தோழர்களுக்கு வணக்கம்,
இலக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக எங்களின் சில வார்த்தை உங்கள் முன்.
சித்தாந்த போராட்டம் மார்க்சிய தத்துவ அரசியலை முன்வைத்து நடத்தப் பட வேண்டும்.
இலக்கு இணைய இதழ் மாதம் இருமுறை வெளிவருகிறது, அதுவும் பி.டி.எப் வடிவில் இணைத்தில் வெளியிடுகிறோம். இதற்கு இரு முக்கிய காரணம் வாசிக்க விவாதிக்க எங்கும் எளிதாக சென்றடையவும். இணையத்தில் எங்கேயும் பதிவிறக்கம் செய்து வாசிக்க முடியும் என்பதனால்தான் தோழர்களே. மேலும் எங்களின் இணைய தளமான https://namaduillakku.blogspot.com/ இந்த இணைப்பில் எங்களின் எழுத்துகளும் விவாதங்களும் எழுத்து வடிவில் உள்ளன தேவைப்படும் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ள எளிதாக ஏதுவாக இருக்கும் என்பதனால்தான்.
நாங்கள் எழுதத் தொடங்கி இதுவரை 68 இலக்கு இதழ் கொணர்துள்ளோம். 34 மாதங்களாக தொடர்ந்து எழுதியும் வெளியிட்டும் வருகிறோம். அதில் எங்கள் மீது நேரடியாக சில விமர்சனம் வந்தது அதனை எதிர்கொண்டோம். ஆனால் அண்மையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் எங்கள் மீது சுமத்துயுள்ள குற்றசாட்டை ஏற்க முடியாது அவை ஆதாரம் அற்ற தனிநபர் வெறுப்பிலிருந்தே வந்துள்ளது. ஏனெனில் யாரையும் வசைபாடும் பிற்போக்கு சமுகம் போல்; ஆண்டை அடிமையை எதையையும் சொல்லாம் என்ற மனோபாவத்தில்; ஆண் பெண்ணை என்ன குற்றம் சுமத்தியும் தன் புனிதத்தை காப்பற்றிக் கொள்ளலாம் என்ற பிற்போக்கு தனத்தை கடைபிடிக்கும் ஒரு அமைப்பு எவ்வளவு கீழ்தரமானது என்று புரிந்துக் கொள்ளவே உங்கள் முன் அவர்களின் எழுத்துகளை அப்படியே வைக்க நினைக்கிறோம்.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் என்ற அமைப்பு, இலக்கு இணையதளப் பத்திரிக்கையை தாக்கி ஒரு பரப்புரையை முகநூலில் செய்துள்ளது (28-02-2025 அன்று செய்துள்ளதே இந்த இணைப்பில் https://www.facebook.com/makkaljananayaga.ilaignarkazhagam).
அண்மையில் இவர்கள் கூட்டு நடவடிக்கையின் பெயரில் இணைந்து செயல்படுவோர் அவர்களால் நேற்றுவரை NGO என்றும் கலைப்புவாதிகள் என்றும் வர்ணிக்கப்பட்டகளிடமே ஏன்?
விடுதலைப்புலிகளை பாசிச சக்திகள் என்றும் இந்தியாவில் புரட்சி நடத்த பெரியார் மற்றும் அம்பேத்கர்தான் வழிகாட்டுகிறார்கள் என்றும் கலைப்புவாத கருத்துக்களை தொடர்ந்து பிரச்சாரம் செய்து அடையாள அரசியல்வாதிகளாக மாறிவிட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்தவரை, இவர்கள் நடத்திய மகளிர் தின விழாவில் அழைத்துப் பேச வைத்தார்கள். மேலும் இதுபோன்ற அடையாள அரசியல்வாதிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் விமர்சித்ததை பரிசீலித்து அவர்களது தவறுகளை மாற்றிக்கொள்ள தயார் இல்லாமல் விமர்சனம் வைத்த எங்கள் மீது அவதூறு செய்கிறார்கள். அவர்கள் செய்யும் அவதூறுகளுக்கு ஆதாரம் கொடுக்காமல் சொத்தையான காரணத்தையே மீண்டும் மீண்டும் வைக்கிறார்கள்.
பாவம் ம.ஜ.இ.க தான் எதைஎதையோ எழுத நேரமுள்ளது ஆனால் தன் முன்னோடிகளின் வரலாறு எழுத நேரமில்லை... என்ன சொல்ல இவர்களின் அரசியல் பிழைப்பை....
நேரடியான கேள்வி ம.ஜ.இ.க விடம்...
1). 1970 க்கு பிறகான உங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?
2).தியாக தோழர் சாரூவின் மறைவுக்கு பின்னர் தமிழக அமைப்பும் இன்றைய நிலைபாட்டிற்கும் தனிநபர்கள் மட்டுமே காரணமா? இத்தனை உடைவுக்கு சில தனிநபர்கள் மட்டுமே காரணமென்றால் தலைமையின் பணி என்ன?
3). அன்று புரட்சியாளர்களை ஆட்சியாளர்கள் கொன்று குவித்த பொழுது உங்களின் நிலைப்பாடு என்ன? அமைப்பை தற்காப்பதிலோ அல்லது இயக்கத்தை பாதுகாக்க அதனை அடுத்து புரட்சிக்காக ஒன்றிணைத்து தோழர்களை அரவணைக்க நீங்கள் செய்த பணி என்ன? சற்று பட்டியலிட முடியுமா?
4). சமுக ஏற்ற இறக்கமான நிலைக்கு அன்றைய புறநிலை எதார்த்ததை எப்படி புரிந்துக் கொண்டீர்கள்?
5). ஆண்டைகளின் மனோபாவம்தான் உங்களுடையவை ம.ஜ.இ.க வினரே! நீங்கள் தோல்வி அடைந்ததற்கு பல காரணம் அதனை புரிந்துக் கொள்ளாமல் சிலரை குற்றம் சுமத்துவதும் சிலர் பின்னர் ஓடுவதும் மார்க்சிய லெனினிய வகைபட்டது அல்ல.
6). அப்பு தொடங்கி பலர் தியாகிகளாயினர் அவர்களை ஆவணப்படுத்த நினைக்காத நீங்கள் அவர்களின் பெயரை உச்சரிக்க தவறுவதில்லை, நீங்கள் அவர்களின் அரசியலையோ வரலாற்றையோ எழுதியுள்ளீகளா?
ஆகையால் ம.ஜ.இ.க வின் போக்கு தன் தவறை மறைக்க அடுத்தவரை குற்றம் சுமத்தி தன் புனிதத்தை கட்டிக்காக்க நினைக்கும் ஆன்மீக வாதிகளின் அணுகுமுறையே இதில் எங்கேயும் மா-லெ தத்துவ கண்ணோட்டம் இல்லை.
மேலும் தமிழகத்தில் 1970 களுக்கு பின்னர் நக்சல்பாரியின் தொடர்ச்சியாக தோன்றிய அமைப்புகள் குறிப்பாக 1972 ல் தலைமை தோழர் சாரூவின் படுகொலைக்கு பின்னர் தோன்றிய அமைப்புகள் 1974ல் கூட்டகுழுவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி தோன்றிய அமைப்பான மேற்கு பிராந்திய குழு அதன் இன்றைய பல பிரிவுகள் தங்களை நக்சல்பாரி என்கின்றனர், உண்மையில் அன்று நக்சல்பாரியின் நிலைப்பாட்டை மறுதலித்து தோன்றியவை தானே இவைகள். மேலும் மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஏற்பதை விட இவர்கள் வெகுஜன வழி என்று கூறி அம்பேத்கர் பெரியார் கருத்துகளை ஏற்று அதற்கான பணியில் ஈடுபடும் இவர்கள் அப்பப்பொழுது மார்க்சியத்தை தொட்டுக் கொள்கின்றனர். நீங்கள் கண்கூடாக காணலாம் அதன் அமைப்புகளான TNML, SOCயின் பிளவுண்டுள்ள எல்லா பிரிவுகளுக்கும் இவை பொருத்தமாக உள்ளது. இன்னும் சிலவும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளனர். இதிலிருந்து வேறுபட்ட அரசியல் நிலைப்பாட்டை கொண்டவர்கள் ம.ஜ.இ.க வினர் என்ற கண்ணோட்டத்தில் நட்பு ரீதியாக அணுகினோம். அவர்களின் நகர்வு அடையாள அரசியல்வாதிகளை அரவணைத்தும் தங்களின் அணிகளில் கேள்விகேட்போரை முத்திரை குத்தும் போக்கு மார்க்சிய லெனினியம் அல்ல என்பதனை நேரடியாகவும் சில விவாதங்கள் மூலமும் தெரிவிக்க முயன்றதன் வெளிப்பாடே அவர்கள் நேர்மையாக சுயவிமர்சனமோ அல்லது விவாதிக்கவோ மறுத்து இந்த முத்திரை குத்தும் பணியை செய்துள்ளதிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனி இதுபோன்ற ஆதாரமற்ற குற்றசாட்டை வைக்கும் முன் ஆராய்ந்து விமர்சிக்கவும் ம.ஜ.இ.க வினரே தேவைப்பட்டால் உங்கள் மீதான விமர்சனம் தனியாக எழுதுகிறோம்.
இலக்கற்று பயணிப்போருக்கு இலக்கின் பணிவான வேண்டுகோள்... எங்களின் இலக்கு இவைதான் உங்களின் இலக்கு என்ன சொல்வீர்களா? ம.ஜ.இ.க நாங்கள் விமர்சனதிற்கு அஞ்சவில்லை அவதூறை ஏற்க வாய்ப்பில்லை. நேரதிற்கு தகுந்தார் போல் வேசம் போடாதே ம.ஜ.இ.க வே.
இலக்கு இணைய இதழின் எமதுநோக்கம்:- “புரட்சிகர ஜனநாயக சிந்தனையாளர் களுக்கான களமாக "இலக்கு" இணைய இதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மார்க்சிய லெனினிய வழியிலான தத்துவ, அரசியல் பொருளாதார, கலை, இலக்கிய மேம்பாட்டுக்கான புரிதலும் வளர்த்தெடுத்தலும் விவாதிப்பதற்கான தளமாக பயன்படுத்த நினைக்கிறோம். உங்களின் மேலான விவாதங்கள் மூலம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாதையில் பயணிக்க முயற்சிக்கலாம் என்பதே எமது நோக்கம்.இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வகண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடைமுறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மா- லெ-மா அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”
இங்குள்ள இடதுசாரிகள் கம்யூனிஸ்ட்டுகளின் நிலைபாடு ஒன்றல்ல பல ஆக அவர்கள் போய் சேர வேண்டிய இடத்தை அடையவே முடியாது. ஏனெனில் வெவ்வேறு பாதையில் பயணிப்போர் ஓரிடத்தில் இணைய முடியாது அல்லவா? அவர்களிடையே உள்ள பல்வேறு நிலைப்பாடு குழப்பங்களுக்கு அவர்களுக்கான மா-லெ தத்துவ போதமையே.
1). பாராளுமன்ற பங்கேற்பா எதிர்ப்பா?
2). குறுங்குழுவாதம் தீரா நோய்
3). திட்டப் பிரச்சினை பற்றி
4). பொதுவுடமையாளர்களின் பணி
5). அரசு பற்றி பிரச்சினையில் பாராமுகம்
6). தத்துவத்தில் மார்க்சியமல்லாத கலைப்புவாதம்
7). இந்திய சமூக ஆசியபாணி உற்பத்திமுறையில் உள்ளது
8). பொதுவுடமையாளர்கள் எதன் அடிப்படையில் ஒன்று படுவது?
9).தேசிய இனப்பிரச்சினை குறித்து
10). சாதி பிரச்சினை குறித்து
11).மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்று பயிற்சி பெறுதல்
இதுபோல் இந்திய சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை தனித்தனியாக பார்த்து சமூகத்தை அதன் இயக்கத்தை புரிந்துக் கொள்ளாததன் வெளிப்பாடே இவை .
1. நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை முதன்மையானதாகவும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதுதான் நமது முதன்மையான பணியாகும் என்று கருதுகிறோம். அதாவது இந்தியா பல தேசங்களைக் கொண்டது. ஆகவே இங்கே தேசியப்பிரச்சனைதான் முதன்மையானது என்று சிலர் கருதுகிறார்கள்.
2. இந்திய சமூகத்தில் மக்கள் சாதிகளாகப் பிளவுண்டு இருக்கிறார்கள். ஆகவே இங்கே சாதிப்பிரச்சனைதான் முதன்மையானது குறிப்பாக தலித்துகள் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள், இந்த தலித்துகளின் பிரச்சனைதான் முதன்மையானது என்றும் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதுதான் முதன்மையானது என்று சிலர் கருதுகிறார்கள்.
3. இந்திய சமூகம் புரட்சிக்கு தயார் ஆகாத ஆசிய உற்பத்திமுறையில் தேங்கி உள்ள சமூகம் ஆக இங்கு மார்க்சியத்தை மறுபரிசீலனை செய்ய சொல்வோர்.
இவ்வாறு வேறுபலப் பிரச்சனைகளை முதன்மையானது என்று வெவ்வேறு பிரிவினர் கருதி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இப்பிரச்சினைகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால் இதற்கான காரணங்களையும் அடிப்படைகளையும் சேர்த்தேப் பார்க்க வேண்டும்.
யானையைப் பார்த்த குருடர்களின் கதையை நாம் கேட்டிருப்போம். யானை உலக்கையைப் போல் உள்ளது என்று ஒருவரும், யானை முறம் போல் உள்ளது என்று மற்றொருவரும் சொல்வதாக அந்தக் கதை கூறும். ஆனால் யானை தும்பிக்கை கண், காது, உடம்பு வால் போன்ற பல பகுதிகைக் கொண்ட மொத்த உருவமே யானையாகும் என்பதை நாம் அறிவோம். அதுபோலவே இந்திய சமூகமானது இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும் ஆளுகைக்கு உட்பட்டும் வாழ்ந்துவருகின்ற மனிதக் கூட்டமாகும். இந்த சமூக கூட்டம் பல பிரச்சனைகளை சந்தித்துவருகிறது என்பதுதான் உண்மையாகும்.
அன்று வாளின் வலிமைகொண்டு அரசோச்சினான் மன்னன், ஆனால் இன்று பொருளாதாரம், அரசியல் மற்றும் இராணுவ வலிமைகொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களை அடக்கியாள்கிறார்கள். அவர்களால் பரப்படும் பிற்போக்கு கருத்துக்கள் மற்றும் கலாச்சாரத்தின் மூலம் மக்களின் ஒற்றுமையை குலைத்து பிளவுகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளின் சதிகளுக்கு துணைசெய்யும் விதமாக இங்குள்ள கம்யூனிஸ்டுகளும் தொடர்ந்து பிளவுண்டு சிறுசிறு குழக்களாகவே கரைந்துகொண்டு இருக்கிறார்கள். கம்யூனிச இயக்கத்திலுள்ள பிளவுவாதிகள் அவர்களது பிளவுவாதத்தை மூடிமறைக்கவே ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான கருத்தின் அடிப்படையில் பிளவுபட்டதாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை கற்று தேறுவோம்.
மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை மட்டுமே இன்றைய மக்கள் விடுதலைக்கான பாதை மற்றெல்லாம் சுரண்டும் வர்க்கதின் இருத்தலுக்கான பாதைதான்.
ஆக நமக்கான பாதை மார்க்சிய லெனினியம்தான்.
இலக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக
16-03-2025
No comments:
Post a Comment