திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்?-பகுதி-2
மூடப்படும் உலகத்துக்கு எதிராக தமிழில் மொழிபெயர்த்து என்.சி.பி.எச் வெளியீடுதிறந்தநிலை மார்க்சியம் என்கின்றனர்.
17 பக்க எனது தேடல் நெடிய கட்டுரை முழுமையாக இங்கே வெளியிட முடியவில்லை இலக்கு 42 இணைய இதழில் முழுமையாக உள்ளன அவை பல நமது முன்னோடிகளின் எழுத்துக்கள் முக்கியமாக நமது ஆசான் லெனின்.
அந்தப் பகுதியை நூல் வடிவில் PDF க்காக விரைவில் கொண்ரும் பொழுது பகிர்கிறேன் தோழர்களே...
பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும் லெனின் நூலிலிருந்து சிலபகுதிகள் கீழே:-
செயலில்-இயங்கியல் பொருள்முதல் வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முழுமையாக நிராகரித்தல்; வார்த்தையில் முடிவில்லாத சூழ்ச்சிகள், கேள்வியின் சாராம்சத்தைத் தவிர்க்கும் முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மறைத்தல், பொதுவாக பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக சில பொருள்முதல்வாதிகள் அல்லது வேறு சிலரை வைப்பது, மற்றும் மார்க்சின் பொருள்முதல் வாதப் பிரகடனங்களை நேரடியாக ஆய்வு செய்ய உறுதியான மறுப்பு …. இது வழக்கமான தத்துவத் திருத்தல்வாதம், ஏனென்றால் மார்க்சியத்தின்அடிப்படைக்கருத்துக்களிலிருந்து விலகியதன் மூலமும்……
l இந்த வாதங்கள் புதியவையா என்பதை சோதிப்பதற்காக, அவை உண்மையில் "கான்டியனிசத்தில் மூழ்கிய" பிஷப் ஜார்ஜ் பெர்க்லியின் பணி, 1710 இல் வெளியிடப்பட்டது… கான்டியனிசத்தால் பொருள்முதல்வாதத்தை திரித்தல்! Machians "புதிய" கண்டுபிடிப்புகள் அடிப்படை தத்துவ போக்குகளின் வரலாறு பற்றிய வியக்கத்தக்க அறியாமையின் விளைவாகும்..
மேலும் பொருள்முதல்வாதிகளுக்கு இயற்கை முதன்மையானது மற்றும் ஆவி இரண்டாம் நிலை, இலட்சியவாதிகளுக்கு தலைகீழ்நிலை. இந்த இரண்டு முகாம்களுக்கு இடையில் எங்கெல்ஸ் ஹியூம் மற்றும் கான்ட் ஆகியோரின் ஆதரவாளர்களை வைக்கிறார், அவர்கள் உலகத்தை அறியும் சாத்தியத்தை மறுக்கிறார்கள், அல்லது குறைந்தபட்சம் அறிவார்கள். அதை முழுமையாக, மேலும் அவர்களை அஞ்ஞானவாதிகள் என்று அழைக்கிறார். அவரது Ludwig Feuerbach எங்கெல்ஸ் இந்த வார்த்தையை ஹியூமின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால், "வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில்" என்ற கட்டுரையில், ஏங்கெல்ஸ்,"நியோ-காண்டியன் அஞ்ஞானவாதி"-யின் நிலைப் பாட்டை வெளிப்படையாகப் பேசுகிறார்,
மார்க்சிய முகாமுக்குள்ளே எழுகிற மார்க்சியமல்லாதகுரல்கள் சமூகவியல் என்பது சாராம்சத்தில், சமூகத்தில் உள்ள மனிதனைப் பற்றிய அறிவியல் ரீதியான புறநிலைஆய்வாகும்.சமூக நிறுவனங்கள் குறித்தும் சமூக இயக்கப்போக்குகள் குறித்தும் உள்ள ஆய்வாகும், சமூகத்தின் இருப்பிற்கான சாத்தியம் குறித்த பிரச்சனையை ஆய்கிறது. சமூகம் இயங்கும் விதம் குறித்தும் ஆய்கிறது.
மார்க்சியம் என்ற சமூகவியலின் தொடக்கத்தை, மார்க்சின் கல்லறையருகே ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையிலிருந்து காணலாம்.“உயிரின இயற்கையின் வளர்ச்சி விதிகளை டார்வின் கண்டு பிடித்ததைப் போல, மனித வரலாற்றின் வளர்ச்சி விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.”
மார்க்சியம் வெறும் சமூகவியலாக மட்டும் இல்லாமல் அது நடைமுறைக்கான வழி காட்டியாகவும் இருக்கிறது. அதாவது சமூகவியற் கோட்பாடுகள் அதனதன் அடிப்படையில் சமூகத்தை வளர்க்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் இயக்கவியல் வரலாற்றுப்பொருள் முதல்வாத அடிப்படையில் சமூகத்தை விளக்குவதோடு மட்டுமன்றி, சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளைப் பருண்மையாகக் கண்டது.
மார்க்சியத் திறனாய்வு என்பது சமூகவியல் திறனாய்வை உள்ளடக்கியது; ஆனால் சமூகவியல் திறனாய்வு மட்டும் அல்ல, வர்க்கங்களின் இருத்தல், வர்க்கப் போராட்டங்களின் மூலம் வரலாறு வளர்தல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகிய சமூக அரசியல் நிலைபாடுகள், உற்பத்தி முறையே சமூக அடித்தளம் என்ற பொருளியல் நிலைபாடு, ஆகியவற்றை வலியுறுத்துவதன்மூலம் இது அறிவியல் வகைப்பட்டதாகிறது. அதேநேரத்தில் இது சமூவியலிலிருந்து வேறு வகைப்பட்டதாகிறது, இக்கருத்தை லெனினின்பின் வரும் கூற்றால் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
“மார்க்ஸ் தான் சமூகவியலை அறிவியல் அடித்தளத்தில் முதன் முதலில் நிறுத்தினார்- உற்பத்தி வரவுகளின் மொத்தத் தொகையாக சமூகத்தின் பொருளாதார உருவாக்கம் என்ற கருத்தோட்டத்தை உறுதிப்படுத்தல், இத்தகைய உருவாக்கங்களின் வளர்ச்சியானது இயல்பான வரலாற்றின் இயக்கப் போக்காக உள்ளது என்ற உண்மையை உறுதிப்படுத்தல் ஆகிய வற்றின் மூலமாக மார்க்ஸ் இவ்வாறு செய்தார்” எனவே சமூகவியலின் குறைகளைக் களைந்து நிறைகளை வளர்த் தெடுத்தது மார்க்சிய அணுகுமுறையாகும்.
மார்க்சியஅணுகுமுறையை இன்று பல வழிகளில் விமர்சிக்கின்றனர். அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்வின் தத்துவம்; அது ஒருகுறிப்பிட்ட நாட்டின் ஒரு குறிப்பிட்ட சூழலுக் கேற்ப வளர்ந்த தத்துவம்; அதற்கு ௨லகக் கண்ணோட்டம் கிடையாது; அது இன்றைக்குக் காலாவதியாகிவிட்டது. மார்க்சியம் என்பது எதையும் வரையறுக் கப்பட்டதாகவே (fixed) காண்கிறது; அது மூடுண்ட, வளர்ச்சி மறுக் கப்பட்ட தத்துவம்; அதுஇன்றைய புதுயுகத்துக்கு உரியபெருந்தத்துவமல்ல; அதன் அடிப்படைக் கூறான பொருள் முதல்வாதம் இன்றைக்குப் பொருந்தாது; மார்க்சியம் நமக்குப்போதவில்லை. எனவே அதைக்கடந்த தத்துவத்தைத் தேட வேண்டும்; மார்க்சியம் அனைத்தையும் பொருளாதாரவாதமாகச் சுருக்கிப் பார்க்கிறது. அது மனிதவளர்ச்சிக்கே முரணானதாக விளங்குகிறது. இத்தகைய பல்வேறு விதமான கருத்துக்கள் மார்க்சியத்தை நோக்கி எழுப்பப்படுகின் றன. இவற்றுக்குப் பதில் கூறினால்தான், மார்க்சியம் என்பதை ஒரு முறையியலாக--ஓர் அணுகுமுறையாக நம்ப இயலும். மார்க்சிய அணுகு முறையின் நம்பகத் தன்மையை நிலை நாட்டினால்தான், அதன் வழி நின்று சமூகவியல் அவற்றின் பிரச்சனைகளையும் நாம் மதிப்பிட இயலும்.
மார்க்சியம்- ஒருகு றிப்பிட்ட. வர்க்கத்திய தத்துவமா?
மார்க்சியம், பாட்டாளி வர்க்கத்துக்கான தத்துவம் அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமாகும். அப்படியாயின் அதை எப்படி அனைத்துந் தழுவிய அணுகுமுறை ஆக ஏற்றுக் கொள்ள இயலும்? எனவே மார்க்சியத்தை ஒரு பொதுவான அணுகுமுறையாக ஏற்றக் கொள்ளல் இயலாது. இப்படிச் சிலர் கருதுகின்றனர்இதற்கான விவாதத்திற்குள் நாம் நுழையும் முன் தத்துவம் என்றால் என்ன என்பது குறித்து இரண்டொரு வார்த்தைகள் கூறியாக வேண்டும். தத்துவம் என்றால் அதுயாருக்கும் எளிதில் விளங்காத விளங்கக்கூடாத கருத்துக்களின் சேர்க்கை என்பதே இன்றும் பலரின் கருத்தாக உள்ளது. அந்த அளவிற்குத் தத்துவம் குறித்து தவறான கருத்து நிலவுகிறது. தத்துவம் என்பது உலகக் கண்ணோட்டமாகும். அதாவது உலகத் தைப்பற்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும் மனித சமூகத்தையும் அதன் பங்கையும், இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும் பற்றி அறிந்து கொள்கின்ற முயற்சியாகும். எல்லோரும் ஏதோ ஒரு வழியில் உலகத்தை விளங்கிக் கொண்டு இருக்கின் றனர் . எனவே ஒவ்வொருவரும் ஏதோ ஒரு தத்துவத்தைக் கொண்டிருக்கிறோம். தாம் கொண்டுள்ள தத்துவம் குறித்தே அறியாமலும் அல்லது அது குறித்துப் பிறருடன் விவாதிக்காமலும் இருக்கலாம்; அன்றி, தெரிந்துகொண்டும் பிறருடன் விவாதித்தும் இருக்கலாம். எனவே அனைத்து மனிதர்களும் ஏதாவது ஒரு தத்துவச் செல்வாக்கில். உள்ளனர் என்பது வெளிப்படை . அந்தத் தத்துவமே அவர்கள் இயல்பில்ஊறிவிடுகிறது; ஒன்றிவிடுகிறது. அதாவது, அவர்கள் வாழ்க்கையாகவே மாறுகிறது. எளிய கிராமப்புறமக்கள், “எவ்வளவுதான் உருண்டு பிறண்டாலும் உடலில் ஒட்டுவதுதான் ஒட்டும் எல்லாம் ஆண்டவன் அளந்து வச்சதுதான்”' என்று கூறும்போது சமயவாதிகளின் விதிக்கோட் பாட்டை அவர்கள் ஜனரஞ்சகமாகக் குறிப்பிட்டு விடுகின்றனர். அக்கூற்று, ஒருதத்துவத்தின் பிரதிபலிப்பு அல்லவா? இத்தகைய தத்துவங்களும் தனிப்பட்ட மனிதர்களின் அல்லது தத்துவ இயலர்களின் மூளைகளில் மட்டும் உதித்த தனித்த கருத்துக்களல்ல. பொதுவான அம்சத்தில் பார்த்தால், இத்தகைய கருத்துக்களுக்கு ஒருசமூக அடித்தளத்தைக் காண இயலும். அது அக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவின் சமூக நடவடிக்கைகளையும் சமூகஉறவுகளையும் ஏதேனும்ஒருவிதத்தில்வெளிப்படுத்துவதாக இருப்பதைக் காணலாம். எனவே அவை, தத்துவ அறிஞர்களின் மூளைகளிலிருந்து திடீரென உதித்து வந்து விடுவதல்ல, ஆயினும் அத்தகைய கருத்துக்களை உருவாக்கல், அவற்றைக் குறிப்பிட்ட வடிவத்தில் வெளியிடல்போன்றவை அந்தத் தத்துவ அறிஞர்களின் தனித் தன்மையைப் பொறுத்ததாகும். எனவே எந்தத் தத்துவமும் ஒரு குறிப்பிட்ட வர்க் கத்தோடுதான் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும், இங்கே வர்க்கம் எனும் சொல் குறித்து சில சொற்கள் கூறவேண்டி யுள்ளது. வர்க்கம் என்பதை மார்க்சிய மூலச் சொல்லாக்கம் என்றெண்ணி மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்கள் வர்க்கம் என்பதையே மறுப்பார்கள். முதலாளியசமூகவியலர்கள் வர்க்கங்களின் இருத்தலைக் கூறியள்ளதை இதற்குமுன் கண்டோம்.ஆயின் மார்க்சிய அணுகுமுறை எதிர்ப்பாளர்கள், வர்க்கம் என்பதை மார்க்ஸ் கண்டுபிடித்ததாக எண்ணிக் கொண்டு எதிர்ப்பர். இது அவர்களின் சமூக வியல் அறிவின்மையைக் காட்டுகிறது. அதேநேரத்தில் மார்க்சிய இலக்கிய முகாம்களில் : வர்க்கம் என்ற சொல், செழுமையான அர்த்தத்திலிருந்து பிறழ்ந்து வறட்டுத்தனமாகவும் பரந்த அறிவியல் விளக்கத்திலிருந்து மாறுபட்டு குறுகலானதாகவும், மார்க்சிய மூலஅறிவு எதுவுமின்றியும் அதற்கான குறைந்த பட்ச தேடல் முயற்சி இன்றியும் வெறும் வாய்ப்பாட்டுச்சூத்திரமாகவும் பயன்படுத்திக் கொண்டதும் - கொண்டுவருவதும், இத்தகைய அறிவியல் ஆழமான சொல்லாட்சிக்குரிய பயன்பாட்டுத்தன்மை மதிப்பிழந்து போனது காரணம் எனலாம். எனவே சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்துள்ள நேரத்தில் சமூகத்தில்உள்ள பல்வேறு தத்துவங்களும் எல்லா நேரங்களிலும் சமூகத்தின்பல்வேறு நோக்கங்களை வெளிப்படுத்துவனவாகவே இருக்கும். எனவே தத்துவம் என்பது எப்போதும் வர்க்கத் தத்துவமாகவே இருக்கும் எனலாம். சில தத்துவ அறிஞர்கள் இதை மறுத்துரைக்கக் கூடும்; தத்துவத்தை வர்க்கம் கடந்த ஒன்றாக எண்ணக்கூடும். ஆனால் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னால் ஒருவர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றார் லெனின் கருத்தை இவ்விடத்தில் நினைவு கூர்தல் சரியாகவிருக்கும். எனவே அனைத்துத் தத்துவங்களைப்போன்று,மார்க்சியமூம்ஒருகுறிப்பிட்டவர்க்கத்திய தத்துவமாகும். ஆயின் அதே நேரத்தில் இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தத்துவமாகும். அது எப்படி? இதற்கு மார்க்சியத்தின் தேவையை நாம் காணவேண்டும். இது குறித்து லெனின்பின்வருமாறுகூறுகிறார்.”மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோர் தொழிலாளர் களுக்கு ஆற்றிய சேவையைப் பின்வரும் சொற்களில் கூறலாம். உழைக்கும் வர்க்கம் தங்களை அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் கற்றுக் கொடுத்தனர். மேலும் அவர்கள் கனவுகளுக்குப் பதிலாக அறிவியலை வைத்தனர்” தொழிலாளர் வர்க்கம் தம்மை அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டிய அவசியம் என்ன? கனவுகளுக்கு மாற்றாக அறிவியலை வைக்க வேண்டிய அவசியம் மார்க்சிய மூலவர்களுக்கு ஏன் நேரிட்டது? இவற்றைத் தெரிந்து கொண்டால்தான் ஒருகுறிப் பிட்ட வர்க்கத்திய தத்துவமாக உள்ள மார்க்சியம், ஒடுக்கப்பட்ட மக்களின் தத்துவமாகப் பரவும்தன்மையைக்காண இயலும். அதாவது மார்க்சியத்தின் தனித்தன்மையையும் அனைத்தும் தழுவிய தன்மையையும் அறியஇயலும். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உறுதியாக நிலைத்த முதலாளியம், கோடிக்கணக்கான விவசாயிகளைத் தொழிலாளர்களாக மாற்றியது.பொறுக்கவியலாதவறுமையையும் உழைப்புச் சுமையையும் அவர்கள் தோள்மேல் சுமத்திற்று, இதன் விளைவாகத்தொழிலாளர்கள் சினமுற்றனர். தம்இழிநிலைக்குப் புதியஇயந்திரங்கள் வருகையே காரணம் என எண்ணி, இயந்திரங்களை உடைத்தெறியும் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டங்கள் தோல்வி அடைந்தன. தோல்வியே வெற்றிக்கு ஆசான் எனும் மொழிக்கு ஏற்ப இவை தொழிலாளர்க்குப் பல படிப்பினைகள் கொடுத்தன, இங்கி லாந்து தொழிலாளரின் சார்டியஇயக்கம் (Chartist Movment), பிரெஞ்சுத் தொழிலாளர் எழுச்சி, (1881-1888), ஜெர்மன் தொழி லாளர் எழுச்சி (1844) ஆகியவை போன்ற எழுச்சிகளும் மாபெரும் வேலை நிறுத்தங்களும் சில நிலைமைகளை வெளிப்படுத்தின.ஒன்று,முதலாளியத்திற்கு எதீராகப் பாட்டாளி வர்க்கம் உலக அரங்கில் தோன்றி வலுப்பெறுகிறது. இரண்டு, இந்த வர்க்கம் முதலாளியச் சுரண்டலை மட்டுமின்றி சகலவிதமான சுரண்டல்களையும் முற்றாக ஒழிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். மூன்று, இருக்கின்ற அரசு அமைப்பை தகர்த்து விட்டுப் புதிய அரசு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதாகும், இவை போன்ற பதிய நிலமைகள் தோற்றுவித்த அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்குரிய தத்துவம் தேவைப்படுகிறது. புரட்கிகரமான தத்துவம் இல்லையெனில் புரட்சிகர நடைமுறை இல்லை என்பர், ஆயினும் அத்தகைய தத்துவம் சமூக நடைமுறையின் தேவையிலிருந்து எழுவது ஆகும். எனவே அந்நேரத்தில், அதற்கு முந்தையகால தத்துவஅறிவு, இயற்கை அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சியையம் முற் போக்கு அம்சங்களையும் கிரகித்துக் கொண்டு இயங்கியல் பொருள் முதல் வாதம் எனும் முரணற்ற அறிவியல் தளத்தின் மேலே, காரல் மாக்ஸ் (1819-1882), பிரடெரிக் ஏங்கெல்ஸ் (1820-1895) ஆகியோர் தம் சிந்தனையை எழுப்பினர். இதுவே மார்க்சியமாக விரிகிறது. பழமையினின்று எவற்றை உட்கிரகித்து இயங்கியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில் மார்க்சியத்தை உருவாக்கினர் என்பதைப் பின்னால் விரிவாகக் காண்போம். இவ்வாறு தன்னெழுச்சிக் காலத்திலிருந்து விலகி அமைப்புக் காலமாக விரிவடைந்த தன்மையைப் பாட்டாளி வர்க்கத்தின் அறிவு ஆழமடையும் போக்கோடு தொடர்புபடுத்திப் பின் வருமாறு மாசேதுங் குநிப்பிடுவார். “பாட்டாளி வர்க்கம் தன் நடைமுறையின் முதல் கட்டத்தில் இயற்திரங்களை உடைப்பதும் தானாகவே எழுந்து போராடுவதுமான காலகட்டத்தில் இருந்தது. அப்போது முதலாளியச் சமூகத் தைப்பற்றிய அதன் அறிவு, புலன் அறிவாக இருந்தது. முதலாளியத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுடைய தனித்தனி அம்சங்களை யும் புறஉறவுகளையுமே அது அறிந்திருந்தது. அந்தச்சமயத்தில் பாட்டாளி வர்க்கம் “தன்னுள் ஒரு வர்க்கமாக” இருந்தது, உணர்வு பூர்வமான ஸ்தாபன அமைப்புடன் பொருளாதாரப் போராட்டமும் அரசியல் போராட்டமும் நடத்தும் கட்டத்தைத் தன நடைமுறை மூலமும் மார்க்சும் ஏங்கெல்கம் அறிவியல் அளவில் தொகுத்து மார்க்சியமாக உருவாக்கிய நீண்டகாலப் போராட்ட அனுபவம் மூலமும், பாட்டாளி வர்க்கம் முதலாளித் தவச் சமூகத்தின் சாராம்சத்தையும் சமூக வர்க்கங்களுக்கு இடையிலான சுரண்டல் உறவுகளையும் தன் சரித்திர பூர்வமான பணியையும் புரிந்து கொள்ள முடிந்தது.” எனவே மார்க்சியம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திய தத்துவமா என்ற கேள்விக்கு ஆம் என்றே பதில் தரலாம். அது பாட்டாளிவர்க்கத் தத்துவமாகும். ஆயின் அது பாட்டாளி வர்க்க நலனுக்கான தத்துவம் மட்டும் தானா என்று கேட்டால் இல்லை என்றே பதில் தரலாம். ஏனெனில் முதலாளியச் சமூக முரண்பாடுகள் முற்றி மோதல் காலகட்டம் உருவான பின்னால் பாட்டாளி வர்க்கத்தின் நலனோடு சுரண்டப்படும் வர்க்கங்கள் அனைத்தின் நலனும் இணைந்துள்ளது. பாட்டாளி வர்க் கத்தின் விடுதலையோடுதான் அனைத்து வர்க்கங்களின் விடுதலை கட்டுண்டுள்ளது இதை ஏங்கெல்ஸ் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்:”சுரண்டப்பட்டும்ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து)இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால் சமுதாயம்அனைத்தையும் சுரண்டலில் இருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றைக்குமாய் விடுவித்தே ஆகவேண்டும் என்கிற இந்த அடிப்படைக் கருத்து...…” மேலும் இதற்கு முந்தைய வரலாற்று முற்போக்கு இயக்கங்களுக்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கும் ஒரு பெருத்த வேறுபாடு உண்டு. முந்தைய வரலாற்று இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையோரது நலனுக்கான சிறுபான்மையினரது இயக்கங்களே, ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கம் மிகப் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின்நலனுக்காக பெரும்பான்மையோர் “தன்னுணர்வோடுநடத்தும் சுயேச்சையான இயக்கமாகும். இத்தகைய வழிகளில்தாம், பாட்டாளி வர்க்கத்தத்துவம் ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கங்களின் நலனுக்கான தத்துவமாக உருமாறிவிடுகிறது எனலாம். ஆயின் இங்கே நமக்கு ஒருவிளக்கம் தேவைப்படுகிறது.தத்துவங்கள் அனைத்தும் வர்க்கச் சார்பானவையே. ஒவ்வொரு வர்க்கத்தின் சமூகப்பாத்திரமும் சமூகவளர்ச்சியில் அதன் பங்கும் பிற வர்க்கத்திடமிருந்து வேறுபட்டிருப்பதால், உலகத்தையும் சமூகத்தையும் பற்றிய உண்மையை அறிவதில் ஒருவர்க்கத் தத்துவம் இன்னொரு வர்க்கத் தத்துவத்தைவிட வேறுபட்டே காணப்படும்.
மார்க்சியமானது அதற்கு முந்திய தத்துவங்களை விமர்சனரீதியாக முழுமுற்றாக மறுக்கிறது. ஆனால் ஏங்கெல்ஸ் கூறியது போல் அது மறுப்பு (negation) இல்லை. அது மனித வரலாற்றில் பெறப்பட்ட முற்போக்குக் கருத்துக்கள் அனைத்தின் தொடர்ச்சியும் உயர்மட்ட ஒருங்கிணைவும் ஆகும். இது குறித்து லெனின் பின்வருமாறு கூறுகிறார்:”மார்க்சியம் முதலாளியச் சமூகத்தில் பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளைச் சற்றும் புறக்கணித்து ஒதுக்கவில்லை, மாறாகமனிதச் சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டவளர்ச்சியில் இருந்த விலைமதிப்புள்ள அம்சங்களை யெல்லாம் அது ஏற்றுக்கொண்டது” ஏனைய தத்துவங்கள் இருக்கின்ற அமைப்பு மாறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதற்கான விஷயங்களைச் சொல்கின்றன. ஆனால் மார்க்சியம், வரலாற்று விதிகளின்படி உலகை மாற்றியமைப்பதற்கான விஷயங்களைச் சொல்கின்றது. அனைத்து வகைப்பட்ட சுரண்டல்களிலிருந்தும் மக்களை விடு விக்கக் கூடிய தன்மை பெற்ற வரலாற்றின் புரட்சிகரப்பாத்திரம் ஏற்கும் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமாக மார்க்சியம் உள்ளது. மார்க்சியம், திறனாய்வுத் தன்மை மிக்கதும்புரட்சிகரத்தன்மை மிக்கதும்(Critical and revolutionary) ஆகும். வறட்டு வாதத்தை எதிர்த்து அனைத்துக் கருத்துக்களையும் கொள்கைகளையும் புரட்சிகர நடைமுறை என்ற கொதி கலனுக்குள் கொட்டி. சோதனை-மறுசோதனை என்று தொடர்ந்து செல் கிறது. இன்றைய உண்மையானது சரிப்படுத்தப்பட்டு, புதிய உண்மையாக வளர்த்தெடுக்கப் படவில்லையானால், நாளை இதுவே பொய்யாக மாறலாம் என்பதையும் திறனாய்வுக் கண் ணோட்டத்தில் ஒப்புக்கொள்கிறது.
மார்க்சியம் வெறும் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் மட்டும் விஷயங்களை அணுகவில்லை. அப்படியிருப்பின் அது, எதிர்மறைக் கோட்பாடாக உருமாறி, செயலிழந்ததன்மைக்கு இட்டுச் செல்லும். அது விமர்சனம் மட்டுமே செய்து கொண்டிராது, பழமையை அகற்றிப் புதுமையைஅங்கேஅமரவைக்கிறது.அதாவது அது புரட்சிகரமானதாகும். அது தன் நிலைபாட்டில் உறுதியாக நின்று, புரட்சிகரக் கருத்துக்களைப் புரட்சிகர நடைமுறையின் மூலம் சோதனை செய்து கொள்கிறது. இவை போன்ற பல தன்மைகளைமார்க்சியம் பெற்றிருப்பதாலே, இன்றைய நிலையில் ஏனைய தத்துவங்களைவிட முழு உண்மைக்கு நெருங்கிக் கொண்டிருக்கும் தத்துவமாக மார்க்சியம் விளங்குகிறது எனலாம். எனவே மார்க்சிய எதிர்ப்பாளர்கள், மார்க்சிய அணுகுமுறை பாட்டாளி வர்க்கத்திற்கான மட்டும் உரியதானது என்று சொல்வி அதன் அனைத்தும் தழுவியத்தன்மையை மூடிமறைத்துவிட இயலாது. மார்க்சியம்--ஒரு குறிப்பிட்ட நாட்டின் கால கட்டத்திய தத்துவமா?
இன்னுமோரு விமர்சனம் மார்க்சியத்தை நோக்கிக் கூறப்படுகிறது. மார்க்ஸ் ஒரு நாட்டில், அதனுள்ளும் குறுகி ஒரு சமுதாயத்தில், அதனுள்ளும் குறுகி ஒரு கால கட்ட நிகழ்வில், அதனுள்ளும் குறுகி அதன் புற வாழ்வின் ஓர் அம்சத்தில் மார்க்சியத்தைக் கண்டுபிடித்த தாகச் சொல்வர். அதாவது இவர்கள் கண்ணோட்டத்தின்படி, மார்க்சியம் ஒருகுறிப்பிட்ட நாட்டின் ஒருகுறிப்பிட்ட கால கட்டத்திய தத்துவம் மட்டுமே, அப்படியிருக அது எப்படி உலகளாவிய தன்மை பெறஇயலும்? மார்க்சிய அணுகுமுறை, எப்படி உலகளாவீய முறையில் சமூகப் பிரச்னைகளை அணுக இயலும்?
மார்க்சியம் அணுகுமுனற உலகளாவியது. மார்க்சியம் உலகளாவிய தன்மையைப் பெற்றதை எங்கெல்ஸ் முதன்முதலில் குறிப்பிடுகின்றார். பாயர்பேக் பற்றிய மார்க் சின் ஆய்வுரைகளை மதிப்பிடும்போது, “ஒருபுதியஉலகப்பார்வையின் ஒளிமயமான கருவிதையைத் தாங்கி நிற்கும் முதல் ஆவணம்” என்கிறார் இதன் உலகளாவிய அணுகுமுறைத்தன்மையைக் காண்போம்.
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் காலம், முதலாளியம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலமாகும். வரலாறில் ஆதற்கு முந்திய மாபெரும் செயல்களையெல்லமம் மீறி முதலாளியம் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருந்த காலம். அது, தான் ஏவிய உற்பத்திசக்திகளைக் கூடத்தானே கட்டுப்படுத்த முடியாத காலம், மார்க்சின் சொற்களில் கூறப்போனால், “பாதாள உலகத்திலிருந்து தனதுமந்திரத்தின் வலிமையால், தருவித்த சக்திகளை அடக்கியாளமுடியாமற்போனமந்திரவாதியின் நிலையில் முதலாளியம் இருந்தகாலம். இத்தகைய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக, அறிவின் எல்லைகள் விரிவடைந்தன. மார்க்சும் ஏங்கெல்கும் தம் காலம்வரை வளர்ந்திருந்த அறிவின் சாரத்தை முழுமையும் கிரகித்து, மனித சமூகசாரத்தின்உண்மைகளைவெளிக்கொண்டு வந்தனர். ஆயினும் மார்க்சிற்கு முந்திய உலகக் கண்ணோட்டத்திற்கும் மார்க்சின் உலகக்கண்ணோட்டத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இந்த விதத்தில்தான் மார்க்கியம் அனைத்தும்தழுவிய தன்மை கொண்டதாக உள்ளது. மார்க்சியம் ஓர்அறிவியலைப் போன்றது. அது சமூகத்தைப்பற்றிய அறிவியலாகும் பொருள்முதல் வாதம் என்ற அளவுகோலின் வழி இயங்கியல் முறையில், முதலாளியக் கால கட்டத்திய சமூக அறிவியல் ஆகும், இயற்கை அறி வியல் ஒரு காலகட்டத்திற்கும் ஒரு நாட்டிற்கும் மட்டுமே சொந்தமாக இல்லாததைப்போல, மார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் ஒரு குறிப்பிட்டநாட்டிற்கும்மட்டுமே பொருந்தும் எனச் சுருக்கிப் பார்க்கக் கூடாது.
மார்க்சியம் என்பது முதலாளியச் சமூகக் கட்டத்தின் நவீன அறிவியற் கோட்பாடு தானே! ஆனால் இன்று ஏகாதிபத்தியக் கால கட்டமாயிற்றே! எப்படி மார்க்சியம் பொருந்தும்? அதாவது, உலகைக் குடியேற்றநாடுகளாகவும், அரைக் குடியேற்றநாடுகளாகவும் ஏகாதிபத்தியங்கள் கூறுபோட்டுக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் ஏப்படி மார்க்சியம் பொருந்தும்? இங்கேதான் மார்க்சியத்தின் வளர்ச்சிக் கட்டமாக லெனினியம் உருவெடுக்கிறதுலெனின்,ஏங்கெல்சிற்குப்பின் தன் காலம் வரையிலான அறிவியல் சாதனைகளையெல்லாம்பொருள்முதல்வாதக் கோட்பாட்டின் வழியில் வரையறை செய்தார். மார்க்சிய முகாம்களுக்கு உள்ளிருந்தே ஒலித்த மார்க்சிய விரோதக் குரலை அம்பலப்படுத்தினார். அவரது கருத்துக்களின் தொகுப்பே லெனினியம் என்பதாகும், மார்க்சியம் என்பது முதலாளிய சகாப்தத்தின் நவீன சமூக அறிவியல் எனில், லெனினியயம் என்பது ஏகாதிபத்திய காலகட்டமும் தொழிலாளர் வர்க்கப் புரட்சியும் நிலவும் காலகட்டத்திய மார்க்சியம் ஆகும்,
லெனின், மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். ஏங்கெல்ஸ் ஒரு முறை சொன்னதற்கு இணங்க அறிவியல் கண்டுபிடிக்கிற விஷயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒத்ததாக இருக்கும் வகையில் பொருள் முதல் வாதம் அவ்வப்பொழுது புதுப்புது அம்சம் உடையதாக வளம் பெற வேண்டும்! என்ற அடிப்படையில் லெனின் செழுமைப் படுத்தினார். எனவே மார்க்சிய அணுகுமுறை ஒரு கால கட்டத்திற்கு உரியது மட்டுமன்று. ஆயினும் அது சமூகத்தைப் பற்றிய முழுமுற்றான பரிபூரணத்துவம் நிறைந்த ஒன்றாகவும், எல்லாக் காலகட்டத்திற்கும் ஒரே அளவினதாகவும் இருக்கக் கூடிய ஒன்றல்ல, அது சமூகத்தைப் பற்றிய சில பொதுவான கோட்பாடுகளை உலகிற்கு வழங்குகிறது. இது குறித்து லெனின் கூறுதல் பொருத்தமாக இருக்கும். “மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாகவும் மீறவொண்ணா ததாகவும் கருதவில்லை. மாறாக அது,..... அறிவியலின் அடிக்கல்லை மட்டுமே அமைத்துக்கொடுத்திருக்கிறது. அது பொதுவானவழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்திருக்கிறது' மார்க்சும் ஒரு கட்டத்தில், “எனது நூல்கள் அனைத்தும் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகும்” என்றும் கூறியுள்ளார். எனவே மார்க்சியம் என்பது ஒரு நாட்டிற்கு மட்டும், ஒருகால கட்டத்திற்கு மட்டும் உரியதத்துவமாக இன்றுவரைஇல்லை என்பதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
No comments:
Post a Comment