விடாது.முதலாளித்துவ அரசுக்கு மாற்றாய் பாட்டாளி வர்க்க அரசுஉருவாகும் அல்லது உருவாக்கப்பட வேண்டும் என்றே மார்க்சியம் போதிக்கிறது. மேலும் இந்த பாட்டாளி வர்க்க அரசும் ஒழிந்துவிடாது மாறாக உலர்ந்து உதிரும்என்றே மார்க்சியம் விளக்குகிறது

அதாவது பாட்டாளி வர்க்க அரசின் திட்டமிட்டதொடர்ந்த செயல்பாட்டின் காரணமாக வர்க்கமற்ற சமுதாயமாக சமுதாயம் மாறும்அல்லது வளரும்.அவ்வாறு சமுதாயத்தில் வர்க்க வேறுபாடுகள் இல்லாதுமறைந்துவிட்ட பின்பு தற்போதுள்ளது போன்று ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களைஒடுக்க வேண்டும் என்ற நிலை இல்லாது போய்விடும்.ஆகவே வரலாற்றில்ஒடுக்குமுறை கருவியாக உருவான அரசின் தேவை சமூகத்திற்கு இல்லாதுபோய்விடும்.வர்க்கங்களாக பிளவுபடாத அனைத்து மக்களும் ஒன்றுகலந்துதங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொண்டு வாழும் முறையை சிறப்பாகக்கற்றுக்கொண்டு ஒற்றுமையாக ஒழுங்கமைந்து வாழ்வார்கள் என்று நமக்கு மார்க்சியம்போதிக்கிறது. இது கற்பனை அல்ல. எனினும் இத்தகைய சமூகத்தைஉருவாக்குவதற்குகம்யூனிஸ்டுகளும் உழைக்கும் மக்களும் தொடர்ச்சியாகநம்பிக்கையுடன் சமூக விஞ்ஞானமான மார்க்சிய லெனினிய தத்துவ அரசியல் வழியில்தொடர்ந்து பாடுபடுவதன் மூலமே சாதிக்க முடியும்.இதற்கு மாறாக நம்பிக்கை இழந்துசமூக விஞ்ஞானமான மார்க்சிய அடிப்படை புரிதல் இல்லாமல் செயல்படுவதன் மூலம்இதனை சாதிக்க முடியாது.மார்க்சியத்திற்கு எதிராக அராஜகவாதிகள் அரசைஒரேயடியாக உடனடியாக ஒழித்துவிட வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தக்கருத்தை மார்க்சியம் ஏற்கவில்லை, எதிர்த்துப் போராடுகிறது. ஆகவே நாம்மார்க்சியத்திற்கும் அராஜகவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாகப்புரிந்துகொள்ள வேண்டும்.

10. பாட்டாளி வர்க்க அரசு அமைந்தவுடன் அந்த அரசை முதலாளித்துவ வர்க்கங்கள்எதிர்க்கும். அவர்களின் எதிர்ப்பை நசுக்குவதற்கு பாட்டாளி வர்க்க அரசானதுஆயுதங்களையும் பலாத்காரத்தையும் பயன்படுத்த வேண்டியது அவசியமே என்றேமார்க்சியம் போதிக்கிறது.பாட்டாளி வர்க்க அரசானது உழைக்கும் மக்களின் நலன்களுக்காக பரந்துபட்ட முறையில் மக்களிடம் விவாதங்கள் நடத்தி மக்களின்விருப்பங்களை அறிந்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான சட்டங்களையும் திட்டங்களையும் போட்டு செயல்படும்.அவ்வாறு செயல்படும்போது முதலாளிகள் தங்களது சொந்த நலனை முன்வைத்து இத்தகைய மக்கள் நலன் கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்க்காமல் இருந்தால் பிரச்சனை இல்லை.

மாறாக எதிர்த்தால் அவ்வாறு எதிர்ப்பவர்களை மக்களின் நலனிலிருந்து நசுக்க வேண்டியது மக்களின் நலனுக்காகச் செயல்படும் பாட்டாளி வர்க்க அரசின் கடமைஅல்லவா. இதற்காகவே பாட்டாளி வர்க்க அரசானது முதலாளிகளுக்கு எதிராகசர்வாதிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே முதலாளித்துவ அரசின்சர்வாதிகாரத்தையும் பாட்டாளி வர்க்க அரசின் சர்வாதிகாரத்தையும் நாம்வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.பொதுவான சர்வாதிகாரம் என்று உலகில் இல்லை,மாறாக முதலாளிகளின் சர்வாதிகாரம் என்றும் உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம்என்ற இரண்டுவகையான சர்வாதிகாரம்தான் உண்டு.ஆகவே நமக்குத் தேவைமுதலாளித்துவ சர்வாதிகாரமா அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமா என்பதைநாம்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

11.பாட்டாளி வர்க்கத்துக்குத் தேவைப்படும் அரசு இடைக்கால வடிவம் கொண்டது என்றுமார்க்ஸ் தெளிவுபடுத்தினார். வர்க்கங்களை அழிக்க ஒடுக்கப்பட்ட வர்க்கத்துக்குதற்காலிகமாக சர்வாதிகாரம் தேவைப்படுகிறதோ அதுபோலவே முதலாளிவர்க்கத்தின்எதிர்ப்பை நசுக்க பாட்டாளி வர்க்கத்துக்கு தற்காலிகமாக பாட்டாளி வர்க்கசர்வாதிகார அரசு தேவைப்படுகிறது என்றே மார்க்சியம் கருதுகிறது. அரசுஒழிக்கப்பட வேண்டும் என்ற அராஜகவாதிகளின் கருத்தை மார்க்சியம்ஏற்றுக்கொள்கிறது. இதனை நடைமுறையில் நிறைவேற்றுவதற்கு பாட்டாளிவர்க்கத்திற்கு அரசு அதிகாரமும் ஆயுத வகையிலான பலாத்காரமும் தற்காலிகமாகவே தேவைப்படுகிறது என்பதுதான் அராஜகவாதிகளுக்கு எதிராக மார்க்சியம் முன்வைக்கும் நிலைபாடாகும்.அராஜகவாதிகள் எல்லா வகையான அரசின்பலாத்காரத்தையும் ஒழித்திட வேண்டும் என்று வாதிடுவதன் மூலம் பாட்டாளி வர்க்கசர்வாதிகாரத்தையும் எதிர்க்கிறார்கள். இந்த அராஜகவாதக் கொள்கையைத்தான் மார்க்சியம் மறுக்கிறது. அதாவது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின்அவசியத்தை மார்க்சியம் போதிக்கிறது.

12.முதலாளித்துவ அரசை கலைப்பதன் மூலம் முதலாளிகளின் ஆதிக்கத்தை கவிழ்த்ததும் தொழிலாளர்கள் தமது ஆயுதங்களைத் துறந்துவிட வேண்டுமாஎன்ற கேள்வி எழுப்பி முதலாளிகளின் எதிர்ப்பை நசுக்குவதற்காக தொழிலாளிகள் தமது ஆயுதங்களைமுதலாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது.

ஆகவே தொழிலாளர்களுக்கு முதலாளி வர்க்கத்தை ஒடுக்குவதற்கு பலாத்காரக் கருவிகளைக் கொண்ட அரசு தேவைப்படுகிறது என்று மார்க்சியம் கூறுகிறது. இதற்கு மாறாக வலது போக்கிலுள்ள திருத்தல்வாதிகள் முதலாளிகளை பாதுகாப்பதற்காகவும் தொழிலாளர்களை நசுக்குவதற்காகவும் உருவாக்கி வளர்க்கப்பட்ட பலாத்காரக்கருவியான போலீஸ், இராணுவம், நீதித்துறை,சிறைச்சாலை போன்ற தற்கால அரசுநிறுவனங்களைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்றுஅரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டையே திருத்திப் புரட்டுகிறார்கள். சட்டமன்றம்,பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபெற்று சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுஆட்சிக்கு வந்து முதலாளிகளுக்கு சேவை செய்து தொழிலாளர்களையும்விவசாயிகளையும் மக்களுக்காகப் பாடுபடும் இயக்கத்தைச் சார்ந்தவர்களைச் சுட்டுத்தள்ளுகிறார்கள்.

13.புருதோன் ஒரு அராஜகவாதி.புருதோனியவாதிகள் தங்களை அதிகார எதிர்ப்பாளர்களாக அழைத்துக்கொண்டார்கள். அவர்கள் அனைத்து வகையான அதிகாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கீழ்படிதல்களையும் ஆட்சியையும்எதிர்க்கவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவர்கள். ஆனால் தொழிற்சாலை, கப்பல் போன்றவற்றிலுள்ள இயந்திர சாதனங்களை இயக்குவதில் பலரது ஒத்துழைப்பு அவசியமாகும். இத்தகைய ஒத்துழைப்பை அடைவதற்கு அதிகாரமும் கீழ்படிதலும் ஆட்சியும் அவசியமாகும் என்பது நடைமுறைஉண்மைஅல்லவா?ஆகவேதான்மார்க்சியவாதிகள் அராஜகவாதிகளுக்கு எதிராக அதிகாரம் ஒழுங்குமுறையை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்க அரசு தொழிலாளர்களுக்குத் தேவை என்றும், இந்த அதிகாரம் எதற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வியாகும். அதற்கு இந்த அதிகாரம் உழைக்கும் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் மேலும் வர்க்கங்களை ஒழிப்பதற்காகப்பாடுபட வேண்டும் என்று மார்க்சியம் கூறுகிறது.

14. அதிகாரம், சுயாட்சி போன்றவற்றை சார்புநிலையில் பார்க்க வேண்டும். சமூகச்சூழ்நிலையைப் பொறுத்து இவைகள் மாறுபடும்.சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அதிகாரம் மற்றும் ஆட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் மாறாக எல்லாச் சூழ்நிலையிலும் மாற்றப்படக்கூடாது என்று பார்க்கக் கூடாது என்றுமார்க்சியம் வரையறுக்கிறது.

15.சமுதாயப் புரட்சியின் மூலம் நிலவும் அரசும்,அதன் அரசியல் அதிகாரமும் மறைந்துவிடும் என்றும் அதற்குப் பின்பு பொதுப்பணிகள்யாவும்தற்போதுள்ளவாறான அரசியல் குணத்தை இழந்துவிடும் என்றும் சமுதாயநலன்களைப் பாதுகாப்பதற்கான நிர்வாகப் பணிகளை செய்வதற்கான நபர்களாகமட்டுமே அரசு உறுப்பினர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் அதாவது அரசு நிறுவனமானது பொதுநலன்களைப் பாதுகாப்பதற்கான நிர்வாக நிறுவனங்களாக

மாற்றப்படும் என்று சோசலிஸ்டுகள் கருதுகிறார்கள்.ஆனால் இதற்கு மாறாக அராஜகவாதிகள் சமூகமானது வர்க்கங்களாகப் பிளவுபட்டதன் காரணமாக உருவான அரசானது அந்த வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு அரசின் தேவை இல்லாத சூழல்உருவாவதற்கு முன்பே அரசை ஒழித்துவிட வேண்டும் என்று கோருகிறார்கள்.ஆனால் வர்க்கங்கள் நிலவும்வரை அரசு என்பது இருந்தே தீரும் என்ற உண்மையை அராஜகவாதிகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்.

16. துப்பாக்கி குத்தீட்டி பீரங்கி போன்ற ஆயுதங்களைக் கொண்டு மிகப்பெரும் பான்மையான மக்களின் நலன்களுக்காக மிகக் குறைவான மக்கள் விரோத சுரண்டலாளர்களின் மீது தாக்குதல் நடத்தி மிகப்பெருவாரியான மக்களின் விருப்பங்களை சிறுபாண்மை சுரண்டலாளர் மீது திணிக்கும் செயலே சமூகப் புரட்சியாகும்.

17.பாரீஸ்கம்யூன் முதலாளி வர்க்கத்திற்கு எதிராய் ஆயுதம் ஏந்திய மக்களுடைய அதிகாரத்தைப் பிரயோகிக்காமல் இருந்திருந்தால் அந்த கம்யூனால் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்க முடியாது. அது ஒரளவாவது நீடித்திருந்ததற்கு காரணம் அது அதிகாரத்தைமுதலாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதேஆகும்.. ஆனால் அது மேலும் போதிய அளவு அதிகாரத்தைப் பயன்படுத்த தவறியதால்தான் அது சிறிது காலத்திற்குப் பிறகு கம்யூன் வீழ்ந்தது.ஆகவே கம்யூனை விமர்சிக்கும் போது கம்யூனானது அதிகாரத்தைப் பயன்படுத்தியது தவறு என்று விமர்சிப்பது சரியானதல்ல மாறாக அதிகாரத்தை போதுமானஅளவுக்குப் பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம்தான் சரியானதாகும்.

டிராட்ஸ்கியவாதிகள் ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான் அங்கு சோசலிசம் வீழ்ந்ததற்கான காரணமாகச் சொல்வது தவறானதாகும்.மாறாக குருஷேவ் திருத்தல்வாதியால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கைவிடப்பட்டு அரசு அதிகாரவர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்தியதால்தான் அங்கு சோசலிசம் வீழ்த்தப்பட்டது.ஆகவே எப்படி பாரீஸ்கம்யூன் அனுபவத்திலிருந்துலெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் பாடம் கற்றுக்கொண்டு ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி பெற்றார்களோ அதைப் போலவே இன்றைய கம்யூனிஸ்டுகள் ரஷ்ய சோவியத்து வரலாற்று அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேறவேண்டும். இதற்கு மாறாக சோசலிச மாற்றத்திற்காகப்பாடுபடுவதே தவறு என்று கருதி திருத்தல்வாதிகளாக மாறுவதால் மக்களுக்குஎவ்விதமான பயனும் இல்லை.

18.புரட்சியின் போது பாட்டாளி வர்க்கத்துக்குள்ள ஸ்தூலமான பணிகள் குறித்தபிரச்சனையைத் தற்போது ஆதிக்கத்திலுள்ள அதிகாரப்பூர்வமான சமூக -ஜனநாயகமானது அற்பவாத முறையில் ஏளனம் செய்து, அல்லது அதிகம் போனால் வருங்காலம் இதைத் தெரியப்படுத்தும் என்று குதர்க்கவாதம் பேசித் தட்டிக்கழித்து,வழக்கமாய் புறக்கணித்துள்ளது.தொழிலாளர்களுக்குபுரட்சிகரப்போதனையளிக்கும்பணியினைவிட்டொழிக்கிறார்களென அராஜகவாதிகள் இத்தகைய சமூக -ஜனநாயகவாதிகள் குறித்து கூறியது முற்றிலும் நியாயமே என்கிறார் லெனின்.

தற்போதும் இடதுசாரிகளில் சிலர் அன்றைய சமூகஜனநாயகவாதிகளைப் போலவேபுரட்சி நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தப் பிரச்சனையை எழுப்பும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளைப் பார்த்து ஏளனம் செய்வதை நாம் பார்க்கலாம்.புரட்சியா அதுஇந்தியாவில் நடத்திட முடியாது என்றும் புரட்சியில் ஈடுபட்டால் மக்கள் பலர் குண்டடிபட்டு சாவார்கள்.ஆயுத பலம் கொண்ட இந்த அரசை மக்களால் வீழ்த்திடமுடியாது என்று மக்களிடம் அவநம்பிக்கையை வளர்ப்பதும், மக்களுக்கு

அச்சமூட்டுவதையும் நாம் காணலாம்.ஆனால் எவ்விதமான புரட்சிகர நடவடிக்கையிலும் ஈடுபடாத உழைக்கும் மக்களில் கோடிக்கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் பட்டினியாலும், நோயினாலும் செத்து மடிந்துகொண்டு இருக்கிறார்கள்.நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயிகளும் சிறு வணிகர்களும்தற்கொலைசெய்துகொண்டுசெத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறுசெத்துக் கொண்டிருப்பவர்களிடம் இப்படிப்பட்ட இளிவான சாவை எதிர்கொண்டு வாழ்ந்து மடிவதைவிட உழைக்கும் மக்களுக்கான அரசைப் படைப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுச் சாவது எவ்வளவோ மேல் என்று உணர்த்தி வர்க்கப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு அதனை புரட்சியை நோக்கி நகர்த்திட வேண்டும் அது நமது கடமை மட்டுமல்ல உழைக்கும் மக்களால் சாதிக்க முடியும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது கருத்துக்களை மக்களுக்குப் போதித்து மக்களை அணிதிரட்டுபவர்கள் யாரோ அவர்கள்தான் மார்க்சிய லெனினிய ஆசான்களது தத்துவ அரசியலை ஏற்றுக்கொண்டு உள்வாங்கி செயல்படும் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.

இதற்கு மாறாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகள் இல்லை. மாறாக அவர்கள் போலி கம்யூனிஸ்டுகளே ஆவார்கள்.ஆகவே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுஉழைக்கும் மக்களுக்கான புதியஉலகை நாம் எவ்வளவு காலம் ஆனாலும் படைக்க முடியாது. மாறாக ஒரு பாட்டாளிவர்க்கப் புரட்சியின் மூலமே உழைக்கும் மக்களுக்கான புதிய பொன்னான உலகத்தைப்படைக்கமுடியும். இதுவே உழைக்கும் மக்களுக்கு மார்க்சிய லெனினியம்போதிக்கும் போதனை ஆகும்.

-தேன்மொழி..

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்