தமிழை முழுமையாக ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.
கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நிலை.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சிமொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், புதிய காலனிய இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.
நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லை. தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கப்பூர்வமான அறிவு கிட்டும்.
நம் தாய்மொழி தமிழ்மொழி, ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்புமொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில்; உயர் கல்வியும் ஆங்கிலத்தில்; ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் - ஆங்கிலத்தை அகற்றாமல் - தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சிமொழியாக பயிற்றுமொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.
திமுக அரசு இந்தியை தடுக்க ஆங்கிலம் எனச் சொல்லி தமிழகத்தில் ஆங்கிலத்தை மட்டும் கட்டாயப் பாடமாக்கி, தமிழைப் படிக்கலாம் அல்லது படிக்காமலும் இருக்கலாம் என்ற நிலையில் தமிழ் இன்றியே கல்விகற்க தமிழகத்தில் முடியுமளவிற்கு நிலமையுள்ளது.
இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மையப்படுத்தியே அணுகுமுறைகளும், நடவடிக்கைகளும் முன்வைக்கப்பட்டதே தவிர, தமிழ் மொழி அது சார்ந்த ஆட்சி மொழி சட்டத்திலிருந்த குறைபாடுகளை களைந்து, தமிழ் பயிற்றுமொழி ஆவதற்கான செயல்திட்டம், கால அளவு என்று எதுவும் இல்லைமத்திய அரசு (இந்திய அரசு) அரசின் நிர்வாக நடைமுறைகளில் இருமொழிக் கொள்கையும், பள்ளிக்கூடங்களில் மும்மொழிக்கொள்கையும் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து தாய்மொழியே - தமிழ்மொழியே ஆட்சிமொழி, பயிற்று மொழி என்ற கொள்கையை திமுக முன்வைக்கவில்லை.இந்தி வராமலிருக்க இருமொழிக் கொள்கை என்றார்கள் திமுக ஆட்சியாளர்கள். இந்தியை இவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தமிழ் நாட்டுத் தெருவெல்லாம் ஆங்கில முழக்கத்தோடு இந்தி முழக்கமும் சேர்ந்து கொண்டது மத்திய ஆட்சியாளர்களை ஆதரிக்கும் பிஜேபியினர் இந்தி வேண்டும் எனும் முழக்கம் என்னவகையோ?.தமிழ் நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்திக்கு முதலிடம் தந்து ஆங்கிலத்தை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.தமிழ்நாட்டு அலுவலகங்களில் ஆங்கிலத்துக்கு முதலிடம் தந்து தமிழை இரண்டாம் இடத்தில் வைத்துள்ளனர்.
தனியார் நிறுவனங்களும் உலகமயமாக்கலின் விளைவாய் ஆங்கிலத்தை மட்டுமே வைத்துள்ளன, தமிழுக்கு அங்கு இடமில்லை. தமிழுக்கு வாய்ப்பளிக்காமல் ஆங்கிலத்தை வளர்ப்பவர்கள் அனைவரும் திராவிடக் கட்சிகளின் கல்வி வியாபாரிகளே. அவர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களால் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தமிழைப் புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இன்றைய தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களிலும் தமிழ் எப்படி கொல்லப்படுகிறது என்பது அனைவரும் அறிவார்கள்.
தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.
1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.
தமிழன் தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையிலும் பல பகுதிகளில் மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். இன்று இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்வுக்குறியது.
தாய்மொழி தமிழ்மொழி, ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்புமொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.
இதற்கான தீர்வு ஒரு புரட்சிக்கான செயல்பாடுதான் அதனை தீர்மானிக்கும் சக்தி மக்கள்தான், அதனை வழி நடத்தும் புரட்சிக்கான கட்சி இங்கு உள்ளதா? அதற்கான பணி செய்யாமல் வெற்று கோசம் பயனளிக்காது. விவாதிப்போம் இதனை பற்றி விரிவாக. பின்னர் பார்ப்போம்..
சில முக்கியமானவை..
1). தாய்மொழி தமிழ்மொழி, ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, தொடர்புமொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.
2). தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
3). இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில்; உயர் கல்வியும் ஆங்கிலத்தில்; ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் - ஆங்கிலத்தை அகற்றாமல் - தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சிமொழியாக பயிற்றுமொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லை. தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கப்பூர்வமான அறிவு கிட்டும்.
4).ஆங்கிலம்தான் பயிற்றுமொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன.
5).நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும்..
6).ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது.
7). தொன்மை மொழியான தமிழை புறக்கணிக்கும் போக்கானது ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய நலனுக்குட்பட்டவை.
8). உழைக்கும் மக்களுக்கான ஒரு அரசே அந்நிய ஆதிக்கத்தை ஒழித்து பரந்து பட்ட உழைக்கும் மக்களுக்கான அரசால் மட்டுமே அனைத்து மொழிக்கும் சம அந்தஸ்தளிக்க முடியும். அப்படிபட்ட அரசே மக்களுக்கான அரசாக இருக்கும்.
9). அனைவரும் அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க முழு சுதந்திரம் வேண்டும். மொழி திணிப்பு எப்பொழுதும் ஏற்புடயவை அல்ல
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன.
ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன.
தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. (ஜே.வி.ஸ்டாலின் தொகுதி 5)
No comments:
Post a Comment