சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் மார்க்சியமா? விவாததிற்கே-01

விவாதிக்க வேண்டும் என்பதும் சரியானவற்றை கண்டடைய வேண்டும் என்பதும் மார்க்சியவாதிகளின் பணியாகும்

நாங்கள் மார்க்சியத்தை மறுக்கும் இந்த அயோக்கியதனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறோம் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் இதனை வாசித்து பதில் தாருங்கள் மார்க்சியத்தை ஏற்கும் தோழர்களே?

மனோகரன் தனது முகநூல் பகுதியில் மார்க்சியத்தை மறுத்து எவ்வளவு நச்சு தனமான கருத்தை வெயிட்டுள்ளான் நீங்களே வாசியுங்கள் அவனின் கீழ்காணும் எழுத்துகளை

 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொதுவுடைமை கொள்கை பிரகடனம் என்றவகையில் காலத்தால் அழியாது.....

ஆனால் அதன் அமலாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது போல் நடக்கவில்லை.... 

ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் புரட்சியின் உந்து சக்தியாக இல்லை...! 

இரஷ்ய சீன பாட்டாளிவர்க்கம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் பொதுவுடைமை சமூக உருவாக்கமும்  ஒரு மறு பரிசீலனை...!

1. மனிதகுல வரலாற்றின் வைகறையை உலகுக்கு அறிவித்த அறிவியல் சாசனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொன்னது போல் ஐரோப்பாவில் கம்யூனிசம் 150 ஆண்டுகள் ஆன போதும் வரவில்லை...ஏன்?

2. ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்க புரட்சிகர சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கம் சோஷலிச புரட்சியை நடத்தி வெற்றி கண்டாலும் அதனை கட்டி அமைப்பதில் தோல்வியை சந்தித்து உள்ளோம்....ஏன்?

4. சமூக ஏகாதிபத்தியம் கலைந்து, சீன முதலாளித்துவம் உலக உற்பத்தி கூடமாக்கொத்தடிமைகளின் கூடாரமாக மாறி ஐரோப்பிய தொழில்களை கலைத்தது.... நவதாராளமயத்தை அமல்படுத்தி அமெரிக்காவின் தலைமையில் கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம் உருவாக நவீன வாசலாக மாறியது....!

4. அமெரிக்க கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ உலக மேலாதிக்க பேரரசை, இரஷ்ய ஏகாதபத்தியமும், சீன கங்காணி ஏகாதிபத்தியமும் எதிர்த்து முறியடிக்குமா...? நவதாராளமய பேரழிவுக்கு மாற்று என்ன.... சிந்திக்க மறுப்பது ஏன்?

4. அகிலம் கலைப்பு, தொழிலாளி வர்க்கம் பிளவு, முதலாளித்துவ உலக ஒழுங்கு ஐ.நா.அவையும் முடக்கம், காரணம் அரசியல்....மேற்கத்திய மார்க்சியம் எனும் ஏகாதபத்திய ஆதரவு அடையாள அரசியல்....

கிழக்கத்திய மார்க்சியத்தின் மூன்றாம் அகிலம் தகர்வு... கலைப்புவாதமா  மார்க்சியமா... தீர்வு என்ன?

5. இன்றைய முதலாளித்துவம் உலகளாவிய முதலாளித்துவம் மட்டுமல்ல.... - உற்பத்தி கேந்திர இடமாற்றம்... ஏஐ உடன் வேலை நேரத்தை அதிகரித்தல் எனும் இரட்டை தாக்குதல்; - மேக மூலதனம் நாடுகளின் எல்லையை தகர்ப்பது;- அரசு முதலாளித்துவம் ஒழிப்பு;- சமூகநல அரசு தகர்ப்பு என நவீன ஆதிக்குவிப்பு முதலாளித்துவ பேரழிவு...!

கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ பேய்களின் சதிராட்டம்....! நாடாளுமன்ற நிழலிலேயே பாசிசத்தின் உக்கிரம்...!!! மதவெறி, இன வெறி பாசிசத்தின் களியாட்டம்...!!!

6. ஏகாதிபத்தியங்களின் எதிர்ப்புரட்சி வெற்றி, பாட்டாளி வர்க்கத்தின்  பயங்கர தோல்வி....!

2025ல் 1970 களின் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் துருபிடித்த ஆயுதங்கள்  இன்றைய சூழலுக்கு பொருந்துமா...? சீனாவின் சமரசம் உலக பாட்டாளிகளுக்கு வழியாகுமா?

7. மார்க்சிய, லெனினிய வழியில் இந்த புதிய நிலைமைக்கு உரிய மாற்றை முன் வைக்க கம்யூனிஸ்டுகள் சிந்திக்க தயாரா...?

8. இல்லையேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட மாற்றத்துக்கு உள்ளாகும் காலத்தில் அதனை பூஜிப்பது... அதுவும் கைவிலங்காக அல்ல அறிவின் விலங்காகவே மாறும்!

தேவை மார்க்சிய வழியில் புதிய நிலைமைகள் புதிய ஆயுதங்கள்வேண்டும்!

சிவப்பு புத்தகங்களை மறு வாசிப்பு போதாது மாற்றியும் வாசிக்க வேண்டும் சிந்தித்தால் உலகம் விடியும்...!!!

புதிய பாதையை காட்டின! ஆனால் நீடிக்க முடியவில்லை! எனவே கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கையை நிறைவேற்ற புதிய பாதை தேவை! இதை மறுப்பது பேதமை!!! மார்க்சியம் அறியாமை...!!! 

மேல் காண்பவை முகனூலில் மனோகரன் பதிவுகளே

எமது ஆசான் லெனின் இதுபோன்ற கழிச்சடைகளை "சந்தப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும்" நூலில் அம்பலப்படுத்தியிருப்பார்... என்னே சொல்ல இவர்காளை, மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்சிய வேடமணிந்த முதலாளித்துவ கைகூலிகளை...
இதற்கான எமது பதில்
 லெனின் வாழ்ந்த காலத்திலேயே பின்தங்கிய ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியை போல்ஷ்விக்குகள் நடத்தி ஒரு பின்தங்கிய நாட்டிலும் சோசலிசப்புரட்சியை நடத்தமுடியும் என்பது நிருபிக்கப்பட்டது. அப்போதும் ரஷ்யாவைக் காட்டிலும் முதலாளித்துவ வளர்ச்சிபெற்ற இங்கிலாந்து ஜெர்மன் போன்ற நாடுகளில் சோசலிசப் புரட்சிகள் நடக்கவில்லை. அதற்கு மார்க்சியத்தில்தான் குறை இருக்கிறது என்று சொல்லி மார்க்சியத்தை மாற்றிவாசிக்க வேண்டும் என்று வெற்றிபெற்ற மார்க்சியத் தலைவர்களான லெனினும் ஜோசப்ஸ்டாலினும் சொல்லவில்லை. இந்த தலைவர்களுக்கு எதிரான துரோகிகளான காவுத்ஸ்கி போன்றவர்கள்தான் மார்க்சியத்தை திருத்தினார்கள். இந்த இருத்தல்வாதிகளை லெனின் அம்பலப்படுத்தி விரட்டியடித்தார். தற்போதும் சீனா போன்ற மிகவும் பின்தங்கிய நாடுகளில் சீனக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்தி மக்கள் ஜனநாயக குடியரசை அமைத்தனர். ஆனாலும் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் புரட்சி நடக்கவில்லை, ஏன் நடக்கவில்லை? அதற்கு மார்க்சியத்தில் குறையுள்ளது என்றும் அதனை மாற்றிவாசிக்கவேண்டும் என்று சில கழிசடைகள் ஓலமிடுகிறது. இந்த கழிசடைகளின் ஆசான்கள்தான் காவுத்ஸ்கி, குருஷேவ் போன்ற திருத்தல்வாதிகள் ஆவார்கள். ரஷ்யாவில் மார்க்சியத்தை பின்பற்றும் லெனினது தலைமையிலான போல்ஷ்விக் கட்சி இருந்தது. அந்தக் கட்சி மார்க்சியத்தின் அடிப்படையில் ரஷ்ய சமூகத்தையும் ரஷ்ய மக்களையும் ஆய்வுசெய்து புரட்சிக்கான திட்டத்தை வகுத்து ரஷ்ய மக்களிடம் சோசலிச உணர்வையும் சோசலிச அறிவையும் ஊட்டி மக்களை புரட்சிக்கு தயார்செய்து மக்களை திரட்டி ஜார் மன்னனுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு எதிராகவும் போராடி அவர்களது  அரசமைப்பை தகர்த்து சோவியத்துமுறையிலான பாட்டாளிவர்க்க அரசமைப்பை கட்டியெழுப்பி புரட்சியை நடத்தியது. இங்கே நாம் இரண்டு விசயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். 1. போல்ஷ்விசம் என்று சொல்லப்படும் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி, 2. நிலவுகின்ற அரசமைப்பை தகர்த்துவிட்டு மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் முறையான சோசலிச சோவியத் அரசமைப்பை நிறுவுவது. இந்த இரணெடுவிசயங்களை கணக்கிலெடுத்து வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்படவில்லை, அதனால்தான் அங்கு புரட்சி நடக்கவில்லை. இப்போதும் அமெரிக்க மக்கள் ஆட்சிக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடுகிறார்கள் அது புரட்சியாக மாறாமல் இருப்பதற்கு காரணம் அந்த மக்களுக்கு தலைமை கொடுக்க லெனினிய பாணியிலான புரட்சிகரமான கட்சி இல்லை. அங்கு புரட்சிகரமான கட்சி இருக்குமானால் அமெரிக்காவில் புரட்சி நடக்கும். அதுபோலவே இந்திய விவசாயிகள் அவர்களது சங்கத்தின் மூலம் சிறப்பாகப் போராடினார்கள், ஒருவருடமாகப் போராடினார்கள் அது புரட்சியக மாறவில்லை என்ன காரணம்?. இங்கு புரட்சிகரமான கட்சியும் புரட்சிகரமான வழிகாட்டுதலும் இல்லை. எனவே லெனினை பின்பற்றி ஒரு போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும். அதற்கு மார்க்சிய ஆசான்களின் போதனைகளை உள்ளது உள்ளபடி நாம் படிக்கவேண்டும், அதனை பொருத்தி நம்முன்னுள்ள பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு தீர்க்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்களின் வழியில் நின்று பிரச்சாரம் செய்கிறோம். உழைக்கும் மக்களும் கம்யூனிஸ்டுகளும் மார்க்சியத்தை கற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த முதலாளிகள் சில கழிசடைகளைப் பயன்படுத்தி மார்க்சியம் போதாது என்றும், மார்க்சியத்தில் குறை இருக்கிறது என்றும் கதைகட்டிவிட்டு மார்க்சியத்தை திருத்தவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். உண்மையிலேயே இங்கு புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும் என்று சிந்திப்பதிலிருந்து கம்யூனிஸ்டுகளை திசைதிருப்பவே இந்த சதிகார்ர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆகவே தோழர்களே இந்த சதிகார்ர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இந்த சதிகாரர்களில் ஒருவன்தான் மனோகரன்.

கம்யூனிஸ்டுக் கட்சி என்றால் அந்தக் கட்சியிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் மார்க்சியத்தை பின்பற்றுபவர்களாகவும், அவர்கள் அனைவரும் மார்க்சியத்தில் தேர்ச்சிபெற்றவர்களாக இருப்பார்கள் என்று கருதுவது தவறு என்பதை லெனினை ஆழமாகப் படித்து அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அப்பாவிகள் வெளுத்தலெல்லாம் பால் என்று கருதி கம்யூனிஸ்டுக் கட்சி என்றாலே புனிதமான கட்சி என்று கருதி அதன் தலைவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்காக கருதுகிறார்கள். அது தவறானது என்பதை நாம் லெனினைப் படித்து புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் மார்க்சிய லெனினியத்தை உறுதியாகப் பின்பற்றுபவர்களும் உண்டு, மார்க்சியத்தை திருத்தி துரோகம் செய்பவர்களும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். ஆகவேதான் லெனின் கட்சிக்குள்ள இருந்த மார்க்சியத்தை திருத்தும் துரோகக் கருத்துக்களை எதிர்த்துப் போராடி அந்தக் கருத்துக்கள் எப்படி மக்களுக்கு துரோகம் செய்கின்ற கருத்து என்பதை அணிகளுக்குப் புரியவைத்து துரோகக் கருத்துக்களை முறியடித்தார் என்பதை நாம் புரிந்துகொண்டு கட்சிக்குள் வரும் தவறான கருத்துக்களைப் பற்றி லெனினது போதனைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றும் திருத்தல்வாதிகளையும் கலைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களை எதிர்த்துப் போராட முடியும். லெனினது கருத்துக்களை தொகுப்பாகப் படிக்கும் போதுதான் நாம் சமூகப் புரட்சியை நடத்துவதற்கு முன்பாகவே புரட்சிகரமான மார்க்சிய லெனினிய தத்துவத்தைப் படித்து தேர்ச்சி பெறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது. ஆகவே புரட்சிகரமான தத்துவத்தைப் படித்து தேர்ச்சி பெற்று அதன் அடிப்படையில் நாம் புரட்சிகரமான கட்சியை கட்ட வேண்டும் என்ற லெனினது போதனையை நாம் பின்பற்ற வேண்டும். ஒரு புரட்சிகரமான கட்சியும் அதனால் உருவாக்கப்படும் புரட்சிகரமான அரசியல் இல்லாமல் ஒரு நாட்டில் புரட்சிகரமான அரசியல் இருக்க முடியாது. அத்தகைய புரட்சிகரமான அரசியலை அடிப்படையாகக் கொண்ட கட்சி இல்லாமல் புரட்சியும் இல்லை, சமூக மாற்றமும் இல்லை. ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? 1. நமக்குத் தேவை முதன்மையாக புரட்சிகரமான மார்க்சிய லெனினியத் தத்துவம், 2. இந்த தத்துவக் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட புரட்சிகரமான அரசியல் வேண்டும். 3. புரட்சிகரமான தத்துவத்தையும், அரசியலையையும் உறுதியாகப் பின்பற்றுக்கூடிய உறுப்பினர்களையும் தலைவர்களையும் கொண்ட புரட்சிகரமான கட்சி வேண்டும். 4. புரட்சிகரமான கட்சியின் தலைமையையும் வழிகாட்டுதலையும் உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பின்பற்றக்கூடிய மக்கள் திரள் அமைப்புகள் வேண்டும். இந்த நான்கு விசயங்களையும் சாதிப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

முதலாளிதுவவாதிகள் தங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் தங்களுடைய ஆட்சிமுறைக்கு ஒரு பங்கம் ஏற்படுகிறது என்றால் அதை முறியடிக்க அவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் இணைந்துகொள்கிறபோது ஒட்டுமொத்த சமூகத்தையே காப்பாற்ற நினைக்கும் மாலே புரட்சியாளர்கள் நாட்டில் உள்ள சாதாரண பிரச்சனைக்கான போராட்டத்தில்கூட ஒன்றிணைந்து செயல்பட முடியாமல் போகமுடிந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம்தான். அதற்கான காரணத்தை அவவியக்கங்கள் வருங்காலத்தில் தெளிவுபடுத்துவது போல் அவர்களுக்கு இடையே ஓர் ஒற்றுமை ஏற்படும் நம்பிக்கையில் நாம் இருப்போம். 100 பூக்கள் மலரட்டும் 100 கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்று மாவோ சொன்ன கருத்தின் அடிப்படையில் கருத்துக்கள் முட்டி மோதி ஒரு தெளிவான அரசியலுக்கு அவர்கள் வந்தடையட்டும். ஆனால் அவர்களுக்கிடையே எதிர்காலத்தில் ஒற்றுமை என்ற இலக்கை நோக்கி குறைந்தபட்சம் ஒரு அரசியல் உரையாடலயாவது அவர்கள் தோழமை ரீதியில் தொடர வேண்டும். என்பதே எனது கோரிக்கை. சமூக மாற்றமும் புரட்சியும் மார்சியமும் யாருடைய தனிப்பட்ட சொத்து அல்லவே. நாங்கள்தான் இந்நாட்டில் புரட்சி செய்வோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. நாடு வலது அரசியலை நோக்கி நகர்த்தப்பட்டு அதையொட்டி அனைத்து பிழைப்புவாதக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் போது இடதுசாரிப் புரட்சியாளர்கள் மேலும் மேலும் பிரிந்து கொண்டிருக்கின்றனர்..எனவே லெனின் சுட்டிக் காட்டுவது போல வர்க்க அரசியலைச் சுற்றி மாலெ இயக்கப் புரட்சியாளர்கள் அணி திரள வேண்டிய கட்டாயச் சூழலை இக்காலகட்டம் நெருங்கிக் கொண்டிருப்பதையும் அதற்கு லெனினிய அணுகுமுறை எவ்வளவு அவசியம் என்பதையும் இத்தொகுப்பு நமக்கு உணர்த்தும் என்று நம்புகிறேன்.சில நேரங்களில் இந்திய மாலெ இயக்கங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது லெனினியம் சரியாகப் படிக்கப்படவில்லையோ சரியாக உணரப்படவில்லையோ என்று கூட உணரத் தோன்றுகிறது. லெனின் அவர்கள் சொல்லுவதுபோல சந்தர்ப்பவாதமும் திருத்தல்வாதமும் நீடித்த நோய்தான். அதைக் குணப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமெனில் புரட்சியாளர்களின் நீடித்த ஒற்றுமையும் அவர்களுக்குள் நீண்ட நெடிய விவாதமே அவசியமானதாகும் அதுதான் அந்நோய்க்கு மருந்தாகும். (திருத்தல்வாதம் நூல், பக்கம் 10)

திருத்தல்வாதம், இன்றைய சமூகத்தில் மார்க்சியவாதி என்று தன்னைச் சொல்லிக்கொண்டே மார்க்சியத்தை மறுப்பதும், எதிர்ப்பதும், திருத்துவதும், குழப்புவதும் போன்ற சதித்தனமான துரோக வேலைகளை பலர் செய்துகொண்டிருக்கும் வேளையில் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்து சித்தாந்தத் தளத்தில் விடாப்பிடியான கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

லெனினால் உருவாக்கப்பட்டது போன்ற போல்ஷ்விக் பாணியிலான கட்சியானது இங்கு கட்டப்படவே இல்லை. அதேபோல் சீன காலனி நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணி பற்றியும் புரிதல் இவர்களுக்கு இல்லை.

லெனின் வழிகாட்டுதலை இவர்கள் பின்பற்றாமல் சந்தர்ப்பவாத, சீர்திருத்தவாத, திருத்தல்வாத, சட்டவாத சகதிக்குள் வீழ்ந்து விட்டனர். 

உள்ள அமைப்பு முறையில் சட்ட ரீதியாகவும் - சட்ட விரோதமாகவும் செயல்படுவதற்கு திறன் படைத்த அணியை உருவாக்கி மக்களை தயார் படுத்துவதும் நிலைக்கு கட்சித் தலைமை செயல்படவில்லை. தலைமையின் தத்துவ போதாமை வரலாற்று நெடுகிலும் காணக்கிடக்கிறது. தலைமையானது தலைமைக்கான பாத்திரம் ஆற்றாமையால் எதிரிக்கு எதிராக போராடுவதற்கு பதில் எதிரியுடனே கூட்டணி வைத்துள்ளனர். இவை உழைக்கும் வர்க்கத்தை விடுவிப்பதற்கு பதில் எதிரியிடம் சரணடைய செய்துள்ளது. விடுதலைக்கு பதில் சரணாகதி பாதையை போதித்து நடைமுறையில் உள்ளது. 

உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாத்திரம் என்பது சுரண்டலையும் அடக்கு முறையையும் ஒடுக்குமுறையையும் கையில் எடுத்துள்ள வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் எதிரியை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்திற்கான அரசை அமைப்பது தான். அதற்குப் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கான பிரிவுகளை, கட்சி மற்றும் குழுக்களை ஒன்றிணைந்து மார்க்சிய லெனியத்தின் அடிப்படையில் புரட்சிக்கான வழிமுறையில் செயல்படாமல் வேறு பாதை இல்லை என்பதுதான்.

திருத்தல்வாதி பெர்ன்ஸ்டைன் கூறியது போல், “இயக்கம்தான் எல்லாமே, இறுதி இலக்கு ஒன்றுமில்லை" என்ற சந்தர்ப்பவாத முழக்கம், இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டார். போலி சோசலிச சொற்றொடர்களின் மறைவின் கீழ், திருத்தல்வாதிகள் மார்க்சியத்திற்கு எதிராக, பாட்டாளி வர்க்க புரட்சியின் கோட்பாட்டிற்கு எதிராக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்தின் வெற்றிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டுள்ளனர். ஆளும் வர்க்கத்தின் பின் ஓடுவதை மட்டுமே தொழிலாய் கொண்டுள்ள குழுக்களும் இடதுசாரி என்பவர்களும்

தவறியும் உழைக்கும் வர்க்கதின் விடுதலைக்கான பாதையை பற்றியோ அடைவதற்கான தத்துவ நடைமுறை பற்றியோ தவறியும் பேசுவதில்லை. ஆனால் ஆளும் வர்க்க ஒவ்வொரு செயல்களை விமர்சித்து வாய்வீச்சில் வாழ்ந்துக் கொண்டுள்ளனர். 

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை என்பது இந்த முடைநாற்றம் பிடித்த சமூக அமைப்பை தூக்கியெறிந்து; உழைக்கும் மக்கள் தங்களை தாங்களே ஆள தகுதி படைத்த சமூக அமைப்பை உருவாக்கினால் மட்டுமே, இந்த இழிநிலையிலிருந்து விடுபட முடுயும். அவைதான் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையாகும். அதற்கான படிபினைகளை மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்களில் கற்று தெளிவடைய வேண்டும்.

1896-98 ஆம் ஆண்டில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதியான எட்வர்ட் பெர்ன்ஸ்டீன் சோசலிசத்தின் சிக்கல்கள் என்ற பொதுத் தலைப்பின் கீழ் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார், பின்னர் (1899 இல்) சோசலிசத்தின் முன்நிபந்தனைகள் மற்றும் சமூக-ஜனநாயகவாதிகளின் பணிகள் என்ற தலைப்பில் புத்தக வடிவில் வெளியிடப்பட்டார், அதில் அவர் மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை வெளிப்படையாகத் திருத்தி, மார்க்சியத்திற்கு பதிலாக ஒரு தாராளவாத சீர்திருத்தக் கோட்பாட்டை மாற்ற முயன்றார். பெர்ன்ஸ்டீன் கூறினார் "இயக்கம்தான் எல்லாமே, இறுதி இலக்கு ஒன்றுமில்லை" என்ற சந்தர்ப்பவாத முழக்கத்தை அறிவித்தார், இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டத்தை நிராகரித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட வேண்டும் என்று வாதிட்டார். போலி சோசலிச சொற்றொடர்களின் மறைவின் கீழ், திருத்தல்வாதிகள் மார்க்சியத்திற்கு எதிராக, பாட்டாளி வர்க்க புரட்சியின் கோட்பாட்டிற்கு எதிராக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக மற்றும் சோசலிசத்தின் வெற்றிக்கு எதிராக போராடினர்.

பெர்ன்ஸ்டீனின் புத்தகமும் பத்திரிகைகளில் அவரது சக சிந்தனையாளர்களின் அறிக்கைகளும் லெனினை கோபப்படுத்தியது. திருத்தல்வாதிகளுக்கு எதிராக "ஒரு கடுமையான போர் நடத்தப்பட வேண்டும்" என்பதை அவர் புரிந்துகொண்டார். பிளெக்கானோவின் பொருள்முதல்வாத வரலாறு குறித்த எஸ்கிஸ் மற்றும் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் இதழான டைநியூ ஜீட்டில் வெளியிடப்பட்ட பெர்ன்ஸ்டீனின் திருத்தல்வாதத்திற்கு எதிரான அவரது கட்டுரைகளைப் படித்ததில் மிகுந்த திருப்தி அடைந்தார் லெனின். காண்டின் தத்துவத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் கருத்துமுதல்வாதக் கோட்பாடுகளை மீண்டும் உயிர்ப்பித்து வந்த நவ-காண்டியனிசத்தை கடுமையாக எதிர்த்தார். முதலாளித்துவ பேராசிரியர்களிடமிருந்து தனது குறிப்பைப் பெற்று, "காண்டிற்குத் திரும்பு" என்று அறிவித்த பெர்ன்ஸ்டீனால் நியோ-காண்டியக் கருத்துக்கள் நிலைநிறுத்தப்பட்டன. 

லெனின் “சமூக-ஜனநாயக சந்தர்ப்பவாதத்தின் சாராம்சத்தை", விரிவான விமர்சனத்திற்கு உட்படுத்தினார். அவர் "கிரெடோ"வுக்கு எதிராக "ரஷ்ய சமூக-ஜனநாயகவாதிகளின் ஒரு எதிர்ப்பு" என்ற கடுமையான கண்டனக் கட்டுரையை எழுதினார், மேலும் ரஷ்ய சமூக-ஜனநாயகவாதிகள் பொருளாதார வல்லுநர்களின் சந்தர்ப்பவாதக் கருத்துக்களுக்கு எதிராக சித்தாந்த போருக்கு  அழைப்பு விடுத்தார், அவர்கள் மார்க்சியத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் திருத்தி, ரஷ்யாவில் ஒரு மார்க்சிய புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கட்சியை நிறுவ வேண்டிய அவசியத்தை மறுத்தனர். இதனை லெனின், "மார்க்சியக் கோட்பாட்டைச் சுருக்கவும், புரட்சிகர தொழிலாளர் கட்சியை சீர்திருத்தவாதக் கட்சியாக மாற்றவும்" ஒரு முயற்சி என்று சுட்டிக்காட்டினார், மேலும் இந்த சந்தர்ப்பவாதக் கருத்துக்களை ரஷ்யாவிற்கு நுழைவதை மக்கள் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் போராட்டங்கள் “எதிர்ப்பு", என்ற அடிப்படையில் “ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம் பொருளாதாரப் போராட்டத்திற்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்”, அதே நேரத்தில் "தாராளவாத எதிர்க்கட்சி கூறுகள்" மார்க்சிஸ்டுகளின் "பங்கேற்புடன்" "சட்ட வடிவங்களுக்காக" போராட வேண்டும் என்ற கருத்துக்குக்  பதில் கூறிய லெனின். "அத்தகைய ஒரு திட்டத்தைப் பயன்படுத்துவது ரஷ்ய சமூக-ஜனநாயகத்தின்" “அரசியல் தற்கொலைக்கு சமம்” என்று லெனின் கோபமாக எழுதினார். 

லெனின் ஒரு புரட்சிகர மார்க்சியக் கட்சியின் அமைப்பாளராக ஆனார், இதன் மூலம் மற்ற எந்தக் கட்சியிலிருந்தும் வேறுபட்ட தொழிலாள வர்க்கக் கட்சி ஒரு புதிய வகைக் கட்சியாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்த முதல் மார்க்சியர் இவர்தான். அவை இதற்கு முந்தைய படிப்பினைகளிலிருந்து பெறப்பட்டவையே.

நரோடிசம், "சட்ட மார்க்சியம்", திருத்தல்வாதம் (பெர்ன்ஸ்டீனிசம்) மற்றும் "பொருளாதாரம்" ஆகியவற்றை அதன் வகையாக லெனினின் முந்தைய போராட்டம் அனைத்தும் அவர் நிர்ணயித்த வரலாற்றுப் பணியைத் தீர்ப்பதற்கு அவசியமான நிபந்தனையாக இருந்தது - ரஷ்யாவில் ஒரு புரட்சிகர மார்க்சியக் கட்சியை உருவாக்குதல். லெனின் இந்தக் கட்சியை ஒரு புதிய வகைக் கட்சியாக மட்டுமே கருதினார், சந்தர்ப்பவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளை தங்கள் அணிகளில் பொறுத்துக்கொண்ட மேற்கு ஐரோப்பியக் கட்சிகளிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. லெனின் போராடிய உருவாக்கத்திற்கான கட்சி சந்தர்ப்பவாதம், திருத்தல்வாதம் மற்றும் சமரசத்தின் எந்தவொரு வெளிப்பாட்டிற்கும் சமரசம் செய்ய முடியாததாக இருக்க வேண்டும். பழைய வகைக் கட்சிகள் - மேற்கு ஐரோப்பாவின் சோசலிசக் கட்சிகள் - சட்டபூர்வமான மற்றும் பாராளுமன்றப் போராட்டத்தின் நிலைமைகளில் உருவாகி வளர்ந்தன. முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான புரட்சிகரப்போராட்டங்களுக்கு தொழிலாள வர்க்கத்தைப் பயிற்றுவிக்க மறுத்து, அவர்கள் படிப்படியாக தங்கள் புரட்சிகரத் தன்மையை இழந்து கொண்டிருந்தனர். அவர்கள் சந்தர்ப்பவாதத்திற்கு, முதலாளித்துவத்துடன் சமரசப் பாதைக்கு சறுக்கிக் கொண்டிருந்தனர்.

லெனின் முடிவாக கண்டடைந்தது:-தொழிலாள வர்க்க இயக்கம் பாட்டாளி வர்க்கத்தின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முன்னணிப் படையான புரட்சிகர மார்க்சிய கட்சியால் வழிநடத்தப்பட்டால் ரஷ்யாவில் புரட்சியின் வெற்றிக்கான பெரும் வாய்ப்பை அவர் தெளிவாகக் கண்டார். ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்ச செயல் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். மக்களை ஒருமுகப்படுத்தி அணி திரட்டினார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மார்க்சிய முன்னணிப் படையான போல்ஷிவிக் கட்சி, லெனினின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது.


இங்குள்ள நிலைமைகளை நாம் புரிந்துக் கொள்ள தொழிற்சங்க பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைக்கு போராடும் முறை இந்த அமைப்பிலிருந்து



விடுதலைக்கான பாதையை முன்வைத்து நடக்கிறதா என்றால் ஆளும் வர்க்கத்தின் தேவையை ஒட்டியே நடந்தேறிக் கொண்டுள்ளது. ஆனால் சுரண்டலிலிருந்து விடுதலைக்கான உண்மையான பணி இவை அல்ல! நாம் கற்று தேர்வது எப்பொழுது?



கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் எப்போதும் சந்தரப்பவாதமும் திருத்தல்வாதமும் இருக்கும் இத்தகைய சந்தர்ப்பவாதக் கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவரும் நபர்களும் இருப்பார்கள். அவர்களையும் அவர்களது திருத்தல்வாதக் கருத்துக்களையும் கம்யூனிஸ்டுகள் எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமையையும் பேணவேண்டும். அதற்கான வழிதான் விமர்சனம், சுயவிமர்சனம், மற்றும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் ஆகிய இரண்டு வழிமுறைகளை மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளார்கள். இந்த போதனையைப் பின்பற்றி செயல்படுவதன் மூலமே கம்யூனிஸ்டுகளால் சந்தர்ப்பவாதத்தையும் திருத்தல்வாதத்தையும் முறியடித்து கட்சிக்குள் ஒற்றுமையை பாதுகாக்க முடியும்.

இதனை பற்றி AI உருவாக்கிய ஒலி வடிவை கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேளுங்கள் தோழர்களே க்

மார்க்சியப் புரட்சியும் திருத்தல்வாதத்திற்கு எதிரான கருத்தியல் போராட்டமும்

இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தில் ஊடுருவியுள்ள திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான தத்துவப் போராட்டத்தை வலியுறுத்துகின்றன. தொழிலாள வர்க்கத்தின் விடுதலையை வெறும் சீர்திருத்தவாதமாக மாற்ற முயன்ற பெர்ன்ஸ்டீன் போன்றவர்களின் கருத்துக்களை லெனின் எவ்வாறு கடுமையாக எதிர்த்தார் என்பதை இவை விளக்குகின்றன. வெறும் சட்ட ரீதியான போராட்டங்களோடு நின்றுவிடாமல், ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவக்கூடிய ஒரு புதிய வகை புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது. தற்போதைய சூழலில் கம்யூனிச இயக்கங்கள் ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்துகொள்வதைச் சுட்டிக்காட்டி, போலி சோசலிசவாதிகளை அடையாளம் காண வேண்டியதன் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும் சித்தாந்தச் சிதைவைத் தடுக்கவும் விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் ஆகிய ஆயுதங்களைப் பயன்படுத்துமாறு இப்பாடம் வழிகாட்டுகிறது. இறுதியாக, உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலை என்பது மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை அடிப்படையில் ஒரு வலுவான புரட்சிகர முன்னணியைக் கட்டியமைப்பதில் மட்டுமே உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

மார்க்சியத்தில் திருத்தல்வாதம் (Revisionism) என்றால் என்ன மற்றும் அதன் பாதிப்புகள் யாவை?

லெனின் முன்மொழிந்த 'புதிய வகை கட்சி' எவ்வாறு மற்ற கட்சிகளிலிருந்து வேறுபடுகிறது?

உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கு மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை ஏன் அவசியம்?

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்