நேற்று என்னுடைய நூலை வாசித்து பிழைத் திருத்தம் செய்யும் தோழர் கேட்டார்....
ஏன் தோழர் தமிழ் சமூகம் அறிய சங்க கால இலக்கியங்களை அதிகமாக கையாண்டுள்ளீர் இவை தேவைதான என்றார்? மேலும் அவரே நீங்கள் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராயும் பொழுது மார்க்சியத்தை பேசிக் கடக்கலாமே என்றார்!
அதற்கு நான்....
தோழர் இங்குள்ள பலர் ஏன் மார்க்சியவாதிகள் கூட இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற மனித சமூக விஞ்ஞானத்தை மார்க்ஸ் உலகிற்கு தெரிவித்தார் என்பதனையே அறியாத பொழுது சாதியானது தமிழ் சமூகத்தில் இல்லை அதனை வெளியில் இருந்து வந்த யாரோ புகுத்தி விட்டனர் என்பது எவ்வளவு அபத்தம் என்பதனை விளக்க சில கூடுதல் பங்கங்களை இங்கே ஒதுக்கியுள்ளேன் தோழர் என்றேன் ...
அதற்கு அவர் சரிங்க தோழர் என்றார்.
அந்த சில பகுதி உங்கள் முன்னே...
“தாயுரிமை தூக்கியயெறியப் பெற்றது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற முதல் தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சி சுதந்திரத்தை ஆண் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். ஆணின் காம இச்சைக்கு அடிமையானாள். கேவலம் குழந்தைகளைப் பெறும் சாதனமாக ஆகிவிட்டாள்(48)” என்ற எங்கெல்ஸின் கூற்றை அப்படியே நமது பண்டைச் சமுதாயத்திற்கும் பொருந்தியுள்ளமையைக் காணலாம்.
தமிழ் இலக்கியங்களிலும் பெண்ணுக்கு வற்புறுத்தப்பட்ட அளவுக்கு ஆணுக்கு கற்பு வற்புறுத்தப்படவில்லை எனலாம். மனைவி என்பவள் ஒருவனோடு மட்டுமே உறவுகொண்டு குடும்பத்திற்கு வாரிசான குழந்தையை அதிலும் ஆண்மகவைப் பெற்றுத் தரவேண்டும்; கணவன் என்பவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து யாரோடு வேண்டுமானாலும் இன்பம் நுகரஉரிமையுள்ளவன் என்ற ஆணாதிக்க மனோபாவமே கணவன்மாரைப் பரத்தையரை நாடிச் செல்ல வழிவகுத்தது எனலாம். நிலவுடமைச் சமுதாய அமைப்பும் பரவியிருந்த தன்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. வேட்டைக் கருவிகளும், ஆடு, மாடுகளும் தனிமனிதனின் உடமைகளாக இருந்த நிலையைத் தனியுடமைச் சமுதாயம் எனவும், வளம்மிக்க நிலங்களும், நிலப்பகுதிகளால் சூழப்பட்ட ஊர்களும் வலிமைமிக்க மருதநிலத் தலைவனின் ஆதிக்கத்தில் இருந்த நிலையை நிலவுடமைச் சமுதாயம் எனவும் கொள்ளலாம். மருதத்தில் தோன்றிய நிலவுடமைச் சமுதாயம் தனியுடமைச் சமுதாயத்தின் வளர்ந்த வடிவமான நிலவுடமை சமுதாய அமைப்பின் தொடக்க நிலையை மருதப் பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. குடும்பத்தில் ஆணே உயர்ந்தவன்; ஆண் குழந்தையே விரும்பத்தக்கது என்ற சிந்தனை நிலவுடமைச் சிந்தனை எனலாம்.
முதன் முதலாக வர்க்கங்களின் தோற்றத்தோடு அரசின் தோற்றத்தையும் ஒப்பிட்டு விளக்கியவர்கள் மார்க்சும், எங்கெல்சும் ஆவர். “வர்க்க பேதங்களைக் கட்டுப்பாட்டலும், தன் ஆதிக்கத்திலும் வைத்திருக்கவேண்டிய தேவையில் கருவான அரசு, வர்க்க மோதல்களில் செழுமை பெற்று உருவானது. பொருளாதார மேலாதிக்கமும் அதனால் அதிக வலிமையும் பெற்ற வகுப்பார் அரசியல் நிலையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி, உடமைகளையும் கருவிகளையும் கையகப்படுத்தி வர்க்கச்சுரண்டலைத் தோற்றுவித்தனர்.(44)” எனும் எங்கெல்சின் கருத்து வர்க்க மோதலால் அடக்குமுறை கருவியாக உருவான அரசின் தோற்றத்தை விளக்குகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் குறிஞ்சி நிலத்தில் அமைந்த வேட்டைச் சமூக அமைப்பிலோ, முல்லை நிலத்தில் ஏற்பட்ட கால்நடைச் சமூக அமைப்பிலோ அரசுகள் தோற்றம் பெறவில்லை. மாறாக இனக் குழுத் தலைவர்கள் பலர் தோன்றி மக்கள் மத்தியில் செல்வாக்கும் பெற்றுள்ளனர் ஆனால் மருத நிலத்தில் உருவான வேளாண் சமூக அமைப்பிலேதான் அரசுகள் தோன்றியிருக்க வேண்டும்.
மருதநில மக்களின் நிலைத்த வாழ்வும், நிலையான. குடியிருப்பு அமைப்பும், நிலங்களின் விளைச்சலில் கிடைத்த அதிகப் படியான உபரியும் அரசுகள் தோன்றக் காரணமாக இருக்கலாம், நகரங்கள் முதன்முதலில் தோன்றியது உழவுத் தொழிலில் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத் தொழிலும், நிலையான குடியிருப்பும், களர் பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணை செய்தன, நிலையாகக் குடியிருப்புதனால் உழவன் குடியானவன் எனம் பெயர் பெற்றான். “இல்வாழ்வான்” எனத் திருவள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப்பெற்றவனும் உழவனே” என்று அறுதியிட்டுரைக்கும் சங்கால இலக்கியங்கள் பொறுப்பும், ஊர்ப்பெருக்கமும், ஆட்சியமைப்பும் ஏற்பட்டன என பகிர்கின்றன. ஆதிக்க வளர்ச்சியும் அரசு உருவாக்கமும்வேளாண் சமூக அமைப்பிலும் அனைவருமே ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இல்லை. வலிமையும் படையும் கொண்ட ஒருசிலரே ஆதிக்கநிலை எய்திக்கொண்டிருக்க, ஏனையோர் உழைக்கும் வேளாண் குடிகளாகவே வாழ்ந்து வந்துள்ளமையைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.
தொல்காப்பியம் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்துப் பல சூத்திரங்களில் கூறுவது பலரும் அறிந்ததே. வர்ணங்களைப் பற்றிப் பேசுவதோடு இலக்கியத்தில் இடம்பெறும் மாந்தரிடையே வேறுபாடு கற்பித்துக் காட்டுகின்றது.
மார்கன், எங்கெல்ஸ், மார்க்ஸ் ஆகியோர் உற்பத்தி அடிப்படையும், வலிமை அடிப்படையுமே பண்டையக் குழுத் தலைமைக்கும், அரசு தலைமைக்கும் அடிப்படை என்று விளக்கினர். பொருளாதார ஆதிக்கம் மிக்ககுழு, அதனினும் குறைந்த குலக்குழுவைத் தனது வலிமையால் அடிமையாக்கிற்று என்பது அவர்தம் கோட்பாடு. தமிழ் நிலத்திலும் இக்கோட்பாடு பொருந்துவதைக் காண்கிறோம்.
அரசின் தலைவன் வேந்தன். பழங்காலத்தில் ஏர்த்தொழில் செய்தவரே போர்த்தொழிலையும் மேற்கொண்டனர். ஏரையும், போரையும் ஒருங்கே கொண்டிருந்த காரணத்தால் இவர்களிடமிருந்தே வேந்தர்கள் தோன்றியுள்ளனர். நாம் நினைவில் கொள்ள வேண்டும். குறிஞ்சி, முல்லை, நிலங்களில் வாழ்ந்து வந்த குலச்சமுதாயத் தலைவர்களை மருதநில வேந்தர்கள் வென்று தமது அரசை நிலைநிறுத்தினர். நால்வகைப் படைகளின் இறுமாந்த தோற்றத்தோடும், மருதநில விளைச்சலின் ஆற்றலோடும் வந்து மோதிய வேந்தர்களுக்கு முன் இயற்கைப் பொருளாதாரத்தையும் தம்மையும் மட்டுமே நம்பி வாழ்ந்த பாரி முதலான குறுநிலத் தலைவர்கள் நிற்க இயலாமல் அழிந்ததில் வியப்பில்லை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மருதநிலக் கடவுள் வேந்தனா இந்திரனா? வீரச் செயல்புரிந்த முன்னோர்களையும் அவர்களின் நடுகல்லையும் வணங்குவதே தமிழர்தம் கடவுள் கொள்கை. அதனடிப்படையில் மருதநில மக்கள் தம் குலத்து முன்னோடியான வேந்தனைக் கடவுளாக எண்ணி வழிபட்டனர் . அரசு ஒரு நிறுவன அமைப்பாதல் சங்ககாலத் தமிழகத்தில்ஓயாது போர், படையெடுப்பு, ஊர் அழிப்பு அரசுரிமைச் சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே மெல்லமெல்ல அரசுகள் தோன்றின. இப்படித் தோன்றிய அரசுகள் காலப்போக்கில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டு விரிவுப்படுத்தத் தொடங்கின. குறுநில மன்னர்களும் ஆட்சிபுரிந்த வரலாற்றை மருதப் பாடல்களால் அறிகிறோம். இவர்களை குலக்குழுச் சமுதாயத் தலைவர்களின் எச்சங்களாகக் கொள்ளலாம். ஏனைய சமூகங்களைக் காட்டிலும் மருதநிலத்தில் அமைந்த வேளாண் சமூகஅமைப்பில் அரசு தோன்றி நிலைபெற்று விளங்குவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்த காரணத்தால் நாகரிக அமைப்புடைய இச்சமூகத்தில் மூவேந்தர்களின் பேரரசுகள் தோன்றின. அவை ஒன்றோடொன்று மாறுபட்டு மோதிக்கொண்டன. ஆங்காங்கே பல சிற்றரசர்களும், ஆட்சிபுரிந்தனர் அதில் மக்கள் பிரிவினர் வாழ்க்கையை ஊகித்தறிவது என்பது வரலாற்று ஆய்வுகளில் தெளிவுப் படுதப்பட்டுள்ளன.நம்மிடையே இன்று பேசு பொருளாக உள்ள சாதி மதம் தோற்றம் பற்றிய கருத்துகள் சமூக உருவாக்கத்தில் வளர்ச்சி போக்கின் ஓர் அங்கமே. அவை எல்லா உலக சமூக அமைப்பிலும் பொதுவானவையே சில சமூகங்களில் தோன்றி வேகமாக மறைந்திருக்கலாம் அல்லது அதன் தேவை ஒட்டி வாழ்ந்துக் கொண்டும் இருக்கலாம். ஆகையால் நாம் சமூக வளர்ச்சி விதிகளை புரிந்துக் கொண்டால் இந்த சாதியானது எப்படி தோன்றியது ஏன் இன்றும் நம் மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்துக் கொள்ளும் ஓர் முயற்சிதான் என் இந்த தேடல்.இந்தியாவில் காணப்படும் சாதி அமைப்பு பற்றி ஒரு தெளிவான கருத்துருவாக்கம்.
சாதியை பற்றி பல்வேறு ஆதாரங்களை கொண்டு நாம் தேடும் பொழுது சாதியின் ஆதார தோற்றம் அதன் வளர்ச்சி மிகத் தெளிவாக வேளாண்மை உற்பத்தியில் மக்கள் சமூகம் ஈடுபடும் பொழுது தோன்றியதே. இந்த உழைப்பு பிரிவினை உலகிற்கே பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இன்றும் ஏன் உயிர்புடன் உள்ளது என்பதே நம் முன் உள்ள கேள்வி.அவை அரசின் அதிகார தேவைகாக உள்ளது.
இதற்கு பதில் ஒரு சாதரண நடைமுறையோடு பார்ப்போம். நம் நாட்டின் முதன்மை குடிமக்களாக கருதும் சனாதிபதி சாதியின் காரணமாய் கோயில் சன்நிதியில் அனுமதிக்க படுவதில்லை என்ற பெரும் சர்ச்சை அடிக்கடி பார்க்கிறோம். அவை ஏன் எப்படி?
இந்திய அரசதிகாரத்தில் பங்குபெரும் ஒவ்வொருவரும் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள ‘சட்டதிட்டங்களை’ ஏற்க உறுதி ஏற்றுதான் ஆட்சி அதிகாரத்தில் செயல்படுகின்றனர். அதனால் இந்தியாவை ஆளுமை செய்யும் ஒவ்வொரு நிறுவனதிற்கும் அதற்கான சட்டதிட்டங்கள் உள்ளன. அதனை ஏற்று நடக்க வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் பணியாகும். அதன்படிதான் நீதிமன்றத்தின் செயலை அரசாங்கங்கள் தலையிடாது. கோயில் நிர்வாகத்தின் செயலில் அரசிற்கு பணியில்லை. கலாச்சார அங்கமான எல்லா நச்சு விச கிருமிகளையும் பிற்போக்கையும் மத நிறுவனம் வளர்த்து மக்கள் மூளையில் ஏற்றும் வேலையை காலகாலமாக செய்கிறது. அந்த நிறுவனத்தின் செயலில் எந்த ஆட்சியில் உள்ளவர்களும் தலையிடுவதில். மதத்தின் பெயரில் நடைபெறும் மக்களின் வாழ்வியலுக்கு பயனற்ற பிற்போக்கு பித்தலாட்டங்களும் தொடர்கதையாக உள்ளது. அதனை ஆளும் வர்க்கம் ஊற்றி வளர்க்கும் பிற்போக்கு பணியை திறம்பட செய்கிறது அதில் ஒன்றுதான் மத நிருவனங்களில் ஆட்சியாளர்கள் தலையிடுதலில்லை. ஆகையால் அதன் தன்னாட்சியின் வெளிபாடுதான் சனாதிபதியாக இருந்தாலும் சாதியின் அடிப்படையில் ஒடுக்கபட்ட பிரிவை சார்ந்தவராக இருப்பின் கோயிலில் நுழைவதை தடுக்கின்றனர். இதற்கான சட்டமுறை என்பது ஆளும் வர்க்க தேவைக்கானதே. அவை அடக்குமுறைக்கானதே அதன் ஒரு வடிவம்தான் இவை. இந்த அரசுதான் இந்த வடிவத்தை காக்கிறது.
இவை ஏற்றதாழ்வை கற்பித்து சாதிய மனோபவத்தை மக்கள் மத்தியில் துளிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த அரசையும் மத நிறுவனங்களையும் இல்லாதொழிக்க மற்றதெல்லாம் காணமல் போகும் கால போக்கில்… அதற்கான முதன்மையான பணி இந்த எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறைக்கும் காரணமான அரசமைப்பை இந்த அடக்குமுறை ஒடுக்குமுறையில்லா வர்க்க அரசை உருவாக்க வேண்டும். இங்குள்ள ஏற்றதாழ்வான சமூக அமைப்பில் உள்ள சாதியின் தோற்றம் ஒருவகையில் உழைப்பு சுரண்டலிலிருந்தே தோன்றியது. அதன் சமூக இருப்பானது அதிகாரம் படைத்த கூட்டம் ஏதுமற்ற சாதரண மக்களின் உழைப்பை சுரண்ட எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க மதசாயம். எல்லாம் வர்க்க சமூக ஒடுக்குமுறையின் வடிவங்களே. இந்த வர்க்க சமூகத்தை மாற்றி அமைக்காமல் தனியாக சாதி ஒழிப்பது என்பது சாதியின் விரிந்த பரப்பை புரிந்துக் கொள்ளாமையாக இருக்கும்.
இன்னும் பின்னர்
No comments:
Post a Comment