இன்று இந்தியாவில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகள்/இயக்கங்கள்/குழுக்கள் தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பது இவர்கள் பாசிசத்தை எதிர்க்கும் சக்தி என்பதும் தி.மு.க அ.தி.மு.கா வின் பின் அணி திரள்வதும் சந்தர்பவாதமே அதனை பற்றி இந்தப்பகுதியில் பார்ப்போம். இங்குள்ள இடதுசாரிகளின் பணியைவிட அவர்கள் ஆளும் வர்க்க கும்பலிடம் விலை போய் உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பகுதி பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புரட்சியை மறுக்கும் திருத்தல்வாதம் சீர்திருத்தவாதம் அடையாள அரசியல்
இன்று இந்திய கம்யூனிச கட்சி/ இயக்கங்கள் பல்வேறுவிதமான போக்கில் உள்ளன. சிபிஅய் தொடங்கி அதன் வழி தோன்றலான சிபிஎம்மும் மார்க்சிய ஆசான்களான லெனின் ஸ்டாலின் மாவோவினை பின் பற்றி ஒரு புரட்சியை சாதிக்க வல்ல கட்சியாக இல்லாமல் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 காங்கிரசில் எடுத்த முடிவை ஏற்றதனால் அவை பாட்டாளி வர்க்க புரட்சியை கைவிட்டு 2ஆம் அகிலத் தலைவரின் (காவுத்ஸ்கிய வாதத்தை) நிலைபாட்டை ஏற்று புரட்சிக்கு பதிலாக சரணாகதி பாதை மேற்கொண்டனர். அந்த திருத்தல்வாதம் ஒட்டுமொத்த கட்சியையும் புரட்சி என்ற வார்த்தையை உச்சரிப்பது கூட வெறுப்படைய செய்யும் வகையில் பயிற்று விட்டதோடு பாராளுமன்றததில் பங்கெடுபதன் மூலம் சாதித்துவிடலாம் என்ற முதலாளித்துவ பாதையை கையில் எடுத்து அணிகளை அடையாள போராட்டதிற்காக போராடும் அமைப்பாக சீரழித்துவிட்டது மட்டுமே இவர்கள் சாதித்தது. அதனை பற்றி சில தெரிந்துக் கொண்டு மேலே செல்வோம்.
திருத்தல்வாதம்என்றால்என்ன? “திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கேயாகும்.திருத்தல்வாதம்முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்"என்று நமது மூலவர்கள் சொல்லியுள்ளனர் .
காவுட்ஸ்கி தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல்வாதிகள் சாராம் சத்தில் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பது எந்த வேறுபாடும் இல்லை. மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907இடைப்பட்ட கட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியாடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது .
மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின் இப்போக்கு. இன்னொன்று மார்க்சியத்தை மறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சிய போதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன் என்று மார்க்சியத்தை குழப்புதல்.
சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன ?
1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 பேராயத்தில் கொண்டு வரப்பட்டவை,அவையே சோசலிச சோவியத்தை சிதைக்கும் மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டை கையில் எடுத்தது.இவை தனது நாட்டில் மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்தைப் புகுத்தி; உலகில் உள்ள எல்லா நாட்டு கம்யூனிச இயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவதுடன் கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக் கொடுத்தது. இவை பெரும் சிதைவை உருவாக்கியது.
லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்ப வாதிகளையும் மாவோ ரசிய குருசேவ் புரட்டல் வாதிகளையும் 'முதலாளி வர்க்கத்தினர்' என்றும் 'வர்க்க விரோதிகள்' என்றும் அடையாளம் காட்டினார்கள்.
"சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறார் கள் மீண்டும் முதலாளித்து வத்தினை மீட்டெடுக்க முயல்கிறார்கள்"என்றார் மாவோ. மாவோ குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின்போது குட்டி முதலாளித்துவ சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூலகாரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலாக தீங்கு பயக்கும் சூழ்நிலைகளின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதிய முதலாளித்துவ கர்த்தாகளும் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டி யுள்ளார்."கட்சி உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மாவோ அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் தமது அதிகாரத்தைக் காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்"என்றார் இன்னொரு புறம் மாவோ "நீங்கள் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் வலதுசாரிகள் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப்பாதையை மேற்கொண்டிருக் கிறார்கள்" என்றார் கலாச்சாரப் புரட்சியின் போது .
l ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனாவின் டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம் இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல்வாத கட்சிகளுடன் நட்பும் சகோதரத்துவமும்,புரட்சிகர இயக்கங்களை கைவிட்டும் தனது உறவை துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவ பாதையில் சீரழிந்து புதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தி உலக கம்யூனிச கட்சிகளை இயக்கங்களை சீரழித்துதான் அவர்களின் சாதனை. இன்று கம்யூனிச கட்சிகள் அவர்கள் பின் தொடர்ந்து புரட்சிக்கு பதில் சமரசம் முதலாளித்துவத்திடம் சரணாகதி பாதையில் சென்றுக் கொண்டிப்போர் நோக்கம் நோக்கத்தை பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை.
காவுட்ஸ்கி தொடங்கி குருசேவ் டெங் வரையிலானதிருத்தல்வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பது எந்த வேறுபாடும் இல்லை.மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும்,பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான,தனிச் சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது.
இன்னொரு போக்கு
மார்க்சியமோ,தனிச்சிறப்பான கூறுகளுக்கும்,பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
“மண்ணுக்கேற்ற மார்க்சியம்”இந்த வகையில் திராவிடதமிழினவாதிகளின் அங்கீகாரத் தையும் பெற்றுள்ளனர். இங்குள்ள அதிகாரபூர்வகம்யூனிசக்கட்சிகள் புறக்கணித்த தேசியஇனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின,தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பலஆண்டுகள் முன்புகைவிட்டதைஇப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்குறியது.
மாவோ ஒரு முறை சொன்னது போல் மார்க்சியம் என்பதே பொதுத்தன்மையைக் குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகவும்.அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர,குறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்துவிடக்கூடாது.
ஆனால் இங்கோ பலர் இது போன்ற பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர். இதுவே பொதுத்தன்மையை குறிப்பான தன்மையயுடன் பொருத்திக் காணுதலாகும். இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் ,சீனா மார்க்சியம் ஏன் தமிழகம் மார்க்சியம் என்று கோட்பாடுகள் இல்லை. அந்தந்த நாட்டின் பொதுத் தன்மையைக் குறிப்பான குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும்.
l ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது.
குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.
l இன்னும் சொல்லப்போனால் சமனற்ற வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களை கொண்டுள்ள ஒரு நாட்டில்,குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் கருதி தேசிய இனங்களின் தன்மைகளுக்கு ஏற்ப விடுதலைப்பாதையில் மாறலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித் தனி மார்க்சியமாவதில்லை. தனித் தனியாக பார்பவர்கள் மார்க்சிய அரசியலை புரிந்துக் கொள்ளாதவரே. அவர் மார்க்சியவாதி அல்ல.
எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் திருத்தல்வாதிகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும்.ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே“மண்ணுகேற்றமார்க்ச்சியம்”என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை,நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிகசுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப்போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது எனும் திருத்தல்வாதிகள் இன்னும் முழுமையாக,ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்னஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவத்தின் காலனியாதிக்க பண்புகள் இதற்கு முந்திய முதலாளித்துவ சமூக குணாம்சரீதியில் வேறுபாடு கொண்டதாகும் .இதன் தனி இயல்பு மூலதன ஏற்றுமதியாகும் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடம் உலகின் எந்த மூலையில் இருப்பினும் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்ய ஏகாதிபத்தியம் பேயாய் அலைகிறது.பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்ல அதன் மூலதன ஏற்றுமதிக்கு முன்னேறிய நாடுகளையும் வேட்டையாடி சேர்த்துக் கொள்கிறது மூலதன ஏற்றுமதி மூலம் நாடுகளை உத்தரவாதமாக கொள்ளையிடவும் சுரண்டவும் அவற்றை காலனிகளாகவும் செல்வாக்கு மண்டலமும் மாற்றி அமைக்கிறது. (ஏகாதிபத்தியம் முதலாளித்து வத்தின் உச்சகட்டம் -லெனின்).
அப்படிப்பட்ட சமரசமற்றகாலகட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையாவரிசையில் அதிகார புரோக்கர்களான இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் .... காணச்சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த இவர்கள் மார்க்ச்சியத்தை பேச என்ன அருகதை உள்ளது?
பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும் இருப்பவர்கள் எந்த வர்க்க நலனுக்காக போராடுகின்றனர்?. 1948, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவாஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது.இன்றோ மேல்சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் திருத்தல்வாதிகள்.
டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கிய ஜோதிபாசு எங்கே?
“சாதி ஒடுக்கு முறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத் தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக் கானோரையும் செங்கொடி தந்தது. மற்ற இன்றைய சாதி கட்சிகள் தராதது ஏன்?அவை அந்த மக்களை தலித் போர்வையில் சுரண்டுவோரும் அடக்கம்.
கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத் தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும்,அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
l மார்க்சியத் துரோகிகளும் எதிரிகளும் அவதூறு செய்வதுபோல, எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லாக் காலங்களுக்கும்,எல்லா நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய நடைமுறைகளை வைத்திருப்பதாக மார்க்சியம் ஒருபோதும் உரிமை கொண்டாடவில்லை.மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும்,பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது.
வர்க்க போரட்டத்திற்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு, வர்க்கம் என்பது சாதியின் மறு வடிவமாக இருந்த நில உடைமைக் காலச் சூழலில் சாதிப் போரட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.
ஆனால் இன்றைய சூழலில் சற்று சிக்கலான பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் சாதிக்குள்ளே வர்க்கங்களாக மக்கள் முரண்பட்டு நிற்கும் பொழுது,ஜாதிகளை ஒழித்தாலே வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்ற தத்துவம் சாதியையும் வர்க்கத்தையும் தனித்து பார்ப்பதாகும். ஒரே சாதிக்குள்ளேயே காணப்படும் பகை வர்க்கங்கள் தம்முள் மோதிக்கொள்ளும் சூழலும் கண்கூடாக காணலாம், இதனை மறுத்து முன் வைக்கும் பின்நவீனத்துவ அடையாள அரசியலின் வெளிப்பாடுதான் பல்வேறு விதமான போக்குகள் என்று அடித்துக் கூற முடியும்.
நிலவுடமை சூழல் இன்றும் நிலையைக் கொண்டு இருக்கும் இடங்களில் அரசியல் அதிகாரம் இருக்கமாக உள்ளது. ஏதேனும் ஒரு ஓட்டுக் கட்சி வாக்குச் சீட்டு வங்கியாகவே கிராமங்கள் உள்ளன. மக்களை சாதியின் பின்புலத்தை வளர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. அந்த சாதி ரீதியான பிளவு என்பதே உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவதை தடுக்கும் மாபெரும் சூழ்ச்சியாகும். இதை எவர் செய்தாலும் அவர்கள் ஆளும் வர்க்க பிரதிநிதிகளே. அவர்கள் இந்த சுரண்டல் அமைப்பை கட்டிக்காக்க போராடுகின்றனர் ஒழிக்க போராடவில்லை என்பது திண்ணம்.
தனித்தனியாக தோன்றிய ஜாதி சங்கங்கள் இறுதி நிலையில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிகள் இணைந்து விட்டனர்.அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாக கொண்ட அமைப்புகள் அந்தந்த பகுதியில் செல்வாக்கான ஓட்டுக்கட்சிகள் ஆக விளங்குகின்றன இறுதியில் அந்தந்த சாதிகளில் உள்ள மேல் வர்க்கத்தினர் அந்த சாதிகளில் உள்ள அடிப்படை வர்க்கத்தினரை அதற்கான அரசியல் அதிகார உரிமையை இந்த சாதி அமைப்புகள் வழங்குகின்றன. ஜாதி அமைப்பு என்பது முதலாளித்துவ முந்தைய உற்பத்திக்கான வடிவம் ஆகும். புரட்சி பேசுபவர்களும்அவர்களின்இயக்கங்களும் ஜாதி அமைப்புகளை எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால்ஆளும்கும்பலின்வால்பிடித்தல்ல.பெரியாரின் தொடக்ககால வெற்றி இவை காட்டுகின்றது. தேசியஇனத்துக்கு் தலைமைதாங்கும் சக்தியாக. இன்று இவர்கள் தத்துவங்களிலும் சாதி அமைப்பு நடைமுறையளவிலும் சமரசம் கொள்ளும் பொழுது தோல்வி அடைகின்றன. சாதியம் கலாச்சார ஆதிக்கத்தை மட்டுமே நினைவில் கொண்டு ஆதிக்கத்தை வெறும் பாடமாக மட்டுமே ஏற்றுக் கொண்ட இயக்கங்களில் சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் ஆதரவு என்று குறிப்பிட்டு அதன் பின் தேசிய இனத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் ஒன்று பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிற்று.
மேலும்ஒருபோக்கு:படித்தோருக்கு வேலை ஒதுக்கீடு படிப்பதற்கான இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்புகளின் கோரிக்கையாக 1920காலகட்டத்தில் தொடங்கி இந்த கோரிக்கைகளின் தன்மைக்கும் இன்றைய காலகட்டத்தில் இவற்றில் அன்றை்கும் இடையிலான வேறுபாட்டை காணவேண்டும். வேலை ஒதுக்கீடு என்பது அன்று முதல் இன்று வரை ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் கண்துடைப்பே எனலாம். இருந்தும் 1920களில் வேலைக்கான படிப்பறிவு நகர் மயமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று படிப்பறிவு கிராமமயமாகவும் எல்லாசாதியபிரிவுமக்களின் சாதனையுடன் இருப்பதை காண்பிக்கிறது. சாதிய போராட்டங்களின் துணை விளைவாக காண வேண்டியுள்ளது. வேலை இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டமும் சாதி அமைப்புகளை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தி கொள்கின்றனர்.
இப்படி ஜாதி அமைப்புகளின் ஆட்பட்டுள்ள அடிப்படை உழைக்கும் மக்களின் பிரிவினர்கள் வர்க்க உணர்வு ஊட்டப்படும் போக்கில் இத்தகைய போராட்டங்களில் தன்னை வர்க்கப் போராட்டத்துக்கு உரிய வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கம் மக்களின் அணுகுமுறை சாதி அமைப்பு இவற்றில் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. கடைநிலை சாதிகளில் உள்ள திறமையான இளைஞர்களை வேலை ஒதுக்கீடு என்ற பெயரில் தனக்கு சேவகம் செய்ய பயன்படுத்திக்கொள்கிறது. இவர்கள் ஜாதி ஒழிப்பை கூறுவதில்லை. சாதி அமைப்பின் மூலம் தமக்குரிய சமூகத்தை ஆளும் வர்க்கங்கள் உறுதிப் படுத்திக் கொள்கின்றன. ஆளும் வர்க்க அணுகுமுறை சாதி மறுப்புக் கோருவதில்லை.
இன்னொருபுறம் சாதிகளுக்கு இடையிலான வேறுபாட்டை களைந்து சமத்துவம் நிலவ வேண்டும் என்று விரும்புகின்றனர்.அவர்கள் சமூக அமைப்பில் மேல் நிலையில் உள்ளவர்கள். கடைநிலை ஜாதியில் உள்ள மேல் மேல்மட்ட பிரிவு ஆகியவற்றை சார்ந்த குட்டி முதலாளி வர்க்க பிரிவினர். சாதி மேம்படுத்தினால் ஜாதி ஒழிந்து விடும் என நினைக்கின்றனர். வேலை ஒதுக்கீடு போன்ற சிறு உதவியினால் உள்ள அனைவரும் உயர்ந்த விட முடியும் என நினைக்கின்றனர். பாட்டாளி வர்க்க அணுகுமுறை இந்த ஜாதி அமைப்பை ஒழிக்க விரும்புகிறது, அனைத்து ஒடுக்குமுறைகளின் ஒருபகுதியாக ஜாதிய ஒடுக்குமுறையை காண்கிறது.
ஜாதி ஒழிப்புக்கு தீர்வுதான் என்னமக்கள் ஜனநாயக புரட்சி என்பது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருளாதார அடிப்படையை ஒரு உடனடி போராட்டத்தின் மூலம் மாற்றி அமைத்துவிட முடியும். ஆனால் அப்பொழுதும் ஜாதியின் கருத்துக்கள் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும் அக்காலத்தில் ஜாதிகளை ஒழித்து மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட கூடிய கலாச்சார போராட்டத்தை தொடர புரட்சியின் பயன்கள் பெற உடனடியாக சமூக பொருளாதார அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்ட வேண்டும்.
இன்னும் விரிவாக பேசுவோம் எப்படி புரட்சியை கைவிட்டு திருத்தல்வாத போக்கால் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்களை பற்றி.. தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment