தேர்தலை மார்க்சிய ஆசான்களின் கருத்துகளை பார்ப்போம்.
1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.
“அனைவருக்கும் வாக்குரிமை என்பது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது. நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடையும் பேசுவதற்கு ஒரு மேடையமைதுதந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.
பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."
(லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)
இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.
முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.
வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.
இத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.
சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.
கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை (உண்மையில் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே!) நோக்கி பயணிப்பதுமாக இந்த கட்சிகளின் வழிமுறை உள்ளது..
நமது தேடுதலில் இந்த குழப்பங்களுக்கு பதிலளிக்க முயற்சிப்போம். உலகெங்கிலும் உள்ள நவீன திருத்தல்வாதத்தை ரசிய திருத்தல்வாதி குருசேவ் தலைமையில் கொண்டுவரப் பட்ட தீர்மானமே அதனை எப்படி என்று பார்ப்போம்.
காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப்போகவும் போராடுகிறார் .( லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95 ).
உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் வேறுபட்ட வடிவங்களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்ற முறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப்பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய எப்போதும் கூறுகிறோம்.
குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.
லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப்பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது ( லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).
திருத்துவவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றி நின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.
திருத்தல் வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தி மார்க்சிய லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப்பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தலவாதத்தில் இருந்து முழுமையாக முடித்துக் கொள்ளாத வரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறு பிரச்சனைகள பல்வேறு விதமாக வெளிப்படுகிறது ட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடி அணிந்து கொள்கிறது ஆனால் அதன் சாரம் புரட்சி எதிர்ப்பதும் புரட்சி மறுப்பதுமே ஆகும்.
பாட்டாளி வர்க்க புரட்சியையும் பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கியம் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதமும் உண்மையில் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் திரும்பத் திரும்ப ட்ராட்ஸ்கியத்தை ஒருவகையில் மென்ஸ்விஸயம் என்றும் காவுட்ஸ்கியதியம் என்றும் சமூக ஜனநாயகம் என்றும் மேலும் எதிர் புரட்சிகர முதலாளிகளின் முன்னேறிய பிரிவு என்றும் கூறினார். திருத்தல்வாதம் சாரத்தில் புரட்சி எதிர்ப்பதாகவும் மறுப்பதாகவும் இருக்கிறது. திருத்தலவாதமும் காவுட்ஸ்கியமும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது மட்டுமல்ல; புரட்சி எதிர்ப்பதில் ட்ராட்ஸியத்தோடு ஒன்று சேர்கிறது என்பது தர்க்கரீதியான முடிவு .
ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார் " 1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்தி பட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றிப் பெயர்களில் வேலையாகும் மார்க்ஸ் முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை ."( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233)
தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தியமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன் குறைவான பற்றுதலேனாலும் ராணுவ வல்லாட்ச்சி கொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும் பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார் சமாதான முறை மாற்றமும் அல்லது பலாத்கார முறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித்துவத்தின் ஒரு சாதாரண அல்லது தோட்டக்காரனை போன்று அடிவருடின் நிலைக்குத் தாழ்ந்து விடுவதாகும் ( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357 ).
1917 அக்டோபரில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் தொழிலாளர்கள் படை வீரர்கள் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு தீர்மானகரமாக தலைமை தாங்கி அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். சிலர் கூறுவதைப் போல் புரட்சியில் ரத்தம் சிந்தாமல் மாற்றம் அதாவது புரட்சி கிட்டத்தட்ட சமாதான முறையில் சாதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய கூற்றுகள் யாவும் வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்டவையாகும் உலகத்தின் முதல் சோசலிச அரசின் உருவாக்குவதற்காக ரத்தம் சிந்திய புரட்சிகர தியாகிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
உலக வரலாறு இதுவரை முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானே எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை ...
ஆக தோழர்களே நாம் வாழும் சமூகத்தில் இரு வேறு வகைப்பட்ட சித்தாந்தங்களும் செயல்களும் உள்ளன அதில் ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கானதும் பாட்டாளி வர்க்க சோசலிச கம்யூனிச போக்கானதும் இரு வேறு வகைபட்ட பாதைகளாக உள்ளன .
அக்டோபர் புரட்சியின் ஊடாக உலகிற்கு சோசலிசத்தின் நன்மைகள் கலங்கரைவிளக்காக ரஷ்ய புரட்சி எடுத்துகாட்டியது. ரசிய புரட்சியை அடிவொற்றி உலகில் உள்ள பல்வேறு மார்க்சிய லெனினிய புரட்சியாளர்கள் தமது நாட்டில் புரட்சி நடத்தினார்கள்.
அதாவது சீனாவிலிருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கன்றி ஆயுதம் தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபத்தியக்கு எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன ( மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு ).
சீன மக்கள் மூன்று வருட மக்கள் விடுதலை யுத்தம் உட்பட 22 வருடங்கள் புரட்சிகளை யுத்தத்தை நடத்திய பிறகு புரட்சியில் வெற்றி பெற்றனர். மக்கள் விடுதலை இயக்கத்தில் இறுதிவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு பெற்ற சீயாங்கே ஷேக் ஆதிக்கவாதிகளை அவர்கள் முழுமையாக ஆயுதம் தாங்கிய போரட்டத்தின் மூலமே தோற்கடித்தனர். கொரிய மக்களும் ஜப்பான் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆயுதப்படைக்கு எதிராக போராடி அதனைத் தோற்கடித்த பின்னரே புரட்சி உறுதியாக நிலை நிறுத்த முடிந்தது.
1945 ஆகஸ்டில் வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.
1953 ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள் கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சியை அதன் ஆதரவாளர்களை தூக்கி எறிந்து புரட்சிகரமான ஆட்சி நிறுவினர்.
இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாக தான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன .
ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே ...
பாராளுமன்ற பாதைக்கு மறுப்பு
இரண்டாம் அகிலத்தின் திருத்தல்வாதிகளால் விளம்பரப்படுத்தப் பட்ட பாராளுமன்ற பாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்ட காலத்திற்கு முன்பே செல்லாக்காசாகி விட்டது . ( மேற்கண்ட அதே நூல் பக்கம் 682 ).
இன்று பாராளுமன்றத்தை தூக்கி நிறுத்துவார்கள் குருசேவின் வாரிசுகளன்றி வேறல்ல.
சரி புரிந்து கொள்வோமா பாராளுமன்ற பாதை பற்றி
முதலாளித்துவ அரசு இயந்திரத்தின் முதன்மையான உறுப்பு ராணுவமே ஒழிய பாராளுமன்றம் அல்ல என்பதனை இரண்டாம் உலகப் போருக்கு பின் நடைபெற்ற நிகழ்வுகள் நமக்கு மீண்டும் மீண்டும் நிரூபித்து உள்ளது. பாராளுமன்றம் என்பது முதலாளித்து ஆட்சிக்கு ஒரு அலங்கார சின்னமாக ஒரு மூடுதிரையாக இருந்து வருகிறது பாராளுமன்றத்தை ஏற்றுக் கொள்வதும் அல்லது கைவிடுவதும் அல்லது பாராளுமன்றக்கு அதிகமாகவோ குறைவாகவோ அதிகாரம் அளிப்பதும் வெவ்வேறு விதமான தேர்தல் முறையைக் கைகொள்வது ஆகிய இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது முதலாளித்துவ ஆட்சியின் தேவைக்கும் நலன்களுக்கும் ஏற்றால் போல் தான் எப்போதும் தீர்மானிக்கப்படுகிறது முதலாளிகள் ராணுவ அதிகார வர்க்க நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வரை தேர்தல் மூலம் பாட்டாளிகள் பாராளுமன்றத்தில் நிலையான பெரும்பான்மை பெறுவது என்பது சாத்தியமற்றது அல்லது அத்தகைய நிலையான பெரும்பான்மை நம்பப்பட முடியாது பாராளுமன்ற பாதை வழியாக சோசலிசத்தை அடைவது என்பது அறவே சாத்தியம் இல்லாததும் வெறும் ஏமாற்றுப் பேச்சும் ஆகும் .
முதலாளித்துவ நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கிட்டத்தட்ட பாதி இன்னும் சட்டப்படி தடை செய்யப்பட்டவையாக இருக்கின்றன இக்கட்சிகளுக்கு சட்ட உரிமை இல்லாததன் காரணமாக அவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை
கம்யூனிஸ்ட் கட்சிகள் சட்டபூர்வமானவை தேர்தலில் பங்கெடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்ற முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத் தேர்தல் சட்டங்களால் திணிக்கப்பட்ட நேர்மையற்ற வரைமுறைகளை வைத்துக்கொண்டு முதலாளித்துவ ஆட்சியின் கீழ் பெரும்பான்மை ஓட்டுகளை வெல்வது என்பது அவைகளுக்கு மிகக் கடினம் அப்படியே அவர்கள் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்றாலும் பாராளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மை இடங்களை பிடிப்பதை தேர்தல் சட்டங்களை திருத்துவது மூலமும் அல்லது வேறு வழியில் உள்ள தடுப்பதற்கு முதலில் முதலாளிகளால் முடியும்.
உதாரணமாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பிரான்ஸ் ஏகபோக முதலாளிகள் இரண்டு தடவை தேர்தல் சட்டத்தை திருத்தினார்கள் .
கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றதாலோ அல்லது தேர்தலில் வெற்றி பெற்றதன் விளைவாக அரசியல் பங்கு கொண்டதாலோ பாராளுமன்றத்தின் முதலாளித்து தன்மைகளையோ அதன் பல்வேறு அம்சங்களையோ அதனால் மாற்ற இயலாது இந்நிலையில் பழைய அரசு நிறுவனங்களையும் அதிகார வர்க்கத்தின் ஒழித்து புதியதை உருவாக்குவது என்பது நடக்கவே நடக்காது அடிப்படை சமுதாய மாற்றத்தை முதலாளித்துவ பாராளுமன்றங்களையோ அரசுகளை சார்ந்திருப்பது மூலமாக கொண்டு வருவது என்பது முடியவே முடியாத காரியம் ஆகும். அதனை புரிந்துக் கொள்ள பல நாட்டு நிகழ்வுகள் சாட்சியாக உள்ளன.
1946 ல் சிலி கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் வெற்றி பெறுவதில் முதலாளித்து முற்போக்கு கட்சியை ஆதரித்தது கம்யூனிஸ்ட் பங்கேற்புடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது அந்த சமயத்தில் முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்த அந்த அரசை சிலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "மக்கள் ஜனநாயக அரசாங்கம்" என்று வர்ணிக்கும் அளவுக்கு சென்றனர் ஆனால் ஒரு வருடத்திற்குள் முதலாளிகள் கம்யூனிஸ்டுகளை அரசியலில் இருந்து வெளியேற்றும் படி நிர்பந்தத்தினர் பிறகு கம்யூனிஸ்டுகளை ஒட்டுமொத்தமாக கூட்டாக கைது செய்தனர் கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தனர் பின்னர் நடந்தவை நான் சொல்ல தேவையில்லை.
தொழிலாளர்களின் கட்சி முதலாளிகளின் கூலி கட்சியாக சீர் அழிந்து அவர்களுக்கு அடிபணிந்து இருக்கும்போது மட்டுமே முதலாளிகள் கட்சியை பெரும்பான்மை பெறவும் அரசு ஏற்று நடத்தும் அனுமதிப்பர் ஒரு சில நாடுகளில் முதலாளித்து சமூக ஜனநாயக கட்சியின் நிலை இதுதான் ஆனால் இத்தகைய செயல் முதலாளிகளின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும் மேலும் வலுப்படுத்தும் பயன்பட்டுள்ளதே தவிர ஒடுக்கப்பட்ட சுரண்டப்படும் பாட்டாளிகளின் நிலைமையில் மாற்ற எந்த வகையிலும் பயன்படவில்லை பயன்படுவும் முடியாது. இத்தகைய உண்மைகள் பாராளுமன்ற பாதையில் ஓட்டாண்டி தனத்தை கூடுதல் சான்றுகளாக விளங்குகின்றன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராளுமன்ற பாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர். அவர்கள் இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து பாட்டாளி வர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன.
முதலாளித்துவ பாராளுமன்றின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது
முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும் ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .
லெனின் கூறினார்
"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டதாகவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கதினத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
பாராளுமன்ற வாதத்தின் நிழலை பின்தொடர்ந்து சென்றதற்காகவும் அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய புரட்சிகர கடமை கைவிட்டதற்காகவும் லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளை கண்டித்தார். அவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக ஒரு பாராளுமன்ற கட்சியாக முதலாளிகளின் தொங்கு சதையாக முதலாளித்துவ சர்வாதிகாரத்தை காக்கும் ஒரு கருவியாக மாற்றி விட்டார்கள் பாராளுமன்ற பாதையை ஆதரிப்பதன் மூலம் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள் அடைந்த கதியே அவரை பின்பற்றுபவர்களும் அடைவார்கள் .
இடது சந்தர்ப்ப எதிர்ப்பு என்பதற்கு மறுப்பு
இடது சந்தர்ப்பம் இடது துணிச்சல் வாதம் என்று முழுமையான வர்க்க போராட்டத்தை கைவிட்டு முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளிகள் ஜனநாய உரிமையும் பிறப் போராட்டங்களுக்காக போராடுவதாக கூறுவது எவ்வகையான பாட்டாளி வர்க்க புரட்சி முழக்கம் . புரட்சியை எதிர்ப்பதும் மறுதலிப்பதும் தமது திருத்தல்வாதப் பாதை மூடி மறைப்பது தான் இடது சந்தர்ப்பவாதம் என்று இதற்கு பொருள் .
புரட்சி என்பது நமது விருப்பத்தின் பேரில் நடத்தப்பட முடியாதது என்றும் புறநிலையில் புரட்சிகரமான சூழ்நிலை நிலவினால் ஒழிய புரட்சி என்பது சாத்தியமில்லை என்றும் மார்சியவாதிகள் அறிந்தவை தான் அதே சமயத்தில் புரட்சி வெடித்தெழுவதும் வெற்றி பெறுவதும் புரட்சிகர சூழ்நிலை மட்டும் பொருத்தது அல்ல கூடவே அகநிலையில் புரட்சிகர சக்திகளின் தயாரிப்புகளையும் முயற்சிகளையும் பொறுத்தது.
பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி நடத்துவதற்கு தேவையான புறவய நிலைமைகள் மற்றும் அகநிலை சக்திகள் அது இரண்டையும் பற்றியும் துல்லியமாக மதிப்பிடவில்லை என்றாலும் நிலைமை கனிந்து வருவதற்கு முன்பே அவசரமாக ஒரு புரட்சி தொடுக்கும் முயன்றாலும் அது "இடது துணிச்சல் வாதம்" ஆகும் ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி புரட்சிக்கான சூழ்நிலை கனியும் முன்னே அதற்கான செயல் ஆக்கும் உள்ள தயாரிப்புகளை செய்திருக்குமானால் அல்லது புரட்சிகரமான சொல்நிலை நிலவும் போது நிலைமைகள் கனிந்திருக்கும் போது ஒரு புரட்சியை தலைமை தாங்கி வழிநடத்தி அரசு அதிகாரத்தை கைப்பற்ற துணியாமல் இருக்குமானால் அது வலது சந்தர்ப்பவாதம் அல்லது திரிபுவாதம் ஆகும்.
அரசு அதிகாரத்தை கைப்பற்றும் நேரம் வரும் வரை புரட்சிகர சக்தி ஒன்று திரட்டும் கடினமான பணியில் முழுமையாக கவனம் செலுத்துவது தான் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி மிக முக்கியமான அடிப்படை பணியாகம் அன்றாட போராட்டங்களில் அளிக்கப்படும் செயலுக்கும் உள்ள தலைமையானது புரட்சிகர சக்திகளை ஒன்று குறிப்பதையும் சூழ்நிலைகள் கனிந்து வரும்போது புரட்சியில் வெற்றி ஈட்டுவதற்கான தயாரிப்புகளை செய்வதும் தான் தனது மையக் கடமையாக கொள்ள வேண்டும் பாட்டாளி வாழ்க கட்சி பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கவும் தனது சொந்த வருக சக்தியை பயிற்றுவிக்கவும் அதன் போரிடும் கவிதையை பக்குவப்படுத்தும் மேலும் புரட்சிக்கு சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாக ஒரு அனுபவ ரீதியாகவும் தயாரிப்பு தயாரிப்பதற்காகவும் அன்றாட போராட்டங்களின் பல்வேறு வடிவங்களை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு செயல்படுவதன் மூலம் மட்டுமே புரட்சிகர சூழ்நிலை கணித்திருக்கும் போதும் வெற்றி வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க முடியும் இல்லையெனில் புரட்சிகரமான எதார்த்த நிலைகள் நிலவும் போது பாட்டாளி மக்கள் கட்சி புரட்சி நடத்தும் வாய்ப்பை வெறுமனே நலி செல்ல விட்டு விடும்
புரட்சிகர சூழ்நிலை நிலவாத போது எந்த புரட்சியையும் நடத்தக் கூடாது என்பது வலியுறுத்தும் திருத்தல் வாதிகள் புரட்சிகர சூழ்நிலை உருவாக உருவாவதற்கு முன் அன்றாட புரட்சிகர போராட்டங்களையும் புரட்சிகர சக்திகளையும் ஒன்று திரட்டுவதையும் ஒரு பாட்டாளி மக்கள் கட்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை குறித்து எதுவும் சொல்வதில்லை உண்மையில் புரட்சிகர சூழ்நிலை இல்லாத இல்லாதிருக்கும் போது புரட்சிக்கான தயாரிப்பு செய்வது புரட்சிகர சக்திகளை ஒன்று குறைப்பது ஆகிய கடமைகளை புரட்சிகர சூழ்நிலைகள் இல்லை என்ற சாக்கில் ஒதுக்கி விடுவது அல்ல
லெனின் குறிவைதான் புரட்சிகர நெருக்கடி தோண்டும்போது புரட்சிக்காரராக மாறுவதற்கு ஹவுசிங் கூட தயாராக இருக்கிறார் ஆனால் அப்போது ஒவ்வொரு அயோக்கியனும் கூட புரட்சி வாதியாக தான் தன்னை அறிவித்துக் கொள்வான் என்பதை நாம் காண்போம் .
லெனின் கூறினார் வெகுஜனங்களின் புரட்சிகரப் போராட்ட முறைகளோடு இணைக்கப்படாத எந்த ஒரு சீர்திருத்தமும் பலன் தரக்கூடியதாக உண்மையானதாக நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க முடியாது தொழிலாளர்களின் தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர முறையுடன் சீர்திருத்திற்கான போராட்டத்தை நினைக்காத ஒரு தொழிலாளர் கட்சி ஒரு குழு மக்களிடமிருந்து துண்டிக்கப்பட்டதாக மாறிவிட கூடும் மேலும் இது உண்மையான புரட்சிகர சோசியலித்தின் வெற்றிக்கு மிகப்பெரும் அபாயகமாக இருக்கும் ( லெனின் நூல் திருட்டு தொகுதி 21 பக்கம் 359 ).
லெனின் மேலும் சொல்லுகிறார் ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்று தொழிலாளர்களை பொறுத்தவரையில் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டது மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்ஸ் மேற்கோள் காட்டி எழுதுகிறார் அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத்திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்
குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சி பலிப்பது கைவிடுவது ( லெனின் பாட்டாளி வர்க்க புரட்சி ஓடு காலஸ்தியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).
No comments:
Post a Comment