இந்தைய கம்யூனிச இயக்க வரலற்றை தொகுக்க நினைத்த பொழுது வீரம் செறிந்த பக்கங்களையும் துரோக நிழலையும் அறியவே இந்தப்பக்கம்
இன்றைய கம்யூனிஸ்ட்டுகள் சட்டவாதிகளாகவும் ஆளும் வர்க்க தொங்கு சதையாகவும் மாறியுள்ள நிலையை பரிசீலிக்க அன்றைய உண்மையான வர்க்க ரீதியாக அணிதிரட்டப்பட்ட அணிகளின் செயல்களை புரிந்துக் கொள்வோம்.
கம்யூனிஸ்டுகளால்கட்டியமைக்கப்பட்டு வந்த தொழிலாளர் வர்க்கஇயக்கத்தை நசுக்குவதற்கும், அதன் முன்னேற்றத்தைத் தடுக்கவும் காலனிய அரசாங்கம் 1924-ல் கான்பூர் சதி வழக்கையும் 1929-ல் மீரத் சதி வழக்கையும் சதித்தனமாக தொடுத்தது.
இந்த நடவடிக்கைகள் தொழிலாளி வர்க்க இயக்கம் அதன் உச்சத்தை நோக்கி வேகமடைவதை தடுத்ததே தவிர அதனை அழித்திட முடியவில்லை இரண்டே ஆண்டுகளில் தொழிலாளி வர்க்க இயக்கம் மீண்டெழுந்து அதன் சிகரத்தைத் தொட்டது.
பிரிட்டிஷ் அரசாங்கம் அவிழ்த்துவிட்ட அடக்குமுறைக்கும் அதிகமாகவே, தொழிலாளி வர்க்க இயக்கத்தில் அசிங்கமான முறையில் தலைதூக்கிய சீர்திருத்தவாதம் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சாரத்தை பலவீனப்படுத்தி அழித்தது.
தொழிலாளி வர்க்க இயக்கத்தை ஐக்கியப்படுத்தப்பட்ட சக்தியாக ஒருமுகப்படுத்துவதற்குப் பதிலாக சந்தர்ப்பவாதத்துடன் கூடிய சீர்திருத்தவாதிகள் தொழிலாளி வர்க்க இயக்கத்தைப் பிளவுபடுத்தச் சதிகளைச் செய்தனர். அதனை அதிகார வர்க்கத் தொழிற்சங்கங்களாக தரங்கெடச் செய்தனர். இதனால் தொழிலாளி வர்க்கம் இந்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டிய வரலாற்றுப் பாத்திரத்தை வகிக்க முடியாத சூழல் உருவாக்கப்பட்டது.
தொழிலாளிகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியாேரிடையே உணர்வைச் சீறி எழச்செய்த கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டினது மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து கட்சி அடக்குமுறைக்கு எதிராகப் பல இயக்கங்களை நடத்தியது.
இந்திய தேசிய இராணுவத்தின் (I.N.A) படைவீரர்கள் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்கு முறைக்கு எதிராகவும் இந்து முஸ்லீம் கலவரங்களைத் தடுப்பதற்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகப் பணியாற்றியது. இக்கட்சி ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களைக் கட்டியமைத்ததாேடு, மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கட்டியமைத்தது.
ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி வெறி பிடித்த மமதையில் இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்கள் மீது கொடுமை மிக்க விசாரணையை நடத்திய போது ஒட்டு மொத்த நாடே வீறிட்டெழுந்தது இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்களை நிபந்தனையற்று விடுவிக்கக் கோரி ஒரே குரலில் கோபத்துடன் கர்ஜித்தது.
1945 நவம்பரில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மாணவர்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு முன்னணியில் நின்று இந்த இயக்கங்களை ஆதரித்தனர். அவர்கள் பெரிய அளவிலான கதவடைப்புப் போராட்டங்களையும் (ஹர்த்தால்கள்) வேலை நிறுத்தங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
காங்கிரஸ், முஸ்லீம்லீக் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு முன்னணியில் நின்று இந்த இயக்கங்களை ஆதரித்தனர். அவர்கள் பெரிய அளவிலான கதவடைப்புப் போராட்டங்களையும், வேலை நிறுத்த்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிப் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்த போது அவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
கடற்படையினரின் கலகம் இந்திய இராயல் கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றின் சிப்பாய்கள் தங்களாேடு பணிபுரியும் பிரிட்டிஷ் சிப்பாய்களைப் போன்றே தாங்கள் நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு வழங்கப்படும் அதே போன்ற உணவு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மட்டுமே கோரினர் இதற்கு மேல் அவர்கள் வேறெதையும் கோரவில்லை.
இந்தக் கோரிக்கைகளை அடையப்பெறக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களிலும், கப்பற்படை தளங்களிலும் பணிகளை முடக்கிக் கண்டனங்களைத் தெரிவித்தனர். தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நகரத்தை நோக்கி ஆர்ப்பாட்ட அணிவகுப்பை நடத்தினர்.
இந்திய தேசிய இராணுவத்தின் சிப்பாய்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் இந்தாேனேஷியாவுக்கு அனுப்பப்பட்ட படைப் பிரிவுகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர், தங்களின் கப்பல்களில், காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். கடற் படையினரிடையே புதிதாகக் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய தேசபக்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆத்திரமூட்டியது. கைது செய்தும் துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டும் கடற்படையினரை நசுக்க விரும்பினர்.
கப்பல்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு கடற்படையினர் கூர்மையாக எதிர்வினை புரிந்தனர். அவர்களால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே எதிர்க்க முடிந்தது, ஆனால் அவர்களின் வீரமிக்க எதிர்ப்பு பம்பாய், கராச்சி ஆகிய பகுதிகளிலிருந்த கடற்படையினரைப் புரட்சிகர சகாப்தத்தினது தோற்றத்தின் முன்னாேடியாக எழுச்சியுறச் செய்தது, அவர்களின் வீரத்துடனும், தேசப்பக்தியுடனும் கூடிய ஒன்றுபட்ட போராட்டம், இந்திய இராணுவப் படையினரிடம் மகத்தான உணர்வைப் பொங்கியெழச் செய்தது.
இந்தியக் கடற்படையினருக்கு ஆதரவாக விமானப் படையினரும் பல இடங்களில் பணிகளை முடக்கினர், எல்லாவிடங்களிலும் கலகத்தில் ஈடுபட்ட கப்பற் படையினரைச் சுடுவதற்கு இந்திய இராணுவத்தினர் மறுத்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்படையினரின் கலகத்தை கம்யூனிஸ்ட் கட்சியினால் தலைமை தாங்கப்பட்ட தொழிலாளர்கள் அங்கீகரித்து ஆதரித்தனர். கடற்படையினரின் கலகத்தை ஆதரித்து பம்பாய், கல்கத்தா, திருச்சி, சென்னை ஆகிய பல இடங்களில் மகத்தான வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் டாங்குகளாேடு வெள்ளைப் படையினரையும் ஆயுதந்தாங்கிய வாகனங்களையும் கலகம் நடந்த இடத்திற்கு அனுப்பியது. தெருவுக்கு வந்த வெள்ளை இராணுவம் மக்களை அச்சுறுத்துவதற்காக மனிதத் தன்மையற்ற படுகாெலைகளை நடத்தியது. இரண்டு நாட்களில் சமாதானத்தை விரும்பும் 200க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கப்பல் படையினரின் கலகமும் இந்தியத் தொழிலாளர்களின் மகத்தான ஆர்ப்பாட்டங்களும் ஒன்றுக்காென்று தொடர்பற்ற தனித்த நிகழ்வுகளல்ல, கப்பல் படையினர் வேலை நிறுத்தத்தை நடத்திய ஒருவார காலத்திற்குள் ஜபல்பூர் இராணுவத் தளத்திலிருந்த 300 சிப்பாய்கள் தங்கள் பணிகளை முடக்கி காங்கிரஸ், முஸ்லீம்லீக், கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் பதாகைகளை உயர்த்தி மார்ச் 4-ம் நாள் தெருக்களில் அணிவகுப்பை நடத்தினர்.
மார்ச் 8-ம் நாளன்று டெல்லியில் பிரிட்டிஷார் நடத்திய வெற்றி விழாவை எதிர்த்துத் தொழிலாளர்களும் மக்களும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களும் நகர்மன்றக் கட்டிடத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
மார்ச் 18-ம் நாளன்று அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. டேராடூனில் கோர்க்காப் படைப் பிரிவினரை ராணுவம் கைது செய்தது.
உணவுப் பொருட்களின் அளவைக் குறைத்ததை எதிர்த்து அலகாபாத்தில் காவல் துறையினர் மார்ச் 19-ம் நாளன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஏப்ரல் 3-ம் நாளன்று பீகாரில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்.
மேலே விளக்கிய வகையில் ஆயுதப்படை களிடையேயும், காவல்துறையினரிடையேயும் அந்த நேரத்தில் புரட்சிகரச் சூழல் நிலவியது. அதே அளவில் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்க்க முடியாத வேலை நிறுத்த அலை ஏற்றத்தால் சூழல் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்திய பிரிட்டிஷ் முதலாளிகளின் சுரண்டலையும் ஒடுக்கு முறைகளையும் இனியும் தாங்க முடியாது என்ற நிலையிலிருந்த தொழிலாளர்களும் ஊழியர்களும் அமைதிக் காலங்களில் கூட ஒன்றுபட்டு அவர்களுக்கு எதிராக தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டு மொத்த உலகப் போர்க் காலமான 1942-ல் அதிகமான அளவில் வேலை நிறுத்தங்களின் அலை ஏற்றம் காணப்பட்டது. 1946-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1942-ல் நடந்த போராட்டங்களை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன.
அமால்நர், கான்பூர் ஆகிய நகரங்களைச் சார்ந்த மற்றும் தெற்கு இரயில்வேயைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராக எசமானர்கள் தொடுத்த ஒடுக்குமுறைகளை உறுதியுடன் எதிரிட்டு நின்றனர். இதற்குத் தோழமைப்பூர்வமாக ஆதரவளித்து பம்பாயில் 4 லட்சம் தொழிலாளர்களும், கல்கத்தாவில் 16 லட்சம் தபால்துறைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர்.
அன்றைய காலத்தில் நடைபெற்ற முதன்மையான வேலை நிறுத்தங்களின் போது தொழிலாளர்களிடையே போர்க் குணத்தையும், போராடும் உணர்வையும் தொழிலாளர்களிடையே பொங்கியெழுந்த பேருணர்வையும் காண முடிந்தது.
இந்தப் போர்க்குணமுள்ள போராட்டங்களின் எழுச்சியானது இந்தியாவின், கொடுங்காேன்மை மன்னராட்சிப் பகுதிகளுக்கும் பரவியது, காஷ்மீரத்தில் டோக்ரா அரசர்குல மன்னராட்சியின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் ஷேக் அப்துல்லா தலைமையில் மகத்தானதாேர் இயக்கம் நடைபெற்றது.
அரசாங்கம் படுமாேசமான ஒடுக்குமுறையை அவிழ்த்துவிட்டது. இந்த வன்முறையை எதிர்த்து மக்கள் சீறி எழுந்தனர். ஜூன் 21,22 ல் நாடு முழுவதிலும் கண்டனக் கூட்டங்களும் ஹர்த்தால்களும் நடைபெற்றன. எல்லாேரும் காஷ்மீர மக்களுக்கு ஆதரவாக நின்றனர்.
நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ வர்க்கங்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் வஞ்சகத் திட்டங்களும், அவற்றை மக்கள் இயக்கங்களுக்கு எதிராகப் பயன்படுத்த மேற்காெள்ளப்பட்ட முயற்சிகளும் அவர்கள் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை.
எனவேதான் அவர்கள் காங்கிரசுக்கும், முஸ்லீம்லீக்கிற்கும் இடையிலான முரண்பாட்டை இந்து முஸ்லீம் வகுப்பினரிடையே வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவிடவும், மக்களிடையே இரத்தத்தை பெருக்கெடுத்தாேடச் செய்யவும் எழுந்துவரும் புரட்சிகர மக்கள் போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்கும் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தத் திட்டத்தை இடைவிடாது நடைமுறைப்படுத்தி வந்தனர். காங்கிரஸ், முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகளின் தலைமை ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொள்வதற்காகச் செய்து கொண்ட அழிவுத்தரத்தக்க பாதை மக்களை இரண்டாகப் பிளவுப்படுத்தியது. இது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ஒருமுகப்படு்த்தவில்லை. இத்தகைய சரணாகதியானது கல்கத்தா, பம்பாய், நவகாளி, பீகார், மீரத் ஆகிய பகுதிகளில் கொடூரமான வன்முறை வகுப்புப் படுகாெலைகளை நடத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு வாய்ப்பை அளித்தது.
சிலநாட்கள் முன்னர் வரை தாமாக முன்வந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வந்த இந்திய மக்கள் பெருந்திரளினர் மீது அந்நிய ஆட்சியாளர்களால் ஏவப்பட்ட எதிர்த்தாக்குதல்களே இந்த வகுப்புக் கலவரங்கள் ஆகும். இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்தி அந்நிய ஆட்சியாளர்களின் முதுகெலும்புகளில் மின் அதிர்வுகளை ஏற்படுத்தினர்.
காங்கிஸ் தலைமை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் திட்டங்களை நிராகரிப்பதற்கு பதிலாக, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக நிற்பதற்கு பதிலாக, இவற்றுக்கெல்லாம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக ஏகாதிபத்தியத்துடன், சமரசங்களை செய்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் ஏகாதிபத்திய வாதிகளின் திட்டத்தை முஸ்லீம் லீக்கிற்கு எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தவே விரும்பினர்.
காங்கிரசைப் பின்பற்றிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். காங்கிரஸ் பின்பற்றிய வழியின் விளைவாக அவர்களிடையே முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு வளர்ந்தது. பெருந்தேசிய வெறி காங்கிரசுக்குள் பரவியது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மக்கள் தங்களுக்குள் ஒருவருக்காெருவர் எதிரெதிராகப் போராடிக்காெண்டு வகுப்புவாத படுநாசத்தில் தங்களை மூழ்கடித்துக் கொண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்க்கவும், அதற்கு எதிராக கலகம் செய்வதற்குமான அவர்களின் ஆற்றலை இழக்கச் செய்யவே விரும்பினர்.
சில காலங்கள் வரை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான வகுப்புப் படுகாெலைகள் கிழக்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நலப்பிரபுக்களுக்கு எதிரான விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களை முனைமழுங்கச் செய்தன. சில அளவுகளில் வகுப்புக் கலவரங்கள் என்ற கரு மேகங்கள் 1946 களின் தொடக்கத்தில் ஒன்றுபட்ட மக்களின் போராட்டங்கள் என்ற சிவப்பு உதயத்தை மூடிமறைத்தன
கல்கத்தாவில் இந்து முஸ்லீம்களிடையே சகாேதரப் படுகாெலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளி வர்க்க உரிமைகளைப் பெறுவதற்கு இந்து முஸ்லீம் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு துப்பாக்கிகளை எதிர்காெண்டனர்.
1946 ஆகஸ்ட் 24 லிருந்து செப்டம்பர் 23 வரை கல்கத்தாவின் தெருக்களில் இந்து முஸ்லீம்களிடையே சகாேதரப் படுகாெலைகள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் 40,000 பேர்களைக் கொண்ட தென்னிந்திய இரயில்வேயை சேர்ந்த இந்துக்களும், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக நின்று தங்களின் உரிமைகளுக்காகப் போராடினர்.
பொன்மலையில் தங்கள் தலைவர் இஸ்மெய்ல்கான் என்பவரை விடுதலை செய்யக் கோரி காவல் துறையினரின் துப்பாக்கிகளை துச்சமாக மதித்து 4,000 தொழிலாளர்கள் போராடினர்.
பம்பாயிலும்,டாக்காவிலும் பிற இடங்களிலும் வகுப்புக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்த போது செப்டம்பர் 25ல் இராணுவத்தை சேர்ந்த இந்து முஸ்லீம் காவல்துறையினர் தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாய் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
நவகாளியில் நாடே வெட்கத்தினால் தலை குனியும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னராட்சிப் பகுதிகளில் எல்லா மதங்களையும், பிரிவுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் ஆலப்பி என்ற இடத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக தங்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களை நடத்தினர்.
பீகாரில் தூண்டிவிடப்பட்ட கும்பல்கள் தங்களின் சகாேதரர்களைப் படுகாெலை செய்து கொண்டிருந்த போது தெலுங்கானாப் பிரதேசத்தைச் சேர்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த விவசாயிகள் நிஜாமின் கொடுங்காேல் ஆட்சியின் கொத்தடிமை முறையையும் சுரண்டலையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக கலகம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் தாங்கள் சாதித்தவற்றை பாதுகாத்துக்கொள்வதற்காக இந்திய இராணுவத்தை எதிர்த்தும் நிஜாமினது இராணுவ சட்டத்தை எதிர்த்தும் கலகம் செய்து கொண்டிருந்தனர். ஹைதராபாத் மன்னராட்சி பிரதேசத்தின் மையத்திலேயே தாக்குதலைத் தொடு்த்ததன் மூலம் ஜமீன்தாரி அமைப்பினது அஸ்திவாரத்தையே ஆட்டங்கானச் செய்தனர்.
இந்த மக்களின் போராட்டங்களை ஆய்வு செய்து மக்களுக்குச் சரியான புரட்சிப் பாதையைக் காட்டுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி முயற்சித்திருக்க வேண்டும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைவனாக அது மலர்ந்திருக்க வேண்டும், மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் ஒரு சரியான புரட்சிகர திசைவழியை வகுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு அதனால் செய்ய முடியவில்லை.
நாட்டினது ஒரு மூலையில் இந்து முஸ்லீம் மதங்களைச் சார்ந்த தொழிலாளர்களும், விவசாயிகளும், ஈவிரக்கமின்றி தங்களை சுரண்டி சூறையாடி வந்த ஏகாதிபத்தியவாதிகளையும் ஜமீன்தார்களையும் எதிர்த்து ஒன்றுபட்டுப் போராடி கொண்டிருந்தனர். இன்னாெரு மூலையில் கொடுமையான முறையில் ஒருவருக்காெருவர் எதிரெதிராகப் போராடிக் கொண்டிருந்தனர்.
இந்த வகுப்பு வாதக் கலவரங்கள் தங்களின் கூட்டான ஒன்றுபட்ட போராட்டங்களுக்கும் ஒன்றுபட்ட அமைப்புகளுக்கும் தீவிரமான முறையில் தீங்கு விளைவிக்கும் என்பதை வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் இயற்கையாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
நாடு முழுவதிலும் ஒட்டு மொத்தத் தொழிலாளர்களும் பங்கேற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இந்த வகுப்புக் கலவரங்கள் கடுமையான அடியாகும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் இந்த கலவரங்களை நிறுத்துவதற்குக் கடுமையான முயற்சிகளை மேற்காெண்டனர்.
ஹஸ்னாபாத் இதற்கு ஒளி தரத்தக்க உதாரணமாகும், திப்ராே மற்றும் நவகாளி மாவட்டங்களுக்கும் இடையில் அமைந்திருந்த ஹஸ்னாபாத் அன்றைய நாளில் வகுப்புக் கலவரங்கள் கொதி நிலையில் இருந்த மையமாகும், கம்யூனிஸ்டுகளின் தலைமையினால் ஹஸ்னாபாத் இந்து முஸ்லீம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் சக்தி வாய்ந்த மையமாக ஆக்கப்பட்டது.
அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலம் இரண்டு மதங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை கொடுத்தது. உணர்வு பூர்வமான கட்டுப்பாடுடைய இளைஞர்கள் கைகளில் கம்புகளைச் சுழற்றியபடி தெருக்களைக் கண்காணித்த வண்ணம் நின்றனர்.
வீடுகளையும், தெருக்களையும், காலனிகளையும், கால்வாய்க் கரைகளையும் அவர்களுக்கு இடையில் நடைபெற்ற தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கும் இல்லாமல் செய்வதற்காகவும் காத்து நின்றனர்.
வகுப்புக் கலவரங்களை எதிர்த்து டார்ஜிலிங்கில் ஒரு பொது வேலை நிறுத்தமும் ஹர்த்தாலும் நடத்தப்பட்டது.வகுப்புவாத அமைதிக்குலைவைத் தூண்டுவாேரிடம் இது அச்ச உணர்வை ஏற்படுத்தியது.
தொழிலாளர் அமைப்புகள் பலமாக இருந்த இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர் அமைப்புகளும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களைப் பதிப்பித்து விநியாேகித்தன, இந்த துண்டறிக்கைகளில் மக்களிடையே வகுப்புக் கலகங்களைக் கிளப்பி விடுவதற்கும், தூண்டிவிடுவதற்குமான ஏகாதிபத்தியவாதிகளின் சதிகளும் திட்டங்களும் தெளிவாக விளக்கப்பட்டிருந்தன.
அவை காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் தலைமைகள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தி வந்த ஆபத்தான வழிமுறைகளை அம்பலப்படுத்தின அச்சுற்றறிக்கைகள் இந்துக்கள் முஸ்லீம்கள் ஆகியாேரிடையே அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும், குண்டர்களையும் சச்சரவுகளைத் தூண்டுவாேர்களையும் எதிர்ப்பதற்கு அறைகூவல் விடுத்தன. மத சச்சரவுகளை இல்லாது ஒழிப்பதற்கான மக்கள் திரள் திட்டத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி கரங்களில் எடுத்துக் கொண்டது.
கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய சங்கமும் கிழக்கு மற்றும் மேற்கு வங்கத்தில் விவசாயிகளிடையிலும் குத்தகையாளர்களிடையிலும் அதிகரித்துவரும் மன நிறைவின்மையைக் கண்டறிந்தது. விவசாயிகளும், குத்தகை விவசாயிகளும் நீண்ட காலமாக உற்பத்தியாகும் விளைச்சலில் குத்தகை விவசாயிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு தரப்படவேண்டும் என்றும் எந்தக் காரணங்காெண்டும், நிலப்பிரபுக்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கொடுக்கக் கூடாது எனவும் கோரி வந்தனர்.
விவசாய சங்கம் தெபாகா இயக்கத்திற்கான அறைகூவலை விடுத்தது. நவகாளியிலும், திப்ராேவிலும் வகுப்புக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில் அதிருப்தியால் கொந்தளித்த நிலையில் இந்து முஸ்லீம் விவசாயிகள் ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இயக்கத்தில் குதித்தனர். “இன்றைக்கு குத்தகைகளுக்கான விதிகளை முடிவு செய்வாேம் நிலத்திற்கான பிரச்சனையை நாளைக்கு முடிவு செய்வாேம்” என்ற என்ற அவர்களின் முழக்கம் ஆயிரக்கணக்கான மக்களின் குரல்களாக எதிராெலித்தன.
இந்த இயக்கம் 19 மாவட்டங்களுக்கும் நவகாளி திப்ராே மாவட்டங்களை சுற்றிலுமாக நான்கு பக்கங்களுக்கும் பரவியது, வயல்களில் விளைச்சல் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தெபாகா இயக்கம் தொடங்கியது. சீர்குலைவாளர்கள் இந்த இயக்கத்தை இந்து எதிர்ப்பு போாட்டம் என்று அவதூறு செய்வதற்கு முன்னரே இவ்வியக்கம் எல்லா மூலைகளுக்கும் பரவி ஐக்கியப்பட்ட இயக்கமாக வலிமையடைந்தது.
தெபாகாவில் போராடிக் கொண்டிருந்த இந்து முஸ்லீம் விவசாயிகளின் ஒன்றுபட்ட இயக்கத்தை ஒடுக்குமுறைக் கொள்கைகளால் நசுக்க முடியவில்லை. அவதூறுப் பிரச்சாரங்களால் இயக்கத்தை மந்தப்படுத்த முடியவில்லை. எல்லாவித எதிர்ப்புகளையும் ஒதுக்கித்தள்ளி இயக்கம் அலையெனப் பாய்ந்து முன்னேறியது. விவசாயிகள் அரசாங்கத்தைக் கெரில்லா போராட்ட வடிவில் எதிர்த்தனர்.
இந்துக்கள், முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து ஒடுக்குமுறை ஜமீன்தாரிய முறைக்கு எதிராக யுத்தம் தொடுத்தனர்.தெபாகா இயக்கத்தில் சாதிக்கப்பெற்ற இந்து முஸ்லீம் ஒற்றுமை நவகாளி திப்பாரா மாநிலங்களில் நடந்த வகுப்புக் கலவரங்களால் ஏற்பட்ட இழிவை துடைத்தெறிந்தது.
இந்தப்படிப்பினைகள் இன்று நம்க்காண பாதையை வர்க்க ரீதியாக ஒற்றுமை உழைக்கும் மக்களை ஓரணியில் திரட்டாமல் ஆளும் வர்க்கதின் அணி திரளும் போதாமை...
No comments:
Post a Comment