இன்று கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமைக்கு முதலில் செய்ய வேண்டியவை

 நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் "இன்று கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமைக்கு முதலில் செய்ய வேண்டியவை". அதனை பற்றி தோழர் ரவீந்திரன் அவர்கள் பேசினார் நான் தொடக்க உரையாக, "உண்மையில் புரட்சியாளர்களை ஒன்று படுத்துவதற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன.

நேற்றைய கிளப் அவுஸ் ஒலி வடிவில் இங்கே கேட்க்க விரும்புவோர் இந்த லிங்கை அழுத்தினால் ஒலி வடிவில் கேட்க்க முடியும் தோழர்களே

1). சித்தாந்த- அரசியல் ரீதியானது
2). அமைப்பு ரீதியானது

இந்த இரண்டு அம்சங்களிலும் மார்க்சியத்திற்கும் திரிப்புவாதத்திற்கும் இடையிலும், பாட்டாளி வர்க்கத்திற்கும் அன்னிய வர்க்க போக்குகளுக்கும் இடையிலும் வேறுபாடுகள் வரையப்பட வேண்டும்.

சித்தாந்த அரசியல் ஆனது மார்க்சியத் தத்துவத்தை அதாவது மார்க்சிய லெனினியத்தை தூக்கிப் பிடித்தல் ஆகும். இன்று உலகில் உள்ள முரண்பாடுகளில் முக்கியமானது ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்குமான முரண்பாடு பிரதான முரண்பாடு என்பதை உயர்த்திப் பிடித்தல். மார்க்சியம் அல்லாத திரிபுவாதம் மற்றும் புதிய இடது போன்ற அந்நிய போக்குகளை எதிர்த்து உறுதியாக போராடுதல். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கிப்பிடித்தல் மாற்றெல்லா சீர்திருத்தவாத திருத்தலவாத போக்குகளை தூக்கி எறிதல் இந்த மூன்று போக்குகளும் சித்தாந்த ரீதியானவை ஆகும்.

அமைப்புத்துறையில், "கருத்து முதல்வாத, அராஜகவாத குருங்குழுவாத போக்குகளை முறியடித்து போல்ஷ்விக் பாணியில் இந்திய பாட்டாளி மக்கள் முன்னணி படையாக கட்சி அமைப்பதும், வர்க்க வெகுஜன அமைப்புகளை அமைப்பதும், குறிப்பான நிலைமைக்கேற்றவாரு முறைகளை கையாளுவது இவைதான் இன்று புரிந்து கொள்ள வேண்டியவையே".

இதனைப் புரிந்து கொள்ளும் முன் சிறிது வரலாற்று வழியில் சென்று புரிந்து கொள்வோமே தோழர்களே.

ஏகாதிபத்தியத்தின் இன்றைய "புதிய காலனி" காலகட்டம் பற்றி தெளிவடைய வேண்டியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்வின் விளைவாக ஏகாதிபத்தியவாதிகள் அவர்களுடைய பழைய பாணிய ஆட்சி முறையில் இருந்து முன்னால் காலணியில் தங்களால் உருவாக்கப்பட்டவர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுமான சார்பாளர்களை(ஏஜெண்ட்டுகளை) சார்ந்து நின்று ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் மேற்கொள்ளும் முயற்சிகள் எடுத்தார்கள். தேசியப் போராட்டங்களின் எழுச்சியும் சோசலிச சமூகம் தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சியும் ஏகாதிபத்தியங்களின் தகுதி மற்றும் அதிகாரம் கீழ்நோக்கி சரியத் தொடங்கியது.

குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அதுவரையில் உலகக் காட்சி படத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது பின்வரிசைக்கு தள்ளப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியமானது உலக ஏகாதிபத்திய தலைவனாக முன்னுக்கு வந்தது.

பழைய முறையிலான நேரடி காலனி ஆட்சி முறையை தவிர்த்து புதிய வடிவிலான காலனிய முறைக்கு தாவினர்.

புதிய காலனி முறையில் ராணுவம் பொருளாதாரம் அரசியல் போன்றவற்றில் தனது மேலாதிக்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிலைநாட்டியது.

அதுவரை மேலாதிக்கும் நிலை நாட்டிய பிரிட்டன் உட்பட பழைய ஏகாதிபத்திய சக்திகள் அதனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலணிகளில் நேரடியான அரசியல் கட்டுப்பாட்டை கைவிட்டார்கள்.இதனால் அமெரிக்க உள்ளடக்கிய ஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்களுக்காகவும் சுரண்டலுக்காகவும் இந்த நாடுகள் திறந்து விடப்பட்டன அதுவரை பழைய காலணி கொள்கைகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் வீழ்ச்சி அமெரிக்காவின் புதிய காலனி கொள்கை உலகமயமாக்குதலுக்கு துணை புரிந்தது.

அரசியல் துறையில் ஐநாவும் பாதுகாப்பு கவுன்சிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது அரசியல் நிர்பந்தம் செலுத்தும் கருவியாகியது . சி ஐ ஏ மற்றும் ஒரு உளவுத்துறை ஒடுக்கும் கருவி இவற்றுடன் கூடுதலாக இந்த முன்னாள் காலணி நாடுகளில் இருந்த மத அடிப்படை வாதிகள், தேசிய வெறியர்கள், ஜாதிய வெறியர்கள் மற்றும் பல பிற்போக்கு சக்தியுடன் ஏகாதிபத்திய பணத்தால் ஊக்க மூட்டப்படும் பல்வேறு தன்னார்வ குழுக்களும் அவர்களது பிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுடன் தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்துபட்ட மக்களை பிளவுபடுத்தவும் குழப்பவும் அவர்களை எதிர்ப்பு பாதையிலிருந்து திசை திருப்பவும் பயன்படுத்தப்பட்டனர், பயன்பட்டுக் கொண்டுள்ளனர்.

சுருங்கக் கூறின் இத்தகைய பிரதான கூறுகள்தான் இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட நவீன காலனி ஆதிக்கத்தின் கொடூரமான கபடத்தனமான காலனி வடிவம் என்று மாபெரும் விவாதம் நடந்த போது சீன கம்யூனிஸ்ட் கட்சியாலும் மாவோவாலும் குறிப்பிடப்பட்டது.

இன்னும் சில கருத்துக்கள்

மார்க்சிய தத்துவமானது அறிவியலோடு உண்மையோடு நெருக்கமாக பிணைக்கப்பட்ட ஒன்றானது என்பதை அறிவோம்.

இன்று உலகில் எங்கேயுமே சோசலிச நாடுகள் இல்லாத நிலையில் மார்க்சிய தத்துவம் தோற்றுப் போய்விட்டது என்று பிரசாரம் செய்கிறார்கள் உலகெங்கும்.

மார்க்சியத்தை மறுத்து திருத்தி புரட்டி ஏராளமான நூல்கள் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். வர்க்கப் போராட்டத்தை மறுத்து ஜாதி மத இனப் போராட்டங்களை பெருமளவில் ஊக்கிவிக்கப்படுவதற்காக தத்துவ அடிப்படையில் நூல்கள் கட்டுரைகள் எழுதிக் குவிக்கின்றனர்.

சோவியத்தின் தகர்வோடு சோசலிச நாடுகள் முதலாளித்து மீட்சி ஏற்படுத்தியதியதை சோசலிசத்தின் தோல்வியாகவும் மார்க்சியத்தின் தோல்வியாகவும் முன் வைக்கின்றனர். சோசலிச புரட்சிக்கு பின்பு முதலாளி வர்க்கம் முழுமையாக ஒழிக்கப்படுவதில்லை. பின்பு தொடர்ச்சியான வர்க்க போராட்டங்கள் மூலமாக வர்க்கங்கள் ஒழிந்து சோசலிசம் உறுதிப்படும் வரை வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை நமது பேராசான்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். சூழலியல் கூறுக்களின் இடமாற்றத்திற்கு முதலாளி மீட்சி வாய்ப்புண்டு என்பதை லெனின் தெளிவுபடுத்தி உள்ளார்.

இன்றைய மார்க்சிய இயக்கங்களும் தத்துவங்களும் தற்காலிக பின்னடைவை ஏற்பட்டுள்ளது மறுப்பதற்கு இல்லை. ஆனால் உலகையே ஒரே குடைக்குள் கொண்டுவர நினைக்கும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலை தற்காலிகமாக பல்வேறு நிதி ஆதாரங்களுடனும் நிதி மூலதன ஆதிகத்தின் மூலமும் மக்களின் போராட்டங்களை திசை திருப்பிக் கொண்டிருக்கலாம் ஆனால் இவற்றுக்கெல்லாம் விடிவு என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் தான் என்பது கண்கூடாக நாம் கண்டவை தான்.

நிதி மூலதன ஆதிக்கத்தால் ஏகாதிபத்தியங்கள் ஏகாதிபத்திய சூழ்நிலை மறுப்பதற்கு மார்க்சியத்தை புரட்டுவதும் ஏகாதிபத்திய சேவை செய்ய கருத்தியல் ரீதியாக பல்வேறு விதமான தாக்குதலை மார்க்சியத்தின் மீது தொடுத்துக் கொண்டுள்ளனர்.

ஏன் இன்று மார்க்சியம் பேசும் கட்சிகளும் புரட்சி பேசும் மார்க்சிய லெனினிய குழுக்களும் மார்க்சியத்தை பேசிக் கொண்டே ஏதாவது ஒரு வகையில் இந்த ஏகாதிபதிவாதிகளுக்கு சேவகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இச் சூழலில் மார்க்சிய லெனினிய கல்வியானது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது நம் கண் முன் உள்ள உண்மைதானே.

ஆக தோழர்களே நமது ஒற்றுமைக்கு தேவையானவற்றை நமது ஆசான்கள் கொடுத்து விட்டு போய்யுள்ளனர் அவற்றை கற்பதும் ஒரு சரியான மார்க்சிய லெனினிய கட்சியின் அவசியத்தை உணருங்கள்.
மேலும் இணையத்தில் கேட்க்க ஒலி வடிவில் தோழர்களே.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்