நமது கட்சி பற்றியும் அதனுடைய நிறைகுறை பற்றியும் ஒரு சுய விமர்சனத்தை மேற்கொள்வதற்கு முன் மகத்தான தலைவர் லெனின் சொற்களை மனதில் கொள்வது அவசியமானதாகும், "மிகவும் கடினமான தியாகங்களை கொண்ட ஒரு நீண்ட கடுமையான போராட்டம் என்று ஒரு புரட்சி எப்போதும் இருந்ததில்லை இருக்கவும் முடியாது".
மேலும் தலைவர் மாவோவின் கீழ்க்கண்ட சொற்களையும் நாம் நினைவு கூறுவோம்," கஷ்டமான காலங்களில் நாம் நம்முடைய சாதனைகளை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்கவேண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும்".
நாம் நம்முடைய தவறுகளை பார்ப்பதிலும் நம்முடை இழப்புகளை கணிப்பதிலும் மட்டுமே நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதே சமயத்தில் சாதனைகளை பார்க்கவும் அவற்றின் மூலமாக விளைந்த ஜனநாயகப் புரட்சியின் முன்னேற்றத்தை பாராட்டவும் நாம் தவறினால் நம்முடைய முந்தைய அனுபவங்களிலிருந்து தவறான படிப்பினைகளை பெற்றுக் கொண்டு எதிர்கால புரட்சி ஒரு கடுமையான மோசமான செயலை செய்து கொண்டிருப்போம்.
இரண்டு போக்குகள் பொதுவாக நடைமுறையில் காண்கிறோம். ஒன்று தவறுகளை பெரிது படுத்தி பல்வேறு திறமையான முறைகள் மூலமாக சாதித்த பல வகைகளை சாதனைகளை குறைத்து மதிப்பிடும் முயற்சியாகும், மற்றொரு போக்கானது ஒரு தவறை கூட ஒத்துக் கொள்ள மறுப்பது ஆகும் இந்த இரண்டு போக்குகளுமே அபாயகரமானவை இரண்டுமே எதிர்த்துப் போராட வேண்டியவை.
புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க மூன்றாம் வகைகளும் முன்வைத்த கோட்பாடுகள்
இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் தான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது . நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 50 ஆண்டுகால மார்க்சிய- லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .இந்த தடைகள் கடக்கப் பட்டாக வேண்டும்.
சிபிஐ சிபிஎம் கட்சிகள் கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினரின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. புரட்சியாளர்களோ அதிகாரவர்க்க மூலதனத்திற்கு எதிராகவும் நிலவுடமை கும்பலுக்கு எதிராக சரியான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கு அமைப்பதில் திறமை அற்றவர்களாக இருக்கின்றனர் .
கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் வர தயங்குகின்றனர். நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் தரப்புக்கு ஓடிச்சென்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு துரோகமிழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைப்புக்கு இட்டுச் சென்ற காவுஸ்திகியால் தலைமை தாங்கப்பட்ட இரண்டாம் அகிலத்தின் துரோகத்தையும் முறியடித்து லெனின் தலைமையில் போல்சுவிக் கட்சி மாபெரும் அக்டோபர் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்தியது .இதனால் உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கு உத்வேகம் பெற்றனர் .மூன்றாம் அகிலம் உருவாக்க வழிகோலியது.
ஒரு புரட்சியை நேசிக்கும் புரட்சியாளர்தங்களுடைய புரட்சிகர உறுதிப்பாட்டை பேணுவதிலும் எடுத்துக்காட்டாக இருக்கின்ற தோழர்கள் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வதும் எவ்வித அவசியமற்ற பயங்களை சந்தேகங்களை ஆகியவை போலிமதிப்பு உணர்வும் இல்லாமல் புரட்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தேவையான படிப்பினை பெறுவது முதன்மையான கடமையாக உள்ளன.
இந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடிப்பது மூலம் மட்டுமே கட்சிக்கு அதனை என்று நெருங்கி தாக்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்த தவறுகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுபட்டு வெளி வரும்.
சுயவிமர்சனமானது ஒரே நாளில் செய்து முடிக்கக் கூடிய ஒரு விஷயம் அல்ல அது கட்சிக்குள்ளேயே மேலிருந்து கீழ் வரை மேற்கொள்ள வேண்டிய ஒரு இயக்கமாகும். அது கட்சி உறுப்பினர்களின் கணிப்பிலும் நடைமுறையிலும் தடையாக நிற்கின்றன தவறான சிந்தனைகளைக் களைவதன் மூலமாகவும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை ஒளியில் ஒரு சரியான கொள்கை சரியான கணிப்பு ஆகிவற்றை வரையறுப்பது மூலமாகவும் இவை பெரிய கல்வி நடவடிக்கையாகும். எனவே சுயவிமர்சனம் என்பது ஒரு போராட்டமாகும் வெளியில் நடக்கின்ற வர்க்கப் போராட்டத்தை பிரதிபலிக்கின்ற கட்சியின் உள் போராட்டமாகும்.
கங்கை ஆற்றில் ஒரு மூழ்கு மூழ்கிய உடனே எவ்வாறு ஒருவன் தன்னை முழுமையாக சுத்தப்படுத்திக் கொள்ள முடியாதோ அது போல கடந்த கால தவறுகளை எண்ணி வருத்தப்பட்ட உடனேயே கட்சியினுள் இன்று தடையாக உள்ள தவறான கணிப்பை நம்மால் கலைந்து விட முடியாது ஒப்பு நோக்குகையில் ஒருவன் தன்னுடைய தவறுகளை உணர்வது என்பது எளிதானது ஆனால் ஒவ்வொரு நேரத்திலும் சூழ்நிலையிலும் மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஒப்பு நோக்குதல் கஷ்டமானதாகும்.
அன்புத் தோழர்களே நாம் தேர்தலில் பங்கேற்பது புறக்கணிப்பதா?
இதை மட்டுமே அரசியலாக நினைத்து சில மார்க்சிய-லெனினிய அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன உண்மையில் நமது ஆசான்கள் தேர்தலைப் பற்றி தெளிவாக தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் அப்படி எனில் அதனை செயல் தந்திர ரீதியாக நாம் எப்படி அணுகுவது என்பது நம் முன்னுள்ள கேள்வி தேர்தலில் பங்கு எடுப்பதால் மட்டுமே ஒருவர் பிற்போக்குத்தனமான மாறிவிடாது்.
தேர்தலில் புறக்கணிப்பது மட்டுமே ஒருவர் செயல் படுத்திக் கொண்டிருந்தால் அவர் புரட்சியாளராக மாறிவிட முடியாது ஆகவே தேர்தலைப் பற்றி நமது கண்ணோட்டம் தான் என்ன?
தேர்தலைப் பற்றி தெளிவான கருத்தை முன்வைத்து தனது பணிகளை தனது கட்சியை வளர்த்தவர் எனில் அதன் அடிப்படையில் பலர் அதனை எடுத்து வருகின்றனர் அதன் சில பகுதியை வெட்டியோஒட்டியோ தங்களுக்கு ஏற்றவாறு இங்கே பலர் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் ஆகவே உண்மையாக மார்க்சிய-லெனினிய கற்பவர்கள் பேச வேண்டியவை என்ன?
மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு வழிகாட்டியது இந்த அகிலத்தின் இரண்டாவது மாநாட்டில் லெனின் வரையறுத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி பாதை குடியேற்ற நாடுகளுக்கு அரசியல் திசை வழியை அமைந்தது . குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டம் இணைவதன் மூலமாக குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக போராட்டமாக இருக்கும். இந்த வழியில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சரியாக புரிந்துகொண்டு சீனாவின் குறிப்பான நிலைமைக்கு ஏற்ப புதிய ஜனநாயக அரசை அமைத்தது.குடியேற்ற நாடாக இருந்து இந்தியாவுக்கு இந்த வழி பொருந்தக்கூடியது அகிலம் தனது பிரதிநிதிகள் மூலமாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவில் பல்வேறு வர்க்கங்களின் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்து இருந்தது அதோடு ஜமீன்தார் எதிர்ப்பு நிலவுடைமை எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்து கொண்டிருந்தது.
புற சூழல் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கும் பலம் பெறுவதற்கும் உகந்ததாக இருந்தது .அகிலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு கம்யூனிச குழுக்களும் தனிநபர்களும் இணைந்து பலம்வாய்ந்த ஒன்றுபட்ட கட்சியை கட்டுமாறு அறிவுறுத்தியது 1925 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆனது பல்வேறு விதமான சதி வழக்குகள் போடப்பட்டு துவக்கத்தில் கடும் அடக்குமுறைக்கு உள்ளது ஆனாலும் நாடு தழுவிய தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்கள் அறிவாளிகள் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இணைந்தனர் கடற்படை தரைப்படை விமானப்படை இராணுவத்திலும் கூட அதற்கு கட்சிக் கிளைகள் இருந்தது .
தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டம் என வளர்ந்தது. 4,000பேர் புரட்சிக்காக தியாகிகள் ஆகினர் 3000 கிராமங்கள் 10 ஆயிரம் ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்து கொள்வதிலும் அமுல்படுத்துவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது.
தங்களுக்கான திட்டம் முன் வைத்து எல்லா ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயார் அற்ற நிலையில் இருந்தது . ஏனெனில் அது கருத்தியல் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தது . நீண்டகாலம் விஞ்ஞானபூர்வமான வேலைத்திட்டம் இல்லாமலே செயல்பட்டதுபுரட்சிகரமான தத்துவம்(வேலை திட்டம்) இல்லையேல் புரட்சி இல்லை என்கிற லெனின் புரிதல் கைவிடப்பட்டது.. இதன் விளைவு கட்சிக்குள் கோஷ்டி வாதம் பிராந்தியவாதம் பிளவு நடவடிக்கைகள் சுயநல அடிப்படையில் குழு அமைத்தல் போன்ற போக்குகள் அமைப்புக்குள் நிலவியது.
இந்நிலையில் 1933இல் சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழிகாட்டியது உட் குழப்பங்களுக்கும் பிளவுகளுக்கும் பரிதாபகரமான அத்தியாயத்துக்கு முடிவு கொண்டுவர வலிமைமிக்க ஒன்றிணைந்த ஒரு கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி வேண்டுகோள் விடுத்தது ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிலசமயம் இடதுசாரி தந்திரத்தையும் சிலசமயம் வலதுசாரி தந்திரத்தை பின்பற்றியே வந்துள்ளன சரியான வழி முன்வைக்கப்படும் போது அது நிராகரிக்கப்பட்டதே வந்துள்ளது. அன்றைய சூழ்நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது :-
இந்தியாவை நோக்குவோமானால் இங்கு ஏறத்தாழ இதே நிலைமைகள் பரந்த அளவில் இருந்தது காண்கிறோம்.
ஆனால் இங்கு சக்திகளின் பலாபலம் வேறுவிதமாக இருந்தது ஒரு புறம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் மேலும் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன பெரும் முதலாளிகள் மேலும் அதிகமாக அய்க்கியப்பட்டிருந்தனர். ஒரு தனி ஏகாதிபத்தியத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். சீனாவைப் போல் போட்டியாக ஏகாதிபத்திய அரசுகளிடையே அவர்கள் பிரிக்கப்பட்டு இருக்கவில்லை. அதேவேளையில் நிலவுடமை உறவுகள் குறிப்பாக சுதேசி அரசுகளில் தொடர்ந்து நிலவின. மற்றொருபுறம் பாட்டாளி வர்க்கம் விவசாய வர்க்கத்தினுடன் ஒரு அணியை நிறுவ தவறியது.
இவ்வாறு சீனாவை காட்டிலும் இங்கு எதிர்ப்பு சக்திகள் கூடுதலான பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருந்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளிவர்க்கம் தக்க வைத்துக் கொண்டு நிலபிரபுத்துவம் ஏகாதிபத்திய அவற்றுடன் சமரசம் செய்து கொண்டது.
இன்றைய உலக சூழலில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் புதிய காலனிய முறையில் மேலும் மேலும் தீவிரப்படுத்தும் ஒடுக்குமுறை போர்களும் வரலாறு காணாத கொள்ளையும் நடைபெறுகின்றன. ஆனால் இதை எதிர்த்து சவால் விடுவதற்கு சோசலிச நாடுகளும் இல்லை கம்யூனிச நாடுகளும் இல்லை .
அப்படியே உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலவீனப்பட்டு பிளவுண்டு பல்வேறு விதத்தில் இருக்கும் போது அநீதி போரை எதிர்க்க திறன் இல்லை உண்மைதான்.
தோழர் சூ என் லாய் கூறியதாக கீழ்காணும் விவரங்களை காண்போம், ஒவ்வொரு நாட்டிலும் நிலைமைகள் வேறுபடும் எனவே ஒவ்வொரு கட்சியும் மார்க்சிய-லெனினியதை திட்டவட்டமாக செயல்படுத்த வேண்டும் ,இது பணிவாக நடந்து கொள்வதில்லை ஆனால் யதார்த்தத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டியதாகும்,நீங்கள் செல்லும் பாதை உங்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.
உலகம் வர்க்கங்களாக தேசங்கள் ஆகும் பிரிவு பட்டுள்ளது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளி வர்க்கம்தான் அதனதன் சொந்த நாட்டின் விடுதலையை சாதிக்க முடியும் எனவே தேசிய எல்லைகளை கருத்தில் கொள்ளாமல் நம்மால் இருக்க முடியாது.
கட்சி என்பது ஒரு போராடும் அமைப்பு, முன்னணிப் படையானது வெகுஜன திரளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அது தோல்வி அடைய நேரிடும். மாவோ தலைமையில் நடந்த பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ சிந்தனைகளுடன் மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டார்கள் அதாவது அதிகாரத்தை கைப்பற்றிய பிறகும்கூட நாமும் மக்கள் திரள் வழியில் தான் செல்ல வேண்டும் .
அவரே சொல்கிறார் நான் சங்காய் நகரத்தில் இருந்தேன் அப்போது நாங்கள் பல கூட்டங்களை நடத்தினோம் நாங்கள் சிறிய எண்ணிக்கையான முன்னணி படையினர் அல்லது ஊழியர்களை திரட்டினோம். நாங்கள் போராட்டத்தின்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென தோன்றி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்வோம்.கூட்டம் துவக்கத்தில் கொஞ்சம் பேர் மக்கள் இருப்பார்கள் ஆனால் இறுதியில் சிரிப்பது சிறிய முன்னணி படை தான் ஆளும் வர்க்கம் அடக்க முயன்றபோது நாங்கள் சிறு குழுக்களை அமைத்து அவர்களை தீர்த்துக்கட்டினோம் இவை கொஞ்சம் காலம் தான் செயல்பட்டது எங்களுக்கு பின்னடைவுதான் கொடுத்தது (1927 காங்செங் தலைமையில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிடுகிறார்).
1927ம் அண்டு தோல்விக்குப் பிறகு இடதுசாரி சாகாத அனுபவத்தை பார்க்க நேர்ந்தது அவர்கள் சிறிய எண்ணிக்கை கொண்டவர்கள் அவர்கள் கிராமங்கள் சென்று நிலப்பரப்புகளை கொன்றார்கள் அவர்களால் தற்காலிகமாகத் தான் மக்களை திரட்ட முடிந்தது அவர்கள் தங்களை மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள வில்லை .அவர்களுக்கு மக்கள் திரள் அடிப்படை இல்லை சிறிய எண்ணிக்கை கொண்டவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் என்று இடம் மாறிக் கொண்டே இருந்தார்கள் இவர்கள் எதிரியால் அடக்கப்பட்டார்கள்
இந்தமாதிரியான முறை இங்கே தோல்வி கண்டது எனவே முக்கிய பிரச்சினை வழி சம்பந்தப்பட்டதாகும் எந்த வழியையும் கொள்கையை எடுக்கிறீர்கள் என்பது முக்கியம் .அடுத்து மக்கள் திரளை திரட்ட வேண்டியதில்லை என கட்சி நிலைப்பாட்டை எடுத்தால் தோல்வியில்தான் முடியும்.
அடுத்த பிரச்சனை எதுவெனில் விமர்சனம் சுயவிமர்சனம் மூலமாக கட்சியை தூய்மைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளதாக .ஒருவர் துணிச்சலுடனும் விமர்சனம் சுயவிமர்சனம் செய்கிறார் என்றால் அவர் முறையாக செயல்பட முடியும்.கட்சித் தலைமை இதை செய்யாவிட்டால் அவர்கள் நாசமாகி போய்விடுவார்கள் .
வெற்றிக்குப் பிறகு தலைவர் மாவோ கடந்த காலத்தை மறந்து விடாதே என்று அறிவுறுத்தினார் வெற்றிக்கு முன்பு 28ஆண்டுகளாக கட்சி இருந்து வந்துள்ளது கடந்த அரை நூற்றாண்டு கால பாதையை நாம் பரிசீலனை செய்தால் சரி தவறுகளை சீர் தூக்கி பார்க்க முடியும்.
1967ல் மாவோ சாரு மஷூம்ந்தருக்கு கட்சியை பற்றி கூறியதாவது உங்களுக்கு குறைந்த அனுபவம் தான் உள்ளது எனவே படிப்படியாக உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். உங்களது பொதுவான திசைவழியில் விடாப்பிடியாக எவ்வளவு காலம் இருக்கிறார்களோ அப்போது தான் நீங்கள் திட்டவட்டமான கொள்கைச் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். "தவறுகளை தவிர்ப்பதுஎன்பது சாத்தியமில்லை நாங்கள் பின்னடைவுகளை சந்தித்துள்ளோம் என்று"தவறான கருத்துகள் தவறான கொள்கையை தவறான வேலை முறைகள்" ஆகியவை புரட்சியின் எதிரிகள் என்று சாரூ அக்டோபர் 8-இல் கூறியதற்கு மேல் உள்ள பதிலாக மாவோ கூறியுள்ளார். இது பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளது .
மேலும் தோழர் சாரூ தலைமையில் உங்கள் எதிர்காலம் இருக்கிறது என நாங்கள் நம்புகிறோம்.
எதிரிக்கு எதிரான தாக்குதல் பற்றி "கஷ்டமும் இல்லை சாவும் இல்லை" என்பதை இயங்கியல் ரீதியில் எடுத்துக் கொள்ளலாம் .கஷ்டங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர்களிடமிருந்து ஒதுங்கி விடாதீர்கள். சகாசத்திற்காக தியாம் செய்யவேண்டாம் ;எதிரிகளை எதிர்த்துப் போராடுங்கள்; போலீசாரை இரகசியமாக அழித்தொழிப்பது அராஜகம் ஆனது .இது நீண்ட காலம் நீடிக்காது; இது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் .
ஆனால் இந்தியாவில் இன்று வரை புரட்சியும் நடைபெறவில்லை அதே போல் கட்சியும் பலப் பட இல்லை பாராளுமன்ற முறையிலான சுரண்டும் வர்க்கம் தெரியவில்லை மக்கள் ஜனநாயக குடியரசு ஆகவும் இல்லை ஆயினும் உலக கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட கதி இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ளது திரிபுவாதம் இடதுசாரி குறுங்குழுவாதம் வறட்டு வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டே இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் உள்ளது. இரண்டாம் அகில கட்சிகள் தங்கள் நாட்டின் முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக மாறி தொழிலாளிகளை அதிகாரத்திற்கு இட்டுச் செல்லும் போது மிகுந்த கட்சிகளாக இல்லை மாறாக பொருளாதார போராட்டங்களுக்கும் சட்டசபை தேர்தலுக்கு சட்டசபை போராட்டங்களுக்கும் அன்புத் தோழர்களே நாம் இரண்டு வாரங்களாக மார்க்சியம் பேசுவோம் வாருங்கள் என்ற குழுவில் தொடர்ந்து இந்தியாவில் காணப்படும் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் அதன் தன்மைகளைப் பற்றியும் இன்று நாம் புரட்சியில் பின்தங்கியுள்ள நிலை பற்றியும் பேசி உள்ளோம்.
நாம் நம்முடைய தவறுகளை பார்ப்பதிலும் நம்முடை இழப்புகளை கணிப்பதிலும் மட்டுமே நம்மை ஈடுபடுத்திக் கொண்டு அதே சமயத்தில் சாதனைகளை பார்க்கவும் அவற்றின் மூலமாக விளைந்த ஜனநாயகப் புரட்சியின் முன்னேற்றத்தை பாராட்டவும் நாம் தவறினால் நம்முடைய முந்தைய அனுபவங்களிலிருந்து தவறான படிப்பினைகளை பெற்றுக் கொண்டு எதிர்கால புரட்சி ஒரு கடுமையான மோசமான செயலை செய்து கொண்டிருப்போம்.
இரண்டு போக்குகள் பொதுவாக நடைமுறையில் காண்கிறோம். ஒன்று தவறுகளை பெரிது படுத்தி பல்வேறு திறமையான முறைகள் மூலமாக சாதித்த பல வகைகளை சாதனைகளை குறைத்து மதிப்பிடும் முயற்சியாகும், மற்றொரு போக்கானது ஒரு தவறை கூட ஒத்துக் கொள்ள மறுப்பது ஆகும் இந்த இரண்டு போக்குகளுமே அபாயகரமானவை இரண்டுமே எதிர்த்துப் போராட வேண்டியவை.
புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி அமைக்க மூன்றாம் வகைகளும் முன்வைத்த கோட்பாடுகள்
இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் தான் சிக்குண்டு இருக்கும் நெருக்கடியிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.நூறு ஆண்டுகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 50 ஆண்டுகால மார்க்சிய-லெனினிய வரலாறு உட்பட ஒரு அகில இந்திய கட்சியை கட்டுவதும் உழைக்கும் மக்களின் வர்க்கப் போராட்டத்திற்கு புரட்சிகரமான தலைமை அளிப்பதும் அரசியல் அதிகாரம் வென்றெடுப்பதற்கும் இன்றளவும் இயலாத நிலையில் உள்ளது .இந்த தடைகள் கடக்கப் பட்டாக வேண்டும்.
No comments:
Post a Comment