நமது படிப்பைச் சீர்செய்வோம். மாவோ, பகுதி - 3.கட்சியின் வேலை முறையினை சீர் செய்க (பிப்ரவரி 1, 1942 இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழுவின் கட்சிப் பள்ளித்திறப்பின் போது மாவோ ஆற்றிய உரை. மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்டபடைப்புகள் தொகுதி-3)
“இப்போது அகவயத்தைப் பற்றி பேசுவோம்”
“அகவயவாதம், மற்றும் முறையில்லாத ஒரு படிப்புமுறை; இது மார்க்சிய – லெனினியத்துக்குப் பகைமையான ஒன்று.நாம் கம்யூனிஸ்ட்க் கட்சியுடன் ஒத்துப் போக முடியாத ஒன்று. நாம்விரும்புவது மார்க்சிய - லெனினிய படிப்புமுறை. படிப்பு முறை என்று குறிப்பிடுவதன் மூலம் பள்ளியிலுள்ள படிப்பு முறையை மட்டும் குறிப்பிடவில்லை. கட்சி முழுக்கவே குறிப்பிடுகிறோம். தலைமைக் குழுத் தோழர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டு கட்சி அணி முழுவதின்,சிந்தனை முறையைப் பற்றிய கேள்வியாகும். இது மார்க்சியம், லெனினியம் குறித்து நம் அணுகுமுறையை பற்றிய கேள்வியாகும். நமது கட்சித் தோழர்களின் வேலை முறையினைப் பற்றிய கேள்வியாகும். இந்த வகையில் இது அசாதாரமான அவசியமான முதன்மையானமுக்கியமான ஒன்று.”
“சில குழப்பமான கருத்துக்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளன”. உதாரணத்துக்கு கோட்பாடு என்றால் என்ன? அறிவுஜீவி என்றால் என்ன? கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது என்பதன் பொருள் என்ன? ஆகியவையே அவை.
நாம் முதலில் நமது கட்சியின் கோட்பாட்டு மட்டம் உயர்ந்துள்ளதா? அல்லது தாழ்ந்துள்ளதா? என்ற கேள்வியைக் கேட்ப்போம்.சமீபகாலமாப,பெரும்பாலான மார்க்சிய லெனினிய நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு அதிகப்படியான மக்களால் படிக்கப்பட்டு வருகிறது.இது நல்ல செயல்.ஆகவே நாம் கட்சியின் கோட்பாட்டு மட்டம் மிகவும் உயர்ந்துள்ளது என்று கூற முடியுமாமுன்னைக் காட்டிலும் உயர்ந்துள்ளது என்பது உண்மை. ஆனால் நமது கோட்பாடோ செழிப்பு வாய்ந்த சீனப்புரட்சிகர நடைமுறையோடு இசைவு இல்லாமல் இருக்கின்றது.இந்த இரண்டையும் ஒப்பிடும் போது கோட்பாட்டுத் தளம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.பொதுவாகச் சொன்னால் நமது கோட்பாடு நமது புரட்சிகர நடைமுறையோடு சரியாக நடைபோட முடியவில்லை.இந்த இரண்டின் இணைவு மட்டுமே நம் லட்சியத்தை வழிநடத்தும்.நமது வளமான பல்வேறுபட்ட நடைமுறையைச் சரியான கோட்பாட்டு நிலைக்கு உயர்த்தவில்லை. நாம் அனைத்துப் புரட்சிகரச் சிக்கல்களையும் ஆய்வு செய்யவில்லை. நம்மில் எத்தனை பேர் சீனாவில் பொருளாதார, அரசியல், இராணுவ, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட மதிப்புமிக்க கருத்துக்களை - கொச்சையாக, மேலெழுந்தவாரியாக அல்லாமல், விரிவான, அறிவியல் வழியிலான, முழுமையான கோட்பாடுகளாக உருவாக்கி உள்ளோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக பொருளாதாரக் கோட்பாட்டுத் துறையில் இதைச் செய்துள்ளோமா?
சீன முதலாளியம் அபினிப் போர்களிலிருந்து ஒரு நூற்றாண்டுகால வளர்ச்சியுடையது. ஆனால், இதுவரை அறிவியல்பூர்வமாகச் சீனப்பொருளாதார வளர்ச்சியின் யதார்த்தங்களுக்குப் பொருந்தி வரக்கூடிய அறிவியல் பூர்வமான தனியொரு கோட்பாட்டுப் பாணியை நாம் உருவாக்கவில்லை.உதாரணத்துக்கு சீனப் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றிய நம் படிப்பு கோட்பாட்டுத் தளம் உயர்நிலையில் உள்ளதா? மதிப்பு மிக்க பொருளாதாரக் கோட்பாளர்கள் நம் கட்சியில் உள்ளனரா? நிச்சயமாக இல்லை.நாம் மிகப் பெரிய அளவிற்கு மார்க்சிய லெனினியப் புத்தகங்களைக் கற்றுள்ளோம். ஆனால் அதற்காக நாம் கோட்பாட்டாளர்களை கொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ள முடியுமா? நம்மால் முடியாது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரால் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதுதான்மார்க்சிய லெனினியக் கோட்பாடு.அவர்களின் பொதுவான முடிவு,வரலாறு மற்றும் புரட்சிகர யதார்த்தத்திலிருந்து பெறப்பட்டவை.அவர்களின் எழுத்துக்களை வெறுமனே படித்து,ஆனால் அதன் கோட்பாட்டு ஒளியில் சீனாவின் வரலாறு மற்றும் புரட்சி பற்றிய யதார்த்தங்களைப் படிப்பதை வளர்க்காமல் அல்லது மிகக் கவனமான முறையில் சீனாவின் புரட்சிகர நடைமுறையைக் கோட்பாட்டு அளவு கொண்டு பார்க்கும் எந்த முயற்சியைப் பற்றியும் சிந்திக்காமல் இருந்தால் நாம் மார்க்சியவாதிகள் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள முடியாது.
சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையில்சீனாவின் சிக்கல்களுக்கு நாம் கண்ணை மூடிக்கொண்டால் நம் கோட்பாட்டுநிலை உண்மையில் மிகவும் வறிய நிலையில் இருப்பதோடு மார்க்சிய எழுத்துக் களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட முடிவுகளையோ, அல்லது கொள்கை களையோ மனப்பாடம் செய்வதாகத்தான் இருக்கும்.
ஒரு நபர் மார்க்சியப் பொருளியலை அல்லது தத்துவத்தை நன்கு மனப்பாடம் செய்து முதல்அத்தியாயத்திலிருந்து பத்தாவது அத்தியாயம் வரை ஒப்புவிப்பவராக இருந்து, ஆனால் அதை பிரயோகிக்க முடியாத நிலையில் இருந்தால், அவரை மார்க்சியக் கோட்பாட்டாளர் என்று கருத முடியுமா? இல்லை. அவரை அவ்வாறு கருதமுடியாது. எந்த வகையான கோட்பாளர்களை நாம் விரும்புகிறோம்? மார்க்சிய லெனினிய நிலைபாடு மற்றும் வழிமுறையோடு பொருந்தி வரக்கூடிய வகையில் மற்றும் புரட்சியின்போது வரும் நடைமுறைச் சிக்கல்களுக்கு முறையான விளக்கமும், சீனாவின் பொருளாதாரம், அரசியல், இராணுவம், பண்பாடு மற்றும் ஏனைய சிக்கல்களுக்கு அறிவியல் விளக்கங்களையும் கோட்பாட்டு விரித்துரைத்தல்களையும் தரமுடிகிற கோட்பாட்டுவாதிகளை நாம் விரும்புகிறோம். இந்த வகையான கோட்பாட்டுவாதியாக ஒருவர் இருக்க வேண்டுமானால் மார்க்சிய லெனினிய நிலைபாடு, கருத்துநிலை மற்றும் வழிமுறையை காலனியப் புரட்சி, சீனப் புரட்சி ஆகியன பற்றி லெனின் ஸ்டாலின் கோட்பாடுகளை உண்மையாகச் செரித்துக் கொண்டவராகவும் அதனை சீனத்தின் நடைமுறைச் சிக்கல்களுக்கு ஆழ்ந்த அலசல்களுக்கு உட்படுத்தக் கூடியவராகவும் இந்தச் சிக்கலின் வளர்ச்சி விதிகளை கண்டறியக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த வகையான கோட்பாட்டுவாதிகள்தான் நமக்கு உண்மையில் அவசியம். மார்க்சிய லெனினிய நிலைபாடு,நோக்குநிலை மற்றும் வழிமுறை ஆகியவனவற்றை சீனாவின் வரலாறு,பொருளாதாரம்,அரசியல்,இராணுவ விவகாரங்கள் மற்றும் பண்பாடு பற்றிய கவனமான படிப்புடன் எப்படிப் பொருத்துவது?
ஒவ்வொரு சிக்கலையும் தெளிவான தடயங்களின் அடிப்படையில் பருண்மையாக ஆராய்வது, பின் கோட்பாட்டு முடிவுகளைக் கண்டறிவது என்று நமது ஊழியர்களைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை நமது மையக்குழு இப்பொழுது நிறைவேற்றி யுள்ளது. இப்பொறுப்பை நாம் கட்டாயம் சுமக்க வேண்டும்.
கட்சிப் பள்ளியில் உள்ள நமது தோழர்கள் மார்க்சிய லெனினிய கோட்பாட்டை உயிரற்ற ஒருவறட்டுச் சூத்திரமாகக் கருதக்கூடாது.மார்க்சியக் கோட்பாட்டில் புலமை பெற்று அதனை நடைமுறைப் படுத்துவது அவசியம். நடைமுறைப் படுத்துதல் என்ற முழுப் பயன்பாட்டிற் காகவே, அதில் புலமை பெற வேண்டும்.ஒன்று அல்லது இரண்டு நடைமுறைச் சிக்கல்களைத் தெளிவாக்குவதற்கு மார்க்சிய,லெனினிய நோக்கு நிலையினைஅமுல்படுத்தினால் நீங்கள் சில வெற்றிகளுக்கு பெருமை கொள்ள முடியும்.நிறைய சிக்கல்களை தெளிவாக்கினால் விரிவாகவும் ஆழமாகவும் இருக்கும்.மார்க்சிய லெனினிய படிப்பிற்குப் பின் சீனச் சிக்கல்களை மாணவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? சிக்கல்களை தெளிவாக, அல்லது தெளிவற்று, முழுமையாக, அல்லது அரைகுறையாக என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்ல அல்லது வறிய நிலை பற்றி மதிப்பிடுவதற்கான விதிமுறைகளை நமது கட்சிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும்.
அடுத்ததாக, அறிவுஜீவிகளைப் பற்றிப் பேசுவோம்.சீனா அரைக் காலனி அரை நிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதால் அறிவுஜீவிகள் குறிப்பாக மதிக்கப் பட வேண்டும்.அறிவுஜீவிகள் பற்றிய சிக்கல் மீது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கட்சியின் மையக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.அதன்படி நாம் பெரிய அளவிற்கு அறிவுஜீவிகளை வென்றெடுக்க வேண்டும்.அவர்கள் புரட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவைப் பொறுத்து,ஜப்பானிய எதிர்ப்பில் நம்முடன் பங்குகொள்ளும் அளவைப் பொறுத்து,அவர்களை நாம் வரவேற்க வேண்டும்.புரட்சிகரமான அறிவுஜீவிகள் இல்லாமல் புரட்சி வெற்றிபெற முடியாது.
ஆகவே நாம் அறிவுஜீவிகளை மதிப்பது என்பது முழுவதும் சரியானது. ஆனால்,அறிவுஜீவிகளில் அநேகர் மெத்தப் படித்தவர்களாக,மிகுந்த அறிவாளிகளாகத் தங்களைக்காட்டிக் கொள்வதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் போக்கு அவர்களின்முன்னேற்றத்துக்கு ஊறு விளைவிக்கும்.சில சமயங்களில் இவர்களைக்காட்டிலும் தொழிலாளிகளும் விவசாயிகளும்அதிகமாக அறிந்துள்ளனர். அறிவுஜீவிகள் என்று சொல்லப்படும் பெரும்பாலோர் அறியாமையில் உள்ளனர் என்ற உண்மையினைஅவர்கள் உணர வேண்டும். “ஆ! நீங்கள் சிக்கல்களை தலைகீழாகத் திருப்புகிறீர்கள், முட்டாள்தனமாகப் பேசுகிறீர்கள்”;என சிலர் சொல்லலாம். ஆனால்,தோழர்களே உணர்ச்சிவசப்பட வேண்டாம் நான் சொல்வதில் சில அர்த்தங்கள்உள்ளது.
அறிவு என்பது என்ன? வர்க்க சமுதாயம் தோன்றியதிலிருந்து இருவித அறிவு வகைகளைத்தான் உலகம் கண்டுள்ளது. அவை உற்பத்திப் போராட்டம், வர்க்கப் போராட்டம் பற்றிய அறிவாகும்.
இந்த இருவகை அறிவுகளும் ஒருங்கே திரட்டப்பட்டதுதான் இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும் ஆகும். இயற்கை, சமூகம் பற்றிய அறிவின் பொதுமைப்படுத்தப்பட்ட தொகுப்புதான் தத்துவம். இது தவிர வேறுவகை அறிவு உண்டா? இல்லை. சமூக நடைமுறையி லிருந்து துண்டிக்கப்பட்ட பள்ளிகளில் வளர்ந்த சில மாணவர்களைப் பற்றி பார்ப்போம். இந்த வகையான பள்ளியில் ஆரம்ப வகுப்பிலிருந்து பல்கலைக் கழகம் வரை செல்லும் ஒரு மாணவன் பட்டம் பெற்று நிறைய படிப்பறிவு உள்ளவனாகக் கருதப்படுவான். ஆனால், அவன் கற்ற அனைத்துமே புத்தக அறிவுதான். இன்னும் அவன் நடைமுறை வேலைகளில் பங்கெடுக்கவில்லை. அல்லது அவன் கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தவில்லை. இந்த வகையான ஒருவன் வளர்ச்சி பெற்ற முழு அறிவாளி எனக் கருத முடியுமா? என் கருத்து இல்லை என்பதுதான். காரணம் அவன் அறிவு முழுமையடையாத ஒன்று. சார்பு நிலையிலான முழு அறிவு என்பது என்ன? சார்புநிலையிலான முழு அறிவும் இரு கட்டங்களில் உருவாகிறது. முதல் நிலை புலனுணர்வு, இரண்டாவது நிலை பகுத்தறிவு.இரண்டாம்நிலைமுதல்நிலையின் ஓர் உயர்ந்தகட்டத்தை அடைவதுதான்.
மாணவர்களின் புத்தக அறிவு எந்தவகைப்பட்ட அறிவைச் சார்ந்தது? அவர்கள் கற்றுக்கொண்டது அனைத்தும் உண்மை என்றபோதிலும், அவை அவர்களது சொந்த அனுபவத்திலிருந்து பெறப்படவில்லை. காரணம், அவர்களின் முன்னோர்களின், உற்பத்திக்கான போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டத்தில் கிடைத்த அனுபவங் களைத் தொகுத்துத் தந்த கோட்பாடு கள்தான் அவை இந்த வகைப்பட்ட அறிவை மாணவர்கள்கற்றுக்கொள்வது முழு அவசியம் என்ற போதிலும், இந்த அறிவு மற்றவர்களால்சோதித்தறியப்பட்ட, இன்னும் தங்களால் சோதித்தறியப்படாத ஒருபக்க சார்புடையது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
மிகுந்த முக்கியம் என்னவெனில் வாழ்க்கையிலும் நடைமுறையிலும் இதைச் செயல்படுத்துவது நல்லது. ஆகவே நான் அறிவுறுத்துவது என்னவெனில் புத்தக அறிவு மட்டுமே கொண்டு, யதார்த்தத்தோடு எந்த உறவும் இல்லாதவர்களும் சொற்ப நடைமுறை அனுபவத்தைக் கொண்டவர்களும் தங்களது குறைகளை உணர்ந்து சிறிது அதிக அடக்கத்தைப்பெற வேண்டும்.
“உண்மையான பொருளில் புத்தக அறிவு மட்டும் கொண்டவர்கள், எவ்வாறு உண்மையான அறிவுஜீவிகளாக மாற இயலும்? அவர்களை நடைமுறை வேலையில் பங்கெடுக்க வைத்து நடைமுறை வேலை செய்பவர்களாக மாற்றுவது, கோட்பாட்டு வேலையில் ஈடுபட்டுள்ளவர்களை, முக்கிய நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்ய வைப்பது என்பதுதான் இதற்குள்ள ஒரே வழி. இந்த வழியில்தான் நமது குறிக்கோள்களை கூட அடைய முடியும்.”
“என் பேச்சு சிலரை கோபமடையச் செய்யும். அவர்கள் சொல்லலாம்“ “உங்களுடைய விளக்கப்படி மார்க்சைக் கூட அறிவுஜீவியாக கருத முடியாது”; நான் சொல்கிறேன் அவர்கள் தவறிழைக்கிறார்கள். மார்க்ஸ் புரட்சிகர இயக்கத்தின் நடைமுறையில் பங்கெடுத்தார். அதன் மூலம் புரட்சிகரத் தத்துவத்தையும் உருவாக்கினார். பண்டம் என்ற முதலாளித்துவ எளிய அடிப்படையிலிருந்து அவர் முதலாளிய சமூகத்தின் முழுப் பொருளாதார அமைப்பை முற்றாக ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பண்டங்களைப் பார்க்கிறார்கள், அதனைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவர்கள் அதில் எந்த கவனமும் செலுத்திய தில்லை. மார்க்ஸ் ஒருவர் மட்டுமே பண்டங்களைப் பற்றி அறிவியல் ரீதியாக ஆராய்ந்தார். அதன்உண்மையான வளர்ச்சி பற்றி, மிகப்பெரிய ஆய்வினை, முற்றான அறிவியல் கோட்பாட்டை உருவாக்கினார். அவர் இயற்கை, வரலாறு, பாட்டாளி வர்க்கப் புரட்சி ஆகியன பற்றி ஆராய்ந்து, இயங்கியல் பொருள்முதல் வாதம் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சிக் கோட்பாடு ஆகியனவற்றை உருவாக் கினார். இந்த வகையில் அவர் முழு வளர்ச்சியடைந்த அறிவுஜீவியாக உருவானார். மனித அறிவின் உயர்ந்த கட்டத்தை பிரதிநித்துவப் படுத்தினார். புத்தக அறிவு மட்டுமே கொண்டவர் களிடமிருந்து இவர் அடிப்படையிலேயே மாறுபட்டிருந்தார். மார்க்ஸ் விளக்கமான ஆய்வினை மேற்கொண்டார்.
நடைமுறைப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கில் அதனைப் படித்துப் பின் பொதுக் கருத்துக்களை உருவாக்கினார். பிறகு அந்த முடிவுகளை நடைமுறைப் போராட்டங்களில் உரசிப்பார்த்து சோதித்துக்கொண்டார். இதைத்தான் நாம் கோட்பாட்டு வேலை என்கிறோம்.
இவ்வகையில் வேலைகளை எப்படிச் செய்வது என்பதை அறிந்த, அதிகமான தோழர்கள் நமது கட்சிக்குத் தேவை, இவ்வகையான கோட்பாட்டு ஆய்வினைக் கற்றுள்ள அதிகமான தோழர்கள் நமது கட்சியில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோனர் முன்னேறக் கூடிய அறிவாளிகள் நாம் அவர்களை மதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சரியான கொள்கைகளை கைக்கொள்ள வேண்டும் கடந்தகாலத் தவறினைத் திரும்பவும் செய்யக் கூடாது. அவர்கள் வறட்டுவாதத்தை மறுத்து ஒதுக்க வேண்டும். புத்தகங்களிலுள்ள முன் தயாரிக்கப்பட்ட “சொற்றொடர்க”ளுக்குள் சிக்குண்டவர்களாகத் தம்மைக் குறுக்கிக் கொள்ளக் கூடாது.
“உலகில் ஒரே ஒரு உண்மையான கோட்பாடுதான் உள்ளது. அது புறவய யதார்த்தத்திலிருந்து பெறப்பட்டு புறவய யதார்த்தத்தினால் சரிபார்க்கப்படுவதாகும். இதைத்தவிர மற்றவையெல்லாம் நம் கருத்தியல் கோட்பாடு என்று சொல்லத்தக்கதல்ல. கோட்பாடு நடைமுறையோடு சம்பந்தப்படாதபோது அது இலக்கற்றுப் போய்விடும என்று ஸ்டாலின் கூறினார். இலக்கற்ற கோட்பாடு பயனில்லாதது. பிழையானது அதனை நாம் ஒதுக்கிவிட வேண்டும். இலக்கற்ற கோட்பாடுகளை உருவாக்குப வர்களை நாம் இகழ்ச்சியோடு சுட்டிக் காட்ட வேண்டும். புறவய யதார்த்தத்தில் தோன்றி அதனால் சோதித்தறியப்பட்டமார்க்சிய லெனினியம், மிகச்சரியான அறிவியல் ரீதியான புரட்சிகரமான உண்மையாகும்.
ஆனால் மார்க்சிய லெனினியத்தைப் படிக்கும் மிகப்பலர், அதனை உயிறற்ற வறட்டுச்சூத்திரமாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்கள். இதனால் நமக்கும், அதே வேளையில் மற்ற தோழர்களுக்கும் ஊறுவிளைவிக்கிறார்கள்.
“மறுபக்கம் நடைமுறை வேலையில் பங்கெடுக்கும் தோழர்கள் தங்கள் அனுபவத்தைத் தவறான பாதையில் செலுத்தினால் வருந்த வேண்டி நேரிடும். இவர்கள் அனுபவத்தில் வளமானவர்கள்,
இது மதிப்புமிக்க ஒன்றுதான், ஆனால் தங்களதுஅனுபவத்தோடு திருப்தியடைந்து விட்டால் அது ஆபத்தான ஒன்று. அவர்கள் தங்கள் அனுபவம், புலனறிவு, ஒருபக்கமானது என்பதைஉணர வேண்டும் இந்த வகையில் அவர்கள் முழுமையான பகுத்தறிவில் குறைபாடுகள் உள்ளவர்கள் ஆவார்கள். வேறு வார்த்தையில் சொல்வதானால் அவர்கள் தத்துவக் குறைபாடுள்ளவர்கள். அவர்களின் அறிவு முழுமையற்றது. ஒப்பீட்டளவில் முழுமையான அறிவில்லாமல் நல்ல முறையில் புரட்சிகர வேலை செய்வதென்பது முடியாத ஒன்று. ஆகவே முழுமையற்ற அறிவில் இரண்டு வகை உண்டு. ஒன்று புத்தகங்களில் காணப்படும் முன் தயாரிக்கப்பட்ட அறிவு, மற்றது பெரும்பாலும் புலனுணர்வான பகுதி அறிவு. இரண்டுமே ஒருதலைப் பட்சமானது. இந்த இரண்டின் இணைவில்தான், பலமான ஒப்பீட்டளவில் முழுமையான அறிவைப் பெற முடியும். எப்படியிருந்த போதிலும் தத்துவத்தைப் படிப்பதற்குதொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்த நமது தோழர்கள் முதலில் அடிப்படைக்கல்வியைப் பெற வேண்டும். அதில்லாமல் அவர்கள் மார்க்சிய லெனினியக் கோட்பாட்டைக் கற்றுக்கொள்ள முடியாது. இதைப் பெறுவதன் மூலம் அவர்கள் எந்த நேரத்திலும் மார்க்சியம் லெனினியத்தை கற்றுக்கொள்ள முடியும். எனது குழந்தைப் பருவத்தில் மார்க்சிய லெனினியப் பள்ளியில் கலந்துகொள்ளவில்லை. ஆசிரியர் சொன்னார் கற்றுக்கொள்வதும், கற்றதை இடையறாது நினைவுகூர்வதும் எவ்வளவு இனிமையான ஒன்று. “இம்மாதிரிதான் எனக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இந்தப் படிப்பு முறை பழமையானதாக இருந்த போதிலும் இது எனக்குச் சிறிது நல்லது செய்துள்ளது. ஏனெனில், இதிலிருந்து தான் படிப்பதற்கு கற்றுக் கொண்டேன். தற்போது நாம் கன்பூசியஸ் இலக்கியம் படிக்க இயலாது. ஆனால் நவீன சீனாவில் வரலாறு, புவியியல், அடிப்படை இயற்கை அறிவியல் போன்ற புதிய பாடங்கள் ஒருமுறை படித்து எல்லாவகைக்கும் உதவுகிறது இப்பொழுது நமது கட்சியின் மையக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது இதுதான்: தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்தவர்கள் அடிப்படைக் கல்வியைப் பெற வேண்டும். ஏனெனில் அதிலிருந்துதான் அவர்கள் ஏதாவது ஒரு வகையான அறிவை - அரசியல், இராணுவ அறிவியல் அல்லது பொருளியல் அறிவை - தொடர முடியும். மற்றபடி, வளமான அனுபவம் இருந்தும் கோட்பாட்டை கற்றுக்கொள்ள இயலாமல் போய்விடும்.
இதிலிருந்து பெறுவது என்னவெனில் அகநிலைவாதத்தை எதிர்கொள்ள இந்த இருவகையான பிரிவினரை, அவர்கள் எதில் குறைவாக உள்ளனரோ, அதை நோக்கி வளர்க்கவும் மற்ற பிரிவினரோடு ஒன்றிணையவும் செய்ய வேண்டும். புத்தகப் படிப்பிலுள்ளவர்களை நடைமுறை திசை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வகையில் மட்டும்தான் அவர்கள் புத்தகத்தோடு திருப்தியடைவது நிறுத்தப்பட்டு வறட்டுவாதத் தவறுகள் இழைப்பது தவிர்க்கப்படும். நடைமுறை வேலையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கோட்பாடு படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். அதன் மூலம்தான் அவர்கள், தங்களதுஅனுபவத்தை ஒழுங்கமைக்கவும் தொகுக்கவும்சர்வவியாபக உண்மைக்காக தங்கள் பகுதி அனுபவத்தைத் தவறாகப் பயன்படுத்தமாட்டார்கள். வறட்டுவாதமும், அகவயவாதம் போன்றதே. எதிரெதிரான நிலையிலிருந்து மையம் கொள்வதுதான்.
“ஆகவே இரண்டு வகையான அகவயவாதம் - வறட்டுவாதம், அனுபவ வாதம் – நமது கட்சியிலுள்ளது. ஒவ்வொன்றும் பகுதியைத்தான் பார்க்கிறறு. முழுமையை அல்ல. மக்கள்விழிப்போடு இல்லாமல் இருந்தால், பகுதி என்பது ஒரு குறை என்பதை அறியாமலிருந்தால், அதிலிருந்து மீள்வதற்கு முயற்சிக்காமல் இருந்தால், திசைமாறுதல்களுக்குஆட்படுவார்கள். ”எப்படியிருந்த போதிலும், இந்த இருவித அகவயவாதத்தில் வறட்டுவாதம் என்பது, நமது கட்சியில் இன்னும் பெரிய அபாயமாக உள்ளது. வறட்டுவாதிகள் தங்களுடைய அரைவேக் காட்டுத் தனத்திற்கு, மார்க்சிய வேடமிட்டுக் கொள்வதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியிலிருந்து வந்த ஊழியர்களை தன் வயப்படுத்தி எளிதாக தங்கள் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். வாய்ப்பந்தல் அடித்து அப்பாவி இளைஞர்களைபொறியில் சிக்க வைத்து விடுவார்கள். நாம் வறட்டு வாதத்தை வெற்றி கொண்டால் புத்தக அறிவுள்ள தோழர்கள், அனுபவ அறிவு கொண்டவர்களோடு இணைந்து கொண்டு, நடைமுறைப் பொருள்களை அல்லது பிரச்சனைகளைப் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். பிறகு பல சிறந்த ஊழியர்கள் கோட்பாட்டை நடைமுறையோடு இணைப்பார்கள். அதே சமயத்தில் சில உண்மையான கோட்பாட்டாளர்களை உருவாக்குவார்கள். நாம் வறட்டுவாதத்தை வெற்றி கொண்டால் அனுபவ அறிவைக் கொண்டுள்ளவர்கள் தங்கள் அனுபவத்தை கோட்பாட்டு நிலைக்கு உயர்த்த உதவும் நல்ல ஆசிரியர்களாக மாறுவார்கள். ஆகவே அவர்கள் அனுபவவாதத் தவறுகளை தவிர்ப்பார்கள்”.
”கோட்பாடு மற்றும் அறிவுஜீவி குறித்த குழப்பமானகருத்துக்களுடன்கோட்பாட்டைநடைமுறையோடு இணைப்பது குறித்தும் பெரும்பாலான தோழர்களிடையே குழப்பம்உள்ளது.அன்றாடம் கோட்பாட்டை நடைமுறையோடு இணைப்பது குறித்து உதட்டளவில்பேசி,செயலில்பிரித்தலையே செய்கிறார்கள். ஏனெனில் இணைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மார்க்சிய லெனினியக் கோட்பாட்டை எப்படிச் சீனப் புரட்சி நடைமுறையோடு இணைப்பது? வழக்கு மொழியில் சொல்வதனால் ““இலக்கை நோக்கி அம்பை எய்வதன் மூலம்” என்பது போல சீனப் புரட்சியை நோக்கி மார்க்சிய லெனினியத்தைச் சில தோழர்கள் மனம் போனவாறு “இலக்கற்று எய்கிறார்கள்”. இவ்வகையானவர்கள் புரட்சிக்கு ஊறுவிளைவிப்பவர்கள். மற்றவர்கள் அம்பை விருப்பத்தோடு தடவி “என்ன அருமையான அம்பு” என்று வியக்கிறார்கள். ஆனால், எய்வதற்கு முயற்சிப்பதே இல்லை. இவர்கள் புதுமை
குறித்த கலை வல்லவர்கள்தான். உண்மையில் புரட்சிக்கு ஒன்றுமே செய்வதில்லை. மார்க்சிய லெனினிய அம்பை, சீனப் புரட்சி என்ற இலக்கை நோக்கி எறிய வேண்டும். இந்த விசயம் தெளிவாகமல் நமதுகட்சியின் கோட்பாட்டு அளவை உயர்த்த முடியாது. சீனப் புரட்சி வெற்றியடைய முடியாது.
“நாம் மார்க்சிய லெனினியத்தைப் படிப்பது பகட்டுக்காக அல்ல. மாறாக முழுக்க முழுக்கத் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர லட்சியத்தை, வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் அறிவியல் என்பதால்தான் படிக்கிறோம். ஒரு முறை கற்றுக் கொண்டால், எளிதாக அனைத்து நோய்களையும் தீர்த்துவிடும் காயகல்பமாக மார்க்சிய லெனினிய மேற்கோள்களைக் கருதும் நபர்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவர்கள் குழந்தைத் தனமான அறியாமையை வெளிப்படுத்து கிறார்கள். அவர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும். முக்கியமான இந்த வகையான அறியாமையிலுள்ள நபர்கள்தான், மார்க்சிய லெனினியத்தை ஒரு வறட்டு வாதமாகக் கையாளுகிறார்கள். அவர்களுக்கு நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
“உங்கள் வறட்டுவாதம் பயனற்றது”. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நமது தத்துவம் வறட்டுவாதமல்ல; செயலுக்கான வழிகாட்டி எனத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த வகையான மனிதர்கள் மதிப்பு வாய்ந்த, உண்மையில்மிகவும் முக்கியமான இந்தக் கூற்றை மறந்துவிடுகிறார்கள். மார்க்சிய லெனினிய நிலையினைநோக்கு நிலையை வழிமுறையை, லெனின், ஸ்டாலின் பாடங்களைச் சீனப் புரட்சி குறித்து,நல்ல முறையில் கையாள்வதன் மூலம்தான் சீனக்கம்யூனிஸ்டுகள் தத்துவத்தை நடைமுறையோடு இணைத்துள்ளனர் எனக் கருத முடியும். மேலும், சீன வரலாறு புரட்சி குறித்த யதார்த்தங்களின் மீது தீவிர ஆய்வினைச் செய்வதன் மூலம் பல துறைகளில் சீனாவின் தேவைகளைச் சந்திக்கும் ஓர் ஆக்கப்பூர்வமான கோட்பாட்டு வேலையைச் செய்ய முடியும்.
பெயரளவில் கோட்பாட்டை நடைமுறை யோடு இணைப்பதென்று பேசுவதால் மட்டுமே -நூற்றாண்டுகளுக்கு பேசிக் கொண்டிருந்த போதிலும் - எந்தப் பயனும் விளையாது.அகவயவாதத்தையும், ஒரு தலைப்போக்கையும் வேரறுக்க வேண்டும்.
“அகவயவாதத்தை எதிர்ப்பதற்கு கட்சி முழுவதிலும் உள்ள படிப்பு முறையை சீர் செய்வது பற்றி இன்று இது போதும்”.
நாம் தெரிந்துகொள்ள வேண்டிது
1.”;சில குழப்பமான கருத்துக்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளன. உதாரணத்துக்கு கோட்பாடு என்றால் என்ன? அறிவுஜீவி என்றால் என்ன? கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது என்பதன் பொருள் என்ன? ஆகியவையே அவை” என்றார் மாவோ. அது போலவே இந்தியாவிலும் மக்களுக்கும் மக்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்டுகளுக்கும் கருத்துக் குழப்பங்கள் இருக்கிறது. இந்தக் கருத்துக் குழப்பங்கள் மாவோ மேலே கூறியது போல, கோட்பாடு என்றால் என்ன? அறிவுஜீவி என்றால் என்ன? கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பது எவ்வாறு? என்பது மட்டுமல்ல. மேலும் பல்வேறு பிரச்சனைகளில் குழப்பங்கள் நிலவுகிறது. இந்தக் குழப்பங்கள் எல்லாவற்றையும் இயக்கவியல்பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற மார்க்சிய தத்துவக்கண்ணோட்டத்தைக் கொண்டே நாம் தீர்வு காண வேண்டும். அதற்கு நாம் சந்திக்கும் இந்த குழப்பங்களைப் போன்ற குழப்பங்களை மார்க்சிய ஆசான்கள் எப்படித் தீர்த்தார்கள் என்பதையும் அதற்காக அவர்கள் நமக்கு வழிகாட்டிய போதனைகளையும் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் சந்திக்கும் குழப்பங்களை நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். ஆகவே மார்க்சிய ஆசான்கள் சந்தித்த பிரச்சனைகளையும் அதனை தீர்ப்பதற்காக அவர்களின் கொள்கை வழிகாட்டு தலையும் நாம் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொண்டு அதனைக் கொண்டு நமது குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
2.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மார்க்சியத்தை படித்து கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றார் மாவோ. அகவயவாதம் மற்றும் முறையால்லாத முறையில் மார்க்சியத்தைப் படிக்கக் கூடாது என்றார் மாவோ. மார்க்சிய லெனினிய முறையில்தான் நாம் படிக்க வேண்டும்என்றார் மாவோ. கட்சிப் பள்ளியில் மட்டுமல்ல கட்சி முழுக்கவே, அதாவது கட்சி அணிகள் முழுவதுமே மார்க்சியத்தை படிக்க வேண்டும் என்றார் மாவோ. மார்க்சியத்தை கட்சி அணிகள் படிப்பதன் மூலம் கட்சி அணிகளின் சிந்தனை முறையை விஞ்ஞானப் பூர்வமான சிந்தனை முறையாக வளர்க்க வேண்டும் என்றார் மாவோ. சமூகத்தை விஞ்ஞானப்பூர்வ முறையைபயன்படுத்தி மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே மார்க்சியத்தை படிக்க வேண்டும்என்றார் மாவோ.3 மிகச் சிறந்த மற்றும் புரட்சிகர சாதனை படைத்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் களிடையே மார்க்சிய கோட்பாட்டு மட்டம் தாழ்வாகவே இருந்தது என்கிறார்மாவோ. அன்றைய சீனாவில் மார்க்சிய நூல்கள் பல மொழிபெயர்க்கப்பட்டு மக்களுக்கு கிடைத்தது என்றும் அதனை வாங்கி பலரும் படித்து மார்க்சிய அறிவை வளர்த்துக் கொண்டார்கள் என்ற போதிலும் மார்க்சியத்தை கற்றுக்கொண்ட பலரும் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் சீனச் சமுதாயத்தையோ சீனப் புரட்சியையோ புரிந்துகொள்ள இயலவில்லை என்கிறார் மாவோ. ஆகவே நாம் மார்க்சியத்தைப் படித்துப் புரிந்துகொண்டால் மட்டும் போதாது என்றும் சமூகத்தை மாற்றுவதற்கான புதியகொள்கை கோட்பாடுகளை மார்க்சியத்தின் துணைகொண்டு உருவாக்கும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்மாவோ. இதைத்தான் கோட்பாடும் நடைமுறையும் இணைக்கப்பட வேண்டும் என்று மார்க்சியம் சொல்கிறது. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மார்க்சிய கோட்பாடுகளை அணிகளுக்குப் போதிப்பதே இல்லை. தற்போது மார்க்சியத்துக்கு எதிரான பிராங்பாட்வாதிகளின் நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மார்க்சியத்தை நடைமுறையோடு இவர்கள் எவ்வாறு இணைப்பார்கள். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளவும்இல்லை,மார்க்சியத்தை நடைமுறையோடு இணைக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளவில்லை. மாறாக பலரும் அகநிலைவாதக் கண்ணோட்டத்திலிருந்தே அதாவது அவர்களது மனதுக்குப் பட்ட வகையில் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்துச் செயல்படுவதால் அவர்கள் பல சமயங்களில் முட்டுச் சந்தில் முட்டிக் கொள்கிறார்கள்.
4. மாபெரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் ஊழியர்களும் சீனாவில் பல்வேறானநடைமுறைகளை கோட்பாட்டு நிலைக்கு உயர்த்தவில்லை என்றார் மாவோ, ஆகவே நமது நடைமுறையை அனுபவவாத அடிப்படையில் அல்லாது கோட்பாட்டு நிலைக்கு உயர்த்திட வேண்டும் என்கிறார் மாவோ. அதாவது நமது நடைமுறை அனுபவங்களிலிருந்து புதிய வகையான நடைமுறைக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும், அதற்கு மாறாக நடைமுறையில் அரைத்த மாவையே அரைக்கக் கூடாது என்பதே மாவோவின் வழிகாட்டுதலாகும். உதாரணமாக ஒரு தலித் சாதியைச் சேர்ந்த தொழிலாளியை முதலாளிகளின் கும்பல் தாக்கிவிட்டு அதனை சாதிப் பிரச்சனையாக மாற்றுவதற்கு முயற்சி செய்யும் போது நாம் அதனை சாதிய ஒடுக்குமுறையாகப்பார்த்து பாதிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து போராடினால் அந்தத் தொழிலாளியைத்தாக்கிய முதலாளிகளின் நோக்கமே வெற்றிபெற்று தொழிலாளர் களை சாதி அடிப்படையில் பிளவுபடுத்தி தொழிலாளர்களுக்கு இடையிலேயே மோதலை ஏற்படுத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை நசுக்கிவிடுவார்கள்.
இத்தகைய நடைமுறை அனுபவத்தி லிருந்து நாம் தொழிலாளர்களின் போராட்டத்தைகட்டியமைக்கும் போது முதலாளிகளின் சதியை முறியடிக்கும் முறையில் சாதி, மதம் கடந்து அனைத்து தொழிலாளர்களின் ஒற்றுமை ஓங்குக என்ற கொள்கை முழக்கத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராட வேண்டும். இந்தவகையில் நடைமுறைப் போராட்டத்திற்கான கொள்கை அல்லது கோட்பாட்டுமுடிவெடுப்பதன் அவசியத்தை நாம் உணர வேண்டும்.
5. சீனாவில் நாம் நமது புரட்சிகர சிக்கல்களை ஆய்வு செய்யவில்லை என்றார் மாவோ. சீனப்பொருளாதாரம், அரசியல், இராணுவம், கலாச்சாரம் போன்றவற்றை ஆய்வு செய்து இதுபற்றிய கொள்கை முடிவுகளை சீனக் கம்யூனிஸ்டுகள் எடுக்கவில்லை என்றார் மாவோ. அதன் மூலம் இப்பொருள்களை ஆய்வு செய்து கோட்பாட்டு முடிவுகளை எடுக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் அவசியமான பணி என்கிறார் மாவோ. ஆகவே இந்தியாவிலும் இந்தியப் பொருளாதாரம், அரசியல், அரசு நிர்வாக அமைப்புகள், கலாச்சாரம் போன்றவற்றை ஆய்வு செய்து இவற்றைப் பற்றிய கோட்பாட்டு முடிவுகளை எடுத்து, சமூகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைக்கான கொள்கை முடிவுகளை ஒருகம்யூனிச அமைப்பு எடுக்கவேண்டும். அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்துஅதனை ஏற்றுக்கொண்ட மக்களை அணிதிரட்டி பொருளாதாரப் போராட்டாம், அரசியல்போராட்டம், கலாச்சாரப் போராட்டம் போன்றவற்றை ஒரு கம்யூனிஸ்டுக் கட்சித்தலைமைதாங்கி நடத்துவதைத்தான் கோட்பாட்டின் அடிப்படையிலான நடைமுறையாகும். இத்தகைய கோட்பாட்டு வகைப்பட்ட நடைமுறைக்கு மாறாக சமூகச் சிக்கல்கள் எவற்றையும் அலசி ஆராய்ந்து கொள்கை முடிவு எடுக்காமல் நீச்சல் கற்றுக்கொள்ள தண்ணீருக்குள் இறங்கவேண்டும் என்ற கோட்பாட்டைச் சொல்லி கொள்கை முடிவெடுக்காமல் நடைமுறைக்குப் போகவேண்டும் என்ற கருத்தைப் பரப்புகிறார்கள். அந்தக் கருத்தானது அனுபவவாதத்தைஆதரிக்கும் கருத்தாகும். நீச்சலடிப்பதும் சமூக மாற்றத்துக்கான நடைமுறையையும் ஒன்றாக ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானதாகும். நீச்சலடிப்பது நீச்சலடிக்க கற்றுக்கொள்ளும் விசயம் ஆகும். ஆனால் சமூக நடைமுறை என்பது சமூகத்தை மாற்றுவதற்கான நடைமுறையாகும்.
இதில் சமூகத்தைப் புரிந்துகொள்வதும் சமூகத்தை மாற்றுவதற்கான கொள்கை முடிவெடுப்பதும் மிகமிக அவசியம் ஆகும். எனினும் அத்தகைய கொள்கை முடிவு எடுக்கவில்லை என்ற காரணத்திற்காக மக்களிடம் அனுகுவதும் கிடைத்துள்ள குறைந்தபட்ட அறிவைக் கொண்டு பொருளாதார மற்றும் அரசியல் போராட்டங்களை நடத்தத்தவே கூடாது என்று யாரும் கருதக் கூடாது. நமது குறைந்தபட்ச அறிவோடு நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டே சமூகத்தைப் பற்றிய ஆய்வுகள் செய்து சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு நாம் அதிக கவனம் செலுத்தி விரைவில் கொள்கை முடிவெடுப்பது மிகவும் அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
6. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் மோன்ற மார்க்சிய ஆசான்கள் சமூக மாற்றத்திற்கான நடைமுறை யிலிருந்து சமூக மாற்றத்திற்கான பொதுவான கோட்பாடுகளை உருவாக் கினார்கள். இந்த பொதுக் கோட்பாடு களைத்தான் மார்க்சிய லெனினியக் கோட்பாடுகள் என்கிறோம். அவர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள் வரலாறு மற்றும்புரட்சிகர யதார்த்தங்களிலிருந்து உருவாக்கப்பட்டது என்றார் மாவோ. மார்க்சிய ஆசான்களதுகோட்பாடுகளை வெறுமனை படித்தால் மட்டும் போதாது, இந்தக் கோட்பாட்டு ஒளியில்சீனாவின் வரலாறு மற்றும் புரட்சி பற்றிய யதார்த்தங்களை வளர்க்க வேண்டும் என்றும்,
சீனாவின் புரட்சிகர நடைமுறையை இந்தக் கோட்பாட்டு அளவு கொண்டு சிந்திக்க வேண்டும்என்றார் மாவோ. அத்தகைய தத்துவார்த்த கடமையை ஆற்றுபவரே ஒரு நல்ல மார்க்சிய வாதியாக இருக்க முடியும் என்றார் மாவோ. அதுபோலவே இந்தியாவில் நமது மார்க்சிய ஆசான்களது கோட்பாடுகளை படித்தால் மட்டும் போதாது. இந்தக் கோட்பாட்டு ஒளியில் இந்திய வரலாறு மட்டும் புரட்சிகர யதார்த்தங்களை வளர்க்க வேண்டும், மேலும் இந்தியாவில் என்னவகையான நடைமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும் எ்பதை இந்தக்கோட்பாட்டை அளவுகோலாக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே மாவோவின் வழிகாட்டுதல் ஆகும்.
7. ஒரு நபர் மார்க்சியப் பொருளியலை அல்லது தத்துவத்தை நன்கு மனப்பாடம் செய்து முதல் அத்தியாயத்திலிருந்து பத்தாவது அத்தியாயம் வரை ஒப்புவிப்பவராக இருந்து, ஆனால் அதை பிரயோகிக்க முடியாத நிலையில் இருந்தால், அவரை மார்க்சியக் கோட்பாட்டாளர் என்று கருத முடியுமா? இல்லை. அவரை அவ்வாறு கருதமுடியாது. எந்த வகையான கோட்பாளர்களை நாம் விரும்புகிறோம்? மார்க்சிய லெனினிய நிலைபாடு மற்றும் வழிமுறையோடு பொருந்தி வரக்கூடிய வகையில் மற்றும் புரட்சியின்போது வரும் நடைமுறைச் சிக்கல்களுக்கு முறையான விளக்கமும், சீனாவின் பொருளாதாரம், அரசியல், இராணுவம், பண்பாடு மற்றும் ஏனைய சிக்கல்களுக்கு அறிவியல் விளக்கங்களையும் கோட்பாட்டு விரித்துரைத்தல்களையும் தரமுடிகிற கோட்பாட்டுவாதிகளை நாம் விரும்புகிறோம். இந்த வகையான கோட்பாட்டுவாதியாக ஒருவர் இருக்க வேண்டுமானால் மார்க்சிய லெனினிய நிலைபாடு, கருத்துநிலை மற்றும் வழிமுறையை காலனியப் புரட்சி, சீனப் புரட்சி ஆகியன பற்றி லெனின் ஸ்டாலின் கோட்பாடுகளை உண்மையாகச் செரித்துக் கொண்டவராகவும் அதனை சீனத்தின் நடைமுறைச் சிக்கல்களுக்கு ஆழ்ந்த அலசல்களுக்கு உட்படுத்தக் கூடியவராகவும் இந்தச் சிக்கலின் வளர்ச்சி விதிகளை கண்டறியக் கூடியவராகவும் இருக்க வேண்டும். இந்த வகையான கோட்பாட்டுவாதிகள்தான் நமக்கு உண்மையில் அவசியம். மார்க்சிய லெனினிய நிலைபாடு, நோக்குநிலை மற்றும்வழிமுறை ஆகியவனவற்றை சீனாவின் வரலாறு, பொருளாதாரம், அரசியல், இராணுவ விவகாரங்கள் மற்றும் பண்பாடு பற்றிய கவனமான படிப்புடன் எப்படிப் பொருத்துவது?
ஒவ்வொரு சிக்கலையும் தெளிவான தடயங்களின் அடிப்படையில் பருண்மையாக ஆராய்வது, பின் கோட்பாட்டு முடிவுகளைக் கண்டறிவது என்று நமது ஊழியர்களைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை நமது மையக்குழு இப்பொழுது நிறைவேற்றி யுள்ளது. இப்பொறுப்பை நாம் கட்டாயம் சுமக்க வேண்டும்.இந்த கட்டுரையில் மாவோகோட்பாட்டிற்கும்நடைமுறைக்குமான உறவை நமக்குப் போதிக்கிறார். ஒருவர் மார்க்சிய தத்துவத்தை ஆழ்ந்து புரிந்துகொண்டு அதனை நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பதற்குப் பயன்படுத்து வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிறார். இங்குஅவர் இரண்டு விசயங்களை முன்வைக்கிறார். ஒன்று மார்க்சியக் கோட்பாடுகளை படிப்பது,மற்றொன்று அதனை நடைமுறைச் சிக்கலை தீர்ப்பதற்குத் தேவையான விளக்கங்களையும் அதனை விரித்துரைத்து மக்களுக்கு புரிய வைக்கவும் வேண்டும். இவ்வாறு சிக்கல்களைதீர்ப்பதற்கு மக்களுக்கு மார்க்சிய கண்ணோட்டத்திலிந்து வழிகாட்டவில்லை என்றால் அவரைஒரு சிறந்த கோட்பாளராக அதாவது கம்யூனிஸ்டாகக் கருத முடியாது என்று மாவோகூறுகிறார்.
இதன் அடிப்படையில் நாம் மார்க்சிய நிலைபாடுகளையும் வழிமுறைகளையும் மார்க்சியஆசான்களை படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்ட மார்க்சியநிலைபாடுகள், வழிமுறையிலிருந்து இந்தியச் சிக்கலை அலசி ஆராய்ந்து இந்தியச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கோட்பாடு அல்லது கொள்கை முடிவெடுத்துச் செயல்பட வேண்டும். அத்தகைய செயல்பாடு அல்லது நடைமுறையின் மூலம்தான் இந்திய மக்களை கூலி அடிமைத் தனத்திலிருந்தும் சாதி, மத அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்க முடியும். இதன் மூலம் மார்க்சிய கோட்பாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டியதன்அவசியத்தைஉணரவேண்டும். அந்தக் கோட்பாட்டுப் புரிதல் இல்லாத நடைமுறையால் எவ்விதமான பயனும் இல்லை என்ற வரலாற்று அணுபவத்தையும் நாம் உணர வேண்டும்.
ஆனால் சில நடைமுறைவாதிகள் நடைமுறை இல்லாமல் வெறுமனே கோட்பாட்டை படிப்பதால் பயனில்லை என்று புலம்புகிறார்கள். உண்மைதான் நடைமுறைக்காகவேதான் மார்க்சியக் கோட்பாட்டை படிக்க வேண்டும். ஆகவே நடைமுறைவாதிகளே நீங்கள் நினைக்கும் நடைமுறைக்காக மார்க்சியக் கோட்பாட்டை படிக்கவே கூடாதா? மார்க்சியக் கோட்பாட்டை பலர் படித்தாலும் அதில் சிலர்தான் அதனைக் கொண்டு நடைமுறைச் சிக்கலை தீர்க்கும் திறனை வளர்த்துக் கொள்வார்கள். ஆகவே மார்க்சியத்தை படிப்பது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் கடமையாகும். மார்க்சியத்தைப்படித்துதெரிந்துகொள்ளாதவரால் ஒருபோதும் கம்யூனிஸ்டாக ஆக முடியாது.
8 “கட்சிப் பள்ளியில் உள்ள நமது தோழர்கள் மார்க்சிய லெனினிய கோட்பாட்டை உயிரற்ற ஒருவறட்டுச் சூத்திரமாகக் கருதக்கூடாது. மார்க்சியக் கோட்பாட்டில் புலமை பெற்று அதனைநடைமுறைப் படுத்துவது அவசியம். நடைமுறைப்படுத்துதல் என்ற முழுப்யன்பாட்டிற்காகவே, அதில் புலமை பெற வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நடைமுறைச் சிக்கல்களைத் தெளிவாக்குவதற்கு மார்க்சிய, லெனினிய நோக்குநிலையினை அமுல்படுத்தினால் நீங்கள் சில வெற்றிகளுக்கு பெருமை கொள்ள முடியும். நிறைய சிக்கல்களை தெளிவாக்கினால் விரிவாகவும் ஆழமாகவும் இருக்கும். மார்க்சிய லெனினிய படிப்பிற்குப் பின் சீனச் சிக்கல்களை மாணவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? சிக்கல்களை தெளிவாக, அல்லது தெளிவற்று, முழுமையாக, அல்லது அரைகுறையாக என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்ல அல்லது வறிய நிலை பற்றி மதிப்பிடுவதற்கான விதிமுறைகளை நமது கட்சிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும்”மார்க்சிய கல்வியின் அவசியத்தை மாவோ இங்கே வலியுறுத்துகிறார். மார்க்சிய கல்வியை வழங்குவதற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியப் பள்ளிகள் நடத்திய வரலாற்றை இங்கே மாவோ குறிப்பிடுகிறார். மார்க்சிய கல்வி பெற்ற மாணவர்கள் சீனப் புரட்சிகர நடைமுறை யோடு மார்க்சியத்தை பொருத்திப் பார்க்கும் திறனை எந்தளவுக்கு வளர்த்துள்ளார்கள் என்பதை சோதித்துப் பார்த்து மதிப்பிட வேண்டும் என்கிறார். எப்படி இங்குமருத்துவ கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் நடத்தப்படுகிறதோ அதுபோலவே மார்க்சியபள்ளிகளை நடத்த வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அத்தகைய மார்க்சிய கல்வி நிலையங்களை எந்த கம்யூனிச அமைப்பாவது இங்கே நடத்துகிறதா? இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும். ஆனால் இந்தியாவில் கம்யூனிசத்திற்கு எதிராக இந்துத்துவத்தை வளர்த்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் சிறு குழந்தைகளுக்கும் சாகா என்ற பள்ளியின் மூலம் இந்துத்துவத்தைப் போதித்து மக்களிடம் மதவெறியை ஊட்டிவருகிறது. இந்திய கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள வில்லை, மார்க்சியத்துக்கு எதிரான எதிர்மறை ஆசான்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை. இது கொடுமை அல்லவா?
9 “உண்மையான பொருளில் புத்தக அறிவு மட்டும் கொண்டவர்கள், எவ்வாறு உண்மையான அறிவுஜீவிகளாக மாற இயலும்? அவர்களை நடைமுறை வேலையில் பங்கெடுக்க வைத்து நடைமுறை வேலை செய்பவர்களாக மாற்றுவது, கோட்பாட்டு வேலையில் ஈடுபட்டுள்ளவர்களை, முக்கிய நடைமுறைச் சிக்கல்களை ஆய்வு செய்ய வைப்பது என்பதுதான் இதற்குள்ள ஒரே வழி. இந்த வழியில்தான் நமது குறிக்கோள்களை கூட அடைய முடியும்” மாவோ.
இங்கே மாவோ புத்தக அறிவைப் பெற்றவர்கள் மட்டும் அறிவுஜீவிகளாக ஆகமுடியாதுஎன்கிறார். அவர்கள் பெற்ற புத்தக அறிவைப் பயன்படுத்தி சமூக சிக்கல்களைத் தீர்த்தால் மட்டுமே இவர்களை அறிவுஜீவிகளாக கருத முடியும் என்கிறார் மாவோ. இதன் மூலம் கோட்பாடுகளை படிப்பதன் நோக்கம் நடைமுறையில் அதனை பயன்படுத்தி நாம் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். உதாரணமாக மருத்துவ விஞ்ஞானத்தை படித்துவிட்டுஒருவர் நோயாளியை குணப்படுத்தவில்லை என்றால் அவரை எப்படி மருத்துவர் என்று சொல்ல முடியாதோ. அதுபோலவே மார்க்சியத்தை படித்துவிட்டு சமூகப் பிரச்சனையை ஒருவரால் தீர்க்க முடியவில்லை என்றால் அவரை மார்க்சியவாதியாக கருத முடியாது.
ஆனாலும் ஒருவர் புத்தக அறிவு கொண்டவராக மட்டும் இருந்தால் அவரை நடைமுறைவேலைகளில் பங்கெடுக்க வைப்பதன் மூலமும்,அவர் ஒரு கோட்பாளராக இருக்கும் நிலையில் அவரை ஒரு முக்கியமான நடைமுறைச் சிக்கலை ஆய்வு செய்து அதனை தீர்ப்பதற்கான கொள்கை முடிவை எடுப்பதற்கான பணியில் ஈடுபடுத்த வேண்டும்.இத்தகைய முறையிலேயே ஒருவரை அறிவுஜீவியாக வளர்க்க முடியும் என்கிறார் மாவோ.
10.“உலகில் ஒரே ஒரு உண்மையான கோட்பாடுதான் உள்ளது. அது புறவய யதார்த்தத்திலிருந்து பெறப்பட்டு புறவய யதார்த்தத்தினால் சரிபார்க்கப்படுவதாகும். இதைத்தவிர மற்றவையெல்லாம்நம் கருத்தியல் கோட்பாடு என்று சொல்லத்தக்கதல்ல.
கோட்பாடு நடைமுறையோடு சம்பந்தப்படாதபோது அது இலக்கற்றுப் போய்விடும என்று ஸ்டாலின் கூறினார்.இலக்கற்ற கோட்பாடு பயனில்லாதது.பிழையானது அதனை நாம் ஒதுக்கிவிட வேண்டும்.இலக்கற்ற கோட்பாடுகளை உருவாக்குபவர்களை நாம் இகழ்ச்சியோடு சுட்டிக்காட்ட வேண்டும். புறவய யதார்த்தத்தில் தோன்றி அதனால் சோதித்தறியப்பட்ட மார்க்சிய லெனினியம், மிகச்சரியான அறிவியல் ரீதியான புரட்சிகரமான உண்மையாகும்.
ஆனால் மார்க்சிய லெனினியத்தைப் படிக்கும் மிகப்பலர்,அதனை உயிறற்ற வறட்டுச் சூத்திரமாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்கள். இதனால் நமக்கும், அதே வேளையில் மற்ற தோழர்களுக்கும் ஊறு விளைவிக்கிறார்கள். மாவோ.
இதிலிருந்து மாவோ வலியுறுத்துவது என்ன? ஒரு கோட்பாடு அல்லது கொள்கையானது புறவயத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் புறவயமான சூழலை மாற்றியமைப்பதற்கான கொள்கையாக இருக்க வேண்டும். புறவயத்தை அல்லது சமூகத்தை மாற்றியமைப்பதற்கு அந்தக் கொள்கை பயன்படவில்லை என்றால் அந்தக் கொள்கை சரியான கொள்கை இல்லை, அதாவது தவறான கொள்கையாகும். உதாரணமாக இந்தியாவில் பல காலமாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட சாதி மக்கள் பல இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி வந்தனர் என்ற புறவயமான சூழலை மாற்றுவதற்காக சீர்திருத்தவாதிகளும் ஆளும்வர்க்கங்களும் ஒரு கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்தினர். அதுதான் இடஒதுக்கீட்டுக் கொள்கை யாகும். இந்தக் கொள்கையை பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திய பின்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் இன்னல்கள் தீரவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கானகொள்கைஎன்று சொல்லப் பட்ட இடஒதுக்கீட்டு கொள்கையானது சரியான கொள்கை இல்லை என்பதே ஆகும். அதாவது இடஒதுக்கீட்டுக் கொள்கையானதுதவறானகொள்கையாகும் என்பது நடைமுறை சோதனையின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மிகச் சிலர் பொருளாதாரம் மற்றும் கல்வி பெற்று பயனடைந்தார்கள் என்பது யதார்த்த உண்மையாகும். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?இடஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் மிகச்சிலர்தான்பயனடைய முடியுமே தவிர அனைத்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர்களும் இன்னலிருந்து, துன்பங்களிலிருந்து மீண்டுவருவதற்கான கொள்கை அல்ல இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். -தேன்மொழி
++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment