இந்திய பாராளுமன்றமும் ஊழல் ஆட்சியாளர்களும்-சிபி
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம்" என்பதுதான் பலரின் பிரதான தேர்தல் பிரசாரமாக உள்ளது. எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கட்சியின் மீது எதிர்க்கட்சியினர் வைக்கும் பிரதான குற்றச்சாட்டு, ஊழல் குற்றச்சாட்டாகத்தான் இருக்கும்.
காங்கிரசின் ஊழலை பார்ப்போம் முதலில்
போபர்ஸ் ஊழல்:
ஸ்வீடன்நாட்டுபோபர்ஸ்நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக1986-ம் ஆண்டு, மார்ச் 24-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. 1,437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசியல்தலைவர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்த ஊழல் விவகாரத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெயரும் அடிபட்டது.
ஆதர்ஷ் ஊழல்
கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின்குடும்பத்தாருக்குவழங்குவதற்காக அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்ட ஆதர்ஷ் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தக் குடியிருப்புகளில், அரசியல்வாதிகளுக்கும், உயிருடன்உள்ளராணுவஉயரதிகாரிகளுக்கும், அதிகாரிகளின் உறவினர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து அரசியல்கட்சித்தலைவர்களின்பெயர்களிலும் ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் அசோக்சவான் பதவி விலகினார்.
நிலக்கரி ஒதுக்கீடு ஊழல்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் நிலக்கரித் துறை அமைச்சகம் செயல்பட்ட காலத்தில், நிலக்கரி ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாகச் சர்ச்சை எழுந்தது. சுமார் 1 லட்சத்து 86,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல்நடந்ததாகக்குற்றம்சாட்டப்பட்டது.இந்தக் குற்றச்சாட்டு காரணமாக, 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.
காமன்வெல்த் விளையாட்டு ஊழல்:
2010-ம்ஆண்டுபுதுடெல்லியில் காமன் வெல்த் நாடுகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றபோது, சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு வகையில் 95 கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு ஊழல் தாண்டவமாடியதாகப் புகார் எழுந்தது.
ஓட்டு போட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம்:
கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பி.ஜே.பி உறுப்பினர்களுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சர்மா என்பவர்தான் அந்தப் பணத்தைக் கொடுத்தார் என பி.ஜே.பி எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
டாட்ரா டிரக் ஊழல்:
600 `டாட்ரா' ரக வாகனங்களை இந்திய ராணுவத்துக்கு வாங்குவதில், சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக, இடைத்தரகர் மூலம் சில ராணுவ உயரதிகாரிகள் 750 கோடி ரூபாய் வரை கமிஷன் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஹெலிகாப்டர் ஊழல்:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடமிருந்து இங்குள்ள முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீனஹெலிகாப்டர்களைவாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்வாறு பேசப்படும் காங்கிரசின் பேசப்பட்ட ஊழல்கள் கீழே
1948 - ஜீப் ஊழல்
1951 - முந்த்ரா ஊழல் - 12 மில்லியன்
1956 - BHU நிதிகள் தவறாகப் பயன்படுத்துதல் - 5 மில்லியன்
1960 - தேஜா கடன் ஊழல் - 220 மில்லியன்
1971 - நகர்வால் ஊழல் - 6 மில்லியன்
1974 - குவோ எண்ணெய் ஊழல் - 22 மில்லியன்
1981 - சிமெண்ட் ஊழல் - 300 மில்லியன்
1987 - போஃபர்ஸ் ஊழல் - 960 கோடி
1992 - ஹர்ஷத் மேத்தா ஊழல் - 5000 கோடி
1994 - சர்க்கரை இறக்குமதி ஊழல் - 650 கோடி
1995 - முன்னுரிமை ஒதுக்கீடு ஊழல் - 5000 கோடி
மேகாலயா வன ஊழல் - 3 பில்லியன்
யூகோஸ்லாவிய தினார் ஊழல் - 4 பில்லியன்
கோப்ளர் ஊழல் - 1000 கோடி
1996 - யூரியா ஊழல் - 133 கோடி
1997 - மியூச்சுவல் ஃபண்ட் ஊழல் - 1200 கோடி
பீகார் நில ஊழல் - 400 கோடி
சுக்ராம் டெலிகாம் ஊழல் - 1500 கோடி
2001 - யுடிஐ ஊழல் - 32 கோடி
2002 - கல்கத்தா பங்குச் சந்தை ஊழல் - 120 கோடி
2003 - முத்திரை ஊழல் - 20000 கோடி
2005 - ஐபிஓ ஊழல் - 1000 கோடி
2006 - தாஜ் காரிடார் ஊழல் - 175 கோடி
சரி ஊழலை ஒழிக்க வந்த பிஜேபியின் முகம் என்ன?
அனைத்து கட்சிகளும் ஊழல்கட்சிகள்! நாங்களே உத்தமர்கள்” என மார்தட்டி, சிபிஐ ரெய்டுகள், விசாரணைகள் யாவற்றையும் செய்யும் பாஜகஅரசு எத்தகைய படுகேவலமான ஊழல்களை செய்துள்ளது என இந்திய கணக்கு தணிக்கை ஆணையம் (CAG) அம்பலப்படுத்தி உள்ளது! இந்திய வரலாறே இதற்கு முன் கண்டறியாத பாஜக ஆட்சியின் ஊழல் பட்டியலைப் பாரீர்;ஒன்றல்ல, இரண்டல்ல, ஒவ்வொரு துறையிலும் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது CAG ஆய்வில்கனகச்சிதமாகவெளிப்பட்டுள்ளது! துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் திடீரென்று ஊமையாக மாறிவிட்டன.
பாரத்மாலாவில் 6,90790 கோடிகள் ஏப்பம்!
இந்தியாமுழுமையும்உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை விரைவுச் சாலைகளாக இணைக்கும் பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் தது. இரண்டாம் கட்டத்தில். 26,316கிலோமீட்டர்சாலை அமைக்க 8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப் பட்டுள்ளன. ஆக மொத்தம் 13 லட்சத்து 81 ஆயிரத்து 588 கோடி பணம் ஒதுக்கப்பட்டதில், 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி 790 கோடிகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டதாக கணக்கில் உள்ளது. இதில் 7 லட்சத்து 49 ஆயிரத்து 820 இன்சூரன்ஸ் அட்டைகளில் ஒரே செல்போன் எண் (9999999999) உள்ளது என்றால், எவ்வளவு தெனாவெட்டாக ஊழல் செய்திருப்பார்கள்என்பதுஅதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் காப்பீடு திட்ட சிகிச்சையில் 88,670 பேர் இறந்துள்ளனர். இப்படி சிகிச்சையின் போது இறந்த 3,346 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாகச் சொல்லியும் மோசடி செய்து காப்பீடு பெறப்பட்டிருப்பது தான் கொடுமை! இதில் பல்லாயிரம் கோடிகளில் படுபயங்கர முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கை உறுதி செய்கிறது.
அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்காக மிகக் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி குவித்து, அதை அயோத்தி ராமர் அறக்கட்டளைக்கு பல மடங்கு அதிகமாக விற்று பக்தியின் பெயரால் மோசடிகள் அரங்கேறியுள்ளன. கோவில் மற்றும் நகர மேம்பாட்டு கட்டுமானங்களில் எல்லாம் ஆதாயங்களுக்குமேல்ஆதாயம்அடைந்துள்ளனர். அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்த பணி கொடுப்பதில் கையூட்டு, உத்திரவாதப் பணத்தில் சலுகைகள்..என எதிலும் ஊழல்களே! இந்தப்படி பார்த்தால், ஒப்பந்ததாரர்கள் கோடிக் கணக்கில் ஓகோன்னு லாபம் அடைந்திருப்பதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்திய வகையில் சுமார் ரூ.8.22கோடி இழப்பு ஏற்பட்டுள்ள தாகவும் அம்பலமாகியுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டு திட்ட கிராதக ஊழல்!
செயல்பாடுகளை விட விளம்பரங்களை அதிகம் நம்பும் அரசாக பாஜக அரசு உள்ளது என்பது இந்த ஊழலில் உறுதியாகியுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக அள்ளி இறைக்கப் பட்டுள்ளது . 2017 ஆம் ஆண்டு இத்திட்ட த்தை 19 மாநிலங்களில் விளம்பரப் படுத்த தலா 5 விளம்பரப் பலகைகள் வைக்க, 2. கோடி 444 லட்சம் ரூபாய் ஓய்வூதிய திட்டநிதியில் இருந்து முறைகேடாக எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் திட்டசெயல்பாட்டை ஆராய்ந்தால் என்னென்ன ஊழல்கள் தெரிய வருமோ?
ஹெச்.ஏ.எல்லில் ஏப்பம் விட்ட 160 கோடி!
சுமார் ரூ.159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கர்நாடக பாஜக தலைவர் பசனகவுடா பாட்டீல்யத்னால், கோவிட்-19 தொற்று நோய்களின் போது மாநிலத்தில் உள்ள முன்னாள் பாஜக ஆட்சி ரூ.40,000 கோடி ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி சர்ச்சையைத் தூண்டினார்.
ராபெல் ஊழல் மறந்தே போய்விட்டது அல்லவா? மோடி சொன்ன எல்லா பொய்கள் மட்டும் குறைவா?
போபால்: மபி பா.ஜ ஆட்சியில் கடந்த 18 ஆண்டுகளில் ரூ.2.70 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சி பட்டியல் வெளியிட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் உள்ளார்.
இப்படி ஊழல் பட்டியல் நீண்டுக் கொண்டே போகலாம் இவை ஏன் என்ன என்று ஆராய்ந்தால் இதற்கான ஊற்றுகண் தனியார் மயம் தாராளமயம் எனும் உலகமய கொளகையின் கோரப்பிடிதான்.
நாடாளுமன்ற போலி ஜனநாயகமும், புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகளும்தான் இத்தகைய மாபெரும் ஊழல்களுக்குக்காரணமாகவும்,கவசமாகவும் இருக்கின்றன. ஏகாதிபத்திய பன்னாட்டுக்கம்பெனிகளும், உள்நாட்டு பெரு முதலாளித்துவ கும்பல்களும், அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர், கார்பரேட் நிறுவனங்களின் அரசியல் தரகர்களும் மக்களின் வரிப்பணத்தை பல இலட்சம் கோடிகள் சூறையாடுவதற்கு தனியார்மயக் கொள்கைகளே வழிவகுத்துக் கொடுத்துள்ளன. ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கூட்டுகளவானிகளே ஓட்டரசியல் கட்சிகளின் ஆதரவும், ஆசியும் பங்கும் இல்லாமல் இம்மாபெரும் ஊழல்கள் நடந்திருக்கவே முடியாது.
ஆக ஊழல் சர்வமயமாகி விட்டது இங்கே ஊழல் ஒழியபோவதில்லை ஆனால் ஊழலின் வடிவங்கள் பல மாறி விட்டன. பதவிக்காவும் உய்ரி பயத்திலும் நீதிமன்ற நீதிபதிகளே ஊழலில் ஈடுபடும் பொழுது மக்கள் நம்பிக்கை இந்த ஓட்டரசியல் மீதுதான். அதனை பற்றி பேச வேண்டிய இடதுசாரிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை காப்பதற்கு உறுதி பூண்டுள்ளனர். இவர்கள் லெனினியத்தின் அரிசுவடியை கூட ஏற்க தயாரில்லை பிறகு எப்படி இவர்கள் இடதுசாரிகள் என்று தெரியவில்லை.லெனின் மிகத்தெளிவாக பாராளுமன்றத்தில் ஈடுபடுவது பற்றியும் அதில் இடதுசாரிகளின் பணி என்ன என்பதனையும்மிகத்தெளிவாக தன்னுடைய எழுத்துகளில் விளக்கியுள்ளார். ஆனால் நமது தலைவர்கள் இரண்டாம் அகிலத்தின் தலைவர் காவுத்ஸ்கியின் வழியில் முதலாளித்துவ ஜனநாயகத்தை காக்கவும், புரட்சிக்கு பதில் சமதானமுறையில் ஆட்சி மாற்றதை நோக்கியும் செயல்பட்டிருக்கும் பொழுது இவர்கள் இங்கே சமூக மாற்றதிற்கான எந்த பணியையும் செய்யாமல்இருக்கும்அமைப்புமுறைக்குள்ளே வாழவழி தேடும்பொழுது புரட்சி என்பதனை தங்களின் அகராதியிலிருந்து அகற்றிவிட்ட இவர்கள் மற்ற ஓட்டரசியல் கட்சி போல் மக்களை ஓட்டுபோடும் எந்திரங்களாக பாவித்து அவர்களின் பிரச்சினையையும் அதேபோல் அணுகும் பொழுது மக்களுக்கான விடியல் இதில் இல்லாத பொழுது இவர்கள் தோல்வி காண்பது இயல்புதானே. எப்பொழுது இவர்கள் எழுவார்கள் புரட்சிக்கு அணி சேர்பார்கள் என்று ஏங்கி கிடப்பதை விட மார்க்சிய லெனினிய அடிப்படையில் நமக்கான நெறிமுறைகளை மார்க்சியதில் தேடி கண்டடைவோம்.
தகவல்கள் முதலாளித்துவ பத்திரிக்கைகள் வெளியிட்டுக் கொண்டுள்ளவற்றில் இருந்தே மோடி ஆட்சி பற்றி சில நூல்கள் வெளிவந்துக் கொண்டுள்ளன அவைகளையெல்லாம் பேசாமல் சிறிய அளவில் மேம்போக்காக எழுதியவையே இந்தக் கட்டுரை பகுதி
No comments:
Post a Comment