உண்மையாலும் இங்குள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும்/ அமைப்பும் நடைமுறை பணி களப்பணிதான் முதன்மை அதற்கு வாருங்கள் என்று அழைக்கின்றனர். அவை எவ்வகையான களப்பணி என்று கேட்கிறேன். அவர்களும் பதில் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் உள்ள நடைமுறைக்கும் பேச்சும் வெவ்வேறாக உள்ளதை வர்க்க போராட்டம் என்று கூறிக்கொண்டு வர்க்க எதிரியுடம் கூட்டு சேர்வது எவ்வகையான வர்க்க போராட்டமோ அவர்களுக்கே வெளிச்சம்!!!!.
இங்கே ஒருவர் களப்பணிக்கு அழைக்கிறார் அவை எவ்வகையான களப்பணி என்று கேட்கிறேன். அவரும் பதில் சொல்கிறார்.
ஒரு பக்கம் ஆளும் வர்க்கத்தை தாங்கி பிடிக்க போராடும் இவரின் கட்சி
இன்னொறு பக்கம் அடையாள அரசியலை பேசும் இவரின் கட்சி
இறுதியில் NGOகளை கட்சிக்குள்ளே வைத்துள்ள கட்சி
என்ன நடைமுறைதான் என்று கேட்கிறேன் அவரும் வர்க்க போராட்டதிற்கு அழைக்கிறார்...
வாசித்து பாருங்கள் தோழர்களே.
உண்மையாலுமே தெரியாமல்தான் கேட்கிறேன்.
நாட்டில் 144 கோடி மக்களில் தேடி எடுத்தால் கூட 1% குறைவானவர்களே பெரும் கோடீஸ்வர்களும் பெரும் முதலாளிகளும் தொழிலாதிபர்களும் இருப்பர்
மற்ற 10% பேர் ஏதோ வசதியாக வாழ தகுந்த வேலையில் இருப்பர்.
தனியார் மற்றும் ஏதோ வகையில் வாழ 20% பேர் இருப்பர் என்று வைத்துக் கொண்டாலும் நாட்டின் பெரும்பான்மையிலான உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த நாட்டில் வாழவே வழியற்ற நிலையில் அவர்களுக்கு விடுதலைக்கான வழி என்னவென்று கேட்டால்?
வா நடைமுறைக்கு என்கின்றனர் அவைதான் என்ன நடைமுறை என்றால் வர்க்க போராட்டம் என்கின்றனர்!
சிரிப்பா இருக்கிறது இங்கு நடைமுறை பற்றி பேசும் ஒவ்வொருவரின் நிலைப்பாட்டை காணும் பொழுது....
1). ஒரு கூட்டம் பாராளுமன்றத்தையே தன் நடைமுறையாக கொண்டுள்ளது.
2). ஒரு கூட்டம் பெரியாரை அவரின் செயலை முதன்மை படுத்தி நடைமுறைக்கு அழைக்கிறது..
3). ஒரு கூட்டம் அம்பேத்காரை முதன்மை படுத்தி நடைமுறைக்கு அழைக்கிறது.
4). ஏகாதிபத்தியம் கூறும் அடையாள அரசியல் ட்ராட்ஸ்கியம் பெண்ணியவாதம் இன்னும் சில வற்றை முதன்மை படுத்தி நடைமுறைக்கு அழைக்கிறது.
உண்மையாலுமே நடைமுறை மார்க்சிய லெனினியத்தை ஆம் உள்ள சமூக அமைப்பை மாற்றி அமைக்க அதற்கான வழிமுறையை மக்கள் மத்தியில் போதித்து உள்ள அமைப்புமுறைக்கு முடிவு கட்டுவதுதான் நடைமுறை அதனை பற்றி யார் பேசுகிறீர் வாருங்கள் விவாதிப்போம் நடைமுறை சாத்தியப்பாட்டை பற்றி களப்பணிக்கு....
மற்றெல்லாம் ஏமாற்றே....
உண்மையாலுமே நடைமுறை மார்க்சிய லெனினியத்தை ஆம் உள்ள சமூக அமைப்பை மாற்றி அமைக்க அதற்கான வழிமுறையை மக்கள் மத்தியில் போதித்து உள்ள அமைப்புமுறைக்கு முடிவு கட்டுவதுதான் நடைமுறை அதனை பற்றி யார் பேசுகிறீர் வாருங்கள் விவாதிப்போம் நடைமுறை சாத்தியப்பாட்டை பற்றி களப்பணிக்கு....
மற்றெல்லாம் ஏமாற்றே....
NGO கள் பின்னாடி வால் பிடித்துக் கொண்டே வர்க்க போராட்டம் என்பது அடையாள அரசியலை தூக்கி பிடித்துக் கொண்டே ஜாதி ஒழிப்பு என்பது உண்மையாலும் உங்களுக்கும் என்ன நடைமுறை என்று தெரியாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டுள்ளீர்கள் அணிகளை குழப்பி வைத்துள்ளீர் இவைதான் களபணி என்று! மிக மோசமான செயல் இவை. இவற்றை பற்றி நமது ஆசான்கள் தெளிவாக முன் வைத்துள்ளனர். தெரிந்தே நீங்களும் உங்கள் கட்சியும் மார்க்சியம் அல்லாதவற்றை மார்க்சிய நடைமுறை என்று ஏமாற்றுகிறீகள்
No comments:
Post a Comment