பெர்ன்ஸ்டைன்தான் மார்க்சியத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த திரிபுவாதி- அதனை ஏற்கும் நம்மவர்கள் யார்?

"புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பைத் தாருங்கள் ரஷ்யாவையே தலைகீழாக மாற்றிக் காட்டுகிறோம்" என்றார் லெனின். ஆகவே இந்தியாவிலும் லெனினிய பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினால் இந்தியாவை தலைகீழாக புரட்டிப்போட முடியும். ஆனால் தற்போது நிலை என்ன? லெனினியம் இந்தியாவிற்கு பொருந்தாது எனும் கூட்டம் ஒருபக்கம் என்றால், லெனின் வழிகாட்டுதலையே புரிந்துக் கொள்ளாதவர்கள் கட்சி நடத்தும் பொழுது என்னே சொல்ல?
லெனின் சொன்ன "அரசும் புரட்சியின்" சாரம் என்னே? அதனை புரிந்துக் கொள்ளாத புரட்டல் பேர்வழிகளாக புரட்சியை நடத்தப் போகின்றனர்? இன்னொறுபுரம் கண்ட கழிச்சடைகளையெல்லாம் புரட்சியாளர்களாய் நம்பி ஏகாதிபத்திய கைகூலிகளிடம் அடைகளம் புகும் அயோக்கியதனம்.

மார்க்சியத்தை திருத்துபவர்கள் பெர்ன்ஸ்டைனது முறையை கையாளுவதை நாம் காணலாம்பெர்ன்ஸ்டைன் மார்க்சியத்தை எதிர்ப்பதில் முதன்மையாக மார்க்சியத்தால் முன்வைக்கப்பட்ட பாட்டாளிவர்க்கப் புரட்சியையும்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்தார்இப்போதும் பெர்ன்ஸ்டைன் திரிபுவாதிகள் இதனை எதிர்ப்பதை இன்றும் காணலாம்தன்னை ஒரு மார்க்சியவாதி என்று சொல்லிக்கொண்டே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தோல்வியடைந்துவிட்டதாக இங்கே சிலர் கூச்சலிடுகிறார்கள்ஆனால் இவர்களால் மக்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபட்ட ஆட்சிமுறையை இவர்களால் நடைமுறையில் இதுவரை காட்டுவதற்கு முடியாது.

இந்தப்போக்கு இன்று நம்மிடையே மலிந்து கிடக்கிறது. லெனினையே மறுப்பவர்கள் மார்க்சியவாதியாய் வேடம் போடுகின்றனர். அரசும் புரட்சியும் நூலின் சாரம் என்னவென்றே தெரியாத பரட்சி பேசும் புரட்டல்வாதிகள் என்னே சொல்ல? 

மையப்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சி உழைக்கும் மக்களுக்கு தேவை என்றும் அத்தகைய கட்சியினால் மட்டுமே உழைக்கும் மக்களுக்கு தலைமைதாங்கி, வழிகாட்டி மக்களை போராட்டத்தில் ஈடுபடுத்தி மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் என்றார் லெனின். ஆனால் லெனினால் குறிப்பிட்ட கட்சி இங்கு உண்டா? இல்லை என்பதுதான் எதார்த்தம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கொள்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களது கொள்கைதான் சரியான கொள்கை என்கிறார்கள். மாறுபட்ட கருத்துக்களை பரிசீலிப்பதும் இல்லை. அவர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகளை நடைமுறையில் சோதித்துப் பார்ப்பதும் இல்லை. அவர்களது நடைமுறையில் எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை என்றபோதும் அவர்களது கொள்கையிலுள்ள தவறுகளை உணர்வதும் இல்லை, தவறுகளை களைவதும் இல்லை. இவ்வாறு நூற்றுக்கணக்கான அமைப்புகளாகப் பிளவுண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையிலுள்ள கருத்து வேறுபாடுகளை மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து விவாதித்து ஒரு ஒன்றுபட்ட கொள்கை முடிவெடுக்க இவர்கள் முயற்சிப்பதும் இல்லை அதன் அடிப்படையில் ஒன்றுபட்ட புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கு இவர்கள் தயாரில்லாத நிலையில் லெனினால் சொல்லப்பட்ட ஒருங்கிணைந்த புரட்சிகரமான கட்சி எப்படி உருவாகும்?. தற்பொழுது தன்னெழுச்சிப் போராட்டங்கள்தான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் உண்மையான உணர்வுப்பூர்வமான வர்க்கப் போராட்டங்களாக மாறவேண்டுமானால் இந்தப் போராட்டங்களை வழிநடத்துவதற்கு மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் புரட்சிகரமான வலிமையான கட்சி நமக்கு வேண்டும். ஆகவேதான்  "புரட்சியாளர்களைக் கொண்ட ஒரு அமைப்பைத் தாருங்கள் ரஷ்யாவையே தலைகீழாக மாற்றிக் காட்டுகிறோம்" என்றார் லெனின். ஆகவே இந்தியாவிலும் லெனினிய பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினால் இந்தியாவை தலைகீழாக புரட்டிப்போட முடியும். தற்போது உள்ள போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஓர் ஆணியையும் புடுங்க முடியாது.

 

லெனின் பொருளாதாரப் போராட்டத்திற்கும் அரசியல்போராட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக விளக்கியுள்ளார். அதனை நாம் கற்று புரிந்துகொள்ள வேண்டும். உழைக்கும் மக்களின் விடுதலையானது புரட்சிகரமான சோசலிச அரசியல் போராட்டங்களின் வழியாகவேதான் கிடைக்கும், மாறாக பொருளாதாரப் போராட்டங்கள் உழைக்கும் மக்களின் பிரச்சனைளை தற்காலிகமாக மட்டுமே தீர்க்கும் என்று லெனின் விளக்கினார். உழைக்கும் மக்கள் போராடுவதற்கு முன்பு போராட்டம் பற்றிய கொள்கைகளை வழிமுறைகளை விஞ்ஞான அடிப்படைகளில் வகுத்துக்கொண்டுதான் போராட வேண்டும். அப்போதுதான் அந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும். ஆகவே போராட்டத்திற்கான கொள்கை கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்தினார். லெனினது இந்த போதனையை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆகவேதான் இங்குள்ளவர்கள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. விஞ்ஞான சோசலிசக் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மார்க்சிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கி உழைக்கும் மக்களுக்கு உணர்வூட்டி போராடுவதன் மூலமே உழைக்கும் வர்க்கமானது கூலி அடிமைத்தனம் உட்பட அனைத்துவகையான அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை அடைய முடியும். என்ற லெனினியப் பாதையைப் பின்பற்றி இந்தியாவில் புரட்சி நடத்தி இந்திய உழைக்கும் மக்களை விடுவிக்க வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும்.

ஜெர்மனிய சமூகஜனநாயகவாதியான பெர்ன்ஸ்டைன்தான் மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த திரிபுவாதத்தையை ஏற்படுத்தியவர். 1896 மற்றும் 1898 இல் "சோசலிசத்தின் பிரச்சினைகள் என்ற பொதுத்தலைப்பின் கீழ் அவர் பல கட்டுரைகள் எழுதினார். 1899 இல் சோசலிசத்தின் வெளியும், சமூக ஜனநாயகத்தின் பணியும் என்ற பெயரில் இக்கட்டுரைகள் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது. பெர்ன்ஸ்டைன் இக்கட்டுரைகளில் பாட்டாளி வரக்கப் புரட்சியையும், சர்வாதிகாரத்தையும் எதிர்த்தார். பிரெஞ்சு நாட்டு சோசலிசக் கட்சியின் ஒரு தலைவரான மில்லிராண்ட், பெர்ன்ஸ்டைனிசத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவதில் தலைசிறந்த முன்னோடி ஆனார். ஏனெனில், பொதுவுடமையாளர்களை கொன்று குவித்த ஜெனரல் காலிபெட் அங்கம் வகித்த பிற்போக்கு முதலாளித்துவ அமைச்சர் அவையில் தானும் உறுப்பினரானார். புரட்சியாளர்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் உலகெங்கும் சந்தர்ப்பவாதிகள் வெளிப்படத் தொடங்கினர். புரட்சியாளர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் கூர்ந்து கவனித்த லெனின் அவர்களை பதினெட்டாம் நூற்றாண்டு பிரஞ்சுப் புரட்சியின் ஜாகோபியன்களுக்கும் ஜிரோண்டிஸ்டுகளுக்கும் ஒப்பீடு செய்தார். (திருத்தல்வாதம், செங் யென்-சீ, பக்கம் - 18, 19)

 

விளக்கம்:- ரஷ்யாவில் உருவான பொருளாதாரவாதம் என்ற கண்ணோட்டமானது, ஜெர்மன் சமூகஜனநாயகவாதியான பெர்ன்ஸ்டைன்னது திருத்தல்வாத கண்ணோட்டத்தைப் பின்பற்றி ரஷ்யாவில் பரப்பட்ட கருத்தாகும். ஆகவே லெனின் ரஷ்யாவில் பொருளாதாரவாதத்தை எதிர்த்துப் போராடிய அதே வேளையில் பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதக் கருத்தையும் எதிர்த்துப் போராடினார். அதன் விளைவாகவே ரஷ்யாவில் மார்க்சியத்தை மக்களிடம் கொண்டுசென்று மக்களிடம் சோசலிச உணர்வை ஊட்டி சாதனை புரிந்தார். லெனினது இந்தப் பாதையை இங்குள்ள இடதுசாரிகள் மறுத்துவிட்டு பெர்ன்ஸ்டைனது  திருத்தல்வாதக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பின்பற்றுகிறார்கள். ஆகவே இங்குள்ள இடதுசாரிகள் மார்க்சியவாதிகள் அல்ல மாறாக பெர்ன்ஸ்டைனிஸ்டுகளே ஆவார்கள். பெர்ன்ஸ்டைனியத்தைப் பின்பற்றும் பொருளாதாரவாதிகளே இங்கே மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு உழைக்கும் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவேதான் இவர்கள் மார்க்சிய ஆசான்களது போதனைகளை கட்சி உறுப்பினர்களுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. கட்சி உறுப்பினர்கள் மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுக்கொண்டால், பெர்ன்ஸ்டைனிசத்தைப் பற்றி புரிந்துகொள்வார்கள். அதனால் இடதுசாரித்தலைவர்கள் பெர்ன்ஸ்டைனை பின்பறறுவதைப் புரிந்துகொண்டு இடதுசாரித் தலைவர்களை எதிரத்துப் போராடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே இங்குள்ள இடதுசாரித் தலைவர்கள் அவர்களது கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சிய போதனைகளை கற்றுத்தர தொடர்ந்து மறுக்கிறார்கள்.

 

பெர்ன்ஸ்டைன்தான் மார்க்சியத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த திரிபுவாதத்தை முன்வைத்து மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்த தத்துவவாதியாவார். இப்போதும் மார்க்சியத்தை திருத்துபவர்கள் பெர்ன்ஸ்டைனது முறையை கையாளுவதை நாம் காணலாம். பெர்ன்ஸ்டைன் மார்க்சியத்தை எதிர்ப்பதில் முதன்மையாக மார்க்சியத்தால் முன்வைக்கப்பட்ட பாட்டாளிவர்க்கப் புரட்சியையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்த்தார். இப்போதும் பெர்ன்ஸ்டைன் திரிபுவாதிகள் இதனை எதிர்ப்பதை இன்றும் காணலாம். தன்னை ஒரு மார்க்சியவாதி என்று சொல்லிக்கொண்டே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தோல்வியடைந்துவிட்டதாக இங்கே சிலர் கூச்சலிடுகிறார்கள். ஆனால் இவர்களால் மக்களின் நலனுக்காக உண்மையிலேயே பாடுபட்ட ஆட்சிமுறையை இவர்களால் நடைமுறையில் இதுவரை காட்டுவதற்கு முடியாது. பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதத்தை நடைமுறையில் முறியடித்தது ரஷ்ய சோசலிசப் புரட்சியாகும். பிரெஞ்சு நாட்டு சோசலிசக் கட்சியின் ஒரு தலைவரான மில்லிராண்ட், பெர்ன்ஸ்டைனிசத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவதில் தலைசிறந்த முன்னோடி ஆனார். ஐரோப்பாவில் செயல்பட்ட சோசலிசத் தலைவர்களில் மில்லிராண்டைப் போன்றவர்கள் அந்த நாடுகளில் பாராளுமன்ற தேர்தல்மூலம் உருவான முதலாளித்துவ ஆட்சியில் மந்திரி பதவிகளைப் பெற்று பெர்ன்ஸ்டைனது திருத்தல்வாதத்தை செயல்படுத்தி உழைக்கும் மக்களில் பலரை ஆயுதப்படை கொண்டு படுகொலை செய்தார்கள். இங்கும் பெர்ன்ஸ்டைனை பின்பற்றுகின்ற இடதுசாரிகள் மந்திரி பதவிகளை பெற்று விவசாயிகளை போலீசின் துணைகொண்டு படுகொலை செய்ததை நாம் காண்கிறோம். மார்க்சியத்தை பின்பற்றுபவர்கள் லெனின் ஸ்டாலின் மாவோ போன்றவர்களின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் பலனடைந்தார்கள். ஆனால் பெர்ன்ஸ்டைனை பின்பற்றுகின்ற திருத்தல்வாதிகளின் ஆட்சியில் உழைக்கும் மக்கள் டுகொலை செய்யப்பட்டதை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். ஆகவே திருத்தல்வாதம் எவ்வளவு கொடுமையானது என்பதை ஒவ்வொரு உழைக்கும் மக்களும் புரிந்துகொண்டு திருத்தல்வாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும். உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிச அமைப்புக்குள்ளும் பெர்ன்ஸ்டைன் சந்தர்ப்பவாதிகள் இருந்தார்கள். புரட்சியாளர்களுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை லெனின் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தார். இத்தகைய சந்தர்ப்பவாதிகளை பொதுவுடமை இயக்க வரலாற்றில் நாம் தொடர்ந்து காணலாம் என்றார் லெனின். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியானது, கட்சிக்குள் வரும் திருத்தல்வாதத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்தை கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும்  தொடர்ந்து சித்தாந்தத் துறையில் நடத்தவில்லை என்றால் கட்சிக்குள் திருத்தல்வாதக் கருத்துக்கள் செல்வாக்கு பெற்று கம்யூனிஸ்ட் கட்சியானது திருத்தல்வாதக் கட்சியாக மாறிவிடும். ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் திருத்தல்வாதிகளை எதிர்த்து தொடர்ந்து போராடினார்கள். எனினும் கட்சிக்குள் மென்ஷ்விக்குகள் என்ற திருத்தல்வாதிகள் செயல்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். மென்ஷ்விக்குகளின் திருத்தல்வாதத்தை எதிர்த்து லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் போராடினார்கள். அதன் விளைவாக மென்ஷ்விக்குகள் மக்களின் செல்வாக்கை இழந்து தோல்வி கண்டார்கள். ஆனால் இந்தியாவில் கட்சிக்குள் வந்த திருத்தல்வாதக் கருத்துக்களை எதிர்த்தப் போராட்டம் மார்க்சிய லெனினியவாதிகளால் நடத்தப்பட்டு கட்சியிலிருந்து வெளியேறி மார்க்சிய லெனினிய கட்சியை உருவாக்கியபோதும் மார்க்சிய லெனினிய தத்துவ அரசியலை உள்வாங்கத் தவறி அழித்தொழிப்பு என்ற இடது தீவிரப் பாதையைப் பின்பற்றி பிளவுண்டு போனார்கள். எம்.எல். கட்சியாலும் திருத்தல்வாதத்தை முற்றிலும் ஒழிக்கமுடியாத நிலையில், இன்றைய இடதுசாரிகளில் பலரும் திருத்தல்வாதத்தைப் பின்பற்றுவதால் இங்கு மார்க்சிய சோசலிசத் கருத்துகள் மக்களிடம் பரவவில்லை, மக்களிடம் சோசலிச உணர்வுக்கு மாறாக தனிவுடமை சிந்தனையே மோலோங்கி இருக்கிறது. ஆகவே இங்கே மக்களிடம் மார்க்சிய லெனினியக் கருத்துக்களைப் பரப்பவும், மார்க்சியத்துக்கு எதிரான துரோகக் கருத்துக்களை அம்பலப்படுத்தவும் வேண்டும். இதைச் செய்யாமல் இங்கு கம்யூனிசம் பேசுவது போலியானதே ஆகும்.

 லெனின் கூறினார்:-  சோசலிச இயக்கத்திற்குள் எழுந்த பிளவுகள் தேசிய எல்லைகளைத் தாண்டி சர்வதேச தன்மை பெற்று விட்டன. இங்கிலாந்தின் ஃபேபியன்கள், பிரான்சின் மினிஸ்டரியலிஸ்டுகள், ஜெர்மனியின் பெர்ன்ஸ்டைனியர்கள், ரஷ்யாவின் திறனாய்வாளர்கள் என இவர்கள் அனைவருமே ஒரே குடும்பம்தான். ஒருவரை ஒருவர் புகழ்ந்து தள்ளுவார்கள், ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்வார்கள்.

 

மேலும் அவர் குறிப்பிட்டார், ஒன்றிணைந்து சித்தாந்தவாத மார்க்சியத்தை எதிர்ப்பார்கள் என்றும் "இதுவரை மார்க்ஸ் எங்கெல்சின்  சிந்தனைகளே புரட்சிகர கோட்பாடுகளின் உறுதியான அடித்தளமாகக் கருதப்பட்டன, ஆனால் இன்று அவற்றை அரைகுறை என்றும் காலம் கடந்தவை என்றும் கூறும் குரல்கள் ஒலிக்கின்றன.

 

மார்க்சியத்தை பழுது பார்ப்பது அவசியம் என்று பெர்ன்ஸ்டைனியர்கள் கூப்பாடு போட்டனர், அதை எவ்வாறு செய்தனர்? தனது சோசலிச வெளியும் சமூக ஜனநாயவாதிகளின் பணியும் என்ற நூலில் பெர்ன்ஸ்டைன் கீழ்வரும் கூற்றுக்களை முன் வைக்கிறார்.

 

1. சோசலிசத்தின் வெற்றி தவிர்க்க முடியாத அதன் பொருளாதாரத் தேவைகளை சார்ந்திருக்கிறது என்று நான் கூற மாட்டேன். மாறாக அதன் வெற்றி சாத்தியமற்றது என்றும் அதற்கு ஒரு தூய பொருள் முதல்வாத நியாயத்தைக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மட்டுமே கருதுகிறேன்.

2. ஒன்று முதலாளிகளின் எண்ணிக்கை ஒப்பிட்டு அளவில் குறைத்தும் பாட்டாளி மக்களின் செல்வம் மிகுந்து வருதல் அல்லது எண்ணற்ற நடுத்தர வர்க்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தியால் இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியமாகும்.

3. ஐரோப்பிய நாடுகளின் மலை போன்ற செல்வக்குவிப்போடு, நவீன கடன் வழங்கும் முறையின் நெகிழ்வுத்தன்மை மற்றும் தொழில் கூட்டமைப்புகள் ஆகியவை இணைந்து தனிநபர், பிராந்திய தொல்லைகளால் ஏற்படும் விளைவுகளை ஒன்றுமில்லாமல் செய்து விட்டன. எனவே இன்னும் சற்று காலத்திற்காவது கடந்த காலத்தைப் போன்ற நெருக்கடிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை எனலாம். முற்றிலும் பொருளாதாரக் காரணங்களால் அவ்வாறான நெருக்கடிகள் தோன்றும் என்று நம்புவதற்கு அவசியமான காரணங்கள் எதுவும் இல்லை.

4. நவீன நாடுகளின் அரசியல் அமைப்புகள் எத்தனை ஜனநாயகமடைகின்றனவோ அத்தனை தூரம் மாபெரும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படுவதற்கான தேவைகளும் சந்தர்ப்பங்களும் குறைகின்றன. வன்முறை புரட்சியையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும்விட சட்டரீதியான வழிகளிலேயே சமூக ஜனநாயகம் செழித்து வளரும்.

5. இயக்கமே எனக்கு அனைத்தும். சோசலிச்தின்  இறுதி லட்சியம் என்று வழக்கமாக அழைக்கப்படுவது எல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை.

 

பெர்ன்ஸ்டைனின் புத்தகத்தைப் படித்து முடித்த உடனே லெனின் கோபமாக குறிப்பிட்டார்.

 அதன் உள்ளடக்கங்கள் நம்மை மேலும் மேலும் வியப்பில் ஆழ்கின்றன. சித்தாந்த ரீதியாக நம்ப முடியாத பலவீனம் மற்றவர்களின் கருத்துக்களையே மீண்டும் முன்வைக்கின்றனதிறனாய்வு செய்யப் போவதாக கூக்குரலிட்டாலும் தனித்தன்மையான, ஆழ்ந்த திறனாய்விற்கான முயற்சிகூட மேற்கொள்ளப்படவில்லை. இது சந்தர்ப்பவாதம். எல்லையற்ற சந்தர்ப்பவாதமும், நடைமுறை சாத்தியவாதமும் இணைந்தது. அதிலும் இது கோழைத்தனமான சந்தர்ப்பவாதம்..... இது ஒரு குளறுபடியில்தான் முடியும் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் வேண்டாம்.

 

பெர்ன்ஸ்டைனின் புதிய வாதங்கள், காரணங்கள் பற்றி குறிப்பிட்ட லெனின் கூறினார்:-

பொருள் முதல்வாத அடிப்படையில் வரலாற்றை ஆய்வு செய்து சோசலிசத்தின் அவசியத்தையும் தவிர்க்க இயலாத தன்மையையும் எடுத்துக்காட்டுவதற்கும், அறிவியல் அடிப்படையில் சோசலிசத்தை நிறுவுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பெருகும் வறுமையும் கடுமையாகும் முதலாளித்துவ முரண்பாடுகளும் பாட்டாளி வர்க்கம் பெருகுதலும் மறுக்கப்பட்டுள்ளன. இறுதி இலட்சியம் என்ற கருத்தே முட்டாள்தனமானது என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்து கண்டிப்போடு ஒதுக்கப்படுகிறது. தாராளவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே நிலவும் கொள்கை அளவிலான எதிர்க்கருத்து மறுக்கப்படுகிறது. பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டு கண்டிப்பாக ஜனநாயக விதிகள் கடைபிடிக்கப்படுவது சமுதாயத்திற்கு ஒத்துவராது என்று காரணம் காட்டி வர்க்கப்போராட்ட கோட்பாடுகளே மறுக்கப்படுகின்றன.

 பெர்ன்ஸ்டைனிசத்தின் அடிப்படையே மார்க்சியத்தை சிதைத்து விகாரப்படுத்துவதாகும். புரட்சிகரப் போராட்டங்களுக்கு மாற்றாக சீர்திருத்தங்களை முன்வைப்பதாகும். தொழிலாளர்களின் புரட்சிகர கட்சியை சீர்திருத்த கட்சியாக மாற்றியமைக்கும் முயற்சியாகும்..

பெர்ன்ஸ்டைனுடைய அடிப்படையான வாதங்கள் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் கூறுகிறார் சோசலிசத்தின் வெற்றி தவிர்க்க முடியாது என்ற கருத்து, அதாவது மார்க்சிய கருத்து முற்றிலும் தவறானது என்கின்றார். சோசலிசத்தின் வெற்றி சாத்தியமற்றது என்றும் அவர் கூறினார். சமுதாயத்தில் முதலாளிகளின் எண்ணிக்கை ஒப்பிட்டு அளவில் குறைந்தும் பாட்டாளி மக்களின் செல்வம் மிகுந்து வருவதும் அதாவது நடுத்தர வர்க்கம் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் சமூக உற்பத்தியில் இவ்விரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றும் உழைக்கும் வர்க்கமானது நடுத்தர வர்க்கமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றார். அதன் மூலம் உழைக்கும் மக்கள் வறுமையிலும் பட்டினி சாவிலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மறுத்தார். நவீன நாடுகளில் முதலாளிகளின் செல்வம் மேலும் மேலும் அதிகரித்து வந்த போதும் நவீன கடன் வழங்கும் முறையின் காரணமாக தொழில் கூட்டமைப்புகள் உருவாகி வளர்ந்து வருவதன் காரணமாகவும் சமுதாயத்தில் போராட்டங்கள் என்ற தொல்லைகள் இல்லாமல் போய்விடும் என்றும் இனிமேல் சமுதாயத்தில் நெருக்கடிகளே ஏற்படாது என்றும் எதார்த்தத்துக்கு புறம்பான கருத்தை முன்வைத்தார். நவீன நாடுகளின் அரசியல் அமைப்புகள் எந்த அளவுக்கு ஜனநாயகம் அடைகின்றனவோ அந்த அளவுக்கு அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படாது என்று முதலாளித்து ஜனநாயகத்தை மெச்சிப் புகழ்ந்தார். வன்முறை புரட்சியும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் இனிமேல் தொழிலாளர்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை, அனைத்தும் சட்ட ரீதியான வழிகளிலே அமைதியான முறைகளிலே சமூகப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் அந்த வகையில் சமூக ஜனநாயகம் செழித்து வளரும் என்றார். இறுதியாக அவர் சொன்ன விசயம் மிக மிக அபத்தமான ஒன்று, அதாவது இயக்கமே எல்லாம் இறுதி இலட்சியம் என்பது நமக்கு அவசியம் இல்லை என்று சொல்லி உழைக்கும் மக்களின் லட்சியமான சோசலிசத்தையும் பாட்டாளி வர்க்க ஜனநாயக அரசு அல்லது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பெர்ன்ஸ்டைன் முழுவதுமாக மறுத்தார்.

 

பெர்ன்ஸ்டைன் சமூகத்தை திறனாய்வு செய்வதாகச் சொல்லி உண்மையில் புறநிலையில், எதார்த்தத்தில் உள்ள சமுதாயத்தை அதன் நிலையை அவர் சிறிதளவும் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு சந்தர்ப்பவாதியாக, நடைமுறை சாத்தியவாதியாக தொடர்ந்து இருந்தார். அவரது கருத்துக்கள் பெரும்பாலும் குழப்பத்தை ஏற்படுத்தவே செய்தது. அந்த வகையில் பெர்ன்ஸ்டைன் ஒரு திருத்தல்வாதி மட்டுமல்ல குழப்பவாதியாகவும் இருந்தார். இந்த பெர்ன்ஸ்டைனுடைய வாதங்களை லெனின் முழுவதுமாக முறியடித்து அம்பலப்படுத்தினார். இவ்வாறு லெனினால் புறக்கணிக்கப்பட்ட பெர்ன்ஸ்டைனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டுதான் இந்திய இடதுசாரிகள் செயல்படுகிறார்கள்.

 

சமுதாயத்தை வரலாற்றுப்பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் ஆய்வு செய்த மார்க்சிய ஆசான்கள், சோசலிசம் என்ற புரட்சிகரமான கொள்கையை பாட்டாளி வர்க்கம் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என்றனர்மார்க்சிய ஆசான்கள் சோசலிசத்தின் அவசியத்தை அதன் தவிர்க்க இயலாத தன்மையை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னார்கள். இந்த உண்மையை பெர்ன்ஸ்டைன மறுத்துவிட்டு சோசலிசம் சாத்தியமில்லை என்ற பிற்போக்கு கருத்தை பரப்பினார். அறிவியல் அடிப்படையில் சோசலிசத்தை நிறுவுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் மறுத்தார். சமுதாயத்தில் வறுமை ஒரு பக்கம் பெருகுகிறது, மறுபக்கம் முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைகின்றன, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த உண்மையை பெர்ன்ஸ்டைன்  கண்மூடித்தனமாக மறுத்தார். இறுதி லட்சியமே முட்டாள்தனமானது என்று அறிவித்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்து முற்றிலும் தவறு என்றார். இதன் மூலம் அவர் ஒரு தாராளவாதியாக இருந்தார். தாராளவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவர் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்களின் விருப்பங்கள்தான் சமுதாயத்தில் நடைமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும். பெரும்பான்மையினரின் கருத்துதான் சமுதாயத்தில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்ற அடிப்படையான ஜனநாயக கொள்கையை பெர்ன்ஸ்டைன் மறுத்தார். அது சமூக வளர்ச்சிக்கு ஒத்துவராது என்று காரணம் காட்டி வர்க்கப் போராட்ட கோட்பாடுகளையே முற்றிலும் மறுத்தார். இவ்வாறு மார்க்சியத்தை திருத்தி ஒரு கடுமையான திருத்தல் வாதியாக வரலாற்றில் உருவானவர்தான் பெர்ன்ஸ்டைன். இவர் மார்க்சியத்தை மறுத்து அதை சிதைத்து விகாரப்படுத்தினார். தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமாக போராடக் கூடாது என்றும் சீர்திருத்த முறையிலேயே போராட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரது கொள்கை பின்பற்றப்பட்டால் பாட்டாளி வர்க்க கட்சியானது ஒரு சீர்திருத்தவாத கட்சியாக மாறுவது தவிர்க்க முடியாதது. இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் பெர்ன்ஸ்டைனை பின்பற்றியதேலேயே திருத்தல்வாதக் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றிவிட்டார்கள்.      

வரவிருக்கு இலக்கு 87 கட்டுரை பகுதியிலிருந்து..... 


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்