கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தெரிந்துகொள்வோம்.
முதல் உலகப்போரின்போது இரண்டாவது சர்வதேச அகிலத்திலிருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் சந்தர்ப்பவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெரிந்துகொள்வதன் மூலம் நாம் இதனை தெரிந்துகொள்ளலாம்.
1) காலனியாதிக்கம், மற்றும் செல்வாக்கு மண்டலங்களுக்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் போட்டி, அதன்காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாகவே உலகப்போருக்கான தயாரிப்புகளை ஏகாதிபத்தியவாதிகள் செய்கிறார்கள் என்று இரண்டாம் அகிலத்தில் உறுப்பினர்களாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் அறிவித்தார்கள். இதற்கு மாறாக போருக்கான காரணமாக சொந்த நாட்டிற்கும் நாட்டை ஆக்கிரமிக்கும் அன்னியர்களுக்கும் இடையிலான முரண்பாடே போருக்கான காரணமாக சந்தர்ப்பவாதிகள் கூறினார்கள். இதிலிருந்து தெரிவது பிரச்சனைக்கு காரணமான உண்மையான முரண்பாட்டை மக்களுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்பவாதிகள் பிரச்சனைக்கு காரணமான உண்மையான முரண்பாட்டை மக்களிடம் மறைத்துவிட்டு பொய்யான முரண்பாட்டை மக்களுக்கு தெரிவித்து மக்களை ஏமாற்றுவார்கள்.
2) போருக்கு காரணம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடு என்று உண்மையான முரண்பாட்டை முன்வைத்த கம்யூனிஸ்ட்டுகள் அதற்கு ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்கான போரை எதிர்க்கவேண்டும் என்றும், அதனை மீறி போர் வந்துவிட்டால் உள்நாட்டுப் போரை நடத்தி சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்தை வீழ்த்தி சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்ற தீர்வை முன்வைத்தனர். இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் தாய்நாட்டை காக்கவேண்டும் என்று சொல்லி சொந்த நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டி சோசலிச அரசு உருவாகாமல் தடுத்துவிட்டார்கள். இதிலிருந்து தெரிவது கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சரியான வழியை காட்டுவார்கள். ஆனால் சந்தர்ப்பவாதிகள் தவறாக வழிகாட்டுவார்கள்.
3) உண்மையான முரண்பாட்டை முன்வைத்து, சரியான தீர்விற்கு வழிகாட்டிய கம்யூனிஸ்ட்டுகள் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்தினார்கள், அதற்காக பாடுபட்டார்கள். ஆனால் இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் தாய்நாட்டை காக்கவேண்டும் என்று சொல்லி சொந்தநாட்டு நாட்டுத் தொழிலாளர்களையும் பிற நாட்டுத் தொழிலாளர்களையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டு தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குழைத்து பிளவுபடுத்தினார்கள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவார்கள். ஆனால் இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் மக்களிடையே ஒற்றுமைக்கு எதிராக மக்களை பிளவுபடுத்துவார்கள்.
4) சரியான கொள்கைகளையும், லட்சியத்தையும் மக்களிடம் முன்வைத்து மக்கள் சுதந்திரமாக சிந்தித்துப் புரிந்துகொண்டு உணர்வுப்பூர்வமாக மக்களை போராடுவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் அணிதிரட்டினார்கள். ஆனால் இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் அவர்களுக்கு இருந்த அதிகார பலத்தைக் காட்டியும், மக்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கின் பலத்தாலும் அவர்களது தவறான கொள்கைகளை மக்களை ஏற்கச்செய்து மக்களை ஏமாற்றினார்கள். இதிலிருந்து தெரிவது கம்யூனிஸ்ட்டுகள் அவர்களது கொள்கைகளை அவர்களது அணிகளிடமும் மக்களிடமும் முன்வைத்து முறையாக போதித்து அணிகள் சுதந்திரமாக வளர்வதற்கு வழிசெய்வார்கள். அணிகளை எந்தளவு வளர்க்கிறார்களோ அந்தளவு அவர்களது லட்சியத்தில் வெற்றியடைய முடியும் என்பதை புரிந்துகொண்டு செயல்படும் மிகச்சிறந்த ஜனநாயகப் பண்புள்ளவர்களாக கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் அணிகளுக்கோ, மக்களுக்கோ ஜனநாயக உரிமை ஏதும் வழங்குவதில்லை. மாறாக தங்களது சொந்த செல்வாக்கின் மூலமே மக்களை அவர்களது கருத்தை ஏற்க்கச் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் அவர்களது அதிகாரத்தையும் செல்வாக்கையுமே பயன்படுத்துகிறார்கள்.
5) முதலாம் உலகப்போரின்போது தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது நாட்டில் ஆட்சியிருந்த சர்வாதிகாரி ஜாரையும், முதலாளிகளையும் வீழ்த்தி தொழிலாளி வர்க்க அரசான சோசலிச அரசை ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கினார்கள். அதாவது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் சரியாக பயன்படுத்தினார்கள். ஆனால் இதற்கு மாறாக சந்தர்ப்பவாதிகள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தாமல் நழுவவிட்டார்கள். குறிப்பாக சந்தர்ப்பவாதியான காவுத்ஷ்கி இந்த வாய்ப்பை ஜெர்மனில் நழுவவிட்டதன் விளைவாக ஜெர்மன் ஒரு சோசலிச நாடாக மாறவில்லை, மாறாக ஹிட்லரின் பாசிசம் அங்கு வளர்ந்தது. இதிலிருந்து தெரிவது கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் மக்களின் நலனில் அக்கரைகொண்டு இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நழுவவிடமாட்டார்கள். மாறாக சந்தர்ப்பவாதிகள் எல்லா வாய்ப்பையும் பொறுப்பில்லாமல் நழுவவிடுவார்கள். அதற்கு காரணம் சந்தர்ப்பவாதிகளுக்கு எப்போதும் மக்களின் மீது அக்கரை இருக்காது. அவர்கள் அவர்களது சொந்த நலனுக்காக, புகழுக்காகவே இருக்கிறார்கள்.
இந்த அரசு சொத்துடைய வர்க்கத்தின் அரசுதான்
தோழர்களுக்கு வணக்கம் நான் இந்த பகுதியை ஆரம்பித்ததே விவாதிக்கதான். ஆம் மார்க்சிய அடிப்படைகளை புரிந்துக் கொள்வதும் நமகுள்ள சரிதவறுகளை பகிர்ந்து சரியான புரிதலுக்கு வருவதற்குதான் தோழர்களே.
இரண்டு பேர் மட்டுமே தொடர்ந்து தங்களை கருத்துகளை பகிர முயற்சிக்கிறார்கள் அவர்கள் இருவரும் மார்க்சியத்தை ஏற்காதவர்கள் மற்றவர்கள் விவாதத்தில் கலந்துக் கொள்ளாமையால் எழுத சோர்வேற்படுகிறது ... நான் எழுதுபவை முன்னரே எழுதப்பட்டவைதான் உங்களின் ஈர்பின்மையால் வேறு எழுத்து பணியிலே காலம் ஓடி விடுகிறது ஆக மனம் திறந்து விவாதியுங்கள் தோழர்களே.
இன்றைய தனியார்மயம் (உலக மயமாக்கலில்) மக்கள் படும் துயரங்கள் கணக்கில் அடங்காதவை அதனை ஒன்று படுத்தி போராட வேண்டியவர்கள் தனித்தனி தீவுகளாக பிரிந்துக் கிடப்பதே ஒடுக்குமுறையாளர்களான சுரண்டலாளர்களுக்கு வெகு எளிதாக எதனையும் மக்கள் தலையில் சுமத்துவதற்கு.
மிக பின் தங்கிய உற்பத்திமுறையில் கூட ஏகாதிபத்தியம் தனது நுகர்வு சந்தையை விரிவாக்கி அந்த மக்களின் மீது நுகர்வுவெறியை தூண்டுகிறது அவர்களின் எல்லா ஆதரங்களையும் அழிக்கிறது எதிர்ப்பு குரலை தவிர்க்க அவர்களுகுள்ள முரணான விசியங்களை கையிலெடுத்து அமக்களை பலிகடாவாக்குகிறது....
மத மோதல், ஜாதிய மோதல் இவ்வறு பல்வேறு மோதலை உருவாக்கும் இவர்கள் அரசு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்க சொல்லிவிட்டு அரசு என்ற குண்டாந்தடியை மட்டும் தன் கையில் வைத்துக் கொண்டு....
கல்வி தனியார் கையில்
மருத்துவம் தனியாரிடம்
வேலைவாய்ப்பு தனியாரிடம்
எல்லா தகவல்களும் தனியாரிடம்
No comments:
Post a Comment