மார்க்சியத்தை தெளிவாக கற்றலும் செயலூக்கப்படுத்தலும்

நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ஒலி வடிவில் மார்க்சியத்தை தெளிவாக கற்றலும் செயலூக்கப்படுத்தலும் என்ற தலைப்பில் 

இங்குள்ள இடதுசாரி என்பவரும் மார்க்சியவாதி என்பவரும்  மார்க்சியத்தை கற்றுள்ளனர்  ஆனால் அவர்களுடைய  புரிதலும் செயல்பாடுகளும் மார்க்சியத்தின் அடிப்படையான பாட்டாளி வர்க்க கட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்  பற்றிய புரிதலிலே பல்வேறு  போக்குகளை  கொண்டு நிரப்புகின்றனர் என்பதுதான் சிக்கலாக உள்ளதுமார்க்சியத்தை சரியான புரிதலோடு செயலாகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி நாம் இன்று பேசுவோம் .

  மார்க்சியம் என்பது கடல் போன்றது அதன் உட்கருத்துக்களை புரிந்து கொள்ள  அரசியல் பொருளாதார சமூக அறிவு வேண்டும் என்பது மட்டுமல்ல  இயற்கை அறிவு விஞ்ஞான பூர்வமான வளர்ச்சி தொழில் நுட்பங்கள் மற்றும் சமூக வளர்ச்சிப் போக்கில் சமூகத்தில் மனிதர்களுடைய  தேவையான கல்வி அறிவும் வேண்டும் என்பது அடிப்படை .

தத்துவம் என்பது நடைமுறைக்கு பயன்பட வேண்டும் ; நடைமுறையினால் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு தத்துவம் விடை காண வேண்டும் - ஸ்டாலின் .

  சரி வகுப்புக்கு செல்லும் முன் சில  கேள்விகளை பார்ப்போம் 

   பாட்டாளி வர்க்க கட்சி என்றால் என்ன ?

  இதற்கு எல்லோரும் தங்களுக்கு தெரிந்த பதிலை தயார் நிலையில் வைத்துள்ளனர் பேசி விடுவார்கள்   ஆனால் உண்மையில் மார்க்சியம்  என்ன சொல்கிறது ? நாம் புரிந்து கொண்டுள்ளது ஏன் புரிந்து கொண்டவை பாரதூரமாக உள்ளது?

    லெனினியத்தின் அடிப்படை நூல்  பக்கம் 174 லிருந்து  ஒரு புரட்சிகர கட்சி போர்குணம் ழும்பும் கட்சி ஒரு புரட்சிகரமான கட்சி அதிகாரத்தை கைப்பற்றி நடக்கும் போராட்டத்தில்  தொழிலாளர்களுக்கு தலைமை வகித்து முன் செல்லப் போதிய தைரியம் உள்ள ஒரு கட்சி  ஒரு புரட்சிகரமான சந்தர்ப்பத்தில் சிக்கலான நிலைமைகள் தனது திசைவெளியை  நிலையை கண்டுபிடித்து செல்வதற்கு போதிய அனுபவம் உள்ள கட்சி  லட்சியத்தின் நோக்கி செல்லும் பாதையில் மூழ்கி மறைந்து கிடக்கும்  கற்பாறைளை கலைந்து விட்டு விலகி தாண்டி செல்லும் வகையில் புரட்சி  கப்பலுக்கு சுக்கான் பிடித்து போகிற நெளிவு சுழிவு படைத்த ஒரு கட்சி அவசியமாகிறது. 

   இப்படிப்பட்டது ஒரு கட்சி இல்லாமல் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது பற்றி  தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவது பற்றி  மனதால் நினைப்பது கூட பயனற்றதாகும் .

   ஆக லெனினியத்தின் இலக்கணத்தின் அடிப்படையில் கட்சி என்பது என்ன என்பதை பார்ப்போம் 

1). கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைப் பகுதியாகும்தொழிலாளி வர்க்கத்தின் தலைசிறந்த நபர்களை கட்சி ஆட்கொள்ள வேண்டும் அவர்களுடைய அனுபவத்தையும் புரட்சி உணர்ச்சியையும்  தொழிலாளி வர்க்க லட்சியத்தின்பால் அவர்கள் காட்டும் தன்னலமற்ற ஈடுபாட்டையும்  கட்சியானது உட்கொண்டாக வேண்டும்  ஆனால் உண்மையிலேயே கட்சியானது முன்னணி படைப்பகுதியாக வேண்டும் என்றால்  அது புரட்சிகரமான தத்துவத்தை கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கி கொண்டிருக்க வேண்டும்  இயக்கத்தின் விதிகளையும்  புரட்சியின் விதிகளைப் பற்றிய உள்ள அறிவைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கி கொள்ள வேண்டும்  அது இல்லாவிட்டால் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்திற்கு வழி காட்டவும்  தொழிலாளி வர்க்கத்துக்கு தலைமை வகித்து நடத்திச் செல்லவும் கட்சி சக்தியற்றதாக போகும்  தொழிலாளி வர்க்க மக்களின் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் குறித்துக் கொண்டு  எதிரொளிப்பதோடு கட்சியானது தன்னை நிறுத்திக் கொண்டு விடுமானால் தன்னெழுச்சிக்கு  தன்னை வழி நடத்தி செல்லும் இயக்கத்தின் வாலை பிடித்து சென்று கொண்டிருக்கும் ஆனால்  இயக்கத்தின் உயிரற்ற தன்மையையும்  அரசியல் அசிரத்தை உண்டாகும். தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்கள் தரத்துக்கு மக்களை உயர்த்திட முடியாமல் போனால்  அந்தக் கட்சி ஒரு உண்மையான கட்சியாக இருக்கவே முடியாது தொழிலாளி வர்க்கப் பார்வையை விட கட்சியின் பார்வை  தூரதிருஷ்டியுள்ளதாக இருக்க வேண்டும்  தொழிலாளி வர்க்கத்துக்கு அது தலைமை வகித்து முன் செல்ல வேண்டுமே ஒழிய  தன்னெழுச்சி வழியாக செல்லும் இயக்கத்தின் வாலை பிடித்துக் கொண்டு செல்லக்கூடாது .

  2). கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் தலைவனாகும் .

  3). கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் ராணுவ தளபதிகள் குழுவாகும் .

  4).  தொழிலாளி வர்க்கத்தின்  வர்க்க  ஸ்தாபனத்தின் உச்சநிலை வடிவமே கட்சி என்றும் மற்றெல்லா தொழிலாளி வர்க்க ஸ்தாபன வடிவங்களுக்கிடையேயும் அதன் அரசியல் தலைமை பரவ வேண்டும் என்று லெனின்தான் குறிப்பிடுகிறார் .

  5).  கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தின் கருவி .

 தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவது  விரிவு படுத்துவது என்பதின் பொருள் என்ன லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கட்டுப்பாடு அமைப்பு உணர்வூட்டுவது என்பது இதன் பொருள்குட்டி முதலாளிய நபர்களின் குட்டி முதலாளி பழக்கங்களின் அரித்து சிதைக்கும்  படியான செல்வாக்குகளுக்கு எதிராக ஒரு கெட்டியாகும் சக்தியை ஒரு அரணை  தொழிலாளி வர்க்கம் மக்கள் மத்தியில் படைப்பது என்பது இதன் பொருள்  குட்டி முதலாளிய மக்கள் பகுதியில் புதிதாக போதனை தந்து புதிய அச்சியில்  வளர்த்தெடுப்பதற்காக தொழிலாளிர்களின் அமைப்பு ரீதியாக திரட்டும் வேலையை அதிகமாக்குதல் என்பது இதன் பொருள் . வர்க்கங்களை ஒழிக்கவும் சோசலிச   உற்பத்தியை உருவாக்க நிலைமைகளை  தயார் செய்யவும்  ஆற்றல்வுள்ள ஒரு சக்தியாக தாங்களே போதனை பெற்றுக் கொள்ள தொழிலாளி வர்க்க மக்களுக்கு உதவி தருவது என்பது இதன் பொருள்நலன்களின் ஒன்றிய தன்மையாலும் கட்டுப்பாட்டினாலும் பலம் பெற்றுள்ள  ஒரு கட்சி இல்லாமல் இவை எல்லாவற்றையும் சாதிக்க முடியாது.

          (அதே நூல் பக்கம் 192)

   மேலும் புரட்சிக்கான விதி என்றால் என்ன அல்லது புரட்சி என்றால் என்ன   அதனையும் பதில் சொல்வார்கள் இருந்தாலும் மார்க்சிய ஆசான்கள் என்ன செய்துள்ளனர் அதனிலிருந்து.... 

    இதற்கான பதில் தேடுவதற்கு முன் மார்க்கத்தின் ஆரம்ப காலத்தை பற்றி சில தெரிந்து கொள்வோம் 

  1844ல்   முதன் முதலில் மார்க்ஸ்ம் எங்கெல்ஸ்சும் சந்திக்கின்றனர்  அவர்கள் இருவரின்  கூட்டு தயாரிப்பு தான்  புனிதக் குடும்பம் அல்லது புருனோ பாயர் அண்ட் கம்பெனிக்கு எதிராக  விமர்சன விமர்சனத்தை பற்றிய விமர்சன ஆய்வு என்னும் தலைப்பில்  வெளியிட்ட முதல்  ஆய்வறிக்கையாகும் 

  நாம் புனித குடும்பம் பற்றி சில தெரிந்து கொள்வோம்.  புனிதக் குடும்ப நூலானது பிரதானமாக ஒரு தத்து நூலாகும்  இது இளம் ஏகலைவர்களின் அகநிலை எண்ணமுதல் வாதத்தை பற்றி விமர்சனம் ஆகும்.  புனித குடும்பம் தத்துவஞான வரலாற்றில் முதலாவது பொருள் முதலாக முறையில் அனுகி  எதிர்நிலை சக்திகளின் ஒற்றுமையும் போராட்டம் பற்றிய தத்துவங்களை பற்றி   தெளிவறிவுக்கு ஒரு முக்கிய பங்காற்றி உள்ளது 

   சிவில் சமூகத்தைப் பற்றிய தெளிவான அறிவாற்றலான அடித்தளம் மேற்கட்டுமானம் பற்றிய  பொருள் முதல்வாதத்தின் அடித்தளம் இட்டார்கள்  ஒவ்வொரு வரலாற்று சகாப்தத்திலும் ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான பொருளாதார  கட்டமைப்பும் அதற்கு ஒத்திருக்க வேண்டும் அரசியல் அமைப்பு முறை அதற்கேற்ப இருக்கிறது என்பதை சுட்டி காட்டினர்  மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் இதன் மூலம் தங்களது தத்துவார்த்த  புரிதலையும்  ஆய்வையும் நிலைநாட்டினர்.

 இங்கோ நம் நாட்டில் உள்ள பல போக்குகளை இன்னும் நாம் புரிந்துக் கொள்ளமலே உள்ளோம் எனலாம்.ரசிய புரட்சிக்கு முன் லெனின் தன் நாட்டில் உள்ள பல போக்குகளை ஆய்ந்தறிந்து அதிலிருந்து ஒரு சரியான புரட்சிகர கட்சியையும் புரட்சியை நடத்த எதிரான காரணிகளை கண்டு ஒதுக்கி சரியானவற்றை இணைத்து புரட்சிக்கான விதியை தொகுத்தளித்தார்.

நமது நாட்டில் இன்னும் பிரச்சினையான விசியம் பாராளுமன்றத்தில் கல்ந்துக் கொள்வது பற்றிய ஒரு சிக்கலும், அதனை பற்றி மட்டும் நான் பேசிவிட்டு வகுப்பில் அடுத்த தோழர் பேச அழைக்கிறேன்.

உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு  பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்  வேறுபட்ட வடிவங்களை ஒன்றிணைக்கவும்  போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய  பகிரங்கமான மற்றும் ரகசியமான  சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான  பாராளுமன்ற முறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக  உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக  இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும்  தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப்பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய எப்போதும் கூறுகிறோம்

   குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும்  முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக  புரட்சி வெற்றியடைய முடியும்

    லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள்  முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப்பட்டார்கள்  தற்போதைய போலீஸ் சட்டத்தினால்  அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு  பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது ( லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு  தொகுதி 18 பக்கம் 314 ).

உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின்  முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின்மேலும் அவர் திருத்தலவாதத்தில் இருந்து முழுமையாக முடித்துக் கொள்ளாத வரை  புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்

ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார் " 1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம்  சமாதானம் மாற்றம் பற்றிய சாத்தி பட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும்  இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும்  குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றிப் பெயர்களில் வேலையாகும்  மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார்  இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை  மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம்  முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை ."( லெனின் நூல் திரட்டு  23 பக்கம் 233).

முதலாளித்துவ பாராளுமன்றின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து  மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும்  மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது 

   முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும்  புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும்  உதவும் குறிப்பான சூழ்நிலைகளில்  பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்  என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும்  தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும்  ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக  பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது  அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம்  சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது  அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .

லெனின் மேலும் சொல்லுகிறார்  ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்று தொழிலாளர்களை பொறுத்தவரையில்  மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டது  மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்ஸ்  மேற்கோள் காட்டி எழுதுகிறார்  அன்றாட தற்காலிக நலன்களுக்கான  மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும்  பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல்  அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும்  போராடுவதும் நிகழ்காலத்திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும்  சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும் .

குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது  ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது  புரட்சி பலிக்கொடுப்பது கைவிடுவது ( லெனின்  பாட்டாளி வர்க்க புரட்சி ஓடு காலஸ்தியும்  தேர்வு நூல் தொகுதி பக்கம் 95 ). 

இன்னும் பின்னர்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்