பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும்.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
தமிழர் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தைப் பொங்கல் திருநாள். தமிழர் திருநாள் என்றும், விவசாயத்தை மையப்படுத்தியும் கொண்டாடப்படும் தைத் திருநாள் நான்கு நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்து, புதிதாய் விளைந்த நெல் மணியில் இருந்து கிடைத்தபச்சரிசியைக் கொண்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் மரபு. விவசாயம் நன்று நடக்கும் உறுதுணையாக இருக்கும் சூரியன், காளை மாடு, இயற்கை ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிப்பதே பொங்கல் பண்டிகையின் நோக்கம்.
இன்று நமது சமூகத்தில் பொங்கல்
உண்மையில் தமிழ் சமூகம் பொங்கலை அதேமுறையில் கொண்டாடுகிறதா? என்றால் இல்லை என்பதுதானே பதில். இன்றைய சமூக வளர்ச்சியில் மக்கள் விவசாய உழைப்பு கருவிகளிலிருந்து மாறி உள்ளது போலவே உழைப்பின் ஆதரமான விலைநிலமும் முன்னர் போல இல்லையே!!! அரசே ரூ.2430 கோடி ரூபாய் மக்கள் பொங்கலை கொண்டாட கொடுக்கும் பொழுது, மக்கள் இந்த பண்டிகையின் மீது வைத்துள்ள ஈர்ப்பை இன்றைய ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகள் இதில் கல்லா கட்ட நினைப்பதும், அதில் தங்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள பழைமைகளை தூக்கி நிறுத்தி அவைதான் உண்மையெனும் ஒரு கூட்டம் இப்படி வெறும் பெருமை பேசினால் வாழ்க்கை உயர்ந்து விடாது.
உங்களை சுரண்ட உங்கள் பெருமை பேசி கல்லா கட்டும் வியாபார நிறுவனங்கள் உங்கள் வாழ்க்கை உயர்விற்கானவை அல்ல.
மக்கள் வாழ எல்லோரும் உழைக்க வேண்டும்; உழைபதற்கு வேலை வேண்டும். இங்கே வேலை இருந்தால் எல்லாவற்றையும் எல்லோரும் கொண்டாட முடியும். விவசாயத்தை வளர்த்தெடுகாத இவர்களா விவசாயி களின் திருநாளை கொண்டாட முன் வருவர். உங்களின் உரிமையை அறிந்து புரிந்துக் கொள்ளுங்கள் ....உழைக்கும் மக்களுக்கான திருநாள் சமூகபுரட்சியால் மட்டுமே, ஆம் ஏற்றதாழ்வற்ற எல்லோரும் எல்லாம் பெற்று வாழும் நாளே....
No comments:
Post a Comment