இராமயணம் TV யில் காட்டப்படுவதை பற்றி
ஆளும் வர்க்கதின் ஒரு பிரிவுடன் கூட்டணி வைத்தவர்களே...
பாசிசத்தை ஒழிக்க ஒன்று சேர்ந்தவர்களே...
இன்று அவர்கள் பின் அணி திரள்கிறார்கள் முதலாளிகள் உங்கள் பாயசம் என்னவாகிவிட்டது சொல்வீர்களா??
திராவிட அரசியல்
பகுத்தறிவு பாசறை
எப்படியெல்லாம் உழைக்கும் மக்களின் உதிரத்தை உறிஞ்சுவது இதுதான் முதலாளிகளின் நலன்... சுரண்ட பிறந்தவன் சுரண்டாமல் உயிர்வாழ முடியாது இவை நியதி இவர்களை ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை..
ராமயணம் அல்ல இங்கே பிரச்சினை
உழைக்கும் மக்களுக்கு வாழ்க்கை பிரச்சினை அதற்கு யாராவது பதில் சொல்வீர்களா???.
செய்தி அப்படியே கீழே
இந்நிலையில், தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் "இராமாயணம்" மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. "சீதையின் இதயநாயகன்.. இராமாயணம்.. விரைவில்" எனக் குறிப்பிட்டு ப்ரொமோ வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் இந்த ஆண்டு பிப்ரவரியில் திறப்பு விழா கண்ட நிலையில், ராமர் பற்றிய பேச்சுகள் புழக்கத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் மீண்டும் 'இராமாயணம்' இதிகாசத் தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது சன் தொலைக்காட்சி. முன்பு சன் டிவியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் 'ராமாயணம்’ ஒளிபரப்பானது. இந்நிலையில், தற்போது ஒளிபரப்பாக உள்ள ராமாயணம் அதேதானா? அல்லது மீண்டும் எடுக்கப்பட்டதா என்பது அறிவிக்கப்படவில்லை.
மேலும், “இராமாயணம்” தொடர் எந்தெந்த நாட்களில் ஒளிபரப்பாகும், எப்போது முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது என்ற தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more at: https://tamil.oneindia.com/television/sun-tv-to-telecast-ramayanam-serial-soon-602151.html
No comments:
Post a Comment