இலக்கு 67 இணைய இதழ்

இலக்கு இணைய இதழின் எமதுநோக்கம்:- “புரட்சிகர ஜனநாயக சிந்தனையாளர்களுக்கான களமாக "இலக்கு" இணையஇதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மார்க்சிய லெனினிய வழியிலான தத்துவ அரசியல் பொருளாதார கலை இலக்கிய மேம்பாட்டுக்கான புரிதலும் வளர்த்தெடுத்தலும் விவாதிபதற்கான தளமாக பயன்படுத்த நினைக்கிறோம். உங்களின் மேலான விவாதங்கள் மூலம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாதையில் பயணிக்க முயற்சிக்கலாம் என்பதே எமது நோக்கம்.இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மா- லெ-மா அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.

இதுவரை 67 இணைய இதழ்கள் வந்துள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகள்

இந்த இணைய இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1).கம்யூனிஸ்ட்டுகளின் சில போக்குகள்
2).அரசு பற்றி லெனின்
3).மொழி மற்றும் தேசிய இனப் பிரச்சினையை குறித்து

 ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன.

ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன.

தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. (ஜே.வி.ஸ்டாலின் தொகுதி 5)

தோழர்களே கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் கம்யூனிசத்தை விட கம்யூனிசம் அல்லாத பல்வேறு கருத்துகளை பேசிக் கொண்டே கம்யூனிஸ்டுகளாக வலம் வருகிறோம் அவை கட்சியாக இருக்கட்டும் அல்லது தனிநபராக இருக்கட்டும்.எப்படி ஆளும் வர்க்க கட்சியும் சமூகமும் தனிநபர் கவர்ச்சிவாதத்தை நம்புகிறதோ அணி திரள்கிறதோ அதேபோல் இங்குள்ள சில முன்னால் புரட்சியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் அல்லது ஆளும் வர்க்கத்தால் ஊதி பெருக்கப்பட்டவர்களை முன்னோடியாக கொள்வது வர்க்க அணி சேர்க்கைக்கு பயனில்லையோ அதேபோல் மார்க்சியம் அல்லாத தத்துவங்களை மார்க்சியமாக வைத்துக் கொண்டு புரட்சி வருமா எப்படி வரும் என்று ஏங்குபவர்கள் உண்மையில் அவர்கள் மார்க்சிய அரசியல் தத்துவத்தை உள்வாங்காமல் எப்படி கம்யூனிஸ்ட் ஆவான். ஆக சில தேடலே.

ஒரு கட்சி இல்லாமல் எதிரியின் ஒடுக்கு முறையினை மக்களால் தூக்கி எறிந்து விடல் முற்றிலும் சாத்தியமற்றது. நாம் கம்யூனிஸ்டுகள்.எதிரியை தூக்கியெறிவதில் மக்களுக்கு வழி காட்ட விரும்புகிறோம்.ஆகவே நமது படையின் அணிவகுப்புகளை சிறந்த முறையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்து சென்றாக வேண்டும் நமது துருப்புகள் தேர்ந்தெடுத்த துருப்புகளாக இருக்க வேண்டும். இந்நிலமைகள் இல்லாமல் எதிரி தூக்கியெறியப்பட இயலாது. (மாவோ தேர்ந்தெடுத்த படைப்புகள் பாகம் 3 பக்கம் 40). இங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் எப்படி இருக்கிறது என்பதனை புரிந்துக் கொள்ள தொடர்வோம்.

நம் மத்தியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளின் பல்வேறு போக்கு

1). பாராளுமன்ற பங்கேற்பா எதிர்ப்பா?

2). சாதி பிரச்சினைதான் முதன்மையானது

3). திட்டப் பிரச்சினை தீர்காமல் வேறில்லை

4).ஆசியபாணி சொத்துடமைதான் இந்திய சமூகம்

5). அரசு பற்றி பிரச்சினையில் பாராமுகம்

6). தத்துவத்தில் கலைப்பு வாதம்

7).தேசிய இனப்பிரச்சினை முதன்மையானது

8). பார்பனியம் ஆரியம்தான் முதன்மையானது

இவ்வாறு பல பிரச்சினைகளை முன்வைத்து சிதறியுள்ள இவர்கள் இவர்களை அடக்கி ஒடுக்கும் அரசை புரிந்துக் கொள்ளாமையும் அரசின் கருணையை எதிரபார்ப்பது அல்லது அரசமைப்பின் ஏதாவது ஒரு அங்காத்தோடு ஒன்றிபோதால் இவை மார்க்சியம் காட்டும் வழிமுறையல்ல. அதனால் அதற்கான வழிமுறை நமக்கான மார்க்சிய அரசியல் பொருளாதார தத்துவத்தை கற்றுதேர்வோம் நமக்கான பணியினை திறம்பட செய்வோம் தோழர்களே.

இன்று பிளவுகளை ஆய்வு செய்யும் பொழுது நம்மிடையே உள்ள குறைகளை கணக்கிடுவோம்

நம்மிடையே அதாவது இங்கு கம்யூனிஸ்ட் என்பவர்களிடையே பல்வேறு குழப்பங்களும் ஒன்றுபடாமையும் மார்க்சியதிற்கு விரோதமான நிலைப்பாட்டை எதிர்கொள்வதும் நாம் நம் ஆசான்களின் வழிகாட்டுதல்களை முழுமையாக உள்வாங்கவில்லை என்பதே அதற்கான பணி நமது ஆசான்களின் நூலிருந்து கூட்டு படிப்பு இயக்கம் தொடங்க வேண்டும் என்பதே தோழர்களே .

இலக்கு 67 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்