தத்துவமும் நடைமுறையும்-7

 ஆன்மாவுக்கு ஆதியுமில்லை அந்தமும் இல்லை. அது அமரத்தன்மை வாய்ந்தது என்பதுஅப்படிப்பட்ட பிரச்சனைகளில் ஒன்று. பிறகு கடவுள் உண்டா இல்லையா என்று ஒரு பிரச்சனை. உலகம் எப்படித் தோன்றியது என்பது மற்றொரு பிரச்சனை, இவற்றை எல்லாம் நாம் சமாளிக்க வேண்டியுள்ளது.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் நமக்கு ஒரு ஆய்வுமுறையைத் தருகின்றது. அதைக்கொண்டு நாம் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் விடையளிக்க வழி கிடைக்கிறது. மார்க்சிய தத்துவத்தை  முழுமையாக்குகிறோம், புதுமை செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு மார்க்சியத்தை புரட்டிப் பொய்யாக்க முயற்சி செய்கின்றவர்களின் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தவும் வழி கிடைக்கின்றது.

ஆகவே மார்க்சிய தத்துவத்தை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழமாக கற்கிறோமோ அந்த அளவுக்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விஞ்ஞான அடிப்படையில் புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்வுகளை காண முடியும். மேலும் உழைக்கும் மக்களை ஏமாற்றி பிழைப்பவர்களின் மக்களுக்கு எதிரான கருத்துகளையும் மார்க்சியத்திற்கு எதிரான கருத்துகளையும் எதிர்த்துப் போராடி அம்பலப்படுத்த முடியும்.

ஆகவே தோழர்களே இலக்கு இணையதளத்தோடு இணைந்து மார்க்சிய தத்துவத்தைபயிலுவோம் வாருங்கள் என்று இலக்கு உங்களை அழைக்கிறது.

மார்க்சியத்திற்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்தும் பிரச்சாரம். மார்க்சியத்தைப் புரட்டிப் பொய்படுத்த நடக்கும் முயற்சிகள் பல்வேறு அடிப்படைகளிலிருந்து எழுகின்றன. மார்க்சுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சோசலிஸ்டு ஆசிரியர்களை மார்க்சியத் திற்கு எதிராக சிலர் அணிதிரட்டப் பார்க்கிறார்கள். இப்படித்தான் "கற்பனாவாத சோசலிசத்தின்" போதகர்களை மார்க்சுக்கு எதிராக சிலர் ஏவி விடுகிறார்கள். வேறு சிலர் புருதானை உபயோகித்துக் கொள்கின்றனர். 1914ஆம் ஆண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த தத்துவ மாரீசர்களை தங்களுக்குஊன்றுகோலாக கொள்கின்றனர்.(தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக்கொண்டே மார்க்சியத்தை படுமோசமாகத் திரித்துப் புரட்ட முன்வந்த காவுட்ஸ்கி, ஹில்பர்டிங், பெர்ன்ஸ்டைன், டுராடி முதலியவர்கள், 19ஆம் நூற்றாண்டின்

முடிவிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தோன்றிய இரண்டாவது அகிலத்தலைவர்களாக இருந்த இவர்கள், மார்சீயம், சோசலிசம் என்றெல்லாம் இவர்கள் பேசிய போதிலும் நடைமுறையில் ஐரோப்பிய சோசலிசப் புரட்சிகளை நசுக்கவும் நாஜியிசம், பாசிசம் வெற்றிபெறவும் இவர்கள் பணிபுரிந்தார்கள்) இந்தத் தத்துவ மாரீசர்களைத்தான் மிகத்திறமையாக லெனின் முறியடித்து துரத்திவிட்டார். இவர்களையெல்லாம் குறிப்பிடுவதற்கு மேலாக இன்னொன்றையும் வலியுறுத்திக் காட்டியாக வேண்டும். மார்க்சியத்தைப் பற்றி கட்டுப்பாடாக மௌனம் சாதிக்கும்படியான ஒரு இயக்கத்தை முதலாளிவர்க்கம் நடத்திவருவதைத்தான் நாம் அதிகமாக வலியுறுத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. குறிப்பாக

மார்க்சிய வடிவம் தாங்கிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவம் ஒன்று

இருக்கிறது என்பதையே யாரும் தெரிந்துகொள்ளாதபடி தடுப்பதற்காக என்ன செய்யவேண்டுமோ அத்தனையும் செய்திருக்கிறார்கள்.....

தொடரும்... தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்