அறிவு என்றால் என்ன?(அமைப்பியல் பிரச்சினை)-தேன்மொழி

 அறிவு என்றால் என்ன? உலகத்தில் வர்க்க சமூகம் தோன்றியது முதற்கொண்டு இருவகையானஅறிவை மட்டுமே உலகம் கொண்டிருக்கிறது. அவை ஒன்று உற்பத்திப் போராட்டம் பற்றியஅறிவு, மற்றொன்று வர்க்கப் போராட்டம் பற்றிய அறிவு என்பதாகும். இயற்கை அறிவியிலும்,சமூக அறிவியலும் இந்த இருவகையான அறிவின் படிகங்களே. தத்துவம் என்பது இயற்கைஅறிவு, சமூக அறிவு ஆகியவற்றின் பொதுமையாக்கலும் தொகுப்புமே ஆகும். வேறு வகையானஅறிவு ஏதும் உள்ளதா? இல்லை. இப்பொழுது சமூகத்தின் நடைமுறை செயல்பாடுகளில்இருந்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வளர்ந்த சில மாணவர்களின் மீதுநமது பார்வையை செலுத்துவோம். அவர்களின் விசயம் என்ன? ஒரு நபர் இந்த வகையான தொடக்கப்பள்ளியிலிருந்து அதே வகையான பல்கலைக்கழகம் வரை கல்வி கற்று பட்டம்பெற்றவர் நன்றாக கற்று அறிந்தவர் என்று எண்ணப்படுகிறார். ஆனால் அவர் கொண்டிருப்பதுஎல்லாமே வெறும் புத்தகப் படிப்பே; அவர் இன்னமும் நடைமுறை செயல்பாடுகள் எதுஒன்றிலும் பங்கெடுக்கவில்லை அல்லது தான் கற்றுள்ளவற்றை வாழ்க்கையில் எந்த ஒருகளத்திற்கும் பொருத்தியது இல்லை. அத்தகைய ஒரு நபர் முழுமையாக வளர்ந்த அறிவுஜீவி எனகருத முடியுமா? இல்லை என்பதே நமது கருத்தாகும். ஏனெனில் அவரது அறிவானது இன்னமும்நிறைவடையாமல் உள்ளது. ஆகையால் ஒப்புநோக்கில் முழு நிறைவான அறிவு என்றால்என்ன? -மாவோ-

ஒப்புநோக்கிலான முழு நிறைவான அறிவு அனைத்தும் இரு கட்டங்களில் உருவாகிறது.முதலாம் கட்டம் புலனறிவுக் கட்டம். இரண்டாம் கட்டம் என்பது பகுத்தறிவுக் கட்டம்என்பதாகும். பகுத்தறிவுக் கட்டம் என்பது புலனறிவுக் கட்டத்திலிருந்து உயர்ந்த கட்டமாகவளர்வதாகும். மாணவர்களின் வெறும் புத்தகப் படிப்பு என்பது எவ்வகையிலான அறிவு?அவர்களின் அறிவு அனைத்தும் பேருண்மையே எனக் கொள்வோமானால் கூட அதுஇன்னமும் அவர்களின் சொந்த தனிப்பட்ட அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அறிவாகஇல்லை. மாறாக உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின்அனுபவத்தைத் தொகுப்பதில் அவர்களுக்கு முன் இருந்தோர் முன்வைத்த கோட்பாடுகளைக்கொண்டதே ஆகும். மாணவர்கள் இவ்வகையான அறிவைப் பெற வேண்டும் என்பதுமுழுவதுமாக இன்றியமையாதது. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அத்தகையஅறிவானது ஒரு பொருளில் இன்னமும் ஒரு சார்பாகவே உள்ளது எனக் கட்டாயம்புரிந்துகொள்ளப்பட வேண்டும். அது மற்றவர்களால் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஆனால்இன்னமும் அந்த மாணவர்களால் சரிபார்க்கப்படவில்லை. மிகவும் முக்கியமானது என்னவெனில் இந்த அறிவை வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பொருத்துவதில் சிறந்துஇருத்தலே ஆகும். ஆகையால் வெறும் புத்தகப் படிப்பை மட்டுமே கொண்டு இன்னமும்எதார்த்தத்தோடு தொடர்பு இல்லாமல் இருப்போரும் சிறிதளவே நடைமுறை அனுபவத்தோடுஇருப்போரும் தங்களின் சொந்தக் குறைபாடுகளை உணர்ந்து சற்றே அதிக அளவில்தன்னடக்கமாக மாற வேண்டும். -மாவோ-

உற்பத்திக்கான போராட்டத்தின் மூலம் நமக்கு இயற்கையைப் பற்றிய அறிவு கிடைக்கிறது.இந்த அறிவை இயற்கை விஞ்ஞானம் நமக்கு வழங்குகிறது. வர்க்கப் போராட்டத்தின் மூலம்நமக்கு சமூகத்தைப் பற்றிய அறிவு கிடைக்கிறது. இந்த அறிவை நமக்கு சமூக விஞ்ஞானம் வழங்குகிறது. இவ்விருவகையான அறிவைப் பெற்றவர்களைத்தான் அறிவுஜீவி என்று நாம்அழைக்க முடியும். தத்துவம் என்பது இயற்கை, சமூகம், மற்றும் சிந்தனையின் இயக்கத்தைப்பற்றிய தொகுப்பான அறிவாகும்.

ஒருவர் அறிவைப் பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் பற்றி பள்ளி மற்றும்கல்லூரிகளில் புத்தகங்களைப் படித்து கற்றிடல் வேண்டும். அதன் மூலம் பிறரது நடைமுறைசெயல்பாட்டின் மூலம் அவர்கள் அறிந்த உண்மைகளை கோட்பாடுகளை நாம்தெரிந்துகொள்ள முடியும். அதாவது பிறர் (விஞ்ஞானிகள், தத்துவவாதிகள்) பல ஆண்டுகாலம்முயற்சி செய்து பெற்ற அறிவை நாம் குறைந்த காலத்திற்குள் புத்தகங்களைப் படித்துத்தெரிந்துகொள்ள முடியும். ஆகவே நமது அறிவை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் பள்ளிமற்றும் கல்லூரிகளில் சென்று ஆசிரியர்களின் மூலம் கல்வி கற்பது அவசியமானதே ஆகும்.

எனினும் இந்த புத்தகங்களைப் படித்து நாம் பெற்ற அறிவானது முழுமையான அறிவாகஆகாது. நமது அறிவு முழுமையாக ஆகவேண்டும் என்றால் நாம் புத்தகங்களின் மூலம் படித்துகற்றுக்கொண்டதை நடைமுறையில் ஈடுபடுத்தி சொந்த முயற்சியின் மூலம் அதனை சரிபார்க்கவேண்டும். இதன் மூலம் மட்டுமே நாம் நமது அறிவை முழுமைப்படுத்துவதோடு கூடவே புதியவிசயங்களையும் தெரிந்துகொள்ள முயற்சி செய்து அதில் வெற்றிகாண முடியும். நாம் எவ்வளவுபடித்தாலும் அதனை நமது சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால்நாம் கற்ற கல்வியினால் எவ்விதமான பயனும் இல்லை. ஆகவே நாம் நமது அறிவைவளர்ப்பதன் நோக்கம் நமது வாழ்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை விஞ்ஞானமுறையில் தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே ஆகும். நமது அறிவை நாம் வளர்த்துக்கொள்ளவில்லை என்றால் நமது வாழ்க்கைப் பிரச்சனைகளை விஞ்ஞானமற்றவழிகளில் தீர்த்துக்கொள்ள முயன்று தோல்விகளையே நாம் சந்திக்க நேரிடும். புத்தகம் மற்றும்நடைமுறையின் மூலம் முழுமையான அறிவைப் பெற்றோம் என்றால் நாம் செய்யும் தவறுகளைவிரைவில் கண்டுபிடித்து திருத்திக்கொள்ள முடியும். அதன் மூலம் நாம் தன்னடக்கமுள்ளமனிதனாக மாற முடியும். அத்தகைய முழு அறிவைப் பெற்றவர்களும், தன்னடக்கமாகஇருப்பவர்களும்தான் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். இதற்கு மாறாகஅரைகுறை அறிவு பெற்றவர்களும் தன்னடக்கம் இல்லாதவர்களும் அவர்களது வாழ்க்கையில்தோல்வியடைந்துள்ளார்கள். இத்தகைய அரைகுறை அறிவாளிகளால் அவர்களுக்கும்பயனில்லை, பிறருக்கும் அவர்களால் பயனில்லை. ஆகவே தத்துவம் மற்றும் நடைமுறையின்மூலம் முழுமையான அறிவு பெற்ற அறிவுஜீவிகளால் அவர்களுக்கும் பயன் உண்டு, பிறருக்கும்பயன் உண்டு. அத்தகைய அறிவுஜீவிகள்தான் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமைப்பொறுப்பிற்கு வரவேண்டும்.

எவ்வாறு வெறும் புத்தகப் படிப்பை மட்டும் கொண்டுள்ளோரை உண்மையான பொருளில்அறிவுஜீவிகளாக மாற்றப்பட இயலும்?. அவர்களை நடைமுறைப் பணியில் பங்கெடுக்கவைத்து நடைமுறைப் பணியாளராக மாற்றுவதும் கோட்பாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளோரைமுக்கியமான நடைமுறைச் சிக்கல்களைப் பயிலவைப்பதுமே ஒரே வழியாகும். சிலரின்விளக்கத்தின்படி காரல் மார்க்ஸ்கூட அறிவுஜீவி என கருதப்படமாட்டார் என சிலர்கூறுவார்கள். ஆனால் அது தவறானதாகும். மார்க்ஸ் புரட்சிகர இயக்க நடைமுறையில்பங்கெடுத்துப் புரட்சிகரக் கோட்பாடுகளையும் உருவாக்கினார். அவர் முதலாளியத்தின் மிகச்சாதாரண ஆக்கக்கூறான சரக்கு என்பதில் தொடங்கி முதலாளியச் சமூகத்தின் பொருளாதாரகட்டுமானம் குறித்த முழுமையான பயிலுதலை மேற்கொண்டார். லட்சக்கணக்கானோர்ஒவ்வொரு நாளும் சரக்குகளை கண்டனர்; ஆனால் அவர்கள் அவை பற்றிய எந்தமுயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்ததுண்டு. மார்க்ஸ் மட்டுமே அறிவியல்ரீதியாக சரக்குகளைப் பயின்றார். அவர் அவற்றின் உண்மையான வளர்ச்சிக்கு பேராற்றல் வாய்ந்தஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டு உலகம் முழுவதும் நிலவியதில் இருந்து முழுமையானஅறிவியல்ரீதியான கோட்பாட்டைத் தருவித்தார். அவர் இயற்கை, வரலாறு, பாட்டாளிவர்க்கப்புரட்சி ஆகியவற்றைப் பயின்று இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப்பொருள்முதல்வாதம், பாட்டாளிவர்க்கப் புரட்சிக் கோட்பாடு ஆகியவற்றை உருவாக்கினார்.

இவ்வாறு மார்க்ஸ் மனித ஞானத்தின் முகட்டைப் பிரதிநித்துவப் படுத்துகின்றவாறு மிகவும்முழு நிறைவாக வளர்ந்த அறிவுஜீவியாக மாறினார்; அவர் வெறும் புத்தகப் படிப்பை மட்டுமே கொண்டிருப்போரிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவராக இருந்தார். மார்க்ஸ் நடைமுறைப்போராட்டங்களின் செல்திசையில் விரிவான ஆய்வுகளையும் பயிலுதல்களையும் மேற்கொண்டுபொதுக் கருத்துகளை உருவாக்கி அதன் பின் தனது முடிவுகளை நடைமுறைப்போராட்டங்களில் சோதித்து சரிபார்த்தார். இதனையே கோட்பாட்டுப் பணி என்றுஅழைக்கின்றோம். கம்யூனிஸ்டுக் கட்சி எவ்வாறு அத்தகைய பணியைச் செய்வது என்றுகற்றுக் கொள்ளுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான தோழர்கள் தேவையாக உள்ளனர்.

கம்யூனிஸ்டுக் கட்சியில் இவ்வகையான கோட்பாட்டு ஆராய்ச்சியை செய்வதற்கு கற்கஇயலுகின்ற பல தோழர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலோர் கூர்மதிஉடையோராகவும் முன்னுக்கு வரக்கூடியவராகவும் இருக்கின்றனர். நாம் அவர்களைஉயர்வாக கருத வேண்டும். ஆனால் அவர்கள் சரியான கொள்கை நெறிகளை கடைபிடித்துகடந்தகாலத் தவறுகளை மீண்டும் செய்வோராக இருக்கவே கூடாது. அவர்கள் வறட்டுக்கோட்பாட்டியத்தை கைவிட்டாக வேண்டும். நூல்களில் தயார்நிலையில் உள்ளசொற்றொடர்களோடு தம்மை குறுக்கிக் கொள்ளக்கூடாது. -மாவோ-

புத்தகங்களை மட்டும் படித்து அறிவு பெற்றவர்கள் நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டுநடைமுறைப் பணியாளர்களாக மாற்றுவதன் மூலமே அவர்களை ஒரு சிறந்த அறிவுஜீவிகளாகமாற்ற முடியும், வேறு வழியில்லை.

காரல் மார்க்ஸ் வெறும் படிப்பாளி மட்டுமல்ல, அவர் நடைமுறைப் பணிகளில் பங்கெடுத்துபுரட்சிகரமான கோட்பாடுகளை உருவாக்கி அதனை மீண்டும் செயல்படுத்தி சோதனை செய்துபார்த்து அவரால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டின் சரியான தன்மையை உறுதி செய்தார்.

பொருளாதாரம் பற்றி பலர் எழுதிய நூல்களை மார்க்ஸ் படித்தார். பொருளாதாரம் பற்றியஏராளமான தகவல்களை சேகரித்து அப்பிரச்சனையை அலசி ஆராய்ந்து பொருளாதாரம் பற்றிஇதுவரை யாரும் கண்டுபிடிக்காத புதிய உண்மைகளை கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார்.

ஒவ்வொரு பிரச்சனை தொடர்பாக இதுவரை பல அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டஉண்மைகளைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது முதல்படியாகும். அந்த அறிவைப்பயன்படுத்தி குறிப்பிட்ட பிரச்சனைகளை நடைமுறையில் நாம் கையாண்டு அந்தஅனுபவத்திலிருந்து புதிய கோட்பாட்டு உண்மைகளை நாம் கண்டுபிடித்து அதனைநடைமுறையில் சோதித்துப்பார்த்து உறுதி செய்ய வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டியகோட்பாட்டுப் பணியாகும்.

இந்தப் பணியை செய்வதற்கு ஒரு கம்யூனிஸ்டு அமைப்பிற்கு பலபேர் தேவைப்படுகிறார்கள்.

அதற்குத் தகுதியானவர்கள் இந்தியாவில் பலர் இருக்கிறார்கள். எனினும் அவர்களிடமுள்ளஅதிகாரவர்க்கப் பண்பு, குறுங்குழுவாத பண்பு, தான் என்ற அகம்பாவப் பண்பு போன்ற தீயபண்புகளை கைவிட வேண்டும். இது போன்ற தீய செயல்களை அவர்கள் மீண்டும்செய்யக்கூடாது. இவற்றில் உறுதியாக நின்று பணி செய்பவர்கள் மூலம் ஒரு சிறந்தகம்யூனிஸ்டு கட்சியைக் கட்ட முடியும். அல்லது நிலவுகின்ற கம்யூனிஸ்டு கட்சியையும் சிறந்தகம்யூனிஸ்டு கட்சியாக மாற்றி வளர்க்க முடியும்.

இவ்வுலகில் ஒரே ஒரு வகையான உண்மையான கோட்பாடு உள்ளது. அக்கோட்பாடு புறவய

எதார்த்தத்தில் இருந்து வரையப்பட்டு பின்னர் புறவய எதார்த்தத்தினால் சரிபார்க்கப்படுகிறது.

நமது பொருளில் வேறெதுவும் கோட்பாடு என்ற பெயருக்கு ஏற்றதல்ல. கோட்பாடுநடைமுறையோடு இணைக்கப்படாத பொழுது அது குறிக்கோளற்றதாக மாறுகிறது என்றுஸ்டாலின் கூறினார். குறிக்கோளற்ற கோட்பாடு பயனற்றதும் போலியானதும் ஆகும். அதனைகைவிடப்பட வேண்டும். குறிக்கோளற்று கோட்பாட்டு மயப்படுத்துவதில் மடமையாகஉள்ளோரை ஏளனம் செய்ய வேண்டும். மார்க்சிய-லெனினியமே மிகச்சரியானஅறிவியல்ரீதியான புரட்சிகர பேருண்மையாகும். அது புறவய எதார்த்தத்தில் பிறந்து புறவயஎதார்த்தத்தினாலேயே சரிபார்க்கப்படுகிறது. ஆனால் பலர் மார்க்சிய-லெனினியத்தைப்பயின்று அதை உயிரற்ற வறட்டுச் சூத்திரமாக எடுத்துக்கொள்கின்றனர். இவ்வாறு செய்துகோட்பாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையிட்டு தமக்கும் அதே சமயத்தில் பிறதோழர்களுக்கும் தீங்கைச் செய்கின்றனர். மறுபுறத்தில் நடைமுறைப்பணியில் ஈடுபட்டுள்ளநமது தோழர்கள் தங்களின் அனுபவத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்களானால்அவர்களும்கூட தோல்வியுறுவர். இவர்கள் பொதுவாக அனுபவத்தில் வளமாக உள்ளனர்என்பது உண்மையே. அது மிகவும் மதிப்பு மிக்கது. ஆனால் அவர்கள் தங்களின் சொந்தஅனுபவத்தோடு சுயதிருப்தி அடைவார்களானால் அது மிகவும் அபாயகரமானது. அவர்கள்தங்களின் அறிவு பெரும்பாலும் புலனறிவு என்பதையும் பகுதி அளவிலானது என்பதையும்முழுமையான, பகுத்தறிவை தாங்கள் கொண்டிராமல் இருக்கின்றனர் என்பதையும் உணர்ந்தாகவேண்டும். வேறு சொற்களில் சொல்வது என்றால் அவர்கள் கோட்பாடு இல்லாமல்இருக்கின்றனர். அவர்களின் அறிவும்கூட ஒப்புநோக்காக நிறைவில்லாதது. ஒப்பீட்டுரீதியானமுழுநிறைவான அறிவு இல்லாமல் புரட்சிகரப் பணியை நன்றாக செய்வது சாத்தியமற்றது.-

மாவோ-

எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதுபற்றிய உண்மையான கருத்து, ஒரு கருத்தாக மட்டுமேஇருக்க முடியும். அந்த கருத்து நடைமுறையில் உண்மை என்று நிருபிக்கப்பட்டதாக மட்டுமேஇருக்க முடியும். அதாவது ஒரு உண்மையான கோட்பாடானது நடைமுறை எதார்த்தத்திலிருந்துபெறப்படுகிறது. அது மீண்டும் எதார்த்த நடைமுறையில் சரிபார்க்கப்படுகிறது.

ஆகவே நாம் எந்த கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற கேள்விக்கு,நடைமுறையோடு இணைக்கப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையிலேயேதான் செயல்படவேண்டும். அதாவது நடைமுறைக்கு பொருத்தமில்லாத கோட்பாட்டின் அடிப்படையில்செயல்படக் கூடாது. அதாவது நாம் ஒரு கொள்கையை உருவாக்குகிறோம் என்றால் அந்தக்கொள்கையை நாம் செயல்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கைசரியானதா? அல்லது தவறானதா? என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அந்த கொள்கைசரியானது என்பதை நாம் நடைமுறையில் உணர்ந்தால் அந்தக் கொள்கையை நாம் தொடர்ந்துகடைபிடிக்கலாம். இதற்கு மாறாக அது நடைமுறையில் தவறு என்று தெரிந்தால் நாம் அதனைஉடனடியாக கைவிட வேண்டும்.

இதேபோல் நாம் நடைமுறையில் தவறுகள் செய்வோம், அந்த தவறுகளால் பல தீய விளைவுகள்ஏற்படும். அந்த தீய விளைவுகள் ஏன் ஏற்பட்டது என்பதை பரிசீலிக்கும் போது நமதுதவறுகள்தான் அதற்குக் காரணம் என்பதை புரிந்துகொள்ள முடியும். நாம் நமது தவறுகளைதெரிந்துகொண்டு அதனை கைவிட்டால் நாம் நமது லட்சியத்தில் முன்னேற முடியும். அதற்குமாறாக நமது தவறுகளை களையத்தவறினால் நாம் தொடர்ந்து முன்னேற முடியாமல் பலதோல்விகளை சந்திக்க வேண்டியதுதான்.

உதாரணமாக ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு தோழரைப் பற்றிஎவ்விதமான ஆய்வும் செய்யாமல் அகவயமாக தவறாக மதிப்பிட்டு அவரைப் பற்றி அவதூறுபிரச்சாரம் செய்வதன் காரணமாக அமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அதாவது அமைப்புபிளவுபடுவதற்கு புறநிலை ஆய்வு செய்யாமல் அகவயமாக முடிவெடுப்பதனால் அமைப்புபிளவுபட்டது என்பதை புரிந்துகொண்டு இத்தகைய அகநிலைவாத கண்ணோட்டத்திலிருந்துபிரச்சனைகளை ஆராய்வது தவறானது என்பதை புரிந்துகொண்டு அகநிலைவாத ஆய்வுமுறையை கைவிட்டால் மட்டுமே அந்த அமைப்பில் வரும்காலத்தில் பிளவுகளை தவிர்க்கமுடியும். இதற்கு மாறாக அகநிலைவாத கண்ணோட்டத்தை தொடர்ந்தால் அமைப்பானதுமேலும் மேலும் பிளவுபட்டுக்கொண்டேதான் இருக்கும். இந்த உண்மையை நடைமுறைஅனுபவத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும். தனக்கு வேண்டியநண்பரையோ அல்லது உறவினரையோ தவறாகப் புரிந்துகொண்டு அந்த உறவில் பாதிப்பைசந்தித்தவர்களால் இதனை புரிந்துகொள்ள முடியும். ஆகவேதான் புறநிலை எதார்த்தத்தைஆழமாக அலசி ஆராய்ந்து முடிவிற்கு வரவேண்டும் என்கிறோம். அரைகுறையானவிவரங்களைக் கொண்டும் அவசரகதியிலும் நாம் முடிவெடுக்கக் கூடாது என்கிறோம்.

சிலர் விஞ்ஞானக் கோட்பாடுகளை வறட்டுத்தனமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பானபிரச்சனைக்கு குறிப்பான தீர்வு என்ற பொதுக்கோட்பாட்டை புறக்கணிக்கின்றனர்.

விஞ்ஞானமானது குறிப்பாக மார்க்சிய விஞ்ஞானமானது பொதுவான கோட்பாடுகளைமட்டுமே நமக்கு வழங்கியுள்ளது. அதனை அப்படியே வறட்டுத்தனமாக குறிப்பானபிரச்சனைக்கான தீர்வாக முடிவு செய்யக் கூடாது. இந்த பொதுக் கோட்பாட்டை குறிப்பானபிரச்சனைக்குப் பொருத்திப் பார்த்து குறிப்பான கோட்பாடுகளை நாம் கண்டுபிடிக்கவேண்டும். உதாரணமாக தேசிய இனச் சிக்கல்களை தீர்ப்பதற்கு தேசிய சுயநிர்ணயஉரிமையை பொதுவான தீர்வாக மார்க்சியம் வைக்கிறது. இதனை வறட்டுத்தனமாகப்புரிந்துகொண்டு தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிந்து சுதந்திர அரசைஉருவாக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு தனிநாடாக ஆக வேண்டும் என்றும் சிலர் கருதுகிறார்கள். ஆனால் குறிப்பாக இந்திய அரசின் நிலை, சர்வதேச நிலை, இந்தியாவிலுள்ளபிற தேசிய இனங்களின் நிலை, இந்திய மக்களின் உணர்வு நிலை போன்ற பல அம்சங்களைபருண்மையாக ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்கமுடியும்.

சிலர் நூறு சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால்எதார்த்தத்தில் நூறு சதவீத உண்மை என்பது எங்கும் இருக்க முடியாது. முரண்பாடு அனைத்தும்தளுவியது என்ற கோட்பாட்டை புரிந்துகொண்டவர்களால் இதனை புரிந்துகொள்ள முடியும்.

நாம் ஒரு பிரச்சனையைப் பற்றி அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும்போது அது நூறுசதவீதம்சரியாக இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஒப்பீட்டளவில் அது சரியானதாகத்தான் இருக்கமுடியும். ஆகவேதான் புரட்சியில் ஈடுபடக்கூடிய தோழருக்கு ஒப்பீட்டுரீதியான முழுநிறைவானஅறிவு தேவை என்று மாவோ வலியுறுத்துகிறார். கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்துநாம் நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்று கருதுவது நடைமுறை சாத்தியமில்லை. அதற்காக நம்மிடம் எவ்வளவு குறை இருந்தாலும் பரவாயில்லை என்று கருதக்கூடாது.

நடைமுறையில் அதிகபட்சம் நாம் சரியானவராக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். நடைமுறையில் நம்மிடம் தவறுகள் காணப்பட்டாலும், பிறர் நமது தவறுகளை சுட்டிக்காட்டினாலும் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். அது போலவே நமது கருத்துகள் நடைமுறையில் சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை. மாறாக தவறாக இருந்தால் அதனைமாற்றிக்கொள்ள வேண்டும். நாம் நினைப்பதெல்லாம் நூறு சதவீதம் சரியானது என்றுகருதக்கூடாது. ஒப்பீட்டளவில் அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம்.

நடைமுறைதான் உண்மை எது என்பதை இறுதியில் தீர்மானிக்கும். ஆகவே உண்மையானநிலைபாட்டை கண்டுபிடிக்க நமக்குள்ளே இயக்கவியல் பொருள்முதல்வாதக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் விவாதிப்பதும், நடைமுறையில் செயல்படுத்தி சோதித்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை கற்றுக்கொள்வோம். அதனை நடைமுறையில் பொருத்திப் பார்த்து நமது கொள்கைகளை தீர்மானிப்போம். அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்தி சோதிப்போம். அதன் மூலம் தற்போதையசூழலுக்குத் தேவையான கோட்பாட்டை கண்டுபிடிப்போம். அதன் அடிப்படையில் செயல்பட்டு உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனம், பண்பாடுரீதியான அடிமைத்தனம்போன்ற அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்போம். அதற்கு நமக்குத் தேவை மார்க்சிய கோட்பாட்டுப் புரிதலுக்கான அடிப்படை கல்வி மற்றும் அதனை பொருத்திசெயல்படுத்துவதற்கான நடைமுறைப் பயிற்சி ஆகும்.

தொடரும்... தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்