பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும்-3
மார்க்சை சாமான்ய மிதவாதியாக காவுத்ஸ்கி எவ்வாறு மாற்றினார்
l இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தினார் இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர். ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும் உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?
முந்தையஇதழின்தொடர்ச்சி..பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய மார்க்ஸின் சிறு ‘சொல்’லை காவுத்ஸ்கி வியக்கியானம் செய்யும் தனிக்குறிப்பான பாணியினைப் பரிசீலிக்கும் போது இதுகுறித்து மேலும் அதிக திடநம்பிக்கை ஏற்படும் இதைக் கேளுங்கள்: "இந்த சர்வாதிகாரத்தை அவர் எவ்வாறு கருத்தில் உருவாக்கினார் என்பதை நமக்கு மேலும் அதிக விவரமாக எடுத்துக்காட்ட துரதிஷ்டவசமாகத் தவறிவிட்டார் மார்க்ஸ்...." (இது ஓடுகாலியின் படுமோசமான பொய்யான தொடராகும், ஏனெனில் மார்க்சும் எங்கெல்சும் நமக்கு உண்மையிலே பல விவரமான அறிகுறிகளை வழங்கினர்கள், இவற்றை மார்க்சிய போலிபண்டிதரான காவுத்ஸ்கிவேண்டுமென்றேபுறக்கணித்தார்).நேர்பொருளில் சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு ஜனநாயகத்தை ஒழிப்பது என்று பொருளாகும். ஆனால் நேர் பொருளில் இந்த சொல் எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத தனிநபரின் முழுமையான தனிஆட்சி எனவும் பொருள்படும் என்பது திண்ணம்.இது ஒரு நிரந்தர அரசியல் நிறுவனமாகி விடாமல் ஒருதற்காலிக அவசரகால நடவடிக்கையாக இருக்கும் என்ற அளவுக்கு மட்டுமே கொடுங்கோல் ஆட்சியில் இருந்து வேறுபடுகிறது.
எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல் ஒரு தனிநபரின் சர்வாதிகாரம் அல்ல மாறாக ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரமாகும்.மார்க்ஸ் இதன் தொடர்பாக சர்வாதிகாரம் என்ற சொல்லின் நேர்பொருளிலான அர்த்தத்தை மனதில் கொண்டிருந்தார் என்பதற்கான சாத்தியக் கூறினை இது தவிர்த்து விடுகிறது.
சர்வாதிகாரம் எனும் சொல்லின் இலக்கணத்தோடு தொடங்கும் வகையில் இந்த விஷயத்தை அணுக முன்வந்தார் காவுத்ஸ்கி. மிகவும் நல்லது .ஒரு விஷயத்தை தான் விரும்பும் வழியில் அணுகுவதற்குரிய புனிதமான உரிமை எல்லோருக்கும் உண்டு.நேர்மையற்ற அணுகுமுறையில் இருந்து காரியம் ஆன நேர்மையான அணுகுமுறையினை மட்டுமே ஒருவர் வேறுபடுத்திக் கண்டறிதல் வேண்டும்.இந்த விஷயத்தை இந்த வழியில் அணுகுவது காரியம் நோக்குள்ள எவரும் இந்த சொல்லுக்கு தனது சொந்த இலக்கணத்தினை வழங்க வேண்டும்.பிறகு இந்தப் பிரச்சினை செவ்வையாகவும் முழுமையாகவும் முன்வைக்கப்படும். ஆனால் காவுத்ஸ்கி இதைசெய்யவில்லை.நேர்பொருளில் சர்வாதிகாரம் எனும் சொல்லின் அர்த்தம் ஜனநாயகத்தை ஒழிப்பது என்பது என்று அவர் எழுதுகிறார்.
முதலாவதாக இது ஒரு இலக்கணம் அல்ல. சர்வாதிகாரம் எனும் கருத்துருவின் இலக்கணத்தினை தராமல் தவிர்க்க காவுஸ்திகி விரும்பி இருந்தாரானால் இந்த விஷயம் சம்பந்தமாக அவர் ஏன் இந்த குறிப்பிட்டஅணுகுமுறையைதெரிந்தெடுத்தார்?
இரண்டாவதாக இது தவறானது என்பது தெளிவு. பொதுவான ஜனநாயகம் பற்றி பேசுவது ஒரு மிதவாதி விஷயத்தில் இயல்பானதே ஆனால் எந்த வர்க்கத்தத்துக்கு? என்ற கேள்வியை ஒரு மார்க்சியவாதி மறவாது கேட்பான். உதாரணமாக தொன்மைகாலங்களில் அடிமைகள் மத்தியில் ஏற்பட்ட கலகங்களும் வலுவான கிளர்ச்சிகளும் கூட புராதான அரசு அடிமை உரிமையாளர்கள் சர்வாதிகாரம் என்பதாகவே இருந்தது என்ற உண்மையை உடனடியாக வெளிப்படுத்தின என்பதை எல்லோரும் அறிவார்கள் (வரலாற்று ஆசிரியர் காவுத்ஸ்கியும் அறிவார்).
இந்த சர்வாதிகாரம் அடிமை உடைமையாளர்கள் மத்தியில் அவர்களுக்கான ஜனநாயகத்தை ஒழித்ததா அது ஒழிக்கவில்லை என்பதை எல்லோரும் அறிவார்கள். மார்க்சியவாதி காவுத்ஸ்கி வர்க்கப் போராட்டம் பற்றி "மறந்து விட்டதால்" இந்த விபரீதமான அபத்தமான பொய்யான அறிவிப்பை செய்தார் .
காவுத்ஸ்கியின்மிதவாத தன்மை கொண்ட பொய்யான துணிபுரையை ஒரு மார்க்சியத் தன்மை கொண்ட மெய்யான ஒன்றாக மாற்றுவதற்குகூறவேண்டுவதாவது :சர்வாதிகாரம் என்றால் இதர வர்க்கங்கள் மீது சர்வாதிகாரத்தை செயல்படுத்துவதும் வர்க்கத்தை பொறுத்த வரை ஜனநாயகம் ஒழிக்கப்படுவதாக பொருள் கொள்ளதேவையில்லை. ஆனால் எந்த வர்க்கத்தின் மீது அல்லது எந்த வர்க்கத்திற்கு எதிராக இந்த சர்வாதிகாரம் செயல்படுத்தப் படுகிறதோ அந்த வர்க்கத்தை பொறுத்தவரைஜனநாயகம்ஒழிக்கப்படுவதாக (அல்லது ஒழிக்கப்படுவதன் ஒரு வடிவமாக மிகவும் உருப்படியான கட்டுப்பாடாக) பொருள் கொள்ள வேண்டும். ஆனால் இந்த துணிபுரை எவ்வளவு தான் மெய்யாக இருந்த போதிலும் இது சர்வாதிகாரம் பற்றிய இலக்கணத்தை தரவில்லை .
காவுத்ஸ்கியின் அடுத்த வாக்கியத்தை பரிசீலிப்போம் :
.".... ஆனால் நேர்ப் பொருளில் இந்த சொல் எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத தனிநபரின் முழுமையான தனி ஆட்சி எனவும் பொருள் படுகிறது என்பது திண்ணம் ....."
முதலில் ஒரு திசையிலும் பிறகு இன்னொரு திசையிலும் தொடர்பு இன்றி மோப்பம் பார்க்கும் ஒரு குருட்டு நாய்க்குட்டி போல காவுத்ஸ்கி தற்செயலாகவே ஒரு மெய்யான கருத்தின் (அதாவது சர்வாதிகாரம் எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்தாது என்பதன்) மீது தடுக்கி விழுகிறார். இருந்த போதிலும் சர்வாதிகாரம் பற்றிய இலக்கணத்தை தரத் தவறவிட்டார். இதற்கும் மேலாக அவர் தெளிவாயும் ஒரு வரலாற்றுவழிபிசகினைச்செய்தார்.அதாவது சர்வாதிகாரம் என்றால் தனி நபரின்ஆட்சி என்று அவர் பொருள் கொண்டதே அந்த பிசகு. இது இலக்கண அடிப்படையிலும் கூட சரியானதுஅல்ல. காரணம் சர்வாதிகாரத்தை விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களும் அல்லது சிலர் ஆட்சியும் அல்லது ஒரு வர்க்கமும் கூட செயல்படுத்த முடியும்.
பின்னர் காவுத்ஸ்கி சர்வாதிகாரத்துக்கும் கொடுங்கோன்மைக்கும் இடையிலான வித்தியாசத்தை சுட்டுகிறார்.அவர் கூறுவது தெட்டத்தெளிவாயும் சரியல்ல என்ற போதிலும் அதைப் பற்றி நாம் இங்கு விளக்கப் போவதில்லை.ஏனெனில் இது நாம் அக்கறை கொண்டிருக்கும் விஷயத்திற்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதது. இருபதாம் நூற்றாண்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து சம்பிரதாய தொன்மைக்கும் திரும்பும் காவுத்ஸ்கியின் நாட்டம் பற்றி எல்லோரும் அறிவார்கள். ஜெர்மன் பாட்டாளி வர்க்கம் அதன் சர்வாதிகாரத்தை பெற்ற பிறகு அவரது இந்த நாட்டத்தை மனதிற்கு கொண்டு அவரை ஏதேனும் ஒரு கல்லூரியில் தொன்மை கால வரலாற்று ஆசிரியராக நியமனம் செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். கொடுங்கோன்மை பற்றி தத்துவ விசாரம் செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய இலக்கணத்தை தட்டிக் கழிக்க முயல்வது ஒன்றா? தடித்தனமான முட்டாள்தனம் அல்லது விகாரமான மோசடியாகும்.
இதன் விளைவு சர்வாதிகாரம் பற்றிய விவாதத்தின் மேற்கொண்ட காவுத்ஸ்கி மிகப் பெரும் அளவிலான வெளிப்படையான பொய்களை அளப்புகிறார். ஆனால் இலக்கணம் ஏதும் வழங்கவில்லை ஆயினும் அவர் தமது மூளையின் வினைத்திறன்களை நம்பி இருக்காமல் தமது நினைவாற்றலை பயன்படுத்தி சர்வாதிகாரம் குறித்து மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள எல்லா உதாரணங்களையும் தமது தகவல் மாடங்களில் இருந்து வெளியில் எடுத்திருக்கலாம்.அல்லது அவ்வாறு செய்திருப்பாரானால் அவர் ஒன்று பின்னால் இலக்கணம் அல்லது அதனுடைய சாரத்தில் முற்றும் பொருந்திய ஒரு இலக்கணத்தை நோக்கி நிச்சயமாயும் வந்து சேர்ந்திருப்பார்:சர்வாதிகாரம் என்பது நேரடியாக பல பிரயோகத்தை அடிப்படையாக்கி எந்த சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் பலப்பிரயோகம் பயன்படுத்தி வெற்றிபெற்றுகட்டி காத்து வரும் ஆட்சியாகும் எந்த சட்டங்களாலும் கட்டுப்படுத்தபடாத ஆட்சியாகும். இந்த நேரடி உண்மையை பார்க்க உணர்வு படுத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிந்த உண்மையை தமது முழு விமோசனத்திற்காக போராடி வரும் சுரண்டப்படும் வர்க்கங்களின் ஒவ்வொரு பிரதிநிக்கும் கண்கூடாக தெரியும். இந்த உண்மையை ஒவ்வொரு மார்க்சிய வாதிக்கும் ஐயத்திற்கும் இடமில்லாத இந்த உண்மையை. ஆகப்படித்த திரு. காவுத்ஸ்கி இடம் இருந்து பலபிரயோகம் மூலம் வெளியே எடுக்கவேண்டி இருக்கிறது .இதை விளக்குவது எப்படி? முதலாளித்துவ வர்க்கத்தினிடம்சேவைபுரிந்துவெறுக்கத்தக்க அண்டிப் பிழைப்போர் ஆகிவிட்ட இரண்டாம் அகிலத்தின் தலைவர்களிடம் ஊறிக் கிடக்கும் கொத்தடிமை உணர்வினால் எளிதில் விளங்கலாம்.
சர்வாதிகாரம் என்னும் சொல் அதன் நேர்பொருளில்தனிமனிதன்சர்வாதிகாரத்தை குறிக்கிறது என்ற கண்கூடான முட்டாள் கதையினை பறைசாற்றியது மூலம் காவுத்ஸ்கி முதலில் ஒரு செப்பிடுவித்தை புரிந்தார். பின்னர் இந்த செப்புடுவித்தையின் வலிமை மீது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் பற்றிய மார்க்சிய சொற்கள் நேர்பொருளில் அர்த்த படுத்தப்படவில்லை என்றதன் விளைவாக சாற்றினார் (சர்வாதிகாரம் புரட்சிகர பலாத்காரத்தை உணர்த்தவில்லை மாறாக முதலாளித்துவ இதைக் குறித்துக் கொள்க ஜனநாயகத்தின் கீழ்சமாதானமுறையில் பெரும்பான்மையை வென்று பெறுவதையே உணர்த்துகின்றது என்று).(நூலின்பக்கம் 14 லிருந்து 20 வரை)
சர்வதிகாரத்தை ஆதிக்க நிலை என்று வியக்கியானம் செய்வது அவசியம் என காண்கிறார் காவுத்ஸ்கி
(இதுவேஅவர்அடுத்த21ம் பக்கத்தில் பயன்படுத்தும் இலக்கியத்தொடராகும்),காரணம் அப்போது புரட்சிகர வன்முறையும் வன்முறையான புரட்சி மறைந்துவிடும்.அதுக்கு நிலைமை என்பது ஜனநாயகத்தின் கீழ் எந்த பெரும்பான்மையும் தன்னைத்தானே இருக்க காணும் நிலைமை ஆகும்இத்தகைய மோசடியின் காரணமாக புரட்சிக்கு தக்கபடி மறைந்துவிடுகிறது!.ஆனால் இந்த மோசடி மிகவும் படுமோசமானது எனவே காவுத்ஸ்கியை காப்பாற்றாது.சர்வாதிகாரம் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்துக்கு எதிராக ஓடுகாலிகளுக்கு மிகவும் பிடிக்காத புரட்சிகர வன்முறை ஏவும் நிலைமையை முன் அனுமானிக்கிறது உணர்த்துகிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. ஒரு நிலைமைக்கும் ஒரு அரசாங்க வடிவத்திற்கு இடையே வேறுபாடு காண முயல்வது வெளிப்படையாயும் அபத்தமானது இதன் தொடர்பாக அரசாங்க வடிவங்கள் குறித்து பேசுவது மும்மடங்கு அசட்டுத்தனமானது காரணம் முடியரசும் குடியரசும் அரசாங்கத்தின் இரு வெவ்வேறான வடிவங்கள் என்பதை ஒவ்வொரு பள்ளி சிறுவனும் அறிவான். இந்த அரசாங்கத்தின் இரண்டு வடிவங்களும் முதலாளித்துவத்தின் கீழிலான எல்லா இடைமாற்ற அரசாங்க வடிவங்களைப் போலவே முதலாளித்துவ அரசின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் மாற்றுக்கள் மட்டுமே என்பதை காவுத்ஸ்கி விளக்க வேண்டும்.
முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வலுக்கட்டாயமாக அழித்து அதன் இடத்தில் எங்கெல்ஸின் கூற்றுப்படி "சொல்லின் சரியான அர்த்தத்தின் படி இனிமேலுல் அரசாக இல்லாத புதியது ஒன்றை நிறுவாமல் பாட்டாளி வர்க்க புரட்சி சாத்தியமல்ல (பக் 21)
பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான பலாத்காரமே; இத்தகைய பலாத்காரத்தின் அவசியம் ஏற்பட பிரத்யேக காரணம் மார்க்சும் எங்கெல்சும் விவரமாக திரும்பத் திரும்ப விளக்கி உள்ளது படி (குறிப்பாக பிரான்சில் உள்நாட்டு போர் மற்றும் அந்த நூலின் முகவுரையில்) ராணுவ கோஷ்டியும் அதிகார வர்க்கம் நிலவுவதே ஆகும்.
தமது கொள்கை துரோகத்தை மூடி மறைப்பதற்காக உள்ளபடியே ஒவ்வொரு படியிலும் காவுத்ஸ்கி மோசடியை கையாளா வேண்டி இருக்கும்!
அமைதி வழியில் அதாவது ஒரு ஜனநாயக வழியில் என்று அவர் எழுதும்போது அவர் தன்னை அறியாமலேயே தனது வஞ்சகத்தினை அம்பலப்படுத்திக் கொள்வதை பாருங்கள்! !
சர்வாதிகாரத்தின் இலக்கணத்தை வகுக்கையில் இந்த கருத்துறையின் அடிப்படை அம்சமான புரட்சிகர பலாத்காரத்தை வாசகர்களிடமிருந்து மறைத்து வைக்க உச்சபட்ச முயற்சி செய்தார். இப்போது உண்மை வெளியாகிவிட்டது அமைதியான மற்றும் பலாத்காரப் புரட்சிகள் இவற்றுக்கு இடையிலான வேறுபாடே இப்பிரச்சினை.
இதுவே இந்த விஷயத்தின் அறுதிக்கூறு.பலாத்காரம் புரட்சியில் இருந்து விலகி நிற்கவும் அதை அவர் கைவிட்டு விட்டதை மூடி மறைக்கவும் மிதவாத தொழிலாளர் கொள்கையின் பக்கம் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் பக்கம் தான் திறந்தோடி விட்டத்தை மூடி மறைக்கவும் மட்டுமே காவுத்ஸ்கி இந்த சூழ்ச்சி வாதங்கள் குதர்கங்கள் மோசடி புரட்டுகளை கையாள நேர்ந்தது இதுவே இந்த விஷயத்தில் அறுதிக்கூறு.(பக் 23)
வரலாற்று ஆசிரியர் காவுத்ஸ்கி மிகவும் வெட்கக்கேடான முறையில் வரலாற்றைப் புரட்டு செய்கிறார். அமைதியான அல்லது பலாத்காரமான புரட்சி என்று அளவுக்கு தனிமாதிரியானது அல்லது சாத்தியமானது என்பதை விவாதிப்பதில் இதை காண தவறுவது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் சாதாரணமான அடி வருடியின் மட்டத்திற்கு இறங்கி விடுவதாகும்.
இரண்டாவது சூழ்ச்சி விவாதம் பாரிஸ் கம்யூன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். ஆனால் அது சர்வபொது ஓட்டும் மூலம் அதாவது முதலாளிகளின் ஓட்டு உரிமை பறித்து விடாமல் அதாவது ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் காவுத்ஸ்கி வெற்றிக்கழிப்புடன் கூறுகிறார்"மார்ஸ்க்கு "(அல்லது மார்க்சின் கருத்துப்படி)"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக அமையும் பட்சத்தில் தூய ஜனநாயகத்தில் இருந்து தவிர்க்க முடியாத வகையில் தொடரும் ஒரு நிலையாகும்.24).ஒரு புரட்சி ஏற்படக்கூடிய மிகவும் அதிகாரபலமுள்ள காரியங்களில் திண்ணமாயும் ஒன்றுதான். மக்களில் ஒரு பகுதி இன்னொரு பகுதியின்மீது துப்பாக்கி, துப்பாக்கி ஈட்டிகள் பீரங்கிகள் மூலம் -இவை யாவும் மிகவும் அதிகார பலமான சாதனங்களே - தனது சித்தத்தை திணிக்கும் செயலாகும் இது. வெற்றி ஈட்டிய கட்சி பிற்போக்காளர் இடை தமது ஆயுதங்கள் ஊட்டும் பயங்கரம் மூலம் தனது ஆட்சி கட்டிக்காக்க அவசியம் வேண்டியிருக்கலாம்.முதலாளிதுவ வர்க்கத்தின் மீது ஆயுதம் ஏந்திய மக்களின் அதிகாரபலத்தை பயன்படுத்தாமல் இருப்பின் பாரிஸ் கம்யூன் ஒரு நாளுக்கு மேல் நீடித்திருக்குமா?மாறாக அந்த அதிகார பலத்தை மிகக் குறைவாக பயன்படுத்தியது என்று அதன் மீது நாம் குறை கூறும் உரிமை இருக்கிறது அல்லவா? .
இதோ உங்களது தூயஜனநாயகம் வர்க்கங்களாக பிளவுற்று இருக்கும் ஒரு சமுதாயத்தில் தூயஜனநாயகம் குறித்து பேச கருதிய கொச்சையான குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரை சமூக ஜனநாயகவாதியை எங்கெல்ஸ் எப்படி ஏளனம் செய்திருப்பார்?
l ஆனால் இது போதுமானது காவுத்ஸ்கியின் பல்வேறு அபத்தங்களை வரிசைப்படுத்தி காட்டுவது சாத்தியம்அல்ல.காரணம் அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் கொள்கை துரோகத்தின் ஆழம்காண படுகுழியாக காட்சி அளிக்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் பாரிஸ் கம்யூனை மிகவும் விரிவான முறையில் ஆய்வு செய்தனர். ஏற்பாடாக இருந்த அரசு இயந்திரத்தை தகர்த்து உடைத்து எறிவதற்கு செய்யப்பட்ட அதன் முயற்சியில்தான் பாரிஸ் கம்யூனின் பெருமை காணக்கிடக்கிறது என்பதை சுட்டி காட்டினர். இந்த முடிவு மிகவும் முக்கியமானது என்று மார்க்சும் எங்கெல்சும் கருதியதால் 1872ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வேலை திட்டத்தில் இதை மட்டுமே திருத்தமாகக் கொண்டு வந்தனர். ஆனால் முனிவர் காவுத்ஸ்கி தமது இரவுக்குள்ளாய் அணிந்தபடி மிதவாத பேராசிரியர்களால் ஆயிரம் தடவைகள் ஏற்கனவே சொல்லப்பட்டதான "தூய ஜனநாயகம்" பற்றிய தேவதைக் கதைகளை திருப்பிக் கூறுகிறார். 1914 ஆகஸ்ட் 4ந் தேதி ஜெர்மன் சமூக ஜனநாயகம் ஒரு நாறும் பிணம் என்று ரோசா லக்சம்பர்க் சாற்றியதில் வியப்பென்ன?(26)
lதொகுத்துக்கூறுவோம்: காவுத்ஸ்கி மார்க்சை ஒரு சாமான்ய மிதவாதியாக மாற்றி மிகவும் இணைவரையற்ற முறையில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் கருத்துருவைப் புரட்டினார் அதாவது அவரே ஒரு மிதவாதியின் மட்டத்திற்குத் தாழ்வுற்று தூய ஜனநாயகம் குறித்து அற்பத்தனமான தொடர்களைஅடுக்குகிறார். முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்க உள்ளடக்கத்தை மெருங்கிட்டு மினுக்கி அலங்காரம்செய்கிறார் எல்லாவற்றுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட வர்க்கம் புரட்சிகர பலாத்காரத்தை பயன்படுத்துவதில் இருந்துபின்வாங்குகிறார். ஒடுக்குவோரை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சிகர பலாத்காரத்தை எடுத்துகாட்டும் முறையில் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரசர்வாதிகாரம்எனும்கருத்துருவை வியக்கியானம் செய்தது மூலம் காவுத்ஸ்கி மார்க்சியம் குறித்து மிதவாதப்புரட்டில் உலக சாதனைப் புரிந்துள்ளார். ஓடுகாலி காவுத்ஸ்கியுடன் ஒப்பிடும்போது ஓடுகாலி பெர்ன்ஷ்டைன் வெறும் நாய்க்குட்டியே. (28).
அடைப்புகுறியில் உள்ள எண்கள் நூலின் பக்கத்தை குறிக்கும்.
அடுத்த பகுதி முதலாளித்துவ ஜனநாயகம் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் பற்றி பேசுவோம். தொடரும்... ..
++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment