இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). இலக்கு ஆசிரியர் குழுவிடமிருந்து
2).அரசு பற்றி லெனின் பாகம் 1
3). மனித சமூக சாரம். ஜார்ஸ் தாம்சன் பாகம் -1.
4). தேசம், தேசிய இன பிரச்சினை பற்றிய தேடல்
5). தாய் மொழியும் தமிழும்
6). கம்யூனிஸமும் கம்யூனிஸ்ட்டுகளும்-
நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடங்குகிறது. வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன
வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் உழைப்பை அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின் ஒரு பிரிவு எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக இருக்க காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்னொரு பிரிவுக்கு உள்ளது.
மனித குலத்தின் வரலாற்று வளர்ச்சியில் தனிச்சொத்துடமையின் தோற்றம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வினையும் வர்க்கங்களையும் உருவாக்கியது. இத்தகைய வர்க்கங்களிடையிலான முரண்பாடுகளும் போராட்டங்களும் பொதுவாகி போனது. மனித குலத்தின் வரலாறு வர்க்க போராட்டங்களின் வரலாறாகிக் கொண்டது. வர்க்க முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கின் விளைவுகளால் அரசு தோன்றியது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் மார்க்ஸ் விளக்கியது போன்று அரசென்றால் ஒரு வர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு கருவியாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசு ஆகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அரசு. வர்க்கசமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும்.அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக வந்திருக்கின்றார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.
இலக்கு இணைய இதழ் மாதம் இருமுறை வெளிவருகிறது அதுவும் பி.டி.எப் வடிவில் இணைத்தில் வெளியிடுகிறோம், இதற்கு இரு முக்கிய காரணம் வாசிக்க விவாதிக்க எங்கும் எளிதாக சென்றடையவும், இணையத்தில் எங்கேயும் பதிவிறக்கம் செய்து வாசிக்க முடியும் என்பதனால்தான் தோழர்களே. மேலும் எங்களின் இணைய தளமான https://namaduillakku.blogspot.com/ இந்த இணைப்பில் எங்களின் எழுத்துகளும் விவாதங்களும் எழுத்து வடிவில் உள்ளன தேவைப்படும் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள எளிதாக ஏதுவாக இருக்கும் என்பதனால்தான்.
இலக்கு இணைய இதழின் எமதுநோக்கம்:- “புரட்சிகர ஜனநாயக சிந்தனையாளர் களுக்கான களமாக "இலக்கு" இணைய இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மார்க்சிய லெனினிய வழியிலான தத்துவ, அரசியல் பொருளாதார, கலை, இலக்கிய மேம்பாட்டுக்கான புரிதலும் வளர்த்தெடுத்தலும் விவாதிப்பதற்கான தளமாக பயன்படுத்த நினைக்கிறோம். உங்களின் மேலான விவாதங்கள் மூலம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாதையில் பயணிக்க முயற்சிக்கலாம் என்பதே எமது நோக்கம்.இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வகண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடைமுறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மா- லெ-மா அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”
இங்குள்ள இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடு ஒன்றல்ல பல ஆக அவர்கள் போய் சேர வேண்டிய இடத்தை அடையவே முடியாது. ஏனெனில் வெவ்வேறு பாதையில் பயணிப்போர் ஓரிடத்தில் இணைய முடியாது அல்லவா? அவர்களிடையே உள்ள பல்வேறு நிலைப்பாடு குழப்பங்களுக்கு அவர்களுக்கான மா-லெ தத்துவ போதமையே.
1). பாராளுமன்ற பங்கேற்பா எதிர்ப்பா?
2). குறுங்குழுவாதம் தீரா நோய்
3). திட்டப் பிரச்சினை பற்றி
4). பொதுவுடமையாளர்களின் பணி
5). அரசு பற்றி பிரச்சினையில் பாராமுகம்
6). தத்துவத்தில் மார்க்சியமல்லாத கலைப்புவாதம்
7). இந்திய சமூக ஆசியபாணி உற்பத்திமுறையில் உள்ளது
8). பொதுவுடமையாளர்கள் எதன் அடிப்படையில் ஒன்று படுவது?
9).தேசிய இனப்பிரச்சினை குறித்து
10). சாதி பிரச்சினை குறித்து
11).மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்று பயிற்சி பெறுதல்
இதுபோல் இந்திய சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை தனித்தனியாக பார்த்து சமூகத்தை அதன் இயக்கத்தை புரிந்துக் கொள்ளாததன் வெளிப்பாடே இவை .
இலக்கு இணைய இதழ் 68 PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment