நமக்கான கல்வியும் நம்மிடையே உள்ள கல்விமுறையும்
இன்றைய கல்வியானது முதலாளி வர்க்கத்துக்கு தேவையான கூலி அடிமைகளை உருவாக்குவதற்காக ஏற்பட்டுள்ளதே இதன் மேல் மக்கள் கொண்டிருக்கும் மயக்கம் சொல்ல முடியாததாகும். தன் பிள்ளைகள் ஆங்கிலத்தில் படித்தால் வேலை கிடைத்திடும் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்று அவர் தம் பெற்றோர்கள் எவ்வளவு செலவு செய்தாவது கற்பிக்க எண்ணுகின்றனர். உழைப்பைச் செலவிட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர் ஆனால் அவர்கள் கல்வி கற்றதற்கேற்ப வேலை கொடுக்க வேண்டிய அரசு கொடுக்க தயார் இல்லை எல்லாம் தனியார் மய மகிமை என்ன சொல்ல???
இந்த கல்வி நிலையங்களில் கூலி அடிமை சந்தைக்கு பிள்ளைகளை தயாரிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் வேலையற்றவர்களாக இன்றை நிலையில் தெருவில் நிற்கின்றனர். கற்ற கல்விகேற்ற வேளை கிடைக்காமையால் வேற எந்த வேலை செய்ய முன் வருவதில்லை. அதனால் உற்பத்தி உறவிலும் ஈடுபடவும் தயங்குகின்ற இந்த கல்விமுறை உடைத்தெறியப் படவேண்டிய அவசியமானது.
நாம் கல்வி பயில்வது அறிவை வளர்பதற்காக இல்லாமல் பொருளியல் தேவைக்காக இருக்கும் பொழுது அந்த கல்வியும் அறிவை வளர்பதற்கு பதில் பொருளீட்ட உள்ளதால், குதிரை ரேஸ் போல் ஓட வேண்டியதாக உள்ளது தோழர்களே.
நமக்கான பொது கல்வியை அளித்த அன்றைய ஆங்கிலேய காலனி ஆதிக்கவாதிகள் தங்களின் பணிக்கான வேலையாட்களுக்கான கல்வி கொடுத்தனர். அவை ஆங்கிலம் முக்கியதுவம் வாய்ந்ததாக இருந்தது. அன்று உலகையே தன் கைகுள் வைத்திருந்த காலனி ஆட்சியாள்ரகள் தன் மொழி கல்வியையும் தனக்கான அடிமை கூட்டத்தையும் உருவாக்கி வளர்த்தான்.
அந்த அடிமைதனம் இன்றும் கோலோச்சுகிறது.
பாரதி சொன்னதுதான், " என்றுதனியும் இந்த அடிமையின் மோகம்.... சுதந்திர தாகம்" என்றான். இங்கு ஆங்கிலேயருக்கு பிறந்த கூட்டம் தாய்மொழி கல்வியை மறுத்து ஆங்கிலம் கற்றால் வேலை வாய்ப்பு எனும் கேவலமான மனநிலையில் உலவுகின்றனர். எதார்த்தம் என்னவாக உள்ளது நினைத்து பாருங்கள்.
பழைய பள்ளி கல்வி முறையை விமர்சிக்கும் போது அது "உண்மையான கம்யூனிஸ்ட் கல்விக்கான " பள்ளியாக அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று லெனின் கூறினார் .பழைய கல்விகளில் பேராதிக்கம் செலுத்தி வந்த மனப்பாடம் போடும் பழக்கத்தை உறுதியாக கண்டித்த லெனின் " நன்கு கற்ற இன்றைய மனிதனுக்கு இன்றியமையாத எல்லா விவரங்களும் அடங்கிய அறிவை" ஒவ்வொரு மாணவரும் வளர்ந்து அதில் பரிபூரண அடைய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார் .உயர்ந்த கல்வி உடையவர்களாக உயர்ந்த பண்பாடு உடையவர்கள் உயர்ந்த கோட்பாடு உடையவர்களாக கம்யூனிசத்தை கட்டுவதற்கு மனிதனும் இனம் சேகரித்த அறிவை பயன்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக, இளைஞர்களை உருவாக்கும் அடிப்படையில் பொதுக் கல்வியை பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது லெனின்னுடைய கருத்து .
வர்க்க சமூக சமுதாயத்தில் கல்வியின் வர்க்கத் தன்மையை பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் தெளிவாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாதாரண பொதுமக்கள் அறிவு பெறும் வழியை ருஷ்ய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் இந்த நிதர்சனப்படுத்தி விளக்கினார் .நமது அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார் (1895):"அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார் ;இந்த தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வேட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவதாக முக்கியமாகும் திரும்பிவிடும் என்று அமைச்சர் நன்கு புரிந்து இருந்தார் ".
வர்க்க சமுதாயத்திலான கல்வியை கலாச்சாரத்தை மற்றும் கல்விக் கூடத்தில் வர்க்கத் தன்மையை மறைக்க முயன்ற எல்லாவித சந்தர்ப்பவாதிகள் திருத்தல்வாதிகள் ஆகியோரின் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக புரட்சி இயக்க வளர்ச்சியில் எல்லா கட்டத்திலும் லெனின் உறுதியாக முன்வைத்தார்.
நமது இன்றைய கல்வி முறையானது உண்மையில் ஏன் சமுக பிரச்சினையை தீர்பவனாக இல்லை?
இன்றுள்ள குழந்தைகளானது 98% கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் கொண்டதாகவும் அதே வளர்ந்து கல்வி கற்று கல்வி நிலையங்களை விட்டு வெளியேறியப் பின் 2% மட்டுமே கற்க்கவும் கேட்டறியவும் ஆர்வம் உள்ளதாக ஒரு ஆய்வரிக்கை தெரிவிக்கிறது இதிலிரிந்து நமது கல்வி முறையானது சிந்திக்கும் திறனை அடியோடு ஒழித்துக் கட்ட முனைகிறது என்பதுதானே அதனை பற்றி தொடர்ந்து விவாதிப்பதே இந்த பகுதியின் நோக்கம்.
அரசு எந்திரமானது தனது ஒடுக்கு முறையை கல்வியில் எப்படி திணிக்கிறது என்பதனை பற்றி பார்ப்போம்.
உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி அதாவது முதலாளித்துவ சுரண்டல் உறவு, அதற்க்கு சேவை செய்யும் கல்வி மிகவும் அமைதியான மற்றும் ஆழமான கருத்தியலாகும்.
சிறுவயதிலே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் படுகிறார்கள் அவர்கள் தாய் தந்தை மற்றும் பள்ளியில் பல விசியங்கள் திணிக்கப் படுகிறது, நடைமுறையில் உள்ள கருத்தியல் கற்ப்பிக்கப் படுகின்றன.
இயற்க்கை அறிவியல் ,அறிவியல் வகுப்புகளில் பகுத்தறிவுப் பூர்வமாக கற்றுக் கொடுக்கப் படுகிறது.
ஆனால் மொழிப் பாடத்தில் மதம் சார்ந்து பகுத்தறிவு மறுப்பு முக்கியமாக உள்ளது.
சமூக அறிவியல் முற்றிலுமாக பகுதறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் பொய்களை தவறான தகவல்களின் அடிப்படையில் கற்ப்பிக்கப் படுகின்றன.
இத்தகை இரண்டுச் சிந்தனைகளின் மூலவேர் நம் கல்வி அமைப்பில் உள்ளது. இதை திட்டமிட்டு ஆளும் வர்க்கம் செய்கிறது.
இன்றைய ஆளும் வர்க்கம் தனது நலனுக்காக சமூக நிகழ்வுகளை பகுத்தறிவு மறுப்பு கண்ணோட்டத்தில் கொண்டு செல்கிறது..
இன்றைய கல்விமுறையானது வெறும் மனனம் செய்வது மட்டுமே.
இவை சமுக அறிவோ அல்லது அறிவியல் ரீதியான அறிவியல் பூர்வமான சிந்தனை இல்லாத வெறும் கருத்து முதல்வாதிகளாகவும்,
சாதி மத குப்பைகளை சுமந்து திரியும் கீழான சிந்தனையுள்ளவர்களாக அரசே மாணவர்களை வளர்க்கிறது.
இவை ஒருபுறமிருக்க கல்வி என்பது பள்ளியில் மட்டுமல்லாது வீட்டிலும் படிப்பு. இவ்வாறு இளம் வயதினரின் காலமெல்லாம் உழைப்பேயன்றி வெறும் புத்தகப் படிப்பிலும் மனனம் செய்வதிலும் கழிகிறது, இவை அவர்களை ஒரு செக்கு மாட்டுதனத்திற்க்கு கொண்டு போகிறது.
தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே போல் இக்கல்விக்கூட தொழிற்சாலைகளில் (கல்லூரிகள் உட்பட) கூலியடிமைச் சந்தைக்கு தயாராகும் பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
இன்னும் பின்னர்...
https://www.facebook.com/share/p/1BgsTzYXuF/
No comments:
Post a Comment