அதானியும் ஆளும் வர்க்க மோசடிகளும்.

 தோழர்களே நான் இலக்கு 17 இதழை முடிக்க எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த செய்திதான் "அதானியின் மோசடி" பத்திரிக்கையில் எழுத இடமிருக்காது எனவே இணைய தளத்தில் எழுத முயற்சித்துள்ளேன்.

 ஆதாரம்:- https://hindenburgresearch.com/adani/

அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கௌதம் அதானி, கடந்த 3 ஆண்டுகளில் $100 பில்லியனுக்கும் அதிகமாகச் சேர்த்ததன் மூலம், குழுமத்தின் 7முக்கிய பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலை உயர்வு மூலம் சுமார் $120 பில்லியன் நிகர மதிப்பைக் குவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் 819%.

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று, ஒரே ஒரு அறிக்கையில் மொத்தமும் காலி. இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது அதானி குழுமம். ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையினால் அதானி குழுமத்தின் மீது முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

அதானி "கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமம் தன் பங்குகளை பொதுவெளியில் விற்பனை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது.

மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற கடல்கடந்த வரிப் புகலிடங்களில் அதானி குழுமத்துக்கு உரிமையாக உள்ள நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

அதானி நிறுவனங்களுக்கு "கணிசமான கடன்" இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16, 2022 அன்று அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் அதன் 52 வார உயர்வான ரூ.4,238.55 லெவலில் இருந்து தற்போது 52 சதவீதம் சரிந்துள்ளன. அதேபோல், இன்றைய வர்த்தகத்தில் அதானி கிரீன் பங்குகள் 20 சதவீதம் சரிந்தது, அதன் 52 வார உயர்விலிருந்து 51 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பங்கு கடந்த ஏப்ரல் 19 2022-ல் ரூ.3,048 ஆக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில், ஃபிளாக்ஷிப் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்தது, டிசம்பர் 21, 2022 அன்று செய்யப்பட்ட அதன் 52 வார அதிகபட்சமான ரூ.4,189.55 இலிருந்து 27 சதவீதத்தை இழந்துள்ளது. மேலும்,அதானி வில்மர் (42 சதவீதம் சரிவு) மற்றும் அதானி போர்ட்ஸ் (38.65 சதவீதம் சரிவு) ஆகியவையும் 52 வார உயர்விலிருந்து சரிந்துள்ளன.

இதற்கிடையில், கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் அதானி Ports & SEZ இன் மதிப்பீட்டை வாங்கலாம் என மதிப்பிட்டுள்ளது. சாதகமான அபாயத்தை காரணம் காட்டி கோடக் நிறுவனம் அதானி குழுமப் பங்குக்கான இலக்கு விலையை ரூ.920ல் இருந்து ரூ.860க்கு குறைத்துள்ளது.

2016-17 நிதியாண்டில் ரூ. 1.08 இலட்சம் கோடியும், 2017-18 நிதியாண்டில் ரூ. 1.61 இலட்சம் கோடியும், 2018-19 நிதியாண்டில் 2.36 இலட்சம் கோடியும், 2019-20 நிதியாண்டில் 2.34 இலட்சம் கோடியும் வாராக்கடன்களை தள்ளுபடி செய்யப்படுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது. கடந்த மார்ச் 2021-ல் முடிந்த நிதியாண்டில் மட்டும் 2.03 இலட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வாராக்கடனில் சுமார் 75% கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். 2020-21 நிதியாண்டில் மட்டும், ஸ்டேட் வங்கியால் தலைமை தாங்கப்படும் ஐந்து வங்கிகள் மட்டுமே, ரூ. 89 ,686 கோடி ரூபாய் வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருக்க்கின்றன. https://indianexpress.com/article/business/banking-and-finance/banks-write-off-rs-2-02-lakh-cr-in-fy21-7669513/ பொதுத் துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் மட்டும் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்திருக்கும் வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனால் ஏற்படும் தமது நட்டத்தைச் சமாளிப்பதற்குப் பொதுமக்களைத்தான் பலியிடுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் வங்கிகளுக்குப் பணங்காய்ச்சி மரமாகவே மாறிவிட்டது. சேவைக் கட்டணங்களின் மதிப்பு 3,324 கோடி ரூபாய். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தன்னிடமுள்ள சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைத்திராத வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் 2017 – 18 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 1,771 கோடி ரூபாயைத் தண்டத் தொகையாக வசூலித்திருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக இமாலய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.

தொடர்பில்லாத வணிகம் 

இந்த நிலையில் கடன் சுமை, கடன் நிலுவைத் தொகைகள், அரசு, சமூக ரீதியான காரணங்கள், அதானி குழுமத்தில் விரிவாக்க பணிகள் போன்றவற்றால் அந்த நிறுவனத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்று கடன் ஆராய்ச்சி நிறுவனம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. தொடர்பில்லாத வணிகங்களில் அதானி குழுமம் கால்பதிப்பதும் இதற்கான காரணம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அதிக கடன் 

பிட்ச் குழுமத்தின் கிரெட் சைஸ் என்ற கடன் கடன் ஆராய்ச்சி குழுமம் வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கை, மிக அதிக கடன் சுமை என்ற தலைப்புடன் வெளியாகி இருக்கிறது. அதானி குழுமத்தின் நிதி நிலை தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்துள்ள இந்த நிறுவனம், அதானி குழுமம் மிகப்பெரிய அளவில் கடன் பெற்று தொழில் விரிவாக்கம் செய்வதை எச்சரிக்கையும் அனுக வேண்டும் என்று கூறி இருக்கிறது.

அதானி குழுமம் பெருமளவிலான தொழில்களுக்கு வங்கிகளிடம் அதிகளவில் கடன் வாங்கியே முதலீடு செய்வதாகவும், இதனால் அந்நிய செலாவணி மற்றும் கடன் தொகையை திருப்பி செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கணித்துள்ளது. அதிக கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது மிகப்பெரிய கடன் பொறியில் சிக்குவதற்கான அபாயம் உள்ளதாக எச்சரித்து இருக்கிறது. இந்த அறிக்கை வெளியான பிறகு அதாரி பவர், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிவடைய தொடங்கின. கடந்த ஆகஸ்ட் மாத செய்தி இது(2022). 

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/debts-are-too-high-red-alert-for-adani-group-of-companies/articlecontent-pf748484-472556.html

பங்குச்சந்தையில் தில்லுமுல்லு அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: அமெரிக்க நிறுவனம் ஆதாரத்துடன் அறிக்கை; செபி, ஆர்பிஐ விசாரிக்க காங். வலியுறுத்தல்

2023-01-28@ 00:29:53

புதுடெல்லி: அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகளை செய்து, ரூ.17.80 லட்சம் கோடி வரை முறைகேடாக லாபம் சம்பாதித்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஆதாரங்களுடன் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக செபி, ரிசர்வ் வங்கி உரிய விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது. தற்போது அந்த நிறுவனம் கடந்த 24ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், உலகின் 4வது பெரும் பணக்காரரும் ஆசியாவின் நம்பர்-1 பணக்காரருமான அதானியின் அதானி குழும நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலாக்கியது. அந்த அறிக்கையில், கடந்த 2 ஆண்டுகளாக நடத்திய ஆய்வில், அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்து ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது.  ‘அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த 3 ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற தாராள வரிச்சலுகை உள்ள நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கியுள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீஷியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்றதன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன’ என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. அதோடு, அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அதானி குழுமம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது: அதானி குழுமத்திற்கும், ஒன்றிய ஆளும் அரசுக்கும் இடையேயான நெருக்கமான உறவை நாங்கள் முழுவதும் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், பொறுப்பான எதிர்க்கட்சி என்ற முறையில் இந்த விவகாரத்தில், பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும். கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பாஜ அரசு தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை அரசின் எஸ்பிஐ வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக இதுபோன்ற தனியார் ஆய்வு குறித்து அரசியல் கட்சிகள் விசாரணையை கோருவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அவருக்கு தொழிலதிபர் அதானி மிகுந்த நெருக்கமானவராக இருந்து வருவதால் இந்த விவகாரத்தில் விசாரணையை நாங்கள் கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கிடையே, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் சரிவதோடு, பிற நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பங்குச்சந்தையே ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தேசியக் கொடியுடன் சிஎப்ஓ பேட்டி
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை மறுத்து அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி (சிஎப்ஓ) ஜுகேசிந்தர் சிங் பேட்டி அளித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் பின்னால் தேசியக் கொடி இடம் பெற்றுள்ளது. இதனை சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ‘அவர் என்ன அமைச்சரா அல்லது அரசாங்க பிரதிநிதியா? மோசடி குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் போது எதற்காக தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்? இந்த மாதிரி தேசியக் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கிறதா?’ என பலவாறாக மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* 2வது நாளில் ரூ.4.17 லட்சம் கோடி காலி
ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் 2வது நாளாக நேற்றும் கடும் சரிவைக் கண்டன. கடந்த 2 நாளில் அதிகபட்சமாக அதானி டோட்டல் காஸ் நிறுவனம் 20 சதவீத சரிவை கண்டது. இந்த ஒரு நிறுவனத்தின் நஷ்டம் மட்டுமே ரூ.1.04 லட்சம் கோடி. மொத்தமாக 2 நாளில் அதானி குழுமத்திற்கு ரூ.4.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல, இந்த விவகாரத்தால் இந்திய பங்குச்சந்தையும் நேற்று ஆட்டம் கண்டது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 800 புள்ளிகள் சரிந்தது. சென்செஸ் 874 புள்ளிகள் சரிந்தன. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10.73 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

* வழக்கை சந்திக்க தயார்
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும், தங்களது நிறுவன வளர்ச்சியை கெடுக்கும் விதமாக ஹிண்டன்பர்க் நிறுவனம் போலியாக  அறிக்கை வெளியிட்டு, வீழ்ச்சியில்  பலனடைய பார்ப்பதாக குற்றம்சாட்டியது. மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அதானி குழுமம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு பதிலடியாக, ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், ‘நாங்கள் எங்கள் நிலையில் இருந்து பின் வாங்க மாட்டோம். முதலில் வெளியிட்ட எங்கள் அறிக்கையில் அதானி குழுமத்திடம் 88  கேள்விகளை கேட்டிருந்தோம். ஆனால் 36 மணி நேரம் ஆன பிறகு அதில் ஒன்றிற்கு கூட இதுவரையில் பதிலளிக்கவில்லை. எங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதை வரவேற்கிறோம். வழக்கை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளது.Ads by

ADVERTISEMENT
Ads by

இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, கணக்கு மோசடிகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பின்  பங்குசந்தையில் சரிவு படுமோசமாக இருந்தது.

வினவு கூறுகிறது... அதானியின் வளர்ச்சி பற்றி

டந்த 2020-21-ல் (ஒரு வருடத்தில்) மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரத்து தொள்ளாயிரம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்தியா இன்போலைன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் அதானி ஆசியாவிலேயே இரண்டாவது  பெரும் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார்.
2020-21-க்கு முன்பு வரை அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு, ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி மட்டுமே; கடந்த 2020-21 ஒரே நிதியாண்டில் உயர்ந்த ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடியை சேர்த்தால் தற்போதைய அவருடைய குழுமத்தின் சொத்து மதிப்பானது ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரம் கோடியாக உயர்ந்து, இந்தியா மட்டுமன்றி ஆசியாவின் கோடீஸ்வரகளின் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஒரே வருடத்தில் 261% வருமானம் உயர்ந்துள்ளது.
அதானி குடும்பத்தின் தினசரி வருவாய் ரூ 1002 கோடி என்ற வகையில் ஒரு ஆண்டில் அக்குடும்பத்தின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது.
இது எப்படி சாத்தியப்பட்டது? கடந்த ஒரு வருடத்தில் அதானி கிரீன் எனர்ஜியின் பங்கு மதிப்பு 551%, அதானி எண்டர்பிரைசஸின் பங்கு மதிப்பு 103 %, அதானி டிரான்ஸ்மிசனின் பங்கு மதிப்பு 38 %, அதானி பவரின் பங்கு மதிப்பு 38 % அதிகரித்தன் மூலம் இந்த அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளதாக அப்பட்டியல் தெரிவிக்கிறது. இது பங்குகளின் மதிப்பை பல்வேறு பங்குச் சந்தை தில்லுமுல்லுகள் மூலமும், ஊடக கருத்துருவாக்கங்கள் மூலமும் ஊதிப் பெருக்கிக் காட்டியதன் மூலமும் கிடைக்கப்பெற்ற மதிப்பு உயர்வு ஆகும்.
பளபளப்பான எண்ணெய் காகிதத்தை நோக்கி ஈர்க்கப்படும் ஈக்களைப் போல, இந்தப் பங்குகளின் மதிப்பை நம்பி பணம் போட்டிருக்கும் ஆயிரக்கணக்கான நடுத்தரவர்க்கத்தின் பணம் தான் அதானியின் கல்லாவை நிரப்பியிருக்கிறது. மேலும் மோடி அரசின் ஆதரவோடு வரி ஏய்ப்பு, அந்திய செலாவணி மோசடி, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாமல் வாராக்கடனாக்கியது என பல திருட்டுத்தனங்களும் அடங்கும்.
மேலும், அதானியின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களிடமிருந்து குறைவான கூலியின் மூலம் சுரண்டப்பட்ட உபரி மதிப்பும் இதில் அடங்கும். இந்த அபரிமிதமான வளர்ச்சியானது, அதானி குடும்பத்தை சீனாவைச் சேர்ந்த தண்ணீர் பாட்டில் உற்பத்தியாளரை பின்னுக்கு தள்ளி ஆசிய அளவிலான பெரும் பணக்காரர்கள்  வரிசையில் 2-வது இடத்திற்கு உயர்த்தி உள்ளது.
போதாக்குறைக்கு இனிவரப்போகும் தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் கீழும், ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் விமானம், துறைமுகம், எரிசக்தி ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மூலமும், கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துக் கொள்ள அதானி கும்பலுக்கு வழிவகுத்து தரப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்ததாக ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க பங்கு வர்த்தக ஆலோசனை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனம் மீது வழக்கு தொடருவதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக அதானி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் பதிவுசெய்துள்ள நிறுவனங்களின் நிதி மோசடி குறித்த தடயங்களை ஆய்வு செய்து அந்நிறுவனங்களின் ஏமாற்று வேலைகளை அறிக்கையாக வெளியிட்டு அவர்களுக்கு சவால் விடுவதை ஹிண்டன்பெர்க் என்ற அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது.

2017 ம் ஆண்டு நதன் ஆண்டர்சனால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை சுமார் 16 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டுவந்துள்ளது.

2020 ம் ஆண்டு மின்சார வாகனங்கள் தயாரிக்கும் ‘நிகோலா’  நிறுவனத்தின் மீது இவர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மாதங்களில் இவர்கள் கூறியது போல் அந்த நிறுவனத்தின் பங்கு அதளபாதாளத்திற்குச் சென்று பரபரப்பை உண்டாக்கியதை அடுத்து ஹிண்டன்பெர்க் நிறுவன கணிப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியது.

பங்கு வர்த்தகத்தில் ஷார்ட் செல்லர் (Short seller) என்று சொல்லப்படும் குறுகியகால முதலீடு மூலம் இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் அதன்மூலம் கிடைக்கும் கொள்ளை லாபங்களை ஷெல் கம்பெனிகள் எனும் இணை / துணை நிறுவனங்கள் மூலம் தங்கள் சொந்த கணக்கிற்கு மாற்றி உல்லாச உலகம் தங்களுக்கு எப்போதும் சொந்தம் என்பது போல் இந்த நிறுவனங்களும் அதன் நிறுவனர்களும் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டுகிறது.

சந்தையில் மதிப்பு குறைந்த அல்லது குறைந்துவரும் நிறுவனங்களின் பங்குகளை குறைவான விலைக்கு வாங்கும் இந்த பெரு நிறுவனங்கள் பிறகு தங்கள் சொந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் பங்கு மதிப்பையும் காட்டி புதிய முதலீடுகளுக்காக, சிறு குறு நிறுவனங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு பெரும்தொகையை வங்கிகளில் கடனாகப் பெற்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை பேரழிவை ஏற்படுத்துவதாகக் கூறுகிறது.

ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்ற பெருநிறுவனங்கள்  இதைக் கொண்டு சந்தையில் மதிப்பு குறைந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அந்த அந்நிய நிறுவனத்தின் பங்குகள் உயர்வு பெரும் நேரத்தில் தாங்கள் வைத்திருக்கும் பங்குகளை விற்றுவிட்டு பணமாக்குகின்றன.

இதனைத் தொடர்ந்து அந்நிய நிறுவனத்தை இவர்கள் வாங்கப்போவதில்லை என்பது தெரியவந்ததும் மீண்டும் அதன் பங்குகள் விலை சரியத் தொடங்கும். அப்போது குறைந்த விலையில் மீண்டும் பங்குகளை வாங்கி தனக்குரிய பங்குகளை அப்படியே தக்கவைத்துக் கொண்டு மோசடியாக லாபம் ஈட்டுகின்றன.

தவிர, இந்த லாபத்தை காட்டி தங்கள் சொந்த நிறுவன பங்குகளின்  சந்தை மதிப்பை இந்த பெருநிறுவனங்கள் அதிகரித்துக் காட்டி கடனாக பெற்ற பணத்தை வேறு நிறுவனங்களில் ‘பார்க்’ செய்கின்றன.

ஒரு குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஷார்ட் செல்லிங் வர்த்தக சுழற்சி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியாக லாபம் ஈட்டுகின்றன இந்த பெருநிறுவனங்கள்.

மேலும், இந்த பணத்தை பொருளாதார சுதந்திரம் என்ற பெயரில் வரிச் சலுகைகளின் சொர்கபூமியாக திகழும் நாடுகளில் உள்ள தங்கள் ஷெல் கம்பெனிகள் மூலம் தங்கள் சொந்த கணக்கில் அடைகாத்து வருகின்றன.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிட்காயின் எனப்படும் க்ரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் தனது பணத்தை முதலீடு செய்துள்ள போதும் கடந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிந்து கின்னஸ் சாதனை படைத்தது.

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் வாங்கப்போவதாக முதலில் தகவல் வெளியான நிலையில் இது ஷார்ட் செல்லிங் முயற்சி என்று ஹிண்டன்பெர்க் முதலில் சவால் விட்டது.

பின்னர், ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே வழக்கு வாய்தா என்று சென்றதை அடுத்து இதனை லாங் செல்லிங் (long-selling) எனும் மஸ்க்-கின் நீண்டகால திட்டம் என்று சவால்விட்டுள்ளது.

இதனை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள பங்குகளை எலான் மஸ்க் எப்போது வேண்டுமானாலும் விற்க நேரிடலாம் என்ற சூழல் எழுந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிந்து அவரது பெயர் கின்னஸ் புத்தகம் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் நிதி முதலீடுகள் குறித்த தடயங்களை இரண்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துவந்ததாகவும்  அந்நிறுவனம் ஷார்ட் செல்லிங் பங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், இது வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடி என்று உறுதியாக நம்புவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் நேற்று ஒரேநாளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பலமடங்கு வீழ்ச்சி அடைந்தது இதனால் அதானி நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மொரிசியஸ், ஐக்கிய அரபு நாடுகள், கரிபியன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 38 ஷெல் கம்பெனிகள் அதானி குழும நிறுவனங்களுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டுள்ள ஹிண்டன்பெர்க்.

இந்த நிறுவனங்களை அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள அவரது உறவினர்கள் நிர்வகித்து வருவதாகவும் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் வெட்ககேடான மோசடியில் ஈடுபட்டுள்ளது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் இந்திய வங்கித்துறை நிறுவனங்கள் பலவும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் நிலையில் நேற்று ஒரேநாளில் அதானி நிறுவனத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பங்குச் சந்தை ஆட்டம் கண்டுள்ளது.

இதனை சமாளிக்க அதானி நிறுவனம் ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது வழக்கு தொடர அமெரிக்க மற்றும் இந்திய சட்டங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளது.

அப்படி வழக்கு தொடர்ந்து அதானி நிறுவனத்தின் தில்லுமுல்லு நீதிமன்றத்தில் வெட்டவெளிச்சமாக்கப்படும் பட்சத்தில் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஆட்டம் காண்பதுடன் சாமானிய மக்களையும் பாதிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக பங்குச் சந்தை மற்றும் நிதி முதலீட்டு ஆலோசகர்கள் கூறிவருகின்றனர்.

இருந்தபோதும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை அதானி நிறுவனம் மட்டுமன்றி இந்திய பங்குச் சந்தையை நிர்வகிக்கும் செபி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும்சவாலாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதாரம் https://patrikai.com/hindenburg-research-will-adani-go-to-court-or-collapse/

அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர்களாக குறைந்தது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 7 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.  இந்தியப் பங்குச்சந்தைகளில் கடந்த புதன்கிழமையும் இன்றும் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.12லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, கணக்கு மோசடிகள் குறித்து அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பின்  பங்குசந்தையில் சரிவு படுமோசமாக இருந்தது.

தீகதிர் செய்தியே

தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு கொள்ளையடிக்கிறார் அதானி!

‘413 பக்க பதில்கள்’ நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகின்றன...

இந்தியாவின் பெரும்பணக்காரரான கவுதம் அதானி, தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு இந்திய நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருப்பதாகவும், தன்மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களைத் திசைத்திருப்ப ‘தேசியவாதம்’ என்ற கதை கட்டும் வேலையில் இறங்கியிருப்பதாகவும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் கடுமையாகச் சாடியுள்ளது. கொரோனாவுக்கு பிந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழும நிறுவனங்களின் சொத்து மதிப்பு 819 சதவிகிதம் அதிகரித்த நிலையில், இதுதொடர்பாக ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில், கடந்த ஜனவரி 25 அன்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. அதில், “அதானி குழுமத்தின் வளர்ச்சி உண்மையானது அல்ல. அதானி குழும நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. முதலீட்டாளர்களையும் ஏமாற்றி வருகிறது. அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியிருந்தது.

காணாமல் போன 4 லட்சம் கோடி

இந்த அறிக்கை, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதானி குழும பங்கு மதிப்பு, இரண்டே நாட்களில் ரூ. 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி அளவிற்கு காணாமல் போனது. உலகப் பணக்காரர்கள் வரிசையில், கடந்த ஜனவரி 25 வரை 3-ஆவது இடத்தில் இருந்த கவுதம் அதானி, ஜனவரி 27 அன்று 7-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அவரின் சொத்து மதிப்பு 96.5 பில்லியன் டாலர்களாக சரிந்தது. இந்நிலையில், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனத்திற்கு, அதானி குழுமம் 413 பக்க பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், “ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள், அதன் வளர்ச்சிகள் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கூறியிருந்தது. இதற்கு ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனமும் தற்போது வலுவான பதிலடியை அளித்துள்ளது. “செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்ப முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது.

 

‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ அளித்துள்ள பதிலடி

 

ஜனவரி 24 அன்று, உலகின் அப்போதைய மூன்றாவது பெரிய பணக்காரரால் நடத்தப் படும் இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான அதானி குழுமத்தில் மோசடி நடந்ததாகச் சந்தே கிக்கப்படும் பல சிக்கல்களை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம். அதற்கு அதானி ‘413 பக்க பதில்’ ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளார். அதில், “பங்குப் பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை நாங்கள் அப்பட்டமாக மீறியுள்ளோம்” என்று அதானி கூறி யுள்ளார். ஆனால், எந்த வகையில், நாங்கள் சட்டங்  களை மீறியிருக்கிறோம் என்று குறிப்பிட்டு ஒன்றை யும் சொல்லவில்லை.  எங்களின் அறிக்கை, “இந்தியாவின் மீது நடத்தப்  பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்” என்று அதானி கூறியிருக்கிறார். இந்த கடுமையான குற்றச்  சாட்டை நாங்கள் மறுக்கிறோம். இதன்மூலம் தன்மீதான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்ப அதானி முயல்கிறார். அதானி குழுமம் அதனுடைய வானளாவிய வளர்ச்சி மற்றும் அதன் தலைவர் கவுதம் அதானி யின் செல்வ வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சியாக  காட்ட முயல்கிறது. அதற்காக ஒரு தேசியவாத கதை யை கட்டுகிறது. நாங்கள் அதனை ஒப்புக்கொள்ள மாட்டோம்.  தெளிவாகச் சொல்வதானால், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்  காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில், இந்திய தேசிய கொடியை தன்மீது போர்த்திக் கொண்டு, இந்திய தேசத்தை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால், இந்தியாவின் வளமான எதிர்காலம் தடுக்கப்படுகிறது என்பதையும் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

மோசடி மோசடிதான்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவ ரால் மோசடி செய்யப்பட்டாலும், மோசடி என்பது மோசடிதான் என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தின் ‘413 பக்க’ பதிலில், எங்கள் அறிக்கைக்கு பதிலளிக்கும் விஷயங்கள், சுமார் 30 பக்கங்களில் மட்டுமே உள்ளன. 330 பக்கங்களில் நீதிமன்றப் பதிவுகள், 53 பக்கங்களில் உயர்மட்ட நிதி நிலை, பொதுத் தகவல்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மற்றும் பாதுகாப்பான காய்கறிகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதம் போன்ற எங்க ளின் கேள்விகளுக்கு சம்பந்தமே இல்லாத விவ ரங்களே இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அதானி குழும பதிலின் பக்கம் 24-ஐ காணலாம். எங்களின் 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குறிப்பாக பதிலளிக்கத் தவறியுள்ளார். பதில ளித்த கேள்விகளிலும், எங்களின் குற்றச்சாட்டுகளிலி ருந்து விலகி ஓடுவதற்கே முயன்றுள்ளார். இன்னும் சில கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களில், எங்களின் குற்றச்சாட்டை அவரே மறைமுகமாக உறுதிப்படுத்தியிருக்கிறார்.

‘ஷெல்’ நிறுவனங்கள்

கடல்சார் நிறுவனங்களுடனான பணப் பரிவர்த்த னைகள் தொடர்பாக நாங்கள் சந்தேகம் எழுப்பி யிருந்தோம். அந்த கேள்வி அதானி குழுமத்தால் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதானி குழும மானது, அதன் தலைவரின் (கவுதம் அதானியின்) சகோதரர் வினோத் அதானி மற்றும் அவரது கடல் கடந்த ‘ஷெல்’ நிறுவனங்களுடன் (Offshore Shell  Entities- உற்பத்தி ஏதும் நடக்காத வெறும் லெட்டர்  பேடு கம்பெனிகள்) சந்தேகத்திற்குரிய வகையில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களில் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக எங்கள் அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது. இந்த பரிவர்த்த னைகள் பங்கு மற்றும் கணக்கியல் கையாளுதல் பற்றிய தீவிரமான குற்றச்சாட்டை முன்வைப்பன வாகும். கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத்  அதானியால் வழிநடத்தப்படும் அல்லது அவருடன் தொடர்புடைய வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்களின் (இந்த நிறுவனங்களில் மொரிஷியஸில் உள்ள 38 நிறுவனங்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் உள்ள நிறுவனங்களும் அடங்கும்) செயல்பாடு பற்றி எங்கள் அறிக்கை விவரித்துள்ளது.  

இந்த நிறுவனங்கள் (1) ஸ்டாக் பார்க்கிங் / ஸ்டாக்  மேனிபுலேஷன் (2) அல்லது அதானியின் கணக்கி யலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான விரிவான ஆதாரங்களை நாங்கள் வழங்கினோம். எங்களின் பல கேள்விகளில், இந்த ‘ஷெல்’ நிறு வனங்களுடனான அதானி குழுமத்தின் பரிவர்த்த னைகளின் தன்மை மற்றும் அதுதொடர்பான நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு, வினோத் அதானி தொடர்புடைய ‘ஷெல்’ நிறுவனங்களுடன் தங்களுக்கு பரிவர்த்தனைகள் இருப்பதை மறுக்காத அதானி குழுமம், அதிலுள்ள முறைகேடு தொடர்பான குற்றச்  சாட்டை மட்டும் தெளிவுபடுத்தாமல் விலகிக் கொள்கிறது. வினோத் அதானி நிறுவனம், அதானி குழுமத்து டன் தொடர்புடையது அல்ல என்றும், வினோத் அதானி நிறுவனங்கள் மற்றும் அதானி குழுமத்தின் இடையிலான பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் பரிவர்த்தனைகளில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்று மட்டும் அதானி குழுமம் வாதிட்டுள்ளது.

பில்லியன் கணக்கில்  டாலர் வந்தது எப்படி?

நாங்கள் கேட்டதோ, அதானி குழுமத்தின் மூலம் வினோத் அதானியுடன் தொடர்புடைய ‘ஆப்ஷோர் ஷெல்’ நிறுவனங்களிலிருந்து வந்த பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களின் மூலத்தைப் பற்றியது...! உதாரணமாக, வினோத் அதானி இயக்குநராகப் பணியாற்றும் மொரீஷியஸ் நிறுவனத்திடமிருந்து பெற்ற 253 மில்லியன் டாலர் கடன், வினோத் அதானி யால் கட்டுப்படுத்தப்படும் மொரீஷியஸ் நிறுவனத்திட மிருந்து பெறப்பட்ட 692.5 மில்லியன் டாலர் முதலீடு பற்றி கேட்டிருந்தோம். இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களுக்கான ‘நிதி ஆதாரம்..?’ பற்றிய சந்தேகத்தை எழுப்பியிருந்தோம். அதானி குழும நிறுவனங்களுக்கும், வினோத் அதானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் இடையிலான சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை களுக்கு இந்த ‘நிதி ஆதாரம்’தான் முக்கியமானது. அதற்கான பதிலை வைத்துத்தான் ‘அதானி குழுமம்,  தனது பங்குகளின் மதிப்பை உயர்த்த, இந்த கடன்  மற்றும் முதலீடுகளைப் பெற்று, மோசடியில் ஈடு பட்டதா?’ என்பதற்கான விடையைப் பெற முடியும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கு அதானி குழுமம் நேரடியான மற்றும் வெளிப்படையான பதில் எதையும் அளிக்கவில்லை. “அவர்களின் (சகோதரர் வினோத் அதானி நடத்தும் நிறுவனங்களின்) ‘நிதி  ஆதாரம்’ பற்றி எங்களுக்குத் தெரியாது அல்லது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை” யாம். [பக்கம் 35] இதுதான் அதானி குழுமம் அளித்தி ருக்கும் பதில். மேலும், “திரு. வினோத் அதானியின் வணிக பரிவர்த்தனைகள் மற்றும் பரிவர்த்தனைகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரி விக்கும் நிலையில் இல்லை” என்றும் அதானி குழுமம் சமாளித்துள்ளது. [பக்கம் 41]

வினோத் அதானி அல்லது அதானி குழுமத்தின் குடும்ப முதலீட்டு அலுவலகத்தின் தலைவர் (வினோத்  அதானி), இயக்குநராகப் பணியாற்றிய நிறுவனங்க ளில் இருந்து வந்த முதலீடுகள் பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினோம். கவுதம் அதானிக்கு அவரது சகோதரர் வினோத்  அதானி ஏன் பெரும் தொகையை கடனாக கொடுத்  தார்? மேலும், அதற்கான பணம் வினோத் அதானிக்கு எங்கிருந்து வந்தது?- என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விகளுக்கு “தெரியவில்லை” என்று கவுதம் அதானி பதில் கூறுகிறார். உண்மையாக இருந்தால் அதனை நாமும் நம்புவோம். ஆனால், கவுதம் அதானி தனது சகோதரரிடம் விசாரிப்பது மூலமோ, அல்லது அடுத்த குடும்ப இரவு விருந்தின்போது கேட்பதன் மூலமோ மர்மத்தை எளிதில் தெளிவுபடுத்த முடியும். ஏன், அவர் (வினோத் அதானி)கவுதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு- மர்மமான வெளிநாட்டு ‘ஷெல்’ நிறுவனங்களின் நெட்வொர்க் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை அனுப்புகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.  ஆனால், ஒரேயடியாக எதுவுமே “தெரியாது” என்கிறார். குறைந்தபட்ச அறிவுடையவர்கள் கூட இவ்வாறு கூறமாட்டார்கள். சந்தேகத்திற்குரிய ‘ஆப்ஷோர் ஸ்டாக் பார்க்கிங்’  நிறுவனங்களுக்கும் (வெளிநாடுகளில் முதலீடு  செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் பங்குகளை நிர்வ கிக்கும் நிறுவனங்கள்) அதானி விளம்பர தாரர்களுக்கும் இடையே உள்ள முறைகேடுகள் மற்றும் தொடர்புகளை எங்கள் அறிக்கை தெளி வாகவே கோடிட்டுக் காட்டியிருந்தது. ஆனால், அதானி குழுமமோ, ‘தங்கள் நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பவர்கள் யார் என்றே தெரியாது’ என்று கூறுகிறது.  எங்கள் அறிக்கையின் பெரும்பகுதி, அதானி குழும நிறுவனங்களில் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளைத் தவிர வேறு எதையும் வைத்திருப்பதாகத் தோன்றாத- அதேநேரம் பெரும்பாலும் வினோத் அதானியுடன் தொடர்பு கொண்ட, மர்மமான கடல்கடந்த நிறு வனங்களை அடையாளம் காட்டியது. சந்தேகத் திற்குரிய மொரீஷியஸ் நிறுவனங்கள், அதானி குழும நிறுவனங்களில் அதிகளவிலான பங்குகளை வைத்திருப்பதை அம்பலப்படுத்தியது.

‘அமிகார்ப்’ ஊழல் கம்பெனி உதவியுடன்

வரலாற்றில் மிகவும் மோசமான சர்வதேச மோசடி மற்றும் பணமோசடி ஊழல்களில் ஒன்றான 1எம்டிபி (1Malaysia Development Berhad scandal - 1MDB) ஊழலில் ஈடுபட்டுள்ள ‘அமிகார்ப்’ (Amicorp) உதவியுடன் சந்தேகத்திற்குரிய பல பங்கு பார்க்கிங் நிறுவனங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதையும் வெளிக்கொண்டு வந்தோம். குறிப்பாக, சுமார் 7 அதானி புரோமோட்டர் நிறு வனங்கள், சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்புடைய குறைந்தபட்சம் 17 ஆப்ஷோர் ஷெல்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அதானி யின் பங்குகள் மீது குறைந்தபட்சம் மொரீஷியஸை தளமாகக் கொண்ட 3 ஆப்ஷோர் பங்குதாரர்களை உருவாக்கிய ‘அமிகார்ப்’ (Amicorp) நிறுவனத்தின் செயல்பாடு பற்றி குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ‘1எம்டிபி’ ஊழலில் ஈடுபட்ட ‘அமிகார்ப்’ நிறுவனத்தின் முந்தைய ஊழல்கள் பற்றி, அதானி “கவலை இல்லை” என்கிறார். சந்தேகத்திற்குரிய அந்த ஸ்டாக் பார்க்கிங் நிறுவனங்கள் பெருமளவில் ஒழுங்கற்ற வர்த்த கத்தில் ஈடுபட்டு, 30 சதவிகிதம் முதல் 47 சதவிகிதம் வரையிலான பங்கு வெளியீடுகளைக் கைப்பற்றி, அதானி பங்குகளின் சந்தை மதிப்பை உயர்த்தி யிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால்,  தங்களின் மிகப்பெரிய பங்கு பொது உரிமையா ளர்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முறைகள் பற்றி  எதுவுமே தெரியாது என்று அதானி பதிலளித்துள் ளார். “கேள்விகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் அதானியின் முதன்மை நிர்வாகத்தில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் நிறுவனங்கள் ஆகும். அவர்களின் வர்த்தக முறை அல்லது பொது பங்குதாரர்களின் நடத்தை குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது” [பக்கம் 47-48] என்று அதானி தெரி வித்துள்ளார்.

கவுதம் அதானியின் பினாமியே வினோத் அதானி

அதாவது, வினோத் அதானியின் நிறுவனங்கள், அதானி குழுமத்தின் நிறுவனங்கள் ஆகாது என்று காட்டி தப்பிக்க முயல்கிறார். “எந்தவொரு விளம்பரதாரர் நிறுவனம் அல்லது அவர்களது உறவினர்களின் நெருங்கிய அல்லது வணிக உறவுமுறை மூலமான பரிவர்த்தனையை, தொடர்புடைய நிறுவனத்தின் பரிவர்த்தனையாக மாற்றாது” [பக்கம் 32] என்கிறார். ஆனால், இந்தியக் கணக்கியல் தரநிலைகள், தனிப்பட்ட தரப்பு பரிவர்த்தனைகளைத் தீர்மா னிப்பதற்கான நோக்கங்களுக்காக ஒரு தனிநபரின் சகோதரர் எவ்வாறு அந்த தனிநபரை “செல்வாக்கு செலுத்துவார்” என்று குறிப்பாக விளக்குகிறது. (ஆதாரம்: இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் [பக்கம் 3]) நிதிக் கணக்கியல் தரநிலைகள் வாரியம் (Financial Accounting Standards Board - FASB) - முதலீட்டாளர்களுக்கான தொடர்புடைய நிறுவன பரிவர்த்தனைகளின் ஆபத்துகளை உணர்ந்து - நிர்வாகம் மற்றும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களின் மேலாண்மை” ஆகியவை தொடர்பு உடையவைகள்தான் என்று கூறுகிறது. அந்த வகையில், வினோத் அதானியின்- அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் குறிப்பி டத்தக்க வெளிப்படுத்தப்படாத உரிமையுடனான- அவரது குடும்ப உறவின் அடிப்படையிலும், பல்வேறு அதானி குழும நிறுவனங்களின் குழுவில் வினோத் அதானியின் பங்கு; மற்றும் கவுதம் அதானியுடன் அவருக்கு இருக்கும் விரிவான மற்றும் ஒழுங்கற்ற பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், வினோத் அதானியை, கவுதம் அதானி தரப்பாகவே கருத வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பதில் இல்லாக் கேள்விகள்

அதானி பதிலளித்த கேள்விகளில், அவர்கள் எங்கள் அம்பலப்படுத்துதல்களை பெருமளவில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரம், எங்களின் கேள்விகளுக்கு உரியவாறு அளிக்கப்படாத பதில்களின் உதாரணங்களையும் இங்கே பட்டியலிடுகிறோம்:

1    அதானி எண்டர்பிரைசஸின் முன்னோடி நிறுவனமான ‘ஏஇஎல்’ (Adani Enterprises Limited - AEL) பங்குகளை கையாடல் செய்ததில் பிரபலமற்ற சந்தை சூழ்ச்சியாளர் கேதன் பரேக்கிற்கு அதானி விளம்பரதாரர்கள் உதவினார்கள் என்று 2007 பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (SEBI) அளித்த தீர்ப்பின் ஆவணங்கள் எங்கள் அறிக்கையில் எடுத்தாளப்பட்டிருந்தன. “அதானியின் விளம்பரதாரர்கள் அதானி நிலைப்பாட்டை கையாள்வதில் கேதன் பரேக் நிறுவனங்களுக்கு உதவினார்கள் என்று அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன”. [பக்கம் 4] [பக்கம் 46] என்று ‘செபி’ அளித்திருந்த அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.     ஆனால், இதற்கு, “இந்த விவகாரம் முன்பே தீர்க்கப்பட்டுவிட்டது” என்று போகிற போக்கில் அதானி பதிலளித்துள்ளார்.

2     1999 முதல் 2005 வரை அதானி பங்குகளை கையாடல் செய்ததற்காக அதானி விளம்பரதாரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ‘செபி’ விசாரணை நடத்தி வழக்குத் தொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்கள் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதுவும் நினைவூட்டப்பட்டு இருந்தது.     வழக்கம்போல, “மற்ற ‘நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு’ எதிரான எந்தவொரு நடவடிக்கை பற்றியும் எங்களுக்குத் தெரியாது, அல்லது நாங்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று அதானி குழுமம் சமாளித்துள்ளது- [பக். 29]. இதனை நாம் புரிந்து கொள்ளமுடியவில்லை.

3     வினோத் அதானி “எந்தவொரு அதானி குழும நிறுவனங்களிலும் எந்தவிதமான ஈடுபாடும் கொண்டிருக்கவில்லை” என்று கூறி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்களிடம் (SEBI) அளிக்கப்பட்ட அறிக்கை பற்றியும் நாங்கள் கேட்டிருந்தோம். இதுதொடர்பான வாதம் முக்கியமானது. அதானி குழுமம் வினோத் அதானியுடனான பரிவர்த்தனைகள் குறித்து அரசாங்கத்திற்கு வெளிப்படையாக இருந்ததா? என்பதை மையமாகக் கொண்ட கேள்வி இது.     வினோத் அதானி, அதானி குழும நிறுவனங்களின் இயக்குநராக இருந்துள்ளார். ஆகஸ்ட் 2010-இல் அதானி குளோபல், ஏப்ரல் 2011 இல் அதானி ஷிப்பிங் மற்றும் ஏப்ரல் 2011-இல் அதானி பவர் நிறுவனங்களில் அவர் பதவி வகித்துள்ளார். அதன்பின்னரே அவர் விலகியுள்ளார். (‘சிங்கப்பூர் கார்ப்பரேட் ஃபைலிங்ஸ். [பக். 2, பக். 3]’.)     ஆனால், இதனை மறைத்து, “வினோத் அதானி, விசாரணையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை” என்று செபி-யிடம் பொய்யான தகவலை அதானி குழுமம் அளித்துள்ளது.

    இதுதொடர்பான குற்றச்சாட்டிற்கு, “... மின் இறக்குமதிக்கான அதிக விலைப்பட்டியல் குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 2010 முதல் ஆகஸ்ட் 2014 வரையிலான காலப்பகுதியைச் சார்ந்தது, அந்த காலகட்டத்தில் திரு. வினோத் அதானி, அத்தகைய விசாரணைகள் தொடங்கப்பட்ட தொடர்புடைய எந்த அதானி நிறுவனங்களிலும் இயக்குநராகக் கூட இல்லை” [பக். 29] என்று தற்போதும் பொய்யான பதிலையே அதானி அளித்துள்ளார்.     சுருக்கமாக கூறுவதானால், எங்கள் அறிக்கை எழுப்பிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான வினோத் அதானியுடனான, அதானி குழுமத்தின் உறவு குறித்து அதானி குழுமம் அரசாங்க அதிகாரிகளை அப்பட்டமாக தவறாக வழிநடத்தியது போலவே தெரிகிறது.

4     பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் தனியார் ஒப்பந்ததாரர் “திட்ட மேலாண்மை ஆலோசனை”க்கு (Project Management Consultancy) ரூ. 6 ஆயிரத்து 300 கோடி (INR 63 Billion) செலுத்தியுள்ளன. இந்த நிறுவனம் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியின் மகனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதே நபர் “அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதி”யாக இருக்கிறார் என்பதைக் காட்டும் தைவானிய ஊடக அறிக்கைகளையும் சேர்த்துள்ளோம். அதானியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில் அவர் அதானி அடையாளத்தை வைத்திருக்கும் படங்களையும் காட்டியிருந்தோம்.

     இவ்வாறு “திட்ட மேலாண்மை ஆலோசனை” நிறுவனத்தின் அந்த கட்டுப்பாட்டாளர் தெளிவாக அதானியின் பிரதிநிதியாக இருந்தபோதிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து பணத்தை வெளியேற்றிய பிஎம்சி திட்டங்களுக்கு பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டது குறித்து தொடர்புடைய தரப்பு வெளிப்பாடுகள் எதையும் நாங்கள் காணவில்லை. அதானியும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை, அதற்குப் பதிலாக முந்தைய, வருவாய் புலனாய்வு இயக்குநரக (Directorate of Revenue Intelligence - DRI) விசாரணையின் ஆவணங்களைக் குறிப்பிடுகிறார்.

4     பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி நிறுவனங்கள் கடந்த 12 ஆண்டுகளில் தனியார் ஒப்பந்ததாரர் “திட்ட மேலாண்மை ஆலோசனை”க்கு (Project Management Consultancy) ரூ. 6 ஆயிரத்து 300 கோடி (INR 63 Billion) செலுத்தியுள்ளன. இந்த நிறுவனம் வினோத் அதானியின் நெருங்கிய கூட்டாளியின் மகனால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் அதே நபர் “அதானி குழுமத்தின் தைவான் பிரதிநிதி”யாக இருக்கிறார் என்பதைக் காட்டும் தைவானிய ஊடக அறிக்கைகளையும் சேர்த்துள்ளோம். அதானியைப் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்வில் அவர் அதானி அடையாளத்தை வைத்திருக்கும் படங்களையும் காட்டியிருந்தோம்.    

 இவ்வாறு “திட்ட மேலாண்மை ஆலோசனை” நிறுவனத்தின் அந்த கட்டுப்பாட்டாளர் தெளிவாக அதானியின் பிரதிநிதியாக இருந்தபோதிலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் இருந்து பணத்தை வெளியேற்றிய பிஎம்சி திட்டங்களுக்கு பெருமளவிலான பணம் செலுத்தப்பட்டது குறித்து தொடர்புடைய தரப்பு வெளிப்பாடுகள் எதையும் நாங்கள் காணவில்லை. அதானியும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை, அதற்குப் பதிலாக முந்தைய, வருவாய் புலனாய்வு இயக்குநரக (Directorate of Revenue Intelligence - DRI) விசாரணையின் ஆவணங்களைக் குறிப்பிடுகிறார்.

6     அதானி குழுமத்துடனான சாங் சுங்-லிங்கின் (சீன நாட்டைச் சேர்ந்தவர்) உறவின் தன்மை, வினோத் அதானி உடனான உறவு பற்றியும் அறிக்கையில் கேட்டிருந்தோம். ஆனால், அதானி குழுமம் சீன நாட்டவருடனான (சாங் சுங்-லிங்) உறவை தெளிவுபடுத்தக் கூட முயற்சி செய்யவில்லை. இது ஒரு முக்கியமான விஷயம், பங்குதாரர்களுக்கு மட்டுமன்றி, இந்தியாவின் தேசிய நலனுக்கும் இது முக்கியம்.

    காரணம், சாங் சுங் லிங்கால் (லிங்கோ சாங் என்று அழைக்கப்படுபவர்) நடத்தப்படும் ஒரு நிறுவனம் (குடாமி இன்டர்நேஷனல் - Gudami International) இந்தியாவின் மிகப்பெரிய லஞ்ச ஊழல்களில் ஒன்றான ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட்’ ஊழலின் ஒரு பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சாங் சுங் லிங்கின் மகன், அதானி குழுமத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான மேலே குறிப்பிடப்பட்ட ‘பிஎம்சி ப்ராஜெக்ட்ஸ்’ திட்டத்தின் பயனாளி ஆவார்.

    எனவே, இவ்வாறு அதானி அளித்துள்ள பதில்கள் எங்களின் அம்பலப்படுத்துதல்களை பெருமளவில் உறுதிப்படுத்தவே செய்திருக்கிறது. பல முக்கியமான கேள்விகளை புறந்தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளது.     ஆனால், அதானியின் பதிலை இன்னும் நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்து, அடுத்த சில நாட்களில் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம்.
 

 




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்