தோழர்களே,
ரசிய புரட்சி நடந்தேறி 108 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அதன் வழிகாட்டுதல்கள் நமக்கான படிப்பினைகள் இங்குள்ள கம்யூனிசம் பேசும் கட்சிகளும் குழுக்களும் எந்தளவு புரிந்துள்ளனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது!
ரசியாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் அரசியல் தத்துவ வழிகாட்டுதல்களை முழுமையாக ஏற்று முதலாளித்துவ வளர்ச்சி போக்கில் உழைக்கும் மக்களின் துன்பதுயரங்களுக்கு காரணமான ஒடுக்கும் சுரண்டும் அமைப்பை ஒழித்து கட்டி உழைக்கும் மக்களுக்கான கட்சியாக கட்டினர். அவை பல்வேறு குழுக்கள் எதிரிக்கு எதிரான போரில் ஒன்றும் சாதிக்க முடியாது என்பதும் அதற்கு பலம் வாய்ந்த புரட்சியை நடத்தும் எக்குறுதி போன்ற கட்சி வேண்டும் என்றும் அவையும் "பாரிஸ் கம்யூன் படிப்பினைகளின் அடிப்படையில்" உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாக கட்சியாக; புரட்சிகான கட்சியாக கட்டினர். புரட்சியின் படிப்பினை உலகிற்கு வழிகாட்டியாக நடைமுறைக்கான தத்துவமாக மார்க்சிய லெனினியம் புரட்சியின் ஊடாக நம் முன் உள்ளது. ஆனால் அந்த நடைமுறைக்கான தத்துவத்தை நாம் (இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கட்சியாகட்டும் குழுவாகட்டும்) இதுவரை அதனை புரிந்துக் கொள்ளவேயில்லை என்கிறேன். மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களை மறுத்தே ஆம் அவர்கள் சொன்னவற்றை பின்பற்றாமலே இங்கே மார்க்சிய இயக்கங்கள் உள்ள பொழுது உழைக்கும் மக்களின் விடுதலை இந்த சுரண்டலிலிருந்து எப்படி என்பது கேள்விக்குறியே!
ரஷ்யாவில் நடந்த நவம்பர் புரட்சியில் போல்ஷிவிக் கட்சியின் கோட்பாடே சோசலிச புரட்சியை நிலைக்க வைக்க மக்களை தயார் செய்தது என்பது தெரியவரும் . ரஷ்யாவில் இருந்த வர்க்க விழிப்புணர்வு பெற்ற தொழிலாளர்கள் விவசாயிகள் அறிவுஜீவிகள். உழைக்கும் மக்களின் தொழிலாளர்கள் அமைப்பின் மூளைகளாக மற்றும் இதயங்களாக இருந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துக்களாலாலும் அந்த இயக்கங்களின் அறிக்கைகள் விவாதகுறிப்புகள் இவற்றை கசடற கற்று போல்ஷிவிக் கோட்பாட்டை உருவாக்கினர் லெனின். ஸ்டாலின் போல்ஷிவிக் கோட்பாட்டை கொண்ட செயலுக்திகளை மார்க்சியம் லெனினியம் என்று பெயர் சூட்டினார். அதன் படிப்பினைகளை பெறவில்லை இங்குள்ள நாம் ... ஆக நமக்கான பணியை ஆசான்களிடமிருந்து பெற்று செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
“தொடக்கம் முதலாகவே கம்யூனானது, அதிகாரத்துக்கு வந்து விட்ட தொழிலாளி வர்க்கம் பழைய அரசு எந்திரத்தைக் கொண்டே தொடர்ந்து நிர்வகித்து செல்வது சாத்தியமில்லை என்பதையும், தற்போது தான் வென்று கொண்ட மேலாதிக்கத்தை திரும்பவும் இழக்காது இருக்கும் பொருட்டு இந்த தொழிலாளி வர்க்கம் ஒரு புறத்தில் முன்பு தன்னையே எதிர்த்து பிரயோகிக்கப்பட்ட பழைய ஒடுக்குமுறை இயந்திரம் அனைத்தையும் ஒழித்து விட்டு, மறுபுறத்தில் தனது பிரதிநிதிகள் அதிகாரிகள் ஆகியோரிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு இவர்கள் எல்லோரையும் விதிவிலக்கின்றி எந்நேரத்திலும் திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களே என்பதாய் பிரகடனம் செய்ய வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பது இன்றியமைதாக ஆகிவிட்டது. முடியரசில் மட்டுமின்றி, ஜனநாயக குடியரசிலும் கூட அரசு அரசாகவே இருந்து வருகிறது என்பதை, அதாவது அதிகாரிகளை “சமுதாயத்தின் பணியாட்களை”, அரசின் உறுப்புகளை சமுதாயத்தின் எஜமானர்களாய் மாற்றி விடுவது என்ற அதன் அடிப்படையான தனிப் பண்பினை இழந்து விடவில்லை என்பதை எங்கெல்ஸ் மீண்டும் வலியுறுத்தி கூறுகிறார்.
“.........
அரசும் அரசின் உறுப்புக்களும் சமுதாயத்தின் பணியாட்கள்
என்கிற நிலையிலிருந்து சமுதாயத்தின் எஜமானர்கள் என்ற நிலைக்கு இவ்விதம்
மாற்றப்படுவதற்கு எதிராய் (முந்திய எல்லா அரசுகளிலும் இம்மாற்றம் தவிர்க்க
முடியாதது) கம்யூனானது பிசகாத இரு வழிகளைக் கையாண்டது. முதற்கண், அது எல்லா பதவிகளுக்கும்) (நிர்வாகம், நீதித்துறை, கல்வித்துறை ஆகிய எல்லா பதவிகளுக்கும்) அனைத்து மக்கள்
வாக்குரிமையின் அடிப்படையிலான தேர்தல் மூலம் ஆட்களை அமர்த்தியதோடு, அவர்களை அதே வாக்காளர்களால் எந்த நேரத்திலும் திருப்பி
அழைக்க கூடியவர்களாக ஆக்கிற்று. இரண்டாவதாக, அது உயர் அதிகாரிகள் ஆயினும் சரி கீழ் அதிகாரிகளாக ஆயினும்
சரி எல்லோருக்கும் பிற தொழிலாளர்களுக்கு கிடைக்கும் அதே சம்பளங்கள் தான்
கொடுத்தது. யாருக்கும் கம்யூன் அளித்த மிக உயர்ந்த சம்பளம் 6000 பிராங்குகள்தான் (பிரெஞ்சு நாணயம்) பிரதிநிதித்துவ
உறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கம்யூனால் விதிக்கப்பட்ட
மீறமுடியாத ஆணைகளை அன்னியில், இவ்வழியில் பதவி வேட்டைக்கும் தன்னல உயர்வு நாட்டத்துக்கும்
சரியானபடி தடை எழுப்பப்பட்டது.......… இங்கே எங்கெல்ஸ் முரணற்ற ஜனநாயகம் ஒருபுறம்
சோசலிசமாய் மாற்றப்படுவதையும், மறுபுறம் சோசலிசம்
அவசியெமெனக் கோருவதையும் குறிக்கும் சுவையான எல்லைக் கோட்டினை நெருங்கி
வந்துவிடுகிறார்.
ஏனெனில் அரசை ஒழித்திட அரசு நிர்வாக அலுவல்களை தேச மக்களில் மிகப்பெரும்
பகுதியோருடைய (நாளடைவில் ஒவ்வொரு தனியாளுடைய) தகுத்திக்கும் ஆற்றலுக்கும் உட்பட்ட
எளிய கண்காணிப்பு, கணக்கீட்டு வேலைகளாய் மாற்றுவது அவசியமாகும். பதவி வேட்டை அடியோடு
ஒழிக்கப்பட்டாக வேண்டுமாயின், அரசு நிர்வாக அலுவல் துறையில் லாபம் தருவனவாய்
இல்லாவிட்டாலும் “மதிப்பிற்குரியனவாகிய” பதவிகள், மிகமிக சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் எல்லாம்
இடையறாது நடைபெற்று வருவது போல, வங்கிகளில் அல்லது கூட்டுப்பங்கு கம்பெனிகளில் கொழுத்த
ஆதாயத்துக்குரிய பதவிகள் பெறுவதற்கான உந்து தளங்களாய்ப் பயன்பட முடியாதபடி செய்தாக
வேண்டும்.
சுரண்டும் வர்க்கங்களுக்குச் சுரண்டலைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, அதாவது எல்லா மக்களிலும் மிகப் பெரும்பான்மையோருக்கு எதிராக
மிகச் சொற்பச் சிறுபான்மையினரின் சுயநல நலன்களின் பொருட்டு அரசியல் ஆட்சி
தேவைப்படுகிறது. சுரண்டப்படும் வர்க்கங்களுக்கு, எல்லாச் சுரண்டலையும் முற்றிலுமாக ஒழிப்பதற்கு, அதாவது மிகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களுக்காகவும், நவீன அடிமை உடைமையாளர்களான நிலப்பிரபுக்கள் மற்றும்
முதலாளிகள் அடங்கிய முக்கியத்துவமற்ற சிறுபான்மையினருக்கு எதிராகவும் அரசியல்
ஆட்சி தேவைப்படுகிறது.(அதே பக்).
அரசென்பது நிரந்தரமான சிவில் சமூக நிருவனமான மாறாத அதிகாரிகளிலிருந்து கடைநிலை
ஊழியர் வரை ஆகும். ஆனால் நாம்
இங்கு அரசாங்கமான பாராளுமன்றம் சட்டமன்றம் மட்டுமே பேசுகிறோம்.
ஆக எந்த கட்சி ஆட்சி என்றாலும் மோடி அரசாங்கம், இடதுசாரி கேரள அரசாங்கம், இங்குள்ள மு.க. ஸ்டாலின் அரசாங்கம் இவ்வாறு இவை திரை
மறைவுக்கு பின்னே நடக்கும் அரசின் செயலை மூடி மறைக்கதான். இதனை செயல்படுத்துவோர்
நிரந்த அதிகாரம் படைத்தவர்களே. இதனை பற்றி மார்க்சியம் மிகதெளிவாக சொல்கிறது
அரசாங்கம் மாறுகிறது ஆனால் அரசு மாறுவதில்லை. அன்றைய கலெட்டர் அடுத்த ஆட்சியிலும்
கலெட்டர் இவ்வாறு....
".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி
முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின்
கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச்
சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."
ருஷ்யாவில் 1917ம் அண்டு நடந்தேறிய மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்சி மனிதகுல
வளர்ச்சியில் புதுயுகக்தைத் தோற்றுவித்துவிட்டது. முதலாளித்துவ அமைப்பு அழிவதும்
சோஷலிஸமும்கம்யூனிஸமும் அமைப்பு நிலைபெறுவதும் தவிர்க்க முடியாதவை என்பதை உலக
வளர்ச்சியின் அரை நூற்றாண்டுவரலாறு காட்டிவிட்டது. பொருளாதார, அரசியல், சித்தாந்தத்துறைகளில் மார்க்சிய லெனினியத்துக்கும்
முதலாளித்துவத்துக்கும் இடையே தற்போது தீவிரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
உழைக்கும் மக்களை மா-லெ சித்தாந்த அறிவுகளை பெறுவதற்கான போராட்டமாக இது அமைய வேண்டும். நடக்கும்
நிகழ்ச்சிகள் உழைக்கும் மக்களின் இதயங்களையும் வசப்படுத்திப் புரிந்தகொள்ள
வேண்டும், சென்ற காலத்தையும் நிகழ்காலதக்கையும் சரியாகத் தெரிந்தகொள்ள வேண்டும், தற்கால வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள
மாபெரும் மாற்றங்களை அதிக ஆழமாக காண்பதற்கு மா-லெ விஞ்ஞானக் கண்ணோட்டம்
இன்றியமையாதது. இத்தகைய கண்ணோட்டமாக விளங்கும் மார்க்சிய-லெனினிய தத்துவ
கருத்துக்களின் முரணின்றிப் பொருளாகார, சமூக-அரசியல் பொருந்திய தொகுப்பாக புரிந்துக் கொள்வோம், வருங்கால நோக்கதிற்காக.